Sunday, August 28, 2011

ஸ்டீவன் ஹாகிங் - அறிவியலா? நம்பிக்கையா?நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன் 

                       செயற்கை உயிரை உருவாக்கி ஆத்திகர்களின் முகத்தில் கரியை பூசிவிட்டார் கிரேக் வென்டர் என்று நாத்திகர்கள் குதூகலித்த நேரத்தில், தாங்கள் செயற்கை உயிரையெல்லாம் உருவாக்கவில்லை என்று அதிரடியாய் அறிவித்து, தன்னுடைய கையாலேயே நாத்திகர்களின் முகத்தில் ஒரு இடம் பாக்கியில்லாமல் கரியை பூசிவிட்டார் கிரேக் வென்டர். (செயற்கை உயிர் குறித்த இத்தளத்தின் பதிவை காண இங்கே சுட்டவும்)

இது சென்ற வருடம்.நடந்தது.

மறுபடியும் மண்ணை கவ்விய வேதனையில் நாத்திகர்கள் துவண்டு போயிருக்க, அவர்களை உற்சாகப்படுத்த நாள் குறிக்கப்பட்டது. அந்த நாள், சென்ற வருடம் செப்டெம்பர் மாதம் ஏழாம் தேதி (7th September 2010). 

இந்த முறை அவர்களை உற்சாகப்படுத்த வந்தவர் ஸ்டீபன் ஹாகிங். Leonard Mlodinov என்பருடன் சேர்ந்து ஸ்டீபன் ஹாகிங் எழுதியிருந்த "The Grand Design" புத்தகம் மேலே குறிப்பிட்ட தேதியில் வெளியிடப்பட திட்டமிடப்பட்டிருந்தது. 


"இந்த பிரபஞ்சம் உருவாக கடவுள் தேவையில்லை. இயற்பியல் கோட்பாடுகளே போதுமானது" என்று அந்த புத்தகத்தில் ஹாகிங் வாதிடுவதாக செய்தி தீ போல பரவ, நாத்திகர்கள் மறுபடியும் உற்சாகமடைந்தனர். 

"இப்போது தானே செயற்கை உயிர் விசயத்தில் அடிப்பட்டீர்கள், நீங்கள் திருந்தவே மாட்டீர்களா?" என்று ஆத்திகர்கள் கேட்க, "அது போன மாசம், நாங்க சொல்றது இந்த மாசம்" என்று சொல்லிவிட்டு ஆனந்த கூத்தாடினர் நாத்திகர்கள்.

நிச்சயம், ஸ்டீபன் ஹாகிங் நம்மை கைவிடமாட்டார் என்பது அவர்களது கணக்காக இருந்திருக்க வேண்டும்.

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இது ஒரு பரப்பரப்பான சூழ்நிலையே. ஆத்திகர்களின் நிலையில் இருந்து பார்த்தால் அவர்கள் மீண்டும் ஒரு சவாலை எதிர்க்கொள்ள வேண்டிய நிலை.

எதிர்ப்பார்த்தபடி புத்தகம் வெளியானது. எதிர்பார்த்தப்படி வசூலை அள்ளியது.

ஆனால்......................

மிக கடுமையான எதிர்மறை விமர்சங்களுக்கு உள்ளானது இந்த புத்தகம். சக ஆய்வாளர்களாலும், அறிவியல் ஆய்விதழ்களிலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

விமர்சனங்கள் எப்படி இருந்தன என்பதற்கு சில கருத்துக்களை பார்த்தாலே உங்களுக்கு புரியும்.

  • பணத்திற்காக எழுதப்பட்ட புத்தகம்.
  • போலியான அறிவியலை (Pseudo Science) ஊக்கப்படுத்தும் புத்தகம்.
  • இந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ள கோட்பாடு முட்டாள்தனமாது  (Crap).
  • தத்துவவியலாளர்கள் (Philosopher) போல நடந்துக் கொண்டிருக்கின்றார்கள் இந்த விஞ்ஞானிகள். 
  • ஹாகிங்கை நம்பினால் நம்மை நாமே நகைச்சுவைக்கு உட்படுத்தி கொள்கின்றோம் என்று அர்த்தம். 

ஆத்திகர்களுக்கோ இன்ப அதிர்ச்சி. பின்னே இருக்காதா என்ன?? "நாம விமர்சித்தால் கூட இந்த அளவுக்கு கடுமையாக விமர்சிக்க முடியாது போல" என்றெண்ணி வேலை சுலபத்தில் முடிந்து விட்டதற்காக இறைவனுக்கு நன்றி தெரிவித்து கொண்டிருந்தனர்.

இந்த புத்தகம் வெளிவரும், ஆத்திகம்-நாத்திகம் குறித்த விவாத்தில் இந்த புத்தகத்தை மேற்கோள் காட்டியே ஆத்திகர்களை நோகடிக்கலாம் என்றிருந்த நாத்திகர்களுக்கு பலத்த அடி. மறுபடியும் மண்ணை கவ்வ நேர்ந்ததை எண்ணி வருத்தப்பட்டாலும், அடுத்து தங்களை காப்பாற்ற யாராவது வரமாட்டார்களா என்று கடந்த காலங்களில் காத்திருந்தது போல மறுபடியும் காத்திருக்க ஆரம்பித்துவிட்டனர்.

சரி, ஏன் இந்த புத்தகம் கடுமையாக விமர்சிக்கப்பட வேண்டும்?....

காரணம், 'பிரபஞ்சம் உருவாக இறைவன் தேவையில்லை' என்பதை நிரூபிக்க இந்த புத்தகத்தின் ஆசிரியர்கள் உபயோகித்த கோட்பாடு தான்.

M-Theory:

இந்த கோட்பாடு M-Theory என்று அழைக்கப்படுகின்றது. இந்த கோட்பாடானது, ஏற்கனவே இயற்பியல் உலகினரால் நன்கு அறியப்பட்ட கோட்பாடான string கோட்பாட்டின் (String theory) விரிவாக்கமாகும்.

M-Theory-யும் சரி, String Theory-யும் சரி, அறிவியல் உலகினரால் விமர்சனத்திற்கு உள்ளான கோட்பாடுகள். ஆய்வாளர்களால் ஒருசேர ஒப்புக்கொள்ளபடாத கோட்பாடுகள்.

இதற்கு காரணம், இந்த கோட்பாடுகள் முழுமையடையாதவை என்பது ஒருபுறமிருக்க, இவைகளை சோதனைக்கூட செய்துப் பார்க்க முடியாத நிலையில் தான் இன்றைய அறிவியல் உலகம் இருக்கின்றது.

M-theory (and string theory) has been criticized for lacking predictive power or being untestable - Wikipedia
M-Theoryயையும், String theory-யையும் சோதனைக்கு உட்படுத்த முடியாது என்ற காரணத்தால் இவை விமர்சிக்கப்படுகின்றன - Wikipedia

இதுதான் "The Grand Design" புத்தகத்தின் பிரச்சனை. ஒரு முழுமையடையாத, குளறுபடியான கோட்பாட்டை வைத்துக்கொண்டு, பிரபஞ்ச மர்மங்களை விளக்கிவிட்டேன் என்று கூறியதை சக ஆய்வாளர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

M-theory in either sense is far from complete. But that doesn't stop the authors from asserting that it explains the mysteries of existence - Craig Callender in New scientist Magazine.
எப்படி பார்த்தாலும், M-Theory முழுமையடைய இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கின்றது. ஆனால், இந்த விஷயம், நாம் இவ்வுலகில் இருப்பதற்கான மர்மத்தை விளக்கிவிட்டதாக கூறும் ஆசிரியர்களை தடுக்கவில்லை - (Extract from the original quote of) Craig Callender in New scientist Magazine.

இதில் ஆச்சர்யமளிக்கும் இன்னொரு செய்தி என்னவென்றால், M-Theory என்றால் என்னவென்று கூட தெளிவாக விளக்க முயற்சிக்கவில்லை இந்த புத்தகம்.

ஒரு "நல்ல இயற்பியல் மாதிரி (A good physical Model)" எப்படியிருக்க வேண்டுமென்று இந்த புத்தகத்தின் ஆரம்பத்தில் கீழ்க்கண்டவாறு சொல்கின்றனர் ஹாகிங் மற்றும் Leonard Mlodinov.

A model is a good model if it:
1. Is elegant
2. Contains few arbitrary or adjustable elements
3. Agrees with and explains all existing observations
4. Makes detailed predictions about future observations that can disprove or falsify the model if they are not borne out.

இதில் துரதிஷ்டவசமான உண்மை என்னவென்றால் இவர்கள் முன்மொழியும் M-Theory மேலே சொன்ன எந்தவொரு கருத்தையும் திருப்திபடுத்தவில்லை என்பதேயாகும். இது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.

இந்த புத்தகம் குறித்த எதிர்மறை விமர்சனங்களில் என்னை மிகவும் ஈர்த்தன பின்வரும் தளங்களின் விமர்சனங்கள்.

1. Scientific American.
2. Columbia university.
3. Physics World (Institute of Physics).

இந்த மூன்று நிறுவனங்களும் ஆய்வாளர்களால் பெரிதும் மதிக்கப்படும் பாரம்பரியமிக்க நிறுவனங்கள். 

Scientific American:

உலக பிரசித்தி பெற்ற அறிவியல் ஆய்விதழான Scientific American-னில், ஜான் ஹோர்கன் எழுதிய விமர்சனம் மிகவும் காட்டமாக இருந்தது. தலைப்பே, "ஹாகிங்கின் 'புதிய' கோட்பாடு முட்டாள்தனமானது (crap)" என்றிருந்தது.
Stephen Hawking's "new" theory of everything is the same old CRAP - John Horgan in  Scientific American.
Scientific American-னில் இதுப் போன்ற கட்டுரையை பார்க்கும் எனக்கே அதிர்ச்சியாக இருந்தது என்றால், இதனை காணும் நாத்திகர்களின் நிலையை நீங்கள் எண்ணி பார்த்துக் கொள்ளுங்கள்.

M-Theory மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தது. ஹாகிங்கின் நாத்திக நம்பிக்கையே இந்த புத்தகத்தின் மையமாக இருக்கின்றது என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த கட்டுரையை முடிக்கும்போது ஹோர்கன் பயன்படுத்திய வார்த்தைகள் காட்டமான விமர்சனத்தின் உச்சம்.
If we believe him, the joke's on us - Closing remarks of John Horgan in Scientific American.
ஹாகிங்கை நாம் நம்பினால், நம்மை நாமே நகைச்சுவைக்கு உட்படுத்திக் கொள்கின்றோம் என்று அர்த்தம் - (extract from the ) Closing remarks of John Horgan in Scientific American. 
Columbia University:

அமெரிக்காவின் தலைச்சிறந்த ஆய்வு நிறுவனங்களில் முதல் இடத்தை பெற்றுள்ள கல்வி நிறுவனமான கொலம்பியா பல்கலைகழகத்தின் தளத்தில், "The Grand Design" குறித்து வெளியான விமர்சனமும் படுசூடாக இருந்தது.

விமர்சனத்தை எழுதிய பீட்டர் வொய்ட் இயற்பியல் உலகில் நன்கு அறியப்பட்டவர். String Theory-யை கடுமையாக எதிர்ப்பவர்.

புத்தகத்தின் மீது பல விமர்சனங்களை ஆக்கப்பூர்வமாக வைத்த வொய்ட், காசு பார்ப்பதற்காகவே மதம் உள்ளே இழுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

அதுமட்டுமல்லாமல், அறிவியல்/மதம் குறித்த விவாதங்களில் ஈடுபடும்போது, நம்புவதற்கு தகுதியில்லாத கோட்பாடான M-Theoryயை ஏன் பயன்படுத்தினார்கள் என்பது தனக்கு புரியவில்லையென்றும் குறிப்பிட்டிருந்தார் வொய்ட்.

...if you’re the sort who wants to go to battle in the science/religion wars, why you would choose to take up such a dubious weapon as M-theory mystifies me - Peter Woit, math.columbia.edu

வொய்ட்டின் மற்றொரு குற்றச்சாட்டும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. அதாவது, இந்த புத்தகத்தில் எவ்விதமான மேற்கோள்களும் (references to other sources) காட்டப்படவில்லை என்பதுதான் அது. 

உதாரணத்துக்கு, "ஒருவர் இப்படி சொன்னார்/செய்தார்" என்றால், "யார் அவர், எங்கு சொன்னார்" என்ற மூல தகவலை மேற்கோள் காட்டவேண்டுமல்லவா? அப்படி எந்தவொரு மேற்கோளும் இந்த புத்தகத்தில் இல்லை. 

புத்தகம் மீதான தன்னுடைய ஆதங்கத்தை மிக அழகான முறையில் தெளிவாக விமர்சித்திருந்தார் வொய்ட்.

Physics World (Institute of Physics):

உலகின் முன்னணி இயற்பியல் இதழ்களில் ஒன்றான "Physics World"-டின் தளத்திலும் ஹாகிங்கின் புத்தகம் குறித்த எதிர்மறையான விமர்சனம் வெளியாகி இருந்தது.

விமர்சனம் எழுதியிருந்த ஹமீஷ் ஜான்ஸ்டன், ஒரு உறுதிப்பாடில்லாத கோட்பாட்டை வைத்துக்கொண்டு தன்னுடைய நாத்திக நம்பிக்கையை நிரூபிக்க முயல்கின்றார் ஹாகிங் என்று கூறியிருந்தார்.

There is just one tiny problem with all this – there is currently little experimental evidence to back up M-theory. In other words, a leading scientist is making a sweeping public statement on the existence of God based on his faith in an unsubstantiated theory - Hamish Johnston, Physicsworld.com blog.
இங்கு ஒரு சிறிய பிரச்சனை உள்ளது. M-Theoryயை உறுதிப்படுத்த தற்போதைய நிலையில் மிகக்குறைவான செயல்முறை ஆதாரங்களே உள்ளன. வேறுவிதமாக சொல்லுவதென்றால், உலகின் முன்னணி ஆய்வாளர், உறுதிப்பாடில்லாத ஒரு கோட்பாட்டை துணையாகக்கொண்டு தன்னுடைய நம்பிக்கையின் அடிப்படையில் கடவுளின் இருப்பை பற்றி வெளிப்படையாக தன்னுடைய கருத்துக்களை தெரிவிக்கின்றார் - (Extract from the original quote of) Hamish Johnston, Physicsworld.com blog. 

தங்கள் நம்பிக்கைக்கு ஏதுவாக அறிவியலை வளைக்கும் விஞ்ஞானிகள்:

ஆத்திகம்-நாத்திகம் குறித்த விவாதத்தில் இந்த புத்தகத்தை பயன்படுத்தலாம், 'பிரபஞ்சம் உருவாக இறைவன் தேவையில்லை என்று ஸ்டீவன் ஹாகிங்கே சொல்லிவிட்டார்' என்றெல்லாம் வாதித்து ஆத்திகர்களை மடக்கலாம் என்றிருந்த நாத்திகர்களை அறிவியல் உலகம் வாயடைக்க செய்துவிட்டது.

ஆனால் இதையெல்லாம் அறியாத சில அப்பாவி நாத்திகர்கள் இன்னும் இருக்கின்றனர். தங்களை ஹாகிங் கைவிட்டதை அறியாத இவர்கள், விவாதங்களில் இன்னும் இந்த புத்தகத்தை (அல்லது அதில் சொல்லப்பட்டுள்ள கோட்பாட்டை) மேற்கோள் காட்டி "பிரபஞ்சம் உருவாக இறைவன் தேவையில்லை" என்று அறியாமை மிகுதியில் வாதாடுகின்றனர். பின்னர் இதுக் குறித்த எதிர்மறையான கருத்துக்களை காட்டியவுடன் அமைதியாகி விடுகின்றனர்.

இந்த பதிவின் நோக்கமும் இதுதான். அறியாமையில் உருளும் இம்மாதிரியான அப்பாவி நாத்திகர்களை நீங்கள் எதிர்காலத்தில் காண நேர்ந்தால் அவர்களுக்கு உங்கள் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துவிட்டு இதுக்குறித்த விழிப்புணர்வை நீங்கள் ஏற்படுத்த முயற்சிக்கலாம்.

நாத்திகர்களை விடுவோம். அவர்கள் மண்ணை கவ்வுவது என்பது புதிதல்ல. இன்றைக்கு இது போனது என்றால், நாளைக்கு வேறு எதையாவது கொண்டுவருவார்கள்.

நீங்கள் மேலே உள்ள செய்திகளை கூர்ந்து கவனித்திருந்தால் ஒரு அதிமுக்கிய விஷயத்தை கவனித்திருக்கலாம்.

அதாவது, தங்களுடைய நம்பிக்கைக்கு ஏற்றவாறு அறிவியலை வளைத்துக்கொள்கின்றனர் விஞ்ஞானிகள் என்ற குற்றச்சாட்டு அரசல்புரசலாக உண்டு.

அந்த குற்றச்சாட்டை ஆய்வாளர்களே ஒப்புக்கொள்வது மிக மிக ஆரோக்கியமான ஒன்று.

A British journalist contacted me about this recently and we talked about M-theory and its problems. She wanted me to comment on whether physicists doing this sort of thing are relying upon “faith” in much the same way as religious believers. I stuck to my standard refusal to get into such discussions, but, thinking about it, have to admit that the kind of pseudo-science going on here and being promoted in this book isn’t obviously any better than the faith-based explanations of how the world works favored by conventional religions - Peter Woit, Columbia University. 
சமீபத்தில் ஒரு பிரிட்டிஷ் செய்தியாளர் என்னை தொடர்புக்கொண்டிருந்தார். நாங்கள் M-Theory குறித்தும் அதனுடைய பிரச்சனைகள் குறித்தும் பேசினோம். மத நம்பிக்கையாளர்களை போல, இயற்பியலாளர்களும் தங்களுடைய நம்பிக்கைக்கு ஏற்றவாறு செயல்படுபது குறித்து என்னிடம் கருத்து கேட்டார் அவர்.   
நான் வழக்கம்போல கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டேன். ஆனால், பிற்பாடு இதுக்குறித்து சிந்திக்கையில், இதனை நான் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும் என்பதை உணர்ந்தேன். இங்கு நிலவும் போலியான அறிவியலும், அதனை இந்த புத்தகம் ஊக்கப்படுத்துவதும், மதங்கள் கூறும் உலக செயலாக்கத்திற்கு எந்தவிதத்திலும் சளைத்ததல்ல -  (extract from the original quote of) Peter Woit, Columbia University.  

அறிவியல் உலகில் இது போன்ற மாற்றங்கள் பெருகி வருவது நிச்சயம் உற்சாகமளிக்கும் ஒன்று. தங்களுடைய நம்பிக்கைக்கு ஏற்றவாறு ஆய்வாளர்கள் செயல்படுவார்களேயானால் அது நிச்சயம் அறிவியலை ஆரோக்கியமான திசைக்கு கொண்டு செல்லாது. 'தன்னுடைய நம்பிக்கைக்கு ஏற்றவாறு செயல்படுகின்றார்  ஹாகிங்' என்று ஆய்வாளர்கள் குற்றம் சுமத்துவது போல தான் சம்பவங்கள் நடந்தேறும்.

முடிவாக:

இந்த அதிர்ச்சியூட்டும் செய்தியையும் கேட்டுவிட்டு செல்லுங்கள். சென்ற ஆண்டு, அறிவியல் ஆராய்ச்சிக்கான நிதியை பெருமளவில் குறைத்தது பிரிட்டிஷ் அரசு. அதற்கு அவர்கள் கூறிய காரணம், 45% நிதி, தரமில்லாத ஆய்வுகளுக்கு செலவிடப்படுகின்றதாம்.

oopsssss...

இந்த செய்திக்கும், ஸ்டீபன் ஹாகிங் மற்றும் M-Theoryக்கும் சம்பந்தம் உண்டா??

உண்டு என்கின்றது Physics world தளம்.

எனினும், பதிவை மற்றொருமுறை படித்துவிட்டு நீங்களே முடிவு செய்துக்கொள்ளுங்கள்....

இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமீன்.

இறைவனே எல்லாம் அறிந்தவன்....

My sincere thanks to:
1. Peter Woit, Columbia University.
2. Br.Peer Mohamed (for his helpful points on the subject).

References:
1. Cosmic Clowning: Stephen Hawking's "new" theory of everything is the same old CRAP -  John Horgan, Sep 13, 2010. Scientific Amaerican. link
2. Hawking Gives Up - Peter woit, September 7, 2010. math.columbia.edu. link
3. M-theory, religion and science funding on the BBC - Hamish Johnston, Sep 8, 2010. Physics World. link
4. The Grand Design (book) - Wikipedia. link
5. Is Hawking right to attack philosophy? - BBC Radio. link
6. The Grand Design - Roger Penrose, September 4 2010, Financial Times. link
7. Even Stephen Hawking doesn't quite manage to explain why we are here - The Economist. link
8. Why God Did Not Create the Universe -  STEPHEN HAWKING And LEONARD MLODINOW, Sep 3, 2010. The Wall Street Journal. link
9. Stephen Hawking says there's no theory of everything - Craig Callender, Sep 2, 2010. link
10. Stephen Hawking's big bang gaps - Paul Davies, Sep 4 2010, The Guardian. link
11. Many Kinds of Universes, and None Require God - DWIGHT GARNER, September 7, 2010, The New York Times. link
12. Our Spontaneous Universe -  LAWRENCE M. KRAUSS, Sep 8, 2010. The Wall Street Journal. link
13. M-Theory, String Theory, Institute of Physics, Physics world, Columbia University, Peter Woit - Wikipedia.
14. Transcript from The God Debate -Richarddawkins.net. link


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ 


Tuesday, August 2, 2011

உலகின் 'முதல்' பறவை இறந்தது...bye-bye birdieநம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். 

----------------------------------
இந்த பதிவிற்குள் செல்லும்முன் ஒருவர் புரிந்துக்கொள்ள வேண்டிய வார்த்தைகள்:

1. உயிரினப்படிமங்கள் (Fossils) - விலங்குகள் மற்றும் தாவரங்களின் இயற்கையாக பாதுகாக்கப்பட்ட மிச்சங்கள்/ஆதாரங்கள்.     

2. தொல்லுயிரியல் (Palaeontology) - உயிரினப்படிமங்கள் குறித்து பேசும் துறை (Study of Fossils).

3. தொல்லுயிரியலாளர் (Paleontologist) - உயிரினப்படிம ஆய்வுகளில் தனித்துவம் பெற்றவர்.
---------------------------------

றிவியல் ஆய்விதழான Nature-ரின் செய்திகள் பிரிவு, சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட கட்டுரையின் தலைப்பு பரிணாம உலகை திரும்பிப்பார்க்க வைத்திருக்கின்றது. அது,

Archaeopteryx no longer first bird - Matt Kaplan, Nature news, 27th July 2011.
இனி (உலகின்) முதல் பறவையல்ல அர்கீயாப்டெரிக்ஸ் - (Extract from the original quote of) Matt Kaplan, Nature news, 27th July 2011.

நீங்கள் மேலே பார்த்ததுக்கூட பரவாயில்லை. இந்த செய்தி வெளியான அடுத்த நாள் Nature இதழில் வெளியான இதுக்குறித்த மற்றொரு கட்டுரையின் தலைப்பு பலரை திக்குமுக்காட வைத்திருக்கும்.  
An icon knocked from its perch - Lawrence M.Witmer, Nature, Vol 475, 28th July 2011, 458, doi:10.1038/nature10288.
ஒரு முக்கிய சின்னம் (அர்கீயாப்டெரிக்ஸ்) தன்னுடைய இருப்பிடத்திலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டது - (extract from the original quote of) Lawrence M.Witmer, Nature, Vol 475, 28th July 2011, 458, doi:10.1038/nature10288.

சரி, ஏன் இந்த அர்கீயாப்டெரிக்ஸ் என்னும் உயிரினத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம்? 

ஏனென்றால் இந்த உயிரினம் நீண்ட காலமாக பரிணாமத்துக்கு ஆதாரமாக காட்டப்பட்டு வந்தது. இந்த உயிரினம் இல்லாமல் பறவைகளின் தோற்றத்தை ஆராய முடியாது என்னும் அளவுக்கு ஒரு நிகரற்ற நட்சத்திரமாக பரிணாம உலகினரால் கொண்டாடப்பட்டது. 

அந்தோ பரிதாபம், அந்த கொண்டாடத்துக்கு சென்ற வாரத்தோடு முடிவு கட்டப்பட்டுள்ளது. 

படுசுவாரசிய தகவல்களை தன்னிடத்தே கொண்டுள்ள இந்த செய்திக் குறித்து முழுமையாய் அறிந்துக்கொள்ள நாம் பத்தொன்பதாம் நூற்றாண்டிற்கு பயணிக்க வேண்டும். 

அது 1859-ஆம் வருடம். சார்லஸ் டார்வினின் "உயிரினங்களின் தோற்றம்" புத்தகம் வெளியாகி மிகுந்த பரபரப்பை உண்டாக்கியிருந்தது. 

ஒரு உயிரினம் காலப்போக்கில் சிறுகச் சிறுக இன்னொரு உயிரினமாக மாறிவிடுகின்றது என்று வாதிட்ட அந்த புத்தகம் நாத்திகர்களுக்கு பெரும் உற்சாகமாய் அமைந்தது. உயிர்கள் உருவாக கடவுள் தேவையில்லை, அவை தானாகவே காலப்போக்கில் உருவாக்கிக்கொள்ளும் என்று வாதிட ஆரம்பித்தார்கள் டார்வினின் ஆதரவாளர்கள். 

அவர்களது நம்பிக்கைக்கு மேலும் வலுச்சேர்க்கும்விதமாக 1861-ஆம் ஆண்டு ஒரு சம்பவம் நடந்தது. 

அந்த ஆண்டில், ஜெர்மனியின் பவரியா பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு உயிரினத்தின் படிமம் அறிவியல் உலகின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. அந்த படிமத்தில் காணப்பட்ட உயிரினம் ஆச்சர்ய தன்மைகளை தன்னிடத்தே கொண்டிருந்ததாக அறிவிக்கப்பட்டது. 

அது என்னவென்றால், காக்கை அளவிலான இந்த உயிரினம், பறவைகள் மற்றும் சிறிய அளவிலான டைனாசர்களின் (ஊர்வன) தன்மைகளை தன்னிடத்தே கொண்டிருந்ததாக நம்பப்பட்டது. 

உதாரணத்துக்கு, பறவைகளின் தன்மைகளான இறகுகளும், மார்புக்கூட்டை வலுப்படுத்தும் எலும்பும் (Wishbone), அதுபோல, ஊர்வனவற்றின் தன்மைகளான பற்களும், நீண்ட கடினமான வாலும் இந்த உயிரினத்துக்கு இருந்ததாக கூறப்பட்டது. 

இந்த உயிரினத்துக்கு ஜெர்மனில் "யுர்வோகெல் (Urvogel)" என்று பெயர் சூட்டினார்கள். இதற்கு "முதல் பறவை" என்று அர்த்தம். ஆங்கிலத்தில் இதற்கு "அர்கீயாப்டெரிக்ஸ் (Archaeopteryx)" என்று பெயர் சூட்டினார்கள். இந்த பெயர் கிரேக்க வார்த்தையிலிருந்து வந்தது. இதற்கு "பழங்கால இறகு (Ancient wing or feather)" என்று அர்த்தம். 

ஆக, டைனாசர்களின் தன்மைகளும் பறவைகளின் தன்மைகளும் ஒருசேர கலந்திருந்ததால், உலகின் முதல் பறவை டைனாசர்களில் இருந்து பரிணாமம் அடைந்து வந்திருக்க வேண்டுமென்று நம்பப்பட்டது. அதற்கு ஆதாரமாக அர்கீயாப்டெரிக்ஸ் காட்டப்பட்டது. 

டார்வினின் புத்தகம் வெளியாகி இரண்டு ஆண்டுகளில் நடந்த இந்த நிகழ்வு மிகப்பெரிய பாதிப்பை அறிவியல் உலகில் நிகழ்த்தியது. உயிரினங்கள் காலப்போக்கில் சிறுகச் சிறுக வேறொன்றாக மாறுகின்றன என்று டார்வின் சொன்னது சரிதான் என்று நம்பப்பட்டது. 

சிறிய அளவிலான டைனாசர்கள் காலப்போக்கில் சிறுகச் சிறுக (தொடக்க நிலை பறவையான) அர்கீயாப்டெரிக்ஸ்சாக மாறி பின்னர் அவற்றிலிருந்து பறவைகள் வந்தன என்று பரிணாமம் விளக்கப்பட்டது. 

பரிணாம கோட்பாட்டிற்கு என்ன ஆதாரம் என்று கேட்டவர்களுக்கு, இதோ ஆதாரம் என்று அர்கீயாப்டெரிக்ஸ் காட்டப்பட்டது. 

மொத்தத்தில், உலகின் முதல் பறவையாகவும், பரிணாம கோட்பாட்டிற்கான வலிமையான ஆதாரமாகவும் அர்கீயாப்டெரிக்ஸ் கொண்டாடப்பட்டது.   

எப்படி காலங்கள் செல்லச் செல்ல பரிணாமத்தின் மற்ற உயிரினப்படிம ஆதாரங்கள் ஒன்றுமில்லாமல் சிதைந்தனவோ அதுப்போலவே அர்கீயாப்டெரிக்ஸ்சின் நிலையும் ஆனது.

கடந்த சிலபல ஆண்டுகளாகவே மிகுந்த சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டு வருகின்றது அர்கீயாப்டெரிக்ஸ். இதற்கு முக்கிய காரணம், தொடர்ந்து கண்டுப்பிடிக்கபடும் (அர்கீயாப்டெரிக்ஸ் போன்ற) இறகுகள் கொண்ட டைனாசர்களின் (feathered dinosaurs) உயிரினப்படிமங்கள். இறகுகள் இருந்தாலும் இவை பறக்க தகுதி இல்லாதவை. குறிப்பாக சீனாவில் இருந்து மட்டும் மிக அதிக அளவிலான 'இறகுகள் கொண்ட டைசானர்' படிமங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.  

ஆக, இறகுகள் இருந்து விட்டால் மட்டும் ஒரு உயிரினம் பறக்கும் தன்மையை பெற்றுவிடாது என்பது இதன் மூலமாக புலப்பட்டது.

எந்த தன்மைகளை வைத்து அர்கீயாப்டெரிக்ஸ்சை தொடக்க நிலை பறவை (Avialae) என்றார்களோ, அதே தன்மைகள் பறக்க முடியாத டைனாசர்களிலும் காணப்பட்டது. இது பரிணாமவியலாளர்களை மிகுந்த குழப்பத்தில்/சங்கடத்தில் ஆழ்த்தியது. 

அதுமட்டுமல்லாமல், இதுக்குறித்த கேள்விகளை படைப்பு மற்றும் Intelligent Design கோட்பாட்டை (Intelligent Design குறித்த இத்தளத்தின் பதிவை காண <<இங்கே>> சுட்டவும்) ஆதரிப்போர் தொடந்து எழுப்பி பரிணாமவியலாளர்களுக்கு மிகுந்த அசவுகரியத்தை அளித்தனர். முன்பு போல தன்னம்பிக்கையுடன் பரிணாமத்துக்கு ஆதாரமாக அர்கீயாப்டெரிக்ஸ்சை காட்ட முடியவில்லை. 

இந்த நிலையில் தான் நாம் மேலே பார்த்த ஆய்வு முடிவுகள் வந்திருக்கின்றன. இனியும் அர்கீயாப்டெரிக்ஸ்சை பறவை என்று சொல்ல முடியாத நிலைக்கு பரிணாமவியலாளர்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர். அர்கீயாப்டெரிக்ஸ், மற்றுமொரு சிறிய அளவிலான (இறகுகள் இருக்கக்கூடிய, பறக்க முடியாத) டைனாசர்...அவ்வளவே. 

பத்தோடு பதினொன்றாக மற்ற டைனாசர்களுடன் சேர்ந்து விட்டது அர்கீயாப்டெரிக்ஸ்.

"Perhaps the time has come to finally accept that Archaeopteryx was just another small, feathered, bird-like theropod fluttering around in the Jurassic" - Lawrence M.Witmer, Nature, Vol 475, 28th July 2011, 458, doi:10.1038/nature10288. 
"அர்கீயாப்டெரிக்ஸ்சை மற்றுமொரு சிறிய, இறகுகள் உடைய theropod (முன்னங்கால்களை சிறிதாகக் கொண்ட உயிரினங்கள்) என்று ஒப்புக்கொள்ள வேண்டிய தருணம் இறுதியாக வந்துவிட்டது" - (extract from the original quote of) Lawrence M.Witmer, Nature, Vol 475, 28th July 2011, 458, doi:10.1038/nature10288.

இதற்கெல்லாம் காரணம், சீனாவைச் சார்ந்த, தொல்லுயிரியல் உலகில் பெரிதும் மதிக்கப்படும் ஆய்வாளரான ஜிங் சு (Xing Xu) மற்றும் அவருடைய குழுவினர் தான். 

சீனாவின் வடக்கு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு டைனாசர் படிமத்தை தீவிரமாக ஆராய்ந்த அவர் பல ஆச்சர்ய தகவல்களை வெளியிட்டுள்ளார். அந்த படிமத்தில் இருந்த உயிரினம், 'ஜியாடின்ஜியா ழெங்கி (Xiaotingia zhengi)' என்று பெயரிடப்பட்டுள்ளது. இது ஒரு பறக்க முடியாத, அதே நேரம் இறகுகளை கொண்ட டைனாசர்.
கோழி அளவிலான இந்த ஜியாடின்ஜியாவின் தன்மைகளும், அர்கீயாப்டெரிக்ஸ்சின் தன்மைகளும் கணக்கச்சிதமாக ஒத்துப்போவதை தன்னுடைய தீவிர ஆய்வின் முடிவில் உணர்ந்துக்கொண்ட ஜிங் சு, இனி அர்கீயாப்டெரிக்ஸ் பறவையல்ல, அது இன்னொரு டைனாசர் மட்டுமே என்ற முடிவுக்கு வந்தார். 

அதுமட்டுமல்லாமல், உயிரியல் மரத்தையும் மாற்றியமைத்து விட்டார் ஜிங் சு. இத்தனை காலங்களாக பறவைகளின் குடும்பத்தில் (Avialae) உட்கார்ந்திருந்த அர்கீயாப்டெரிக்ஸ், தற்போது டைனாசர்களின் (deinonychosauria) பக்கம் வந்துவிட்டது.
பரிணாமவியலாளர்கள் இத்தனை காலமாக நம்பி வந்த ஒரு விஷயத்தை தகர்ப்பது என்றால் சும்மாவா????....இதனாலேயே இந்த முடிவுகளை சமர்பிக்கும்போது தான் பதற்றத்தொடு இருந்ததாக குறிப்பிட்டுள்ளார் ஜிங் சு.  
     
"Because it has held the position as the most primitive bird for such a long time, I am kind of nervous about presenting this result" - Xing Xu, as reported by Nature news, 27th July 2011.
அர்கீயாப்டெரிக்ஸ், தொடக்க நிலை பறவையாக நீண்ட காலமாக கருதப்பட்டு வந்ததால், இந்த முடிவுகளை சமர்பிக்கும்போது நான் பதற்றத்தோடு இருந்தேன் - (Extracted from the original quote of) Xing Xu, as reported by Nature news, 27th July 2011.   

ஜிங் சு சமர்பித்தும் விட்டார். 'இனி அர்கீயாப்டெரிக்ஸ் உலகின் முதல் பறவை இல்லை' என்று Nature-ரும் தலையங்கம் வெளியிட்டுவிட்டது. 

ஆனால் பிரச்சனை இத்தோடு முடிய போவதில்லை. இனி தான் பூதாகரமாக வெடிக்கப்போகின்றது. காரணம், முதல் பறவை என்னும் இடத்தில் இருந்து அர்கீயாப்டெரிக்ஸ் வெளியேற்றப்பட்டுள்ளதால், உலகின் முதல் பறவை வேறு எதுவாக இருக்கும் என்று அறிவிக்க வேண்டிய நிலைக்கு ஆய்வாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல், பறவைகள் எப்படி தோன்றியிருக்கும் என்பது குறித்தும் மிக குழப்பான சூழ்நிலை நீடிக்கின்றது.

"The finding leaves palaeontologists in the awkward position of having to identify another creature as the oldest and original avian on which to base the story of birdlife" - Ian Sample, 'Oldest bird' Archaeopteryx knocked off its perch in controversial new study, 27th july, Guardian.   
இந்த கண்டுபிடிப்பு தொல்லுயிரியலாளர்களை தர்மசங்கடமான நிலைக்கு தள்ளியிருக்கின்றது. தற்போது அவர்கள் வேறு ஒரு உயிரினத்தை பழங்கால பறவையாக அடையாளம் கண்டு அதன் மீது பறவைகளின் வாழ்க்கை கதையை நிர்மாணிக்க வேண்டிய நிலையில் இருக்கின்றனர் - (extract from the original quote of) Ian Sample, 'Oldest bird' Archaeopteryx knocked off its perch in controversial new study, 27th july, Guardian.     

உங்களில் சிலர் நினைக்கலாம், பறவைத்தன்மையை அர்கீயாப்டெரிக்ஸ் இழந்தது பரிணாம உலகை வருத்தத்தில் ஆழ்த்தியிருக்குமென்று. ஆம், அது ஒருபக்கம் உண்மையாக இருக்கலாமென்றாலும், அதனைக் காட்டிலும் இவர்களுக்கு நிம்மதியையே கொடுத்திருக்கும் இம்முடிவுகள் என்பதுதான் உண்மை. அர்கீயாப்டெரிக்ஸ் குறித்த கேள்விகளால் கடந்த காலங்களில் துளைத்தெடுக்கப்பட்டவர்கள் இவர்கள். ஆகையால் இந்த கண்டுபிடிப்பு வருத்தத்தைவிட நிம்மதியையே அதிகமாக கொடுத்திருக்கும். "அறிவியலில் இதெல்லாம் சகஜம்" என்று மற்ற பரிணாம ஆதாரங்கள் சிதைந்தபோது சொன்னதையே திரும்ப சொல்லிவிடுவார்கள்.

படைப்பு மற்றும் Intelligent Design கோட்பாட்டை ஆதரிக்கும் ஆய்வாளர்களுக்கோ, இது "ஸ்வீட் எடு...கொண்டாடு" தருணம். ஏனென்றால், அர்கீயாப்டெரிக்ஸ் படிமத்தில் இருக்கும் குழப்பங்களை நீண்ட காலமாகவே சுட்டிக்காட்டி வந்தவர்கள் இவர்கள். 

எது எப்படியோ, கடந்த 150 ஆண்டுகளாக பரிணாமவியலாளர்கள் மனதில் செம்மையாக வாழ்ந்துக்கொண்டிருந்த பறவை சென்ற வாரத்தோடு இறந்துவிட்டது.

ஆய்வாளர்களோடு சேர்ந்து அர்கீயாப்டெரிக்ஸ்சின் பறவைத்தன்மைக்கு நாமும் விடைக்கொடுப்போம்.......bye-bye birdie...

இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமீன்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்....

Title Inspiration:
1. This article's title "bye-bye birdie" was inspired from a 'Scientific American' article dated 9th Oct 2009.

My Sincere thanks to:
1. Nature
2. AFP.

References:
1. An Archaeopteryx-like theropod from China and the origin of Avialae - Xing Xu, Hailu You, Kai Du &amp; Fenglu Han. Nature 475, 465–470, 28 July 2011, doi:10.1038/nature10288. link
2. Archaeopteryx no longer first bird - 27 July 2011, Nature, doi:10.1038/news.2011.443. link
3. An icon knocked from its perch - Lawrence M.Witmer, Nature, Vol 475, 28th July 2011, 458, doi:10.1038/nature10288 (Document available upon request).
4. Earliest bird was not a bird? New fossil muddles the Archaeopteryx story - 27 July 2011, Discover Magazine. link
5. 'Oldest bird' Archaeopteryx knocked off its perch in controversial new study - 27 July 2011, Guardian. link
6. Ancestor of all birds knocked from its perch - Jul 27, 2011, Yahoo on AFP report. link
7. 'Oldest bird' knocked off its perch - 27th July 2011. Cosmic log on msnbc. link
8. Archaeopteryx : An Early Bird - University of california. link
9. Icon 5 — Archaeopteryx - National center for science education. link
10. Archaeopteryx - wikipedia. link
11. Archaeopteryx Knocked From Roost as Original Bird - 27th July 2011, wired.com. link
12. Feathers fly in first bird debate - BBC, 27 July 2011. link
13. Archaeopteryx knocked off its perch as first bird - New Scientist, 27 July 2011. link
14. Flap Flop: Earth's First Bird Not a Bird After All - Live Science, 27 July 2011. link


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ