Interesting..நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக..ஆமீன்

இந்த பகுதியில் என் கவனத்தை ஈர்த்த நிகழ்வுகள் பகிரப்படும். எதிர்க்குரலின் முதன்மை பக்கத்திற்கு செல்ல <<இங்கே>> சுட்டவும்.

****

நீங்கள் படத்தில் பார்ப்பது ஒரு வித்தியாசமான பல்லி இனம். 


முதுகில் தடிமனான செதில்கள் கொண்ட இவை பலவகையில் மற்ற பல்லிகளிடம் இருந்து வேறுபடுகின்றன. இவை முட்டையிடுவதில்லை, மாறாக பெற்றெடுக்கின்றன. பாலூட்டவும் செய்கின்றன. பாலைவனங்களில் அதிகம் காணப்படும் இவை தங்களை எதிரிகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ளும் முறையும் விநோதமாக இருக்கிறது. பயமுறுத்தப்பட்டால் தன் வாலை வாயில் கவ்விக்கொண்டு (பார்க்க படம்) ஒரு பந்து போல சுருள ஆரம்பித்து விடுகின்றன. இதனை தாண்டியும் எதிரிகள் நெருங்கினால் இவற்றின் தடிமனான முதுகு செதில்கள் எதிரிகளை திண்டாட வைத்துவிடும். இறைவனின் படைப்பில் தான் எத்தனை ஆச்சர்யங்கள் !!!!

****

தமிழகம் தவறவிட்ட டைனாசர் கதை.... 1989-ஆம் ஆண்டு, திருச்சியில், இரண்டு மீட்டர் நீளமுள்ள தாடை எலும்பு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அது அப்பகுதியில் வசித்திருக்கக்கூடிய டைனாசர் ஒன்றிற்கு சொந்தமானது என்று உறுதி செய்யப்பட்டது. இதில் வியப்பான தகவல் என்னவென்றால், தாடை எலும்பே இரண்டு மீட்டர் என்றால், அந்த விலங்கின் மொத்த நீளம் 34 மீட்டராக இருந்திருக்க வேண்டும் என்று யூகிக்கப்பட்டது. அப்படியானால், இதுவரை உலகில் கண்டுபிடிக்கப்பட்ட டைனாசர்களிலேயே இது தான் பெரியது என்ற பெருமை தமிழகத்திற்கு கிடைக்கவிருந்த தருணம் அது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போன கதை அடுத்தது.

பிரமாண்டமான பாறைகளில் படிந்திருந்த இந்த எலும்பு படிமங்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்வதில் இருந்த நடைமுறை சிக்கல்கள் காரணமாக சம்பந்தப்பட்ட இடத்திலேயே அதனை விட்டு வைத்திருந்தனர். அடுத்த வந்த மழைக்காலத்தில் அந்த படிமங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இந்த சம்பவத்திற்கு முடிவுரை எழுதப்பட்டது. இந்த நிகழ்வுக்கு சான்றாக, இன்று நம்மிடம் இருப்பதெல்லாம் மங்கிய நிலையில் உள்ள கறுப்பு-வெள்ளை புகைப்படம் மட்டுமே.

***

இது செமையான கண்டுபிடிப்பு. குரங்குகளுக்கும் இன்றைய மனிதர்களுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும், அறிவில் குறைந்தவர்கள் என்றும் கருதப்படும் நியாண்டர்தல் மனிதர்கள், வலி நிவாரணிகளையும் ஆண்டிபயாடிக்களையும் பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. நியாண்டர்களின் பல் படிமங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகள் இந்த ஆச்சர்யமான செய்தியை நமக்கு தருகின்றன.


சுமார் நாற்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இந்த பற்படிமங்களை ஆய்வு செய்ததின் மூலம், எந்தவிதமான செடிகளை பயன்படுத்தினால் வலிகளையும், வயிற்றுப் போக்கு போன்ற பிரச்சனைகளையும் தீர்க்கமுடியும் என்பதை அவர்கள் அறிந்திருந்ததாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால், இன்று நாம் பயன்படுத்தும் வலி நிவாரணியான ஆஸ்பிரினின் (Aspirin) மூலப்பொருள் சாலிசிலிக் அமிலம் (Salicylic Acid) ஆகும். இந்த அமிலம் மிகுந்துள்ள செடிகளை நியாண்டர்தல் மனிதர்கள் வலிநிவாரணியாக பயன்படுத்தியுள்ளனர்.  இது மட்டுமல்லாமல், பெனிசிலின் போன்ற ஆண்டிபயாடிக்  மருந்துக்கான மூலப்பொருட்களை கொண்டுள்ள செடிகளையும் நியாண்டர்தல்கள் பயன்படுத்தியுள்ளனர்.

பெனிசிலின் கண்டுபிடிப்பதற்கு நாற்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அதற்கான அறிவை நியாண்டர்தல் கொண்டிருந்தனர் என்பதெல்லாம் மிகுந்த வியப்பான செய்திகள். ஆனால் இப்படியான கண்டுபிடிப்புகள் கூட நியாண்டர்தல் மனிதர்கள் குறித்த தவறான பரிணாம பார்வையை மாற்றவில்லை என்பது இன்னும் வியப்பான விசயம்.

இந்த செய்திக்கான ஆதாரம்: https://goo.gl/qGLbkH

நியாண்டர்தல்கள் குறித்த என்னுடைய விரிவான ஆய்வுக்கட்டுரையை படிக்க: https://goo.gl/vT7RoO

***

விசித்திரத்திலும் விசித்திரம் என்ற பதம் உண்மையாக இருக்குமானால் அதற்கு மிகச் சிறந்த உதாரணம் இந்த ப்ளாட்டிபஸ் (platypus). இன்று பலருக்கும் நன்கு அறிமுகமாகி இருக்கும் இந்த உயிரினம், முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட போது, மேற்குலக ஆய்வாளர்கள் நம்ப மறுத்துவிட்டனர். இப்படியான உயிரினம் இருப்பதாக கூறப்படுவது நன்கு கட்டமைக்கப்பட்ட பித்தலாட்டம் என்றே அவர்கள் எண்ணினர். அவர்களால் நம்ப முடியாததற்கு முக்கிய காரணம், ப்ளாடிபஸ்சின் உருவம். பல்வேறு உயிரினங்களில் இருந்து உறுப்புகளை எடுத்து ஒரு உயிரினமாக உருமாற்றினால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது ப்ளாட்டிபஸ்.


உருவம் மட்டுமில்லை, மேலும் பல்வேறு ஆச்சர்யங்களையும் தூக்கி போட்டது இந்த விலங்கு. முட்டையிடும் பாலூட்டி இனம், பாலூட்டிகளில் விஷத்தை பீச்சியடிக்கும் தன்மை கொண்ட உயிரினம் என்று ஆச்சர்யங்களை சொல்லிக்கொண்டே போகலாம். சரி, மரபணுக்கள் என்ன சொல்கின்றன என்று பார்த்தால் அது இன்னும் விசித்திரமான செய்தியை சொல்லின. ஊர்வனவற்றின் மரபணுக்கள், நிலநீர் வாழ் உயிரினங்களின் மரபணுக்கள் என்று எல்லாம் இதன் உடலில் கலந்துக் கட்டி இருந்தன. இவ்வளவு ஏன், பறவைகளின் மரபணுக்கள் கூட இவற்றில் உள்ளன. இது இப்படி வந்தது, அது அப்படி வந்தது என்று பரிணாமவாதிகள் அடித்து விடும் வழக்கமான எந்த கதையும் இவைகளிடம் செல்லுபடியாகவில்லை என்பது கூடுதல் காமெடி செய்தி.

***

பர்மாவின் ஆளுகைக்கு உட்பட்ட ராம்ரீ தீவு ஒரு விசித்திரமான நிகழ்வுக்கு பெயர் பெற்றது. பாதிக்கப்பட்ட ஜப்பானியர்கள் மட்டுமின்றி மனித குலத்திற்கே கிலி உண்டாக்கிய சம்பவம் அது.

ஜனவரி 26, 1945. இரண்டாம் உலகப்போர் உச்சத்தை அடைந்திருந்த நேரம். ராம்ரீ தீவில் விமானத்தளம் அமைக்கும் முயற்சியில் இறங்கியது பிரிட்டன். இது சாத்தியமாக வேண்டுமென்றால் இத்தீவை ஏற்கனவே ஆக்கிரமித்து இருக்கும் ஜப்பானிய படைகளை துரத்த வேண்டும். சில வார உக்கிரமான சண்டைக்கு பிறகு பிரிட்டனின் கை ஓங்கியது.  ஜப்பானியர்கள் ஒடுக்கப்பட்டார்கள்.

சரணடைய மறுத்த சுமார் ஆயிரம் ஜப்பானிய வீரர்கள் ராம்ரீ தீவின் சதுப்பு நில காடுகளுக்குள் தஞ்சம் அடைந்தனர். சுமார் பத்து கிலோமீட்டர் நீளமுள்ள அடர்ந்த காடுகள் அவை. தங்களை மீண்டும் தயார்ப்படுத்திக்கொள்ள அற்புதமான வாய்ப்பு இது. ஆனால் நடந்ததோ கோரமான, கேட்பவர்களை பயத்தில் ஆழ்த்தும் படுகொலைகள். இதற்கு காரணம் எதிரி படைகள் அல்ல. சக மனிதர்களும் அல்ல....பின்னே?

ஜப்பானிய படைகள் - ராம்ரீ தீவு 

பிப்ரவரி 19, 1945 இரவு. சதுப்புநில காடுகளில் திடீரென கண்டமேனிக்கு துப்பாக்கிகள் ஒலிக்கும் சத்தம். கூடவே அலறும் மனிதர்களின் ஓசையும். காடுகளை சுற்றி ரோந்து சென்றுக்கொண்டிருந்த பிரிட்டன் படை வீரர்கள் காடுகளுக்குள் இருக்கும் ஜப்பானியர்களின் கூச்சலைக் கேட்டு பயத்தில் உறைந்தனர்.

எங்கிருந்து வருகின்றன என்று தெரியவில்லை. திடீரென தோன்றுகின்றன, மனிதர்களை இழுத்து செல்கின்றன. யாரென்று கேட்கிறீர்களா? அவை முதலைகள், உப்பு நீர் முதலைகள்.

இருபது அடிக்கும் மேலாக வளருபவை, ஒரு டன் வரை எடை கொண்டவை. அதிகம் அறிந்திருக்கப்படாத கொடூர கொலையாளிகள். இவைகளிடம் தான் ஜப்பானியர்கள் மாட்டிக்கொண்டனர். அந்த இரவு, திரும்பவும் நினைத்து பார்க்க முடியாத இரவு.

உப்புநீர் முதலை 

அடுத்த நாள், ஆயிரம் ஜப்பானிய வீரர்களில் இருபது பேர் மட்டுமே மிஞ்சியிருந்ததாக இயற்கையாளர் ப்ரூஸ் ஸ்டான்லி ரைட் குறிப்பிடுகின்றார். அச்சத்தின் உச்சி எதுவோ அதனை தொட்ட நிலையில் இருந்தார்கள் தப்பி பிழைத்து, பிரிட்டன் ராணுவத்திடம் சரணடைந்தவர்கள். சம்பவம் குறித்த அவர்களின் வர்ணனை மனித குலம் மீண்டும் இப்படியான சூழலை சந்தித்திற கூடாது என்பதை வலியுறுத்தியது.

விலங்குகளால் கொல்லப்பட்ட மிகப்பெரும் நிகழ்வாக ராம்ரீ சம்பவத்தை குறிப்பிடுகின்றது கின்னஸ் புத்தகம்.

***

பூமியில், மனிதர்கள் செல்லவே முடியாத இடங்களில் ஒன்று தான் நீங்கள் கீழே பார்க்கும் பாம்புத் தீவு. பிரேசிலின் Sao Paulo நகரில் இருந்து சுமார் 90 மைல் தூரத்தில், அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ளது இத்தீவு.


மனிதர்களால் செல்ல முடியாததற்கு காரணம், இங்கு வசிக்கும் மிகக் கடுமையான விஷமுள்ள Golden Lancehead பாம்புகள் தான். ஒரு மைலுக்கும் குறைவான நீளமுள்ள இத்தீவில் சுமார் 4000-5000 பாம்புகள் வசிக்கின்றன.

Golden Lancehead Snake

இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டுமென்றால், இத்தீவின் ஒவ்வொரு சதுர மீட்டருக்கும் ஒரு பாம்பை நீங்கள் காண முடியும். அப்படியானால், ஒவ்வொரு மூன்று அடி தூரத்திலும் மரணம் காத்திருக்கின்றது என்று அர்த்தம். பிரேசிலின் அதிகாரத்தில் உள்ள இத்தீவில், கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டு தானியங்கி முறையில் செயல்படுகின்றது.

இத்தீவில் வசிக்கும் பாம்புகளுக்கான உணவு, இங்கு வரும் பறவைகள் மட்டுமே. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில், இங்கு வாழை பயிரிட எண்ணி, பாம்புகளை அழிக்க இந்த தீவு முழுக்க கொளுத்தப்பட்டது. ஆனாலும், பாம்புகளிடம் இருந்து விடுபட முடியவில்லை.

இன்று, அரிய வகை விளங்கினமாக கருதப்படும் Golden Lancehead பாம்புகளை பாதுகாக்கும் பொருட்டு, பிரேசிலிய அரசாங்கம், இத்தீவில் மனித நடமாட்டத்திற்கு (ஆய்வு பணிகளை தவிர்த்து) தடை விதித்து விட்டது.  

***
நீங்கள் படத்தில் காணும் தவளை, முழுமையாக வளர்ந்த நிலையிலேயே, 7.7 மில்லி மீட்டர் அளவு தான் உள்ளது. பாப்புவா நியு கினியாவில் இரண்டு வருடங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ள இவ்வகை தவளைகள் தான், நில மற்றும் நீர்வாழ் உயிரினங்களில் மிகச் சிறியவையாகும்.


இவற்றை படம் பிடிப்பது கூட சவாலான ஒன்றாக இருந்ததாக குறிப்பிடுகின்றனர் ஆய்வாளர்கள். நீங்கள் கேமராவை focus செய்வதற்குள் இவை காணாமல் போய்விடும். ஆள் பார்ப்பதற்கு குட்டியாக இருந்தாலும், தன் அளவை விட முப்பது மடங்கு தூரம் தாவக்கூடியவையாக இருக்கின்றன. 

சில வருடங்களுக்கு முன்பு தான், உலகின் மிகச் சிறிய பறக்கும்பூச்சி கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் அளவு என்ன தெரியுமா? வெறும் .4 மில்லி மீட்டர் தான். இயல்பான நிலையில் நம் கண்ணிற்கு புலப்படாத இவ்வகை பூச்சிகள் முழுமையாக வளர்ந்திருந்தன.


யோசித்து பாருங்கள், நாம் பாக்டீரியாவையோ அல்லது வைரசையோ பற்றி பேசவில்லை. முதுகெலும்பு கொண்ட தவளை குறித்து பேசுகின்றோம். இத்தனை சிறிய அளவில் அனைத்து உறுப்புகளும் உள்ளலடங்கிய, பரிபூரணமாக வேலை செய்யும் ஒரு உயிரினம்.


படைப்புகள் தான் எவ்வளவு ஆச்சர்யங்களை நமக்கு தருகின்றன!!!
***

மனிதனின் வரலாற்றை அறிவதில் அறிவியலுக்கு என்றுமே தனி ஆர்வம்  உண்டு. பரிணாம துறைகளிலேயே மிகவும் சிக்கலானது என்றால் அது மனிதனின் தோற்றம் மற்றும் நடத்தைகளை ஆராயும் துறை தான் என்று பல்வேறு ஆய்வாளர்கள் எளிமையாக கை காட்டி விடுவார்கள். ஆம், அவ்வளவு சிக்கலானது இந்த துறை. அவ்வப்போது இத்துறையில் வெளிப்படும் ஆய்வு முடிவுகள் தொடர்ந்து நிலைமையை மர்மமாக்கியே வருகின்றன.

இந்த சமீபத்திய ஆய்வை பாருங்கள். இஸ்ரேலிய ஆய்வாளர்களால் குசம் எனப்படும் குகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தகவல்கள் நான் முதல் பத்தியில் சொன்னவற்றை மெய்ப்பிக்கின்றன. அந்த குகையில், சுமார் மூன்று லட்ச ஆண்டுகளுக்கு முந்தைய மனித நடவடிக்கைகளை கண்டறிந்துள்ளனர் ஆய்வாளர்கள்.இறைச்சியை வெட்ட பயன்படும் கற்கருவிகள் குகைக்குள்ளேயும், வெளியேவும் அதிக அளவில் கிடைத்துள்ளன. மேலும், இவற்றிலிருந்து சில மீட்டர்கள் தள்ளி முற்றிலும் மாறுபட்ட கருவிகளையும் கண்டறிந்துள்ளனர். இந்த கருவிகள் வேறுவிதமான செய்கைகளுக்கு பயன்பட்டுள்ளன. இவை மட்டுமல்லாமல், அந்த இடத்தில் எரிக்கப்பட்ட மிருகங்களின் எலும்புகளையும் கண்டறிந்துள்ளனர்.

இவையெல்லாம், அந்த குகை ஒரு கேம்ப் போல செயல்பட்டதற்கான ஆதாரம் என்கின்றனர் ஆய்வாளர்கள். அதாவது, இன்று மனிதர்கள் ஒரு இடத்தில் அவ்வப்போது ஒன்றுக்கூடி உண்டு மகிழ்கின்றனர் அல்லவா, அதுபோலவே மூன்று லட்ச ஆண்டுகளுக்கு முந்தைய மனிதர்கள் செய்துள்ளனர் என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள்.

ஆக, இக்கால மனிதர்களின் நடத்தைகளை போலவே அவர்களும் இருந்துள்ளது, பரிணாமத்தை பொறுத்தமட்டில் நிச்சயம் வியப்பான செய்தியே. இந்த ஆய்வு குறித்து குறிப்பிடும் Science Daily தளம், இந்த முடிவுகள், அக்கால மனிதர்கள் மிகச் சிறந்த சமூக கட்டமைப்பை கொண்டவர்களாகவும், அறிவில் தேர்ந்தவர்களாகவும் இருந்ததற்கான ஆதாரங்கள் என்று குறிப்பிட்டுள்ளது.

நான் முதல் பத்தியில் சொன்ன சிக்கல்களுடன் இந்த ஆய்வு முடிவுகளும் சேர்ந்துக்கொண்டு விட்டன. இந்த ஆய்வு குறித்து விரிவாக அறிய http://www.sciencedaily.com/releases/2014/01/140127101236.htm****
பரிணாமம் குறித்து அமெரிக்கர்களிடையே சமீபத்தில் (டிசம்பர் 30) நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. பிரபல ஆய்வு மையமான Pew Research-ஆல் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் பின்வருகின்றன. 

33% அமெரிக்கர்கள், தற்போதைய உருவிலேயே உயிரினங்களை இறைவன் படைத்தான் என்ற கருத்தில் உள்ளனர். 

24% அமெரிக்கர்களோ, பரிணாமம் உண்மையாக இருக்கலாம் ஆனால் அதனை இயக்குவது இறைவன் தான் என்கின்றனர். 

பரிணாமம் உண்மை, ஆனால் இதற்கு இறைவன் துணை தேவையில்லை, இயற்கையே போதும் என்று 32% மக்கள் கூறியுள்ளனர். 

இந்த ஆய்வில் கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு தகவல் என்னவென்றால், குடியரசு கட்சியை சார்ந்தவர்கள் பரிணாமத்தை நம்புவது கணிசமாக குறைந்துள்ளது. சென்ற முறை, பரிணாமத்தை நம்புவதாக 54% பேர் கூறியிருந்தனர், ஆனால் தற்போதோ இந்த எண்ணிக்கை 43%-மாக குறைந்துள்ளது. 

ஆய்வு குறித்த முழு தகவல்களை Pew research-ன் அதிகாரப்பூர்வ தளத்தில் படிக்கலாம். http://www.pewforum.org/2013/12/30/publics-views-on-human-evolution/

***

உலகின் முதல் டிகிரி வழங்கும் கல்வி நிறுவனத்தை கட்டமைத்த பாத்திமா அல்-பிஹ்ரி..

இன்று, படிப்பில் தேறுபவர்களுக்கு டிகிரி எனப்படும் அங்கீகாரம் வழங்கப்படுகின்றது. UNESCO மற்றும் கின்னஸ் உலக சாதனைகள் தகவலின்படி இத்தகைய நடைமுறையை முதன் முதலில் ஆரம்பித்து வைத்த கல்வி நிறுவனம் மொராக்கோவில் உள்ள அல்-குவரவின் பல்கலைகழகமாகும். இந்த கல்வி நிறுவனத்தை பாத்திமா அல்-பிஹ்ரி என்ற பெண்மணி 859-ஆம் ஆண்டு கட்டினார். உலகின் மிக பழமையான டிகிரி வழங்கும் கல்விநிறுவனம் என்ற பெருமையுடன் இன்றளவும் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றது இந்த பல்கலைகழகம். பல்கலைகழகத்தின் படம் கீழே...மேலதிக தகவல்களுக்கு: http://en.wikipedia.org/wiki/Fatima_al-Fihri
http://en.wikipedia.org/wiki/Qarawiyyin 

****

பரிணாமத்திற்கு எதிரான புத்தகம் - வெளியிடுகின்றது பிரபல நிறுவனம்

அறிவார்ந்த கோட்பாடை (Intelligent Design) ஆதரிக்கும் ஆய்வாளர்களில் முக்கியமானவரான ஸ்டீபன் மேயர் எழுதிய Darwin's Doubt (டார்வினின் சந்தேகம்) நூல் ஜூன் 18 ஆம் தேதி வெளிவருகின்றது. இதனை வெளியிடுபவர்கள், உலகின் மிகப்பெரிய பதிப்பாளர்களில் (publisher) ஒருவரான ஹார்ப்பர் கோலின்ஸ் நிறுவனத்தார். பார்க்க http://www.harpercollins.com/books/Darwins-Doubt-Stephen-C-Meyer/?isbn=9780062071477

எதிர்பார்த்தப்படியே, கடுமையான கடுப்பை பரிணாமவியலாளர்களிடையே இது ஏற்படுத்தியுள்ளது. நன்கறியப்பட்ட பரிணாமவாதியான ஜெரி கோயின், இந்த புத்தகத்தை வெளியிவதின் மூலம் தன்னுடைய நற்பெயரை ஹார்ப்பர் நிறுவனம் இழந்துவிட்டதாக கூறியுள்ளார். பார்க்க http://www.algemeiner.com/2013/04/25/atheist-professor-jerry-coyne-fiddles-while-the-darwinian-palace-burns/

உலகின் பாரம்பரியமிக்க நிறுவனத்தால் வெளியிடப்படுவதால் இந்த புத்தகம் மிக அதிகமான மக்களை சென்றடையும் வாய்ப்பு பிரகாசித்துள்ளது. ஸ்டீபன் மேயரின் முந்தைய புத்தகத்தை போலவே இந்த நூலும் அறிவியல் உலகில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நம்பப்படும் வேளையில், ஹார்ப்பர் போன்ற நிறுவனங்கள் அறிவார்ந்த கோட்பாட்டை ஆதரிக்கும் நூல்களுக்கு முட்டு கொடுப்பது அறிவியல் உலகில் நிலவும் பரிணாம விவாதத்தை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்கின்றது. 


*****

போப் செய்தி உண்மையல்ல, ஆனால் இது உண்மை

போப் குறித்த வதந்திகள் ஒரு முக்கிய உண்மை செய்தியை மறைத்து விட்டன. சர்வதேச இஸ்லாமிய எதிர்ப்பு அரசியலை உற்று நோக்குபவர்களுக்கு கிரீட் வில்டர்ஸ் (Greet Wilders) என்ற பெயர் நன்கு அறிமுகமாகி இருக்கும். டென்மார்க்கின் தீவிர வலது சாரி கட்சியின் தலைவரான இவர் இஸ்லாம் மீதான காழ்ப்புணர்ச்சிக்கு பெயர் போனவர்.

இப்போது வெளியாகி இருக்கும் அந்த முக்கிய செய்தி என்னவென்றால், இந்த கட்சியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான Arnoud Van Doorn இஸ்லாமை ஏற்று பெரும் பரபரப்பை ஐரோப்பாவில் ஏற்படுத்தியுள்ளார். "பெரும் பரபரப்பு" என்பது நிச்சயம் சாதாரண வார்த்தையாகவே இருக்க முடியும். இஸ்லாம் மீதான தன் கட்சியின் வெறுப்புணர்வு இஸ்லாம் குறித்து ஆராய தூண்டியதாகவும், ஒரு வருட ஆய்வுக்கு பிறகு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அல்-ஜசீரா ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார் Arnoud Van Doorn.

தற்போது கட்சியில் இருந்து விலகியுள்ள இவர், தான் மிகப்பெரும் சவாலை சந்திக்கவிருப்பதை உணர்ந்துள்ளதாகவும், இவற்றில் இருந்து விடுபட இறைவன் உதவுவான் என்று நம்புவதாகவும் கூறியுள்ளார்.

ஐரோப்பிய உலகில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள இந்த செய்தி குறித்து முழுமையாக படிக்க.. http://www.onislam.net/english/news/3341/461645.html


*****

பிரான்சின் முன்னணி ஆய்வாளரான Didier Raoult டார்வினின் பரிணாம கோட்பாட்டை முற்றிலுமாக நிராகரித்துள்ளார். இவர் பிரான்சிலேயே மிகப்பெரிய உயிரியல் விஞ்ஞானியாம். பல புதிய பாக்டீரியாக்களை கண்டுபிடித்தவராம். உலகிலேயே (இது வரையிலான) மிகப்பெரிய வைரசை கண்டுபிடித்தது இவரது டீம் தானாம். 

இவரின் Dépasser Darwin (Beyond Darwin) என்ற அறிவியல் புத்தகம் சென்ற ஆண்டு வெளியானது. இதில் டார்வினின் பரிணாம கோட்பாட்டை முற்றிலுமாக நிராகரித்துள்ளாராம் Raoult. 

இதையெல்லாம் யார் சொல்கின்றார்கள் தெரியுமா? சில நாட்களுக்கு முன்பாக வெளியான, மதிப்புமிக்க ஆய்விதழான Science தான் தெரிவிக்கின்றது.  

Raoult last year published a popular science book that flat-out declares that Darwin's theory of evolution is wrong - Science Magazine, 2nd March 2012.
சென்ற ஆண்டு Raoult பிரசுரித்த பிரபல அறிவியல் புத்தகம், டார்வினின் பரிணாம கோட்பாடு தவறு என்று வெளிப்படையாக அறிவிக்கின்றது - Science Magazine, 2nd March 2012. 

சிலபல மாதங்களுக்கு முன்பு தான் (டாகின்ஸ்சின் வார்த்தைகளில்) பரிணாமத்தின் ஆணிவேரான பரிணாம மரத்தை கட்டுக்கதை என்று வர்ணித்தார் மற்றொரு முன்னணி உயிரியல் ஆய்வாளரான கிரேக் வென்டர். இப்போது இவர். 

பரிணாமத்திற்கு மாற்றாக உள்ள "அறிவார்ந்த வடிவமைப்பு (intelligent design} கோட்பாடு" வளருகின்றதோ இல்லையோ, பரிணாமக்கோட்பாடு அதள பாதாளத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை. 

அப்புறம் என்ன? ஸ்வீட் எடுங்க கொண்டாடுங்க...

பரிணாம கோட்பாடு குறித்த என்னுடைய அனைத்து கட்டுரைகளையும் காண <<இங்கே>> சுட்டவும். 

References:


*****
Robert B. Laughlin - Physicist, Nobel laureate 1998.

In his 2005 book, he says the following.

Evolution by natural selection, for instance, which Charles Darwin originally conceived as a great theory, has lately come to function more as an antitheory, called upon to cover up embarrassing experimental shortcomings and legitimize findings that are at best questionable and at worst not even wrong. Your protein defies the laws of mass action? Evolution did it! Your complicated mess of chemical reactions turns into a chicken? Evolution! The human brain works on logical principles no computer can emulate? Evolution is the cause! 

சிறந்த கோட்பாடாக டார்வினால் கருதப்பட்ட இயற்கை தேர்வு, பின்னாளில், கோட்பாடுகளுக்கு எதிரான ஒன்றாக மாறிவிட்டது. செயல்முறை தோல்விகளை மறைக்கவும், சர்ச்சையான விசயங்களை நியாயப்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றது. Mass action விதிகளை உங்கள் புரதம் சவால் விடுகின்றதா, பரிணாமம் செய்திருக்க வேண்டும். பல்வேறு வேதியல் பொருட்கள் ஒன்று சேர்ந்து கோழியாக மாறிவிட்டனவா, பரிணாமம் தான் காரணம். உலகின் எந்த கணிப்பொறிகளாளும் முடியாத தர்க்கரீதியான செயல்களை உங்கள் மூளை செய்கின்றதா, பரிணாமம் தான் காரணம் - Extract.

Robert B. Laughlin, A Different Universe: Reinventing Physics from the Bottom Down (New York: Basic Books, 2005), P.No.168-69.


*****
Lynn Margulis - Respected Biologist, recipient of the William Procter Prize for Scientific Achievement, recipient of the National Medal of Science.

In her April, 2011 interview with Discover magazine she says the following...

"Natural selection eliminates and maybe maintains, but it doesn't create"
"Neo-Darwinists say that new species emerge when mutations occur and modify and organism. I was taught over and over again that the accumulation of random mutations led to evolutionary change-led to new species. I believed it until I looked for evidence."

இயற்கை தேர்வு புதிய உயிரினங்களை உருவாக்காது. மரபணு மாற்றங்களால் புதிய உயிரினங்கள் உருவாகும் என்று நியோ-டார்வினிஸ்ட்கள் கூறுகின்றனர். நானும் நம்பினேன், ஆதாரங்களை பார்க்கும்வரை.... - Extract

Q: What kind of evidence turned you against neo-Darwinism?

"What you'd like to see is a good case for gradual change from one species to another in the field, in the laboratory, or in the fossil record -- and preferably in all three. Darwin's big mystery was why there was no record at all before a specific point [dated to 542 million years ago by modern researchers], and then all of the sudden in the fossil record you get nearly all the major types of animals. The paleontologists Niles Eldredge and Stephen Jay Gould studied lakes in East Africa and on Caribbean islands looking for Darwin's gradual change from one species of trilobite or snail to another. What they found was lots of back-and-forth variation in the population and then -- whoop -- a whole new species. There is no gradualism in the fossil record."

Source: http://discover.coverleaf.com/discovermagazine/201104?pg=68#pg70

*****

வஸ்ஸலாம், 

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ