Tuesday, April 27, 2010

ஹிட்லரின் வெறியாட்டத்திற்கு பின்னால் - சொல்லப்படாத இரகசியங்கள்...



அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு...  

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்..  

ஹிட்லரின் வெறியாட்டத்திற்கு பின்னால் ஒளிந்திருக்கும் சொல்லப்படாத உண்மைகளை பார்ப்பதற்கு முன்னால், பரிணாம கோட்பாட்டை நம்புபவர்கள் பின்வரும் கேள்விகளைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்?

a) உங்கள் முன் ஒரு கறுப்பின சகோதரர் வந்து நின்றால், நீங்கள் அவரை உங்களை விட ஒரு படி கீழே என்று நினைப்பீர்களா? 
b) அல்லது, நீங்கள் ஒரு ஐரோப்பிய சகோதரர் முன் சென்று நின்றால், அவர் உங்களை விட ஒரு படி மேலே என்று நினைப்பீர்களா? 

உலக மக்கள் அனைவரும் சமமல்லவா, இது என்ன கேள்வி? என்று நீங்கள் நினைத்தால், அதற்கு நான் பொறுப்பல்ல. டார்வினும், அவரால் பிரபலமான கோட்பாடும் தான் பொறுப்பு. 

அப்படியென்றால் டார்வின் ஒரு இன வெறியரா? என்று நீங்கள் கேட்டால், இல்லை என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. என்னுடைய தனிப்பட்ட கருத்து என்று ஏன் சொல்கிறேனென்றால், பலர் அவரை இனவெறியர் என்று முத்திரை குத்துவதால் தான். 

என்னைப் பொறுத்தவரை அவர் ஒரு மனிதாபிமானமிக்க மனிதர். ஐரோப்பிய வெள்ளையர் என்ற தன் இனத்தின் மீது பற்றுக் கொண்டிருந்தார். ஆனால் அதே சமயம், அடிமைகளாய் நடத்தப்பட்டவர்களை பார்த்து வேதனைப்பட்டிருக்கிறார், அவர்களுக்கு உதவ வேண்டும் என்று நினைத்திருக்கிறார், அவர்களை அப்படி நடத்துவது சரியல்ல என்று சொல்லியிருக்கிறார். 

ஆக, தன்னுடைய இனம் தான் சிறந்தது என்ற எண்ணம் உடையவராக இருந்திருந்தாலும், அதற்காக மற்ற இனத்தவரை அடிமைப்படுத்துவது சரியல்ல என்று நினைத்தவர். 

ஆனால் துரதிஷ்டவசமாக, அவர் முன்வைத்த கருத்துக்கள் இனவெறிக்கு தூண்டுதலாய் அமைந்து விட்டது. 

குரங்கினத்திற்கும், ஐரோப்பியர்களுக்கும் இடையே கறுப்பினத்தவர்களையும், ஆஸ்திரேலிய பழங்குடியினரையும் வைத்த அவரது செயல்,
  • ஒருவர் மற்றொருவரை விட சிறந்தவர், 
  • பரிணாம முறைப்படி ஐரோப்பியர்களே கடைசியாய் வந்தவர்கள், 
  • அதனால் அவர்களே மேம்பட்டவர்கள் 
என்பது போன்ற எண்ணங்களை உண்டாக்கிவிட்டது.

இன்ஷா அல்லாஹ், இந்த பதிவில், டார்வின் முன்வைத்த கோட்பாட்டின் மற்றொரு பக்கத்தைதான் (The Other Side of "Evolution Theory") பார்க்கப்போகிறோம்.  

டார்வின் இன வெறியரா ?

என்னைப் பொறுத்தவரை, இல்லை. அவருடைய கோட்பாட்டின் படி, அவர் தன்னுடைய இனம் தான் மேம்பட்டது என்று நம்பினார். அதே சமயம், தனக்கு கீழுள்ள இனத்தவர் கஷ்டப்படுவதை பார்த்து வருந்தியவர்.

உதாரணத்துக்கு, 1830-களில், அவருடைய கடற்பயணத்தின் போது, கப்பலில் அடிமைகள் நடத்தப்படும்விதம் குறித்து அந்த கப்பலின் (H.M.S Beagle) கேப்டனான Fitz Roy-யுடன் சண்டை போட்டிருக்கிறார் அவர்.

இது குறித்து அவர் எழுதும் போது:
"Those who look tenderly at the slave-owner, and with a cold heart at the slave, never seem to put themselves into the position of the latter;—what a cheerless prospect, with not even a hope of change! picture to yourself the chance, ever hanging over you, of your wife and your little children—those objects which nature urges even the slave to call his own—being torn from you and sold like beasts to the first bidder! And these deeds are done and palliated by men, who profess to love their neighbours as themselves, who believe in God, and pray that his Will be done on earth! It makes one’s blood boil, yet heart tremble, to think that we Englishmen and our American descendants, with their boastful cry of liberty, have been and are so guilty: but it is a consolation to reflect, that we at least have made a greater sacrifice, than ever made by any nation, to expiate our sin" --- Charles Darwin wrote in 1845 journal, "Journal of researches into the natural history and geology of the countries visited during the voyage of H.M.S. Beagle round the world, under the Command of Capt. Fitz Roy", p. 499-500.
ஆக, என்னதான் அந்த அடிமைகளை தாழ்ந்தவர்களாக அவர் நினைத்தாலும், அவர்கள் மோசமாக நடத்தப்படுவதைப் பார்த்து இரத்தம் கொதிப்பதாக எழுதியிருக்கிறார். இது அவரது மனிதாபிமானத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு.

அவரது கோட்பாடு இனவெறிக்கு வித்திட்டதா? 

ஆம். உண்மைதான். 

நிச்சயமாக அவர் இனவெறியை ஊக்கப்படுத்தவில்லை, ஆனால் அவர் முன்வைத்த கொள்கை இன வெறிக்கு காரணமாய் இருந்தது/இருக்கிறது (Darwin himself didn’t promote racism, But surely his theory of evolution did).

முதலில் மற்ற இனத்தவரை டார்வின் எப்படி அணுகினார் என்று பார்ப்போம். 

தன்னுடைய புத்தகத்தில் இப்படி எழுதுகிறார் அவர்.
"At some future period not very distant as measured by centuries, the civilised races of man will almost certainly exterminate and replace the savage races throughout the world. At the same time the anthropomorphous apes…will no doubt be exterminated. The break between man and his nearest Allies will then be wider, for it will intervene between man in a more civilised state, as we may hope, even than the Caucasian, and some ape as low as the baboon, instead of as now between the Negro or Australian and the gorilla" --- Charles Darwin in his book "The Descent of Man", p-201 

மேலே உள்ள பத்தியின் ஆரம்பத்தில் அவர் ,
"நிச்சயமாக, எதிர்காலத்தில் நாகரிகமுள்ள மனித இனங்கள், நாகரிகமற்ற  (காட்டுமிராண்டித்தனமான) மனித இனங்களை முற்றிலும் அழித்து விடும்" 
என்று கூறுகிறார். 

அவர் யாரை காட்டுமிராண்டிகள் என்று சொன்னாரோ, அவர்கள் இன்றளவும் இருக்கிறார்கள். அவர்கள் அழிந்துவிடவில்லை, அவர்களுடைய அறியாமை தான் அழிந்துவிட்டது. இன்று அவர்கள் ஐரோப்பியர்களுக்கு எந்தவிதத்திலும் குறைந்தவர்களில்லை.

அதே பத்தியின் கடைசியில் அவர், கறுப்பினத்தவரையும் ஆஸ்திரேலிய பழங்குடியினத்தவரையும், மனித குரங்கிற்கும் மனிதனுக்கும் இடையில் வைத்திருக்கிறார். அவரைப் பொறுத்தவரை இவர்கள் "Less Evolved" மக்கள். நிச்சயமாக அவரது நம்பிக்கையின் படி, மனிதன், மனிதகுரங்கிலிருந்து படிப்படியாக ஒவ்வொரு இனமாக மாறி, பின்னர் கடைசியாக ஐரோப்பிய இனமாக மாறினான்.

ஆக, இயல்பாகவே, ஒரு இனத்தவர் மற்றொரு இனத்தவருடன் ஒப்பிடும் போது தாழ்ந்தவர் அல்லது உயர்ந்தவர். அவர்களில் எல்லாம் உயர்ந்தவர்கள் ஐரோப்பிய வெள்ளையர்கள்.

இங்கு தான் நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டும். ஐரோப்பியர்களுக்கு பல காலங்களுக்கு முன்னரே எகிப்தியர்கள், இந்தியர்கள், அரேபியர்கள் (பார்க்க நாமென்ன செய்தோம் இவ்வுலகிற்கு?) மற்றும் சீனர்கள் அறிவியலில் சிறந்து விளங்கியிருக்கிறார்கள். இவர்கள் ஐரோப்பியர்களுக்கு எந்த விதத்திலும் தாழ்ந்தவர்களில்லை. இன்றும் எந்த இனத்தவரும் மற்ற இனத்தவருக்கு சளைத்தவர்களில்லை.

அப்படியிருக்க, மனிதன் பரிணாம முறைப்படி ஒரு இனத்திலிருந்து மற்றொரு இனமாக மாறி மாறி தற்போதைய ஐரோப்பிய இனமாக மாறினான் என்றால், ஒரு இனம் மற்றொரு இனத்தை விட சிறந்ததாகத்தான் இருக்க வேண்டும். அதைத்தானே டார்வினும் கீழ்க்காணும் பத்தியில் கூறுகின்றார்.
"Their mental characteristics are likewise very distinct; chiefly as it would appear in their emotional, but partly in their intellectual faculties" --- Charles Darwin in his Book, Descent of Man, Chapter Seven: On the Races of Man, p.343
இப்போது நம்முடைய கேள்வியெல்லாம், இன்றைய உலகை வைத்து யாரையும் சிறந்தவர்கள் என்று கூற முடியாதே?, அதுபோல டார்வினுடைய கருத்துப்படி "less Evolved" இனத்தவர் அழிந்து விட வில்லையே. இனி அழிவார்களா என்பதும் நிச்சயமில்லையே? 

டார்வினுடைய கோட்பாடு நிச்சயமாக புரியாதப் புதிர் தான்...      
  
டார்வினுடைய, "தாழ்ந்த இனங்கள் சீக்கிரமே அழிந்துவிடும்" என்ற கருத்தை தான் செயல்படுத்த நினைத்தாரோ ஹிட்லர்? 

எது எப்படியோ, ஹிட்லர் தன்னுடைய வெறியாட்டத்திற்கு துணையாகக் கொண்டது இந்த கோட்பாட்டை தான், அதன் "Struggle for Survival" என்ற கருத்தை தான்.

ஹிட்லருடைய புத்தகத்தில் (Mein Kampf) அவர் பலமுறை "EVOLUTION" (ஜெர்மனியில் "Entwicklung") என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார். நாசி படைகள் தயாரித்த வீடியோக்களிலும், ஹிட்லருடைய பேச்சிலும் "Survival of the Fittest" என்ற கருத்து அடிக்கடி இடம்பெறும்.

"Those who want to live, let them fight, and those who do not want to fight in this world of eternal struggle do not deserve to live" --- Adolf Hitler, at his third public speech after taking power.
வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் சண்டையிடட்டும். சண்டையிட விருப்பமில்லாதவர்கள் இந்த உலகில் வாழ தகுதியற்றவர்கள் --- (Extract of the Speech of) Adolf Hitler, at his third public speech after taking power  

இயற்கை தங்களை உயர் இனத்தவராக ஆக்கியதாக நம்பியவர் அவர். இதையே தான் டார்வினும் சொன்னார். 

உதாரணத்துக்கு, ஹிட்லருடைய புத்தகத்தில் இருந்து:  
"If Nature does not wish that weaker individuals should mate with the stronger, she wishes even less that a superior race should intermingle with an inferior one; because in such a case all her efforts, throughout hundreds of thousands of years, to establish an evolutionary higher stage of being, may thus be rendered futile" ---Adolf Hitler, Extracted from Mein Kampf, volume 1, chapter 11, Race and People.
இயற்கை, நிச்சயமாக உயர்ந்த இனம் தாழ்ந்த இனத்தோடு சேருவதை விரும்புவதில்லை. அப்படி நடக்குமானால், இயற்கையினுடைய ஆயிரமாயிரம் ஆண்டு கால உழைப்பு வீணாகி விடும் --- (Extract from the original quote of) Adolf Hitler, Extracted from Mein Kampf, volume 1, chapter 11, Race and People.     
ஒரு இனம் மற்றொரு இனத்தை விட உயர்ந்தது என்றால் தன்னுடைய செயலில் என்ன தவறு  இருக்கிறதென்று கேட்டவர். தன்னுடைய உயர்ந்த குல இரத்தம் தனக்கு முன் வந்த இனத்துடைய இரத்தத்துடன் கலக்கக்கூடாது என்று வாதிட்டவர். தன்னுடைய உயர்ந்த (SUPERIOR) இனம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறியவர்.  

இதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை, டார்வினே இப்படி சொன்னவர் தானே, அதாவது Favoured Races பாதுகாக்கப்பட வேண்டும் என்று சொன்னவர் அவர். அவருடைய "Origin of Species" புத்தகம் முதலில் வெளியான போது (1859) அதனுடைய முழு தலைப்பு, " The Origin of Species by Means of Natural Selection—or The Preservation of Favoured Races in the Struggle for Life"


பின்னர் சில காலங்களுக்கு பிறகு இந்த தலைப்பு சுருக்கப்பட்டது. 

ஆக, சுமார் 60 லட்சம் மக்கள் கொல்லப்படுவதற்கு ஹிட்லர் காரணமென்றால், அவர் தன்னுடைய செயலை நியாயப்படுத்துவதற்கு அறிவியல் ரீதியான காரணமாய் கொண்டது பரிணாமவியலைத் தான்.
The leader of Germany is an evolutionist not only in theory, but, as millions know to their cost, in the rigor of its practice. For him, the 'national front' of Europe is also the 'evolutionary front” --- Sir Arthur Keith in his book "Evolution and Ethics", 1947, p.230. 
"ஜெர்மனியின் தலைவர் பரிணாமவியலை ஆதரித்தவர். அதனை ஆதரித்தது மட்டுமல்லாமல் அதனை செயல்படுத்துவதில் தீவிரமாய் இருந்தவர், இதற்கு இறந்து போன லட்சக்கணக்கான மக்களே சாட்சி" --- (Extract from the original quote of) Sir Arthur Keith in his book "Evolution and Ethics", 1947, p.230.    

பரிணாமவியலை, அறிவியல் காரணமாகக் (Scientific Racism) கொண்டு தங்களுடைய இனவெறியை நியாயப்படுத்தியவர்கள் பலர். இன்றும் அதை செய்துக் கொண்டிருக்கின்றனர். இன்றளவும் கறுப்பினத்தவர்களை குரங்குகளாக சித்தரிக்கும் செயல் சில இன வெறியர்களிடமிருந்து போகவில்லை.

இதையெல்லாம் விடுங்கள், இப்போது நான் பரிணாமத்தை நம்புபவர்களை கேட்க விரும்புவதெல்லாம்,

  • ஒரு மனித இனம், மற்றொரு மனித இனத்தை விட மேம்பட்டது என்ற பரிணாமவியலின் வாதத்தையும் நம்புகிறீர்களா? 
  • ஒரு ஐரோப்பியர் வந்து, "நான் உன்னை விட உயர்ந்தவன்" என்று சொன்னால், "ஆமாம், நீ சொல்லுவது சரிதான்" என்று ஆமோதிப்பீர்களா?  

இது என்ன கேள்வி, பரிணாமவியலை நம்புபவர்கள் இதையும் நம்பித்தானே ஆக வேண்டும்?

அப்படியானால், இனிமேலும் தயவுக்கூர்ந்து "உலகில் உள்ள அனைத்து மக்களும் சமம்" என்று சொல்லாதீர்கள். அப்படி நீங்கள் சொன்னால் அது உங்கள் கொள்கைக்கு நீங்கள் செய்கிற துரோகம்...

நமது நாட்டில், கடவுளின் வெவ்வேறு உடற்பகுதிகளில் இருந்து வெவ்வேறு பிரிவினர் வந்ததாக சொன்னபோது, "இல்லை மக்கள் அனைவரும் சமம்" என்று அதை எதிர்த்த/எதிர்க்கும் பரிணாமவியலை ஆதரிக்கும் சிலர், அவர்களது நம்பிக்கையும் "மனிதர்களெல்லாம் சமமல்ல" என்று கூறுவதை ஏன் மறந்தார்கள்?

என்ன, அவர்கள் கடவுளை காரணமாக காட்டுகிறார்கள், இவர்கள் இயற்கையை காரணமாக காட்டுகிறார்கள். அவர்களுக்கு கடவுள் என்றால் இவர்களுக்கு இயற்கை தான் கடவுள்...

"மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு பின்னர், உங்களை கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; உங்களில் எவர் மிகவும் பய பக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், தெரிந்தவன்" --- குரான் 49:13

நாத்திகர்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள், உங்கள் email id யைத் தாருங்கள். அல்லது என்னுடைய email id க்கு (aashiq.ahamed.14@gmail.com) ஒரு மெயில் அனுப்புங்கள். நான் குரான் soft copy அனுப்புகிறேன். அதை நீங்கள் இறைவனின் வார்த்தைகள் என்றெண்ணி படிக்க வேண்டாம். யாரோ ஒருவர் எழுதியதென்று நினைத்து ஒரு நாவலைப்போல படியுங்கள். திறந்த மனதுடன் படியுங்கள். தயவு கூர்ந்து இந்த முதல் அடியை எடுத்து வையுங்கள். இறைவன் நாடினால், நிச்சயமாக உங்களுக்குள் ஒரு மாற்றத்தை அது தரும். சொல்ல வேண்டியது ஒரு சகோதரன் என்ற முறையில் என் கடமை, ஏற்றுக்கொள்வதும் புறக்கணிப்பதும் உங்கள் இஷ்டம்.

இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் நிலைக்கச் செய்வானாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

My Sincere Thanks To:
1. British Broadcasting Corporation (BBC)
2. New Scientist Website.

References:
1. The Origin of Species by Means of Natural Selection or The Preservation of Favoured Races in the Struggle for Life  --- Charles Darwin, 1859.
2. The Descent of Man --- Charles Darwin, 1971.
3. Journal of researches into the natural history and geology of the countries visited during the voyage of H.M.S. Beagle round the world, under the Command of Capt. Fitz Roy ---  Charles Darwin, 1845.
4. Was Charles Darwin a Racist? --- BBC, dated 13th February 2009.
5. Hatred of slavery drove Darwin to emancipate all life --- New Scientist, dated 29th January 2009.
6. Race and People, Extracted from Mein Kampf, volume 1, chapter 11 --- Adolf Hitler
7. Scientific Racism - Wikipedia.
8. Evolution and Ethics --- Sir Arthur Keith, 1947.


உங்கள் சகோதரன், 
ஆஷிக் அஹ்மத் அ







29 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்,
    அன்பு சகோதரர் ஆஷிக்,
    மீண்டும் ஒரு சாட்டையடிப் பதிவு. பரிணாமவியலை வேறொரு கோணத்தில் ஆரய்ந்திருக்கிண்றீர்கள். அல்ஹம்துலில்லாஹ். டார்வினின் பரிணாமவியலைப் பற்றி பிடித்துக் கொண்டிருக்கும் நாத்திகர்களும் கம்யூனிஸ்ட்டுகளும் நீங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும். தமிழ் ஹிந்து தளத்திற்கு வேண்டுமானால் டார்வினின் இன வெறிக் கொள்கை ஏற்புடையதாக இருக்கும். எனவே அவர்கள் பரிணாமவியலை ஆதரிப்பதில் வியப்பேதுமில்லை. ஆனால் நம்மூர் நாத்திகர்களும் கம்யூனிஸ்ட்டுகளும் டார்வினின் இந்த பரிணாமத்தை எவ்வாறு ஏற்றுக் கொள்ள போகின்றனர்? வினவு இணையதளம் தனக்குள்ளாக வினவிக் கொள்ள வேண்டிய கேள்வியை நீங்கள் எழுப்பியிருக்கின்றீர்கள். ஏனெனில் சமீப காலமாக டார்வினிசத்திற்கு இணையத்தில் முட்டுக் கொடுப்பவர்கள் வினவு இணையதளத்தினர்களும் & தமிழ்ஹிந்து தளத்தினர்களும். பதில் வருமா அவர்களிடத்திலிருந்து. ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  2. அன்பு சகோதரர் குலவுசனப்பிரியன் அவர்களுக்கு,

    அஸ்ஸலாமு அலைக்கும்

    தங்களுடைய மறுமொழி, சில தொழில்நுட்ப காரணங்களுக்காக அழிக்கப்பட்டது. சிரமத்திற்கு மன்னிக்கவும்...உங்களுடைய மறுமொழி என்னுடைய பெயரில் மறுபடியும் பிரசுரிக்கப் படுகிறது...

    நன்றி...

    ஆஷிக் அஹ்மத் அ..

    -----------------------------------------------------
    குலவுசனப்பிரியன் has left a new comment on your post "பரிணாமவியலை நம்புபவர்கள் இதையும் நம்புவார்களா?":

    பதிவிற்கு பதில் சொல்லும் முன், முதலில் கருப்பு இனத்தவரை இழித்து கூற சொல்லப்படும் சொல்லை தயவுசெய்து நீக்குங்கள்.

    ----------------------------------------------------------------

    ReplyDelete
  3. அன்பு சகோதரர் குலவுசனப்பிரியன் அவர்களுக்கு,

    அஸ்ஸலாமு அலைக்கும்

    //முதலில் கருப்பு இனத்தவரை இழித்து கூற சொல்லப்படும் சொல்லை//

    அது "foul Language" என்று நீங்கள் சுட்டி காட்டி உள்ளதால், அது நீக்கப்பட்டு விட்டது.

    அறிந்தே அந்த வார்த்தையை நான் பயன்படுத்த வில்லை...

    தங்களுடைய சமூக அக்கறைக்கு மிக்க நன்றி.

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  4. மதவாதிகள் கையில் வைத்திருக்கும் ரெடிமேட் கேள்விகளுள், ஒரு கேள்விக்கு இந்த பதிவில் நீங்களே பதில் சொல்லிவிட்டீர்கள். வாழ்த்துகள்.

    நாளை இந்தப் பதிவு குறித்தும், முந்தைய பதிவு குறித்தும் விரிவாக விவாதிப்போம். இரண்டு நாட்களாக அலுவலகம் வராததால், வேலை சற்று அதிகமாக இருக்கின்றது.

    ReplyDelete
  5. அன்பு சகோதரர் கும்மி அவர்களுக்கு,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    1. //மதவாதிகள் கையில் வைத்திருக்கும் ரெடிமேட் கேள்விகளுள்//

    நீங்கள் அடுத்த முறை வரும் போது, முடிந்தால், மதவாதி என்றால் என்ன, அவர்களுடைய நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்பது போன்ற செய்திகளையும் கொண்டு வாருங்கள். நீங்களாக ஒரு விளக்கம் கொடுக்காமல் அது எந்த தமிழ் அகராதியிலிருந்து எடுத்தது என்றும் கூறுங்கள். அறிந்து கொள்ள ஆர்வமாய் இருக்கிறேன்.

    கடவுள் இல்லை என்பதற்கு எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் இல்லாத போது, அதை சுட்டி காண்பித்தும், தான் நாத்திகன் என்ற பிம்பத்தில் இருந்து வெளியே வராமல் வறட்டு கவுரவத்துடன் இருக்கிறார்களே, அவர்களுக்கு பெயர் என்ன? நான் ஒன்றும் அவர்களை ஆன்மிகவாதியாக மாற சொல்லவில்லை. டார்வின் போல AGNOSTIC ஆக இருக்கலாமே.

    எது எப்படியோ, முடிந்தால் விளக்கம் கொடுங்கள், அறிந்து கொள்ள ஆர்வமாய் இருக்கிறேன்.


    2. //ஒரு கேள்விக்கு இந்த பதிவில் நீங்களே பதில் சொல்லிவிட்டீர்கள். வாழ்த்துகள்//

    எந்த கேள்வி என்று சொல்லவில்லையே...பதில் சொல்லியதாக நீங்கள் நினைத்தால், நன்றி.


    3. //நாளை இந்தப் பதிவு குறித்தும், முந்தைய பதிவு குறித்தும் விரிவாக விவாதிப்போம்//

    இன்ஷா அல்லாஹ், வாருங்கள். இறைவன், உங்களுக்கு பதிலளிக்கும் அளவு கல்வி ஞானத்தை எனக்கு கொடுத்தால் உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க முயற்சி செய்கிறேன்.


    நன்றி...

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  6. நல்ல பதிவு நண்பரே...

    நான் ஒரு நாத்திகன். இயற்கையை கடவுளாக எண்ணுபவன்.

    வால்பையனின் இந்த பதிவைப் பாருங்கள்: http://valpaiyan.blogspot.com/2010/04/blog-post_28.html

    //ஒரு ஐரோப்பியர் வந்து, "நான் உன்னை விட உயர்ந்தவன்" என்று சொன்னால், "ஆமாம், நீ சொல்லுவது சரிதான்" என்று ஆமோதிப்பீர்களா?//

    மாட்டேன்.. அவர் இந்தியாவில் வந்து கூறினால் ஒத்துக்கொள்ள மாட்டேன். ஏனெனில், பரிணாமத்தின்படி வெள்ளையர் ஐரோப்பாவிற்கு இசைவாக்கம் அடைந்தவர்கள். இந்தியர்கள் இந்தியாவிற்கு இசைவாக்கம் அடைந்தவர்கள். நீக்ரோக்கள் ஆபிரிக்காவிற்கு இசைவாக்கம் அடைந்தவர்கள்.

    வெள்ளையர்களின் தோல் அதிக சூரிய ஒளியை தாக்குப்பிடிக்காது.. நமது தோலும் நீக்ரோ நண்பர்களின் தோலும் வெய்யிலை தாக்குப்பிடிக்கும். அதேபோல் நீக்ரோக்கள் உழைப்பால் சிறந்தவர்கள். பண்டைய காலத்திலிருந்தே அடிமைப்படுத்தப்பட்டு வந்ததால் அவர்களின் உடற்றிறன் அதிகரித்தது. அவர்களின் சுற்றுப்புறத்தில் மிக ஆபத்தான விலங்குகளோடு ஒன்றி வாழ்ந்ததால் இயற்கையை உணரும் அறிவும் அதிகரித்தது. வெள்ளையர்களின் நாடுகளில் இயற்கையுடன் ஒன்றவேண்டிய தேவைகள் இல்லாததனாலும், அவர்கள் தொடர்ந்து வியாபாரத்தில் ஈடுபட்டதனாலும் மற்ற இனத்தவரை வேலைவாங்கப் பழகியதாலும் அவர்களுக்கு வேலைகள் குறைந்ததுடன் கிடைத்த ஒய்வு நேரத்தினை தமக்கு நடைமுறையில் தேவையற்ற அறிவியல் பற்றி அவர்கள் சிந்தித்தனர். கண்டுபிடித்தனர்.... அராபியர்கள் பாலைவனத்தை அண்டிய சூழலில் வாழ்ந்ததால் அவர்களுக்கு சூட்டைத் தாங்கும் உடலும் பாலைவனம் பற்றிய அறிவும் மிகுந்தது... வியாபாரத்துக்காக வெள்ளையர்களால் தாண்ட முடியாத பாலைவனங்களை தாண்டும் திறனுடன், பாலைவனத்தை அறிந்த விலங்குகளை அடிமைப்படுத்த தெரிந்திருந்ததனாலும் அவர்கள் வியாபாரத்தில் இடைத்தரகர்களாக செயற்பட்டனர். பல நாடுகளுக்கும் பயணித்தனர்... அவர்களுக்கு நடைமுறைச் சாத்திய அறிவு மிகுந்தது... ஒய்வு நேரத்தில் தமக்கு நடைமுறையில் தேவையற்ற அறிவியல் பற்றி அவர்கள் சிந்தித்தனர். கண்டுபிடித்தனர்.... இந்தியர்கள் இந்திய தட்பவெப்பநிலைக்கு பழக்கப்பட்டவர்கள். அவர்கள் உழைக்கக்கூடியவர்கள்... வட இந்தியர்கள் (பார்ப்பனர்கள்) குளிருக்கு பழக்கப்பட்டு தோல் வெளிறியவர்கள்.. தமது வேலைகளை தென்னிந்தியரைக் கொண்டு செய்வித்தனர். இதனால் கிடைத்த ஒய்வு நேரத்தில் தமக்கு நடைமுறையில் தேவையற்ற அறிவியல் பற்றி அவர்கள் சிந்தித்தனர். கண்டுபிடித்தனர்....

    எனவே... ஒவ்வொரு நாட்டினரும் அந்தந்த சூழ்நிலையில் சிறந்தவர்கள்.. இயற்கை அறிவும் சூடு தாண்டும் உடலும் இல்லாத வெள்ளை நண்பர்கள் ஆயுதங்களும் சன்-க்ரீமும் தொழில்நுட்பமும் இன்றி ஆபிரிக்காவில் வாழமாட்டார்கள்.. ஆபிரிக்கர்கள் அமெரிக்க சுற்றுப்புற அறிவு இன்றி அமெரிக்காவில் வாழமுடியாது... இதுதான் பரிணாமம்... “அந்தந்த சூழ்நிலையில் வாழும் உயிர் அந்தச் சூழ்நிலைக்கு இசைவாக்கம் பெற்றிருக்கும் அல்லது அழிந்துபோகும்” என்பதே பரிணாமத்தின் சாராம்சம்...

    பரிணாமக் கொள்கை ஆதரவாளர்களாகிய நாம் முன்வைக்கும் கருத்து யாதெனில் “டார்வீன் பரிணாமத்தின் ஆரம்பம் மட்டுமே, அவரது காலத்தில் இவளவு நுண்ணிய விஞ்ஞானம் வளரவில்லை, ஆனால் இப்போதும் டார்வினை வைத்தே விவாதத்தை கொண்டு செல்வது சிறுபிள்ளை தனமான விவாதம்”- வால்பையன்.

    நன்றி...

    ReplyDelete
  7. //வெள்ளையர்களின் தோல் அதிக சூரிய ஒளியை தாக்குப்பிடிக்காது.. நமது தோலும் நீக்ரோ நண்பர்களின் தோலும் வெய்யிலை தாக்குப்பிடிக்கும்//
    நமது தோலும் நீக்ரோ நண்பர்களின் தோலும், வெய்யிலைப் போலவே குளிரையும் வெள்ளைத் தோலை விட அதிகம் தாக்குப் பிடிக்கும். எனவே வெள்ளையர்களை விடவும் கருப்பர்கள்தான் சிறந்தவர்களாவார்கள். டார்வினின் பரிணாமம் தோற்கிறதா?

    ReplyDelete
  8. அருமையான பதிவு. பரிணாமவியல் என்பதை அறியலின் நிரூபிக்கப் படாத ஒரு கொள்கையாக காணாமல், நிரூபிக்கப்பட்ட ஒன்றாய் இவர்களாக நிறுவிக் கொண்டு. அதை அடிப்படையாக வைத்து இறைக் கோட்பாடுகளை எதிக்கின்றனர். பாவம்.

    ReplyDelete
  9. பரிணாமம் பொய் என்றால் ஆதாம் ஏவாள் இருவரில் இருந்து படைக்கப்பட்டதாக நீங்கள் சொல்லும் மக்கள் எப்படி பல்வேறு நிறங்களுடன், முக அமைப்புகளுடன் இனக்குழுக்களாக ஆகிப் போனார்கள் ?

    ReplyDelete
  10. பரிணாம வளர்ச்சியின் மூல காரணம் மரபணுமாற்றம், மனிதன் உணவுக்காக இடம்பெயர்ந்த போது கண்டங்கள் பிரிய தொடங்கியது, ஆபிரிக்காவில் தங்கியவர்கள் பரம்பரை பரம்பரையாக ஒரே ஜீன்களை பரிமாறி கொள்வதால் உடல் தோற்றத்தில் மாற்றம் ஏற்படவில்லை, அவர்கள் உடலில் மெலனின் தங்கி விட்டது! குளிர் பிரதேங்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள், மெலினின் இழந்தார்கள், சீனா போன்ற நாடுகளில் பனியுகத்தில் வாழ்ந்ததால் தான் புருவமேட்டு கண் பாதுகாப்பு குறைந்தது, அது வியர்வையிலிருந்து கண்னை பாதுகாக்கும் வேலையை செய்கிறது, இன்றும் கறுப்பினத்தவரும், ஐரோய்யியரும் இணைந்து புது வகை மரபணுவை உருவாக்கி கொண்டிருப்பதை பார்க்கலாம்! உயிரினத்தில் தாழ்ந்தது, உயர்ந்தது பார்த்தல் மடத்தனம்!

    டார்வின் ஆரம்பம் தான், அதை தாண்டி பரிணாமம் பல மடங்கு பயனித்து விட்டது!

    ReplyDelete
  11. வால்பையனுக்கு இவ்வளவு சீரியஸாகவும் எழுத தெரியுமா? இதுவரை நான் படித்த இவரது பின்னூட்டத்தில் இப்படி எங்கேயும் எழுதியதில்லை. விதண்டாவாதத்திலிருந்து வெளியே வந்து கண்ணியமாகவும் மரியாதையாகவும் எழுதியதற்கு நன்றி. நக்கலும் நையாண்டியும் வாதத்தை நீர்த்து போகவே செய்யும் எனவே அதை விட்டு விடுங்களேன்.

    ReplyDelete
  12. அன்பு சகோதரர் வால்பையன் அவர்களுக்கு,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    தங்கள் மீதும் தங்களின் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்..

    1. //டார்வீன் பரிணாமத்தின் ஆரம்பம் மட்டுமே, அவரது காலத்தில் இவளவு நுண்ணிய விஞ்ஞானம் வளரவில்லை, ஆனால் இப்போதும் டார்வினை வைத்தே விவாதத்தை கொண்டு செல்வது சிறுபிள்ளை தனமான விவாதம்//

    நீங்கள் சொன்ன இந்த வாசகங்களை அப்படியே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ரிச்சர்ட் டாகின்ஸ் அவர்களுக்கு அனுப்பி (contact@richarddawkins.net) அவருடைய கருத்தை கேளுங்கள். முடிந்தால் அவருடைய தளத்தில் (www.richarddawkins.net) மறுமொழியாக இடுங்கள். அப்புறம் தெரியும்.

    தங்களுடைய கருத்தில் அடிப்படையான பிரச்சனைகள் இருக்கின்றன. டார்வின் முன் வைத்த அடிப்படை தான் (Natural Selection) இன்றளவும் பின்பற்றப்படுகிறது.

    ஒரு உயிரினம் மற்றொன்றாக மாறுவதில் இயற்கைக்கு பங்கில்லை என்று நிரூபிக்கப்பட்டால், பரிணாமவியல் ( I mean Macro-Evolution) தோற்றுவிடும். இன்று வரை, அப்படி எந்த ஒரு ஆதாரமும் சிக்க வில்லை. ஆக, இன்று வரை பரிணாமவியல் தோற்று விட்டது. எதிர்காலத்தில் எப்படியோ இறைவனே அறிவான். அந்த நம்பிக்கையில் தான் பரிணாமவியலை ஆதரிப்பவர்கள் இருக்கிறார்கள்.

    ஆக, டார்வினை கொண்டு தான் விவாதத்தை கொண்டு செல்ல முடியும். உங்களுடைய கருத்து தவறானது.

    ஆம், டார்வினுக்கு, உயிர் வாழும் ஒரு செல் இந்த அளவு சிக்கலானது என்று தெரியாது. அவருடைய கால விஞ்ஞானம் அப்படி. ஒரு வேலை, அது பற்றி தெரிந்திருந்தால் அவர் அவரது கோட்பாட்டை முன்வைத்திருப்பாரா என்பது சந்தேகம்தான்.

    இன்ஷா அல்லாஹ், தொடரும்...

    ReplyDelete
  13. //நீங்கள் சொன்ன இந்த வாசகங்களை அப்படியே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ரிச்சர்ட் டாகின்ஸ் அவர்களுக்கு அனுப்பி (contact@richarddawkins.net) அவருடைய கருத்தை கேளுங்கள். முடிந்தால் அவருடைய தளத்தில் (www.richarddawkins.net) மறுமொழியாக இடுங்கள். அப்புறம் தெரியும்.//



    பெரியாரிஷ்டுகளுக்கு பெரியார் போல், டாக்கின்ஷுக்கு டார்வின் போல!
    என் கருத்தில் மாற்றம் இல்லை, டார்வின் காலத்தில் இவ்வளவு நுண்ணிய அறியியல் இல்லை, தற்பொழுது பல மடங்கு அதிகரித்து விட்டது, மொழிபெயர்த்து கொடுங்கள், போட்டு விடுகிறேன், மறக்காமல் டார்வின் ஆரம்பம் என்பதை குறிப்பிட்டு விடுங்கள்!


    //தங்களுடைய கருத்தில் அடிப்படையான பிரச்சனைகள் இருக்கின்றன. டார்வின் முன் வைத்த அடிப்படை தான் (Natural Selection) இன்றளவும் பின்பற்றப்படுகிறது. //


    டார்வின் ஒன்றும் என் குருவோ, தலைவனோ அல்ல, அவரால் விளக்கமுடியாதவைகளை என்னால் விளக்க முயற்சிக்கிறேன், அவரது ரூட்டில் நான் பயணிக்கவில்லை!


    //ஒரு உயிரினம் மற்றொன்றாக மாறுவதில் இயற்கைக்கு பங்கில்லை என்று நிரூபிக்கப்பட்டால், பரிணாமவியல் ( I mean Macro-Evolution) தோற்றுவிடும்.//


    காக்கா, மைனாவாக மாறும்னு யார் சொன்னா, நீங்கள் நினைப்பது போல் சொடுக்கிடும் நேரத்தில் ஏற்பட்வதல்ல பரிணாம மாற்றம், உருவ தோற்றங்கள் மரபணு மாற்றத்தால் மாறவே பல ஆயிரம் வருடங்கள் தேவைப்படும்!, இவனோ சொன்னதை கட்டிக்கிட்டு அழமால் நீங்களே உலகை சுற்றி பாருங்கள்!


    //இன்று வரை, அப்படி எந்த ஒரு ஆதாரமும் சிக்க வில்லை. ஆக, இன்று வரை பரிணாமவியல் தோற்று விட்டது. //

    மனிதர்களின் உருவ அமைப்பு மாற காரணம் என்ன என்பதை என்னால் விளக்க முடியும், உங்களால் நம்பத்தான் முடியாது ஏனென்றால் அப்படி நம்பிவிட்டால் உங்கள் மதப்படி எண்னைசட்டி காத்திருக்கும், உங்கள் பயமே உங்கள் அறிவை திறாக்காமல் வைத்திருக்கிறது, தோற்றது பரிணாமம் அல்ல, உங்கள் அறியாமை!


    //டார்வினை கொண்டு தான் விவாதத்தை கொண்டு செல்ல முடியும். உங்களுடைய கருத்து தவறானது.//


    இயேசுவை வைத்து தான் ஆபிரஹாம மதத்தை தொடர வேண்டும் என்றால் ஆமாம் அவரும் நபி தான், முகமதுவை ஏறக்கட்டுவோம் என்பீர்களா!? கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் இன்னும் ஏன் டார்வினையே கட்டி அழுகிறீர்கள்!?


    //ஆம், டார்வினுக்கு, உயிர் வாழும் ஒரு செல் இந்த அளவு சிக்கலானது என்று தெரியாது. அவருடைய கால விஞ்ஞானம் அப்படி. ஒரு வேலை, அது பற்றி தெரிந்திருந்தால் அவர் அவரது கோட்பாட்டை முன்வைத்திருப்பாரா என்பது சந்தேகம்தான். //


    இதை தானே நானும் சொல்றேன்!, டார்வீன் ஆரம்பித்த ஆராய்ச்சி மகத்தானது, ஆனால் அவரது காலத்தில் அதை அறிவியல் பூர்வமாக நிறுபிக்க போதிய வசதிகள் இல்லை, ஆதலால் அவற்றை தியரி வழியாகவே வீளக்கினார், அதிகபட்ச சாத்தியகூறுகள் உள்லதை நம்பியவர்கள் படைப்புவாத கொள்கையிலிருந்து வெளிவந்தார்கள்!, அல்லா நித்தியகன்னிகைகள் தரமாட்டார் என்று பயந்தவர்கள் டார்வீனை பைத்தியகாரன் என்றார்கள்!


    இப்போ நான் ஆரம்பித்திருக்கிறேன், என்னால் தர்க்க ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் விளக்க முடியும், என் கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்லுங்கள், டார்வின் பற்றி பிறகு கவலைப்படுவோம்!

    ReplyDelete
  14. அன்புச்சகோதரர் ஆஷிக் அஹ்மத் அ. அவர்களுக்கு,
    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.

    பல அதிரடியான கேள்விகளுடன் மிக மிக அருமையான பதிவு சகோதரா... மிகத்தெளிவாக, டாவினிசம் என்ற குப்பை மேட்டின் வேறு ஒரு இருண்ட பக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டி விட்டீர்கள். அபாரம்.

    அந்த குப்பைமேட்டை விட்டு வெளியே வந்து உருப்படியாக விவாதிப்பதற்காக நாத்திகர்களுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் அடுத்த பட்டிமன்ற தலைப்பு கொடுத்து விடலாம்....:

    "எது மனிதகுல சீரழிவுக்கு வித்திட்டது?
    ...டார்வினின் வருணாசிரமகொள்கையா
    ...பார்ப்பனரின் வருணாசிரமக்கொள்கையா?"

    @வால்பையன் said... ///இதை தானே நானும் சொல்றேன்!, டார்வீன் ஆரம்பித்த ஆராய்ச்சி மகத்தானது, ஆனால் அவரது காலத்தில் அதை அறிவியல் பூர்வமாக நிறுபிக்க போதிய வசதிகள் இல்லை, ஆதலால் அவற்றை தியரி வழியாகவே வீளக்கினார், அதிகபட்ச சாத்தியகூறுகள் உள்லதை நம்பியவர்கள் படைப்புவாத கொள்கையிலிருந்து வெளிவந்தார்கள்!///
    --- அட...! அப்போத்தான் அறிவியல் பூர்வமாக நிறுபிக்க போதிய வசதிகள் இல்லை... இப்பவுமா? உங்களைப்பொருத்தவரை இன்னும் 'தியரியாகவே' இருக்கும் எதுவும் .... 'அல்லா'- 'நித்தியகன்னிகைகள்'- 'சொர்க்கம்'- 'நரகம்' இத்யாதிகளை எப்படி ஏற்க மறுக்கிறீர்களோ அதேபோல 'நிரூபிக்கமுடியா டார்வினின் தியரி ஒரு கட்டுக்கதை கூத்து' என்று கிண்டல் பண்ண எதற்காக வாலுக்கு மனம் வரவில்லை? எதற்கு மழுப்பல்? உண்மையை ஒத்துக்கொண்டால் கவுரவம் ஒன்னும் குறைந்து விடாதே...?

    ReplyDelete
  15. அன்பு சகோதரர் வால்பையன் அவர்களுக்கு,

    அஸ்ஸலாமு அலைக்கும்...

    தங்கள் மீதும் தங்களின் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.

    தங்களின் கீழ்த்தரமான கடைசி மறுமொழியை என்னால் அனுமதிக்க முடியாது. மன்னிக்கவும். தங்களின் மேல் கோபம் வருவதை காட்டிலும் வருத்தமே மிஞ்சுகிறது.

    இறைவன் உங்களுக்கு நல் அறிவை வழங்கட்டும்...ஆமின்.

    சகோதரர் வால்பையன் அப்படி என்ன கேவலமாக எழுதி விட்டார் என்று சிலர் நினைத்தீர்கள் என்றால், எனக்கு மெயில் அனுப்பலாம். aashiq.ahamed.14@gmail.com

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  16. சரி அப்படி என்ன தான் கிடைக்கும் சுவர்க்கத்தில் பெண்களுக்கு!?

    ReplyDelete
  17. விசாரனை நடந்துகிட்டு இருக்கா?

    நான் கேட்ட கேள்விக்கு பதில் இன்னும் வரல!

    ReplyDelete
  18. see more than 400 rare photos of hitler

    http://www.spicx.com/2010/07/400-hitlers-life-story-with-rare.html

    ReplyDelete
  19. Dear brother sathish kumar,

    Assalaamu Alaikum,

    May the peace and blessings of the Almighty be upon you and your family...aamin...

    Wow, Wonderful pics...Thanks a lot brother.

    Take care,

    wassalaam,

    Your brother,
    Aashiq Ahamed A

    ReplyDelete
  20. A.H.NAJIR AHAMEDThursday, July 26, 2012

    மிக அருமையாக டார்வினின் பரிணாம கொள்கையும் ஹிட்லரின்
    கொலை வெறி ஆட்டத்தையும் மிக அழகாக ஆராயிந்து தெரியாத
    ஒரு விஷத்தை எங்களுக்கு தெரியபடிதியதற்கு அல்லாவிடம் துவா
    செய்தவனாக தொடரட்டும் உங்கள் பணி................

    ReplyDelete
  21. what a life Hitler lived. No one will ever have. what an army! what a style! what a dictator! what a commander! what a ruler! what a fighter! and what a killer so amazing. Hitler a complete package. he wiped people off the map to stand up for one thing "revolution" not to prove evolution. Darwin theory is just a prediction not proven.

    The evolution began the day when Life formed on this earth. We took many shapes in color and size over the period of time. Frankly there no one is better or superior and we are equal irrespective of color & size.

    The Quran states that "O mankind! We created you from a single (pair) of a male and a female, and made you into nations and tribes, that you may know each other (not that you may despise each other). Verily the most honored of you in the sight of God is (he who is) the most Righteous of you. And God has full knowledge and is well acquainted (with all things). In fact the quran said about evolution 1400 years ago before Darwin..

    ReplyDelete
    Replies
    1. Dear Anony,

      Assalaamu Alaikum...

      This article doesn't say Hitler tried to prove evolution. The point is, to justify the killings, Hitler needed a scientific(?) reason. Evolution theory just filled that gap.

      Also when Madison Grant wrote the popular racist book "The passing of the great race", Hitler praised it as his BIBLE.

      So these are hardcore evidences to prove what Hitler did it the light of Evolution.

      Fine, i can't agree with your other points too.

      Thanks

      Delete
  22. ""நாத்திகர்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள், உங்கள் email id யைத் தாருங்கள். அல்லது என்னுடைய email id க்கு (aashiq.ahamed.14@gmail.com) ஒரு மெயில் அனுப்புங்கள். நான் குரான் soft copy அனுப்புகிறேன். அதை நீங்கள் இறைவனின் வார்த்தைகள் என்றெண்ணி படிக்க வேண்டாம். யாரோ ஒருவர் எழுதியதென்று நினைத்து ஒரு நாவலைப்போல படியுங்கள். திறந்த மனதுடன் படியுங்கள். தயவு கூர்ந்து இந்த முதல் அடியை எடுத்து வையுங்கள். இறைவன் நாடினால், நிச்சயமாக உங்களுக்குள் ஒரு மாற்றத்தை அது தரும். சொல்ல வேண்டியது ஒரு சகோதரன் என்ற முறையில் என் கடமை, ஏற்றுக்கொள்வதும் புறக்கணிப்பதும் உங்கள் இஷ்டம்.......""
    முஸ்லீமா மதம் மாத்துறதுக்கு இப்பிடி ஒருவழி இருக்கா........சொல்லவே இல்ல....????

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் தியாகராஜன்,

      உங்கள் மீதும் குடும்பத்தார் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

      குர்ஆன் படித்தால் மதம் மாறிவிடுவார்கள் என்ற உங்களின் நம்பிக்கை மெய்சிலிர்க்க வைக்கின்றது சகோ. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

      Delete
  23. நண்பரே எனது இதயங் கனிந்த கிருத்துவ மற்றும் புது வருட நல் வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    ReplyDelete
  24. இந்தப் பதிவின் மறுப்பு நல்லூர் முழக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் காண்க.

    டார்வினையும் ஹிட்லரையும் ஈனைக்கும் மதவாதிகளின் நேர்மை(!)

    http://nallurmuzhakkam.wordpress.com/2013/04/24/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE/

    ReplyDelete
  25. மா ஷா அல்லாஹ்... நல்ல தெளிவான விளக்கம்...

    ReplyDelete
  26. அஸ்ஸலாமு அழைக்கும் வரமதுல்லாஹி வபரகாதுஹூ

    எனக்கு ஒன்றை தெளிவு படுத்துங்கள் . டார்வினின் கறுப்பின வெள்ளையின அழிவு கோட்பாட்டிற்கும் ஹிட்லரின் அவருடைய இனத்தை சாந்த வெள்ளையின ஐரோப்பிய மக்களை கொன்றதற்கும் என்ன சமந்தம் . ஹிட்லர் கொலைக்கு காரணம் "தாழ்ந்த இனங்கள் சீக்கிரமே அழிந்துவிடும்" என்ற இந்த கோட்பாடுதான் கரணம் என்றால் எந்த வகையில் அவர் ஐரோபிய இனங்களை (அதாவது யூத இனங்களை) தாழ்ந்தவராக கருதினார் ...இதற்கு நீங்கள் விளக்கம் தரவில்லையே .. பதிலுக்காக காத்திருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் வ வரமதுல்லாஹி வபரகாதுஹூ

      யூதர்களை அவர் ஐரோப்பியராக கருதவில்லை என்பதை நாம் முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும். தன்னுடைய ஆர்ய இனத்துக்கு முன்னால் தோன்றிய ஒரு இனமாகவே ஹிட்லர் அவர்களை கருதினார்.

      ஆக, பிற்பாடு தோன்றிய தன்னுடைய இனமே சிறந்தது என்றும், அதனுடன் தாழ்ந்த இனமான யூத இனம் கலக்க கூடாது என்றும் அவர் வாதாடினார் (பார்க்க ஆதாரம்: Adolf Hitler, Mein Kampf, volume 1, chapter 11, Race and People)

      இங்கு தான், தன் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள பரிணாம கோட்பாட்டை துணைக்கு அழைத்துக் கொண்டார் ஹிட்லர். யூதர்களை கொல்வதற்கு பரிணாமத்தை சுட்டிக் காட்டி அறிவியல் காரணம் கற்பித்தார்.

      உண்மையில் பரிணாமம் என்பது வெறுமனே வெள்ளை கருப்பின பாகுபாடு அல்ல. அதற்கும் மேலானது. பரிணாமத்தின் படி, முதலில் கறுப்பினத்தவர், பின்னர் மற்ற இனங்கள், கடைசியாக வெள்ளையர். ஆக, வெள்ளையரே சிறந்தவர்.

      இன்றளவும், மேலை நாடுகளில் நிலவும் இனவெறி நிகழ்வுகளை நாம் எளிதில் இதனுடன் தொடர்புப்படுத்தி பார்க்கலாம்.

      ஆக, யூதர்களை அவர் முன்னேறிய இனமாக அவர் கருதவில்லை. தங்களுடன் அவர்கள் கலந்தால் இயற்கையின் விதி மாறிவிடும் என்று உறுதியாக நம்பியதே இன படுகொலைகளுக்கான காரணம்.

      Delete