Showing posts with label வினவின் பித்தலாட்டம். Show all posts
Showing posts with label வினவின் பித்தலாட்டம். Show all posts

Tuesday, October 12, 2010

திருந்த மாட்டீர்களா வினவு?


அஸ்ஸலாமு அலைக்கும், 

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின். 

நேற்று இத்தளத்தில் வினவின் உண்மை முகம் வெளியூலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டப்பட்ட (படிக்காதவர்கள் <<இங்கே>> சுட்டவும்) பிறகு, சகோதரர் வினவு இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் என்று ஒரு பின்னூட்டத்தை இட்டுருக்கின்றார். அடடா, என்னவொரு பதில் என்று மெய்சிலிர்க்க வைத்தது அந்த பின்னூட்டம். அது உங்கள் பார்வைக்கு, 

**********
நெத்தியடி முகம்மது மற்றும் தவறாக வழிநடத்தப்படும் சில மதவாத மொக்கைகளுக்கு ஒரு விளக்கம்.

தோழர் அலாவூதின் அவரது வேலை காரணமாக வெளியூரில் இருக்கிறார். அப்போது வினவில் வந்த கட்டுரை தொடர்பாக தோழர்கள் அவரை பின்னூட்டம் போடுமாறு கேட்டுக்கொண்டனர். ஒரு பிரவுசிங் செண்டரில் போய் அங்கு தமிழில் போடுவதற்கு சில தொழில் நுட்ப பிரச்சினை மற்றும் தெரியாமையால்அவரால் முடியவில்லை. அதையே ஒரு சாதாரண எழுத்துருவில் அடித்து தோழர்களிடம் அனுப்பி போடுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார். அதை அவருடைய தோழர்கள் யூனிகோடில் மாற்றி இங்கே போட்டிருக்கின்றனர். இதுதான் நடந்த்து. 

தற்போது இந்த விவகாரத்தினால் அவரது குடும்பத்தை உள்ளூர் ஜமாஅத்திலிருந்து நீக்குவதற்கு உள்ளூர் தவ்ஹீத் ஜமாஅத் மதவாதிகள் பெரும் முயற்சி செய்து வருகின்றனர். இதன் பொருட்டு வரும் நாட்களில் அவரை ஜமாஅத் அவரை விசாரிக்க இருக்கிறது. தான் ஒரு கம்யூனிஸ்ட் என்று அறிவித்துக் கொள்ளும் தோழர் அலாவூதின் அந்த விசாரணையை எதிர்கொள்ள இருக்கிறார். வினவு சார்பில் அவரது ஊருக்கு சென்று இந்த விவகாரங்களை நேரடி ரிப்போர்ட்டாக தருவது என்று முடிவு செய்திருக்கிறோம். பொதுவில் அந்த ஊர் இசுலாமிய மக்கள் எமது அமைப்புகளை ஆதரிப்பது மதவாத தவ்ஹீத் ஜமாஅத் காரர்களுக்கு பிடிக்க வில்லை. எனினும் உழைக்கும் மக்களென்ற முறையில் இசுலாமிய மக்கள் எங்களுடன்தான் சேருவார்கள். இது நல்ல விசயமென்று அந்த மதவாத மொக்கைகள் புரிந்து கொள்ள வேண்டும். எனினும் விரைவில் வினவு சார்பில் மணமேல்குடி சென்று ஒரு நம்பிக்கை ரிப்போர்ட் தருவதற்கு இந்த விவகாரம் உதவியிருக்கிறது. அந்த வகையில் நெத்தியடி அன்கோவிற்கு நன்றி. மற்றபடி இங்கே கூறப்பட்டுள்ள விவரங்கள் தோழர் அலாவூதின் எமக்கு தொலைபேசியல் சொன்னதுதான். 
**********

என்னவொரு அழகான ஆணித்தரமான பதில். நிச்சயமாக வினவின் இந்த பதில் பல கேள்விகளை உங்களுக்குள் எழுப்பியிருக்கும். 

1. சென்ற பதிவின் துவக்கத்திலேயே நான் தெளிவாக கூறினேன், தனி நபர் சாடல்களில் இறங்க வேண்டாமென்று. ஆனால், அதைத்தான் ("நெத்தியடி முகம்மது மற்றும் தவறாக வழிநடத்தப்படும் சில மதவாத மொக்கைகளுக்கு ஒரு விளக்கம்") முதலில் செய்திருக்கின்றது வினவு. சரி போகட்டும்....


2. அடுத்து வினவு பகன்ற வார்த்தைகள்,
தோழர் அலாவூதின் அவரது வேலை காரணமாக வெளியூரில் இருக்கிறார்
இது குறித்து பதிவின் கடைசியில் பார்ப்போம்.


3. பின்னர் வினவு கூறுகின்றது, அலாவுதீன், தகவல்களை சாதாரண எழுத்துருவில் அடித்து தோழர்களிடம் அனுப்பி போடுமாறு கேட்டுக்கொண்டாராம். அந்த தோழர்களில் ஒருவரான நந்தன் தகவல்களை பின்னூட்டமாக போட்டுவிட்டார் போல.

மிக்க சந்தோசம்.... 

ஆக, அலாவுதீன் என்ற பெயரில் வெளியான பின்னூட்டத்தை அலாவுதீன் போடவில்லை, நந்தன் போட்டிருக்கின்றார். அது சரி, நந்தன் இந்த தகவல்களை அவரது பெயரிலேயே போட்டு "அலாவுதீன் போட சொன்னார்" என்று கூறியிருக்கலாமே?. எதற்காக அலாவுதீன் பேசுவது போலவே போட்டார். படித்தவர்கள், வினவின் விளக்கத்தை காணும் வரை அலாவுதீன் தான் பின்னூட்டமிட்டார் என்று எண்ணி ஏமாந்தல்லவா போயிருப்பர்...

ஒருவேளை, நந்தன் நேர்மையில்லாத போலி கம்யுனிஸ்டோ? 

சரி....... நந்தன், அலாவுதீன் சொன்னதை போட்டு விட்டார். தன்னுடைய மெயில் ஐடியில் இருந்தே அதனை செய்து விட்டார். அதனால் ஓரே பொம்மை வந்து விட்டது. அதனை அப்படியே விட்டு விட வேண்டியது தானே? எதற்காக அலாவுதீனின் பொம்மை படம் மாற்றப்பட வேண்டும்? அலாவுதீனே பின்னூட்டத்தை இட்டார் என்ற மாயையை உருவாக்குவதற்காகத் தானே? 

பின்னூட்டங்களில் உள்ள படங்களை யார் மாற்றமுடியும்? தளத்தின் moderator தானே? இல்லை என்னை போன்ற பொது ஜனங்கள் கூட தாங்கள் இட்ட பின்னூட்டத்தை அது இடப்பட்ட பிறகு அதன் படத்தை மாற்ற முடியுமா? நந்தனால் அலாவுதீனின் படத்தை மாற்ற முடிகின்றது என்றால் அவர் moderator தானே? அவர் வினவு தானே? வினவு தானே அலாவுதீனின் பெயரில் தங்கள் கொள்கை பரப்பு பின்னூட்டத்தை போட்டுக்கொண்டது?

ஆனால், வினவு சொல்கின்றது "அலாவுதீனின் தோழர்கள் போட்டார்களாம்", ஓஹோ... அந்த தோழர்கள் வட்டாரத்தில் வினவு தான் முதன்மையானவரோ?


4. நந்தன் என்ற பெயரில் வந்து பனிரெண்டு பின்னூட்டங்களை போட்ட வினவு, அந்த பின்னூட்டங்களை தன் பெயரிலேயே போட்டிருக்கலாமே? கேள்வி எழுப்புபவர்களுக்கு தன் பெயரிலேயே பதில் சொல்லலாமே?


5. இந்த களேபரத்தில் மணமகளை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார்கள். அது எப்படி வினவு, முதலில் மணமகனின் படமும், மணமகளின் படமும் ஒன்றாக இருந்தது. சரி, ஒரே தோழர் இவ்விருவரின் கருத்தையும் இட்டார் என்று வைத்து கொள்வோம். பின்னர் எதற்காக மணமகனின் படம் மாற்றப்பட்டது?. ஒரு தோழர் மணமகனுக்காகவும், மற்றொரு தோழர் மணமகளுக்காகவும் பின்னூட்டம் இட்டார்களா என்ன?


6. பின்னர் வினவு அடிச்சதுதான் சூப்பர் காமெடி...

முன்னர் // அதையே ஒரு சாதாரண எழுத்துருவில் அடித்து தோழர்களிடம் அனுப்பி போடுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார். அதை அவருடைய தோழர்கள் யூனிகோடில் மாற்றி இங்கே போட்டிருக்கின்றனர். இதுதான் நடந்த்து// என்று சொன்னவர்கள் அந்த பின்னூட்டத்தின் இறுதியில் //மற்றபடி இங்கே கூறப்பட்டுள்ள விவரங்கள் தோழர் அலாவூதின் எமக்கு தொலைபேசியல் சொன்னதுதான்// என்று சொல்லி அடித்தார்கள் பாருங்கள் ஒரு பல்டியை. 

  • படிப்பவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்ற நினைப்பா வினவு அவர்களே? 
  • ஒருவர் ஒரே பின்னூட்டத்தில் முரண்பட்டு பேசுவாரா?

நல்ல தமாஷ் தான்...


உச்சகட்ட காமெடி:  

இதையெலாம் விட முத்தாய்ப்பாய் ஒரு நகைச்சுவை இருக்கின்றது...அதாவது மணமகன் அலாவுதீன் பணி நிமித்தமாக வெளியூரில் இருந்தாராம். ஆனால் அங்கு பின்னூட்டமிட்ட "காட்டரபி" என்ற நபர், தான் மணமகனுக்கு ஒன்று விட்ட மாமனுடைய மகன் என்றும், மணமக்கள் இரண்டு வார தேனிலவுக்கு சென்றிருக்கின்றார்கள் என்றும் பின்னூட்டமிட்டார். அடடா...மணமக்கள் மணமாகி மூன்று மாதம் கழித்து இரண்டு வாரம் தேனிலவுக்கு சென்றிருப்பது வினவுக்கு தெரியாமல் போச்சே?  மாப்பிள்ளையின் உறவினர் சொன்னது சரியா அல்லது வினவு சொன்னது சரியா? ஒரே குழப்பம். 

குற்றச்சாட்டுக்கு பதில் அளிப்பார்கள் என்று பார்த்தால், மேலும் பல குற்றச்சாட்டுகளுக்கு வழி வகுக்கின்றார்கள். என்னவொரு புரட்சி!!!!!!

நீங்கள் திருந்த வாய்ப்பே இல்லையா வினவு குழுவினரே?

வினவு சகோதரர்களே, நீங்கள் பித்தலாட்டத்தில் ஈடுபட்டீர்கள். அது சுட்டிக்காட்டப்பட்டது. வாசகர்களுக்கு நீங்கள் செய்த துரோகத்திற்கு முடிந்தால் வருத்தம் தெரிவியுங்கள். இல்லை, நாங்கள் இப்படித்தான் தவறு செய்வோம், அதை யாராவது சுட்டி காட்டினால் அதை ஒப்புக்கொள்ளாமல் சுட்டி காட்டியவரை திட்டுவோம் என்றால் உங்களால் புரட்சி என்ன....அதற்கு கிட்டே கூட வர முடியாது...

 "நீங்கள் அறிந்துகொண்டே உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்" --- குரான் 2:42

இறைவனின் இந்த வசனங்கள் எங்களுக்கு நன்றாகவே மனதில் பதிந்திருக்கின்றது...


இறைவன் கூடிய விரையில் வினவு சகோதரர்களுக்கு நேர்வழியை காட்டுவானாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன். 


உங்கள் சகோதரன், 
ஆஷிக் அஹ்மத் அ 






Monday, October 11, 2010

வினவின் பித்தலாட்டம் அம்பலம்...



அஸ்ஸலாமு அலைக்கும்,

நம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.

முதலில் வினவு தளத்தினருக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். 

இந்த பதிவில் உங்களது பித்தலாட்டம், தில்லுமுல்லு ஆதாரத்துடன் வெளிக்கொண்டுவர பட்டுள்ளது. உங்களுடைய நேர்மையின்மை வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது. இதற்காக தாங்கள் தனி நபர் விமர்சனங்களிலோ அல்லது பதிவை திசை திருப்பும் விதமாகவோ இறங்க வேண்டாம். இங்கு தரப்பட்டுள்ள ஆதாரங்கள் தவறு என்று தாங்கள் நினைத்தால் தாராளமாக சுட்டிக்காட்டுங்கள். திருத்தி கொள்கின்றேன்.  

பதிவிற்கு செல்வோம்..

இரு நாட்களுக்கு முன்னர் இந்த பிரச்னையை என் கவனத்திற்கு கொண்டு வந்தது சகோதரர் முஹம்மது ஆஷிக் அவர்கள் (நெத்தியடி முஹம்மத் என்ற பெயரில் வினவு தளத்தினருக்கு அறிமுகமானவர்).

வினவு தளத்தை பின் தொடர்பவர்களுக்கு தெரிந்திருக்கும், சில நாட்களுக்கு முன்னர் வினவு தளத்தில் "மாக்சிய ஆசான்கள், பகத்சிங் படங்கள் சூழ ஒரு இசுலாமியத் திருமணம்!!" என்ற பெயரில் ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. 

இது சம்பந்தமாக விவாதங்கள் பின்னூட்டங்கள் வாயிலாக நடந்து கொண்டிருக்கின்றன. 

இரு நாட்களுக்கு முன்னர் முஹம்மது ஆஷிக் வினோதமான இரு பின்னூட்டங்களை கண்டிருக்கின்றார் (அக்டோபர் 8 ஆம் தேதி). அதாவது, நந்தன் என்பவர் பின்வரும் பின்னூட்டத்தை இடுகின்றார். 

1.மணமகனும் மணமகளும் தங்களின் கருத்துக்களை கூறினால் இன்னும் பல உண்மைகளை அறிந்துகொள்ளலாம்.

இந்த பின்னூட்டம் இடப்பட்ட சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு "மணமகன் அலாவுதீன்" என்ற பெயரில் ஒரு பின்னூட்டம் வருகின்றது. 

என்ன ஆச்சர்யம் என்றால், நந்தனுக்கு பக்கத்தில் இருக்கும் படமும் (ரோஸ் கலர் படம்), அலாவுதீனுக்கு பக்கத்தில் இருக்கும் படமும் ஒன்றாக இருந்திருக்கின்றது. ஒரே மெயில் ஐடியில் இருந்து பின்னூட்டம் வந்தால் தான் இரண்டு படமும் ஒன்றாக இருக்கும். ஆக, இந்த இரண்டு பின்னூட்டத்தையும் இட்டது ஒரே நபர். அது நந்தன். அலாவுதீன் என்ற பெயரில் எழுதிய போது மெயில் ஐடியை மாற்ற மறந்திருக்கின்றார் நந்தன். அதனால் தான் ஒரே படம் வந்து விட்டது.

அடுத்து வந்தது மிகப்பெரிய அதிர்ச்சி. அதாவது, சில நிமிடங்கள் கழித்து refresh செய்து பார்த்தால் அலாவுதீனுடைய படம் மாறியிருக்கின்றது. இப்போது, பின்னர் வந்த "மணமகள் சப்னா அஸ்மி" என்ற பின்னூட்டத்தின் படமும், அலாவுதீனுடைய படமும் ஒன்றாக இருக்கின்றது. அதாவது, மணமகளும் மணமகனும் ஒரே ஐடியில் இருந்து பின்னூட்டம் இட்டது போன்ற எண்ணத்தை கொடுப்பதற்காக.

சரி, யார் பின்னூட்டத்தின் படங்களை மாற்ற முடியும்? தள moderator தானே? அப்படியென்றால் நந்தன் என்பவர் moderator பொறுப்பில் இருப்பவரா? வினவின் adminகளில் ஒருவரா நந்தன்?

மணமகன் பெயரில் வினவே ஒரு பின்னூட்டமிட வேண்டிய அவசியமென்ன? யாரை முட்டாளாக்குகின்றது வினவு? படிப்பவர்களுக்கு வினவு செய்யும் துராகமல்லவா இது?

இதையெல்லாம் முஹம்மது ஆஷிக் தெளிவாக விளக்கினார். நான் "இதற்கெல்லாம் என்ன ஆதாரம்?, உங்களிடம் screen shot இருக்கின்றதா?" என்று கேட்டேன். "இல்லை" என்றார். "அப்படியென்றால் ஒன்றும் செய்ய முடியாது, விஷயத்தை இத்தோடு தள்ளி வைத்துவிடுவோம்" என்று கூறினேன்.

என்னிடம் கூறிய இந்த விஷயத்தை ஹைதர் அலியுடமும், ஷேக் தாவுத்திடமும் கூறியிருக்கின்றார் முஹம்மது ஆஷிக்.  

விஷயம் முடிந்து விட்டது, அரிய வாய்ப்பை தவற விட்டு விட்டோம் என்று நினைத்தால், நேற்று வினவு அடித்தார்கள் பாருங்கள் மற்றொரு கூத்தை... ஒருவர் ஒருமுறை தில்லுமுல்லு செய்யலாம். ஆனால் மறுபடியுமா?

ஆம், முஹம்மது ஆஷிக் சொன்னது போன்ற ஒன்றை மறுபடியும் அரங்கேற்றி காட்டியது வினவு. இந்த முறை அனைத்தையும் screen shot எடுத்துவிட்டேன்.

சில நாட்களாக மணமகனிடமும், மணமகளிடமும் ஒரு கேள்வியை கேட்டு வருகின்றேன் நான். அதற்கு பதில் என்று "அலாவுதீன்" (பின்னூட்டம் நம்பர் - 29) என்ற பெயரில் ஒரு பின்னூட்டம் வந்தது.

இந்த முறை மாட்டுவார்களா என்று போய் பார்த்தால் வசமாக சிக்கிக்கொண்டார்கள். மறுபடியும் நந்தனுக்கு வந்த அதே படம். இந்த முறையும் மெயில் ஐடியை மாற்ற மறந்து விட்டார் நந்தனாகிய வினவு. அனைத்தையும் screen shot எடுத்து வைத்து கொண்டேன். 


(நந்தனுடைய படமும், அலாவுதீனின் படமும் ஒன்று தான் என்பதை கவனியுங்கள்..)



அந்த பக்கத்தை அப்படியே வைத்து கொண்டு மற்றொரு tabபில் மற்றொரு வினவு பக்கத்தை திறந்து வைத்துக்கொண்டேன். எப்படியும் சில நிடங்களில் தன் தவறை உணர்ந்து மறுபடியும் அலாவுதீனின் படத்தை மாற்றுவார்கள், screen shot எடுக்கலாம் என்ற எண்ணம்தான்.

இந்த நேரத்தில் ஹைதர் அலி என்ன செய்தாரென்றால் வினவில் பின்வரும் பின்னூட்டத்தை இட்டார் (அவருக்கு தான் முன்னமே இவர்களுடைய பித்தலாட்டம் தெரியுமே). 

....ஒரு சின்ன கேள்வி ரொஸ் கலர்ல வந்த நீங்க புளு கலர்ல எப்புடி மாறிங்க மாப்புள்ளகாரரு இப்ப ரொஸ் கலர்ல மாறியிட்டாரு என்ன நடக்குது?

ஹைதர் அலி இப்படி சொன்னது தான் தாமதம். தங்கள் அறியாமையை உணர்ந்த வினவு மறுபடியும் அலாவுதீனுடைய படத்தை மாற்றி விட்டது.

இந்த தருணத்திற்காக காத்திருந்த நான் அதனையும் screen shot எடுத்து விட்டேன்.

(அலாவுதீனின் படம் மாற்றப்பட்டிருப்பதை கவனியுங்கள்)


இதற்கு பிறகு நடந்தது தான் இன்னும் நகைச்சுவை. அதாவது, முதலில் வெளியான அலாவுதீனின் படமும் (பின்னூட்டம் நம்பர் - 18) பின்னர் வெளியான அலாவுதீனின் படமும் ( பின்னூட்டம் நம்பர் - 29) வேறு வேறாக இருந்தன. அதனால் என்ன செய்தார்கள் என்றால், 29 ஆம் நம்பர் பின்னூட்டத்தில் உள்ள படத்தை போலவே 18 ஆம் நம்பர் பின்னூட்ட படத்தை மாற்றி விட்டார்கள். அதுவும் அழகாக screen shot எடுக்கப்பட்டது.

(முன்னர் இருந்த 18 ஆம் நம்பர் பின்னூட்ட படம்)

(பின்னர், 29 ஆம் நம்பர் பின்னூட்டத்திற்கு ஏற்றவாறு மாற்றப்பட்ட 18 ஆம் நம்பர் பின்னூட்ட படம்)


ஆக, இவர்கள் செய்ததெல்லாம் பித்தலாட்டம், தில்லுமுல்லு. அலாவுதீன் என்ற பெயரிலும், சப்னா பெயரிலும் பின்னூட்டமிட்டு மக்களை முட்டாளாக்கி இருக்கின்றது வினவு.

எளிமையாக சொல்ல வேண்டுமென்றால்,
நந்தன்=அலாவுதீன்=சப்னா அஸ்மி=வினவு 

எதற்காக வினவு இப்படியொரு கீழ்த்தரமான செயலை செய்ய வேண்டும்? அலாவுதீன் என்ற பெயரில் வினவு போட்ட பின்னூட்டங்களை கவனித்தால் விஷயம் புரியும். "இஸ்லாமியர்களே கம்யுனிசத்தின் பின்னே வந்து விடுங்கள்" என்று சொல்லுவதாகவே அமைந்தன பின்னூட்டங்கள். 

வினவிற்கு ஒன்றை தெளிவுபடுத்த வேண்டும். உங்களுக்கும், எங்களுக்கும் அடிப்படையிலேயே பிரச்சனைகள். அதனால் உங்களது எண்ணம் (இறைவன் நாடினாலன்றி) நிறைவேறாது. ஆன்மீகத்திற்கு இஸ்லாமும், வாழ்க்கைக்கு கம்யுனிசமும் என்பது போன்ற வாதங்கள் எல்லாம் அறிவுக்கு ஒத்துவராத ஒன்று. இஸ்லாம் ஒரு வாழ்க்கை நெறி. எங்களுக்கு ஆன்மீகமும் இஸ்லாம் தான், வாழ்க்கை நெறியும் இஸ்லாம் தான். அதனால் உங்களது எண்ணங்கள் நிறைவேற போவதில்லை.

நான் மறுபடியும் கூறிக்கொள்கின்றேன். இந்த பதிவு உங்களது நேர்மையின்மையை வெளி உலகிற்கு எடுத்து காட்டும் ஒரு முயற்சியே.  நாங்கள்தான் உண்மையான கம்யுனிஸ்ட்கள் என்று தம்பட்டம் அடிப்பீர்களே,  அப்படியென்றால் உண்மையான கம்யுனிஸ்ட்கள் எப்படியிருப்பார்கள் என்று எங்களுக்கு அறிய தந்ததற்கு மிக்க நன்றி. இனிமேலாவது நேர்மையுடன் நடக்க முயற்சியுங்கள்.

இந்த பதிவில் தவறிருந்தால் சுட்டி காட்டவும். திருத்தி விடுகின்றேன்.

உங்களுக்கு இறைவன் நேர்வழியை காட்டட்டும்...ஆமின்.

பின் குறிப்பு: 

இன்னொரு தமாஷ் இருக்கின்றது, அதையும் கேட்டு விட்டு செல்லுங்கள். அதாவது, இந்த நந்தன் இருக்கின்றாரே, அவருடைய கடைசி (இப்போதைக்கு) பின்னூட்டத்தின் (பின்னூட்டம் நம்பர் - 28) படம் மட்டும் வேறாக இருந்தது. அதாவது, அவருடைய மற்ற பதினோரு பின்னூட்டங்களுக்கும் ரோஸ் கலர் படம் இருந்தது, இந்த கடைசி/பனிரெண்டாம் பின்னூட்டத்திற்கு மட்டும் நீல கலர் படம் வந்து விட்டது.  வேறொரு idயில் இருந்து எழுதி இருப்பார் போல.

இதையும் பின்னர் அறிந்து கொண்ட வினவு சகோதரர்கள், குழப்பம் ஏற்படுத்துவதற்காக, நந்தனுடைய எட்டு பின்னூட்டங்களுக்கு ரோஸ் கலர் படத்தையும், நாலு படங்களுக்கு நீல கலர் படத்தையும் போட்டுவிட்டார்கள். அவை அனைத்தையும் screen shot எடுத்தாகி விட்டது. அனைத்தையும் இங்கே போட முடியாது என்பதால் சாம்பிளுக்கு ஒன்று.

(முன்னர் எடுத்தது)


(பின்னர் எடுத்தது)


இன்னும் எத்தனை பொய் பெயரில் வினவே பின்னூட்டம் இடுகின்றதோ...இறைவனே அறிவான். புரட்சி புரட்சி என்கின்றார்களே...ஆமாம் ஆமாம், உண்மையிலேயே புரட்சிதான்...   

இறைவா, வினவு போன்ற பித்தலாட்டகாரர்களிடமிருந்து மக்களை காப்பாற்றுவாயாக...ஆமின்.

--------------------------------
இப்பதிவின் தொடர்ச்சியை ("திருந்த மாட்டீர்களா வினவு?") படிக்க இங்கே சுட்டவும்.
--------------------------------

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ.