Sunday, September 18, 2011

முஸ்லிம் மாயன்கள்...


அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

========================
Please Note:

இந்த பதிவில் காணப்படும் ஜெர்மன் மற்றும் ஸ்பானிஷ் வார்த்தைகளின் உச்சரிப்புகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தவறு இருப்பின் சுட்டிக்காட்டவும். ஜஸாக்கல்லாஹ்.
========================

மாயன்கள் - இந்த பழங்குடியினத்தவரை சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஹாலிவுட் திரைப்படமான '2012' மிகவும் பிரபலமாக்கியது. மாயன்களின் காலண்டர் Dec, 2012-டுடன் முடிவதாகவும், அதுவே உலகின் அழிவுக்காலம் என்பது போலவுமான புரளிகள் உலகை வலம் வர ஆரம்பித்து, "யார் இந்த மாயன்கள்?" என்று இவர்களைப் பற்றி அறிந்திடும் ஆர்வத்தை தூண்டின.

யார் இவர்கள்?

மத்திய அமெரிக்காவின் பூர்வக்குடிமக்களான இவர்களின் நாகரிகம் மிகவும் பழமையானது. கி.மு 2600-வாக்கில் தோன்றியதாக கணக்கிடப்படும் மாயா நாகரிகம், பல ஆச்சர்ய தகவல்களை தன்னிடத்தே கொண்டதாக அமைந்துள்ளது. (வட, மத்திய மற்றும் தென்) அமெரிக்காவின் பண்டைய நாகரிகங்களிலேயே முழுமையான எழுத்து மொழியை கொண்டிருந்த இவர்கள், கணிதம், கட்டிடக்கலை என்று பல துறைகளில் மேம்பட்டிருந்தாக அறியப்படுகின்றது. 

இன்றைய மத்திய அமெரிக்க நாடுகளான ஹோண்டுரஸ், குவாதமாலா, பெலிஸ், எல் சால்படோர், மெக்ஸிகோ போன்ற நாடுகளை உள்ளடக்கி விரிவடைந்திருக்கின்றது மாயா நாகரிகம். 


பல்வேறு மொழிகளை பேசிய இவர்கள் சிறு சிறு குழுக்களாக இருந்திருக்கின்றனர். இந்த நாகரிகம் வீழ்ச்சியடைந்தற்கான காரணங்கள் பல சொல்லப்படுகின்றன. பஞ்சம் போன்ற இயற்கை சீரழிவுகளால் சிதைந்து போயிருந்த இந்த இனத்தவரை மேலும் சீரழித்தார்கள் ஸ்பெயின் ஆக்கிரமிப்பாளர்கள். 

ஆம், பதினைந்தாம் நூற்றாண்டில் கொலம்பஸ் அமெரிக்காவில் காலடி வைத்த பிறகு, ஸ்பெயின் தன்னுடைய காலனி ஆதிக்கத்தை அமெரிக்காவில் நிலைநாட்ட தொடங்கியபோது, பல்வேறு பழங்குடியினர் கொன்றொழிக்கப்பட்டனர். அதற்கு மாயன்களும் விதிவிலக்கல்ல. 

மாயா நாகரிகம் வீழ்ச்சியடைந்தது.  

மாயன் இனத்தவரின் இன்றைய நிலை:

இன்றளவும், சுமார் ஆறு லட்சம் மாயன்கள் மத்திய அமெரிக்கா முழுவதும் பரவியிருக்கின்றனர். 

ஆனால், இவர்கள் மீதான அடக்குமுறை மட்டும் குறைந்ததாக தெரியவில்லை. இனவெறி தலைவிரித்தாடுகின்றது. 

இவர்கள் அதிகம் வாழும் மெக்ஸிகோவின் தென்மாநிலமான ஷீயபாஸ் (Chiapas) போன்ற பகுதிகளில் கூட இவர்கள் இரண்டாம்தர குடிமக்களாகவே நடத்தப்படுகின்றனர். நடைப்பாதையில் வெள்ளையின மக்கள் எதிரே வந்தால் இவர்கள் நடைபாதையில் இருந்து சாலைக்கு இறங்கி விட வேண்டுமாம். 

சகிக்க முடியாத இந்த இனவெறிதான், சில மாயன்களை போராடத் தூண்டி, மெக்ஸிகோ அரசுக்கு எதிரான புரட்சிப்படையை உருவாக்க வைத்தது. 

1990-க்களின் மத்தியில், ஸபதிஸ்தா தேசிய விடுதலை ராணுவம் (Ejército Zapatista de Liberación Nacional, EZLN) என்ற அரசுக்கு எதிரான அமைப்பை துவங்கி, இனவெறி மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடத் தொடங்கினர் மாயன்களில் ஒரு பகுதியினர். இன்றளவும் போராடிக்கொண்டு இருக்கின்றனர். 

முஸ்லிம் மாயன்கள்:

2005-ஆம் ஆண்டு, ஜெர்மனியின் பிரபல ஊடகமான தே ஷ்பிகேல் (Der Spiegel), பலரது கவனத்தையும் ஈர்க்கும்படியான ஒரு செய்தியை வெளியிட்டது.

மெக்ஸிகோவில் வாழும் பழங்குடியின மாயன் மக்கள் நூற்றுக்கணக்கில் இஸ்லாத்தை தழுவி வருவதாக கூறிய தே ஷ்பிகேல், பல சுவாரசிய தகவல்களை அந்த கட்டுரை முழுக்க அள்ளி தெளித்திருந்தது. அவற்றில் சில,

  • சுமார் 300 மாயன்கள் சமீப காலங்களில் இஸ்லாத்தை தழுவியுள்ளனர். 
  • பள்ளிவாசல், மதரசா, இஸ்லாமிய மையம் போன்றவை இவர்களிடையே இருக்கின்றது. 
  • மாயன்கள் ஹஜ் செய்கின்றனர். 
  • ஷீயபாஸ் மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரான சன் கிறிஸ்டோபாலில், ஹிஜாப் அணிந்த பெண்களை காணுவது இயல்பாகி விட்டது. 

தே ஷ்பிகேல் ஊடகத்தின் இதுப் போன்ற தகவல்கள் உலகளாவிய முஸ்லிம்களுக்கு பெருத்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். சிறிய அளவிலான முஸ்லிம்கள் மெக்ஸிகோவில் வாழ்கின்றனர் என்பது பலரும் அறிந்திருந்த செய்திதான். ஆனால், மாயன் இனத்தவரில் முஸ்லிம்கள் என்பது பலருக்கும் தெரிந்திராத செய்தியாகவே இருந்திருக்க வேண்டும்.  

உலகின் எங்கோ ஒரு மூலையில், தாங்கள் பெரிதும் அறிந்திடாத பழங்குடியினத்தவரில் தங்களின் மார்க்க சகோதரர்களை கண்டுக்கொண்டனர் முஸ்லிம்கள். 

தே ஷ்பிகேலின் 2005-ஆம் ஆண்டு செய்தி, சுமார் முன்னூறு முஸ்லிம் மாயன்கள் மெக்ஸிகோவில் இருப்பதாக தெரிவித்தாலும், மிக சமீபத்திய அல்-ஜசீரா ஊடகத்தின் செய்தி சுமார் ஐநூறு முஸ்லிம் மாயன்கள் அங்கிருப்பதாக தெரிவிக்கின்றது. 

மாயன்களிடையே எப்படி இஸ்லாம்?

1990-க்களின் மத்தியில், ஸ்பானிஷ் பேசும் ஐரோப்பிய முஸ்லிம்கள் இஸ்லாமிய அழைப்பு பணி மேற்கொள்ள ஷீயபாஸ் மாநிலத்திற்கு வந்தனர். அவர்களுக்கு தலைமை தாங்கியவர் ஆவுரெலியனோ பெரெஸ் (Aureliano Perez) என்பவராவார். 

இனவெறிக்கு எதிராக போராடிக்கொண்டிருந்த ஸபதிஸ்தா போராளிகளுக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்த பெரெஸ், இஸ்லாமிய போதனைகளுக்கு மாயன் பழங்குடியினத்தவர் ஆர்வம் காட்டுவதை அறிந்துக்கொண்டார். 

ஷீயபாஸ்சில் இவர்களது அழைப்புபணிக்கு, இறைவன் கிருபையால், மகத்தான ஆதரவு கிடைக்க அதிக அளவிலான மாயன்கள் இஸ்லாமை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டனர். 

...there have been reports of indigenous Mayans and Tzotzils converting to Islam in large numbers - wikipedia. 
பழங்குடியின மாயன்கள் அதிகளவில் இஸ்லாத்தை தழுவுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன - (extract from the original quote of ) wikipedia 

இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு தகவல் என்னவென்றால், இப்படி இஸ்லாத்தை தழுவியவர்கள், தங்களோடு அதனை நிறுத்திக்கொள்ளாமல் தங்கள் குடும்பத்தாரிடையே இறைச்செய்தியை கொண்டு செல்வதில் தீவிரமாக இருக்கின்றனர். உதாரணத்திற்கு, தே ஷ்பிகேல் ஊடகம், ஆனஸ்டசியோ ரொமெஸ் (Anastasio Gomez) என்ற மாயன் முஸ்லிம் சகோதரரை பேட்டி கண்டிருந்தது. இந்த சகோதரர் தன் குடும்பத்தார் அனைவரையும், இறைவன் கிருபையால், இஸ்லாத்தின்பால் கொண்டுவந்து விட்டார். இதில் அவரது நூறு வயது பாட்டியும் அடக்கம்.  

தற்போது இப்ராஹீம் என்று அறியப்படும் ரொமெஸ் தன் போன்ற பதினைந்து பழங்குடியினருடன் சேர்ந்து ஹஜ் செய்திருக்கின்றார்.  

'இஸ்லாத்தில் இனம்/ஜாதி போன்றவற்றிற்கு இடமில்லை' என்று மகிழ்ச்சியுடன் கூறும் மாயன்களை, மது மற்றும் வட்டி மீதான இஸ்லாத்தின் கடுமையான அணுகுமுறை பெரிதும் கவர்ந்திருப்பதாக RNW (Radio Netherlands Worldwide) தெரிவிக்கின்றது. 

அதிவிரைவான மாற்றங்கள் மாயன்களிடையே நடப்பதைக் கண்ட மெக்ஸிகோ அரசு கலவரமடைந்தது. மாயன் முஸ்லிம்களுக்கும், அல்-குவைதா போன்ற தீவிரவாத இயக்கங்களுக்கும் தொடர்பு இருக்கலாமென வெளிப்படையாக குற்றஞ்சாட்டியது. அதுமட்டுமல்லாமல், மாயன்களை தீவிரமாக கண்காணிக்கவும் தொடங்கியது. மெக்ஸிகோ அரசின் இந்த குற்றசாட்டிற்கு எந்தவொரு வலுவான ஆதாரமும் கொடுக்கப்படவில்லை என்கின்றது RNW.

மாயன்களோ இந்த குற்றசாட்டை முற்றிலுமாக மறுக்கின்றனர். மெக்ஸிகோவிற்கு வெளியேயான முஸ்லிம்களுடன் எந்தவொரு தொடர்பும் இல்லாத நிலையில் இது எப்படி சாத்தியம் என்று கேட்கின்றனர் அவர்கள்.    

பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையேயும் இஸ்லாம் தொடர்ந்து மாயன்களை தன்னுள் அரவணைத்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

"இந்த பள்ளிவாசலை சார்ந்து தற்போது பதினேழு முஸ்லிம் மாயன் குடும்பங்கள் உள்ளனர். படிப்படியாக நிறைய மக்கள் இஸ்லாத்தை பற்றி அறிவதில் ஆர்வம் காட்டுகின்றனர்" என்று கூறுகின்றார் சன் கிறிஸ்டோபால் நகருக்கு அருகில் உள்ள பள்ளிவாசலின் இமாமான சால்படோர் லோபெஸ் (Salvador Lopez).

"இஸ்லாம் மெதுவாக, அதே நேரம் உறுதியாக இங்கு வளர்ந்து வருகின்றது. Yes, I think we are here to stay" 

இன்ஷா அல்லாஹ், இன்றிலிருந்து நம்முடைய துஆக்களில் இவர்களையும் சேர்த்துக்கொள்வோம்.

இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமீன்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

Topic Initiation:
1. Brother Peer Mohamed.

German and Spanish Pronunciations helped by: 
1. Sister Shameena.

My sincere thanks to:
1. Der Spiegel.
2. Radio Netherlands Worldwide.
3. Br. Peer Mohamed.
4. Sr. Shameena

References:
1. Praying to Allah in Mexico, Islam Is Gaining a Foothold in Chiapas - Spiegel Online, 28th May 2005. link
2. Islam is the new religion in rebellious Mexican state Chiapas - RNW, 17th December 2009. link
3. Inside Mexico's mud-hut mosque - Aljazeera, 30th August 2011. link
4. Islam in Mexico - wikipedia. link
5. Maya Indians - howstuffworks. link
6. El Islam en México - M Semanal. 15th May 2011. link
7. மாயன் நாகரீகம்-நவீன நாகரீகத்தின் திறவுகோல் - உயிர்மை. link
8. மாயன் நாகரீகம் - Ehow, 25th June 2011. link
9. Mayans and Muslims? - ALAMEDA ISLAMICA, 6th May 2008. link
10. Islam spreading in southern Maya Mexico - Catholic Online, 31st Aug 2011. link
11. Muslims In Mexico Under Greater Scrutiny From U.S - Islamophobia today, 23rd May 2011. link
12. Spiegel Online, Der Spiegel, 2012 Phenomenon, RNW, Tzotzil people, Tzotzil Lanugauge, Mayan Languages - wikipedia.

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன், 
ஆஷிக் அஹமத் அ. 






51 comments:

  1. அஸ்ஸலாமு அழைக்கும் வரமதுல்லாஹ் சகோ. அருமையான் செய்தி. நிராககரிப்பாளர்கள் வெறுத்த போதும் தன்னுடைய ஒளியை புரணமாக்கி வைப்பேன் என்று வாக்குறுதியளித்த இறைவன் அதை மெய்ப்பிக்கிறான். மெய் சிலிக்க வைக்கும் செய்தி. இந்த மாதிரி செய்திகளை தெரிய முடியாமல் இதை தன்னுடைய உழைப்பால் எங்களிடம் சேர்க்கும் சகோதரர் ஆஷிகுக்கு நற்கூலி வழங்குவாயாக ஆமீன்.

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் (ரஹ்)

    சுப்புஹானல்லாஹ் முற்றிலும் புதிய செய்தி. மற்றும் ஒரு புதிய ஓரிறை நம்பிக்கையாளர்களை அறிமுகம் செய்தமைக்கு JazaakkALLAHu khaira

    ReplyDelete
  3. நெகிழ,
    மகிழ‌,
    புத்துணர்வூட்டும்

    தகவலை அறிய‌ த‌ந்த‌மைக்கு

    வாழ்த்துக்க‌ள்

    தொட‌ர‌ட்டும் .
    ************

    அடுத்த நூறு ஆண்டுகளில் இங்கிலாந்தை, ஏன் இங்கிலாந்தை, ஐரோப்பாவையே ஆளக்கூடிய வாய்ப்பு ஒரு மதத்துக்கு இருக்குமானால் அது இஸ்லாமாகத்தான் இருக்க முடியும் .


    ‘உலகில் கடைசிவரை நிலைத்திருக்கக் கூடிய மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம் ஒன்றுதான்’ - என்று அறிஞ‌ர் ஜார்ஜ‌
    பெர்னார்ட் ஷா. எழுதியிருக்கிறார்


    வாஞ்சையுட‌ன் வாஞ்ஜூர்.

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

    //இன்ஷா அல்லாஹ், இன்றிலிருந்து நம்முடைய துஆக்களில் இவர்களையும் சேர்த்துக்கொள்வோம்.//

    இன்ஷா அல்லாஹ்!! நிச்சயமாக....

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அழைக்கும் வரமதுல்லாஹி வபரகாதுஹு...

    சந்தோசமான செய்தி நன்பரே!! யார் என்ன திட்டம் போட்டாலும் இறுதியில் அல்லாஹ் போட்ட திட்டமே நடக்கிறது.

    அவர்களுக்கும் அவர்களது கூட்டங்களுக்கும், எவழித்தோன்றல்களுக்கும் நமக்கும் அல்லாஹ் ரஹ்மத்தும் பரகத்தும் செய்வானாக..

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    ஆச்சர்யம்..! இதுவரை அறிந்திராத முற்றிலும் புதிய தகவல்கள்..! தானும் அறிந்து மற்றவருக்கும் அறிய தந்தமைக்கு மிக்க நன்றி சகோ.ஆஷிக்.

    புகைப்படங்கள் மிகத்துல்லியமான ஆதாரங்களாக அமைந்து வெகுசிறப்பாக பதிவை உயரே தூக்கி நிறுத்தி இருக்கின்றன.

    ஹலோ...

    அப்புறம்... அந்த மூடநம்பிக்கை (2012 காலண்டர்) கதை என்னாச்சு..? தூக்கி விசி எறிந்து இருப்பார்களே... மாயன் முஸ்லிம்கள்..! அல்ஹம்துலில்லாஹ். இஸ்லாம்தான் எவ்வளவு பாரிய மன மாற்றத்தை ஏற்படுத்துகிறது..!

    தங்களுக்கும்...
    //Topic Initiation:
    1. Brother Peer Mohamed.
    German and Spanish Pronunciations helped by:
    1. Sister Shameena.//
    ஜசாக்கலாஹ் க்ஹைர்..!

    ReplyDelete
  7. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!

    இதுவரை அறிந்திராத புதிய செய்தி.

    //அதிவிரைவான மாற்றங்கள் மாயன்களிடையே நடப்பதைக் கண்ட மெக்ஸிகோ அரசு கலவரமடைந்தது. மாயன் முஸ்லிம்களுக்கும், அல்-குவைதா போன்ற தீவிரவாத இயக்கங்களுக்கும் தொடர்பு இருக்கலாமென வெளிப்படையாக குற்றஞ்சாட்டியது. //

    காலம் காலமாக இவர்கள் கையிலெடுக்கும் யுக்தி. இவர்களை திருத்துவது கடினம்.

    இத்தகைய அரிய தகவலை தந்த தங்களுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!

    ReplyDelete
  8. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    டிரைலருக்கு பிறகு பதிவு வெளியிட்டதில் மகிழ்ச்சி
    பல புதிய விஷயங்களை தெரிந்துக் கொண்டேன்

    நன்றியுங்கே

    ReplyDelete
  9. கடலுக்குள் முத்தெடுப்பது போல், இத்தகவல்களை ஆராய்ந்து தந்துள்ளீர்கள். இது போன்ற தகவல்கள் இணையங்களில் கிடைப்பது மிக அரிதானதுதான்.

    ஜஸாக்கல்லாஹ்..
    உங்கள் முயற்சியில் அல்லாஹ் வெற்றியளிப்பானாக..

    அன்ஸார்
    தோஹா

    ReplyDelete
  10. அஸ்ஸலாமு அலைக்கும்........

    புதிய ஆச்சர்யமூட்டும் தகவல்.... ஜஸக்கல்லாஹ் ஹைர்

    உங்களுக்கு மட்டும் எங்கிருந்து கிடைக்குது :-)

    ReplyDelete
  11. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    சுபுஹானல்லாஹ்...

    அனைவரும் அறியாத புதிய செய்தி.

    ஜஸக்கல்லாஹ் ஹைர்.

    ReplyDelete
  12. சகோதரர் அரபுத்தமிழன்,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    தங்களின் மெயில் பார்த்து மகிழ்ச்சி. பதில் கொடுக்க நினைத்து மறந்துவிட்டேன். வருகைக்கும், ஊக்கத்திற்கும் நன்றி..

    ReplyDelete
  13. சகோதரர் பெரோஸ்,

    வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

    அல்ஹம்துலில்லாஹ்...

    மாயன்களில் முஸ்லிம்கள் இருக்கின்றார்கள் என்ற செய்தியை சகோதரர் பீர் முஹம்மது சொல்லி அல்-ஜசீரா லிங்க் கொடுத்தபோது மிகுந்த ஆச்சர்யமாக இருந்தது. இது குறித்த செய்தியை தமிழில் கொண்டு செல்ல வேண்டுமென்ற ஆர்வமும் இருந்தது. பின்னர் இது குறித்த தகவல்களை, படங்களை சேகரித்து, அல்ஹம்துலில்லாஹ், பதிவேற்றியாகிவிட்டது...

    வருகைக்கும், துவாவிற்கும், ஊக்கத்திற்கும் நன்றி சகோதரர்...

    ReplyDelete
  14. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ,
    ஆச்சரியமூட்டும் அற்புத தகவல்!
    " இதனை இவன் முடிப்பான் என்றாய்ந்து
    அதனை அவன்கண் விடல்"
    சகோதரர் பீர்முகம்மது அவர்களுக்கு பாராட்டுகள்.

    இதற்காக உழைத்த உங்களின் உழைப்பிற்கு உரிய கூலியை வழங்க எல்லாம் வல்ல ரஹ்மானிடம் துவா செய்கிறேன்

    ReplyDelete
  15. சகோதரர் ரப்பானி,

    வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

    தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  16. அஸ்ஸலாமு அலைக்கும்,

    சகோ.ஆஷிக் அஹ்மத்.

    அறியப்படாத புதுமையான தகவலை கொடுத்துள்ளீர்கள். தொடர்ந்து எழுதவும்.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. அன்பு வாஞ்சூர் அப்பா அவர்களுக்கு,

    வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

    எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே உரித்தாவதாக..ஆமீன்.

    தங்களின் வருகைக்கும், ஊக்கத்திற்கும் நன்றி...

    இறைவன் நாடினால், ஜார்ஜ் பெர்னார்ட்ஷா சொன்னது நடக்கும்...

    வஸ்ஸலாம்,

    ReplyDelete
  18. சகோதரர் Jafar Safamarva,

    வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

    தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...,

    ReplyDelete
  19. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
    ஏனைய நாடுகளில் நிழழும் முஸ்லிம்கள் குறித்த செய்திகளை காட்டிலும் இங்கு மாயன் பழங்குடி இன மக்களின் இஸ்லாமிய தழுவலை வெளிக்கொணர்ந்தது உங்களின் அறிவு தேடலுக்கான மேலும் ஒரு சான்று, மாஷா அல்லாஹ். அல்லாஹ் மென்மேலும் உங்கள் அறிவை விசாலப்படுத்துவானாக!
    வழக்கம்போல் ஏனைய இஸ்லாமிய மக்களின் நடைமுறை வாழ்க்கையோடு தீவிரவாத்தை முடிச்சுப்போடுவது போல இந்த பழங்குடி மக்களின் வாழ்வோடும் தீவிரவாதத்தை இணைக்க முற்படுவது தான் ஆச்சரியமான வேதனை!!!

    @~முஹம்மத் ஆஷிக்_citizen of world~ said.
    புகைப்படங்கள் மிகத்துல்லியமான ஆதாரங்களாக அமைந்து வெகுசிறப்பாக பதிவை உயரே தூக்கி நிறுத்தி இருக்கின்றன.
    உண்மைதான், எனினும் மேலும் இவர்கள் குறித்த புகைப்படத்தை அதிகப்படுத்தியிருந்தால் பதிவு இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.,

    இறை நாடினால் இனியும் சந்திப்போம்

    ReplyDelete
  20. அறியாத செய்தியை அறிந்திருக்கிறேன்

    நன்றி

    ReplyDelete
  21. மாஷா அல்லாஹ்

    நல்ல முறையில் அறியதந்தார்கள்

    இன்ஷா அல்லாஹ், அவர்களையும் துவாவில் சேர்ப்போம் ...

    ReplyDelete
  22. சகோதரர் முஹம்மது ஆஷிக்,

    வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

    //அப்புறம்... அந்த மூடநம்பிக்கை (2012 காலண்டர்) கதை என்னாச்சு..? தூக்கி விசி எறிந்து இருப்பார்களே... //

    அதனை தற்போதைய முஸ்லிமல்லாத மாயன்கள் கூட பரிசீளிக்கின்றனரா என்பது தெரியவில்லை. இந்த காலண்டர் விஷயம் மிக ஆழமாக ஆராயப்படவேண்டிய ஒன்று.

    தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  23. சகோதரர் பாஸித்,

    வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

    ///காலம் காலமாக இவர்கள் கையிலெடுக்கும் யுக்தி. இவர்களை திருத்துவது கடினம்.///

    எத்தனை காலமாக இதனை செய்துகொண்டிருக்கின்றார்கள். ஆனால், இதனால் இஸ்லாமிற்கு, இறைவன் நாடினாலன்றி எந்தவொரு பாதிப்பும் வரப்போவதில்லை. இது போன்றவை விளம்பரங்களாய் அமைந்து இஸ்லாத்தை பற்றி மேலும் பலர் அறிந்து கொள்ள வழி வகை செய்யும் அவ்வளவே...

    தங்களின் துவாவிற்கு மிக்க நன்றி பாஸித்...

    ReplyDelete
  24. சகோதரர் ஹைதர் அலி,

    வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

    ////டிரைலருக்கு பிறகு///

    :)

    ///பல புதிய விஷயங்களை தெரிந்துக் கொண்டேன்///

    எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே உரித்தாவதாக..ஆமீன்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரர்.

    ReplyDelete
  25. சகோதரர் Mohamed Faaique,

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

    ----
    யார் என்ன திட்டம் போட்டாலும் இறுதியில் அல்லாஹ் போட்ட திட்டமே நடக்கிறது.
    -----

    Perfect.
    அவர்களும் திட்டமிட்டார்கள், அல்லாஹ்வும் திட்டமிட்டான். தவிர திட்டமிடுதலில் அல்லாஹ்வே சிறந்தவன் - குர்ஆன்.

    ///அவர்களுக்கும் அவர்களது கூட்டங்களுக்கும், எவழித்தோன்றல்களுக்கும் நமக்கும் அல்லாஹ் ரஹ்மத்தும் பரகத்தும் செய்வானாக..///

    ஆமீன்..

    வருகைக்கும், கருத்தக்கும் நன்றி.

    ReplyDelete
  26. சகோதரர் அன்ஸார்,

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

    எல்லாப் புகழும் இறைவனிற்கே...

    தங்களின் ஊக்கத்திற்கும் , துவாவிற்கும் மிக்க நன்றி...

    ReplyDelete
  27. சகோதரி ஆமினா,

    வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

    ///உங்களுக்கு மட்டும் எங்கிருந்து கிடைக்குது :-)///

    அல்ஹம்துலில்லாஹ்...

    கூக்ளிங் தான் சிஸ்டர். இந்த பதிவை பொறுத்தவரை சகோதரர் பீர் முஹம்மது அவர்கள் மாயன்கள் குறித்து சொன்னார். பின்னர் கூகிள் உதவியோடு தகவல்கள் மற்றும் படங்களை திரட்டியாகி விட்டது...அல்ஹம்துலில்லாஹ்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,

    ReplyDelete
  28. masha allah.another valuable news from you bro.
    jazakallahu hair.

    ReplyDelete
  29. சகோதரி ஆயிஷா,

    வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

    அல்ஹம்துலில்லாஹ்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  30. சகோதரர் ஜாகிர்,

    வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

    தங்களின் வருகைக்கும், துவாவிற்கு மிக்க நன்றி...

    ReplyDelete
  31. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். Noble Quran 3.104

    ReplyDelete
  32. சகோதரர் கார்பன் கூட்டாளி,

    வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பைசல்..

    ReplyDelete
  33. சகோதரர் குலாம்,

    வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

    அல்ஹம்துலில்லாஹ்...தங்களின் ஊக்கத்திற்கு நன்றி சகோதரர்..

    ----
    உண்மைதான், எனினும் மேலும் இவர்கள் குறித்த புகைப்படத்தை அதிகப்படுத்தியிருந்தால் பதிவு இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.,
    -----

    நிறைய படங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றை போடுவதற்கு இடம் வேண்டுமே சகோதரர். அதுமட்டுமல்லாமல், படங்கள் அதிகமானால் தளம் லோட் ஆக அதிக நேரமும் எடுக்கும். கீழ்காணும் தளங்களில் மாயன் முஸ்லிம்களின் அதிகமதிக படங்களை பாருங்கள்,

    இங்கே மற்றும் இங்கே

    ReplyDelete
  34. சகோதரர் சதீஷ்,

    உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரதர்...

    ReplyDelete
  35. சகோதரர் ஜமால்,

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரர்...

    ReplyDelete
  36. =============
    சகோதரர் Mohamed Himas Nilar,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    நன்றி சகோதரர்...எல்லாப் புகழும் இறைவனிற்கே...

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,

    ReplyDelete
  37. சகோதரர் உமர் முக்தார்,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    அருமையான குர்ஆன் வசனத்திற்கு நன்றி...இதனை என்றென்றும் நாம் மனதில் வைத்திருப்போம்...

    ReplyDelete
  38. அஸ்ஸலாமு அழைக்கும் சகோதரே... உண்மையாக சொல்கிறேன் ஒவ்வொருமுறையும் உங்கள் தளத்திற்கு நான் வரும்போதும்.. இப்ப புதிதாக என்ன பதிவை எழுதி இருப்பீர்கள் என்ற ஆர்வத்தில் தான் வருவேன்..

    நான் தங்களின் தளத்திலிருந்து நிறைய விஷயங்களை கற்றுகொண்டுள்ளேன் -

    அந்த வகையில் இந்த பதிவு வித்தியாசம் மட்டுமல்ல ஆச்சரியமாகவும் இருக்கிறது ஆனால் ஒரு முஸ்லிமிற்கு இதில் ஆச்சரியம் இருக்க கூடாது என்பதே உண்மை. இந்த மார்க்கத்திற்கு பொறுப்பாளி அல்லாஹ் ஒருவனே , அவன் நாடிவிட்டால் எல்லாம் சாத்தியமே. அந்தவகையில் இந்த செய்தியை அறியத்தந்ததற்காக உங்களுக்கு நன்றிகள் பலகோடி.

    அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக !
    உங்களுக்கு நோயற்ற வாழ்வையும் , குறைவற்ற அறிவு செல்வதையும் தருவானாக !

    தொடர்ந்து இதுபோன்று கவனிக்கபடாத விடயங்களை உங்கள் கவனத்திற்கு கொண்டுவாருங்கள்..

    இந்த பதிவை நான் எனது தளத்தில் வெளியிடுவதில் உங்களுக்கு மறுப்பு இருக்காது என்று எண்ணுகிறேன்.
    இன்ஷாஅல்லாஹ்.

    ReplyDelete
  39. சகோதரர் அப்துல்லா,

    வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மதுள்ளாஹி வபர காத்துஹு...

    ///ஆனால் ஒரு முஸ்லிமிற்கு இதில் ஆச்சரியம் இருக்க கூடாது என்பதே உண்மை. இந்த மார்க்கத்திற்கு பொறுப்பாளி அல்லாஹ் ஒருவனே , அவன் நாடிவிட்டால் எல்லாம் சாத்தியமே.///

    அல்ஹம்துலில்லாஹ்...அருமையாக சொன்னீர்கள்...

    ///இந்த பதிவை நான் எனது தளத்தில் வெளியிடுவதில் உங்களுக்கு மறுப்பு இருக்காது என்று எண்ணுகிறேன்.///

    தாராளமாக...pls go ahead...நீங்கள் என்னிடம் கேட்க வேண்டும் என்று அவசியமில்லை சகோதரர். என் தளத்திற்கு புதியவர் என்றாலும் பரவா இல்லை...நீங்களெல்லாம் கேட்கணுமா?? :) :)

    தங்களின் வருகைக்கும், துவாவிற்கும் மிக்க நன்றி...

    வஸ்ஸலாம்

    ReplyDelete
  40. நன்றி சகோதர் ஆஷிக்..

    //என் தளத்திற்கு புதியவர் என்றாலும் பரவா இல்லை..// நான் தங்கள் தளத்தில் மறுமொழியிடுவது வேண்டுமானால் புதிதாக இருக்கலாம் (இரண்டு தடவை இருக்கலாம் )ஆனால் உங்கள் தளத்திற்கு நான் பழமையானவன் தான்.

    2010லிருந்து உங்கள் தளத்திற்கு வருகை தந்திருக்கிறேன் என்று நியாபகம் இருக்கிறது.

    தொடர்ந்து எழுதுங்கள் .. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  41. Assalamu alaikum,

    I never thought that my sharing of a al-jazeera link in our simple chat on a ramadhan day will end up in a nice post like this. This is how allah works.When we go a step further he makes it a leap forward :). amazing.

    Appreciate your efforts and time in making this as a post and all the background work. Wonderful writing. Alhamdulillah !!!

    ReplyDelete
  42. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் அப்துல்லா,

    =========
    நான் தங்கள் தளத்தில் மறுமொழியிடுவது வேண்டுமானால் புதிதாக இருக்கலாம் (இரண்டு தடவை இருக்கலாம்)ஆனால் உங்கள் தளத்திற்கு நான் பழமையானவன் தான். 2010லிருந்து உங்கள் தளத்திற்கு வருகை தந்திருக்கிறேன் என்று நியாபகம் இருக்கிறது.
    =========

    ஆம் சகோதரர். எனக்கு தங்களை நன்றாகவே தெரியும். அதனாலேயே அப்படி சொன்னேன். தாங்கள் என் தளத்திற்கு புதியவரில்லை. அப்படி இருக்கும்போது ஏன் கேட்க வேண்டும் என்று தான் சொன்னேன்.

    கருத்துக்கு நன்றி சகோதரர்..

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  43. Brother peer mohamed,

    Wa alaikum salaam wa rahmathullahi vabara kaaththuhu..

    Thanks for the appreciation brother. all praise due to allah (swt)...

    thanks for ur visit and comment..

    wassalaam

    ReplyDelete
  44. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    அல்ஹம்துலில்லாஹ்..

    இது வரை யாருக்கும் அதிகம் தெரியாத செய்தி..

    மிக தெளிவான விளக்கம்..

    இன்ஷா அல்லாஹ்..இனி நம் துஆவில்
    அவர்களையும் சேர்த்து கொள்வோம் சகோதரரே...

    அல்லாஹ் அவர்களுக்கு நிறைய உறுதியும் ரஹ்மத்தும் பரகத்தும் செய்வானாக..ஆமீன்..

    ReplyDelete
  45. Dear Brother Aashiq Ahamed,
    Assalaamu alaikkum wa rahmatullahi wa barakatuh,
    Masha'allah !!!!
    What a wonderful post !!!!
    Very interesting one...
    I never think, that it will be so well detailed.

    "இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு தகவல் என்னவென்றால், இப்படி இஸ்லாத்தை தழுவியவர்கள், தங்களோடு அதனை நிறுத்திக்கொள்ளாமல் தங்கள் குடும்பத்தாரிடையே இறைச்செய்தியை கொண்டு செல்வதில் தீவிரமாக இருக்கின்றனர்." Alhamdullilah...

    "தற்போது இப்ராஹீம் என்று அறியப்படும் ரொமெஸ் தன் போன்ற பதினைந்து பழங்குடியினருடன் சேர்ந்து ஹஜ் செய்திருக்கின்றார்." Masha'allah...

    We will sure include them in our dua...
    May ALLAH(swt) bless them and makes their life easier(learning of ISLAM) for them...Ameen...

    Jazakkallahu khair for sharing this with us !



    Your sister,
    M.Shameena

    ReplyDelete
  46. சகோதரிகள் சபிதா மற்றும் ஷமீனா,

    வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

    அல்ஹம்துலில்லாஹ்...

    இருவரின் வருகைக்கும், துவாவிற்கும் நன்றி...

    ReplyDelete
  47. சலாம், எதிர்குரல் என்ற வலைதளத்திற்கு என்னை அழைத்துவந்த PNTJ க்கு என் நன்றி. ஒவ்வொன்றும் அற்புதம் படித்தேன் அதில் குறிப்பாக முஸ்லிம்கள் மாயன் படித்தேன் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. இந்த மாயன் பழங்குடிகளில் தான் நாடியவர்களை சுவர்கத்தின் சொந்தகாரர்களாக அல்லாஹ் ஆக்கி இருப்பதை கண்டதும் அத்தியாயம் 110 தான் நினைவுக்கு வந்தது. "110:1. அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும்,
    110:2. மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும்,
    110:3. உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக; மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் “தவ்பாவை” (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான்."

    நிச்சயமாக நம்முடைய பிரார்த்தனைகளில் அவர்களையும் இணைத்துகொள்வோம்.

    ReplyDelete
  48. சகோதரர் தீன்,

    வ அலைக்கும் சலாம்...

    தங்களுடைய ஊக்கத்திற்கும், அற்புதமான வசனங்களை நினைவுபடுத்தியதற்கும் மிக்க நன்றி...

    வஸ்ஸலாம்..

    ReplyDelete
  49. ஆதாம் கடவுளால் எப்பொழுது படைக்கபட்டார்?

    அந்த கால கட்டத்தை சேர்ந்தவர்கள் தானே மாயன்கள்.
    அப்போது அனுப்பிய தூதர் சோப்லாங்கியா என்ன?

    மாயன் எப்போ மாறுனாங்களாம், அதுக்கு ஒரு பதிவாம்!

    மாயனையும் அல்லா தான் படைத்தார் என்றால் ஏன் அவர்களுக்கு ஆபிர்ஹாம வேதங்கள் எதுவும் தெரிந்திருக்கவில்லை.

    எல்லாரும் ஆமா சாமி போடுறாங்கன்னு சும்மா ஊத்திகிட்டே போவிங்க போலயே!

    ReplyDelete
  50. assalaamu alaikkum, alhamdhu lillaahi ,payanulla nalla thakaval ,maayan inaththavarkal anaivarum islaaththil inayum kaalam vegu thooraththil illai ,allaah avarkalai porunthikkolla vendum

    ReplyDelete