Tuesday, February 16, 2010

இந்த தளத்தை பற்றி


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுதாக...

இஸ்லாம் என்ற ஓரிறைக்கொள்கை   தோன்றிய காலம் முதலே அது விமர்சனங்களையும், மாபெரும் எதிர்ப்புகளையும் சந்தித்து வந்துள்ளது. அந்த விமர்சனங்களே பலரையும் இஸ்லாம் என்றால் என்ன என்று அறிய செய்து அவர்களையும் இஸ்லாத்தின்பால் சேர்த்துள்ளது. இது வரலாறு நமக்கு சொல்லும் செய்தி. ஆக இஸ்லாத்தின் மேல் வைக்கப்படும் விமர்சனங்களுக்கு ஆரோக்கியமான முறையில் பதிலளிப்பது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கடமையாகிறது. 

தமிழ் இணையதளங்களில், வலைப்பூக்களில் இஸ்லாத்திற்கெதிராக வைக்கப்படும் விமர்சனங்களுக்கு  ஆரோக்கியமான முறையில் பதிலளிப்பதே இந்த தளத்தின் முதன்மையான குறிக்கோள். இன்ஷா அல்லாஹ்...மேலும் நாத்திகர்களின் நம்பிக்கையான பரிணாம கோட்பாட்டின் அறிவியலுக்கு எதிரான நிலையை துறைவாரியாக அம்பலப்படுத்துவதும் இத்தளத்தின் நோக்கமாகும். 

இவை தவிர, ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் பல இணையதளங்களில் வெளியான இஸ்லாம் தொடர்பான கட்டுரைகளின் தமிழாக்கமும், பொதுவான ஆய்வுக் கட்டுரைகளும் இடம்பெறும். இத்தளத்தின் பெரும்பான்மையான பதிவுகள் தொடர்ந்து அப்டேட் செய்யப்படுவதால், முழுமையான பலனை வாசகர்கள் அடையும் பொருட்டு, பதிவுகளை மீள்பதிவு அல்லது ஷேர் செய்பவர்கள், பதிவின் சுட்டியுடன் செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன். 

பதிவுகளின் பட்டியல்:

எதிர்க்குரல் தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளின் தலைப்புகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. தலைப்புகளின் மேல் சுட்டுவதின் மூலம் பதிவுகளை படிக்கலாம். 

74. நபிவழித் திருமணத்தில் சோதனைகளா? - முஸ்லிம்கள் கவனத்திற்கு...
75. ஆஸ்திரேலிய பேருந்துகளில் இஸ்லாமிய விளம்பரங்கள்...
76. உலக நாத்திகர் மாநாட்டில் முஸ்லிம்கள் விவாதம்...
77. 'என் மகள்களின் மூன்று கேள்விகள்'
78. சீனாவின் ஹுய் முஸ்லிம்கள் - யார் இவர்கள்?
79. இஸ்லாமை தழுவினார் பிரபல தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் பார்னெல்...
80. உலகின் 'முதல்' பறவை இறந்தது...bye-bye birdie
81. ஸ்டீவன் ஹாகிங் - அறிவியலா? நம்பிக்கையா?
82. முஸ்லிம் மாயன்கள்...
83. மனித ZOO - அறிவியலின் அசிங்கமான இரகசியங்கள்...
85. புத்தகங்கள் தலையணைகளாக, சோதனைகள் வாழ்க்கையாக...
86. வாட்சின்:ஆச்சர்யங்கள்-மர்மங்கள்-குழப்பங்கள்
87. இவர் தான் முஹம்மது நபி...
88. முஸ்லிம் மாணவர்களால் டாகின்ஸ் கவலை..
89. நாத்திகத்திற்கு விடைகொடுத்த பிரபல நாத்திகர்கள்..
90. புதிய அறிவியல் பொற்காலம்?
91. '9/11 - என்ன மாதிரியான மதம் இது?'
104. பெங்களூர் - ஒலிம்பிக்ஸ் 2012 - இஸ்லாமை நோக்கி மக்கள்
105. மனித பரிணாமம் = மல்டிபிள் பர்சனாலிடி டிஸ்ஆர்டர்?
106. கூரி முஸ்லிம்கள்...
107. National Geographic: பித்தலாட்டங்கள் - சொல்லப்படாத உண்மைகள்
108. பிரிட்டிஷ் சென்சஸ் - நாத்திகத்தால் அசைக்க முடியா இஸ்லாம்..
109. வெளிவருகின்றது முஸ்லிம் பதிவர்களின் புத்தகம்...
110. விஸ்வரூப விவகாரம் - முதல்வர் பேசியதின் முழு விபரம்...
111. நியூயார்க் டைம்ஸ் - இஸ்லாம் - பிரான்ஸ்
112. 'அநாதை' மரபணுக்கள்...
113. FEMEN - அதிரடியாய் பதிலடி கொடுக்கும் முஸ்லிம் பெண்கள்...
114. பிரிட்டிஷ் முஸ்லிம்கள் - அறக்கொடைகள் - கடைசியில் நாத்திகர்கள்
115. 'ஆக்டோபஸ் எனும் வேற்றுக்கிரகவாசி'

இந்த தளத்தில் தொடர்ந்து எழுத இறைவன் எங்களுக்கு உடல் வலிமையையும் மன வலிமையையும் தந்தருள்வானாக...ஆமின்..

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ






10 comments:

  1. அன்பு சகோதரர் ஆஷிக் அவர்களுக்கு,
    தாங்கள் வலைப்பூ தொடங்கியிருப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சியை கொடுக்கின்றது. இந்த வலைப்பூவின் மூலம் இஸ்லாத்திற்கெதிரான அடிப்படையில்லாத பல குற்றச்சாட்டுகளை இறைவனின் கருணையினால் ஒன்றுமில்லாமல் நீர்த்து போக செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது. எது எதற்கோ பொழுது போகாமல் வெட்டி அரட்டை அடிக்க வலைப்பூவை பயன்படுத்துகின்றவர்களின் மத்தியில் தங்களின் வலைப்பூ பல அரிய தகவல்களை தாங்கி வரும் என்று எதிர்பார்க்கின்றேன்.
    (குறிப்பு: உங்கள் மீது சிறு கோபமும் உண்டு. மிகவும் காலதாமதமாக வலைப்பூவை ஆரம்பிக்கின்றீர்கள் என்ற கோபம் தான் அது. )

    சகோதரத்துவத்துடன்,
    பி.ஏ.ஷேக் தாவூத்.
    (உதிரம் கொடுத்து உயிர் காப்போம். மக்களிடையே மனிதநேயம் வளர்ப்போம்.)

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

    சகோதரர் பி.ஏ.ஷேக் தாவூத் அவர்களுக்கு,

    //(குறிப்பு: உங்கள் மீது சிறு கோபமும் உண்டு. மிகவும் காலதாமதமாக வலைப்பூவை ஆரம்பிக்கின்றீர்கள் என்ற கோபம் தான் அது)//

    உங்கள் கோபம் மிக நியாயமானது தான். எனக்கு தமிழில் டைப் செய்வதில் உள்ள அசவுரியங்களை உங்களிடம் ஏற்கனவே பகிர்ந்து கொண்டுள்ளேன். தமிழில் சரளமாக டைப் செய்வதற்காக கடந்த சில மாதங்களாக அதிக முயற்சி மேற்கொண்டேன். அதற்காக தான் இவ்வளவு கால தாமதம்.

    இன்னும் கூட சரளமாக டைப் செய்ய வரவில்லை. ஆனால் முன் இருந்ததற்கு எவ்வளவோ பரவாயில்லை. சுபானல்லாஹ்...

    போக போக இந்த கடினமும் மறைந்து விடும். இன்ஷா அல்லாஹ்...

    //தங்களின் வலைப்பூ பல அரிய தகவல்களை தாங்கி வரும் என்று எதிர்பார்க்கின்றேன்.//

    இறைவன் நாடினால் நிச்சயம் நடந்தேறும்.

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே தங்கள் வலைப்பதிவு கண்டேன். மாஷா அல்லாஹ். மிக மிக அருமை. இன்று முதல் தங்களைப் பின் தொடர்கிறேன்.
    நான் பல் வேறு வலைப்பதிவுகளை நடத்தி வருகிறேன். எமது பதிவுகளில் நன்றியுடன் தங்கள் கட்டுரைகளை மீள்பதிவு செய்து கொள்ள நிணைக்கிறேன். ஆனால் ஒரு குழப்பம். எதை பதிவு செய்வது? எதை விடுவது? கற்கண்டின் எப்பகுதி இனிக்கும் எனத் தெரியாமல்.......

    ReplyDelete
  4. பிஸ்மில்லாஹ்,

    வஅலைக்கும் சலாம் (வரஹ்) ,

    அன்பு சகோதரர் மஸ்தூக்கா அவர்களுக்கு,

    தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. எல்லா புகழும் அல்லாஹ்விற்கே

    தாராளமாக நீங்கள் இங்குள்ள பதிவுகளை மீள்பதிவு செய்துகொள்ளலாம். அதேசமயம் நான் என்னுடைய பதிவுகளில் தவறு செய்தால், தயவுகூர்ந்து சுட்டிக்காட்டி திருத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்...

    நம் அனைவருக்கும் இறைவன் என்றென்றும் நல்வழி காட்டுவானாக...ஆமின்

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  5. அன்பு சகோதரர் ஆஷிக் அஹ்மத்....
    அஸ்ஸலாமு அலைக்கும் வரமத்துல்லாஹி வ பரக்காத்துஹ்.

    "எதிர்க்குரல்" - சரியான தேர்வு.

    //தமிழ் இணையதளங்களில், வலைப்பூக்களில் இஸ்லாத்திற்கெதிராக வைக்கப்படும் விமர்சனங்களுக்கு ஆரோக்கியமான முறையில் பதிலளிப்பதே இந்த வலைப்பூவின் முதன்மையான குறிக்கோள். இன்ஷா அல்லாஹ்..// இதற்காக வலைப்பூ துவக்கியதற்கு நன்றி, சகோதரர் ஆஷிக் அஹ்மத். பின்னூட்டங்கள் வாயிலாக செய்த தங்கள் பணியை தனி வலைப்பூவில் தொடர இருக்கிறீர்கள். மகிழ்ச்சி.

    //அதுதவிர, ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் பல இணையதளங்களில் வெளியான இஸ்லாம் தொடர்பான கட்டுரைகளின் தமிழாக்கமும் இடம்பெறும். இன்ஷா அல்லாஹ்...// மிக்க நன்றி. வரவேற்கிறேன். பயன்பெற ஆவலாய் உள்ளேன். 

    அல்லாஹ் தங்களுக்கு மென்மேலும் அருள் புரிய துவா செய்கிறேன்.

    மகிழ்வுடன்
    முஹம்மது ஆஷிக்.
    mohaashik@gmail.com
    mohaashik@ymail.com  

    (பின் குறிப்பு : என்னை தங்களுக்கு தெரியும்...
    /// (???...strange pseudonym) ///..... என்று தங்களால் குறிப்பிடப்பட்டிருக்கிறேன்...)

    ReplyDelete
  6. பிஸ்மில்லாஹ்,
    வ அலைக்கும் சலாம் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹ்,

    அன்பு சகோதரர் முஹம்மது ஆஷிக் அவர்களுக்கு,

    //(பின் குறிப்பு : என்னை தங்களுக்கு தெரியும்...
    /// (???...strange pseudonym) ///..... என்று தங்களால் குறிப்பிடப்பட்டிருக்கிறேன்...)//

    அவரா நீங்க? வாங்க வாங்க...

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...

    அப்படியே நான் என் பதிவில் ஏதாவது தவறு செய்தால் நெத்தியில் அடித்தாற்போல் சொல்லி திருத்துங்கள்...

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  7. MUHAMMAD THAMEEMMonday, March 29, 2010

    நம் ஈமானை பலப் படுத்த உதவும் பதிவு. உங்களுக்கு இறைவன் சிறந்த நற்கூலி வழங்குவானாக
    அன்புடன்

    முஹம்மது தமீம்

    ReplyDelete
  8. அஸ்ஸலாமு அலைக்கும் வர்ஹ, உங்கள் ஆக்கங்கள் சிறப்பாக உள்ளன. அல்லாஹ் உங்களுக்கு அறிவை விசால படுத்துவானாக. தூது ஆன்லைன் வலைத்தளம் அதிகமான நேயர்கள் பார்க்ககூடிய இஸ்லாமிய வலைதளமாக உள்ளது. உங்களது ஆக்கங்களை பதிய அனுமதியளித்தால் பலருக்கும் சென்றடைய வாய்ப்புள்ளது.

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் சகோ நாமீ,

      புகழ் அனைத்தும் இறைவனுக்கே உரித்தாவதாக...

      //தூது ஆன்லைன் வலைத்தளம் அதிகமான நேயர்கள் பார்க்ககூடிய இஸ்லாமிய வலைதளமாக உள்ளது. உங்களது ஆக்கங்களை பதிய அனுமதியளித்தால் பலருக்கும் சென்றடைய வாய்ப்புள்ளது.//

      தாராளமாக பதியுங்கள் சகோ. ஜசாக்கல்லாஹ்

      உங்கள் சகோதரன்,
      ஆஷிக் அஹமத் அ

      Delete