Monday, May 2, 2011

குர்ஆன் அடிப்படையில் எகிப்தில் அரசாங்கம் - மக்கள் விருப்பம்அஸ்ஸலாமு அலைக்கும்,

நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். 

புரட்சிக்கு பின்னான எகிப்து மக்களின் கண்ணோட்டத்தை பிரதிபலிக்கும் விதமாக ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. பிரபல ப்யூ ஆய்வு நிறுவனத்தால் (Pew Research Center) ஏப்ரல் 25ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வறிக்கை பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 

எதிர்க்கால அரசில் மார்க்கம் சம்பந்தப்பட்ட கட்சிகள் இடம்பெற தங்களது தெளிவான ஆதரவை வழங்கியிருக்கின்றனர் எகிப்தியர்கள்.   

ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ள சில தகவல்களை இங்கே காண்போம். முழுமையாக படிக்க விரும்புபவர்கள் இந்த பதிவின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை சுட்டவும்.     

1. மார்க்க சட்டங்கள் அடிப்படையிலான அரசு: 

கண்டிப்பாக (Strictly) குர்ஆனை பின்பற்றியே சட்டங்கள் அமைய வேண்டுமென்று பெரும்பாலான எகிப்தியர்கள் (62%) கருத்து தெரிவித்துள்ளனர். 

எகிப்து மக்களின் இத்தகைய கருத்தில் வியப்பேதுமில்லை. புரட்சியின் போது, தஹ்ரிர் சதுக்கத்தில் இலட்சக்கணக்கில் திரண்டு, அங்கேயே அமைதியான முறையில் போராடி, அங்கேயே தொழுது என்று பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தி நம் ஈமானை அதிகப்படுத்தியவர்கள் எகிப்தியர்கள். மார்க்க பற்று என்பது அவர்களது உள்ளங்களில் ஊறிய ஒன்று. ஆக, அவர்களது இந்த விருப்பத்தில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.   

மேலும், குர்ஆனின் கோட்பாடுகளை பிரதிபலிக்குமாறு சட்டங்கள் இருந்தால் போதுமானது என சுமார் 27% மக்கள் கூறியிருக்கின்றனர்.

மிகக் குறைவான அளவில், ஐந்து சதவித மக்கள், குரானை பின்பற்றி சட்டங்கள் அமையக்கூடாதென்று தெரிவித்துள்ளனர். எகிப்து மக்கள் தொகையில் குறிப்பிடத்தக்க அளவில் கிருத்துவர்கள் உள்ளனர் என்பது இங்கு நினைவுகூறத்தக்கது. 2. எந்த இயக்கம் மக்களிடையே செல்வாக்கை பெற்றிருக்கின்றது?

முபாரக்கை பதவி இறக்கியதில் முக்கிய பங்காற்றிய முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கும் (இந்த அமைப்பு குறித்து படிக்க <<இங்கே>> சுட்டவும்) , "ஏப்ரல் 6" இயக்கத்திற்கும் எகிப்து மக்களிடையே பரவலான ஆதரவு காணப்படுகின்றது. 

நான்கில் மூன்று பேர் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். பத்தில் ஏழு பேர் "ஏப்ரல் 6" இயக்கத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.        தன்னுடைய செல்வாக்கை முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு இழந்து விட்டதாக அரசியல் வல்லுனர்கள் கருதக்கூடிய நிலையில், அந்த அமைப்பிற்கான மக்கள் ஆதரவு பலரை வியப்பில் ஆழ்த்தியிருக்கும். 

3. அமெரிக்க ஆதரவு: 

தொடர்ந்து தன்னுடைய ஆதரவை எகிப்து மக்களிடையே இழந்து வருகின்றது அமெரிக்கா. பத்தில் எட்டு பேர் அமெரிக்கா குறித்து எதிர்மறையான கருத்துக்களை கொண்டிருகின்றனர். 

2006 ஆம் ஆண்டு 69%மாக இருந்த அமெரிக்க ஆதரவின்மை கடந்த ஐந்தாண்டுகளில் 79%மாக உயர்ந்துள்ளது.  மிக குறைந்த அளவிலான (15%) எகிப்து மக்களே அமெரிக்காவுடனான நெருங்கிய தொடர்பை விரும்புகின்றனர். அதுபோல, அமெரிக்க அதிபர் ஒபாமா குறித்தும் சாதகமாக எண்ணங்கள் எகிப்து மக்களிடையே இல்லை. 

4. இஸ்ரேலுடனான அமைதி ஒப்பந்தம்: 

இஸ்ரேலுடனான அமைதி ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வர எகிப்து மக்கள் தயாராகி கொண்டிருப்பதாக ப்யூ ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது. 

எகிப்திற்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான 32 வருட கால அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டுமென்று சுமார் 54% எகிப்தியர்கள் கூறியிருக்கின்றனர். ஒப்பந்தம் தொடரலாமென்று சுமார் 36% மக்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.  நிச்சயமாக இது இஸ்ரேல் மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கு குறிப்பாக அமெரிக்காவிற்கு அதிர்ச்சியான தகவல். முபாரக்கின் வீழ்ச்சி இஸ்ரேலுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்ததற்கு காரணம், அடுத்து வரும் அரசாங்கம் தனக்கு ஆதரவாக செயல்படுமா என்பதுதான். குறிப்பாக முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு வரக்கூடாதென்பது இஸ்ரேலின் விருப்பம். மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கும் விதமாக தேர்தல் முடிவுகள் இருந்தால் அது நிச்சயமாக இஸ்ரேலுக்கு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தும். 

5. அடுத்த அரசாங்கம்: 

அடுத்த அரசாங்கத்தை எந்த கட்சி வழி நடத்தி செல்லவேண்டுமென்ற கேள்விக்கு வெவ்வேறு வகையாக பதில்களை தந்துள்ளனர் எகிப்து மக்கள். முதல் இரண்டு இடத்தில் "New Wafd" கட்சியும், முஸ்லிம் சகோதரத்துவ இயக்கமும் உள்ளன. நாம் மேலே பார்த்தவை மட்டுமல்லாமல், தாங்கள் ஜனநாயகத்தை விரும்புவதாகவும்,  எகிப்தின் தற்போதைய சூழ்நிலை திருப்திகரமாக இருப்பதாகவும், வரக்கூடிய தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடக்குமா என்ற சந்தேகம் உள்ளதாகவும் எகிப்து மக்கள் தெரிவித்துள்ளனர்.

வரப்போகின்ற தேர்தல் நியாயமான முறையில் நடந்து, எகிப்து மக்கள் எண்ணப்படி ஆட்சி அமைந்து, எகிப்தின் பொருளாதாரம் உயர்ந்து மக்கள் மகிழ்ச்சியோடும் அமைதியோடும் வாழ எல்லாம் வல்ல இறைவன் உதவி புரிவானாக...ஆமீன். 

இந்த ஆய்வறிக்கையை முழுமையாக படிக்க கீழ்காணும் சுட்டியை சுட்டவும். 

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன். 

Reference:
1. U.S. Wins No Friends, End of Treaty With Israel Sought, Egyptians Embrace Revolt Leaders, Religious Parties and Military, As Well - Pew Global. link

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ


16 comments:

 1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
  சகோ புள்ளி விபரங்களோடு அருமையான பதிவு

  //வரக்கூடிய தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடக்குமா என்ற சந்தேகம் உள்ளதாகவும் எகிப்து மக்கள் தெரிவித்துள்ளனர்.//

  சுபஹனல்லாஹ் எனக்கு ஏற்பட்ட அதே சந்தேகம் அவர்களுக்கும் ஏற்ப்பட்டிருக்கிறது.

  இந்த சந்தேகத்திற்கு பின்புலன்கள் இல்லாமலில்லை

  உதாரணத்திற்கு அல்ஜீரியாவில் நடந்த தேர்தலை சொல்லலாம்.
  அல்ஜீரியாவில் நடந்த தேர்தலில் முதல் சுற்றில் இஸ்லாமிய இயக்கம் அதிக இடங்களில் வென்றது. இரண்டாவது சுற்றிலும் அவர்களே வெற்றி பெற்று ஆட்சியில் அமர்வர் என்ற நிலை நன்றாக தெளிவானபோது மேற்கத்திய நாடுகளின் துணையோடு இரண்டாவது சுற்று தேர்தல் நடைபெறாமல் செய்து இஸ்லாமிய இயக்கம் ஆட்சியில் அமர்வதைத் தடை செய்தனர்.

  பல சோதனைகளை வெற்றிகரமாக கடந்து வந்த எகிப்திய மக்கள் தேர்தலிலும் இறை உதவியோடு வெற்றி பெற வேண்டும் என்பதற்காக துஆ செய்வோம்.

  ReplyDelete
 2. சகோதரர் ஹைதர் அலி,

  வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

  சுமார் நாற்பது சதவித மக்கள் மட்டுமே தேர்தல் நியாயமான முறையில் நடக்குமென நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர். இது வருந்தத்தக்க செய்தி...

  -------
  பல சோதனைகளை வெற்றிகரமாக கடந்து வந்த எகிப்திய மக்கள் தேர்தலிலும் இறை உதவியோடு வெற்றி பெற வேண்டும் என்பதற்காக துஆ செய்வோம்.
  --------

  நிச்சயமாக சகோதரர்...

  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹமத் அ

  ReplyDelete
 3. இன்ஷா அல்லாஹ்

  ReplyDelete
 4. Dear Aashiq Ahamed A,
  Assalamu Aleykum wa rahmatullahi wa barakatuh,
  Jazakkallahu kheir for this article.

  "வரக்கூடிய தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடக்குமா என்ற சந்தேகம் உள்ளதாகவும் எகிப்து மக்கள் தெரிவித்துள்ளனர்" : Insha'allah hope that everything will be fine.

  If they all follow the Al-Qur'aan, it will be only for their goodness...
  It will be a great idea masha'allah...

  I know that too much people plan to make hijra in Egypt if their politic change(Insha'allah).

  Keep going on this way...
  May ALLAH(swt) reward you for all your good deed...Aamin...  Your sister,
  M.Shameena

  ReplyDelete
 5. சகோதரர் ஜமால் மற்றும் சகோதரி ஷமீனா,

  அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

  தங்களின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி. எகிப்து மக்கள் எதிர்பார்க்கக்கூடிய நல்லாட்சி அமைய துவா செய்வோம்...

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹமத் அ

  ReplyDelete
 6. அஸ்ஸலாமு அலைக்கும்!

  சிறந்த பதிவு. நீங்கள் சொல்வது போல் நேர்மையான முறையில் தேர்தல் நடக்க இறைவன் துணைபுரிவானாக!

  ReplyDelete
 7. சகோதரர் சுவனப்பிரியன்,

  வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

  உங்கள் தளத்தில் வந்த கட்டுரையே இந்த பதிவை எழுத தூண்டியது. சற்று விரிவாக தமிழில் அந்த செய்தியை எடுத்து செல்வோமே என்ற எண்ணமே காரணம். அல்ஹம்துலில்லாஹ்...

  --------
  நேர்மையான முறையில் தேர்தல் நடக்க இறைவன் துணைபுரிவானாக!
  -------

  ஆமீன்...தங்களது கருத்துக்கு நன்றி சகோதரர்.

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹமத் அ

  ReplyDelete
 8. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  அரபுலக மக்களிலேயே எகிப்தியர்தான் நன்கு கல்வி கற்றவர்கள். உட்கார்ந்த இடத்திலேயே உண்டு கொழுக்காத கடின உழைப்பாளிகள். அவர்களின் இறையச்சத்தையும், கொண்ட கொள்கையில் சளைக்காத உறுதியையும் தஹ்ரீர் சதுக்கத்தில் கண்டோம். முக்கியமாக, உலகத்திலேயே மண்டையில் மூளை உள்ள ராணுவமும் காவல்துறையும் அங்கே இருப்பது அந்த மக்களுக்கு கிடைத்த ஒரு பாக்கியம்..!

  'இஸ்லாமிய ஆட்சி' என்றால் அது இப்படிப்பட்ட கற்றோர் மற்றும் ஒழுக்க சீலர்களான எகிப்தியர்கள் கையில் சேர்ந்தால்... அப்போதுதான் முழுமையாகும் இஸ்லாமிய புரட்சி.

  இதுதான் உலக முஸ்லிம்கள் அனைவரின் விருப்பமும் கூட...! இன்ஷாஅல்லாஹ் அது நம் கண் முன்னே நிறைவேற இறைவனிடம் துவா செய்வோம்.

  ReplyDelete
 9. சகோதரரே,உங்கள் பின்னூட்டம் வெளியிட்டுவிட்டேன்.மன்னிக்கவும்.தாராளமாக இணைத்துக் கொள்ளுங்கள்.மார்க்க அழைப்பு சம்பந்தமாக உங்கள் அட்வைஸ் தேவை.

  ReplyDelete
 10. சகோதரர் முஹம்மது ஆஷிக்,

  வ அலைக்கும் சலாம்,

  ------
  இதுதான் உலக முஸ்லிம்கள் அனைவரின் விருப்பமும் கூட...! இன்ஷாஅல்லாஹ் அது நம் கண் முன்னே நிறைவேற இறைவனிடம் துவா செய்வோம்.
  -------

  இன்ஷா அல்லாஹ் சகோதரர். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹமத் அ

  ReplyDelete
 11. சகோதரர் ஒருவனின் அடிமை,

  அஸ்ஸலாமு அலைக்கும்,

  ------
  wonderful brother,maasha allah
  ------

  எல்லாப் புகழும் இறைவனிற்கே...தங்களுடைய ஊக்கத்திற்கு நன்றி,

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹமத் அ

  ReplyDelete
 12. சகோதரி பாத்திமா,

  அஸ்ஸலாமு அலைக்கும்,

  -------
  மார்க்க அழைப்பு சம்பந்தமாக உங்கள் அட்வைஸ் தேவை.
  ---------

  எனக்கு ஒரு மெயில் அனுப்புங்கள் சகோதரி (aashiq.ahamed.14@gmail.com)

  தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹமத் அ

  ReplyDelete
 13. //உலகத்திலேயே மண்டையில் மூளை உள்ள ராணுவமும் காவல்துறையும் அங்கே இருப்பது அந்த மக்களுக்கு கிடைத்த ஒரு பாக்கியம்..!//சத்தியமான வார்த்தைகள். இன்ஷாஅல்லாஹ் இறை ஆட்சி அமைய எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திப்போம். தோழமையுடன்

  ReplyDelete
 14. சகோதரர் பெரோஸ்,

  அஸ்ஸலாமு அலைக்கும்,

  இன்ஷா அல்லாஹ் சகோதரர். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரர்...

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹ்மத் அ

  ReplyDelete