Wednesday, April 7, 2010

நாமென்ன செய்தோம் இவ்வுலகிற்கு? - III






அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

தங்கள் மீதும் தங்களின் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்

  • குர்ஆனில் ஏகப்பட்ட அறிவியல் உண்மைகள் வைத்திருக்கும் உங்களிடம் ஏன் எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பும் நிகழவில்லை?

இதுபோன்ற கேள்விகளுக்கு விடைக்காண முயல்வதே இந்த தொடர் பதிவுகள். (நான் மேலே குறிப்பிட்டுள்ள வாசகம் நல்லடியார் (http://athusaridotblogspotdotcom) அவர்களது தளத்தில் ஒரு சகோதரர் கேட்டது)


இந்த பதிவிற்கு தேவைப்படும் என்பதால் மேற்கொண்டு செல்லும் முன் ஒரு சிறு முன்னோட்டம், இதை நாம் மேலே பார்த்த கேள்விக்கு பதிலாகவும் கொள்ளலாம்.

நாமென்ன செய்தோம் இவ்வுலகிற்கு?

  • முஸ்லிம்களின் கண்டுபிடிப்புகள் இல்லையென்றால் இன்றைய கணிதத்துறை எப்படி இருந்திருக்கும் என்ற சந்தேகம் வருமளவு கணிதத்தில் சாதனைகள் புரிந்தவர்கள் முஸ்லிம்கள்.
  • இன்றைய கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் முதுகெலும்பாய் இருக்கக்கூடிய கண்டுபிடிப்பான அறிவியல் அணுகுமுறைகளை (The Scientific Method) உலகிற்கு கற்பித்தவர்கள் முஸ்லிம்கள்.

இந்த பட்டியலை இந்த பதிவின் மூலம் மேலும் நீட்டிப்போம், இன்ஷா அல்லாஹ். இந்த பதிவில் நாம் பார்க்கப்போகின்ற துறை வேதியியல் (Chemistry). 



வேதியியல் (Chemistry):

முதல் செய்தி முதலில், இன்றைய வேதியியலை ஒரு அறிவியலாக கிட்டத்தட்ட முழுமையாக உருவாக்கியது முஸ்லிம்கள்தான். 

"வேதியியலை ஒரு அறிவியலாக ஏறக்குறைய முழுமையாக உருவாக்கியது முஸ்லிம்கள்தான்"  --- Will Durant in his book "The Story of Civilization".
"Chemistry as a science was almost created by the Muslims" --- Will Durant in his book "The Story of Civilization"

உடுத்தும் உடையிலிருந்து உட்கொள்ளும் மருந்து வரை முக்கியத்துவம் பெற்றுள்ள இந்த துறையில் முஸ்லிம்களின் பங்கு முதன்மையானது.

இன்று இந்த துறையில் பயன்படுத்தப்படும் பல யுக்திகளை கண்டுபிடித்தவர்கள் முஸ்லிம்கள்தான்.

இந்த துறையைப் பற்றி பார்க்கும் போது நிச்சயம் ஐரோப்பியர்கள் இஸ்லாமிய அறிஞர்களுக்கு செய்த அநீதியை குறிப்பிட்டாக வேண்டும். 

வேதியியலை பற்றி படிப்பவர்கள் நிச்சயம் "AlChemy" என்ற வார்த்தைக்கு குறுக்கே வருவார்கள்.

  •  "Alchemy" என்றால் என்ன? 
  • இதற்கும் "Chemistry"கும் என்ன வித்தியாசம்?

வித்தியாசம் என்னவென்று விளக்குவது சுலபம்தான். அதாவது, ஐரோப்பியர்களின் பார்வையில், "Alchemy" என்றால் பதினேழாம் நூற்றாண்டுவரை உள்ள வேதியியல். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால் இரண்டாம் தர, மூன்றாம் தர வேதியியல்.

"Chemistry" என்பது தற்காலத்திய, முதல் தர நவீன வேதியியல். அவ்வளவுதான்.   

இந்த "Alchemy" யிலேயே, கிரேக்க "Alchemy", இஸ்லாமிய "Alchemy" என்ற பிரிவினை வேறு. கிரேக்கர்களின் "Alchemy" முற்றிலும் காலம் கடந்த ஒன்றாம், முஸ்லிம்களின் "Alchemy" இன்றைய நவீன வேதியியலுக்கு உறுதுணையாக இருந்த ஒன்றாம். 

சுருக்கமாக சொல்லப்போனால் இரண்டாம் தர வேதியியலான "AlChemy" முஸ்லிம்களுடையது, முதல்தர வேதியியலான "Chemistry" ஐரோப்பியர்களுடையது. இது நிச்சயமாக பாரபட்சமான ஒன்று.                   

"Alchemy" என்ற சொல்லானது "Chemia (கிமியா)" என்ற அரபி வார்த்தையிலிருந்து வந்தது. இந்த அரபி வார்த்தை எகிப்தியர் மற்றும் கிரேக்கர்களிடமிருந்து வந்தது. இந்த வார்த்தைக்கு "தனிமங்களின் தன்மையை மாற்றுதல் (Transmutation of Elements)" என்று பொருள் (Some others have the opinion that "Chemia" in Greek means Black).       

அரேபியர்கள் எப்போதும் போல் "அல்" என்ற வார்த்தையை முன்னே சேர்த்து "Alchemia" என்று அழைக்க ஆரம்பித்தனர். இந்த "அல்" என்ற வார்த்தைக்கு ஆங்கிலத்தில் "the" என்ற வார்த்தையைப் பொருளாகக் கொள்ளலாம்.

ஐரோப்பியர்கள் பதினேழாம் நூற்றாண்டில் இந்த "Alchemia" என்ற வார்த்தையிலிருந்து "Chemia" என்ற வார்த்தையை எடுத்துக்கொண்டு "chemistry" என்ற வார்த்தையை கொண்டுவந்தனர். அதுமட்டுமல்லாமல் அதற்கு முந்தைய வேதியியலை குறிக்க "Alchemy" என்ற வார்த்தையையும் உருவாக்கினர். 

இங்குதான் நீங்கள் ஒன்றை கூர்ந்து கவனிக்கவேண்டும். ஐரோப்பியர்கள் "Alchemia" என்ற வார்த்தையை மொழிப்பெயர்க்கும்போது "AlChemy" என்று மொழிப்பெயர்த்தனர், அதுமட்டுமல்லாமல் "chemistry" என்ற ஒரு புது வார்த்தையையும் உருவாக்கினர். 

ஒரே சொல்லுக்கு இரண்டு வார்த்தைகளா? "AlChemia" என்பது "The Chemistry" (chemia means "chemistry" and Al means "the") என்றுதானே மாறியிருக்க வேண்டும், ஏன் Alchemy என்று மொழிப்பெயர்த்தார்கள்? ஏன் இரண்டு சொற்களை உருவாக்கி ஒன்று முஸ்லிம்கள் வரையிலானது, மற்றொன்று நவீனமானது என்று பிரிக்கவேண்டும்.

என்ன உள்நோக்கம்?          

முஸ்லிம்கள் கணிதத்தை குறிக்க கூடத்தான் "Al-Riyadiyat" என்ற சொல்லைப் பயன்படுத்தினர். அதற்காக "Al-Riyadiyat" என்பது முஸ்லிம்களுக்கானது, "Mathematics" என்பது ஐரோப்பியர்களுக்கானது என்றா பிரித்து விட்டார்கள்? எல்லாவற்றையும் கணிதம் என்ற பொது பிரிவின் கீழ்தானே கொண்டு வந்தார்கள்.          

அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு துறையும் ஒவ்வொரு காலக்கட்டத்தில் மாறித்தானே வருகிறது. அதற்காக ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அந்த துறைக்கு ஒவ்வொரு பெயர் வைக்கமுடியுமா என்ன? 

இஸ்லாமிய வேதியியலை பற்றி பார்க்கும் முன் ஒரு முக்கிய விஷயத்தை எழுப்ப வேண்டியது அவசியமாகிறது. அது "Chemistry" என்று பயன்படுத்துவதற்கு பதிலாக "Alchemy" என்று பயன்படுத்துவது பற்றியது.  இது மிக அதிக மக்களை முட்டாளாக்கக் கூடிய வரலாற்று பிழைக்கு மற்றுமொரு சான்று. இந்த மக்களுக்கு, சில அறிஞர்கள் வரலாற்றை தவறாக காட்ட எந்த அளவிற்கும் இறங்குவார்கள் என்பது பற்றிய புரிதல் கிடையாது. இஸ்லாமிய அறிவியல் சார்பான தகவல்கள் இந்த வகையைச் சேர்ந்தவைதான் --- Foundation for Science Technology and Civilization, In its release "Review on Muslim Contribution to Chemistry", Page Number: 2.   
"Before addressing the subject of Islamic Chemistry, however, one crucial matter needs to be raised. It concerns the use of the word Alchemy instead of Chemistry. This is another instance of Historic corruption fooling so many who have so perception of the depths some scholarship can descend to in order to convey distorted images of aspects of history, such as that of Islamic Science" --- Foundation for Science Technology and Civilization, In its release "Review on Muslim Contribution to Chemistry", Page Number: 2. 

சில நூற்றாண்டுகளுக்கு முன் ஐரோப்பியர்கள் மொழிப்பெயர்ப்பில் செய்த பிழையை பின்னர் வந்தவர்களும் பின்பற்றினர். ஆனால் இப்போது நிலைமை மாறி வருகிறது. முன்புபோல "Alchemy"  மற்றும் "chemistry"யை வித்தியாசமாக பார்க்காமல் ஒன்றாகவே பார்க்கத் துவங்கியுள்ளனர். இது ஒரு ஆரோக்கியமான முன்னேற்றம். அல்ஹம்துலில்லாஹ்...

இதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவமென்றால், நாம் வேதியியலில் நம்முடைய பங்களிப்பை பற்றி கூறும்போது, யாரும் வந்து "இல்லை இல்லை, உங்களுடைய பங்களிப்பு "Alchemy" யில் தான், "chemistry" யில் இல்லை" என்று சொன்னால் அவர்களுக்கு தெளிவாக பதிலளிக்க வேண்டும் என்பதற்க்காகத்தான். 

நவீன வேதியியல் என்பது முஸ்லிம்களிடமிருந்து தான் ஆரம்பித்தது. அதற்கு இன்றளவும் நாம் பயன்படுத்தக்கூடிய வேதியியல் உக்திகள் தான் சான்று. இன்ஷா அல்லாஹ், அதைத்தான் மேற்கொண்டு பார்க்கப்போகிறோம்.        


1. இன்று அறிவியலில் இன்றியமையாததாய் இருக்கக்கூடிய ஒரு சொல் "அல்கலி (Alkali)", இது வேதியியலில் பல்வேறு துறைகளில் உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த அல்கலி என்ற வார்த்தை, அல்காலி (Al-Qaly) என்ற அரபி வார்த்தையிலிருந்து வந்தது தான். அல்காலி என்பதற்கு சாம்பல் என்று பொருள். ஒரு வகை செடிகளை எரித்து அதனுடைய சாம்பலில் இருந்து அல்கலி உருவாக்கப்பட்டதால் இதற்கு இப்படியொரு பெயர். "Alkaline" (eg. Alkaline Battery) என்றெல்லாம் தினமும் பார்க்கிறோமல்லவா அதெல்லாம் அல்கலி என்பதிலிருந்து வந்ததுதான்.

சரி, இந்த அல்கலி என்ற பொருளால் என்ன உபயோகம்?, 

இது இல்லையென்றால் நாம் பயன்படுத்தும் பல பொருட்கள் இல்லை.

"அல்கலி இல்லாமல் வேதியியல் இல்லை" --- BBC 
"There would be no Chemistry without Alkali" --- BBC

இந்த அல்கலி, தண்ணீரில் கரையக்கூடிய தன்மை உடையது. உதாரணத்துக்கு, இது  சோப்பு மற்றும் வீட்டை சுத்தப்படுத்தும் பொருட்களை உருவாக்க பயன்படுத்தப்படுகிறது.  எண்ணிப் பாருங்கள், நாம் சோப்பை உபயோகப்படுத்தும் போது கரைகிறதல்லவா, அது இந்த அல்கலியால் தான். அதுமட்டுமல்லாமல், இந்த அல்கலியானது கிருமிகளை எதிர்த்து போராடக்கூடிய தன்மை உடையது.       

An Alkali is a base that is Soluble in water and fights against Bacteria.

ஆக, இந்த அல்கலி என்ற இன்றியமையாத பொருளை முழுமையாக, மனித குலத்திற்கு உபயோகப்படும் அளவிற்கு கொண்டு வந்தது முஸ்லிம்கள்தான்.


2. இன்று நாம் பயன்படுத்தக்கூடிய சோப்பு இருக்கிறதல்லவா? இதனுடைய பார்முலாவை உலகிற்கு சொன்னவர்கள் நாம்தான்.

உலகில் முதன்முதலில் சோப்பு எப்படி உருவாக்க வேண்டும் என்ற செயல் விவரிப்பு (Description), முஸ்லிம்களுடைய பனிரெண்டாம் நூற்றாண்டு நூல்களில் காணக் கிடைக்கிறது.

அதாவது, இன்றைய சோப்பு எப்படி தயாரிக்கப் படுகிறது என்றால், sodium or potassium salts, common oils or fats, alkaline solution, aromatics என்று இவையனைத்தையும் கலந்து தயாரிக்கப்படுகிறது.இந்த முறை எங்கிருந்து எடுக்கப்பட்டது என்றால் முஸ்லிம்களிடமிருந்து தான். 

ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், சோப்பு என்றால் கட்டி வடிவிலானது (Bar or solid) மற்றும் திரவம் என்று இருவகையையும் சேர்ந்துக் கொள்ளவேண்டும். உதாரணத்துக்கு ஷாம்பூ (shampoo) மற்றும் திடமான சோப்புக்கள் (Bar Soap).

முஸ்லிம்கள் அல்கலி தயாரிப்பதில் கைதேர்ந்தவர்களாக இருந்ததால் அதையும், (சோப்புக்கு வழுக்கும் தன்மையை கொடுக்கக்கூடிய Vegetable) எண்ணையையும், வாசனையைக் கொடுக்ககூடிய வாசனை திரவியங்களையும் (Aromatics), Potassium Hydroxide போன்றவற்றையும் சேர்த்து இன்றைய சோப்பு தாயாரிக்கும் பார்முலாவை உருவாக்கினர். Bar Soap மற்றும் Shampoo என்று இரண்டையும் உருவாக்கினர்.  

ஒரு நகரத்தில் மட்டும் சுமார் 27 தரமான சோப்பு தயாரிக்கும் தொழிற்சாலைகள் இருந்ததாக வரலாறு குறிப்பிடுகிறது. அப்போது மற்ற நகரங்களை கணக்கிட்டு கொள்ளுங்கள். 

ஆக, இன்று நாம் உபயோகிக்கக்கூடிய சோப்புகளை உலகிற்கு முதன்முதலில் கொடுத்தவர்கள் முஸ்லிம்கள்தான்.


3. வேதியியலில் முக்கிய செயலாக்கங்கலான (Chemical Processes),

  • Pure Distillation (சுத்திகரிப்பு) 
  • Dry Distillation (வறண்ட சுத்திகரிப்பு) 
  • Steam Distillation (நீராவி சுத்திகரிப்பு)
  • Purification and Water Purification.
  • Oxidation
  • Ceration
  • Lavage
  • liquefaction
  • sublimation
  • Crystallisation 
  • Evaporation
  • Filtration

என்று இவற்றை கண்டுபிடித்தது மற்றும் நேர்த்தி படுத்தியது (Mastery) முஸ்லிம்கள் தான்.
"...developed in the hands of the Arabs into a widespread, organized passion for research which led them to the invention of distillation, sublimation, filtration..." --- Robert Briffault in his book "The Making of Humanity"


அவர்களின் ஆராய்ச்சி திறமைக்கு ஒரு சிறு உதாரணமாக இந்த சுத்திகரிப்பு (Pure Distillation) உக்தியை எடுத்துக்கொள்வோம்.


  • சுத்திகரிப்பு என்றால் நீராவியாக்கி பின்னர் குளிர்விப்பது என்று அர்த்தம்.  
  • Distillation is a process of Vaporaization and subsequent Condensation, as for Purification or concentration. 


அவர்கள் வாசனை திரவியங்களை உருவாக்கிய முறையைப் பார்ப்போம்.


இதற்கு என்ன செய்தார்களென்றால், ஒரு கண்ணாடிக் குடுவையை எடுத்துக்கொண்டு, அதன் மேல்பக்கத்தை ஒரு வளைந்த கண்ணாடி குழாயில் சொருகிவிட்டனர். குழாயின் மற்றொரு முனையை மற்றுமொரு குடுவையின் உள்ளே விட்டுவிட்டனர். 



இப்போது ரோஜா இதழ்களை அந்த குடுவையில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அதன் மேல்பக்கத்தை வளைந்த குழாய் மூலம் மூடிவிட்டனர். பின்னர் குடுவையை சூடுபடுத்த துவங்கினர். அப்போது உருவாகும் நீராவி, மேல்பக்கத்தில் உள்ள வளைந்த குழாயின் மூலம் கீழே உள்ள குடுவையை வந்து அடையும். இப்போது அந்த நீராவி குளிர்ந்து தண்ணீரானவுடன் நுகர்ந்து பார்த்தோமானால் அதில் ரோஜா மணம் கமழும். கிட்டத்தட்ட ஒரு ரோஜா வாசனை (Rose Cent) திரவியம் ரெடி. 



இந்த கருவிக்கு பெயர் "அளம்பிக்" என்பதாகும் (Alembic). நிச்சயம் நாம் இதை எங்கோ பார்த்த ஞாபகம் வரும். எனக்கு பள்ளி காலங்களில் பார்த்ததாக ஞாபகம். இந்த அலம்பிக்கை பல்வேறு பொருட்களை உருவாக்கப் பயன்படுத்தியுள்ளனர்.   

முஸ்லிம்களுடைய இப்படிப்பட்ட ஆய்வு முறைகள் தான் பின்னர் வந்த பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தின. கிரேக்க, எகிப்திய முறைகள் போன்றதல்ல அவர்களுடைய முறை, மாறாக நன்கு செய்முறைகள் செய்யப்பட்டு ஆராயப்பட்டவை (The Scientific Method). இன்றளவும் அவர்களுடைய கண்டுபிடிப்புகள் நிலைத்திருக்கிறது என்றால் அதற்கு அவர்கள் அறிவியலை அணுகிய முறைதான் காரணம் (The Secret behind Muslims' scientific Success is SCIENTIFIC METHOD).      

நாம் மேலே பார்த்த "Steam Distillation" உக்தியை பயன்படுத்தி மண்ணெண்ணையை கண்டுபிடித்தனர். 



  • "Crude Oil" லிருந்து பெட்ரோலை கொண்டு வந்தார்கள்.  
  • பெட்ரோலை முதலில் சுத்திகரித்து காட்டியதும் அவர்கள்தான்.  
  • "Water Purification" உக்தியை பயன்படுத்தி கடல் நீரை குடிநீராக்குவது எப்படி என்று புத்தகமெல்லாம் எழுதியிருக்கிறார்கள்.                    

இப்படியாக பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் தாங்கள் பயன்படுத்திய கருவிகளை எப்படி உருவாக்குவது என்று விளக்கி புத்தகங்கள் எழுதி உள்ளனர். நிச்சயமாக இது ஒரு அற்புத பண்பு. தங்களுக்கு பின் வருபவர்கள் தாங்கள் என்ன செய்தோம் என்பதை தெளிவாக, எளிதாக அறிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணி செய்த பண்பான செயல்.

நான் ஏற்கனவே முந்தைய பதிவுகளில் சொன்னது போன்று, இதையெல்லாம் படிக்கப் படிக்க வியப்புதான் மிஞ்சுகிறது. அல்ஹம்துலில்லாஹ்,எல்லாப் புகழும் இறைவனுக்கே...
        
ஆக,பல்வேறு முக்கிய வேதியியல் செயலாக்கங்களை கண்டுபிடித்தது முஸ்லிம்கள்தான்.  



4. இன்றைய வேதியியலின் மிக முக்கிய பொருள்களான (Chemical Substances), 
  • Ethanol 
  • Lead Carbonate
  • Silver Nitrate
  • Potassium 
  • Acetic Acid
  • Citric Acid
  • Nitric Acid
  • Sulphuric Acid
  • Hydro Chloric Acid
  • Tartaric Acid
  • Arsenic 
  • Antimony........etc., 

என்று இதுபோல பலவற்றை  முதன் முதலில் தனிமைப்படுத்தியது (Isolate) முஸ்லிம்கள்தான். 

5. கண்ணாடியின் வண்ணத்தை மாற்றிக் காட்டி புரட்சியை ஏற்ப்படுத்தியவர்கள் அவர்கள். இதற்கு அவர்களுக்கு பெரிதும் உதவியாய் இருந்தது அவர்கள் கண்டுபிடித்த "Manganese  Salts" போன்ற வேதிப் பொருட்கள். 



கண்ணாடிகள் உற்பத்தியை மிகப்பெரிய அளவில் கொண்டுவந்தது முஸ்லிம்கள் தான். இதற்கு பல மாடிகள் உயரமுள்ள உலைகலங்களை (Several Storeys high Industrial furnaces) பயன்படுத்தியிருக்கிறார்கள். பலவிதமான நிறமிகள் (Pigments), சாயங்கள் (Dye), நிறங்களை (Colours) உருவாக்கினார்கள். இவைகளை பயன்படுத்தி கட்டிடங்களுக்கு அற்புதமான அழகு சேர்த்தார்கள். (They developed several Colours, Pigments and Dyes using new alkalis and metals like lead and tin).

அதுமட்டுமல்லாமல், எழுத பயன்படுத்தப்படும் "மை"யில் (INK) பல வித மாற்றங்களை கொண்டுவந்தார்கள். பிரகாசமாய் இருக்கக்கூடியது, நீண்ட நாட்கள் நிலைக்கக்கூடியது, வண்ண மைகள் என்று பல... 

பின்ன இருக்காதா என்ன?, இந்த "Fountain Pen (Ink pen)" இருக்கிறதே, இதை கண்டுபிடித்தவர்கள் அவர்கள் தானே...   


6. நாம் மேலே பார்த்தவையெல்லாம் விட முக்கியமானது இது. வேதியியலை பற்றி பார்க்கும்போது "Periodic Table" ளை பார்க்காமல் கட்டுரைகள் முற்றுப்பெறாது. இன்றைய வேதியியலின் சென்டர் இதுதான்.  


இந்த "Periodic Table" உருவாக்குவதில் முதல் முயற்சியை கையாண்டவர்கள் முஸ்லிம்கள்தான். அவர்கள் தான் இதற்கு அடிப்படையை போட்டவர்கள்.  

ஒரே தன்மையை உடைய வேதிப்பொருட்களை ஒவ்வொரு பகுதியாக பிரித்து வைப்பதுதான் "Periodic Table".  கிரேக்கர்களும் பிரித்து வைத்திருந்தார்கள், எப்படியென்றால் காற்று, நிலம், நெருப்பு மற்றும் நீர் என்று. இது தத்துவ ரீதியாகத்தான் ஒத்துவருமே தவிர அறிவியல் ரீதியாக பெருமளவு ஒத்துவராது. 

ஆனால் முஸ்லிம்கள் என்ன செய்தார்களென்றால், இன்று எப்படி தனிமங்கள் பிரிக்கப்படுகின்றனவோ அப்படி பிரித்தார்கள்.

உதாரணத்துக்கு, அவர்களிடம் உள்ள வேதிப்பொருட்களை எடுத்துக்கொண்டு, இவை தண்ணீரில் கரையக்கூடியவை (Chemical Salts), இவை எரியக்கூடியவை, இவை வளையக்கூடியவை (metals) என்று சுமார் ஆறு பிரிவாக பிரித்தார்கள்.

அவர்கள் அப்படிப் பிரித்த அந்த உக்திதான் இன்றைய "Periodic Table"லுக்கு அடிப்படை. 
"I think with Al-Razi we start to see the first classification which really leads on to further experimentation, the first step which allows people to start doing rational work and so he really lies at the start of formal chemistry which ultimately leads to periodic table" --- Dr.Andrea Sella, Chemist, University College London.   

ஆம், அவர்கள் செய்த அனைத்தும் சரி என்று சொல்லிவிடமுடியாது, இன்றைய அறிவியலுக்கு ஒத்துவராத பலவற்றை முயன்றிருக்கிறார்கள்.ஆனால் முயன்றிருக்கிறார்கள் என்பது தான் முக்கியம். 


7. முடிவாக இந்த துறையில் சிறந்து விளங்கிய சில முக்கிய  அறிஞர்களை பார்த்துவிடுவோம். இவர்கள் தான் நாம் மேல பார்த்த கண்டுபிடிப்புகளுக்கு மற்றும் வேதியியல் முன்னேற்றங்களுக்கு காரணம்.
  
  • Jabir Ibn Hayyan (Father of Chemistry, Popularly known as Geber)
  • Muhammed Ibn Jakariya Al Razi 
  • Ibn Sina (Popularly known as Avicenna)
  • Al-Kindi
  • Al-Biruni
  • Al-Khaldun
  • Al-Majriti
  • Nasir Al-Din Al-Tusi
  • Massawayh Al-Maridini
  • Ibn Al-Wafid
  • Ibn Badis 
  • Abu'l-Qasim 
  • Al Damir Al-Jildaki 
  • Al-Tughra'i

மொத்தத்தில், எப்படி முஸ்லிம்களின் பங்களிப்பு இல்லையென்றால் கணிதத்துறை எப்படி இருந்திருக்கும் என்ற சந்தேகம் வருகிறதோ, அதுபோல முஸ்லிம்களின் பங்களிப்பு இல்லையென்றால் இன்றைய வேதியியல் எப்படி இருந்திருக்கும் என்ற சந்தேகமும் வருகிறது.   
"ஏழாம் நூற்றாண்டிலிருந்து பதினேழாம் நூற்றாண்டு வரையிலான இஸ்லாமிய உலகானது, கண்டுபிடிப்புகளும் புதுமைகளும் நிகழ்த்தப்பட்ட பொற்காலம்" --- Claire Gemson, Glascow Science Centre
"...Golden age of Discovery and Innovation, which took place in the Islamic world between seventh and 17th centuries" --- Claire Gemson, Glascow Science Centre 

இவையெல்லாம் மறக்கப்/மறைக்கப்பட்டிருக்கின்றன. 
"இஸ்லாமைப் பற்றி நிறைய தவறான எண்ணங்கள் மேற்குலகில் இருப்பது போன்று, இஸ்லாமிய உலகிற்கு நம் கலாச்சாரமும், நாகரிகமும் பட்டிருக்கக்கூடிய கடன் பற்றிய அறியாமையும் அதிகமாக இருக்கிறது. நம் வரலாறு தான் இந்த தோல்விக்கு காரணம். மத்திய ஆசியாவிலிருந்து அட்லாண்டிக் கடற்கரைகள் வரையிலான இஸ்லாமிய உலகானது, அறிஞர்களையும் கல்வியாளர்களையும் உருவாக்கிய ஒன்றாக இருந்தது. ஆனால் நாம் இஸ்லாமை மேற்குலகின் எதிரியாக, அந்நிய கலாச்சாரமாக, சமுதாயமாக, நம்பிக்கை முறையாக  பார்க்கிறபடியால் அதனுடைய அற்புதமான பங்களிப்பை அலட்சியபடுத்தவோ அல்லது அழிக்கவோ முற்பட்டுவிட்டோம்"   --- இளவரசர் சார்லஸ்
"If there is much misunderstanding in the West about the nature of Islam, there is also much ignorance about the debt our own culture and civilisation owe to the Islamic world. It is a failure, which stems, I think, from the straight-jacket of history, which we have inherited. The medieval Islamic world, from central Asia to the shores of the Atlantic, was a world where scholars and men of learning flourished. But because we have tended to see Islam as the enemy of the West, as an alien culture, society, and system of belief, we have tended to ignore or erase its great relevance to our own history." --- Prince Charles at a speech in Oxford University.

எவ்வளவு நாள் தான் உண்மையை மறைக்க முடியும்? வரலாறு மாற்றி எழுதப்படும் நாட்கள் தொலைவில் இல்லை, இன்ஷா அல்லாஹ். ஏனென்றால் இன்று இதைப்பற்றி பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். வரலாற்றில் இஸ்லாமிய அறிஞர்களுக்கான முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.  

நாம் மேலே பார்த்தவை முஸ்லிம்களின் பங்களிப்பில் மிகச்சிறிதே. சில முக்கியமான
தகவல்கள் ரொம்ப டெக்னிகலாக இருப்பதால் தவிர்க்கப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு, 
  • Muslims Determined Weights of many bodies, 
  • Muslims defined Chemical combinations as a union of Elements together, about ten centuries before John Dalton, 
  • Muslims defined Law of conservation of Mass long before it was defined in Europe, noting that a body of matter is able to change but can't disappear, 
  • Mastery of Sublimation etc. 

பல தகவல்கள் பதிவின் நீளம் கருதி விடப்பட்டுள்ளன. இன்ஷா அல்லாஹ் இந்த பதிவை அடிப்படையாகக் கொண்டு உங்கள் ஆய்வை தொடங்குங்கள்...          

ஒரு நிமிஷம், முடிப்பதற்கு முன் இரு முக்கிய தகவல்கள், 

ஒன்று, இன்று நம் வாழ்வில் ஒரு அங்கமாக மாறிவிட்ட இந்த காபி இருக்கிறதே, இதை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்களும் முஸ்லிம்கள்தான்.  அரபி வார்த்தையான "al-qahwa" தான் பின்னர் துருக்கி மொழியில் "Kahve" என்று மாறி, பின்னர் அவர்கள் மூலமாக இத்தாலி வந்து "caffé" என்று மாறி பின்னர் ஆங்கிலத்தில் "Coffee" என்று மாறியது.      

இரண்டு, ரைட் சகோதரர்கள் விமானத்தை கண்டுபிடிப்பதற்கு சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, முஸ்லிம்கள் பறப்பதற்குரிய இயந்திரத்தை உருவாக்க முயன்றிருக்கிறார்கள். அவர்கள் உருவாக்கிய இயந்திரத்தைக் கொண்டு மலை உச்சியிலிருந்து குதித்து சுமார் பத்து நிமிடங்கள் வரை பறந்திருக்கிறார்கள். என்ன வியப்பாக இருக்கிறதா? உண்மைதான். பாக்தாத் சர்வதேச விமான நிலையத்திற்கு இந்த இயந்திரத்தை உருவாக்கியவர் பெயரைத்தான் வைத்திருக்கிறார்கள். இது பற்றிய விரிவான விளக்கத்தை இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் "Muslims' Machineries and Instruments" என்ற தலைப்பின் கீழ் பார்ப்போம். 

இறைவன் நம்மை என்றென்றும் இஸ்லாத்தில் நிலைக்கச் செய்வானாக... ஆமின்

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்....


My Sincere Thanks To:
1. Br.Shabir Ally - President, Islamic Information and Dawah Centre International, Toronto, Canada.
2. British Broadcasting Corporation (BBC)
3. Muslim Heritage Website
4. Foundation for Science Technology and Civilisation (FSTC), Manchester, United Kingdom.
5. Wikipedia

References: 
1. Tamil Translation of Chemical terms taken from online tamil dictionary site, tamildictdotcom
2. Islam: A thousand years of Faith and Power - Jonathan Bloom and Sheila Blair.
3. Islam and Science - A Three series BBC documentary broadcasted on Jan,2009.
4. A review on Muslim Contribution to Chemistry - FSTC, UK  
5. 1001 inventions mark Islam's role in Science - Claire Gemson, Glascow Science Centre.
6. How Islamic Inventors Changed the World - The Independent, Science section, dated 11th March 2006.
7. How Islam Influenced Science - Macksood Aftab.
8. The Advent of Scientific Chemistry - Salim T S Al-Hassani and Mohammed Abattouy.
9. Origin of the name "Chemistry" - Bradley University Site.
10. Chemistry - Egypt State Information Service.
11. Al-Chemy - Chamber's Encyclopedia, Vol I.
12. Islamic Alchemy: The History of Chemistry - Martyn Shuttleworth.
13. Soaps and Detergents - The Soap and Detergent Assocation (SDA).
14. Soaps, Alkali, Alembic, Al, Inventions in Medieval Islam, Alchemy - Wikipedia
15. Makers of Chemistry: E.J.Holmyard.
16. History Of Chemistry - chemistrydotaboutdotcom
17.Inventions in Medieval Islam - Wapedia-wiki


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ.      
  






12 comments:

  1. அன்பு சகோதரர் ஆஷிக்,
    மறைக்கப்பட்ட உண்மைகளை பேனாவின் முனை கொண்டு வெளியே கொண்டு வந்திருக்கின்றீர்கள். உண்மைகள் தாமதமாக வெளிவருவதால் பொய்யாகி விடாது. அறிவியல் யுகத்திற்கு இஸ்லாமியர்கள் ஒன்றுமே செய்யவில்லை என்ற சிலரின் பொய் பிரச்சாரம் தவிடு பொடியாக வேண்டும் இன்ஷா அல்லாஹ். இந்த கட்டுரை எழுதுவதற்கு தாங்கள் எந்தளவு மற்றும் எவ்வளவு நேரம் கஷ்டப்படுகிண்றீர்கள் என்பதை அறிவேன். இன்ஷா அல்லாஹ் இதற்கான கூலியை மறுமையில் ஏக இறைவன் உங்களுக்கு வழங்குவானாக. தொடரட்டும் உண்மையை வெளிக்கொண்டு வரும் தங்களின் பணி.

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ், நல்ல தகவல்கள். நன்றி.

    கட்டிடக் கலையிலும் இஸ்லாமியர்களின் பங்கு இன்றியமையாதது. மருத்துவத்துறை, தத்துவயியல் உட்பட்ட பல துறைகளில் இப்னு ஸினா அவர்கள் ஆற்றிய பங்கும், இப்னு பதூத்தாவின் பயணங்களும் அறிவியல் துறையில் இன்றியமைக்கமுடியாதவை. கேலிகிராஃபி எனப்படும் துறையிலும் இஸ்லாமியர்களே அதிகம்.

    http://www.jannah.org/articles/contrib.html - இந்தப் பக்கத்திலும் இதுசம்பந்தப்பட்ட சில தகவல்கள் உள்ளன.

    ReplyDelete
  3. Assalamu alaikum Brothers,
    This gentle man 'Neil deGrasse Tyson' space scientist, watch his comments about Islamic inventions.


    http://www.youtube.com/watch?v=hnWn1Gq3cPc

    ReplyDelete
  4. You may came across these programs
    http://www.youtube.com/watch?v=D-n2BoPE2GE&feature=related

    and related videos

    ReplyDelete
  5. Dear Husainamma,

    Wa-alaikum Salaam,

    Thanks for your link...

    Yours,
    Aashiq Ahamed

    ReplyDelete
  6. Dear Pebble,

    Wa-alaikum salaam,

    Thanks for the links. Alhamdulliah. I know that there are stars whose names root back to Islamic golden age. But do you know what are those names (or the important ones, i know few important ones)or where can our brothers and sisters find them.

    Regarding that BBC link, that is one of my main references. While I can't agree with whatever they say, I do take the information from that program and cross check it some other references.

    Anyhow that is a great documentary. My special thanks to the host prof.jim alkhalili and also to prof.jeorge saliba for digging out many truths. They really helped our ummah. Also prof.jim's personal interviews are also available on the net.

    Once again thanks for your help and May Allah(swt) reward you for that. aamin...

    keep sharing the information and after all that is what we Muslims have to do.

    Finally, if you have in-depth knowledge over VLSI concepts, you can help me on my other new blog too http://info-vlsi.blogspot.com/

    Thanks,

    Yours,
    Aashiq Ahamed.

    ReplyDelete
  7. Assalamu alaikum,

    May ALLAH reward us that r good on both d worlds & save us from hellfire!

    May ALLAH unite in good causes like these...

    Dear Brother, It wil b more appropriate to tel abt a site which I came to know sometime ago, describing in brief(some 20).

    http://www.wonderfulinfo.com/winfo/muslminv.php

    ReplyDelete
  8. mookai, friest of all we all are indain, dont always talk about I'm musliam and we are the one great in the world, and we have lots of probs, Pl dont do this.
    Try to behave as a human, than only you will be a musliam or wot ever.. ok
    If you dont like this country Pl go to any Islamic country, after that hope you will be happy their ok

    ReplyDelete
  9. அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்) அதிரைவரலாறு வலைப்பூவை பார்வையிட்டு
    கருத்து சொல்லுங்கள்.
    அதிரை வரலாறு
    http://adiraihistory.blogspot.com/

    ReplyDelete
  10. Good and valid insight summary about science and Arab civilization

    ReplyDelete
  11. தமிழில் நான் அறிந்த சிறந்த வலைப்பூக்களில் இதுவும் ஒன்று.

    ReplyDelete