Showing posts with label பரிணாமம். Show all posts
Showing posts with label பரிணாமம். Show all posts

Monday, January 25, 2016

'ஆக்டோபஸ் எனும் வேற்றுக்கிரகவாசி'





நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...

"Not to send you into a meltdown or anything but octopuses are basically ‘aliens’ – according to scientists. Researchers have found a new map of the octopus genetic code that is so strange that it could be actually be an “alien” " -  Don't freak out, but scientists think octopuses 'might be aliens' after DNA study, 13th August 2015, BT.com 
"உங்களை நிலைக்குலைய செய்வது எங்களின் நோக்கமல்ல. அதே நேரம், விஞ்ஞானிகளை பொருத்தமட்டில் ஆக்டோபஸ் ஒரு வேற்றுக்கிரகவாசியாக கருதப்படுகின்றது. ஆக்டோபசில் நடைபெற்ற சமீப கால ஆய்வுகள், அவை மிக வினோதமான மரபணுக்களை கொண்டிருப்பதாக தெரிவிக்கின்றன. இதனாலேயே வேற்றுக்கிரகவாசியாக அவை அறியப்படுகின்றன" - (extract from the original quote)  Don't freak out, but scientists think octopuses 'might be aliens' after DNA study, 13th August 2015, BT.com.  

நில்லுங்கள். உங்கள் கற்பனைக் குதிரைகளை தட்டிவிடாதீர்கள். உலகில் யாருமே ஆக்டோபஸ்சை வேற்றுக்கிரகவாசியாக கருதுவதில்லை. ஆம், ஆக்டோபசின் மரபணுக்களில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வுகள் நம் கற்பனைக்கு எட்டாத, நீண்ட கால நம்பிக்கைகளுக்கு சவால் விடும் செய்திகளை நமக்கு கொண்டு வந்திருக்கின்றன. அதே நேரம், நீங்கள் மேலே படித்த, பிரபல BT ஊடகத்தின் வர்ணனை சற்றே மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாகவே எனக்கு தோன்றுகின்றது.

ஆக்டோபஸ்: 

சாக்குக்கணவாய் என்பது இவற்றுடைய தமிழ் பெயர் என்கிறது விக்கிப்பீடியா. எல்லோரும் புரிந்துக்கொள்ள ஏதுவாக நாம் ஆக்டோபஸ் என்றே அழைப்போம். 

ஆக்டோபஸ் பற்றிய பல உண்மைகள் வியப்பாகவே உள்ளன. எட்டு கைகள் கொண்ட இவற்றிற்கு மூன்று இதயங்கள் உண்டு. உங்களை ஆபத்தாக அது கருதினால் உங்கள் கண்களுக்கு முன்பாக, நேருக்கு நேராகவே மறைந்திருக்கும். இல்லை, நான் வார்த்தைகளை தவறாக போடவில்லை, சரியாக தான் சொல்லியிருக்கின்றேன். ஆம், உங்கள் முன்பு தான் நின்றிருக்கும், ஆனால் நீங்கள் பார்க்க முடியாது. ஆபத்தான நேரங்களில், சுற்றுச்சூழலின் நிறம் மற்றும் தன்மைகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளும் அசாத்திய திறன் கொண்டவை ஆக்டோபஸ்கள். பல நேரங்களில், இவற்றின் எதிரிகளான ஷார்க் மீன்கள், டால்பின்கள், ஈல்கள் போன்றவை ஆக்டோபஸ்சின் பக்கத்திலேயே நீந்தி செல்லும். ஆனால் இவற்றை கண்டுபிடிக்க அவற்றால் முடியாது. 

ஒருவேளை எதிரிகளால் கண்டுபிடிக்கப்பட்டால், கறுப்பு நிற மையை பீச்சியடித்து தப்பிவிடும். இந்த மையானது மேகம் போல பரவி எதிரிகளை குழப்பமடைய வைக்கும். மேலும், வெறுமனே குழப்புவதற்கு மட்டுமல்லாமல் எதிரிகளின் நுகரும் தன்மையை தற்காலிகமாக மழுங்கடிப்பதற்கும் இந்த மை பயன்படுகின்றது. அதனால், இவை தப்பிய பிறகு, தங்களின் நுகரும் தன்மையால் இவற்றை தொடர்ந்து வர எதிரிகளால் முடியாது. 

மெல்லுடல் (Mollusca) உயிரினங்களான இவை, கடல் பாறைகளின் சின்னஞ்சிறிய விரிசல்களுக்குள் கூட தன் உடலை புகுத்திக்கொண்டு எதிரிகளிடம் இருந்து தப்பிக்கும். தற்காப்பு நடவடிக்கைகள் அனைத்திலும் தோல்விடைந்து விட்டதா, எதிரி நெருங்கிவிட்டதா, கடைசி முயற்சியாக, தன் எட்டு கைகளில் ஒன்றை அறுத்துவிட்டு விடும். இதன் மூலம் எதிரிகளின் கவனத்தை சிதறடிக்கும். ஆச்சர்யம் என்னவென்றால், அந்த கையானது சில நாட்களில் திரும்ப வளர்ந்துவிடும். 

உயிரியலின்படி, தலைக்காலிகள் (Cephalopod) என்ற வகுப்பில் வரும் இவை, தங்களுடைய ஒவ்வொரு கையிலும், இரண்டு வரிசையில் உறிஞ்சு குப்பிகளை கொண்டிருக்கும். இந்த குப்பிகள், தன்னிச்சையாக சுவைகளை உணரக்கூடியவை என்பது மற்றுமொரு கவனிக்கத்தக்க செய்தி.

Fig 1. ஆக்டோபஸ் உறிஞ்சு குப்பிகளை காட்டும் படம் 
கணவாய் என்று நாம் பேச்சு வாக்கில் கூறும், உணவிற்கு பயன்படுத்தும் ஊசிக்கணவாய்களும் (squid), தலைக்காலிகள் என்ற இந்த வகுப்பில் தான் வருகின்றன என்ற போதும், அவற்றுடன் ஒப்பிடும் போது, ஆக்டோபஸ் மிக அறிவார்ந்த உயிரினமாக கருதப்படுகின்றது. இவ்வளவு ஏன், எலும்பு இல்லா (invertebrates) உயிரினங்களிலேயே மிக புத்திசாலியானவை என்ற பெருமையும் ஆக்டோபஸ்களுக்கு உண்டு. ஒருமுறை, இவற்றிற்கு பிடித்த உணவான நண்டுகளை ஜாடியில் போட்டு மூடிய போது, ஜாடியை திறந்து நண்டுகளை பிடிக்கும் அளவு அறிவார்ந்தவையாக இவை செயல்பட்டன. 

Fig 2. a) ஆக்டோபஸ்                                                     b) கணவாய்
ஆக, ஆய்வாளர்களை பொருத்தமட்டில், உலகில் உள்ள எல்லா உயிரினங்களில் இருந்தும் பெரிதும் வித்தியாசப்பட்டவை ஆக்டோபஸ்கள். இதன் காரணமாகவே, பிரபல பிரிட்டிஷ் உயிரியலாளரான மார்ட்டின் வெல்ஸ், ஆக்டோபஸ்களை 'ஏலியன் (வேற்றுக்கிரகவாசி)' என்று குறிப்பிட்டார். 

மரபணு வரிசைப்படுத்துதல் யுக்தி (Gene Sequence technique):

உயிரினங்களின் விசித்திர நடவடிக்கைகளின் பின்னணியை எப்படி அறிந்துக்கொள்வது? மரபணுக்களை ஆராய்வதே பல உண்மைகளை வெளிக்கொண்டுவரும் என்று எண்ணினர் ஆய்வாளர்கள். இப்படியான சூழலில் தான் 'மரபணு வரிசைப்படுத்துதல்' தொழில்நுட்பம் வந்தது. உயிரினங்களின் மரபணுக்களை ஆராயும் வழிகளை அது எளிதாக்கியது. இன்றோ, பல்வேறு உயிரினங்களின் பின்னணியை இந்த தொழில்நுட்பம் மூலம் கண்டறிந்து வருகின்றனர் உயிரியலாளர்கள்.

இந்த யுக்தியைக் கொண்டு, ஆக்டோபஸ்சில் முதன் முதலாக நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் ஆறு மாதங்களுக்கு முன்பாக பாரம்பரிய 'நேச்சர் (Nature)'  ஆய்விதழில் வெளிவந்தன. இந்த உயிரினத்தை போலவே ஆய்வு முடிவுகளும் விசித்திரமான செய்திகளை கூறின. அதன் பிரதிபலிப்பு தான் 'இவை வேற்றுக்கிரகவாசிகள்'  என்றுக் கூறி வெளிவந்த தலையங்கங்கள். அறிவியல் உலகை மட்டுமல்லாமல், சாமானியர்களின் உலகையும் சேர்த்து ஆட்கொண்டது இந்த செய்தி. தமிழில் கூட, சில தளங்களில் இதுக்குறித்து செய்திகள் வெளியானதாக நியாபகம்.

"The octopus appears so utterly different from all other animals, even ones it’s related to, that the British zoologist Martin Wells famously called it an alien. In that sense, you could say our paper describes the first sequenced genome from an alien," -  Clifton Ragsdale, Associate Professor of Neurobiology and leader of the team that worked on the octopus at the University of Chicago. Science Daily, August 12, 2015.
"ஆக்டோபஸ்கள், மற்ற உயிரினங்களில் இருந்து மிகவும் வேறுபடுகின்றன. இவை தொடர்புடைய (கணவாய் போன்ற) மற்ற உயிரினங்களில் இருந்தும் கூட இவை வேறுபடுகின்றன. அதனாலயே, பிரிட்டிஷ் உயிரியலாளர்  மார்டின் வெல்ஸ் இவற்றை 'ஏலியன்' என்று அழைத்தார். அப்படி பார்த்தால், நாங்கள், இந்த வேற்றுக்கிரகவாசியின் மரபணு தொகுப்பை முதல் முறையாக ஆய்வு செய்து வரிசைப்படுத்தியுள்ளோம்" - Clifton Ragsdale, Associate Professor of Neurobiology and leader of the team that worked on the octopus at the University of Chicago. Science Daily, August 12, 2015.

இந்த ஆய்வுக் குறித்து செய்தி வெளியிட்ட நாளிதழ்கள் பலவும், வேற்றுக்கிரகவாசி போன்ற வர்ணனைகள் மூலம் மக்களின் கவனத்தை கவர நினைத்தனவே தவிர, ஆய்வாளர்கள் இந்த உயிரினத்தை அப்படி அழைக்க பின்னால் இருந்த காரணங்களின் ஆழத்தை, காலங்காலமாக நம்பப்பட்டுவரும் பரிணாம நம்பிக்கைகளுக்கு ஆக்டோபஸ்சின் மரபணுக்கள் சவால் விட்டதை எடுத்துரைக்க ஏனோ மறந்துவிட்டனர்.

அப்படி என்ன சொல்லின ஆய்வு முடிவுகள்?

மரபணு வரிசைப்படுத்துதல் யுக்தியைக் கொண்டு எந்தவொரு உயிரினத்தின் மரபணுக்களை பரிணாமவியலாளர்கள் ஆராய்ந்தாலும், பரிணாமத்திற்கு ஆதரவான விசயங்களை அதில் தேடுகின்றனர். உதாரணத்திற்கு, குரங்கு போன்ற ஒன்றிலிருந்து மனிதன் வந்ததாக இவர்கள் நம்புகின்றனர். அதனால் இன்றைய மனிதனும், குரங்கின் சில இனங்களும் தொடர்புடையவை (அல்லது உறவினர்கள்) என்று கூறுகின்றனர்.

இதனை மனதில் கொண்டு,  மனித மரபணுக்களில் சோதனை நடத்தி, முடிவுகளை குரங்கின் சில இனங்களுடன் ஒப்பிட்டு பார்க்கின்றனர். அப்படி ஒற்றுமை (??) இருந்தால், 'பார்த்தீர்களா, குரங்கு போன்ற ஒன்றிலிருந்து தான் மனிதன் வந்தான் என்று நாங்கள் சொன்னது உண்மையாகிவிட்டது" என்பார்கள்.

ஒருவேளை இவ்விரு உயிரினங்களின் மரபணுக்களுக்கும் தொடர்பில்லை என்றால்? மனிதனின் தோற்றம் குறித்த இவர்களின் புரிதல் தவறு என்று தானே அர்த்தம்? ஆனால் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். மர்மமான முறையில் பரிணாமம் வேலை செய்திருக்கின்றது என்று இவர்கள் கூறும் விளக்கத்தை கண்டு நாம் நம் விதியை நொந்துக்கொள்ள வேண்டும் :-) :-).

சரி விடுங்க விசயத்திற்கு வருவோம். ஆக்டோபஸ்சில் நடத்தப்பட்ட மரபணு ஆய்விலும் இத்தகைய தொடர்பை தேடினர். அதாவது, மற்ற மெல்லுடல் மற்றும் எலும்பில்லா உயிரினங்களை ஆக்டோபஸ் ஒத்திருக்கும் என்று நினைத்தனர். ஆனால் உண்மையோ, பரிணாமவியலாளர்களின் மொழியில் சொல்ல வேண்டுமென்றால் 'ஆச்சர்யம், திகைப்பு, எதிர்ப்பார்க்காதது' போன்ற வர்ணனைகள் தான்.

எப்போது இவர்கள் 'எதிர்பார்க்காதது' போன்ற வார்த்தைகளை உதிர்க்கிறார்களோ அப்போதே நாம் உஷாராகிக் கொள்ள வேண்டும். எங்கோ பிரச்சனை வந்துவிட்டது என்பதை அறிந்துக்கொள்ள வேண்டும். 

1. இவர்கள் எதிர்பார்த்திராத முதல் விசயம், ஆக்டோபஸ்சின் மரபணுக்களில் குறிப்பிடத்தக்க அளவு, இவை தொடர்புடைய மெல்லுடல் உயிரினங்களுடன் ஒத்திராமல், முதுகெலும்பு உள்ள விலங்குகளில் மட்டுமே சாத்தியம் என்று எண்ணியிருந்த மரபணுக்களுடன் ஒத்திருந்தன (அட).

"What's more, they saw a massive expansion in a family of genes that's involved in setting up brain circuits. These genes have been studied in mice and were previously thought to be numerous only in animals with backbones. "We were really surprised as we were poking through the octopus genome to see that there were just 150 [or] 160 of these genes," Albertin says. She says they're completely absent in the invertebrates that scientists normally work on, like flies or nematode worms" - Octopus Genome Offers Insights Into One Of Ocean's Cleverest Oddballs , Nell Greenfieldboyce, NPR , August 12, 2105
"இன்னும் என்ன வேண்டும், ஆக்டோபஸ்சின் மூளை அமைப்புகளுடன் தொடர்புடைய சுமார் 150, 160 மரபணுக்களை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இப்படியான மரபணுக்களை எலிகளில் அவர்கள் கண்டுள்ளனர். மேலும், இந்த மரபணுக்கள் முதுகெலும்புள்ள விலங்குகளில் மட்டுமே சாத்தியம் என்று எண்ணியிருந்தனர். ஆய்வாளர்கள் இதுவரை ஆய்வு செய்துள்ள எலும்பில்லாத உயிரினங்களில் இவை முற்று முழுவதுமாக காணப்படவில்லை  - (Extract from the original quote of) Octopus Genome Offers Insights Into One Of Ocean's Cleverest Oddballs - Nell Greenfieldboyce, NPR , August 12, 2105
ஒரு உயிரினத்தின் மரபணுக்கள், அது சார்ந்த உயிரினங்களுடன் ஒத்துப்போகாமல், எங்கோ தூரமாக உள்ள உயிரினங்களுடன் ஒத்துப்போவதான காட்சிகளை, நிச்சயம், பரிணாம ஆதரவாளர்கள் விரும்புவதில்லை. பரிணாமக் கோட்பாட்டின் யூகங்களுக்கு முற்றிலும் மாறான செய்திகள் இவை. இந்த விவகாரத்தை நோக்கும் சாதாரண மனிதனுக்கு கூட இது புரியும். ஆனால், நம்பிக்கையின் பால் சுழலும் பரிணாமவியலாளர்கள், இவற்றை ஏற்க மறுத்து, இந்த நிகழ்வுகளுக்கு வேறு காரணங்களை தேடி அலைகின்றனர்.

அப்படி கண்டுபிடித்த ஒரு காரணம் தான் 'தன்னிச்சையாக பரிணமித்தல் (Convergent Evolution)'. அதாவது, தொடர்பில்லாத இரண்டு உயிரினங்களிடையே மரபணுக்கள் ஒத்திருக்கின்றனவா, அப்படியானால், இந்த மரபணுக்கள் இரண்டு உயிரினங்களிலும் தன்னந்தனியாக பரிணமித்து விட்டதாக அர்த்தமாம். ஆக, மரபணுக்கள் தொடர்பிருந்தாலும் அங்கு பரிணாமம் நடந்ததாக அர்த்தம், தொடர்பில்லை என்றாலும் அங்கு பரிணாமம் நடந்ததாக அர்த்தம். what a pity !!!

சரி, இந்த தன்னிச்சையாக பரிணமித்தலுக்கு ஆதாரம்? அட, பரிணாமத்தின் மற்ற விசயங்களுக்கு மட்டும் ஆதாரம் இருக்கா என்ன? அப்படித்தான் இதுவும். லூஸ்ல விடுங்க.

2. ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது தகவல் இன்னும் விவகாரமானது. ஆக்டோபஸ்சின் மரபணுக்களில் நூற்றுக்கணக்கானவை தனித்துவம் வாய்ந்தவையாம். அப்படியென்றால், இதுப்போன்ற மரபணுக்கள் உலகில் வேறு எந்த உயிரினங்களிலும் காணப்படவில்லை என்று அர்த்தம் (அப்படி போடு).

We identified hundreds of cephalopod-specific genes, many of which showed elevated expression levels in such specialized structures as the skin, the suckers and the nervous system  - Nature 524, 220–224, 13 August 2015, doi:10.1038/nature14668
நூற்றுக்கணக்கான தனித்துவமான மரபணுக்களை நாங்கள் ஆக்டோபஸ்சில் கண்டறிந்துள்ளோம். தோல், உறிஞ்சு குப்பிகள் மற்றும் நரம்பு மண்டலத்துடன் தொடர்புடையவாக இவை இருக்கின்றன - (Extract from the original quote of) Nature 524, 220–224, 13 August 2015, doi:10.1038/nature14668

பரிணாம ஆதரவாளர்களுக்கு இன்னும் சோகமான செய்தி என்னவென்றால், இப்படி புதிய மரபணுக்கள் தென்பட்டால் கூறும் வழக்கமான காரணத்தை கூட கூற முடியாதபடி செய்துவிட்டது ஆக்டோபஸ் :-). எப்படி என்கின்றீர்களா? எப்போதெல்லாம் புதிய மரபணுக்கள் உயிரினங்களில் தென்படுகின்றவோ, அப்போதெல்லாம் ரெடிமேடாக இவர்கள் வைத்துள்ள பதில், "மரபணு நகலெடுத்தல்" என்பதாகும். அப்படின்னா என்ன?

மரபணு நகலெடுத்தல் (Gene Duplication):

உங்களிடம் ஒரு ஆவணம் (டாகுமென்ட்) இருக்கிறதென்று வைத்துக்கொள்வோம். அதனை நகல் (ஜெராக்ஸ்) எடுக்கின்றீர்கள். எடுக்கப்பட்ட நகலில் சில மாற்றங்களை செய்து புது வேலைக்கு பயன்படுத்துகின்றீர்கள். அதே நேரம், உங்கள் ஒரிஜினல் ஆவணம் அப்படியே இருந்து, தொடர்ந்து பழைய வேலைக்கே பயன்படுகின்றது. 

புதிய மரபணுக்கள் எப்படி உருவாகின என்பதற்கும் இப்படியான ஒரு விளக்கத்தையே காலங்காலமாக கொடுத்து வந்தனர் பரிணாமவியலாளர்கள். அதாவது, ஒரு உயிரினத்தில் உள்ள மரபணு, தன்னை நகல் எடுத்துக்கொள்கின்றது. நகல் எடுக்கப்பட்ட மரபணு காலப்போக்கில் மாற்றமடைந்து புதிய மரபணுவாக உருவெடுக்கின்றது. இந்த மரபணுவானது உயிரினத்தில் புதிய வேலைகளை செய்கின்றது. அதே நேரம், பழைய மரபணுவோ தொடர்ந்து தன்னுடைய பழைய வேலையை செய்துக்கொண்டிருக்கின்றது. 

Fig 3. மரபணு நகலெடுத்தல் முறை செயல்படும் விதம்

ஆக, பழைய மரபணுக்கள் பழைய வேலையையும், அவற்றில் இருந்து நகல் எடுக்கப்பட்டு உருவான புதிய மரபணுக்கள் புதிய வேலைகளையும் செய்ய ஆரம்பித்தன. ஒரு உயிரினத்தில் புதிய மரபணுக்கள் காணப்படுவதற்கு இதுவே காரணம் என்று சொல்லப்பட்டது. இந்த விளக்கமானது "மரபணு நகல் எடுத்தல்" என்றழைக்கப்படுகின்றது. 

ஆனால், எப்போது உயிரினங்களின் மரபணுக்களை வரிசைப்படுத்தும் தொழில்நுட்பம் (Gene Sequence) வந்ததோ, அப்போதே பிரச்சனைகள் தலைக்கு மீறி போக ஆரம்பித்தன. புதிய மரபணுக்கள் எனப்படுபவை குறித்த ஆழ்ந்த பார்வையை இவை கொடுக்க ஆரம்பித்தன. நிச்சயம் பரிணாமவியலாளர்களுக்கு இது இக்கட்டான நிலையே. 

எப்படி என்றால், உங்களின் புதிய ஆவண நகல், ஒரிஜினல் ஆவணத்தை ஒத்து தானே இருக்கும்? அல்லது குறைந்தபட்ச ஒற்றுமைகளாவது இருக்கும் அல்லவா? 'நகலெடுத்தல்' வழிப்படி புதிய மரபணுக்கள் வந்திருந்தால், அந்த புதிய மரபணுக்கள், தங்களின் மூதாதையரான பழைய மரபணுக்களுடன் குறைந்தபட்ச தொடர்பையாவது கொண்டிருக்க வேண்டுமல்லவா? 

இங்கு தான் விவகாரம் பூதாகரமாக வெடிக்க ஆரம்பித்தது. மரபணு வரிசைப்படுத்துதல் தொழில்நுட்பத்தின் மூலம் பல்வேறு வகையான உயிரினங்களின் மரபணு தகவல்களை சேமித்து வைத்துள்ளனர் ஆய்வாளர்கள். (அவற்றில்) தேடித்தேடி பார்த்தார்கள், புதிய மரபணுக்களுடன் தொடர்புடைய பழைய மரபணுக்களை கண்டுபிடிக்க முடியவில்லை. 

ஒரு உயிரினத்தின் புதிய மரபணுக்கள்  வேறு எந்தவொரு உயிரினத்திலும் காணப்படவில்லை. காணப்படவே இல்லை. இவை புத்தம் புதியவை, வேறு எங்கும் இல்லாதவை. 

சரி போகட்டும். இப்படியான மரபணுக்கள் காணப்படுவது மிக அரிதான நிகழ்வு என்று தங்களை சமாதானப்படுத்திக்கொள்ள முயன்ற தருணத்தில், தொடர்ந்து, பல்வேறு உயிரினங்களில் புதிய மரபணுக்களை கண்டறிய ஆரம்பித்தனர். புதிது புதிதாக முளைத்துக்கொண்டே இருந்தன. 

"For most of the last 40 years, scientists thought that this was the primary way new genes were born — they simply arose from copies of existing genes. The old version went on doing its job, and the new copy became free to evolve novel functions. Certain genes, however, seem to defy that origin story. They have no known relatives, and they bear no resemblance to any other gene. They’re the molecular equivalent of a mysterious beast discovered in the depths of a remote rainforest, a biological enigma seemingly unrelated to anything else on earth" - Emily Singer, A Surprise Source of Life’s Code, Quanta Magazine, 18th August 2015. 
"கடந்த நாற்பது வருடங்களாக, புதிய மரபணுக்கள் பிறந்ததற்கு நகல் எடுத்தலே பிரதான காரணம் என்று ஆய்வாளர்கள் நினைத்தனர் - அதாவது, ஏற்கனவே இருக்கும் மரபணுக்களின் நகல் மூலம் இவை பிறந்ததாக. பழைய மரபணுக்கள் தங்களின் வழக்கமான வேலைகளை பார்க்கும், நகலோ பரிணமித்து புதிய வேலைளை பார்க்கும். ஆனால், குறிப்பிடத்தக்க மரபணுக்கள் 'நகல் எடுத்தல்' என்ற விளக்கத்திற்கு உடன்படவில்லை. அவற்றிற்கு மூதாதையர் இல்லை, வேறு எந்த மரபணுக்களை போலவும் அவை இல்லை. தொலைத்தூர மழைக்காட்டில், உலகில் உள்ள எந்த உயிரினத்தோடும் ஒப்பிட முடியாத ஒரு மர்ம விலங்கு கண்டுபிடிக்கப்பட்டால் எப்படியிருக்கும்? அப்படியான சூழலே இது" -  (extract from the original quote of) Emily Singer, A Surprise Source of Life’s Code, Quanta Magazine, 18th August 2015.

இந்த பிரச்சனையில் தான் ஆக்டோபஸ்சும் பரிணாமவாதிகளை தள்ளி விட்டுவிட்டது. ஆக்டோபஸ்சில் காணப்படும் புதிய மரபணுக்கள் 'நகலெடுத்தல்' மூலம் வந்தவை என்று கூற முடியாத அளவு தனித்துவமாக இருக்கின்றன. இதனால் தான் இவை எப்படி வந்தன என்பதை விளக்காமல் கமுக்குமாக கட்டுரையை முடித்துவிட்டார்கள் ஆய்வை நடத்தியவர்கள். இவ்விவகாரத்தின் வீரியத்தை இதிலிருந்தே நாம் உணரலாம். அவர்கள் சொல்லவில்லை என்றால் என்ன , நாம் சொல்லுவோமே. உண்மைகள் நெடுநேரம் உறங்காதே...

பைனல் பன்ச்:

விசித்திரமாகவும், வேறு எந்த உயிரினத்திலும் காணப்படாத மரபணுக்கள் ஆக்டோபஸ்சில் காணப்படுவதாலும் அவை வேற்றுக்கிரகவாசிகள் என்றால், உலகில் இப்படியான பல வேற்றுக்கிரகவாசிகள் உண்டு. மனிதன் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களில் தனித்துவமான மரபணுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினமும் ஒரு வகையில் விசித்திரமானது தான். அது புரியாத வரை சிலருக்கு எதுவும் புரியாது :-) :-)

"ஹலோ நாசாவா, நீங்க ஏலியன்களை எங்கெங்கோ தேடுறீங்களே, நம்ம பரிணாம பங்காளிகள் கிட்ட கேட்டா, இந்த பூமியிலேயே புடிச்சு தருவாங்க. ஆவண பண்ணுங்க"

இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...

இறைவனே எல்லாம் அறிந்தவன்.

Pictures taken from:
Fig 1 - Scientific American.
Fig 2 - Google
Fig 3 - Designed by Aashiq Ahamed

References:
1. The octopus genome and the evolution of cephalopod neural and morphological novelties - Nature 524, 220–224, 13 August 2015, doi:10.1038/nature14668. link
2. Octopus genome surprises and teases - Dennis Normile. Science Magazine, Aug. 12, 2015. link
3. Octopus genome holds clues to uncanny intelligence - Alison Abbott, Nature, 12 August 2015. link
4. Octopus Genome Reveals Secrets to Complex Intelligence - Katherine Harmon Courage, Scientific American, August 12, 2015. link
5. Octopus Genome Offers Insights Into One Of Ocean's Cleverest Oddballs - Nell Greenfieldboyce, NPR , August 12, 2105. link
6. Don't freak out, but scientists think octopuses 'might be aliens' after DNA study - BT, 13 August 2015. link
7. The Octopus Genome: Not "Alien" but Still a Big Problem for Darwinism - Casey Luskin, Evolution News and Views, August 24, 2015. link
8. Amazing facts about Octopus - One kind. link
9. A Surprise Source of Life’s Code - Emily Singer, Quanta Magzine, August 18, 2015. link
10.  சாக்குகணவாய் - விக்கிப்பீடியா. link
11. ஆக்டோபஸ் - கல்வி சோலை. link
12. Common Octopus (Octopus vulgaris) - National Geographic. link

சகோதரத்துவத்துடன்,
ஆஷிக் அஹமத் அ.







Sunday, March 24, 2013

'அநாதை' மரபணுக்கள்...



நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியையும் சமாதானமும் நிலவுவதாக...
"NOT having any family is tough. Often unappreciated and uncomfortably different, orphans have to fight to fit in and battle against the odds to realise their potential. Those who succeed, from Aristotle to Steve Jobs, sometimes change the world. Who would have thought that our DNA plays host to a similar cast of foundlings? When biologists began sequencing genomes, they discovered that up to a third of genes in each species seemed to have no parents or family of any kind" All alone: Helen Pilcher, New Scientist, page 41, 19th Jan 2013.
குடும்பம் இல்லாமல் இருப்பது கடினமானது. ஊக்கமில்லாமலும், அசௌகர்ய உணர்வோடும், இப்படியான ஆதரவற்றவர்கள், தங்களின் திறமைகளை வெளிப்படுத்த போராட வேண்டியிருக்கின்றது. வெற்றிகரமாக இதிலிருந்து மீண்டவர்களோ, அரிஸ்டாட்டில் முதல் ஸ்டீவ் ஜாப்ஸ் வரை, சில நேரங்களில், உலகை மாற்றியமைத்திருக்கின்றார்கள். 
யார் தான் நினைத்திருப்பர், நம்முடைய மரபணுக்களும் இப்படியான அநாதைகளை தன்னிடத்தே கொண்டிருக்குமென்று? மரபணு வரிசைமுறை ஆய்வுகளை மேற்கொண்ட உயிரியல் விஞ்ஞானிகள், ஒவ்வொரு உயிரினத்திலும், 30% வரையிலான மரபணுக்களுக்கு பெற்றோரோ அல்லது குடும்பமோ இல்லாததை கண்டுபிடித்தார்கள் - (Extract from the original quote of) All alone: Helen Pilcher, New Scientist, page 41, 19th Jan 2013. 

'நியூ சயின்டிஸ்ட்' இதழில் சில மாதங்களுக்கு முன்பாக வெளியான கட்டுரையின் முதல் பத்தியை தான் நீங்கள் மேலே படித்தீர்கள். எதைப் பற்றி பேசுகின்றார் கட்டுரையாளர்? 'அநாதை' மரபணுக்களா, அப்படியென்றால் என்ன? - உங்களுக்குள் சுவாரசியத்தை கூட்டியிருக்கும் இத்தகைய கேள்விகளுக்கு பதிலளிக்க முயற்சிக்கின்றது இந்த பதிவு.

உயிரியல் உலகம் அடுக்கடுக்கான ஆச்சர்யங்களை தொடர்ந்து தந்துவருகின்றது. சில நேரங்களில் ஆச்சர்யம் என்ற வார்த்தைக்கு பதிலாக அதிர்ச்சி என்ற வார்த்தையை போட்டும் நிரப்பிக் கொள்ளலாம். ஆம், அத்தகைய அதிர்ச்சிகளில் ஒன்று தான் 'அநாதை' மரபணுக்கள்.

'அநாதை' மரபணுக்களா, அப்படின்னா???

கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் இவ்வுலகில் முதல் உயிரினம் தோன்றியிருக்க வேண்டும், பின்னர் அந்த உயிரினத்தில் இருந்து சிறிது சிறிதாக மாற்றம் ஏற்பட்டு, காலப்போக்கில், இன்று (வரை) காணப்படும் உயிரினங்கள் வந்திருக்க வேண்டுமென்று கூறுகின்றது பரிணாமக் கோட்பாடு. எளிதாக சொல்ல வேண்டுமென்றால், மனிதர்களையும் சேர்த்து, இவ்வுலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் ஒரே பொதுவான மூதாதையர் தான். இதனை வரைப்படம் வாயிலாக விளக்குவதற்கு பெயர் பரிணாம மரம் என்பார்கள்.

அறிவியலின் ஒரு பிரிவினர் பரிணாம மரத்தை ஏற்றுக்கொண்டாலும் மற்றொரு பிரிவினர் இதுக்குறித்த மாற்றுக்கருத்தை கொண்டிருக்கின்றனர். உதாரணத்திற்கு, பாக்டீரிய ஆராய்ச்சியில் பெரும் புரட்சி ஏற்படுத்திய கிரேக் வென்டர், பரிணாம மரத்தை கட்டுக்கதை என்று குறிப்பிட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம் (படிக்காதவர்கள் <<இங்கே>> சுட்டவும்).

ஓகே...பொதுவான மூதாதையரில் இருந்து உயிரினங்கள் வந்துள்ளதற்கு என்ன ஆதாரம்?  மரபணு ரீதியாக உயிரினங்கள் அனைத்திற்கும் தொடர்பு இருப்பதே என்கிறார்கள் பரிமாணவியலாளர்கள். அதாவது ஒரு உயிரினத்தில் காணப்படும் மரபணுக்களின் மூதாதையரை, காலங்கள் பின்னோக்கி செல்வதின் மூலம் கண்டுபிடித்துவிடலாம் என்பது அவர்களின் நிலைப்பாடு.

இப்படியான நம்பிக்கைக்கு தான் அண்மை கால ஆய்வுகள் மிகப்பெரிய இடியை இறக்கியிருக்கின்றன. சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக ஈஸ்ட் எனப்படும் உயிரினத்தில் நடத்தப்பட்ட மரபணு வரிசைமுறை ஆய்வுகள் பல ஆச்சர்யமான உண்மைகளை வெளிக்கொண்டு வந்தன. இவற்றின் சுமார் 30% மரபணுக்கள் தனித்துவமாக இருந்தன. அதாவது, இந்த மரபணுக்கள் போல வேறு எந்த உயிரினத்திலும் மரபணுக்கள் இல்லை. பொதுவான மூதாதையரில் இருந்து உயிரினங்கள் வந்திருந்தால், இந்த 30% மரபணுக்களுடன் தொடர்புடைய மரபணுக்கள், ஈஸ்ட்டுடன் நெருங்கிய தொடர்புடைய உயிரினங்களிலாவது தென்பட்டிருக்க வேண்டும். ஆனால் உண்மை நிலவரங்கள் அப்படி இருக்கவில்லை. இப்படியான மரபணுக்கள் இந்த உயிரின பிரிவிற்கு மட்டுமே உரித்தானவையாக இருந்தன.

ஒரே வரியில் சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இந்த மரபணுக்களுக்கு பெற்றோரோ, மூதாதையரோ அல்லது பரிணாம வரலாறோ இல்லை.    இவை 'அநாதை' மரபணுக்கள் என்று அழைக்கப்படுவதின் காரணம் இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும். 


'அநாதை' மரபணுக்கள் (உருவகப்படம்) Image courtesy: New Scientist Magazine

இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம். சரி, தனித்துவமான மரபணுக்கள் உள்ளன, ஆனால் இந்த உயிரினம் விதிவிலக்காக இருக்கலாம் அல்லவா? இந்த உயிரினத்தில் மட்டும் எப்படியோ(??) இத்தகைய மரபணுக்கள் வந்திருக்கலாம் இல்லையா? - நல்ல கேள்விகள் தான். ஆனால் இங்கு தான் ஆச்சர்யங்கள் அதிர்ச்சிகளாக உருமாறிக் கொண்டிருந்தன.

இந்த உயிரினத்திற்கென்று இல்லை, அதன் பிறகு பல்வேறு உயிரினங்களில் நடத்தப்பட்ட மரபணு வரிசைமுறை ஆய்வுகள், இப்படியான 'அநாதை' மரபணுக்கள் ஒவ்வொரு உயிரின பிரிவிலும் இருப்பதை உறுதி செய்தன. புழுக்களில் இருந்து எலி வரை, கொசுவிலிருந்து மனிதன் வரை - இந்த வரிசை நீண்டுக்கொண்டே போகின்றது.

"every group of animals also possesses a small proportion of genes which are, in contrary, extremely variable among closely related species or even unique. For example, a gene may be present in one species or animal group, but not in any other. Such genes are referred to as "novel," "orphan" or "taxonomically restricted" 'Orphan' Genes Play An Important Role In Evolution - Science Daily, 18th Nov 2008.
ஒவ்வொரு விலங்கின பிரிவிலும், வழக்கத்திற்கு மாறாக, சிறிய அளவிலான மரபணுக்கள் முற்றிலும் வேறுபட்டவையாக அல்லது தனித்துவமாக காணப்படுகின்றன. உதாரணத்திற்கு, ஒரு உயிரினத்தில் காணப்படும் மரபணு வேறெந்த உயிரினத்திலும் காணப்படவில்லை. இப்படியான மரபணுக்கள் 'அநாதை', 'விசித்திரமான' அல்லது 'வகுப்பு தொகுப்புமுறை கட்டுப்படுத்திய' மரபணுக்கள் என்றழைக்கப்படுகின்றன - (Extract from the original quote of) 'Orphan' Genes Play An Important Role In Evolution - Science Daily, 18th Nov 2008.

இப்படியான மரபணுக்கள் கண்டுபிடிக்கப்பட்டப்போது, எதிர்காலம் இதற்கு பதில் சொல்லுமேன்று நம்பிக்கையுடன் காத்திருந்தார்கள் பரிணாமவியலாளர்கள். ஆதிகால மரபணுக்களின் கடைசியாக பிழைத்திருக்கக்கூடிய மரபணுக்களே இவை என்றும், இவற்றில் ஒரு சிறப்பும் இல்லை எதிர்கால ஆய்வுகள் இவற்றின் மூதாதையர் குறித்த விளக்கத்தை தரும் என்றும் சிலர் எண்ணினார்கள். ஆனால் நடந்ததோ நேர்மாறாக இருந்தது. மேற்கொண்டு இவற்றில் நடத்தப்பட்ட ஆய்வுகள் நிலைமையை மேலும் சிக்கலாக்கினவே தவிர, பரிணாமவியலாளர்கள் எதிர்பார்த்த விடையை தரவில்லை.

'அநாதை' மரபணுக்களால் என்ன பயன்?

இந்த மரபணுக்களின் பயன்பாடுகள் இன்னும் முழுமையாக அறியப்படவில்லை. அதே நேரம், இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தகவல்கள், இவை மிக முக்கிய பணிகளை செய்வதாக கூறுகின்றன. எப்படி? விஷம் நிறைந்த பெட்டகங்களை தங்கள் இரையை நோக்கி செலுத்தி அவற்றை உணர்விழக்கச் செய்கின்றன ஜெல்லி மீன்கள் . இந்த பெட்டகங்களை கட்டமைக்கும் அதிநவீன செல்களின் உருவாக்கத்தில் 'அநாதை' மரபணுக்களே வழிகாட்டுகின்றன.

ஜெல்லி மீன். Image Coutesy: underwater.com.au

மற்றொரு உதாரணத்தையும் கூறலாம். ஆர்ட்டிக் பிரதேசங்களில் வாழும் ஒருவகை மீன்கள் (Polar Cod), அங்கு நிலவும் கடும் குளிரில் பிழைத்திருக்க அவற்றில் இருக்கும் 'அநாதை' மரபணுவே உதவி செய்கின்றது. மனித மூளையின் செயல்பாடுகளிலும் இந்த மரபணுக்கள் பங்காற்றலாம் என சில ஆண்டுகளுக்கு முன்பாக வெளிவந்த ஆய்வுகள் கூறுகின்றன.

ஆக, இவை தனித்துவமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் மிக முக்கியமான செயல்பாடுகளையும் உயிரினங்களில் செய்கின்றன.

எப்படி தோன்றின 'அநாதை' மரபணுக்கள்?

இதுவொரு மில்லியன் டாலர் கேள்வி. இதுவரை படித்த நீங்களும் வியந்திருப்பீர்கள். இந்த மரபணுக்களுக்கு பரிணாம வரலாறும்(?) இல்லை. பின்பு எப்படி உருவாகின? உருவானதோடு நில்லாமல் முக்கிய செயல்களையும் செய்கின்றனவே, அது எப்படி?

'அநாதை' மரபணுக்கள் எப்படி தோன்றின என்பதற்கு 'சைன்ஸ் டெய்லி' தளத்தின் மொழியில் பதில் சொல்ல வேண்டுமென்றால் அது "obscure" என்பதாகும். புரியவில்லை/விளக்கமில்லை என்பது தான் இதன் அர்த்தம்.

மற்றொருமுறை பரிணாமக் கோட்பாட்டின் கணிப்பு தவறாகியிருக்கின்றது. அதனால் என்ன? கோட்பாடு எதிர்பார்க்கும்படி ஆதாரம் இல்லையென்றால், ஆதாரத்திற்கு ஏற்றப்படி கோட்பாட்டை உருவாக்கி/மாற்றியமைத்துக்கொள்ள வேண்டியது தான்.

"where do they come from? With no obvious ancestry, it was as if these genes had appeared from nowhere, but that couldn’t be true" All alone: Helen Pilcher, New Scientist, page 41, 19th Jan 2013.
இவை எங்கிருந்து வருகின்றன? தெளிவான மூதாதையர் இல்லாமல், இவை திடீரென தோன்றியிருப்பது போல தெரியலாம். ஆனால் இது உண்மையாக இருக்க முடியாது - (Extract from the original quote of) All alone: Helen Pilcher, New Scientist, page 41, 19th Jan 2013.

ஆம், உண்மையாக இருக்க முடியாது :-) :-). அடுத்த என்ன, கற்பனைத் திறனை கட்டவிழ்த்துவிட வேண்டியது தான்.

மூதாதையர் இல்லை, பின்பு எப்படித்தான் இந்த மரபணுக்களின் தோற்றத்தை விளக்குவது? 'அநாதை' மரபணுக்கள் இருவழிகளில் தோன்றியிருக்க'லாம்' (Possibility) என்று கருதுகின்றார்கள் பரிணாமவியலாளர்கள்.

1. உயிரினங்களின் DNA-க்களில் உள்ள மரபணுக்களை இருவகையாக பிரிக்கின்றனர். ஒன்று, புரதங்களை உருவாக்கும் விதிமுறைகளை தன்னகத்தே கொண்ட மரபணுக்கள் ( 'அனாதை' மரபணுக்களும் இந்த பிரிவில் அடக்கம்). பல்வேறு புரதங்கள் ஒன்று சேர்ந்து உயிரினங்களை உருவாக்கவும், பராமரிக்கவும் செய்கின்றன. இவை Coding DNA என்றழைக்கப்படுகின்றன.

மற்றொரு பிரிவோ, புரதங்களை உருவாக்காத மரபணுக்களாகும். இவை Non-coding DNA அல்லது 'குப்பை' மரபணுக்கள் என்றழைக்கப்படுகின்றன. இந்த குப்பை மரபணுக்கள் என்பவை உயிரினங்களில் பரிணாமம் ஏற்படுத்திய எச்சம்/மிச்சம் என்று நம்புகின்றார்கள் பரிணாமவியலாளர்கள். அதாவது, இவை ஒருகாலத்தில் பயனுள்ளதாக இருந்து இப்போது பயனற்றவையாக மாறிவிட்டன என்பது அவர்களது யூகம் (இதனால் தான் இவற்றிற்கு பெயர் 'குப்பை' மரபணுக்கள்).


ஆனால் 'குப்பை' மரபணுக்கள் என்பவை மிக முக்கியமான செயல்பாடுகளை உயிரின செல்களில் செய்கின்றன என்ற ஆய்வு முடிவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. உதாரணத்திற்கு, புரதங்களை உருவாக்கும் மரபணுக்களை இந்த 'குப்பை' மரபணுக்கள்  ஒழுங்குபடுத்துகின்றன என்பது இவற்றின் அதிமுக்கிய பயன்பாடுகளில் ஒன்றாகும். ('குப்பை' மரபணுக்கள் குறித்த இத்தளத்தின் பதிவை காண <<இங்கே>> சுட்டவும்).

அதெல்லாம் சரி, நான் மேலே குறிப்பிட்ட 'குப்பை' மரபணுக்களும், 'அநாதை' மரபணுக்களுக்கும் என்ன சம்பந்தம்?

'அநாதை' மரபணுக்களுக்கு மூதாதையர் யாரும் இல்லாததால், ஒவ்வொரு உயிரினத்திலும் உள்ள இவை, அந்த உயிரினத்திலேயே, 'குப்பை' மரபணுக்களில் ஏற்படும் தற்செயலான மாற்றங்களால், ஆரம்பத்திலிருந்து (from the scratch) உருவாகியிருக்க வேண்டும் என்கின்றார்கள் பரிணாமவியலாளர்கள். 

எளிதாக சொல்ல வேண்டுமென்றால், 'குப்பை' மரபணுக்களில் இருந்து 'அநாதை' மரபணுக்கள் புதிதாக உருவாகியிருக்க வேண்டும். இதனை 'de Novo origin from Non-coding DNA" என்கின்றார்கள். De Novo என்றால் "ஆரம்பத்திலிருந்து" என்று அர்த்தம். புதிதாக உருவானதால் தான் இவற்றின் மூதாதையரை வேறு உயிரினங்களில் கண்டுபிடிக்க முடியவில்லையாம்.

இது என்னடா விசித்திரமா இருக்கே என்று பார்வையாளர்கள் நினைக்கலாம். ஆனால் இயற்கையின் வல்லமையை :-) :-) நன்குணர்ந்த பரிணாமவியலாளர்களுக்கும் இது விசித்திரமாகத் தான் தோன்றியது. பின்னே இருக்காதா? எது நடக்க வாய்ப்பே இல்லை என்று முன்பு கூறி வந்தார்களோ அதனை நம்பி தொலைக்க வேண்டிய அல்லது வேறு வழியே இல்லாமல் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைமைக்கு 'அநாதை' மரபணுக்கள் தள்ளிவிட்டனவே...

சில ஆய்வாளர்களின் பார்வையில், 'குப்பை' மரபணுக்களில் இருந்து புரதங்களை உருவாக்கும் 'அநாதை' மரபணுக்கள் உருவாகுவதற்கான சாத்தியக்கூறுகள் சைபர் மட்டுமே (practically zero). மற்றவர்களின் பார்வையிலோ இப்படியான உருவாக்கத்திற்கு மிக அற்பமான (infinitesimally small) வாய்ப்புகளே உள்ளன.

"If de novo emergence does indeed have a large role in orphan evolution, one has to explain how a new functional protein can emerge out of a previously non-coding sequence. This would seem highly unlikely a priori, particularly when one considers our current knowledge of protein evolution - The evolutionary origin of orphan genes" - Diethard Tautz and Tomislav Domazet-Lošo, Nature, VOLUME 12, OCTOBER 2011, Page No. 692.
'அநாதை' மரபணுக்கள் புதிதாக (அல்லது துவக்கத்திலிருந்து) உருவாக முடியும் என்றால், பயனுள்ள புரதங்களை 'குப்பை' மரபணுக்கள் எப்படி உருவாக்கியிருக்கும் என்பதை ஒருவர் விளக்க வேண்டி வருகின்றது. கோட்பாடு ரீதியாக, தற்போதுள்ள நம்முடைய புரத பரிணாம அறிவுப்படி, இதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவாகவே தெரிகின்றன - (Extract from the original quote of) Diethard Tautz and Tomislav Domazet-Lošo, Nature, VOLUME 12, OCTOBER 2011, Page No. 692. 

ஆக, எதனை நம்புவது கடினமாக இருந்ததோ, அதனை வேறு வழி இல்லாமல் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை. சரி போகட்டும், 'குப்பை மரபணுக்களில் இருந்து 'அநாதை' மரபணுக்கள் உருவாகலாம் என்ற இப்போதைய புரிதலிலாவது தெளிவு இருக்கின்றதா என்றால் 'இல்லை' என்பதையே பதிவு செய்ய வேண்டியிருக்கின்றது.

இந்த பதிவிற்காக, இந்த தலைப்பில் கடந்த சில வருடங்களில் வெளியான ஆய்வுக் கட்டுரைகளை படிக்க வேண்டியிருந்தது (அந்த ஆய்வுக் கட்டுரைகளை கீழே மேற்கோள் காட்டியுள்ளேன். பதிவிற்கு எதிர்வினையாற்ற விரும்புபவர்கள் அனைத்து மேற்கோள்களையும் முழுமையாக பார்த்துவிட்டு செயலாற்றுமாறு கேட்டுக்கொள்கின்றேன்). அவற்றில் எதுவுமே 'அநாதை' மரபணுக்கள் இப்படித்தான் உருவாகின என்று அறுதியிட்டு கூறவில்லை. மாறாக எல்லாமே அனுமானம் தான். இப்படி நடந்திருக்கலாம் (may be), வாய்ப்பிருக்கலாம் (possible) என்று எல்லாமே 'லாம்' தான்.

அதுமட்டுமல்லாமல், இப்படியாக 'அநாதை' மரபணுக்கள் உருவாகுவதற்கு மில்லியன்கணக்கான ஆண்டுகள் ஆகலாம் என்பதால் இந்த யூகத்தை டெஸ்ட் செய்வதும் கடினமாகின்றது.

ஸ்ப்பா...... வாய்ப்பே இல்லை என்று கருதப்பட்டதற்கு இன்று வாய்ப்பிருக்கின்றது, இன்று வாய்ப்பிருப்பதாக எண்ணப்படுவதற்கு நாளை வாய்ப்பில்லாமல் போகலாம்...என்னவோ போங்க :-) :-)

2. மேலே சொன்னதே கண்ண கட்டுது, இதுல அடுத்தது வேறயா? அதிக நேரம் எடுக்காது, இதையும் கேட்டுவிடுங்கள். 'அநாதை' மரபணுக்கள் என்பவை ஒரிஜினல் மரபணுக்களில் இருந்து நகல் எடுக்கப்பட்டு, பின்னர் நகல் எடுக்கப்பட்ட மரபணுக்களில் வேகமாக பரிணாமம் நடந்ததால் மூதாதையருடன் உள்ள ஒற்றுமைகள் துடைத்தெரியப்பட்டுவிட்டன என்கின்றது இரண்டாவது யூகம். இதனை 'Duplication followed by quick divergence' என்கின்றார்கள்.

இப்படியான விளக்கம் அனைத்து 'அனாதை' மரபணுக்களுக்கும் ஒத்துவராது என்று பரிணாமவியலாளர்களே கூறுவதால் இங்கு அதிகம் அலசப்படவில்லை. அவசியம் ஏற்பட்டால் பின்னூட்டங்கள் வாயிலாக அல்லது தனி பதிவாக பார்ப்போம் (இறைவன் நாடினால்).

முடிவாக..

தன்னுடைய 'அநாதை' மரபணுக்கள் குறித்த கட்டுரையில், நான் மேலே கூறியுள்ள இரண்டு வழிமுறைகளையும் மிக சுருக்கமாக ஒரே வரியில் குறிப்பிட்டுள்ள விக்கிப்பீடியா, அந்த கட்டுரையின் கடைசி பத்தியை இப்படி தொடங்கி நிறைவுச் செய்கின்றது.

"It is still unclear how orphan genes arise" - Wikipedia.
'அநாதை' மரபணுக்கள் எப்படி தோன்றின என்பது இன்னும் தெளிவாகவில்லை - (extract from the original quote of) Wikipedia.

Yeah, it is still unclear :-) :-) இந்த பதிவின் முதல் படத்தில் இருக்கும் 'அநாதை' மரபணுக்கள் சிரிப்பது தெரிகின்றதா???

மூடநம்பிக்கைகளில் இருந்து காத்து, இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன்.

இறைவனே எல்லாம் அறிந்தவன்.

My Sincere thanks to:
1. Nature education
2. DNA learning Center.
3. New Scientist Magazine.
4. Science Daily.
5. Dr.Paul Nelson.
6. Tamil cube dictionary website.

References:
1. All alone -  Helen Pilcher, New Scientist, page 41, 19th Jan 2013. link
2. A happy ending for orphan genes -  Helen Pilcher, Science Monkey, 17th Jan 2013. link
3. Orphan Gene - Wikipedia. link
4. 'Orphan' Genes Play An Important Role In Evolution - Science Daily, 18th Nov 2008. link
5. Biological Common Descent is a Doctrine in Crisis - Dr. Paul Nelson. link
6. Ribosomes, Transcription, and Translation - Nature Educaton. link
7. Transcription and Translation Tool - Attotron.com. link
8. Phylogenetic patterns of emergence of new genes support a model of frequent de novo evolution - Rafik 9. Neme and Diethard Tautz, BMC Genomics 2013, 14:117 doi:10.1186/1471-2164-14-117, 21st Feb 2013. link
10. The evolutionary origin of orphan genes - Diethard Tautz and Tomislav Domazet-Lošo, Nature, VOLUME 12, OCTOBER 2011, Page No. 692. link
11. The Evolutionary Origin of Orphan Genes - Dr.Cornelius Hunter, Darwin's God, 30th Dec 2012. link
12. De-novo Evolution of Genes - Max Planck Institute for Evolutionary Biology. link
13. Must a Gene Have a Function? - LAURENCE A. MORAN, Sandwalk, 8th feb 2012. link
14. Orphan Genes and the Myth of De Novo Gene Synthesis - Designed DNA, 6th March 2012. link
15. Gene Birth, de novo - Biobabel. 4th July 2012. link
16. How Can There Be Orphan Genes? -  Molecular Evolution Forum, 29th May 2009. link
17. Mechanisms and Dynamics of Orphan Gene Emergence in Insect Genomes - Genome Biology and Evolution, Oxford journals, Volume 5, Issue 2, Page No. 439-455. doi: 10.1093/gbe/evt009, 24th Jan 2013. link
18. Orphans as taxonomically restricted and ecologically important genes - Microbiology, 10.1099/mic.0.28146-0, August 2005, vol. 151 no. 8 2499-2501. link
19. De Novo Genes: The Evolutionary Explanation -  Dr.Cornelius Hunter, Darwin's God, 23rd Nov, 2009. link
20. De Novo Origin of Human Protein-Coding Genes - PLoS Genet 7(11): e1002379, doi:10.1371/journal.pgen.1002379, 20th Nov 2011. link 
21. Recent de novo origin of human protein-coding genes - Genome Res.  2009 October; 19(10): 1752–1759, doi:  10.1101/gr.095026.109. link
22. Gene - Wikipedia. link
23. Darwinian alchemy: Human genes from noncoding DNA - Adam Siepel, Genome Res. 2009. 19: 1693-1695, doi:10.1101/gr.098376.109. link
24. Unique “Orphan Genes” Are Widespread; Have No Evolutionary Explanation - Creation Evolution Headlines, 19th Nov 2008. link
25. New Genes, New Brain - The Scientist, 19th Oct 2009. link
26. Orphan Genes - Youtube. link
27. Assessing the NCSE's Citation Bluffs on the Evolution of New Genetic Information - Evolution News, 25th Feb 2010. link
28. Fighting about ENCODE and junk -  Brendan Maher, NATURE NEWS BLOG, 6th Sep 2012. link
29. Gene duplication - Wikipedia. link

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ






Tuesday, October 30, 2012

National Geographic: பித்தலாட்டங்கள் - சொல்லப்படாத உண்மைகள்



நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

ரலாற்றில் சில தருணங்கள் சொல்லப்படாதபோதும், அவை தெரியவரும்போதும், நமக்குள் அவை ஏற்படுத்தும் அதிர்வலைகள் மிகுந்த தாக்கத்தை உண்டாக்குகின்றன. நேஷனல் ஜியோகிராபிக் (நே.ஜி) ஊடகம் குறித்து நீங்கள் அறிந்துக் கொள்ளப்போகும் இந்த செய்தியும் அந்த ரகத்தை சார்ந்ததே. 

விசயத்தை சில வரிகளில் சுருக்கமான சொல்ல வேண்டுமென்றால் அது இதுதான். டைனாசர்களில் இருந்து பறவைகள் வந்ததாக கூறி ஒரு ஆதாரத்தை நே.ஜி முன்வைக்க, அது பித்தலாட்டம் என்று நிரூபிக்கப்பட்டு, அறிவியல் ஊடகத்துறையில் நீங்காத கரையை நே.ஜி-க்கு ஏற்படுத்தி தந்துவிட்டது. 

நீங்கள் சில வரிகளில் பார்த்த இந்த விவகாரத்திற்கு பின்னால் ஆய்வாளர்கள் வெட்கி தலைகுனியும் அளவு அசிங்கமான உண்மைகளும், நம்பிக்கை சார்ந்த துரோகங்களும் ஒளிந்திருக்கின்றன. 

டிஸ்கவரி ஊடகம் இந்த பித்தலாட்டதிற்கு இரண்டாம் இடத்தை கொடுகின்றது (முதல் இடம் நம்ம பில்ட்டவுன் மனிதனிற்கு தான். பார்க்க <<இங்கே>>). இந்த முக்கிய செய்தியை சரியாக புரிந்துக்கொள்ள சில கிளைச்செய்திகளை நாம் நிச்சயம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில் ஒரு கேள்வியை நமக்குள் கேட்டுக்கொள்வோம். வேறெந்த துறையையும் விட பரிணாமத்துறையில் பித்தலாட்டங்கள் பரவலாக காணப்பட காரணமென்ன? 

மேலே காணும் கேள்விக்கு விடையை கண்டுபிடிப்பது இந்த பதிவுக்கு அவசியமாகின்றது. ஒரு உயிரினம் மற்றொரு உயிரினமாக காலப்போக்கில் மாறுவதாக பரிணாமம் கூறுகின்றது. டார்வின் காலத்திலிருந்தே இதற்கான ஆதாரங்களை அதன் நம்பிக்கையாளர்கள் தேடிக்கொண்டு தான் வருகின்றனர். தங்களின் இந்த நம்பிக்கையை நிரூபிக்குமாறு ஒரு படிமம் கிடைத்தால் அதனை பெரும் தொகை கொடுத்து வாங்கவும் இவர்கள் தயாராகவே இருக்கின்றனர். 

டைனாசர் படிமங்கள் அதிகம் கிடைக்கக்கூடிய இடமாக சீனா திகழ்கின்றது. இங்குள்ள பல விவசாயிகள் நிலத்தை தோண்டி படிமங்கள் எடுப்பதை தொழிலாக கொண்டுள்ளனர். தாங்கள் எடுக்கும் படிமங்களை இடைத்தரகர்களிடம் விற்றுவிடுவார்கள். இந்த இடைத்தரகர்கள் அவற்றை ஆய்வாளர்களுக்கோ அல்லது அருங்காட்சியகங்களுக்கோ விற்று விடுவார்கள். 

இங்கு தான் நீங்கள் ஆழ்ந்து கவனிக்க வேண்டிய இடம் வருகின்றது. ஒரு படிமம் பரிணாம கொள்கையை உறுதிப்படுத்துவது போல இருந்தால் அதற்கு விலை அதிகம். இதனாலேயே விவசாயிகள் இப்படியான படிமங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதிக விலைக்கு ஆசைப்பட்டு, பரிணாம கொள்கை எதிர்பார்ப்பது போன்று, படிமங்களில் மாற்றம் செய்து விற்றுவிடுகின்றனர். 

படிம வியாபாரத்தின் இத்தகைய இருண்ட பக்கத்தில் தான் நே.ஜி மாட்டிக்கொண்டது. காசுக்கு ஆசைப்பட்டு விவசாயிகள் தவறை செய்கின்றனர். ஆனால் பரிணாம ஆய்வாளர்களுக்கு என்ன வந்தது? அந்த படிமங்களை நன்கு ஆராய்ந்தாலே இவை பித்தலாட்டம் செய்யப்பட்டவை என்று புரிந்துவிடுமே? இத்தகைய கேள்விகள் உங்களுக்கு எழுவது புரிகின்றது. இதனை நோக்கி தான் இப்போது பயணிக்க போகின்றோம், பதிவின் மையமும் அதுதான். 

சிறிய அளவிலான டைனாசர்கள் படிப்படியாக உருமாறி பறவைகளாக பரிணமித்ததாக ஒரு கோட்பாடு உண்டு. (இதனை அறிந்த) ஒரு விவசாயி அதிக விலைக்கு ஆசைப்பட்டு, தான் கண்டெடுத்த பழங்கால பறவையின் படிமம் ஒன்றில் அதன் உடலுடன், டைனாசரின் வாலை கொண்ட மற்றொரு படிமத்தை ஒட்டவைத்து ஒரு இடைத்தரகரிடம் விற்றுவிட்டார். 

நுணுக்கமாக செய்யப்பட்ட இந்த பித்தலாட்டம், இயல்பாகவே, ஒரு அதிரடி ஷோவிற்கு ரெடியாகிவிட்டது. காரணம், பறவையின் உடலமைப்பும் டைனாசரின் உடலமைப்பும் ஒருசேர இருந்ததால் "டைனாசரில் இருந்து பறவைகள் வந்தது" என்ற யூகத்திற்கு ஆதாரமாக காட்டப்பட சிறந்த படிமம் இது. டைனாசர்களுக்கும் பறவைகளுக்கும் இடைப்பட்ட உயிரினமாக  (missing link) இதனை காட்டி பரிணாமம் உண்மை என்று நிரூபிக்கலாம் (பின்னாளில் இந்த படிமத்திற்கு ஆர்க்கியோராப்டர் என்று பெயர் சூட்டப்பட்டது)

ஆர்க்கியோராப்டர் படிமம் 

காட்சிகள் வேகமாக நகர ஆரம்பித்தன. விவசாயிடம் படிமத்தை பெற்ற தரகர் அதனை சட்ட விரோதமாக அமெரிக்காவிற்கு கடத்திவிட்டார் (ஜூன் 1998). அங்கு இந்த படிமம் எதிர்பார்த்தது போல சலசலப்பை உருவாக்க ஆரம்பித்தது. இந்த படிமம் ஆர்வத்தை தூண்ட, யுடா (Utah) பகுதியில் உள்ள டைனாசர் அருங்காட்சியகத்தின் தலைவரான ஸ்டீபன் ஜெர்கஸ் இதனை சுமார் 80,000 டாலர்களுக்கு வாங்கினார் (பிப்ரவரி 1999). ஒருவித பரவச உணர்வு அவரை ஆட்கொள்ள ஆரம்பித்தது. சும்மாவா, இந்த படிமம் உலகளவில் ஏற்படுத்தப்போகும் அதிர்வால் அவருக்கு கிடைக்கக்கூடிய புகழ் லேசுப்பட்டதா என்ன?

பிரபல தொல்லுயிரியலாளரும், துறைச்சார்ந்த வல்லுனருமான பில் க்யூரி-க்கு இதுக்குறித்து ஜெர்கஸ் தெரியப்படுத்த, க்யூரி நே.ஜி-வை தொடர்புக்கொண்டார். இதுக்குறித்த ஆய்வுகளை நே.ஜி முடுக்கிவிட்டது. மற்றொரு பிரபல தொல்லுயிரியலாளரான ஜூ ஜின்க்-கும் இந்த பணியில் இணைக்கப்பட்டார். 

ஆரம்ப கால ஆய்வுகளிலேயே இந்த படிமத்தில் பிரச்சனை இருப்பது க்யூரிக்கு தெரிந்தது. படிமத்தில் காணப்படும் வால், உடலுடன் ஒருசேர ஓட்டவில்லை. மேலும் இந்த படிமத்தின் பகுதிகள் ஒரே கற்பலகையை சேர்ந்தவை இல்லை என்பதும் தெளிவானது. படிமத்தை சி.டி ஸ்கேன் ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர் க்யூரியும், ஜெர்கசும். இந்த ஆய்வை மேற்கொண்டவர் டாக்டர் டிமோத்தி ரோவ் என்னும் மற்றொரு வல்லுநர். வால் மற்றும் கால் பகுதிகள் ஒரே படிமத்தை சார்ந்தவை அல்ல என்பது சி.டி ஸ்கேன் ஆய்வில் உறுதிசெய்யப்பட்டது. இந்த முழு படிமமும் பித்தலாட்டமாக இருக்கலாம் என்று கூறினார் ரோவ். 

சி.டி ஸ்கேன் செய்யப்பட்ட ஆர்க்கியோராப்டர் படிமம் (இடது)

எப்போது பிரச்சனைகள் இருப்பது தெளிவானதொ, அப்போதே இந்த படிமத்திற்கு end card போடப்போட்டிருக்க வேண்டும். இங்கேயே இந்த படிமம் தூக்கி எரியப்பட்டிருக்க வேண்டும். 

ஆனால் நடந்ததோ வேறு. ஆசை யாரை தான் விட்டது? 'டைனாசர்களில் இருந்து பறவைகள் வந்தன' என்ற யூகத்தை நிரூபிக்க  கிளம்பிய ஆய்வாளர்களின் கண்ணை நம்பிக்கை மறைத்தது. பின்னாளில் இதுக்குறித்து கருத்து தெரிவித்த நே.ஜி, படிமத்தில் இப்படியான பிரச்சனைகள் இருந்ததை இந்த ஆய்வாளர்கள் தங்கள் பார்வைக்கு கொண்டு வரவே இல்லை என்று கூறியது. அட்ரா சக்க....அட்ரா சக்க....

ஆக, நே.ஜி கூறுவதை உண்மை என்று நம்பினால், இந்த படிம பித்தலாட்டத்தை நன்கு அறிந்துக் கொண்டே இந்த ஆய்வாளர்கள் மேற்கொண்டு சென்றிருக்கின்றனர் என்பது தெளிவாகின்றது. விவசாயிகள் காசுக்கு ஆசைப்பட்டு உண்மையை மறைத்தனர். ஆய்வாளர்கள் என்று அறியப்பட்ட இவர்களோ தங்களின் நம்பிக்கையை நிரூபிக்க பித்தலாட்டதிற்கு ஒத்துப்போயினர். இந்த இரண்டு தவறுகளுக்கிடையே உங்களுக்கு ஏதாவது வேறுபாடு தெரிகின்றதா?

சரி, அது போகட்டும். அடுத்ததுக்கு வருவோம். அறிவியல் உலகை பொருத்தமட்டில் ஒரு கண்டுபிடிப்பு முழுமை பெற வேண்டுமென்றால் அது ஆய்விதழ்களில் (Peer review) தான் முதலில் வெளியிடப்பட வேண்டும். பிறகு தான் நே.ஜி போன்ற அறிவியல் ஊடங்களில் வெளிவரும். இந்த படிமம் குறித்த ஆய்வுகளும் அங்கீகாரத்திற்காக Nature மற்றும் Science போன்ற ஆய்விதழ்களுக்கு அனுப்பப்பட்டன. ஜெர்கஸ், க்யூரி, ரோவ், ஜூ ஆகியோரின் பெயரில் கட்டுரை சமர்பிக்கப்பட்டிருந்தது. 

இந்த படிமத்தை ஆய்வு செய்ய கால அவகாசம் குறைவாக இருப்பதாக கூறி ஆய்வுக்கட்டுரையை நிராகரித்துவிட்டது நேச்சர். Science இதழை பொறுத்தமட்டில், விலை அதிகம் பெறுவதற்காக இந்த படிமம் மாற்றங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உருவானதால் அந்த ஆய்விதழும் கட்டுரையை நிராகரித்துவிட்டது (இந்த விசயமும் நே.ஜிக்கு தெரிவிக்கப்படவில்லையாம்...ம்ம்ம்ம்) ஆக, இரண்டு ஆய்விதழ்களும் ஜெர்கஸ் குழுவினரின் கட்டுரையை நிராகரித்துவிட்டன. 

உங்கள் கண்டுபிடிப்பை இரண்டு ஆய்விதழ்கள் நிராகரித்துவிட்டன. அட்லீஸ்ட் இப்போதாவது இந்த படிமத்தை பிரசுரிப்பதில் இருந்து பின்வாங்கியிருக்க வேண்டும். நடந்ததா? இல்லையே. 

நே.ஜி, தன்னிச்சையாக படிமம் குறித்த தகவல்களை வெளியிட முடிவு செய்தது. அக்டோபர் 1999-இல் இந்த படிமம் பத்திரிக்கை உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டு, நவம்பர் 1999-ஆம் ஆண்டு நே.ஜியின் அறிவியல் இதழில் பிரசுரிக்கப்பட்டது. 'T.Rex எனப்படும் சிறிய அளவிலான டைனாசர்களுக்கு சிறகுகளா (Feathers for T.Rex?)' என்ற கேள்வி தான் கட்டுரையின் தலைப்பு. 

படுகலர்புல்லான அந்த கட்டுரையை எழுதிய கிறிஸ்டோபர் ஸ்லோன், நே.ஜியின் ஆர்ட் எடிட்டர் ஆவார். இந்த படிமத்திற்கு ஆர்க்கியோராப்டர் (Archaeoraptor) என்று பெயர் சூட்டியிருந்தது நே.ஜி. பெரும் பரபரப்பை உண்டாக்கியது கட்டுரை. 

நே.ஜி பிரசுரித்த கட்டுரையின் முதல் பக்கம் 

டைனாசர்களுக்கும், பறவைகளுக்கும் இடைப்பட்ட உயிரினமாக  (missing link) ஆர்க்கியோராப்டர் இருப்பதாகவும், எப்படி மனிதர்கள் பாலூட்டிகள் என்பது தெளிவோ அதுபோல 'டைனாசர்கள் தான் பறவைகள்' என்பது இதன் மூலமாக தெளிவாவதாக அந்த கட்டுரை குறிப்பிட்டிருந்தது. 

இந்த கட்டுரை வெளிவந்தது தான் தாமதம். பிரபல ஸ்மித்சோனியன் இயற்கை அருங்காட்சியகத்தின் பறவைகள் பிரிவு பாதுக்காப்பாளரான ஸ்டோர்ஸ் ஒல்சொன் (Storrs L. Olson) பொங்கி எழுந்துவிட்டார். பறவைகளில் குறிப்பிடத்தக்க ஆய்வுகளை மேற்கொண்டிருந்தவர் இவர். 'டைனாசர்களில் இருந்து பறவைகள் வந்தன' என்ற யூகத்தில் மாற்றுக்கருத்து கொண்டவர். நே.ஜியை கடுமையாக விமர்சித்து தள்ளினார் ஒல்சொன். பரபரப்பான, பொருள் இல்லாத செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இதுவரை இல்லாத அளவுக்கு நே.ஜி கீழே இறங்கிவிட்டதாக குற்றஞ்சாட்டினார் ஒல்சொன். 

மேலும், 'டைனாசர்களில் இருந்து பறவைகள்' என்ற யூகம் குறித்து சில மாதங்களுக்கு முன்னர் வெளியாக இருந்த மற்றொரு கட்டுரைக்காக தன்னை நே.ஜி கூப்பிட்டு கருத்து கேட்டதாகவும், மாற்றுக்கருத்தை அவர்கள் பரிசீலிக்க மறுத்ததில் இருந்து, எவ்வகையான ஆக்கப்பூர்வமான விசயங்களுக்கும் நே.ஜி தயாரில்லை என்பதை தான் புரிந்துக்கொண்டதாகவும் கூறினார். விமர்சனங்களுக்கு எல்லாம் கிரீடமாக, தங்கள் நம்பிக்கைக்கு பிரச்சாரம் செய்பவர்களாக சில ஆய்வாளர்கள் மாறிவிட்டதாக ஒரு காட்டு காட்டினார் ஒல்சொன்.

நம் தலைமுறையின் மிகப்பெரிய அறிவியல் பித்தலாட்டங்களில் ஒன்றாக இது மாறப்போவதாக கூறிய ஒல்சொனின் வார்த்தைகள் காலப்போக்கில் நிரூபனமாயின. ஆம், இந்த படிமத்தில் மேற்கொண்டு நடந்த ஆய்வுகள் இந்த படிமத்தின் உண்மைநிலையை உறுதிப்படுத்தின. நே.ஜி தலைகுனிந்தது. கூடவே இந்த தவறை செய்த ஆய்வாளர்களும் மன்னிப்பு கோரினர். 

அறிவியல் போர்வையில் நடந்த நாடகம் மிக சோகமான க்ளைமாக்ஸ்சுடன் முடிவுற்றது. 

தவறை ஆய்வாளர்கள் மீது சுமத்தி நே.ஜி தப்பிக்க நினைத்த போதிலும் சில கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியவில்லை. 

  • ஒரு அறிவியல் கட்டுரையை ஆர்ட் எடிட்டர் எழுத அனுமதித்தது ஏன்?
  • மிக விரைவாக இப்படியான கட்டுரையை கொண்டு வந்ததற்கான காரணம் என்ன?
  • இந்த படிமம் சட்ட விரோதமாக கடத்தப்பட்டது என்று நே.ஜிக்கு தெரியும். விரைவில் இந்த படிமம் சீனாவிடம் ஒப்படைக்கப்படும் என்று அந்த கட்டுரையில் கூறப்பட்டிருந்தது. இப்படியான சூழலில், என்ன காரணத்தை கூறினாலும், இப்படியாக ஒரு கட்டுரை பிரசுரிப்பது ஒரு சட்டவிரோத செயலை ஊக்கிவிப்பது போலாகாதா?

இந்த பிரச்சனையில் செமையான காமெடிகளும் உண்டு. இந்த பித்தலாட்டம் வெளிச்சத்திற்கு வந்தபோது, இதுக்குறித்து பரிணாம ஆதரவாளர்கள் கவலைப்பட்டிருப்பார்களோ இல்லையோ, படைப்புவாதிகள் குறித்து தான் அதிகம் கவலைப்பட்டார்கள். வேறென்ன, இதனை வைத்து படைப்புவாதிகள் எப்படியெல்லாம் ஆடப்போகின்றார்களோ என்ற பீலிங் தான். 

'இது பித்தலாட்டம் தான், ஆனா டைனாசரில் இருந்து பறவை வந்ததற்கு வேறு சில ஆதாரங்கள் உண்டு' என்பார்கள் பரிணாம ஆதரவாளர்கள். அட எப்பா, இப்ப டைனாசரில் இருந்து பறவை வந்ததா பிரச்சனை?, பித்தலாட்டம்னு தெரியுமுல்ல, தெரிந்தே அதனை மேற்கொண்டு தொடர வேண்டிய அவசியம் என்ன? அதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க. 

இன்னொரு சாராரோ, இந்த கட்டுரையை எழுதியது விஞ்ஞானி அல்ல, அவர் ஒரு ஆர்ட் எடிட்டர் மட்டுமே என்று சப்பை கட்டுகட்டுகின்றனர். ஆனால் சிறிதேனும் அவர்கள் யோசித்தால் இப்படியான வாதத்திற்கு வாய்ப்பிருக்காது. எழுதியது ஒரு ஆர்ட் எடிட்டர் என்றாலும், கட்டுரை என்ன தானாகவா வந்து குதித்துவிட்டது? நே.ஜியின் எடிட்டர் மற்றும் ஆய்வு குழு அனுமதித்தால் தானே பிரஸ்சுக்கே போக முடியும்?. மேலும், பித்தலாட்டம் என்று தெரிந்தும் இதனை தொடர்ந்த ஆய்வாளர்கள் தானே இந்த கட்டுரைக்கு பின்னால் இருந்தது? அவர்களின் கருத்துக்கள் தானே அந்த கட்டுரையை அலங்கரித்தது? எய்தவர்கள் இருக்க அம்பின் மீது குறை சொல்வது முட்டாள்தனம் இல்லையா? நல்ல காமெடி தான் போங்க...

இந்த பதிவுக்கு பதில் சொல்ல விரும்புபவர்கள் தயவுக்கூர்ந்து ஒன்றை புரிந்துக்கொள்ளுங்கள்.  "டைனாசரில் இருந்து பறவை" வந்தது என்ற யூகத்தை இந்த கட்டுரை விமர்சிக்கவில்லை (அதற்கு இத்தளத்தின் ஆர்க்கியாப்டெரிக்ஸ் குறித்த கட்டுரையை பார்க்கவும்) அதனால் பதில் சொல்கின்றேன் என்று கிளம்பி நேரத்தை வீணடிக்க வேண்டாம். மாறாக, பரிணாம ஆய்வாளர்கள் அறிவியலுக்கு செய்த துரோகத்தை தான் இந்த கட்டுரை விமர்சிக்கின்றது. முடிந்தால் அதனை மறுத்து காட்டுங்கள். 

மேலும், "இது பித்தலாட்டம் தான், ஆனா இத யாரு கண்டிபிடிச்சா, நாங்க தானே" என்ற அறிவுக்கு பொருந்தாத கேள்வியையும் தூக்கிக்கொண்டு வரவேண்டாம். குழந்தையை கிள்ளிவிட்டுட்டு தொட்டிலையும் ஆட்டுவது என்பது சாதனை அல்ல, வேதனை மட்டுமே. 

நம் அனைவரையும் இறைவன் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக..ஆமீன். 

இறைவனே எல்லாம் அறிந்தவன். 

References: 
1. Two open letters from Storrs Olson (LONG). link
2. All mixed up over birds and dinosaurs - 15th jan 2000, Science News. link
3. The 5 Greatest Palaeontology Hoaxes Of All Time - 7th June 2011, Science 2.0. link
4. Archoearaptor - wikipedia. link
5. Fake bird fossil highlights the problem of illegal trading - Nature 404, 696 (13 April 2000, doi:10.1038/35008237. link
6. Feathers fly over Chinese fossil bird's legality and authenticity - Nature 403, 689-690 (17 February 2000), doi:10.1038/35001723. link
7. Giant feathered dinosaur found in China was too big to fly - 5th April 2012, The Guardian. link
8. Top 10 scince hoaxes - Discovery Scince. link
9. Philip J. Currie -wikipedia. link
10. Expert: 80% fossils in Chinese museums are fakes - 13th jan 2011. China.org.cn. link
11. Timothy B. Rowe - The University of Texas at Austin. link

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ






Wednesday, September 12, 2012

மனித பரிணாமம் = மல்டிபிள் பர்சனாலிடி டிஸ்ஆர்டர்?



நம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்

========================================
Please Note:

மனித பரிணாமத்துறை என்பது மிகப்பெரியது. முடிந்தவரை இந்த பதிவை எளிதாக்கி, சுவாரசியமான நடையில் தரவே முயற்சித்துள்ளேன். இன்றைய காலத்திற்கு, குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு அவசியமான இக்கட்டுரையை சற்றே பொறுமையுடன் முழுமையாக படியுங்கள்.
========================================
1867-ஆம் ஆண்டு, கல்வர் என்ற இயற்கையாளர், மனித பரிணாமம் குறித்த விளக்கப்படம் ஒன்றை வரைந்தார். ப்லாடிபஸ் என்ற உயிரினமாக டைனாசர்கள் மாறுவதை போன்றும், கங்காருவில் இருந்து மனிதன் பரிணாமம் அடைந்ததாகவும் விளக்கியது அந்த படம்.

நல்லவேளையாக 1871-ஆம் ஆண்டு, மனித பரிணாமம் குறித்த தன்னுடைய பிரபல புத்தகத்தை வெளியிட்டார் டார்வின். இல்லையென்றால் மனித பரிணாமத்தை விளக்குகின்றேன் என்ற பெயரில் கற்பனைக்கு எட்டாத கற்பனை படங்களை வரைந்து தள்ளியிருப்பார்கள் பரிணாமவியலாளர்கள்.

குரங்கு போன்ற ஒன்றிலிருந்து(?) மனிதன் வந்ததாக கூறப்படும் கோட்பாட்டை டார்வின் பிரபலப்படுத்த, மனித பரிணாமம் குறித்த ஒருமித்த கருத்து பரிணாமவியலாளர்களிடயே உருவாகியது.

மனித பரிணாமம் என்றவுடன் சட்டென நம் நினைவுக்கு வருவது குரங்கிலிருந்து மனிதன் படிப்படியாக உருமாறும் அந்த படம் தான். யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாத அந்த படத்தை பிரபல ஓவியரான ருடால்ப் ஜலிங்கர் (Rudolph Zallinger), 1966-ஆம் ஆண்டு வெளியான "Early Man" என்ற புத்தகத்திற்காக வரைந்தார்.

Fig 1: "Early Man" புத்தகத்தில் இடம் பெற்ற ஜலிங்கர் வரைந்த படம்   

குரங்கிற்கும் மனிதனிற்கும் இடையே சுமார் 13 இடைநிலை உயிரினங்களை கொண்டிருந்தது அந்த படம். இந்த படமே இன்று சுருக்கப்பட்டும் வரையப்பட்டு வருகின்றது.

இப்படம் குறித்த சர்ச்சைகள் நீண்ட காலமாகவே புழக்கத்தில் இருக்கின்றன. சில மாதங்களுக்கு முன்பாக இதுக்குறித்து கருத்து தெரிவித்த "நேச்சர்" ஆய்விதழின் எடிட்டரான ஹென்றி ஜீ, மனித பரிணாமத்தை விளக்கும் இந்த வரிசையை முட்டாள்தனமானது என்று குறிப்பிட்டார்.

“We have all seen the canonical parade of apes, each one becoming more human. We know that, as a depiction of evolution, this line-up is tosh. Yet we cling to it. Ideas of what human evolution ought to have been like still colour our debates.” - Henry Gee, Palaeoanthropology: Craniums with clout, Nature, 478, 6th October 2011, page 34, doi:10.1038/478034a.  
குரங்குகள் படிப்படியாக மனிதனாகும் அணிவகுப்பை நாம் எல்லோரும் பார்த்திருப்போம். பரிணாமத்தை விளக்கும் ஒரு படமாக இந்த வரிசை முட்டாள்தனமானது என்பது நமக்கு தெரியும். இருப்பினும் நாம் இதனை பிடித்துக் கொண்டிருக்கின்றோம். மனித பரிணாமம் எப்படி இருந்திருக்க வேண்டும் என்ற ஐடியாக்கள் இன்னும் விவாதத்துக்குரியதாகவே இருக்கின்றன - (extract from the original quote of) Henry Gee, Palaeoanthropology: Craniums with clout, Nature, 478, 6th October 2011, page 34, doi:10.1038/478034a.

ஹென்றி ஜீ ஏன் இப்படி குறிப்பிட வேண்டும்?

இந்த கேள்விக்கான பதில் மிக எளிதானது. அது, அந்த படத்தில் உண்மையில்லை என்பது தான். மனிதன் படிப்படியாக மாறுவதை போலவெல்லாம் நம்மிடம் ஆதாரங்களில்லை. 

குரங்கு போன்ற ஒன்றிலிருந்து மனிதன் வந்ததாக பரிமாணவியலாளர்கள் ஒருமித்த கருத்தை கொண்டிருந்தாலும், அது எப்படி நடந்தது என்பதில் கடுமையான குழப்பங்கள் அவர்களிடையே உண்டு. ஒருவர் ஒன்றை ஆதாரம் என்று காட்டுவார், அதனை இன்னொருவர் மறுப்பார். அப்படி இல்லையா, ஆதாரம் என்று கருதப்பட்ட ஒன்று காலப்போக்கில் ஓரங்கட்டப்படும். அப்படியும் இல்லையா, ஆதாரம் என்று கருதப்பட்டது பித்தலாட்டம் என்று நிரூபிக்கப்பட்டு அதிர்ச்சியை உண்டாக்கும். மனித பரிணாம வரலாற்றை உற்று நோக்கினால் நமக்கு கிடைக்கும் சுருக்கம் இதுதான். (பரிணாம பித்தலாட்டங்கள் குறித்த இத்தளத்தின் பதிவினை <<இங்கே>> காணலாம்)

வரலாற்றில் குரங்கினங்கள் இருந்திருக்கின்றன, மனித இனங்கள் இருந்திருக்கின்றன. ஆனால், குரங்கு போன்ற ஒன்றிலிருந்து மனிதன் படிப்படியாக மாறியதற்கு தான் இதுவரை நம்மிடம் ஆதாரங்கள் இல்லை. இருப்பவை எல்லாம் முன்னுக்கு பின் முரணான தகவல்களும், குழப்பங்களும் மட்டுமே.

அப்படி என்ன குழப்பங்கள் என்கின்றீர்களா? அதனை ஆழமாக அலசி ஆராயவே இந்த கட்டுரை முயற்சிக்கின்றது.

மனித பரிணாமம் என்றால் என்ன? 

பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக இன்றைய மனிதர்களின் மூதாதையரும், குரங்குகளின் மூதாதையரும் ஒரு பொதுவான மூதாதையரில் இருந்து பிரிந்துவிட்டார்கள் என்பது பரிணாம புரிதல்.

                                     Fig 2: எளிமைப்படுத்தப்பட்ட மனித பரிணாம விளக்கப்படம் 

சரி, அப்படியென்றால் அந்த பொதுவான மூதாதையர் யார்? அந்த பொதுவான மூதாதையரில் இருந்து வந்த மனிதனின் மூதாதையர் யார்?

இந்த கேள்விக்கான விடை, "இன்னும் தெளிவான முடிவுக்கு பரிணாம உலகம் வரவில்லை" என்பது தான். என்ன, நம்முடைய மூதாதையர் யார் என்ற தெளிவு இல்லாமலேயே மனிதன் குரங்கு போன்ற ஒன்றிலிருந்து தான் வந்திருப்பான் என்று சொல்கின்றார்களா? என்று நீங்கள் கேட்டால் அதற்கு கீழ்காணும் கருத்து ஒரு ஹின்ட்டை கொடுக்கும்.

"..Ramapithecus, a species of fossil ape from south Asia, which was mistakenly assumed to be an early human ancestor in the 1960s and 1970s, but later found to be a close relative of the orangutan" - Fossils May Look Like Human Bones: Biological Anthropologists Question Claims for Human Ancestry, Science daily, 16th Feb 2011
தென்னாசியாவில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட ரமபிதகஸ் என்ற படிமம், மனிதனின் மூதாதையர் என்று 1960-1970க்களில் தவறுதலாக எண்ணப்பட்டது. ஆனால் இந்த படிமம் ஓரங்குட்டான் குரங்கின் நெருங்கிய உறவினர் என்பது பின்னர் தெரியவந்தது - (extract from the original quote of) Fossils May Look Like Human Bones: Biological Anthropologists Question Claims for Human Ancestry, Science daily, 16th Feb 2011.    

மேற்கண்ட உதாரணம் போலத்தான் இன்று வரை நடந்து வருகின்றது. ஒரு படிமத்தை மனிதனின் மூதாதையர் என்பார்கள், பின்னர் அது குரங்கின் படிமம் என்றோ அல்லது மனிதனின் மூதாதையர் இல்லை என்றோ நிராகரிக்கப்படும். இன்று வரை மனிதனின் மூதாதையர் "இந்த குரங்கு போன்ற ஒன்று தான்" என்று எந்த ஆதாரத்தை நோக்கியும் பரிணாம உலகால் கைக்காட்ட முடியவில்லை.

ஆக, மனிதன் எதிலிருந்து வந்தான் என்ற கேள்விக்கு "குரங்கு போன்ற ஒன்றிலிருந்து" என்ற பொதுவான பதில் மட்டுமே உள்ளதே தவிர ஆதாரங்கள் என்று ஒன்றுமில்லை. 

இன்னும் ஆழமாக மனித பரிணாமத்தை கீறுவோம்....

அப்படி என்ன தான் பிரச்சனை? 

ரைட். இந்த வவ்வால் பார்த்திருப்பீர்கள் :-). பாலூட்டியான அந்த உயிரினம் நன்கு பறக்கக்கூடியது என்பது நாம் அறிந்ததே. வவ்வால் பறக்கும் தன்மையை கொண்டிருந்தாலும் அது பறவைகளிலிருந்து பரிணாமம் அடைந்தது என்று பரிணாம உலகம் கூறுவதில்லை. மாறாக, பறக்கும் தன்மையை வவ்வால் தன்னிச்சையாக வளர்த்து கொண்டது என்றே பரிணாம உலகம் கூறுகின்றது (Convergent Evolution).

ஆக, ஒரே பண்புகள் இருவேறு உயிரினங்களில் காணப்படுகின்றது என்பதற்காக அதிலிருந்து இது வந்தது என்று அர்த்தமல்ல. வவ்வாலிடம் காட்டும் இந்த அணுகுமுறையை மனித பரிணாமத்தில் காட்டாதது தான் குழப்பங்களுக்கு முதல் காரணம்.

மனிதனுக்கும் குரங்கினங்களுக்கும் சிலபல ஒற்றுமைகள் உள்ளனவா, அப்படியென்றால் மனிதன் குரங்கிலிருந்து தான் வந்திருக்க வேண்டும். ஆதிகால குரங்கின படிமங்களில் மனிதனின் சில தன்மைகள் தென்படுகின்றவா, அப்படியானால் அவை மனிதனின் மூதாதையராக தான் இருக்க வேண்டும். இப்படித்தான் பல படிமங்களை மனிதனின் மூதாதையர் என்று எண்ணி பின்னர் அவை அழிந்து போன குரங்கின் படிமம் என்றோ அல்லது மனிதனின் மூதாதையர் இல்லையென்றோ நிரூபிக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டன.

இதில் கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு முக்கிய விவகாரமும் உண்டு. சுமார் 40-80 இலட்சம் ஆண்டுகளுக்கு இடையில், மனிதர்களின் மூதாதையர்களும் சிம்பன்சிக்களின் மூதாதையர்களும் ஒரு பொதுவான மூதாதையரில் இருந்து பிரிந்துவிட்டனர் என்பது பரிணாம யூகம். ஆகையால், இந்த இடைப்பட்ட காலத்தில் மனிதத்தன்மைகள்(?) சிலவற்றுடன் குரங்கு போன்ற படிமங்கள் கிடைக்கின்றனவா, அப்படியென்றால் மனித பரிணாமத்திற்கு ஆதாரமாக காட்ட உங்களுக்கு ஒரு உறுப்பினர் கிடைத்தாகிவிட்டது :-).

ஆனால் இந்த லாஜிக்கில் அர்த்தமுள்ளதா? நிச்சயம் இல்லை. காரணம், சுமார் 80 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பான குரங்கின படிமங்கள் கூட மனிதனின் அதே சில தன்மைகளை பிரதிபலிக்கின்றன. ஆனால் அவற்றை மனிதனின் மூதாதையர் என்று பரிணாம உலகம் கூறுவதில்லை. குரங்கின் படிமங்கள் என்றே கூறுகின்றனர். ஏன் இந்த இரட்டை நிலை?

Find an ape-like creature between 4 and 8 million years ago that fits at least some of these criteria, and you have a contender for an early human. What remains unclear is whether these characteristics are good indicators of membership in the human family. Wood and Harrison suggest that they might not be - Ancestor Worship, Wired, 22nd Feb 2011.
40-80 இலட்சம் ஆண்டுகளுக்கு இடையில், மனிதனின் சில தன்மைகளோடு காணப்படும் ஒரு உயிரினத்தை கண்டுபிடியுங்கள். அப்படியானால் உங்களுக்கு ஆரம்பகால மனிதனுக்கான ஒரு உறுப்பினர் கிடைத்தாகிவிட்டது. ஆனால் இம்மாதிரியான தன்மைகள் இருப்பது மனித குடும்பத்தில் அவற்றிற்கு ஒரு இடத்தை கொடுத்துவிடுமா என்பது இன்னும் தெளிவாகவில்லை. இல்லை என்றே ஆலோசனை கூறுகின்றனர் வுட் மற்றும் ஹாரிசன் (என்ற உயிரியல் மானிடவியலாளர்கள்) - (Extract from the original quote of) Ancestor Worship, Wired, 22nd Feb 2011.

யாரையெல்லாம் மனிதனின் மூதாதையர் என்று கருதினர்?

1. Sahelanthropus tchadensis - 70 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய படிமம்.
2. Orrorin tugenensis - 60 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையது.
3. ஆர்டி (Ardipithecus ramidus) - 44 லட்சம் ஆண்டுகளுக்கு  முந்தையது.
4. லூசி (Australopithecus afarensis) - 32 லட்சம் ஆண்டுகளுக்கு  முந்தையது.
5. செடிபா (Australopithecus sediba) - 19 லட்சம் ஆண்டுகளுக்கு  முந்தையது.

நீங்கள் மேலே காண்பவை எல்லாம் நம்முடைய மூதாதையர் என்று எண்ணப்பட்ட பிரபல படிமங்கள். 

படிமங்கள் என்றவுடன் ஒரு விசயத்தை நினைவில் கொள்வது நல்லது. இந்த பழங்கால படிமங்கள் என்பவை துகள்கலாகவே (fragments) நமக்கு பெரும்பாலும் கிடைத்துள்ளன. அவற்றை மறுசீரமைத்து (Reconstruction) தான் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துகின்றனர் பரிணாமவியலாளர்கள். உதாரணத்திற்கு ஆர்டி மற்றும் லூசியின் மறுசீரமைக்கப்பட்ட படிமங்களை பாருங்கள்.

Fig 3: (a) ஆர்டியின் படிமம் (b) லூசியின் படிமம் 

ஒருவர் ஒருமாதிரியாக இந்த துகள்களை மறுசீரமைத்து ஒரு கருத்தை சொல்லுவார். இன்னொருவரோ வேறுமாதிரியாக மறுசீரமைத்து வேறொரு கருத்தை சொல்லுவார். நீங்கள் ஆதிகால மனிதன் படம் என்பதாக பல்வேறு படங்களை பார்த்திருப்பீர்கள். அவையெல்லாம் இப்படியாக மறுசீரமைக்கப்பட்டு பின்னர் அவற்றிற்கு கற்பனையில் தோல் போர்த்தப்பட்டு வரையப்பட்டவைகளே.

சரி விசயத்திற்கு வருவோம். ஆர்டி குறித்த தகவல்கள் சில ஆண்டுகளுக்கு முன்பாக (2009) வெளிக்கொண்டுவரப்பட்டபோது மிகப்பெரிய பாதிப்பை பரிணாம உலகில் அது ஏற்படுத்தியது. சைன்ஸ் மற்றும் டைம் போன்ற இதழ்கள் அதனை அவ்வருடத்தின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பாக வர்ணித்தன. ஆனால் அந்த உற்சாகம் நீண்ட நாள் நீடிக்கவில்லை. சில மாதங்களிலேயே ஆர்டியின் மனித மூதாதையர் அந்தஸ்து கேள்விக்குறியாக்கப்பட்டது.

"Both TIME and Science named her the "Scientific Breakthrough of the Year." But now Ardi has found herself in a spot of controversy. Two new articles being published by Science question some of the major conclusions of Ardi's researchers, including whether this small, strange-looking creature is even a human ancestor at all" - Ardi: The Human Ancestor Who Wasn't?, Time, 27th May 2010. 
டைம் மற்றும் சைன்ஸ் ஆகிய இரண்டும் ஆர்டியை "அவ்வருடத்தின் அறிவியல் கண்டுபிடிப்பாக" பெயரிட்டன. ஆனால் ஆர்டி இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. சைன்ஸ் ஆய்விதழில் பிரசுரமாகியுள்ள இரண்டு கட்டுரைகள் ஆர்டி ஆய்வாளர்களின் முக்கிய முடிவுகளை கேள்விக்குறியாக்கியுள்ளன. சிறிய, விந்தையான இந்த உயிரினம் மனித மூதாதையரா என்ற கேள்வியும் அதில் அடக்கம் - (extract from the original quote of) Ardi: The Human Ancestor Who Wasn't?, Time Science, 27th May 2010.

ஆர்டி முதற்கொண்டு நீங்கள் மேலே காணும் படிமங்களை மனிதனின் மூதாதையர் என்று கருத முக்கிய காரணம், அவற்றில் தென்பட்ட மனிதத்தன்மைகளே(?). முக்கியமான தன்மைகள் என்றால் இரு கால்களால் நடப்பதும் (Bipedalism), சிறிய கோரைப்பற்களுமே. ஆனால் மனித மூதாதையர் என்று கருதப்பட்ட இவற்றில் காணப்படும் அதே தன்மைகள் 80-70 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய குரங்கின படிமங்களிலும் காணப்படுகின்றன (உதாரணத்திற்கு Oreopithecus, Ouranopithecus மற்றும் Gigantopithecus போன்றவை). ஆனால் இவற்றை மனிதனின் மூதாதையர் என்று பரிணாமவியலாளர்கள் கூறுவதில்லை.

80-40 லட்சம் ஆண்டுகளுக்கு இடையில் மனித தன்மைகளுடன் குரங்கு போன்ற(?) படிமம் கிடைத்தால் அவை மனித மூதாதையர். அதுவே 80 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்தால் அவை குரங்குகள். என்ன லாஜிக் இது? தங்கள் யூகங்களுக்கு ஏற்றார்போல ஆதாரங்களை வளைத்து கொள்கின்றார்கள் என்பதை தவிர வேறென்ன காரணம் இருக்க முடியும்?

அப்படியானால் மனிதனின் மூதாதையர் என்று கருதப்படும் இந்த பழங்கால படிமங்கள்?

Sahelanthropus tchadensis, Orrorin tugenensis மற்றும் ஆர்டி குறித்து நேச்சர் ஆய்விதழில் சென்ற ஆண்டு வெளியான ஆய்வுக்கட்டுரை, இந்த படிமங்கள் மீதான எதிர்மறை விமர்சங்களை மேலும் அதிகப்படுத்தியது. இவை குரங்கின் படிமங்களாக இருக்கவே அதிக வாய்ப்பிருப்பதாக கூறினார்கள் அந்த ஆய்வாளர்கள்.

"We believe that it is just as likely or more likely that they are fossil apes situated close to the ancestry of the living great ape and humans" - Terry Harrison, a professor in New York university's Department of Anthropology and director of its Center for the Study of Human Origins. Science Daily, Feb. 16, 2011. 
இவை குரங்கின் படிமங்களாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளதாக நாங்கள் நம்புகின்றோம் - (extract from the original quote of) Terry Harrison, a professor in New York university's Department of Anthropology and director of its Center for the Study of Human Origins. Science Daily, Feb. 16, 2011.

அடுத்து லூசிக்கு வருவோம். 

Australopithecus afarensis (லூசி இந்த பிரிவை சேர்ந்தது தான்) குறித்து பாரம்பரியமிக்க PNAS (Proceedings of the National Academy of Sciences) ஆய்விதழில் வெளியான ஆய்வுக்கட்டுரை, இந்த படிமங்களில் காணப்படும் கீழ்த்தாடை கொரில்லாக்களை ஒத்திருப்பதாகவும், இவற்றை மனிதனின் மூதாதையர் என்று கூறுவதில் சந்தேகம் இருப்பதாகவும் குறிப்பிட்டது. கூடவே மனித மூதாதையர் என்ற நிலையிலிருந்து Australopithecus afarensis வெளியேறுவதாகவும் கூறியது. லூசியை மனித மூதாதையர் இல்லை என்று கூறும் விக்கிபீடியா இந்த ஆய்வுக்கட்டுரையையே மேற்கோள் காட்டுகின்றது.

"Mandibular ramus morphology on a recently discovered specimen of Australopithecus afarensis closely matches that of gorillas......
The presence of the morphology in both the latter and Au. afarensis and its absence in modern humans cast doubt on the role of Au. afarensis as a modern human ancestor"
- Gorilla-like anatomy on Australopithecus afarensis mandibles suggests Au. afarensis link to robust australopiths, PNAS, 17th April 2007.
சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட Australopithecus afarensis படிமத்தில் காணப்படும் கீழ்த்தாடை உருவமைப்பு கொரில்லாக்களோடு நெருக்கமாக ஒத்துப்போகின்றது.........Australopithecus afarensis மற்றும் Australopithecus robustus ஆகிய இரண்டிலும் இந்த உருவமைப்பு காணப்படுகின்றது. அதே நேரம் தற்காலத்திய மனிதர்களில் இது காணப்படவில்லை. Australopithecus afarensis மனிதனின் மூதாதையர் என்ற கருத்தில் இதன்மூலமாக சந்தேகம் விதைக்கப்படுகின்றது - (Extract from the original quote of) Gorilla-like anatomy on Australopithecus afarensis mandibles suggests Au. afarensis link to robust australopiths, PNAS, 17th April 2007.

இறுதியாக செடிபா:

ஆஹா...செடிபாவை பொருத்தவரை நிலைமை சற்று வித்தியாசமானது. பொதுவாக மனித மூதாதையர் என்று கருதப்படும் படிமங்கள் முதலில் பரபரப்பாக பேசப்படும். பின்னர், சிறிது காலத்திற்கு பிறகு மனித மூதாதையர் இல்லை என்று ஓரங்கட்டப்படும். ஆனால் செடிபாவை பொருத்தவரை அதுக்குறித்த தகவல்கள் வெளியானதில் இருந்தே சர்ச்சைகளும் அலங்கரித்துவிட்டன.

2008-ஆம் ஆண்டு செடிபா படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, 2010-ஆண்டு லீ பெர்கர் மற்றும் அவரது குழுவினரால் இதுக்குறித்த தகவல்கள் வெளிவந்து பரபரப்பூட்டின. இதனை மனிதனின் மூதாதையர் என்று கூறிய பெர்கரின் கருத்து மற்ற ஆய்வாளர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது, மிகைப்படுத்தப்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

"..the researchers' suggestion that the fossils represent a transitional species in human evolution, sitting between Australopithecus and Homo species, has been criticized by other researchers as overstated" - Claim over 'human ancestor' sparks furore, 8 April 2010, Nature, doi:10.1038/news.2010.171.
(மனித பிரிவுக்கு முந்தைய) Australopithecus பிரிவுக்கும், (மனித பிரிவான) ஹோமோவுக்கும் இடைப்பட்டவைகளாக செடிபா படிமங்கள் இருப்பதாக கூறும் ஆய்வாளர்களின் கருத்து "மிகைப்படுத்தப்பட்டதாக" மற்ற ஆய்வாளர்களால் விமர்சிக்கப்படுகின்றது - (extract from the original quote of) Claim over 'human ancestor' sparks furore, 8 April 2010, Nature, doi:10.1038/news.2010.171. 

இன்னும் வேண்டுமா என்பது போல, சைன்ஸ் ஆய்விதழில் வெளியான ஒரு கட்டுரை லீ பெர்கரின் நம்பகத்தன்மை மீது கேள்வி எழுப்பியது. சற்று காலம் அடங்கியிருந்த செடிபா குறித்த செய்திகள் தற்போது (இவை சார்ந்த பாறைகளில் நடத்தப்பட்ட CT Scan வடிவில்) மறுபடியும் ஆரம்பித்து உள்ளன (July 2012). ஆனால் விடை என்னவோ அதே தான். சில தொல்லுயிரியலாளர்களே செடிபாவை மனித மூதாதையர் என்று ஏற்றுக்கொள்வதாக சமீபத்திய நியூயார்க் டைம்ஸ் குறிப்பிடுகின்றது. இருப்பினும் பொறுத்திருந்து பார்ப்போம், செடிபா வரலாற்றை மாற்றுகின்றதா என்று... :-)

மொத்தத்தில், மனித பரிமாணம் தன் பர்சனாலிடியை ஒவ்வொருவிதமாக வரலாற்றில் மாற்றிக்கொண்டே தான் வந்துள்ளது. 

"Anyone who has studied the history of paleoanthropology knows how many times the list of our direct ancestors has been changed, and future discoveries of previously-unknown species will continue to change the picture. We have an outline of our ancestry, but the details are still subject to change" - Ancestor Worship, Wired, 22nd Feb 2011.
நம்முடைய மூதாதையர் யார் என்ற பட்டியல் எத்தனை முறை மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றது என்பதை தொல்லுயிரியல்-மானிடவியல் வரலாற்றை படித்த அனைவரும் அறிவர். முன்பு நாம் அறியாத உயிரினங்கள் குறித்த கண்டுபிடிப்புகள் தொடர்ந்து காட்சியை மாற்றியமைத்து வருகின்றன. நம்முடைய மூதாதையர் எப்படி இருந்திருக்க வேண்டும் என்பது குறித்த சுருக்கமான வர்ணனை நம்மிடம் உண்டு. அந்த தகவல்களும் மாறக்கூடியவையே - (extract from the original quote of) Ancestor Worship, Wired, 22nd Feb 2011.

மனிதன் எதிலிருந்து வந்தான் என்று கேட்டால் "குரங்கு போன்ற ஒன்றிலிருந்து" என்று கூறி, மனித பிரிவுக்கு முந்தைய Ardipithecus மற்றும் Australopithecus பிரிவுகளை காட்டுவார்கள் பரிணாமவியலாளர்கள். அப்படியா என்று அந்த பிரிவுகளுக்குள் சென்று அங்கிருக்கும் படிமங்களை படித்தால் ஒவ்வொன்றாக இவர்களே மறுத்திருப்பார்கள் அல்லது சர்ச்சைக்குரியதாக இருக்கும். அப்புறம் எப்படி இவற்றில் இருந்து மனிதன்?

நான் முன்னவே கூறியது போன்று, மனிதன் எதிலிருந்து வந்தான் என்ற கேள்விக்கு "குரங்கு போன்ற ஒன்றிலிருந்து" என்ற பொதுவான பதில் மட்டுமே உள்ளதே தவிர ஆதாரங்கள் என்று ஒன்றுமில்லை. எந்த படிமத்தை நோக்கியும் இது தான் மனித மூதாதையர் என்று ஒருமித்த கருத்தோடு கூறமுடியாத நிலையில் தான் பரிணாம உலகம் இருக்கின்றது. 

அதெல்லாம் சரி, அப்ப நம்ம பிரிவு?

நம்முடைய ஹோமோ பிரிவு ரொம்ப சுவாரசியமானது. இந்த ஹோமோ பிரிவு குறித்து, இறைவன் நாடினால், விரிவாக எதிர்காலத்தில் பார்ப்போம். இப்போதைக்கு இந்த கட்டுரைக்கு ஏதுவாக சில தகவல்களை சுருக்கமாக பார்த்துவிடுவோம்.

ஹோமோ பிரிவில் முக்கிய உறுப்பினர்கள் என்றால் அவை பின்வருபவை தான். 

1. Homo Habilis
2. Homo erectus
3. Homo Sapiens (நியாண்டர்தல் மனிதர்கள் மற்றும் தற்காலத்திய மனிதர்கள்)

Fine. நம் ஹோமோ பிரிவின் முதல் உறுப்பினரான H.habilis-லேயே சர்ச்சை கால் மேல் கால் போட்டு உட்கார்ந்துள்ளது. இதன் உடலமைப்பு குரங்குகளை போன்று அமைந்துள்ளதாக விக்கி கூறுகின்றது. சில ஆண்டுகளுக்கு முன்பாக "பரிணாம கோட்பாடு கேள்விக்குறியாக்கப்பட்டதாக" பல ஊடகங்களும் அல்லோலப்பட்டன. அதற்கு காரணம், மீவ் லீக்கி என்ற பிரபல தொல்லுயிரியலாளரும், அவரது குழுவினரும் கண்டெடுத்த H.habilis மற்றும் H.erectus படிமங்கள் தான். இவை இரண்டும் ஒன்றுக்கொன்று அருகாமையிலேயே கண்டெடுக்கப்பட்டன.

H.habilis பரிணாமம் அடைந்து H.erectus-ஆக மாறியதாக நீண்ட காலமாக எண்ணப்பட்டது. ஆனால் லீக்கியின் ஆய்வு இதனை கேள்விக்குறியாக்கியது. இந்த இரண்டு உயிரினங்களும் சுமார் ஐந்து லட்சம் ஆண்டுகள் ஒன்றுக்கொன்று அருகாமையில் வாழ்ந்ததும், habilis-இல் இருந்து erectus வரவில்லை என்பதும் தெளிவானது.

"Their co-existence makes it unlikely that Homo erectus evolved from Homo habilis" - Meave Leakey, BBC, Finds test human origins theory. 8th August 2007
இரண்டும் சமகாலத்தில் வாழ்ந்தது, Homo Habilis-லிருந்து Homo Erectus வந்திருக்க வேண்டும் என்ற கருத்தினை சாத்தியமற்றதாக ஆக்கியுள்ளது - (extract from the original quote of) Meave Leakey, BBC, Finds test human origins theory. 8th August 2007

இந்த நிகழ்வை தான் ஊடகங்கள் "பரிணாம கோட்பாடு கேள்விக்குறியாக்கப்பட்டதாக" பிரபலப்படுத்தின. ஆக, இதிலிருந்து அது வந்தது என்ற யூகம் (வழக்கம் போல) செயலிழந்து, இரண்டிற்கும் பொதுவான மூதாதையர் என்ற புது யூகம் வந்துவிட்டது.

Fig 4: (a) பழைய பரிணாம யூகம் (b) புதிய பரிணாம யூகம். 

H.habilis குறித்த சர்ச்சைகள் புதிதல்ல. இவற்றை மனித பிரிவிலிருந்து நீக்கி முந்தைய பிரிவான Australopithecus-சில் சேர்க்க வேண்டுமென்று சில துறைச்சார்ந்த வல்லுனர்கள் கூறிவந்தார்கள். அவர்களில் பிரபல தொல்லுயிரியலாளரான ரிச்சர்ட் லீக்கியும் ஒருவர்.

எது எப்படியோ மனிதனின் மூதாதையர் என்ற அந்தஸ்திலிருந்து H.habilis-சும் கீழிறக்கப்பட்டுவிட்டது. 

எந்தவொரு சர்ச்சையும் இன்றி "இவன் தான் மனிதன்" என்று (பரிணாமவியலார்கள்) எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும் மனிதனின் மூதாதையர் என்றால் அது H.erectus தான். இன்றைய மனிதனின் உடற்கூறுகலோடு ஒத்திருக்கின்றது இவர்களது உடலமைப்பு. சுமார் 18 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றியதாக கருதப்படும் இவர்களை அறிவில் குறைந்தவர்கள் என்று பரிணாமவியலாளர்கள் கூறுவது மற்றுமொரு யூகமே.

இவர்கள் பேசக்கூடிய தகுதியை பெற்றிருந்திருக்கின்றார்கள், நெருப்பை உருவாக்கக்கூடியவர்களாகவும், கண்ட்ரோல் செய்யக்கூடியவர்களாகவும் இருந்திருக்கின்றார்கள். மனிதர்களை போல சமூக கட்டமைப்பை கொண்டிருந்திருக்கின்றார்கள். சிக்கலான கருவிகளை பயன்படுத்தியிருக்கின்றார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக மிதவை போன்றவைகளில் கடல் கடந்து பயணித்திருக்கின்றார்கள். கடல் மார்க்கமாக இடம் விட்டு இடம் போவதெல்லாம் அறிவில் குறைந்தவர்கள் செய்யக்கூடிய காரியமா?

சுருக்கமாக சொல்லப்போனால் மனிதன் தோன்றியதிலிருந்தே அறிவில் சிறந்தவனாகத் தான் இருந்திருக்கின்றான். படிப்பவர்களை வியப்பின் உச்சிக்கே அழைத்துச் செல்லும் இவை குறித்தும், மேலும் சிலவற்றை (like Laetoli footprints etc) குறித்தும் எதிர்க்கால பதிவுகளில் விரிவாக பார்ப்போம். (இன்ஷா அல்லாஹ்)

எப்படி நியாண்டர்தல் மனிதர்கள் விசயத்தில் தங்கள் தவறான பார்வையை பரிணாமவியலாளர்கள் மாற்றிக்கொண்டார்களோ, அதேநிலை விரைவில் H.erectus-க்கும் வரலாம். (நியாண்டர்தல் மனிதர்கள் குறித்த இத்தளத்தின் கட்டுரையை காண <<இங்கே>> சுட்டவும்)

இறுதியாக:

1. மனித பரிணாம படத்தில் காணப்படும் வரிசையில் எந்த உண்மையும் கிடையாது. இனியும் யாராவது அந்த படத்தை காட்டினால், ஹென்றி ஜீ கூறியது போல "முட்டாள்தனமானது" என்று நீங்கள் கூறலாம்.

2. மனிதனின் மூதாதையர் என்று கருதப்படும் (பிரபல) குரங்கு போன்ற படிமங்கள் எவையும் மனிதனின் மூதாதையர் அல்ல. அல்லது அட்லீஸ்ட் ஒருமித்த கருத்துக்கு பரிணாம உலகம் இன்னும் வரவில்லை.

3. மனித இனம் திடீரென்றே படிமங்களில் தோன்றியுள்ளது. குரங்கு போன்ற ஒன்றிலிருந்து  படிப்படியாக மனிதன் தோன்றியதற்கு ஆதாரங்கள் இல்லை.

4. மனிதன் தான் தோன்றியதிலிருந்தே அறிவில் சிறந்தவனாகத் தான் இருந்திருக்கின்றான்.

So, What's more?????? :-) :-)

இறைவன் நம் அனைவரையும் மூட நம்பிக்கைகளில் இருந்து காத்து நேர்வழியில் செலுத்துவானாக.....ஆமீன்.

இறைவனே எல்லாம் அறிந்தவன்...

My Sincere thanks to:
1. Smithsonian Institution.

Figure Sources:
Fig 1 - Wikipedia.
Fig 2 - Drawn by Aashiq Ahamed
Fig 3 - Wikipedia
Fig 4 - University of California (Berkeley) website.

References:
1. Human Family Tree - Smithsonian Institution's Nation Museum of Natural History. link
2. Raining on Evolution’s Parade - I.D. Magazine, March/April 2006. link
3. March of Progress - wikipedia. link
4. Australopithecus - Encyclopedia Brittanica. link
5. Claim over 'human ancestor' sparks furore - Nature, 8 April 2010, doi:10.1038/news.2010.171. link
6. Australopithecus africanus - Australian Museum. link
7. Australopithecus sediba: can we stop calling it a 'missing link? - Telegraph blogs. September 10th, 2011. link
8. Convergent evolution - Biology Online. link
9. Behavioral and phylogenetic implications of a narrow allometric study of Ardipithecus ramidus - Homo, Volume 62, Issue 2, April 2011, Pages 75–108. link
10. Ardi: The Human Ancestor Who Wasn't? - Time Science, 27th May 2010. link
11. The evolutionary context of the first hominins - Nature 470, 347–352, 17 February 2011, doi:10.1038/nature09709. link
12. Ancestor Worship - Wired, February 22, 2011. link
13. Was “Ardi” not a human ancestor after all? New review raises doubts - Scientific American blog, February 16, 2011. link
14. Fossils May Look Like Human Bones: Biological Anthropologists Question Claims for Human Ancestry - Science daily, Feb. 16, 2011. link
15. When it comes to evolution, headlines often get it wrong - University of California (Berkeley) Museum of Paleontology, September 2007. link
16. Head to head - Nature, 9 August 2007, doi:10.1038/nature05986. link
17. Finds test human origins theory -  BBC, 8 August 2007. link
18. Fossil Find Challenges Evolutionary Theory - Digital Journal, 9 Aug 2007. link
19. Fossil find casts doubt on origins of man - ABC News, 10 Aug 2007. link
20. Our Species Mated With Other Human Species, Study Says - National Geographic, March 6, 2002.  link
21. Human precursors went to sea, team says - Physorg. August 17th, 2011. link
22. Hominids Went Out of Africa on Rafts - Wired. January 8, 2010. link
23. Primitive Humans Conquered Sea, Surprising Finds Suggest - National Geographic, February 17, 2010. link
24. Ancient Island Tools Suggest Homo erectus Was a Seafarer - Science, 13 March 1998, Vol. 279 no. 5357 pp. 1635-1637, DOI: 10.1126/science.279.5357.1635. link
25. Neanderthals, Humans Interbred—First Solid DNA Evidence - National Geographic, May 6, 2010. link
26. List of human evolution fossils - Wikipedia. link
27. Disappearing Link, Our Evolutionary Ancestors Keep A-Changing - Salvo magazine. link
28. Sahelanthropus - Wikipedia. link
29. Hominid and hominin – what’s the difference? - Australian Museum. link
30. Lucy (Australopithecus) - Wikipedia. link
31. Gorilla-like anatomy on Australopithecus afarensis mandibles suggests Au. afarensis link to robust australopiths - PNAS,  April 10, 2007. doi:  10.1073/pnas.0606454104. link
32. Proceedings of the National Academy of Sciences of the United States of America - Wikipedia. link
33. CT Scans Reveal Early Human Fossils inside Rock - Scientific Amaerican. July 13, 2012. link
34. Surprise Human-Ancestor Find, Key Fossils Hidden in Lab Rock - National Geographic. July 12, 2012. link
35. Australopithecus sediba - Wikipedia. link
36. Ramus - Online Encyclopedia. link
37. The diet of Australopithecus sediba - Nature, 27 June 2012, doi:10.1038/nature11185. link
38. Paleoanthropologist Now Rides High on a New Fossil Tide - Science, 9th September 2011, vol. 333 no. 6048 pp. 1373-1375, DOI: 10.1126/science.333.6048.1373. link
39. Some Prehumans Feasted on Bark Instead of Grasses - New York Times, June 27, 2012. link
40. Candidate Human Ancestor From South Africa Sparks Praise and Debate - Science, Vol. 328 no. 5975 pp. 154-155, DOI: 10.1126/science.328.5975.154. link
41. Palaeoanthropology: Craniums with clout - Nature, 478, 6th October 2011, page 34, doi:10.1038/478034a. link
42. Homo erectus - Wikipedia. link
43. Evolutionary Back Story: Thoroughly modern spine supported human ancestor - Science News, Volume 169, No. 15, May 6, 2006, p. 275. link
44. Bat - Wikipedia. link
45. Australopithecus - Wikipedia. link
46. Laetoli - Wikipedia. link
47. Human ancestors walked comfortably upright 3.6 million years ago, new footprint study says - Scientic American, 20th March 2010. link

வஸ்ஸலாம்.

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ