Tuesday, August 2, 2011

உலகின் 'முதல்' பறவை இறந்தது...bye-bye birdie



நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். 

----------------------------------
இந்த பதிவிற்குள் செல்லும்முன் ஒருவர் புரிந்துக்கொள்ள வேண்டிய வார்த்தைகள்:

1. உயிரினப்படிமங்கள் (Fossils) - விலங்குகள் மற்றும் தாவரங்களின் இயற்கையாக பாதுகாக்கப்பட்ட மிச்சங்கள்/ஆதாரங்கள்.     

2. தொல்லுயிரியல் (Palaeontology) - உயிரினப்படிமங்கள் குறித்து பேசும் துறை (Study of Fossils).

3. தொல்லுயிரியலாளர் (Paleontologist) - உயிரினப்படிம ஆய்வுகளில் தனித்துவம் பெற்றவர்.
---------------------------------

றிவியல் ஆய்விதழான Nature-ரின் செய்திகள் பிரிவு, சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட கட்டுரையின் தலைப்பு பரிணாம உலகை திரும்பிப்பார்க்க வைத்திருக்கின்றது. அது,

Archaeopteryx no longer first bird - Matt Kaplan, Nature news, 27th July 2011.
இனி (உலகின்) முதல் பறவையல்ல அர்கீயாப்டெரிக்ஸ் - (Extract from the original quote of) Matt Kaplan, Nature news, 27th July 2011.

நீங்கள் மேலே பார்த்ததுக்கூட பரவாயில்லை. இந்த செய்தி வெளியான அடுத்த நாள் Nature இதழில் வெளியான இதுக்குறித்த மற்றொரு கட்டுரையின் தலைப்பு பலரை திக்குமுக்காட வைத்திருக்கும்.  
An icon knocked from its perch - Lawrence M.Witmer, Nature, Vol 475, 28th July 2011, 458, doi:10.1038/nature10288.
ஒரு முக்கிய சின்னம் (அர்கீயாப்டெரிக்ஸ்) தன்னுடைய இருப்பிடத்திலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டது - (extract from the original quote of) Lawrence M.Witmer, Nature, Vol 475, 28th July 2011, 458, doi:10.1038/nature10288.

சரி, ஏன் இந்த அர்கீயாப்டெரிக்ஸ் என்னும் உயிரினத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம்? 

ஏனென்றால் இந்த உயிரினம் நீண்ட காலமாக பரிணாமத்துக்கு ஆதாரமாக காட்டப்பட்டு வந்தது. இந்த உயிரினம் இல்லாமல் பறவைகளின் தோற்றத்தை ஆராய முடியாது என்னும் அளவுக்கு ஒரு நிகரற்ற நட்சத்திரமாக பரிணாம உலகினரால் கொண்டாடப்பட்டது. 

அந்தோ பரிதாபம், அந்த கொண்டாடத்துக்கு சென்ற வாரத்தோடு முடிவு கட்டப்பட்டுள்ளது. 

படுசுவாரசிய தகவல்களை தன்னிடத்தே கொண்டுள்ள இந்த செய்திக் குறித்து முழுமையாய் அறிந்துக்கொள்ள நாம் பத்தொன்பதாம் நூற்றாண்டிற்கு பயணிக்க வேண்டும். 

அது 1859-ஆம் வருடம். சார்லஸ் டார்வினின் "உயிரினங்களின் தோற்றம்" புத்தகம் வெளியாகி மிகுந்த பரபரப்பை உண்டாக்கியிருந்தது. 

ஒரு உயிரினம் காலப்போக்கில் சிறுகச் சிறுக இன்னொரு உயிரினமாக மாறிவிடுகின்றது என்று வாதிட்ட அந்த புத்தகம் நாத்திகர்களுக்கு பெரும் உற்சாகமாய் அமைந்தது. உயிர்கள் உருவாக கடவுள் தேவையில்லை, அவை தானாகவே காலப்போக்கில் உருவாக்கிக்கொள்ளும் என்று வாதிட ஆரம்பித்தார்கள் டார்வினின் ஆதரவாளர்கள். 

அவர்களது நம்பிக்கைக்கு மேலும் வலுச்சேர்க்கும்விதமாக 1861-ஆம் ஆண்டு ஒரு சம்பவம் நடந்தது. 

அந்த ஆண்டில், ஜெர்மனியின் பவரியா பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு உயிரினத்தின் படிமம் அறிவியல் உலகின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. அந்த படிமத்தில் காணப்பட்ட உயிரினம் ஆச்சர்ய தன்மைகளை தன்னிடத்தே கொண்டிருந்ததாக அறிவிக்கப்பட்டது. 

அது என்னவென்றால், காக்கை அளவிலான இந்த உயிரினம், பறவைகள் மற்றும் சிறிய அளவிலான டைனாசர்களின் (ஊர்வன) தன்மைகளை தன்னிடத்தே கொண்டிருந்ததாக நம்பப்பட்டது. 

உதாரணத்துக்கு, பறவைகளின் தன்மைகளான இறகுகளும், மார்புக்கூட்டை வலுப்படுத்தும் எலும்பும் (Wishbone), அதுபோல, ஊர்வனவற்றின் தன்மைகளான பற்களும், நீண்ட கடினமான வாலும் இந்த உயிரினத்துக்கு இருந்ததாக கூறப்பட்டது. 

இந்த உயிரினத்துக்கு ஜெர்மனில் "யுர்வோகெல் (Urvogel)" என்று பெயர் சூட்டினார்கள். இதற்கு "முதல் பறவை" என்று அர்த்தம். ஆங்கிலத்தில் இதற்கு "அர்கீயாப்டெரிக்ஸ் (Archaeopteryx)" என்று பெயர் சூட்டினார்கள். இந்த பெயர் கிரேக்க வார்த்தையிலிருந்து வந்தது. இதற்கு "பழங்கால இறகு (Ancient wing or feather)" என்று அர்த்தம். 

ஆக, டைனாசர்களின் தன்மைகளும் பறவைகளின் தன்மைகளும் ஒருசேர கலந்திருந்ததால், உலகின் முதல் பறவை டைனாசர்களில் இருந்து பரிணாமம் அடைந்து வந்திருக்க வேண்டுமென்று நம்பப்பட்டது. அதற்கு ஆதாரமாக அர்கீயாப்டெரிக்ஸ் காட்டப்பட்டது. 

டார்வினின் புத்தகம் வெளியாகி இரண்டு ஆண்டுகளில் நடந்த இந்த நிகழ்வு மிகப்பெரிய பாதிப்பை அறிவியல் உலகில் நிகழ்த்தியது. உயிரினங்கள் காலப்போக்கில் சிறுகச் சிறுக வேறொன்றாக மாறுகின்றன என்று டார்வின் சொன்னது சரிதான் என்று நம்பப்பட்டது. 

சிறிய அளவிலான டைனாசர்கள் காலப்போக்கில் சிறுகச் சிறுக (தொடக்க நிலை பறவையான) அர்கீயாப்டெரிக்ஸ்சாக மாறி பின்னர் அவற்றிலிருந்து பறவைகள் வந்தன என்று பரிணாமம் விளக்கப்பட்டது. 

பரிணாம கோட்பாட்டிற்கு என்ன ஆதாரம் என்று கேட்டவர்களுக்கு, இதோ ஆதாரம் என்று அர்கீயாப்டெரிக்ஸ் காட்டப்பட்டது. 

மொத்தத்தில், உலகின் முதல் பறவையாகவும், பரிணாம கோட்பாட்டிற்கான வலிமையான ஆதாரமாகவும் அர்கீயாப்டெரிக்ஸ் கொண்டாடப்பட்டது.   

எப்படி காலங்கள் செல்லச் செல்ல பரிணாமத்தின் மற்ற உயிரினப்படிம ஆதாரங்கள் ஒன்றுமில்லாமல் சிதைந்தனவோ அதுப்போலவே அர்கீயாப்டெரிக்ஸ்சின் நிலையும் ஆனது.

கடந்த சிலபல ஆண்டுகளாகவே மிகுந்த சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டு வருகின்றது அர்கீயாப்டெரிக்ஸ். இதற்கு முக்கிய காரணம், தொடர்ந்து கண்டுப்பிடிக்கபடும் (அர்கீயாப்டெரிக்ஸ் போன்ற) இறகுகள் கொண்ட டைனாசர்களின் (feathered dinosaurs) உயிரினப்படிமங்கள். இறகுகள் இருந்தாலும் இவை பறக்க தகுதி இல்லாதவை. குறிப்பாக சீனாவில் இருந்து மட்டும் மிக அதிக அளவிலான 'இறகுகள் கொண்ட டைசானர்' படிமங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.  

ஆக, இறகுகள் இருந்து விட்டால் மட்டும் ஒரு உயிரினம் பறக்கும் தன்மையை பெற்றுவிடாது என்பது இதன் மூலமாக புலப்பட்டது.

எந்த தன்மைகளை வைத்து அர்கீயாப்டெரிக்ஸ்சை தொடக்க நிலை பறவை (Avialae) என்றார்களோ, அதே தன்மைகள் பறக்க முடியாத டைனாசர்களிலும் காணப்பட்டது. இது பரிணாமவியலாளர்களை மிகுந்த குழப்பத்தில்/சங்கடத்தில் ஆழ்த்தியது. 

அதுமட்டுமல்லாமல், இதுக்குறித்த கேள்விகளை படைப்பு மற்றும் Intelligent Design கோட்பாட்டை (Intelligent Design குறித்த இத்தளத்தின் பதிவை காண <<இங்கே>> சுட்டவும்) ஆதரிப்போர் தொடந்து எழுப்பி பரிணாமவியலாளர்களுக்கு மிகுந்த அசவுகரியத்தை அளித்தனர். முன்பு போல தன்னம்பிக்கையுடன் பரிணாமத்துக்கு ஆதாரமாக அர்கீயாப்டெரிக்ஸ்சை காட்ட முடியவில்லை. 

இந்த நிலையில் தான் நாம் மேலே பார்த்த ஆய்வு முடிவுகள் வந்திருக்கின்றன. இனியும் அர்கீயாப்டெரிக்ஸ்சை பறவை என்று சொல்ல முடியாத நிலைக்கு பரிணாமவியலாளர்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர். அர்கீயாப்டெரிக்ஸ், மற்றுமொரு சிறிய அளவிலான (இறகுகள் இருக்கக்கூடிய, பறக்க முடியாத) டைனாசர்...அவ்வளவே. 

பத்தோடு பதினொன்றாக மற்ற டைனாசர்களுடன் சேர்ந்து விட்டது அர்கீயாப்டெரிக்ஸ்.

"Perhaps the time has come to finally accept that Archaeopteryx was just another small, feathered, bird-like theropod fluttering around in the Jurassic" - Lawrence M.Witmer, Nature, Vol 475, 28th July 2011, 458, doi:10.1038/nature10288. 
"அர்கீயாப்டெரிக்ஸ்சை மற்றுமொரு சிறிய, இறகுகள் உடைய theropod (முன்னங்கால்களை சிறிதாகக் கொண்ட உயிரினங்கள்) என்று ஒப்புக்கொள்ள வேண்டிய தருணம் இறுதியாக வந்துவிட்டது" - (extract from the original quote of) Lawrence M.Witmer, Nature, Vol 475, 28th July 2011, 458, doi:10.1038/nature10288.

இதற்கெல்லாம் காரணம், சீனாவைச் சார்ந்த, தொல்லுயிரியல் உலகில் பெரிதும் மதிக்கப்படும் ஆய்வாளரான ஜிங் சு (Xing Xu) மற்றும் அவருடைய குழுவினர் தான். 

சீனாவின் வடக்கு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு டைனாசர் படிமத்தை தீவிரமாக ஆராய்ந்த அவர் பல ஆச்சர்ய தகவல்களை வெளியிட்டுள்ளார். அந்த படிமத்தில் இருந்த உயிரினம், 'ஜியாடின்ஜியா ழெங்கி (Xiaotingia zhengi)' என்று பெயரிடப்பட்டுள்ளது. இது ஒரு பறக்க முடியாத, அதே நேரம் இறகுகளை கொண்ட டைனாசர்.
கோழி அளவிலான இந்த ஜியாடின்ஜியாவின் தன்மைகளும், அர்கீயாப்டெரிக்ஸ்சின் தன்மைகளும் கணக்கச்சிதமாக ஒத்துப்போவதை தன்னுடைய தீவிர ஆய்வின் முடிவில் உணர்ந்துக்கொண்ட ஜிங் சு, இனி அர்கீயாப்டெரிக்ஸ் பறவையல்ல, அது இன்னொரு டைனாசர் மட்டுமே என்ற முடிவுக்கு வந்தார். 

அதுமட்டுமல்லாமல், உயிரியல் மரத்தையும் மாற்றியமைத்து விட்டார் ஜிங் சு. இத்தனை காலங்களாக பறவைகளின் குடும்பத்தில் (Avialae) உட்கார்ந்திருந்த அர்கீயாப்டெரிக்ஸ், தற்போது டைனாசர்களின் (deinonychosauria) பக்கம் வந்துவிட்டது.
பரிணாமவியலாளர்கள் இத்தனை காலமாக நம்பி வந்த ஒரு விஷயத்தை தகர்ப்பது என்றால் சும்மாவா????....இதனாலேயே இந்த முடிவுகளை சமர்பிக்கும்போது தான் பதற்றத்தொடு இருந்ததாக குறிப்பிட்டுள்ளார் ஜிங் சு.  
     
"Because it has held the position as the most primitive bird for such a long time, I am kind of nervous about presenting this result" - Xing Xu, as reported by Nature news, 27th July 2011.
அர்கீயாப்டெரிக்ஸ், தொடக்க நிலை பறவையாக நீண்ட காலமாக கருதப்பட்டு வந்ததால், இந்த முடிவுகளை சமர்பிக்கும்போது நான் பதற்றத்தோடு இருந்தேன் - (Extracted from the original quote of) Xing Xu, as reported by Nature news, 27th July 2011.   

ஜிங் சு சமர்பித்தும் விட்டார். 'இனி அர்கீயாப்டெரிக்ஸ் உலகின் முதல் பறவை இல்லை' என்று Nature-ரும் தலையங்கம் வெளியிட்டுவிட்டது. 

ஆனால் பிரச்சனை இத்தோடு முடிய போவதில்லை. இனி தான் பூதாகரமாக வெடிக்கப்போகின்றது. காரணம், முதல் பறவை என்னும் இடத்தில் இருந்து அர்கீயாப்டெரிக்ஸ் வெளியேற்றப்பட்டுள்ளதால், உலகின் முதல் பறவை வேறு எதுவாக இருக்கும் என்று அறிவிக்க வேண்டிய நிலைக்கு ஆய்வாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல், பறவைகள் எப்படி தோன்றியிருக்கும் என்பது குறித்தும் மிக குழப்பான சூழ்நிலை நீடிக்கின்றது.

"The finding leaves palaeontologists in the awkward position of having to identify another creature as the oldest and original avian on which to base the story of birdlife" - Ian Sample, 'Oldest bird' Archaeopteryx knocked off its perch in controversial new study, 27th july, Guardian.   
இந்த கண்டுபிடிப்பு தொல்லுயிரியலாளர்களை தர்மசங்கடமான நிலைக்கு தள்ளியிருக்கின்றது. தற்போது அவர்கள் வேறு ஒரு உயிரினத்தை பழங்கால பறவையாக அடையாளம் கண்டு அதன் மீது பறவைகளின் வாழ்க்கை கதையை நிர்மாணிக்க வேண்டிய நிலையில் இருக்கின்றனர் - (extract from the original quote of) Ian Sample, 'Oldest bird' Archaeopteryx knocked off its perch in controversial new study, 27th july, Guardian.     

உங்களில் சிலர் நினைக்கலாம், பறவைத்தன்மையை அர்கீயாப்டெரிக்ஸ் இழந்தது பரிணாம உலகை வருத்தத்தில் ஆழ்த்தியிருக்குமென்று. ஆம், அது ஒருபக்கம் உண்மையாக இருக்கலாமென்றாலும், அதனைக் காட்டிலும் இவர்களுக்கு நிம்மதியையே கொடுத்திருக்கும் இம்முடிவுகள் என்பதுதான் உண்மை. அர்கீயாப்டெரிக்ஸ் குறித்த கேள்விகளால் கடந்த காலங்களில் துளைத்தெடுக்கப்பட்டவர்கள் இவர்கள். ஆகையால் இந்த கண்டுபிடிப்பு வருத்தத்தைவிட நிம்மதியையே அதிகமாக கொடுத்திருக்கும். "அறிவியலில் இதெல்லாம் சகஜம்" என்று மற்ற பரிணாம ஆதாரங்கள் சிதைந்தபோது சொன்னதையே திரும்ப சொல்லிவிடுவார்கள்.

படைப்பு மற்றும் Intelligent Design கோட்பாட்டை ஆதரிக்கும் ஆய்வாளர்களுக்கோ, இது "ஸ்வீட் எடு...கொண்டாடு" தருணம். ஏனென்றால், அர்கீயாப்டெரிக்ஸ் படிமத்தில் இருக்கும் குழப்பங்களை நீண்ட காலமாகவே சுட்டிக்காட்டி வந்தவர்கள் இவர்கள். 

எது எப்படியோ, கடந்த 150 ஆண்டுகளாக பரிணாமவியலாளர்கள் மனதில் செம்மையாக வாழ்ந்துக்கொண்டிருந்த பறவை சென்ற வாரத்தோடு இறந்துவிட்டது.

ஆய்வாளர்களோடு சேர்ந்து அர்கீயாப்டெரிக்ஸ்சின் பறவைத்தன்மைக்கு நாமும் விடைக்கொடுப்போம்.......bye-bye birdie...

இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமீன்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்....

Title Inspiration:
1. This article's title "bye-bye birdie" was inspired from a 'Scientific American' article dated 9th Oct 2009.

My Sincere thanks to:
1. Nature
2. AFP.

References:
1. An Archaeopteryx-like theropod from China and the origin of Avialae - Xing Xu, Hailu You, Kai Du &amp; Fenglu Han. Nature 475, 465–470, 28 July 2011, doi:10.1038/nature10288. link
2. Archaeopteryx no longer first bird - 27 July 2011, Nature, doi:10.1038/news.2011.443. link
3. An icon knocked from its perch - Lawrence M.Witmer, Nature, Vol 475, 28th July 2011, 458, doi:10.1038/nature10288 (Document available upon request).
4. Earliest bird was not a bird? New fossil muddles the Archaeopteryx story - 27 July 2011, Discover Magazine. link
5. 'Oldest bird' Archaeopteryx knocked off its perch in controversial new study - 27 July 2011, Guardian. link
6. Ancestor of all birds knocked from its perch - Jul 27, 2011, Yahoo on AFP report. link
7. 'Oldest bird' knocked off its perch - 27th July 2011. Cosmic log on msnbc. link
8. Archaeopteryx : An Early Bird - University of california. link
9. Icon 5 — Archaeopteryx - National center for science education. link
10. Archaeopteryx - wikipedia. link
11. Archaeopteryx Knocked From Roost as Original Bird - 27th July 2011, wired.com. link
12. Feathers fly in first bird debate - BBC, 27 July 2011. link
13. Archaeopteryx knocked off its perch as first bird - New Scientist, 27 July 2011. link
14. Flap Flop: Earth's First Bird Not a Bird After All - Live Science, 27 July 2011. link


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ






55 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

    //எது எப்படியோ, கடந்த 150 ஆண்டுகளாக பரிணாமவியலாளர்கள் மனதில் செம்மையாக வாழ்ந்துக்கொண்டிருந்த பறவை சென்ற வாரத்தோடு இறந்துவிட்டது.//

    அதனாலென்ன உண்மையை காலகாலமாய் ஏற்றுக்கொள்ளா இந்த பரிணாமவாதிகள் மீண்டும் ஒரு பொய்யுடன் உலகை வலம் வருவார்கள். இவ்வுலகையும் உயிரினங்களையும் படைத்தவன் ஒருவன் இருக்கின்றான் என்ற உண்மையை தாங்கள் உணர்ந்து கொண்டே தங்களையும் தங்களை சார்ந்தவர்களையும் ஏமாற்றிக்கொண்டு வாழ்க்கையைக் கழிக்கின்றனர். அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழியைக் காட்டுவானாக!

    ReplyDelete
  2. புகழனைத்தும் அனைத்து உயிர்களையும் படைத்து பரிபாலனம் செய்யும் இறைவனுக்கே..!

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    பரிணாமவாதிகளுக்கு :-
    எனது அழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

    சகோ.ஆஷிக் அஹ்மத்...

    "பரிணாமவியலில் இதெல்லாம் சகஜமப்பா..!"
    So.... "ஸ்வீட் எடேய்...கொண்டாடேய்...!

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும்!

    டார்வின் ரசிகர்கள் இந்த பதிவுக்கு என்ன பதில் கொடுக்கிறார்கள் என்று பார்க்க நான் ஆவலாக இருக்கிறேன்.

    சிறந்த பதிவை தந்தமைக்கு நன்றி சகோ ஆஷிக்!

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும்!
    சிறந்த பதிவை தந்தமைக்கு நன்றி சகோ ஆஷிக்!

    புகழனைத்தும் அனைத்து உயிர்களையும் படைத்து பரிபாலனம் செய்யும் இறைவனுக்கே..!

    ReplyDelete
  5. //ஆக, டைனாசர்களின் தன்மைகளும் பறவைகளின் தன்மைகளும் ஒருசேர கலந்திருந்ததால், உலகின் முதல் பறவை டைனாசர்களில் இருந்து பரிணாமம் அடைந்து வந்திருக்க வேண்டுமென்று நம்பப்பட்டது.//
    //சிறிய அளவிலான டைனாசர்கள் காலப்போக்கில் சிறுகச் சிறுகச் (தொடக்க நிலை பறவையான) அர்கீயாப்டெரிக்ஸ்சாக மாறி பின்னர் அவற்றிலிருந்து பறவைகள் வந்தன என்று பரிணாமம் விளக்கப்பட்டது. //

    இவ்வாறு அவர்கள் விளக்கி இருந்தால்.....எனக்கு இது முட்டாள் தனமான விளக்கமாகவே தெரிகிறது. அறிவியலும் இன்று அதை ஒப்புக்கொண்டுள்ளது.

    பரிணாமத்திற்கு இவர்கள் தந்த விளக்கம் தவறாக இருக்கலாம். எனக்கு பரிணாமத்தில் நம்பிக்கை உண்டு. அந்த பரிணாமம் உண்டாக காரணமும் அந்த ஏக இறைவன் தான் என்ற கூடுதல் நம்பிக்கையும் உண்டும்

    நல்ல கட்டுரை சகோ....

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அலைக்கும்! (வரஹ் )

    //எந்த தன்மைகளை வைத்து அர்கீயாப்டெரிக்ஸ்சை தொடக்க நிலை பறவை (Avialae) என்றார்களோ, அதே தன்மைகள் பறக்க முடியாத டைனாசர்களிலும் காணப்பட்டது. இது பரிணாமவியலாளர்களை மிகுந்த குழப்பத்தில்/சங்கடத்தில் ஆழ்த்தியது. //

    நெருப்புக்கோழிக்கு கூட இறக்கை பெரிசாதான் இருக்கு அதனால பறக்க முடியலையே ...!!!

    அதேப்போல குரங்கிலிருந்து(ஙே) வந்த மனிதன்..???.

    நமக்கு இதெல்லாம் ஒரு குழப்பமே கிடையாது .நாத்திகவாதிக்குதான் இன்னும் தலைசுமை அதிகம் :-). நல்லா குழம்பட்டும் .

    ReplyDelete
  7. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ

    சகோ!

    அல்ஹம்துலில்லாஹ்

    அருமையான கட்டுரை அறிய தந்தமைக்கு ஏக இறைவன் உங்களுக்கு நற்கூலி கொடுப்பானாக ஆமீன்...

    //இது "ஸ்வீட் எடு...கொண்டாடு" தருணம். //
    இது தான் இன்றைய இப்தார் விருந்தா? :))

    ReplyDelete
  8. சகோதரர் Jafar Safamarva,

    வ அலைக்கும் ஸலாம் (வரஹ்),

    ////அதனாலென்ன உண்மையை காலகாலமாய் ஏற்றுக்கொள்ளா இந்த பரிணாமவாதிகள் மீண்டும் ஒரு பொய்யுடன் உலகை வலம் வருவார்கள்.////

    உண்மையாகத்தான் தோன்றுகின்றது. இந்த ஆய்வு முடிவு வெளியிடும் போது கூட, அனைத்து damage control முறைகளையும் பயன்படுத்தியதாகவே தெரிகின்றது.

    ///அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழியைக் காட்டுவானாக!///

    ஆமீன்...

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  9. அஸ்ஸலாமு அலைக்கும்!
    RAMALAN MUBARAK

    MASHA ALLAH VERY GD POST

    ReplyDelete
  10. அஸ்ஸலாமு அலைக்கும்

    ரமதான் கறீம் சகோததரே

    மாஷா அல்லாஹ் நல்லா தொகுத்து இருக்கீங்க, என்னை போன்றோருக்கு மிகவும் எளிமையாக விளங்கும்படியாக இருக்கின்றது.

    இன்ஷா அல்லாஹ் ஒரு நாள், எல்லோருக்கும் விளங்கிடத்தான் செய்யும், அந்த நாளில் நாம் எல்லோரும் விலங்கிடப்பட்டவர்கள் போல் ஒன்றும் செய்யவியலாதிருப்போம்.


    Bye Bye birdie ...

    ReplyDelete
  11. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    இறைசிந்தனையாளர்களின் சிறந்த பதிவுகளுக்கு மகுடங்களில் ஒன்றாக ஆணித்தரமான அத்தாட்சிகளுடன் இப்பதிவு ஒளியூட்டி மிளிருகிறது.

    இறையருளால் வ‌ள‌ர்த்துங்க‌ள்! வ‌ள‌ருங்க‌ள்!

    வாஞ்சையுட‌ன் வாஞ்ஜூர்.

    ReplyDelete
  12. சகோதரர் முஹம்மது ஆஷிக்,

    வ அலைக்கும் ஸலாம் (வரஹ்),

    --------
    பரிணாமவாதிகளுக்கு :-
    எனது அழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
    --------

    :)

    ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஆதாரங்கள் அவர்கள் மனதை விட்டு நீங்கியதற்கு நீங்கள் பலமுறை உங்கள் இரங்கலை தெரிவிக்க வேண்டும்...

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....

    ReplyDelete
  13. சகோதரர் சுவனப்பிரியன்,

    வ அலைக்கும் ஸலாம்,

    -----
    டார்வின் ரசிகர்கள் இந்த பதிவுக்கு என்ன பதில் கொடுக்கிறார்கள் என்று பார்க்க நான் ஆவலாக இருக்கிறேன்.
    ----

    துறைச்சார்ந்த பரிணாம ஆதரவாளர் ஒருவர் பரிணாமம் குறித்து தொடர் எழுத போவதாக கூறி ஆரம்பித்தார். இந்த சுமார் 1.2 வருடங்களில், முன்னுரை சேர்க்காமல் இரண்டு பதிவு மட்டுமே வந்ததாக நினைவிருக்கின்றது (அதிலும் ஒரு பதிவு அர்கீயாப்டெரிக்ஸ் பற்றியது) வேலை அதிகமிருக்கலாம். அவர் தொடரும்பட்சத்தில் பல நாத்திகர்களுக்கு பரிணாமம் குறித்து அறிந்துக்கொள்ள உறுதுணையாக இருக்கும்.

    ஆனால் ஒன்று. அவர் போன்ற என்னுடன் ஏற்கனவே வாதித்த சகோதரர்கள் மறுபடியும் வந்தால், முன்பு பாதியில் நிற்கும் வாதத்தை முடித்து விட்டு இதற்கு வருவோம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்வேன்...

    தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  14. சகோதரர் Mohamed Himas Nilar,

    வ அலைக்கும் சலாம்,

    புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே உரித்தாவதாக...

    வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி சகோதரர்..

    ReplyDelete
  15. சகோதரர் புரட்சிமணி,

    உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

    ///இவ்வாறு அவர்கள் விளக்கி இருந்தால்///

    சகோதரர் நான் பதிவில் கொடுத்துள்ள லிங்க்குகளை பாருங்கள். நீங்களே அறிந்துக்கொள்வீர்கள். அந்த லிங்க்குகளில் பெரும்பாலாவை பரிணாமத்தை தீவிரமாக ஆதரிக்கும் ஆய்விதழ்கள்/செய்தி நிறுவனங்களே...

    //எனக்கு பரிணாமத்தில் நம்பிக்கை உண்டு.//

    பரிணாமத்தை தீவிரமாக ஆராயுங்கள் என்று உங்களுக்கு வேண்டுகோள் இடுவதை தவிர தற்போது சொல்லுவதற்கு ஒன்றுமில்லை. தங்களுக்கு விருப்பமிருந்தால் பரிணாமத்தை பற்றிய என்னுடைய பதிவுகளை, அதில் உள்ள விவாதங்களை காண அழைக்கின்றேன்...

    http://ethirkkural.blogspot.com/p/blog-page_19.html

    தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....

    ReplyDelete
  16. சகோதரர் ஜெய்லானி,

    வ அலைக்கும் ஸலாம் (வரஹ்)

    ///நெருப்புக்கோழிக்கு கூட இறக்கை பெரிசாதான் இருக்கு அதனால பறக்க முடியலையே ...!!!
    அதேப்போல குரங்கிலிருந்து(ஙே) வந்த மனிதன்..???.//

    மீன் வலையில் உள்ள ஓட்டைகளை கூட கஷ்டப்பட்டு எண்ணிவிடலாம். ஆனால் பரிணாமத்தில் உள்ள ஓட்டைகளை...ம்ஹும்

    தங்களை கீழ்காணும் பதிவை படிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

    http://ethirkkural.blogspot.com/2010/10/evolution-stheory-harry-potter-stories.html

    ///நாத்திகவாதிக்குதான் இன்னும் தலைசுமை அதிகம் :-). நல்லா குழம்பட்டும் .///

    பரிணாம ஆதரவாளர்களை தான் நாடுவோரில் இறைவன் சேர்ப்பானாக என்று துவா செய்வோம்...

    தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  17. சகோதரி ஆமினா,

    வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு...

    எல்லாப் புகழும் இறைவனிற்கே...வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி...

    ReplyDelete
  18. சகோதரர் ரியாஸ் அஹமத்,

    வ அலைக்கும் சலாம்...தங்களுக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்.

    புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே உரித்தாவதாக...வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி..

    ReplyDelete
  19. சகோதரர் ஜமால்,

    வ அலைக்கும் சலாம்,

    இனிய ரமலான் வாழ்த்துக்கள்.

    //இன்ஷா அல்லாஹ் ஒரு நாள், எல்லோருக்கும் விளங்கிடத்தான் செய்யும், அந்த நாளில் நாம் எல்லோரும் விலங்கிடப்பட்டவர்கள் போல் ஒன்றும் செய்யவியலாதிருப்போம்//

    அல்ஹம்துலில்லாஹ்...எவ்வளவு அருமையாக சொல்லிவிட்டீர்கள் சகோதரர். மாஷா அல்லாஹ்.

    வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி,

    ReplyDelete
  20. அன்பு அப்பா வாஞ்சூர் அவர்களுக்கு,

    வ அலைக்கும் சலாம் (வரஹ்)

    ///இறைசிந்தனையாளர்களின் சிறந்த பதிவுகளுக்கு மகுடங்களில் ஒன்றாக ஆணித்தரமான அத்தாட்சிகளுடன் இப்பதிவு ஒளியூட்டி மிளிருகிறது.///

    தங்களுடைய பாராட்டுக்கு மிக்க நன்றி. எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே உரித்தாவதாக....ஆமீன்.

    வருகைக்கு நன்றி....

    ReplyDelete
  21. குரங்கிலிருந்து வந்த(?) ஒருவர் கூட இன்னும் கருத்திடக் காணோமே! பாவம் வேறு ஆதாரத்தை தேடிக் கொண்டிருக்கிறார்களோ என்னவோ

    ReplyDelete
  22. சகோதரர் மஸ்தூக்கா,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    நலமுடன் இருக்கின்றீர்களா சகோதரர்??. தாங்கள் தொடர்ந்து சிறப்பாக தாவாஹ் செய்து வருகின்றீர்கள் என்பதை அறிவேன். எல்லாப் புகழும் இறைவனிற்கே உரித்தாவதாக...ஆமீன்.

    ///குரங்கிலிருந்து வந்த(?)///

    well..."குரங்கு போன்ற ஒன்றிலிருந்து வந்த (?)" என்பதுதான் தற்போதைய பரிணாம புரிதல்படி சரியானதாக இருக்கும்.

    குரங்கிலிருந்து மனிதன் வந்ததாக டார்வின் கூறினார். ஆனால் பின்னர் இந்த கருத்து பரிசீலிக்கப்பட்டு, நாமும் குரங்குகளும் ஒரு பொதுவான மூதாதையரில் இருந்து வந்ததாக மாற்றியமைக்கப்பட்டது. ஆனால் டார்வின் சொன்னதற்கும் ஆதாரங்கில்லை. இன்று இவர்கள் சொல்லுவதற்கும் ஆதாங்கலில்லை.

    குரங்கு போன்ற ஒன்றிலிருந்து கொஞ்ச கொஞ்சமாக நிமிர்ந்து மனிதன் வந்ததாக படம் போட்டு காட்டுவார்களே, அதெல்லாம் சுத்த non-sense. இன்ஷா அல்லாஹ் இது குறித்து ஒருநாள் எழுதவேண்டும்...துவா செய்யுங்கள்.

    தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  23. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!

    அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.

    நான்கு மாதங்களுக்கு பிறகு தங்களது அக்மார்க் பதிவு. அருமை என்ற வார்த்தையை தவிர வேறு என்ன சொல்வது என்று தெரியவில்லை. உங்களின் தேடல், ஆய்வு, அனைவருக்கும் புரியும்படியான தமிழாக்கம்.. புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே!

    பரிணாமவாதிகளை பார்த்து வருத்தமாக இருக்கிறது. இறந்து போன பறவைக்கு BYE..! BYE..!

    எல்லாம் வல்ல இறைவன் தங்களது கல்வி ஆற்றலை மேலும் அதிகப்படுத்துவானாக!

    ReplyDelete
  24. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ ஆஷிக்.
    அருமையான பதிவு, அருமையான தமிழாக்கம் பரிணாமத்தில் உள்ள ஓட்டைகளை வெளிக்கொணர்வதில் உங்களுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்

    ReplyDelete
  25. /"அறிவியலில் இதெல்லாம் சகஜம்"/
    நேற்று ஒருவன் சரியென்று சொன்னதை இன்று ஒருவன் மாற்றுகிறான். நாளை மற்றொருவன் மாற்றப் போகிறான். பரிணாம வளர்ச்சி ஒரு புதிர்...

    ReplyDelete
  26. சகோதரர் பாஸித்,

    வ அலைக்கும் ஸலாம்,

    //பரிணாமவாதிகளை பார்த்து வருத்தமாக இருக்கிறது.//

    தற்போதைய நிலையில், உங்கள் வருத்தத்திற்கு தகுதி இல்லாத ஆட்களாக தான் அவர்கள் தெரிகின்றனர்.

    வருகைக்கும், துவாவிற்கும், ஊக்கத்திற்கும் நன்றி....

    ReplyDelete
  27. சகோதரர் பேட்,

    வ அலைக்கும் ஸலாம்,

    -------
    பரிணாமத்தில் உள்ள ஓட்டைகளை வெளிக்கொணர்வதில் உங்களுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்
    ----------

    :). பாஸ் அப்படியெல்லாம் செய்துவிடாதீர்கள் ப்ளீஸ். நமக்கான உண்மையான அங்கீகாரம் என்பது இறைவனிடத்தில் மட்டுமே உள்ளது.

    நல்ல வேலை, கொடுப்பதற்கு முன்பு சொன்னீர்கள்...

    வருகைக்கும், ஊக்கத்திற்கும் நன்றி சகோதரர்..

    ReplyDelete
  28. சகோதரர் சரவணன்,

    உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக....

    ////பரிணாம வளர்ச்சி ஒரு புதிர்...///

    பரிணாமத்தை பொறுத்த வரை பல நடப்புகள் புதிர், மர்மம் etc தான்....

    1. உலகின் முதல் உயிர் எப்படி தோன்றியது? - மர்மம்...
    2. ஒரு புரதம் எப்படி உருவானது? - மர்மம்
    3. ஒரு செல் உயிரிகள் எப்படி பலசெல் உயிரிகளாக மாறின? - புதிர்...
    4. பறவைகள் தோன்றுவதற்கு பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னமே பறக்கும் பூச்சிகள் தோன்றிவிட்டன. இவை எந்த உயிரினத்திலிருந்து வந்தன - மர்மம்.
    5. பறக்கும் தன்மை எப்படி உருவானது? - புதிர்.
    6. உயிரினங்கள் முதன் முதலாக படிமங்களில் காணப்படும்போதே முழுமையாகவும், முன்னேறிய நிலையிலும் உள்ளன. - புதிர் மற்றும் மர்மம்.

    இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். முக்கிய கேள்விகள் எதற்கும் பதிலில்லை. இப்படி எல்லாமே புதிர், மர்மம் என்றால் அப்புறம் எப்படி பரிணாமம் உண்மை??...இதுதான் Scientific Method-ஆ...

    சகோதரர் தங்களை பரிணாமம் குறித்து ஆராய அழைப்பதை தவிர சொல்லுவதற்கு வேறொன்றும் இல்லை...

    தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  29. உங்களின் மீது இறைவனின் அமைதி நிலவட்டுமாக.

    சஹோ.ஆஷிக்,

    பரிணாம பதிவிற்கு இடைவெளி விட்டதால் அதை ஈடுசெய்யும் விதமாக +1 பதிவை போட்டுள்ளீர்கள்.

    பரிணாமவாதிகளுக்கு பரிணாமம் பற்றி பேச கூட முடியாத நிலை, அதற்கெதிராக ஆணித்தரமான ஆதாரங்கள்.

    ஒவ்வொரு தனி மனிதனும் பரிணாமத்தை பற்றி சிந்திக்கும் நிலையிலேயே அது பொய் என்பதை உணர்வார்கள்.

    நாம் கூறுவதை கூறிக்கொண்டே இருப்போம், சிந்திப்பவர்கள் விளங்குவார்கள்.

    சிறந்த பதிவு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  30. அஸ்ஸலாமு அலைக்கும்
    சகோதரா! அற்புதமான பதிவு.பரிணாமம் பற்றிய தங்களின் தேடல்....மாஷா அல்லாஹ். சிறிது இடைவெளி விட்டு வந்த பரிணாம பதிவு (காத்திருக்குமாம் கொக்கு).
    சில கும்மிகளை இந்த பக்கமே காணவில்லையே சகோதரா பிண்ணூட்டம் ஒரு சூடு இல்லாமல் போய்கிட்டு இருக்கே

    ReplyDelete
  31. சகோதரர் கார்பன் கூட்டாளி,

    உங்கள் மீதும் இறைவனின் அமைதி நிலவுவதாக...ஆமீன்.

    உங்களைப் போன்றவர்களை போட்டியாக கருதியே என்னுடைய பரிணாம பதிவுகள் வருகின்றன. உங்களின் தரமான பதிவுகளே எனக்கு அளவுகோல். எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே உரித்தாவதாக...

    -----
    ஒவ்வொரு தனி மனிதனும் பரிணாமத்தை பற்றி சிந்திக்கும் நிலையிலேயே அது பொய் என்பதை உணர்வார்கள்.
    -----

    அருமையா சொன்னீங்க...

    சொல்ல வேண்டியது நம் கடமை. நேர்வழி காட்ட வேண்டியது இறைவன் மட்டுமே. அதனால் சொல்லிக்கொண்டே இருப்போம்.

    வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி சகோதரர்...

    ReplyDelete
  32. சகோதரர் ஜாகிர்,

    வ அலைக்கும் சலாம்,

    ///காத்திருக்குமாம் கொக்கு///

    அடடா..எப்படிங்க இப்படியெல்லாம் வாட்ச் பண்ணுறீங்க..மிகச் சரியா சொல்லிருக்கீங்க...ரொம்ப நாளா செமையான பரிணாம மேட்டர் கிடைக்குமான்னு கொக்கு மாதிரி வெயிட் பண்ணி எழுதுனது தான் இது....அல்ஹம்துலில்லாஹ்...

    வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி சகோதரர்...

    ReplyDelete
  33. இப்னுபஷீர்Thursday, August 04, 2011

    நீங்கள் சொல்லும் மர்மங்களுக்கெல்லாம் விடை இருக்கிறது.
    1. உலகின் முதல் உயிர் எப்படி தோன்றியது? - மர்மம்...
    அல்லாஹ்தான் உயிரை உருவாக்கினான் என்று அறிவோம். அல்லாஹ் எபப்டி உருவாக்கினான் என்பது அவனுக்கே தெரியும்.
    2. ஒரு புரதம் எப்படி உருவானது? - மர்மம்
    இதனை பற்றி அல்குரான் ஏதும் சொல்லவில்லை. ஆகவே இதனை பற்றி ஆராயக்கூடாது.
    3. ஒரு செல் உயிரிகள் எப்படி பலசெல் உயிரிகளாக மாறின? - புதிர்...
    ஒரு செல் பல செல் என்றெல்லாம் அல்குரான் கூறவில்லை. ஆகவே இதனை பற்றி ஆராய்வது நமக்கு ஹராமானது.
    4. பறவைகள் தோன்றுவதற்கு பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னமே பறக்கும் பூச்சிகள் தோன்றிவிட்டன. இவை எந்த உயிரினத்திலிருந்து வந்தன - மர்மம்.
    பறவைகளும் பூச்சிகளும் ஒரே நாளில்தான் அல்லாஹ் படைத்தான். ஆகவே எதற்கு முன்னால் எது என்று எப்படி ஆராயமுடியும்?
    5. பறக்கும் தன்மை எப்படி உருவானது? - புதிர்.
    அல்லாஹ் பறவைகளை பறக்க சொன்னான். அதனால் அவைகள் பறக்கின்றன.
    6. உயிரினங்கள் முதன் முதலாக படிமங்களில் காணப்படும்போதே முழுமையாகவும், முன்னேறிய நிலையிலும் உள்ளன. - புதிர் மற்றும் மர்மம்.

    எல்லா உயிரினங்களும் முழுமையாகவே உள்ளன. அவற்றை அல்லாஹ் அப்படித்தான் படைத்திருக்கிறான்.

    நன்றி

    ReplyDelete
  34. சகோதரர் இப்னு பஷீர்,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    என்னுடைய கமெண்ட் பரிநாமவியலால்ர்களின் எண்ண ஓட்டத்தில் இருந்து சொல்லப்பட்டது. "ஒரு செல் உயிரியிலிருந்து பல செல் உயிரி வந்ததாக கூறுகின்றீர்களே அதற்கு என்ன ஆதாரம், அது மர்மமா?"...இப்படி அவர்களது பார்வையிலிருந்தே கூறி விளக்கம் கேட்கபட்ட கமெண்ட் அது...என்னுடைய பார்வை அல்ல...

    தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  35. niyma72 has left a new comment on your post "உலகின் 'முதல்' பறவை இறந்தது...bye-bye birdie":

    அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்
    ரமதான் முபாரக்
    சகோதரர் அஷிக் மாஷா அல்லாஹ் மற்றுமொறு பரினமவியல் கோட்பாடை தகர்க்கும் கலக்கல் பதிவு.//150 ஆண்டு காலம் பரிணாமவியலாளர்கள் மனதில் செம்மையாக வாழ்ந்துக்கொண்டிருந்த பறவை சென்ற வாரத்தோடு இறந்துவிட்டது.//

    உங்களின் உண்மை கலந்த நகைச்சுவை பதிவு சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்தது உங்கள் பதிவை படித்து விட்டு பரிணாம வியலை ஆதரித்தவர்கள் என்ன பாடு படுகிறார்களோ சகோ.இருந்தாலும் நீங்க இப்படி தடாலடியாக ஒரு பதிவ போட்டு அவங்க தூக்கத்தை கெடுத்து இருக்க கூடாது.இதுவும் நன்மைக்கே இதன் மூலமாகவாவது ஓரிறை கொள்கை பக்கம் திரும்பட்டும்.அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழி காட்டுவானாக.ஆமீன்
    வஸ்ஸலாம்.

    ReplyDelete
  36. சகோதரி niyma,

    வ அலைக்கும் ஸலாம் (வரஹ்),

    -----
    உங்கள் பதிவை படித்து விட்டு பரிணாம வியலை ஆதரித்தவர்கள் என்ன பாடு படுகிறார்களோ சகோ.இருந்தாலும் நீங்க இப்படி தடாலடியாக ஒரு பதிவ போட்டு அவங்க தூக்கத்தை கெடுத்து இருக்க கூடாது
    -----

    சகோதரி அவங்க தூக்கத்தை கெடுக்க நாம தேவை இல்லை. அதற்கு அவர்களே போதும். நாம் எரியுற தீயில் எண்ணெய் ஊற்றுகின்றோம், அவ்வளவே...:)

    ---------
    அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழி காட்டுவானாக
    ---------

    ஆமீன்...

    தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....

    ReplyDelete
  37. ஸலாம் சகோ.'டாக்டர்' ஆஷிக் அஹமத்,

    சீக்கிரமா எல்லா பதிவையும் சேர்த்து ஒரு தீஸிசாய் பக்கத்திலே பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்திலே எதுக்கும் சப்மிட் பண்ணி வச்சுருங்க...

    அப்புறம் நம்ம சகோ.பேட் அதை ஓமானில், மஸ்கட் யுனிவெர்சிட்டில ரெஜிஸ்டர் பண்ணி டாக்டர் அகிறப்போறாரு... பார்த்துக்கங்க சகோ. உடனே முனைவர் ஆகிற வழியை பாருங்க.
    சீரியஸாத்தான் சொல்றேன்.



    அடுத்து...



    தங்களுக்கு"நிரூபன்-சித்ரா-ஆஷிக்:-3பேரும் வசம்ம்மா மாட்டிக்கிட்டாங்க..!" ---இதில்
    ஓர் அழைப்பு விடுத்துள்ளேன்..!

    பதிவுலக சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, உங்களை அழைத்துள்ளேன்.

    தாங்களும் எழுதப்படாத அந்த வரைமுறைகளை பின்பற்றி என் அழைப்பை ஏற்று பதிவை தொடருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் சகோ.

    ReplyDelete
  38. அஸ்ஸலாமு அலைக்கும்
    அருமையான பதிவு.


    எனக்கு ஒரு விளக்கம் தேவைப்படுகிரது இலங்கை கிரிக்கெட் வீரர் திலகரத்னே தில்சன் இஸ்லாத்தை தலுவினாரா

    ReplyDelete
  39. வ அலைக்கும் சலாம் சகோதரர் அறத்தமிழன்,

    தங்களுடைய ஊக்கத்திற்கு நன்றி...அல்ஹம்துலில்லாஹ்...

    ----
    எனக்கு ஒரு விளக்கம் தேவைப்படுகிரது இலங்கை கிரிக்கெட் வீரர் திலகரத்னே தில்சன் இஸ்லாத்தை தலுவினாரா
    ----

    நான் தேடியவரை இது ஒரு தவறான தகவல்.

    தங்களின் வருகைக்கு நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
  40. அஸ்ஸலாமு அலைக்கும்
    முஹம்மத் ஆஷிக் அவர்களே இங்கு ( மஸ்கட்)
    நீங்கள் சொன்ன பெயரில் university கிடையாது சுல்தான் காபூஸ் university தான் உள்ளது அடுத்தவங்க படைப்பை ஆட்டையை போடும் எண்ணமெல்லாம் எமக்கு இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவரின் பதிவுகளை பார்த்துவிட்டு எனக்கு இவரை டாக்டர் என்று அழைக்க வேண்டும் என்று மனதில் தோன்றியது அதனால் தான் அப்படி ஒரு பின்னூட்டம் இட்டேன்

    ReplyDelete
  41. சகோதரர்கள் முஹம்மது ஆஷிக் மற்றும் ரப்பானி (bat),

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு...

    இந்த பட்டங்கள் குறித்து நான் ஏற்கனவே தெளிவா சொல்லிட்டேன் சகோதரர்களே...//பாஸ் அப்படியெல்லாம் செய்துவிடாதீர்கள் ப்ளீஸ். நமக்கான உண்மையான அங்கீகாரம் என்பது இறைவனிடத்தில் மட்டுமே உள்ளது.// - இப்படி...

    இல்லாத பட்டத்துக்கு யுனிவர்சிட்டி அளவுக்கு போய்.....எதிர்க்குரல் தாங்காதுப்பா. :)

    ReplyDelete
  42. //எனக்கு ஒரு விளக்கம் தேவைப்படுகிரது இலங்கை கிரிக்கெட் வீரர் திலகரத்னே தில்சன் இஸ்லாத்தை தலுவினாரா //
    அவரது தாய் பௌத்தர்,தந்தை முஸ்லிம்

    ReplyDelete
  43. அஸ்ஸலாமு அலைக்கும்
    //எனக்கு ஒரு விளக்கம் தேவைப்படுகிரது இலங்கை கிரிக்கெட் வீரர் திலகரத்னே தில்சன் இஸ்லாத்தை தலுவினாரா //
    அவரது தாய் பௌத்தர்,தந்தை மலேசிய வம்சாவளியை சேர்ந்த அதாவது மலாய் வம்சாவளி தந்தையின் மகன்.இஸ்லாம் என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்து பின் பௌத்த மதத்திற்கு மாறிவிட்டவர். பின் தந்தையும்....
    from loshan link

    ReplyDelete
  44. சகோதரர் இப்னு ஷகீர் (??????????????),

    உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்...

    வாங்க வாங்க...இன்னொன்னா???....உங்க கம்மெண்ட என்னால அனுமதிக்க முடியாது. ஏன்னு உங்களுக்கே தெரியும்...

    அப்புறம், நீங்க எழுதியிருக்க ஒரே பதிவுக்கு காலங்காலமா விளக்கத்த சொல்லி சொல்லி மாய்ந்து போய்ட்டோம்...இன்னொரு தடவ வேணும்னா இங்கே போய் குறிச்சொல் கொடுத்து பார்த்துக்குங்க. இல்லன்னா கூகிள் பண்ணி பாருங்க. நிறைய இஸ்லாமிய தளங்கள் இது குறித்து விளக்கம் கொடுக்குறாங்க.

    அப்புறம் எங்களால விளக்கம் தான் கொடுக்க முடியும். உங்கள ஏத்துக்க வைக்குறது எங்க வேல இல்ல. அதையும் தெளிவா தெரிஞ்சு வச்சிருக்கோம்.

    அப்புறம், யாரு உளருறாருன்னு நீங்க நினைக்குரீங்க்களோ அங்கே போய் விளக்கம் கேட்கணும்.

    என் அனுபவத்துல உங்கள மாதிரி எத்தனையோ பேர பார்த்தாச்சு அண்ணே...சோ better luck next time...

    bye bye anony (oops...sorry...ibnu shakir)

    take care,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  45. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
    இப்பதிவு குறித்து சொல்வதாக இருந்தால் "அல்ஹம்துலில்லாஹ்!" இந்த ஒற்றைச்சொல்லே போதுமென்று நினைக்கிறேன்., குர்-ஆன் குறித்தும் ஹதிஸ் குறித்து விளக்கம் மற்றும் விமர்சனம் பெரும்பாலான இஸ்லாமிய தளங்களில் எடுத்து எழுதுவதை காண்கிறோம்., ஆனால் முன்னமே சொன்னதுப்போல பரிணாமம் குறித்த எதிர்மறை கருத்துக்களுக்கு தகுந்த ஆதாரத்தோடு தமிழில் எழுதும் இணையங்கள் மிக மிக குறைவே., அத்தகைய பரிணாம கதைகளை தமிழில் தோலுரிக்கும் இணையங்களில் எதிர்க்குரலே முன்னோடி என்றால் அது மிகையாது., இதுப்போல் மேலும் பல ஆக்கங்கள் தந்து பரிணாமவாதிகள் எண்ணம் உண்மையாக பரிமாற்றம் அடைய அல்லாஹ் அருள்புரியட்டும்
    இறை நாடினால் இனியும் சந்திப்போம்

    ReplyDelete
  46. சகோதார் இப்னு ஷகீர்,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    உங்களுக்கு சில ஆலோசனைகள். தங்களுக்கு விருப்பமிருந்தால் ஆவணச் செய்யவும்.

    1. இந்த ஐ.பி முகவரியை மாற்றிக்கொண்டு (Anonymous proxy) வரும் யுக்தியெல்லாம் மிகவும் தொல்லை தரக்கூடியது. கணினி வேகத்தை குறைக்கும்.

    2. அதுமட்டுமல்லாமல், நம்முடைய தகவல்களை அடுத்தவர்கள் திருட எளிமையாக வழிவகை செய்துவிடும்.

    3. ஸ்பாம், உளவு வேலை போன்றவற்றிற்கு எளிமையான இலக்காக அமைந்து விடும்.

    ஆகையால், தாங்கள் அப்படி வந்து கமெண்ட் போடுவதை காட்டிலும், தற்போது மிகச்சிறந்த யுக்திகள் எல்லாம் வந்துவிட்டன. நீங்கள் கமெண்ட் போட்டால், நீங்கள் தளத்திற்கே வராத மாதிரி காட்டும் யுக்திகள் எல்லாம் கூட உள்ளன.

    நம் 'தூய்மையான' செஞ்சட்டைகாரர்களை கேட்டால் (கவனிக்க: நான் உங்களை செஞ்சட்டைகாரர் என்று சொல்லவில்லை) கேட்டால் அவர்கள் உங்களுக்கு இது குறித்து உதவலாம்...

    ஆவணச் செய்யவும்...

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
  47. Hi Aashiq,

    Can you explain me in brief.

    1. What is your knowledge on Evolution?
    2. If evolution is wrong, what is considered as the truth. Any proof?
    3. What is your knowledge on Archaeopteryx.
    4. Can you give me your genuine conclusion for Bye Bye Birdie. Is it a blow to evolution or a development to evolution?
    -------------------------------------------------

    "They never learn. Such a pity"
    Lord Voldemort:Harry Potter and the Deathly Hallows: Part 2

    ReplyDelete
  48. Professor DumbledoorWednesday, August 24, 2011

    Hi Voldemort,


    //1. What is your knowledge on Evolution?//

    You spend some time and read all his (Aashiq Ahamad's) articles which had teared apart the evolution into pieces..! Hope you know Tamil. If not no problem... go through all the links which he has given beneath every artcles.



    //2. If evolution is wrong, what is considered as the truth. Any proof?//

    I hope you can think by your own. That will give you definitely the answer.


    //3. What is your knowledge on Archaeopteryx.//

    He already has told this in this artcle in detail. If you can't understand read the links in english. So, ball is in your court now. Tell the readers about your knowledge that Archaeopteryx.


    //4. Can you give me your genuine conclusion for Bye Bye Birdie. Is it a blow to evolution or a development to evolution?//---He already said elaborately and genuinely... that, it is a big blow to the drama... ya.. evolution story..!

    Ok.


    Now,
    Mr.Voldemort,
    Can you explain me in brief.

    1. What is your knowledge on Evolution?
    2. Why evolution st(the)ory can not be wrong? Any proof?
    3. What is your knowledge on Archaeopteryx?
    4. Can you give me your genuine conclusion for Bye Bye Birdie. Is it a blow to evolution or a blow to evolutionists?

    ------------------------------------------------
    "They can learn. Help a pity"
    Professor Dumbledoor:Harry Potter and the Imaginary Hallows: Part 2

    ReplyDelete
  49. Dear Prof.Dumbledoor,

    Assalaamu Alaikum,

    Before discussing/debating with Lord Voldemort, pls see our discussion in the below link

    http://ethirkkural.blogspot.com/2011/06/blog-post_13.html

    thanks and take care,

    your brother,
    aashiq ahamed a

    ReplyDelete
  50. Hi,

    I am not Dumbledoor, I am Lord Voldemort. lol.
    Honestly speaking I like you Aashiq because you are very truthful to the blog. My salute.
    Whatever I comment, you are posting without hesitation and answering diligently.
    At the same time I also feel sorry for your in'competence to reply to my comments in post_13.
    I am still waiting for your reply to that post.

    I think I already promised you to comment on this topic.
    Anyhow, can you answer my above questions regarding evolution.
    Hope they are not tough for you to answer.

    Thank You,
    "Greatness inspires envy, envy engenders spite, spite spawns lies. You must know this, Dumbledore."
    by Lord Voldemort.

    ReplyDelete
  51. Hi Dumbledore,

    You are using wrong spelling for that magnificient character. It is "Dumbledore" and not "Dumbledoor":)

    1. What is your knowledge on Evolution?
    Hard enough to accept it in par to your goddit st(the)ory.

    2. Why evolution st(the)ory can not be wrong? Any proof?
    Because it is based on scientific methods and not on goddit st(the)ory. Proof.......? Your panacea to cold and flu.

    3. What is your knowledge on Archaeopteryx?
    Archaeopteryx is Rajini Kanth's sister.lol.(Just Kidding)
    Kingdom: Animalia
    Phylum: Chordata
    Class: Reptilia/Aves
    Suborder: Theropoda
    Order: Archaeopterygiformes
    Family: Archaeopterygidae
    Genus: Archaeopteryx
    Species: A. lithographica

    4. Can you give me your genuine conclusion for Bye Bye Birdie. Is it a blow to evolution or a blow to evolutionists?
    It is a again a blow to Gawd or goddit st(the)ory.

    Thank You,
    Lord Voldemort to Snape - "Only I can live forever."

    ReplyDelete
  52. சகோதரர் ஜெகத் தீ,

    உங்கள் மீது அமைதி நிலவுவதாக....

    தாங்கள் கண்ணியக்குறைவான '*மூ**** போன்ற வார்த்தைகளை தவிர்த்து விட்டு உங்கள் கமெண்ட்டை மறுபடியும் அனுப்புமாறு கேட்டுக்கொள்கின்றேன்...

    நன்றி,

    ReplyDelete
  53. //////மொத்தத்தில், உலகின் முதல் பறவையாகவும், பரிணாம கோட்பாட்டிற்கான வலிமையான ஆதாரமாகவும் அர்கீயாப்டெரிக்ஸ் கொண்டாடப்பட்டது.
    ஆம் கொண்டாடப்பட்டது , சில decades க்கு முன் ,
    அர்கீயாப்டெரிக்ஸ் முதல் பரவயில்லை , பறப்பனவற்றின் பரிணாமப்படிகளின் ஒரு முக்கிய பங்கு வகித டைனோசார் ./////

    //////ஆக, இறகுகள் இருந்து விட்டால் மட்டும் ஒரு உயிரினம் பறக்கும் தன்மையை பெற்றுவிடாது என்பது இதன் மூலமாக புலப்பட்டது.
    அர்கீயாப்டெரிக்ஸ், மற்றுமொரு சிறிய அளவிலான (இறகுகள் இருக்கக்கூடிய, பறக்க முடியாத) டைனாசர்...அவ்வளவே. ////

    உண்மை தான் ,ஆனால் தங்கள் பதிவில் உண்மை மறைத்து , திரித்து கூறப்பட்டிருக்கிறது
    இதற்கு பதில் ..... இங்கே
    http://walkingdoctorcom.blogspot.com/2012/01/blog-post.html
    http://walkingdoctorcom.blogspot.com/2012/01/blog-post_07.html

    ReplyDelete
  54. some more explanations http://walkingdoctorcom.blogspot.com/2012/01/blog-post_23.html?showComment=1327347837476#c1838653656019815885

    ReplyDelete
  55. ஆத்திகத்திற்கும், நாத்திகத்திற்குமிடையில் இடையில் நிகழும் பனிப்போரிது. நிச்சயம் ஆத்திகம் வெல்லும்; நாத்திகம் வீழும். அதில் இஸ்லத்தின் அடிப்படையான திருக்குர்ஆன் பெரும் பங்களிப்பைத் தரும். இஸ்லாம் அனைத்தையும் மிஞ்சி நிற்கும் என்பது இரைவாக்கு அல்லவா!! அதற்கு துணை நிற்பதே நமது கடமை.

    ReplyDelete