Thursday, May 10, 2012

EPL - ஆட்டநாயகன் பரிசு நிராகரிப்பு - பரபரப்பு



நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

லகின் பிரசித்திப்பெற்ற கால்பந்தாட்ட போட்டிகளில் (tournament) இதுவும் ஒன்று. முக்கிய ஆட்டம். 2-0 என்ற கோல் கணக்கில் வென்ற அணியில் அந்த இரண்டு கோல்களையும் போட்டதால் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்படுகின்றார் ஒருவர். ஆனால் பரிசாக கொடுக்கப்பட்ட பெரிய ஷாம்பைன் (மது) பாட்டிலை ஏற்க மறுத்துவிடுகின்றார்.

இது எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை சற்றே சிந்தித்து பாருங்கள். இன்று உலக ஊடகங்கள் பலவும் இந்த செய்தியை பெரிய அளவில் பேசுகின்றன. கால்பந்தாட்ட உலகின் சூப்பர்ஸ்டார்களில் ஒருவராக கருதப்படும் இந்த வீரர், தன்னுடைய இந்த செயலால் பலரது பாராட்டுகளையும் பெற்று மக்கள் மனதில் சூப்பர்ஸ்டாராக உட்கார்ந்துவிட்டார்.

யார் இவர்?
எந்த போட்டி அது?
என்ன காரணம் கூறி பரிசை நிராகரித்தார்?

தற்போது நடந்துவரும் இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் (EPL) போட்டிகளில் தான் இந்த சம்பவம் சென்ற ஞாயிறுக்கிழமை நடந்தேறியுள்ளது. இந்த வீரரின் பெயர் யாயா டோரே (Yaya toure). ஐவரி கோஸ்ட் நாட்டை சேர்ந்த இவர் தற்போது மான்செஸ்டர் சிட்டி அணிக்காக ப்ரீமியர் லீக்கில் விளையாடி வருகின்றார். கடந்த 44 வருடங்களாக எந்தவொரு முக்கிய tournament-டையும் வென்றதில்லை மான்செஸ்டர் சிட்டி. தற்போது யாயா டோரே போன்றவர்களின் சிறப்பான ஆட்டத்தால் மகுடம் கிடைக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இன்னும் ஒரே ஒரு ஆட்டம் தான். அதில் வென்று விட்டால் சரித்திரம் படைக்கப்போகின்றது இந்த டீம்.

யாயா டோரே - இந்த மனிதர் கால்பந்தாட்ட ஹீரோக்களில் ஒருவராக பார்க்கப்படுகின்றார். மிகச் சிறந்த மத்தியகள ஆட்டக்காரரான இவர் பந்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும், நீண்ட தூரம் லாவகமாக பாஸ் செய்வதிலும், போட்டியில் ஆதிக்கம் செலுத்துவதிலும் கில்லாடி.

Yaya Toure (Image courtesy - goal.com)

ஆப்பிரிக்காவின் மிகச்சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்று விருதை (African Footballer of the Year) 2011-ஆம் ஆண்டு பெற்ற இவர், தேவைப்பட்டால் முன்னேறிச்சென்று தாக்குவதிலும் வல்லவர். இதனாலேயே இவருக்கு box-to-box player என்ற செல்லப்பெயரும் உண்டு.

கடந்த ஞாயிறுக்கிழமை newcastle அணியுடன் நடந்த முக்கிய போட்டியில் தன் அணிக்காக இரண்டு கோல்களை போட்டு வெற்றி தேடித்தந்தார் டோரே. இதற்காக ஆட்டநாயகனாக தேந்தேடுக்கப்பட்ட அவருக்கு பெரிய ஷாம்பைன் (champagne) பாட்டில் பரிசாக கொடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொள்ள மறுத்து தன் பக்கத்தில் இருந்த சக வீரரிடம் கொடுத்துவிட்டார் டோரே.

என்ன காரணம்?

இதற்கு அவர் கூறிய காரணம், "நான் குடிப்பதில்லை. ஏனென்றால் நான் ஒரு முஸ்லிம் (I don't drink because I am a Muslim)"

மது வாங்க மறுத்த காட்சியை கீழே காணலாம்.


EPL நிர்வாகத்தாருக்கு யாயா டோரேயின் இந்த செய்கை சங்கடத்தை தந்தாலும், இந்த நிகழ்வுக்கு பின்னணியில் மேலும் பல உண்மைகள் தெரியவந்தன. அதாவது, இம்மாதிரி நடக்கலாம் என்று முன்பே தாங்கள் யூகித்து பரிசை மாற்றுவது குறித்து ஆலோசனை செய்ததாக கூறி மேலும் பரபரப்பை உண்டாக்கியுள்ளனர் நிர்வாகத்தினர். இருப்பினும், ஷாம்பைன், வீரர்களால் மிகவும் விரும்பப்படும் பரிசு என்பதால் அதனை மாற்ற வேண்டாம் என்று இறுதியில் முடிவெடுத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

தாங்கள் எண்ணியது போலவே தற்போது நடந்துள்ளதால், எதிர்காலத்தில் பரிசுகளில் மாற்றம் கொண்டு வர எண்ணியுள்ளனர். அதாவது, ஷாம்பைன் பாட்டிலுடன் பதக்கவில்லையும் சேர்த்து தர திட்டம் தீட்டியுள்ளனர். மது வேண்டாமென்னும் வீரர்களுக்கு பதக்கம் மட்டும் தரப்படும்.

மான்செஸ்டர் சிட்டி அணியின் முக்கிய வீரர்கள் பலரும் முஸ்லிம்கள் என்பதால் அவர்களுக்கென தனி தொழுகை அறை வசதியை அணி நிர்வாகம் ஏற்படுத்தி தந்துள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.

நட்சத்திரங்களின் செய்கைகள் அவர்களது ரசிகர்களை பாதிக்கும் என்பது உண்மை. அந்த வகையில் மதுவை நிராகரித்து தன் ரசிகர்களுக்கு ஒரு மிக சிறந்த முன்னுதாரணத்தை காட்டிவிட்டார் யாயா டோரே என்றால் அது மிகையாகாது.

இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன்.

இறைவனே எல்லாம் அறிந்தவன்.

References:
1. Not for me! Yaya Toure turns down man-of-the-match champagne on religious grounds - Dailymail, 6th May 2012. link
2.  Soccer and religion meet on the pitch, where the English Premier League considers a change - Yahoo sports, 7th May 2012. link
3. “I Don’t Drink Because I’m Muslim” - On Islam. 7th May 2012. link
4. Yaya toure - wikipedia. link.
5. African footballer of the year - wikipedia. link

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ







23 comments:

  1. அல்-ஹம்துலில்லாஹ் சிறந்த முன்மாதிரி

    ReplyDelete
  2. ஒரு சின்ன விஷயம்... மது புட்டி வாங்க மாட்டேன் என்பது....எவ்வளவு பெரிய மாற்றங்களை ஏற்படுத்துது...
    எத்தன பேரோட முடிவு மாறுது அதனால்???? மாஷா அல்லாஹ்....

    மன்செஸ்டர் சிட்டி புட்பால் கிளப்ப ஒரு ஷேக் தானே வாங்கி இருக்கார்?????

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும்! சகோ.ஆஷிக்!
    சுபஹானல்லாஹ்!! அவருடைய தக்வாவை என்னவென்று சொல்வது!!!

    ReplyDelete
  4. சலாம் சகோ!

    இஸ்லாத்தின் கொள்கை எந்த அளவு உலகம் முழுக்க தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சிறந்த உதாரணம்.

    ReplyDelete
  5. அஸ்ஸலாம் அலைக்கும் சகோஸ்,
    சமீபத்தில் நடந்த சம்பவம் அறிந்தமைக்கு மிக்க நன்றி.......................... யய டூர் போலவே முன்னாள் கிரிகெட் வீரர் அசாருதீனும், அன்றைய போட்டிகளில் இந்தியா வென்றுவிட்டால் வீரர்களின் கிரீன் ரூமிலும், ஹோட்டலிலும் நடக்கும் ஷாம்பெயின் பார்டிகளில் கலந்துக்கொள்ளமாட்டார்
    என்று கேள்விப்பட்டேன் ...!! உண்மையா தெரியவில்லை ...

    ReplyDelete
  6. அஸ்ஸலாம் அலைக்கும் சகோ,
    மாஷா அல்லாஹ் யய டூர்...உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளார் இந்த இஸ்லாமியர்

    எங்க தளத்திற்கும் நீங்க வாங்க,தளத்தில் உறுபினராக ஆகுங்கள் www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் பதில் இங்கே,கேள்வி எங்கே-விவாதம் இறைமறுப்பாளர் தருமிக்கு,நபிகள் நாயகம் அவர்களின் குணநலன் அறிய, நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி-1 TO 15),காமகொடுரனுக்கு தண்டனை தந்த பெண்,இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி,ஆக்கபூர்வமான இன்னும் பல கட்டுரைகள்.அந்த தளத்தில் இணையுங்கள்,வாருங்கள் உங்கள் கருத்தை உலகறிய தெரிவியுங்கள் ,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....

    ReplyDelete
  7. கால்பந்தாட்ட வீரர் ஒருவரையும்,கிரிக்கட் வீரர் ஒருவரையும் இஸ்லாம் கவர்ந்துள்ளது
    பார்க்க:http://tvpmuslim.blogspot.in
    கட்டுரை:இவர்களை கவர்ந்த இஸ்லாம்

    ReplyDelete
  8. It's not nice to be just a Muslim by name, but it's best to be a Muslim in deeds.

    MASHA ALLAH, Let ALLAH give more power to us to be a Muslim in any stage.

    Thanks for sharing Brother :)

    ReplyDelete
  9. Good!!! Very good attitude..

    ReplyDelete
  10. நல்ல முன் மாதிரியான விளையாட்டு வீரர்

    பலமான வீரர் மட்டுமல்ல ..பலமான ஈமான்உள்ளவர்

    அவருடைய வாழ்வில் என்றென்றும் வெற்றி கிட்டட்டும் .,

    ReplyDelete
  11. புகழ் பெற்றவர்கள் செய்யும் சின்னஞ்சிறு காரியங்கள் கூட பொதுமக்களை உன்னிப்பாக கவனிக்க வைக்கிறது. இந்த விளையாட்டு வீரர் 'தான் ஒரு முஸ்லிம்' என்பதையும், 'முஸலிம் மது அருந்தக் கூடாது' என்பதையும் எவ்வளவு தெளிவாகப் போகிற போக்கில் சொல்லிவிட்டு உலகத்தையே தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டார்! அல்லாஹ் இவரது ஈமானை மேலும் பலப்படுத்துவானாக.

    ReplyDelete
  12. முதலிரு பத்திகளை மடலில் வாசிக்கும்போது எனக்குப் பிடித்த விளையாட்டு வீரர் ஜைனல்தீன் ஸைடான் குறித்த பதிவாக இருக்கும் என்று நினைத்தேன்.

    தக்வாவும்,ஈமானுமுள்ள ஓர் முஸ்லிம் உலகின் எத்துறையிலும் சிறந்து விளங்க முடியும் என்பதற்கு சகோ.யய டூர் மேலுமொரு உதாரணம். அல்லாஹ் அவருக்கு மென்மேலும் வெற்றிகளைக் கொடுக்கட்டும்.

    ReplyDelete
  13. maasha allah .. all credit goes to allah

    ReplyDelete
  14. எப்படியோ, மது ஒழிந்தால் சரி..

    ReplyDelete
  15. புதிய வரவுகள்:அஹ்மத் தீதத்தும் கிறிஸ்தவ விவாதகர்களும்-சில சுவாரசியங்கள்,கிறிஸ்தவர்களே இயேசு உங்களை இரட்சிக்கமாட்டார்

    ReplyDelete
  16. வாவ்....இவரைப் போல் தீய பழக்கங்கள் உள்ள எல்லா முஸ்லிம்களும் யோசித்தால் எப்படியிருக்கும்?! :)... இறைவன் இது போன்ற ஈமானை நம் அனைவருக்கும் தருவானாக!

    ReplyDelete
  17. மாஷா அல்லாஹ்,
    மிக அருமையான பதிவு. ஜசகலாஹைர்

    ReplyDelete
  18. Does 10-50 Members and blog spot and few funny comments cant change the view of world that Islam is religion of Terror and barbarians . You guys never know how to live in peace. If there is an End to world its because of you stinky morons. Mark my words they day Iran using its weapons end to arab world

    ReplyDelete
    Replies
    1. :-) loL
      May Allaah guide u .. only if u r really a Moron :-D

      Delete