Monday, June 20, 2011

'என் மகள்களின் மூன்று கேள்விகள்'நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

இஸ்லாமை ஏற்றபோது நான் பெற்ற மன அமைதி இன்னும் என்னை விட்டு விலகவில்லை. இன்ஷா அல்லாஹ், இனியும் விலகாது.
லாரன் பூத் (Lauren Booth) - அரசியல் விமர்சகர், ஊடகவியலாளர், பாலஸ்தீன மக்களுக்காக போராடியவர்/போராடிக்கொண்டிருப்பவர்.

இவற்றிற்கெல்லாம் மேலாக, பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் நெருங்கிய உறவினர் என்ற அடையாளம். சென்ற ஆண்டு இவரது பெயரை உலகின் மூளைமுடுக்கெல்லாம் கொண்டுபோய் சேர்த்தன ஊடகங்கள்.

அதற்கு காரணம், நம்மில் பெரும்பாலானோர் அறிந்ததுதான். ஆம், அவர் இஸ்லாமை தழுவிய அந்த நிகழ்வுதான் காரணம்.

தற்போதைய காலக்கட்டத்தில், இஸ்லாமை தழுவும் பலரும், குர்ஆனை முழுமையாக படித்து, பலவித ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர்தான் தழுவுகின்றனர்.

ஆனால் லாரன் பூத் அவர்களின் அனுபவம் வேறுவிதமானது. 

இவர் இஸ்லாமை தழுவுவதற்கு ஊன்றுகோலாய் இருந்தது முஸ்லிம்களின் வாழ்க்கைமுறைதான். பாலஸ்தீன முஸ்லிம்களின் அழகான வாழ்வை பார்த்து, தானும் முஸ்லிமாக வேண்டுமென்று ஆசைக்கொண்டவர் இவர். பின்னர்தான் குர்ஆனை படிக்க ஆரம்பித்திருக்கின்றார்.

இவருடைய இஸ்லாம் நோக்கிய பயணம் மற்றும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பிறகு இவருக்குள் ஏற்பட்ட மாற்றங்கள் போன்றவற்றை படம்பிடிக்க முயற்சிப்பதே இந்த பதிவு...இன்ஷா அல்லாஹ்.   

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் சகோதரி லாரன் பூத். பெற்றோரிடமிருந்து சரியான அரவணைப்பு இருந்ததில்லை. சிறு வயதில் இறைவனிடம் வேண்டிக்கொள்வாராம்,
Please God, என் அம்மாவையும், அப்பாவையும் நாளைக்காவது என்னிடம் அன்பாக இருக்க வை.
டீனேஜ் பருவத்தின்போது பிரார்த்திப்பதை நிறுத்திவிட்டார். தன்னுடைய இருபதுகளில் மதமே வேண்டாமென்ற முடிவுக்கு வந்துவிட்டார்,
வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவித்து கொண்டிருந்தேன். இனியும் எனக்கு மதங்கள் தேவையில்லை. Nietzsche சொன்னதை நம்பினேன். அவர் கூறினார், 'கடவுள் இறந்து விட்டார். நாம்தான் அவரை கொன்றோம்' என்று
சகோதரி லாரன் பயின்ற பள்ளியில் மொத்தம் மூன்றே மூன்று முஸ்லிம் மாணவிகளாம். அந்த மாணவிகளிடம் இரண்டு விசயங்களை கவனித்திருக்கின்றார்.
ஒன்று, அவர்கள் கணக்கிலும் அறிவியலிலும் சிறந்து விளங்கினார்கள். இரண்டாவது, அவர்கள் ஆண்களுடன் டேடிங் (Dating) போனதில்லை.  
9/11-க்கு பிறகு முஸ்லிம்கள் குறித்த எதிர்மறையான எண்ணங்கள் அவருக்குள் வளர ஆரம்பித்தன. முஸ்லிமல்லாதவர்களை கொல்வதே முஸ்லிம்களின் தலையாயப் பணி என்பதில் நம்பிக்கை கொள்ள ஆரம்பித்தார். ஊடங்கங்கள் என்ன கூறினவோ அவற்றை அப்படியே நம்பினார்.

பிறகு, சில ஆண்டுகளில் பாலஸ்தீன பிரச்சனையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள ஆரம்பித்தார். 2005-ஆம் ஆண்டு, மஹ்மூத் அப்பாசை பேட்டி காண்பதற்காக முதல்முறையாக மேற்குகரைக்கு சென்றார்.
டெல் அவிவ்விற்கு விமானம் ஏறியபோதே மிகவும் பதற்றமடைந்தேன். அரேபியர்களை நினைத்து மிகவும் அஞ்சினேன். பேட்டி எடுக்கவிடாமல் என்னை திருப்பி அனுப்பிவிட மாட்டார்களா இஸ்ரேலியர்கள் என்று கூட தனிமையில் எண்ணிருக்கின்றேன்.   
சுமார் ஐந்து நாட்கள் மேற்குகரையில் தங்கியிருந்தார். இந்த ஐந்து நாட்களில் பாலஸ்தீனியர்கள் இவர் மீது காட்டிய அன்பில் இஸ்லாம் குறித்த அவரது தவறான எண்ணங்கள் பறந்தோட ஆரம்பித்தன.
என் வாழ்நாளில் அப்படியொரு உபசரிப்பை நான் கண்டதில்லை. எப்படி தங்கள் பார்வைக்கு அந்நியமான ஒரு பெண்ணை பார்த்தவுடன் ஏற்றுக்கொண்டார்கள்?. என்னிடம் பரிவோடு கூறினார்கள் 'இங்கே உங்கள் மீது தாக்குதல் நடக்குமானால் உங்களை பாதுகாக்க நாங்கள் இருக்கின்றோம்'. இஸ்லாம் குறித்த என்னுடைய அச்சம் விலக ஆரம்பித்தது. 
இஸ்லாம் குறித்த எதிர்மறையான எண்ணங்கள் விலக ஆரம்பித்ததே தவிர, இஸ்லாமை ஆராய வேண்டுமென்ற வட்டத்திற்குள் இன்னும் லாரன் பூத் வரவில்லை. மது, பார்ட்டிகள் என வழக்கம்போல வாழ்க்கை செல்ல ஆரம்பித்தது.

2008-ல் மறுபடியும் பாலஸ்தீன் பயணம். இந்த முறை பாலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுக்க சென்றார். காசாவை இஸ்ரேல் விடுவிக்க வேண்டுமென்ற கோரிக்கையோடு சென்றார். இந்த பயணத்தின்போது தனக்குள் மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தார்.

சில நாட்கள் மட்டுமே பயணத்தை திட்டமிட்டிருந்த அவரது குழுவினருக்கு, இஸ்ரேல் மற்றும் எகிப்து ராணுவத்தின் கெடுபிடிகளால் ஒரு மாதம் வரை காசாவில் அடைந்திருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

தன் குழந்தைகளின் பிரிவால் பரிதவித்து போனார் லாரன். ஒருநாள், இந்த வேதனை தாங்க முடியாமல் அழுதுக்கொண்டிருக்க, அவருக்கு பக்கத்தில் வந்து உட்கார்ந்தார் ஒரு பாலஸ்தீனிய பெண்மணி.

"மன்னிக்கவும்" என்று கூறி தொடர்ந்த அவர் "உங்கள் குழந்தைகளை பிரிந்து எந்த அளவு துயரப்படுகின்றீர்கள் என்று எனக்கு புரிகின்றது" என்று கூறி லாரனை சமாதானப்படுத்த தொடங்கினார்.

பின்னர் தன்னுடைய கதையை லாரனிடம் சொல்ல ஆரம்பித்தார் அந்த பாலஸ்தீனிய பெண்மணி. அவர் மேற்குகரையைச் சார்ந்தவராம். தனிப்பட்ட காரணத்திற்காக ஒருநாள் பயணமாக காசாவிற்கு வரவேண்டிய நிர்பந்தம். அவரை அனுமதித்தனர் இஸ்ரேலியர்கள்.

ஆனால், திரும்ப மேற்குகரைக்கு செல்ல முயற்சித்தபோது, இவரது ஆவணங்களை கிழித்தெறிந்து, இவரை ஒரு வேனில் அடைத்து வைத்து கொடூரமாக நடந்துக் கொண்டார்கள் இஸ்ரேல் இராணுவத்தினர். அன்றிலிருந்து காசாவில் தவித்துக் கொண்டிருக்கின்றார் இந்த பெண்மணி.

இதனை கேட்ட லாரனுக்கு என்ன சொல்லுவதென்றே புரியவில்லை.
கடந்த நான்கு வருடங்களாக தன்னுடைய கணவரையும், இரண்டு குழந்தைகளையும் பார்க்கவில்லை இந்த சகோதரி. ஆனால், இங்கே என்னுடன் அமர்ந்து கொண்டு, என்னுடன் அழுதுக்கொண்டு, என்னை சமாதானப்படுத்த முயன்று கொண்டிருக்கின்றார். அடுத்தவர் உணர்வறிந்து செயல்படும் இது போன்ற பண்பை எப்படி விளக்குவது என்று ஆரம்பிக்க கூட எனக்கு தெரியவில்லை. 
பாலஸ்தீனியர்களின் அன்பும், அடுத்தவர் உணர்வுகளை புரிந்து கொள்ளும் மனப்பக்குவமும், இவ்வளவு கொடுமைகளுக்கு மத்தியிலும் தங்களது மார்க்கத்தின் மீதான அவர்களின் பற்றும் தன்னை மிகவும் பாதித்ததாக குறிப்பிடும் லாரன்,
இப்போது அரேபியர்களை மிகவும் விரும்ப ஆரம்பித்தேன். இருப்பினும் இன்னும் இஸ்லாத்தின் மேல் ஆர்வம் வரவில்லை. 
ரமலான் மாதம் வந்தது. அகதிகள் முகாமில் தங்கியிருந்த ஒரு குடும்பம் சகோதரி லாரனை இப்தாருக்கு அழைத்திருந்தார்கள்.

பதினாறு உறுப்பினர்களை கொண்ட அந்த குடும்பம் சகோதரி லாரனை இன்முகத்தோடு வரவேற்றார்கள். ஆனால் லாரனுக்கோ கடுங்கோபம். யார் மீது தெரியுமா?...முஸ்லிம்களின் கடவுள் மீது....ஏன்?
இவர்களுக்கே சிறிதளவுதான் உணவு கிடைக்கின்றது. இந்த சூழ்நிலையில் இவர்களை நோன்பு நோற்க சொல்வது நியாயமா? நிச்சயமாக இவர்களது கடவுள் இரக்கமற்றவர்தான்.  
ஆனால், அந்த குடும்பத்தினரோ பொறுமையுடன் விளக்கினார்கள். இவ்வுலகில் உள்ள எதையும்விட தாங்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நேசிப்பதாகவும், அதனால், இறைவனின் கட்டளைக்கு இணங்கி நோன்பு நோற்று அவனுக்கு நன்றி செலுத்துவதாகவும் கூறினர்.

அவ்வளவுதான்.....

அவர்களின் அன்பும், இஸ்லாம் சொல்லியப்படி வாழ்ந்துவரும் தன்மையும் லாரனுடைய உள்ளுணர்வுகளை கிளறிவிட அந்த வார்த்தைகள் அவரது வாயிலிருந்து வந்து விழுந்தன.
'இதுதான் இஸ்லாம் என்றால்', எனக்குள் சொல்லிக்கொண்டேன், "இது எனக்கு வேண்டும்". முழுமனதோடு என்னை இந்த மார்க்கத்தில் ஐக்கியப்படுத்திக் கொள்ள நான் தயார்.
இது போன்ற வார்த்தைகள் தன்னிடமிருந்து வருமென்று சில ஆண்டுகளுக்கு முன்புவரை கற்பனைக்கூட செய்திருக்கமாட்டார் லாரன்.

பாலஸ்தீன மக்களுடன் தொடர்பு ஏற்பட்ட அதே காலக்கட்டத்தில் மேற்குலகின் பொருள் சார்ந்த வாழ்க்கை மீது அதிருப்தி கொள்ள ஆரம்பித்தார் லாரன். போர்களில் மேற்குலகம் ஈடுபடுவதே, தம் மக்களின் உள்ளங்களில் உள்ள வெற்றிடத்தை திசைதிருப்பத்தான் என்ற எண்ணத்தை கொண்டிருந்தார்.


மேற்சொன்ன நிகழ்வுகளில் இருந்து தொடங்கிய அவரது இஸ்லாம் நோக்கிய பயணம் சென்ற ஆண்டு நிறைவடைந்தது. இஸ்லாமை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார் லாரன் பூத்.

இஸ்லாம் ஒருவருடைய வாழ்வில் கொண்டுவரும் மாற்றங்கள் அற்புதமானவை. அதற்கு சகோதரி லாரனும் விதிவிலக்கல்ல. தன்னுடைய தவறான பழக்கவழக்கங்களை விட்டொழித்துவிட்டார் சகோதரி லாரன் பூத்.

"எனக்கு புரியத்தொடங்கியது. இனி நான் இஸ்லாமிற்கு அந்நியமானவள் அல்ல. உலகளாவிய முஸ்லிம் சமூகத்தில் நானும் ஒரு பகுதி.

இஸ்லாமை ஏற்றுக்கொள்ள நான் தயாரா? என் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் என்ன சொல்வார்கள்? என்னுடைய பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ள நான் தயாரா? - இப்படி பல கேள்விகள் என்னுள் எழுந்தன.

ஆனால் காலப்போக்கில் இவற்றிலிருந்து விடுபட்டுவிட்டேன். இஸ்லாமை ஏற்றுக்கொள்வது எளிதாகவே இருந்தது.

ஆம், இஸ்லாம் குறித்து நான் இன்னும் நிறைய படிக்க வேண்டும். பலரும் என்னிடம் கேட்கின்றார்கள் "நீங்கள் குர்ஆனை எவ்வளவு படித்திருக்கின்றீர்கள்?" என்று. நான் கூறுவேன், சுமார் நூறு பக்கங்கள் என்று.

இதனை கேட்பவர்களில் சிலர் என்னை ஏளனம் செய்வதற்கு முன்னர் அவர்களுக்கு நான் ஒன்று கூறிக்கொள்ள விரும்புகின்றேன். குர்ஆன் என்னும் புத்தகம் என் வாழ்நாளுக்குரியது. இதில் அவசரப்பட நான் விரும்பவில்லை. படித்தவரை ஆழ்ந்து படிக்க முயற்சித்திருக்கின்றேன். படித்தவற்றை நினைவில் நிறுத்த பாடுபடுகின்றேன். இது வாரப்பத்திரிகை அல்ல.

அரபி மொழி கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அதற்கு சற்று நேரம் ஆகுமென்று நினைக்கின்றேன். 

By the way, நான் ஷியா வழியை பின்பற்றுகின்றேனா? அல்லது சன்னி வழியை பின்பற்றுகின்றேனா? என்ற கேள்விக்கு என்னால் பதில் கூற முடியாது. என்னை பொருத்தவரை, ஒரே இறைவன்...ஒரே இஸ்லாம்தான். 

இஸ்லாமிய முறையில் உடையணிவதும் எளிதாகவே இருந்தது. இனி சிகையலங்காரத்திற்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டியதில்லை பாருங்கள்.

முகத்தை மூடும்விதமாக உடையணிவது எனக்கான ஒன்றாக தோன்றவில்லை. அப்படி உடையணியும் சகோதரிகளை நான் பெரிதும் மதிக்கின்றேன். ஆனால், இஸ்லாம் அதனை வலியுறுத்தவில்லை என்பது என்னுடைய புரிதல்.

என் மனமாற்றத்தை பூதாகரமாக்கின சில ஊடகங்கள். அவர்களுடைய கோபம் என் மீதானது அல்ல. அது இஸ்லாம் மீதானது. இவற்றை நான் பெரிதாக எடுத்து கொள்வதில்லை.

என் வாழ்க்கை முழுவதும் அரசியல் சார்ந்தே இருந்திருக்கின்றேன். பாலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுத்திருக்கின்றேன். இனியும் அப்படியே இருப்பேன்.

இஸ்லாமை ஏற்றுக்கொண்ட பிறகும் என் நட்பு வட்டாரம் வலிமையாகவே இருக்கின்றது. அந்தவிதத்தில் நான் அதிர்ஷ்டசாலிதான். என் முஸ்லிமல்லாத நண்பர்கள் ஆர்வமுடன் என்னிடம் கேட்பார்கள்.
 • இஸ்லாம் உன்னை மாற்றிவிடுமா?
 • நாங்கள் இன்னும் உன் நண்பர்களாக தொடரலாமா?
 • நாம் மது அருந்த வெளியே செல்லலாமா?

முதல் இரண்டு கேள்விகளுக்கு என்னுடைய பதில் 'ஆம்' என்பது. கடைசி கேள்விக்கான பதில், ஒரு பெரிய 'NO'. 

என் அம்மாவை பொருத்தவரை, என்னுடைய மகிழ்ச்சிதான் அவருக்கு முக்கியம். நான் இஸ்லாமை ஏற்றுக்கொண்டதை அவரிடம் கூறியபோது, 'அந்த மார்க்கத்திற்கா மாறினாய்?, நீ புத்தமதத்திற்கு மாறியிருப்பாய் என்றல்லவா நினைத்தேன்' என்று கூறினார். இப்போது புரிந்துக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றார். என்னுடைய மாற்றத்தை ஏற்றுக்கொண்டுவிட்டார்.

மதுவை விட்டொழித்தது புது உற்சாகத்தை தந்திருக்கின்றது. உண்மையை சொல்லவேண்டுமென்றால், நான் இஸ்லாமை தழுவியதிலிருந்து மதுவை நினைத்துக்கூட பார்க்கவில்லை. I simply don’t want to.

மறுமணம் குறித்து சிந்திக்கும் மனநிலையில் இப்போது நான் இல்லை. என்னுடைய முந்தைய திருமணமுறிவிலிருந்து தற்போது மீண்டுக்கொண்டிருக்கின்றேன். விவாகரத்து நடந்துக்கொண்டிருக்கின்றது.

நேரம் வரும்போது நிச்சயம் மறுமணம் குறித்து யோசிப்பேன். நான் ஏற்றுக்கொண்ட மார்க்கதிற்கேற்ப, என்னுடைய கணவர் நிச்சயம் முஸ்லிமாகத்தான் இருக்கவேண்டும்.

என்னிடம் பலரும் கேட்கின்றார்கள், 'உங்கள் மகள்களும் முஸ்லிமாவார்களா?' என்று.

எனக்கு தெரியவில்லை. அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும். ஒருவருடைய உள்ளத்தை நாம் மாற்ற முடியாது.

ஆனால், என்னுடைய மனமாற்றத்தை அவர்கள் எதிர்க்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், நான் இஸ்லாமை தேர்ந்தெடுத்ததை அவர்களிடம் சொன்னபோது அவர்கள் காட்டிய அணுகுமுறை என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

சமையலறையில் அமர்ந்துக் கொண்டு அவர்களை அழைத்தேன், 'Girls, உங்களிடம் ஒரு செய்தியை சொல்லவேண்டும்'.

சொல்ல ஆரம்பித்தேன். 'நான் இப்போது முஸ்லிம்'. 

இதனை கேட்டவுடன் ஒன்றாக கூடிக்கொண்டு அவர்களுக்குள்ளாக ஏதோ கிசுகிசுத்து கொண்டார்கள். சில நொடிகளுக்கு பிறகு, என் மகள்களில் மூத்தவளான அலெக்ஸ், 'நாங்கள் சில கேள்விகளை கேட்க விரும்புகின்றோம். இன்னும் சிறிது நேரத்தில் வருகின்றோம்'.  

ஒரு லிஸ்டை தயாரித்துக் கொண்டு திரும்பினார்கள். அலெக்ஸ் ஆரம்பித்தாள், 'இனியும் நீங்கள் மது அருந்துவீர்களா?'

என்னுடைய பதில்: 'இல்லை'. 

'இனியும் புகைபிடிப்பீர்களா?' 

புகைபிடிப்பது ஹராம் இல்லை (??). எனினும் அது உடம்புக்கு நல்லதல்ல. அதனால் என்னுடைய பதில், 'இல்லை'.   

அவர்களுடைய கடைசிக் கேள்வி என்னை பின்னுக்கு தள்ளியது. 

'தற்போது முஸ்லிமாகிவிட்டதாக கூறுகின்றீர்கள், இனியும் உடலின் மறைவான பாகங்கள் வெளியே தெரியுமாறு மேலாடை அணிவீர்களா?'

என்ன???????

இப்போதுதான் புரிய ஆரம்பித்தது. நான் உடையணியும்விதம் அவர்களை எந்த அளவிற்கு சங்கடத்தில் ஆழ்த்திருக்கின்றது என்று.  

'இப்போது நான் முஸ்லிம்' , தொடர்ந்தேன், 'இனியும் அப்படி உடையணிய மாட்டேன்'. 

'நாங்கள் இஸ்லாமை விரும்புகின்றோம்' என்று கூறி ஆரவாரம் செய்துவிட்டு விளையாட சென்றுவிட்டார்கள். 

நானும் சொல்லிக்கொண்டேன், 'நானும் இஸ்லாமை விரும்புகின்றேன்'."

சகோதரி லாரன் போன்றவர்களை தொடர்ந்து நம் சமூகத்திற்கு கொடுத்து, இஸ்லாம் குறித்த தவறான எண்ணங்களை களைய அல்லாஹ் போதுமானவன்.

டோனி பிளேர், தான் குர்ஆனை தினமும் படித்து வருவதாகவும், தான் இறைநம்பிக்கையில் நீடிக்க குர்ஆன் உதவுவதாகவும் கூறியுள்ளார். அவர் கூடிய விரைவில் நேர்வழி பெற இறைவன் உதவுவானாக...ஆமீன்.  

Please Note:
இந்த பதிவில் உள்ள மொழிபெயர்ப்பு முழுமையானதல்ல. முழுமையாக படிக்க கீழே உள்ள சுட்டிகளை பயன்படுத்தவும்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

Sr. Lauren Brown's Official Website:
1. http://www.laurenbooth.co.uk. link

References:
1. Lauren Booth explains why she feel in love with Islam - news.com.au. link
2. Lauren Booth’s Spiritual Journey to Islam - The American Muslim. link

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ. 


34 comments:

 1. நம் மீது எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் பேரருளும் அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக..!

  சகோ.லாரன் பூத் சிறப்பாக சிந்துத்துள்ளார். இந்நேரம் அவர் குர்ஆனை முழுமையாக படித்திருந்து இருப்பார். இஸ்லாம் பற்றிய தம் அறிதலை இன்னும் பன்மடங்காக்கி இருப்பார். அவருக்கு ஏக இறைவனின் சாந்தியும் பேரருளும் அபிவிருத்தியும் என்றென்றும் ஏற்படட்டுமாக..!

  மிக நல்லதொரு ஆக்கம் சகோ.ஆஷிக்..!

  ஆங்கில சுட்டியில் காணப்படும் மகளின் மூன்றாவது கேள்விக்கு முழுமையான மொழிபெயர்ப்பு சாத்தியமல்லதான் என்றாலும், மொத்தமாக இப்பதிவின் மொழியாக்கத்திற்கான உங்கள் மெனக்கெடலுக்கு என் பாராட்டுக்கள்.

  மாஷாஅல்லாஹ்..! அருமை.

  (இப்பதிவில் எனக்கு இரு மனவருத்தங்கள் உள்ளன. ஒரு சகோ.லாரன் பற்றி. மற்றது உங்களைப்பற்றி. இறைநாடினால், பிறகு சொல்கிறேன்)

  ReplyDelete
 2. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

  நல்லதொரு பதிவு.

  இறைவன் நாட்டத்தினால் மூஸ்லீம் குடும்பங்களில் பிறந்தும் பெயர்தாங்கி முஸ்லீம்களாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களை சிந்திக்க செய்வதுடன்

  கண்ணிருந்தும் குருடாய் , காதிருந்தும் செவிடாய் , வாயிருந்தும் ஊமையாய் இவ்வளவு நாட்களாக வாழ்ந்து எதையெல்லாம் இழந்து வந்திருக்கிறோம் என எண்ணி வருந்தச் செய்யும்.

  வாஞ்சையுடன் வாஞ்ஜூர்.

  ReplyDelete
 3. நம் மீது எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் பேரருளும் அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக..!

  சகோ. ஆஷிக்!

  சிறப்பான மொழி பெயர்ப்பு. சகோதரியின் முழு குடும்பமும் இஸ்லாத்தின் பால் வர பிரார்த்திப்போம். டோனி பிளேயரும் குர்ஆனை படித்து வருவதாக கேள்விப்பட்டேன். ஈராக்கில் புஷ்ஷோடு சேர்ந்து கொண்டு செய்த அநியாயங்களுக்கு கூடிய விரைவில் பிராயச்சித்தம் தேடிக் கொள்வார் என்று நம்புவோம்.

  ReplyDelete
 4. சகோதரர் முஹம்மது ஆஷிக்,

  வ அலைக்கும் ஸலாம்,

  --------
  ஆங்கில சுட்டியில் காணப்படும் மகளின் மூன்றாவது கேள்விக்கு முழுமையான மொழிபெயர்ப்பு சாத்தியமல்லதான் என்றாலும்,
  ----------

  சாத்தியம் இல்லை என்றில்லை. என்னால் அதனை மொழிபெயர்க்க முடியாது. உங்களுக்கு எப்படி விளக்குவது என்று புரியவில்லை..

  ----------
  (இப்பதிவில் எனக்கு இரு மனவருத்தங்கள் உள்ளன. ஒரு சகோ.லாரன் பற்றி. மற்றது உங்களைப்பற்றி. இறைநாடினால், பிறகு சொல்கிறேன்)
  -----------

  சகோதரி லாரன் மீதான வருத்தம் யூகிக்க முடிகின்றது. அதுபோல என் மீதான வருத்தமும் யூகிக்க முடிகின்றது.

  எப்படி இருப்பினும், தாங்களாக முன்வந்து சொல்லாதவரை எந்த யூகமும் பலனளிக்க போவதில்லை. ஆகையால் போட்டு உடைத்து விடுங்கள். கருத்து வேறுபாடுகள் சுன்னத்தான வழிமுறைதான்.

  தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரர்,

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹ்மத் அ

  ReplyDelete
 5. அன்பு அப்பா வாஞ்சூர் அவர்களுக்கு,

  வ அலைக்கும் ஸலாம்,

  -------
  இறைவன் நாட்டத்தினால் மூஸ்லீம் குடும்பங்களில் பிறந்தும் பெயர்தாங்கி முஸ்லீம்களாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களை
  ---------

  இந்த நிலை மாறிக்கொண்டிருக்கின்றது. இன்ஷா அல்லாஹ் இனியும் வீரியமாக மாறும். அதற்கு இறைவன் உதவி புரிவான்.

  தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹ்மத் அ

  ReplyDelete
 6. சகோதரர் சுவனப்பிரியன்,

  வ அலைக்கும் ஸலாம்,

  -------
  சகோதரியின் முழு குடும்பமும் இஸ்லாத்தின் பால் வர பிரார்த்திப்போம்.
  -------

  இன்ஷாஅல்லாஹ்.

  -----
  டோனி பிளேயரும் குர்ஆனை படித்து வருவதாக கேள்விப்பட்டேன். ஈராக்கில் புஷ்ஷோடு சேர்ந்து கொண்டு செய்த அநியாயங்களுக்கு கூடிய விரைவில் பிராயச்சித்தம் தேடிக் கொள்வார் என்று நம்புவோம்.
  -----

  டோனி பிளேர் இஸ்லாம் குறித்து சொன்ன சில கருத்துக்களை பாருங்கள்,

  Mr Blair has previously praised the Muslim faith as ‘beautiful’ and said the Prophet Mohammed had been ‘an enormously civilizing force’.
  In 2006 he said the Koran was a ‘reforming book, it is inclusive. It extols science and knowledge and abhors superstition. It is practical and way ahead of its time in attitudes to marriage, women and governance’. Thanks - Mailonline.co.uk

  இறைவன் தான் அவரை தான் நாடுவோரில் ஒருவராக சேர்க்க வேண்டும்...

  நன்றி,

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹ்மத் அ

  ReplyDelete
 7. மனவருத்தம்-1

  ///இனியும் புகைபிடிப்பீர்களா?'

  புகைபிடிப்பது ஹராம் இல்லை. எனினும் அது உடம்புக்கு நல்லதல்ல. அதனால் என்னுடைய பதில், 'இல்லை'. ///

  ---சகோ.லாரன் பூத்தின் இப்புரிதல் தவறானது அல்லவா..?

  அவர்தான் என்ன செய்வார் பாவம்..! புது முஸ்லிமா..! பன்னாட்டு கம்பெனிகளுக்கு சோப்பு போடும் இஸ்லாமிய அரசுக்கு, ஜால்ரா தட்டும் ஒரு சில போலி மார்க்க அறிஞர்களின் ஃபத்வாக்கள் காரணமாக இருக்கலாம்..!

  ஆனால், 'படிப்போர் யாரும் தவறாக விளங்கிக்கொள்ளக்கூடாது' என்பதற்காக நீங்களாவது உங்கள் விளக்கத்தை அடைப்புக்குறிகளுக்குள் போட்டிருக்கலாம் சகோ.ஆஷிக் அஹமத்.

  ReplyDelete
 8. சகோதரர் முஹம்மது ஆஷிக்,

  வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

  --------
  உங்களின் ஆதாரமற்ற அந்த எண்ணத்தை பதிவில் வெளிப்படுத்தாமல் இருந்திருக்கலாம் என்பது எனது அபிப்பிராயம் சகோ.ஆஷிக் அஹமத்..!
  --------

  நீக்கிவிட்டேன் சகோதரர்...எடுத்து சொன்னதற்கு ஜசாக்கல்லாஹு க்ஹைர்......

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹ்மத் அ

  ReplyDelete
 9. சகோதரர் முஹம்மது ஆஷிக்,

  வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

  --------
  சகோ.லாரன் பூத்தின் இப்புரிதல் தவறானது அல்லவா..?

  ஆனால், 'படிப்போர் யாரும் தவறாக விளங்கிக்கொள்ளக்கூடாது' என்பதற்காக நீங்களாவது உங்கள் விளக்கத்தை அடைப்புக்குறிகளுக்குள் போட்டிருக்கலாம் சகோ.ஆஷிக் அஹமத்.
  --------

  தவறான புரிதல்தான். அவர் சொன்னதை அப்படியே சொல்லவே நினைத்தேனே தவிர அங்கே விளக்கம் சொல்லவேண்டுமென்ற எண்ணம் வரவில்லை சகோதரர். இப்போது '??' சேர்த்துள்ளேன்.

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹ்மத் அ

  ReplyDelete
 10. mohamed ribnas

  அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

  good artical

  @வாஞ்சையுடன் வாஞ்ஜூர்
  //இறைவன் நாட்டத்தினால் மூஸ்லீம் குடும்பங்களில் பிறந்தும் பெயர்தாங்கி முஸ்லீம்களாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களை சிந்திக்க செய்வதுடன்

  கண்ணிருந்தும் குருடாய் , காதிருந்தும் செவிடாய் , வாயிருந்தும் ஊமையாய் இவ்வளவு நாட்களாக வாழ்ந்து எதையெல்லாம் இழந்து வந்திருக்கிறோம் என எண்ணி வருந்தச் செய்யும்.//
  its real

  ReplyDelete
 11. சகோதரர் முஹம்மது ரிப்னாஸ்,

  வ அலைக்கும் ஸலாம்,

  ------
  its real
  -------

  even if it real, it is time for us to move ahead. hope u understand...

  தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹ்மத் அ

  ReplyDelete
 12. அஸ்ஸலாமு அலைக்கும்

  9:32. தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் இறைநிராகரிப்பவர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.

  இதைவிட சிறந்த ஒரு பின்னூட்டம் என்னிடம் இல்லை சகோதரர் ஆஷிக் அஹமத் அவ்ர்களே.

  உங்களின் தாவா பணி மென்மேலும் தொடர இறைவனிடம் பிரார்த்திக்கும் உங்கள் சகோதரன்...

  அன்புடன்,

  காதர் மைதீன்.

  மாஸலாமா.

  ReplyDelete
 13. சகோதரர் காதர் மைதீன்,

  வ அலைக்கும் ஸலாம்,

  அற்புதமான வசனத்தை கொடுத்துள்ளீர்கள். தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் துவாவிற்கும் நன்றி சகோதரர்,

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹ்மத் அ

  ReplyDelete
 14. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
  நீக்கியமைத்ததற்கும், "??"-க்கும் மிக்க நன்றி சகோ.ஆஷிக் அஹ்மத். ஜசாக்கல்லாஹ் க்ஹைர். உங்கள் இஸ்லாமிய தாஃவா பணி மேலும் சிறக்க அல்லாஹ் அருள் புரிய துவா செய்கிறேன் சகோ.

  ReplyDelete
 15. உள்ளே வரலாமா?

  ReplyDelete
 16. சகோதரர் தொப்பிதொப்பி,

  உங்கள் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

  ----
  உள்ளே வரலாமா?
  ----

  வாருங்கள் சகோதரர். வரவேற்கின்றோம்.

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹமத் அ

  ReplyDelete
 17. மிக நல்லதொரு ஆக்கம் சகோ.ஆஷிக்..!

  ReplyDelete
 18. சகோதரி பாத்திமா ஜொஹ்ரா,

  அஸ்ஸலாமு அலைக்கும்,

  தங்களின் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி...

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹமத் அ

  ReplyDelete
 19. அன்புச் சகோதரர் ஆஷிக் அஹ்மத்,
  அஸ்ஸலாமு அலைக்கும்.
  நல்லதொரு பதிவு.
  மாஷா அல்லாஹ்! தொடரட்டும் தங்களின் இறை அழைப்புப் பணி.
  'என் மகள்களின் மூன்று கேள்விகள்'
  தொடர்பான ஆங்கில சுட்டியைத் தேடிப்பார்த்தேன்: கிடைக்கவில்லை!
  தாங்கள் இங்கு அதனை தந்தால் என்னைப்போல 'தேடும்' மற்றவருக்கும் உதவியாயிருக்கும்.
  ஜஸாக்கல்லாஹ் கைரா.

  ReplyDelete
 20. அன்பு சகோதரர் ஷபி,

  வ அலைக்கும் ஸலாம்,

  தங்களின் ஊக்கத்திற்கு என்னுடைய நன்றி...

  -----
  'என் மகள்களின் மூன்று கேள்விகள்'
  தொடர்பான ஆங்கில சுட்டியைத் தேடிப்பார்த்தேன்: கிடைக்கவில்லை!
  ------

  இந்த பதிவின் முடிவில் REFERENCE பகுதியில் இரண்டு லிங்குகள் கொடுத்திருக்கின்றேன் சகோதரர். அவற்றிலிருந்து எடுத்து சுருக்கி எழுதினது தான் இந்த பதிவு. மேற்கொண்டு தகவல்கள் தேவைப்பட்டால் தயங்காமல் கேட்கவும்...

  நன்றி,

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹ்மத் அ

  ReplyDelete
 21. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

  ஆங்கிலத்தில் படித்தால் கூட இவ்வளவு தெளிவாக புரிந்திருப்பேனா? என தெரியவில்லை. மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள். சகோதரியின் வாழ்வு சிறக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
 22. சகோதரர் பாசித்,

  வ அலைக்கும் ஸலாம்,

  அல்ஹம்துலில்லாஹ்....Sensitive Issues, Sensibly approached....இப்ப அர்த்தம் புரியுதா....ஹா ஹா ஹா

  தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹ்மத் அ

  ReplyDelete
 23. அஸ்ஸலாமு அலைக்கும்

  நல்ல பதிவு உங்களது பணி தொடரட்டும்

  ReplyDelete
 24. சகோதரர் bat,

  வ அலைக்கும் ஸலாம்,

  தங்களின் வருகைக்கும், ஊக்கத்திற்கும், துவாவிற்கும் நன்றி....

  அப்புறம், தங்களின் கமெண்ட் ஒன்றை சுவனப்பிரியன் அவர்களது தளத்தில் பார்க்க நேர்ந்தது. அதில், தாங்கள், இ.செல்வன் தற்போது எழுதிவரும் ஒரு பதிவை குறிப்பிட்டு அது குறித்து என்னிடம் தெரிவிக்க சொல்லி இருந்தீர்கள். அங்கே உங்களுக்கு பதில் சொல்லலாம் என்றிருந்த வேலையில் நீங்களே இங்கே வந்து விட்டீர்கள்.

  நான் கொடுக்கி தளத்திற்கு செல்லுவதில்லை. அதற்கான காரணத்தை இ.செல்வனும் அறிவார். மிக முக்கியமான இடுகையாக தெரிந்தால் தமிழ்மனம் மூலமாக தெரிந்து கொண்டு பிறகு போவதுண்டு.

  தங்களின் கருத்தை பார்த்துவிட்டு இ.செல்வனுடைய தளத்திற்கு சென்றேன். அல்ஹம்துலில்லாஹ், களத்தில் இறங்கி விளையாடுகின்றீர்கள் போல...மாஷா அல்லாஹ்.

  தேவைப்படின் இன்ஷா அல்லாஹ் நானும் வருவேன் (முன்னரும் இதுபோல போகக்கூடாது என்றெண்ணி பிறகு சென்ற பின்னூட்டங்கள் போட்டதுண்டு)...துவா செய்யுங்கள்.

  இன்னொரு வஹ்ஹாபி, சுவனப்பிரியன், வாஞ்சூர், நல்லடியார், நெத்தியடி. ஷேக் தாவுத் (etc) உருவாகுவதில் மட்டற்ற மகிழ்ச்சி. எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே உரித்தாவதாக...ஆமீன்.

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹ்மத் அ

  ReplyDelete
 25. நீங்கள் இஸ்லாமிற்கு செய்யும் தொண்டு பாராட்டுக்குரியது....
  //தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் இறைநிராகரிப்பவர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.//
  இங்கே ஒளி என்பதற்கு அர்த்தம் என்ன? முடிந்தால் விளக்குங்கள் அறிய ஆவல்...
  வாழ்க வளமுடன் நலமுடன்.....

  ReplyDelete
 26. சகோதரர் R.புரட்சிமணி,

  உங்கள் மீதும், உங்கள் குடும்பத்தினர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

  ////நீங்கள் இஸ்லாமிற்கு செய்யும் தொண்டு பாராட்டுக்குரியது....////

  மிக்க நன்றி சகோதரர். எல்லாப் புகழும் இறைவனிற்கே...

  ////இங்கே ஒளி என்பதற்கு அர்த்தம் என்ன? முடிந்தால் விளக்குங்கள் அறிய ஆவல்...////

  குர்ஆனில் இந்த ஒளி என்ற வார்த்தைக்கு "நூர்" என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது. இது குறித்து மேலும் படிக்க கீழ் காணும் லிங்கை சுட்டவும்.

  NOOR

  நன்றி,

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹ்மத் அ

  ReplyDelete
 27. assalamu alayikum ashik
  neenga facebook la irukkiringala

  ReplyDelete
 28. wa alaikum salaam brother,

  -----
  neenga facebook la irukkiringala
  -----

  illai brother...

  Yours,
  aashiq ahamed a

  ReplyDelete
 29. assalamu alaikum,


  very good post, its gives refreshment by reading this.\

  May god bless you and your family

  ReplyDelete
 30. Wa alaikum salaam brother sharfu,

  Alhamdhulillah

  Thank u so much for your dua brother...

  Aashiq Ahamed A

  ReplyDelete
 31. /By the way, நான் ஷியா வழியை பின்பற்றுகின்றேனா? அல்லது சன்னி வழியை பின்பற்றுகின்றேனா? என்ற கேள்விக்கு என்னால் பதில் கூற முடியாது. என்னை பொருத்தவரை, ஒரே இறைவன்...ஒரே இஸ்லாம்தான். /
  _________
  நல்ல காமெடி.இங்கே பிஜே(சொர்க்கத்திற்கு நேரான வழி சந்தேகம் என்றால் ஒத்தைக்கு ஒத்தை வர்ரியா!!!!!) பிரிவா பாக்கர் பிரிவா என்று தவுகீத் ஆசாமிகளே அடிதடி போடும் போது இப்படி சொன்னால் எப்படி?.இதில் இருந்தே இந்த அம்மணிக்கு இஸ்லாம் பற்றி ஒன்றுமே தெரியாது என்று தெரிகிறது.

  இரானின் ப்ரஸ் டிவியில் பணியாற்றியதை சொல்ல வேண்டாமா?

  பேன்க் ரப்ட் ஆனதும் கூட இஸ்லாமுக்கு வர காரணாமாக இருந்து இருக்க்லாம்.
  http://www.dailymail.co.uk/debate/article-1342545/Lauren-Booth-bankrupt-owes-sister-Cherie-Blair-15-000.html

  கணவனையும் மதம் மாற்ற வேண்டும்.இஸ்லாமிய பெண் காஃபிரோடு குடும்பம் நட்த்தக் கூடாது ஆகையால் திருமணம் செல்லாது,விவாக இரத்து பெற்று உடனே ஈமானுள்ள இஸ்லாமியரை திருமனம் செய்ய வேண்டும்.

  இரானில் உள்ள ஒரு தர்காவிற்கு சென்று மனம் மாறி மதம் மாறினேன் என்று கூறுகிறார்.ஷியா ஆட்கள் எங்கள் மதத்திற்கு மாறினார் என்கிறார்.
  http://en.wikipedia.org/wiki/Lauren_Booth
  Another convert to Shia Islam - Lauren Booth - Sister in Law of Tony Blair - Interview Part 1/3
  http://www.youtube.com/watch?v=DSMMa8V_Wmw

  ReplyDelete
 32. யாவரும் அவசியம் படிக்க வேண்டியது சுட்டியை சொடுக்கி படிக்கவும்.


  >>>>
  முஸ்லிம்களை காணும் போது கடித்துக் குதறிவிடலாம் என்ற எண்ணம் முஸ்லிம்களின் தாடியை, தோற்றத்தைக் கண்டால் வெறுப்பு; அவர்களை எதிர்ப்பதும் அவர்களுக்கெதிராகப் பிரச்சாரம் செய்வதும்தான் R.S.S. இந்துத்வா முழு நேர ஊழியனது முழுநேர தொழிலாக மாறியது. ஒரு இஸ்லாமிய எதிர்ப்பாளனாக இருந்து இன்று ஒரு முஸ்லிமாக இருக்கும் RSS இந்துத்வா முழு நேர ஊழியன் வேலாயுதன்
  <<<<<


  >>> செங்கொடி தழுவிய இஸ்லாம். இஸ்லாம் ஈர்த்த செங்கொடி. புறப்படு நீயும் இஸ்லாத்தை நோக்கி! ஒரு செங்கொடியின் அறைகூவல். <<<

  >>> நாத்திகத்தில் நன்றாகவே உழன்று, அதிலிருந்து மீண்ட டாக்டர் பெரியார்தாசன். நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்? <<<


  ..

  ReplyDelete
 33. we want more like these kind of article

  ReplyDelete