Sunday, April 1, 2012

புரிதலை பின்னுக்கு தள்ளிய பாக்டீரியாக்கள்..நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக..

1. ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு எதிராக, பாக்டீரியாக்கள் தடுப்பாற்றலை கொண்டிருப்பதை நாம் அறிவோம். நுண்ணுயிரிகளின் இந்த எழுச்சியானது நவீன மருத்துவதுறை எதிர்க்கொள்ளும் மிக முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக திகழ்கின்றது. மருத்துவ படைப்பிரிவிலிருந்து நம்முடைய ஆயுதங்கலான ஆன்டிபயாடிக்கள் ஒன்றன் பின் ஒன்றாக இந்த நுண்ணுயிரிகளிடம் தோல்வியடைந்து வருகின்றன.

ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு எதிரான நுண்ணுயிரிகளின் எழுச்சியை சமீபத்திய நிகழ்வாக நம்மில் பலரும் எண்ணிக்கொண்டிருக்கின்றோம் (பரிணாம கோட்பாட்டின் தற்காலத்திய ஆதாரமாக சிலரால் இது காட்டப்படுவதாகவும் நியாபகம். இது பரிணாமத்தின் ஆதாரமா என்பது குறித்து இறைவன் நாடினால் எதிர்கால பதிவுகளில் காண்போம்). ஆனால் நம்முடைய இந்த புரிதலை பின்னுக்கு தள்ளி வியப்பை உண்டாக்குகின்றன சமீபத்திய ஆய்வுகள்.

சென்ற ஆண்டின் பிற்பகுதியில் Nature ஆய்விதழில் வெளிவந்த ஆய்வுக்கட்டுரை[1,2] என்ன சொல்கின்றது என்றால், சுமார் 30000 ஆண்டுகளுக்கு முந்தைய பாக்டீரியாக்கள் ஆன்டிபயாடிக் மருந்துக்களை எதிர்க்கொள்ளக்கூடிய தன்மையை கொண்டிருந்தனவாம். பலரும் நினைப்பது போல, பாக்டீரியாக்களின் தடுப்பாற்றல் என்பது சமீபத்திய நிகழ்வு அல்ல என்று கூறினர் அந்த ஆய்வை நடத்தியவர்கள்.

ஆக, எதிர்ப்பு சக்தியானது, பாக்டீரியாக்களில் பல்லாயிரகணக்கான ஆண்டுகளாகவே இருந்துள்ளது. ஆனால் வியப்பு இத்தோடு நிற்கவில்லை.

Vancomycin - இந்த ஆன்டிபயாடிக்கானது, கடைசி முயற்சியாக கொடுக்கப்படும் ஒரு மருந்தாகும். அதாவது, வேறெந்த மருந்தும் பயனளிக்காத நிலையில் கடைசி ஆயுதமாக பயன்படுத்தபடுவது இந்த மருந்தாகும். 1987-ஆம் ஆண்டு இந்த மருந்தை எதிர்க்கொள்ளக்கூடிய பாக்டீரியாக்கள் எழுந்த போது, அது மருத்துவதுறைக்கு ஒரு ஆச்சர்ய அடியாக விழுந்தது.

ஆனால் நம்மை ஆர்வப்படுத்தும் தகவல் என்னவென்றால், 30000 ஆண்டுகளுக்கு முந்தைய பாக்டீரியாக்கள் மேலே சொன்ன ஆன்டிபயாடிக்கை எதிர்க்கக்கூடிய தன்மையை கொண்டிருந்திருக்கின்றன என்பதுதான்.

ம்ம்ம்.. உயிரியல் உலகம் தொடர்ந்து நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகின்றது.

2.  
"Nothing makes sense in biology except in the light of evolution"
"பரிணாமம் இல்லாமல் உயிரியலில் எதுவுமே அறிவுக்கு ஒத்து வராது"

இப்படியாக சிலபலர் கூறுவதை நாம் பார்த்திருக்கலாம். இம்மாதிரியான வாசகம் எனக்கு குழப்பத்தையே தந்துள்ளது. அதற்கான காரணத்தை பின்னால் காணலாம்.

முதலில் இதனை பார்ப்போம்.

நாத்திகரும், பரிணாமவியலாளரும், உயிரியலாளரும், தத்துவஞானியும், மதிப்புமிக்க Theodozius Dobzhansky விருதை[3] பெற்றவருமான மசிமோ பிக்லீசி (Massimo Pigliucci) அவர்கள், சமீபத்தில் தன்னுடைய தளத்தில் (மேற்கூறிய வாசகம் குறித்து) கூறிய கருத்துக்கள்[4] கவனிக்க வைத்தன.

Perhaps the trouble started with Theodozius Dobzhansky, one of the fathers of modern evolutionary theory, who famously said that nothing makes sense in biology except in the light of evolution (the phrase is, in fact, approvingly quoted by Pross). Problem is, Dobzhansky was writing for an audience of science high school teachers, and his statement is patently wrong, as an even cursory examination of the history of biology makes clear. For instance, developmental biologists had done a lot of highly fruitful research throughout the 19th and 20th centuries even as they ignored Darwin. And molecular biologists made spectacular progress from the 1950’s though the onset of the 21st century, again pretty much completing ignoring evolution. This is not to say that evolutionary theory doesn’t help in understanding developmental and molecular systems, but it is a stretch of the record to make claims such as those of Dobzhansky - Massimo Pigliucci, Universal Darwinism and the alleged reduction of biology to chemistry, Rationally speaking. 22nd March 2012.   
நவீன பரிணாம கோட்பாட்டின் தந்தைகளில் ஒருவரான Theodozius Dobzhansky-யால் தான் இந்த குழப்பம் ஆரம்பமானது. "பரிணாம ஒளியில் அல்லாமல் உயிரியலில் எதுவுமே அறிவுக்கு ஒத்துவராது" என்ற பிரபல கருத்தை அவர் தான் கூறினார். பிரச்சனை என்னவென்றால், அவர் உயர்பள்ளி அறிவியல் ஆசிரியர்களுக்காக எழுதிக்கொண்டிருந்தார், அவருடைய கருத்து வெளிப்படையாக தவறானது. உயிரியலின் வரலாற்றை மேலோட்டமாக ஆய்வு செய்தால் கூட இது நமக்கு தெளிவாகும்.
19-ஆம் மற்றும் 20-ஆம் நூற்றாண்டு முழுக்க, டார்வினை புறக்கணித்துவிட்டும் கூட, அதிக பலன் தந்த நிறைய ஆய்வுகளை உயிரியலாளர்கள் நிகழ்த்தியிருக்கின்றனர். 1950-க்களில் இருந்து 21-நூற்றாண்டின் ஆரம்பம் வரை, மூலக்கூறு உயிரியலாளர்கள், பரிணாமத்தை புறக்கணித்து விட்டே நேர்த்தியான முன்னேற்றத்தை கண்டனர்.
இதன் மூலமாக, உயிரியலில் பரிணாம கோட்பாடு உதவாது என்று சொல்ல வரவில்லை. அதே நேரம், Dobzhansky சொன்னது போன்ற கருத்துக்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்று தான் சொல்லுகின்றேன் - (extract from the original quote of) Massimo Pigliucci, Universal Darwinism and the alleged reduction of biology to chemistry, Rationally speaking. 22nd March 2012.  

பரிணாமம் இல்லையென்றால் உயிரியலில் எதுவுமே அறிவுக்கு ஒத்துவராது என்பது போன்ற கருத்துக்கள் நம்பிக்கையால்/அறியாமையால் விளைந்த ஒன்றே தவிர, உண்மைக்கும் இம்மாதிரியான கருத்துக்களுக்கும் வெகு தூரமே.

முதலில் பரிணாமம் என்றால் என்ன? ஒரு உயிரினம் (காலப்போக்கில்) இன்னொரு உயிரினமாக மாறுவதாக பரிணாமம் கூறுகின்றது. ஆனால், ஒரு உயிரினம் இன்னொரு உயிரினமாக மாறியதாக நமக்கு வரலாற்றிலும் ஆதாரமில்லை, தற்காலத்திலும் ஆதாரமில்லை.

பரிணாமம் உண்மையென்று ஒரு வாதத்திற்கு வைத்துக்கொண்டாலும், பரிணாமம் எப்படி நடந்திருக்கும் (இயக்கமுறை/Mechanism) என்பது குறித்து பரிணாமவியலாளர்களிடையே கருத்துவேறுபாடுகள் உண்டு. உதாரணத்திற்கு, பெரிதும் மதிக்கப்படும் உயிரியலாளரான மறைந்த லின் மர்குலிஸ் (Lynn Margulis) அவர்களை எடுத்துக்கொள்வோம். இயற்கை தேர்வு மற்றும் மரபணு மாற்றங்கள் புதிய உயிரினங்களை உருவாக்கும் என்ற கருத்தை நிராகரித்தார் மர்குலிஸ்[6]. டார்வினிஸ்ட்களை விமர்சிக்கவும் செய்தார்.

ஆக, பரிணாமம் உண்மையாக இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி, அதனுள்ளே கடுமையான பிரச்சனைகள் உண்டு. தான் சொல்ல வந்த அடிப்படை விஷயத்திலேயே பிரச்சனைகளை கொண்ட ஒரு கோட்பாடு, எப்படி உயிரியலின் மூலாதாரமாக இருக்க முடியும்?

ஒரு வேலை, பரிணாம கோட்பாடு என்ற ஒன்றே உலகில் இல்லை என்று வைத்துக்கொள்வோம். உயிரியலில் நாம் இன்று பார்க்கக்கூடிய முன்னேற்றங்களே ஏற்பட்டிருக்காதா?

உண்மை என்னவென்றால், பரிணாமம் இல்லையென்றாலும் கூட உயிரியல் அறிவுக்கு ஒத்துவரக்கூடியதாகவே இருக்கும்.

உயிரியல் உலகம் தொடர்ந்து பல ஆச்சர்யங்களை தந்துக்கொண்டிருக்கின்றது. உயிரினங்கள் குறித்த புதிய புதிய தகவல்கள், கண்டுபிடிப்புகள் நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்துகின்றன. இம்மாதிரியான நிலையில் மேலே சொன்னது போன்ற வாசகங்களை அல்லது அதற்கு நிகரான ஒன்றை கூறிக்கொண்டு உயிரியலை ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் அடைக்காமல் இருப்பது சாலச் சிறந்தது.

இறைவன் நம்மை நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன்.

இறைவனே எல்லாம் அறிந்தவன்.

References:
1. Bacteria: resisting antibiotics since at least 30,000 BC - Discover Magazine blog. 31st August 2011. link
2. Resistance to Antibiotics Is Ancient - Science Daily.  31st August 2011. link
3. The Society for the study of Evolution - The Theodosius Dobzhansky Prize. link
4. Universal Darwinism and the alleged reduction of biology to chemistry - Massimo Pigliucci, Rationally Speaking. link
5. Antibiotic resistance is ancient - Nature 477, 457–461 (22 September 2011) doi:10.1038/nature10388. link
6. Lynn Margulis, Q+A - Discover, April 2011. P.No.68-69. link
7. Lynn Margulis - Wikipedia. link
8. Vancomycin - Wikipedia. link

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ


36 comments:

 1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

  = = பரிணாமம் இல்லையென்றால் உயிரியலில் எதுவுமே அறிவுக்கு ஒத்துவராது என்பது போன்ற கருத்துக்கள் நம்பிக்கையால்/அறியாமையால் விளைந்த ஒன்றே தவிர, உண்மைக்கும் இம்மாதிரியான கருத்துக்களுக்கும் வெகு தூரமே. = =

  அதற்கு முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னுள்ள பாக்டீரியாக்கள் கூட சாட்சி பகர்கின்றன.

  = = உண்மை என்னவென்றால், பரிணாமம் இல்லையென்றாலும் கூட உயிரியல் அறிவுக்கு ஒத்துவரக்கூடியதாகவே இருக்கும். = =

  அல்ஹம்துலில்லாஹ்!
  அறிவுக்கு ஒத்துவரக்கூடியதாகவே இன்றளபும் இருக்கிறது.

  சகோ ஆஷிக் எனக்கு ஒரு டவுட்.

  இதைப்போன்ற பரிணாமத்திற்கு எதிரான அறிவியல் விசயங்களை குறித்து அவர்கள் வாய் திறக்காதது அல்லது அதுக்குறித்து யோசிக்காதது ஏன்...?

  ReplyDelete
 2. அஸ்ஸலாமு அலைக்கும். சகோ. ஆஷிக்!
  பரிணாம கோட்பாட்டிற்கு எதிரான மற்றுமொரு உங்களின் ஆணித்தரமான பதிவு இது. மேலும் உங்கள் ஆய்வுக்கு இறைவன் பேருதவி புரிவானாக.

  ReplyDelete
 3. அய்யா,
  பரிணாமக் கொள்கை என்பது ஒரு தத்துவமே ஆகும். அறிவியலில் விதி என்பது எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியது. அறிவியலில் தத்துவம் என்பது பெரும்பாலான அறிவியாலார்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிரூபிக்க இயலாத அல்லது முடியாத கொள்கையே ஆகும் . எனவே தங்களின் கருத்துக்கும் அறிவியலில் இடமுண்டு.

  ReplyDelete
 4. சகோதரர் குலாம்,

  வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபற காத்துஹு..

  //இதைப்போன்ற பரிணாமத்திற்கு எதிரான அறிவியல் விசயங்களை குறித்து அவர்கள் வாய் திறக்காதது அல்லது அதுக்குறித்து யோசிக்காதது ஏன்...?//

  :) துரதிஷ்டவசமாக அறிவியலாலர்களில் ஒரு பகுதி நம்பிக்கையில் சிக்கிக்கொண்டு விட்டது. அது ஒரு காரணமாக இருக்கலாம்.

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

  ReplyDelete
 5. Moneysaver,

  உங்கள் மீது அமைதி நிலவுவதாக,,,

  வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி..

  ReplyDelete
 6. சகோதரர் தமீம் அன்சாரி,

  வ அலைக்கும் சலாம்,

  தொடர்ச்சியான ஊக்கத்திற்கு நன்றி சகோதரர்...துவாவிற்கு மிக்க நன்றி..

  ReplyDelete
 7. சகோதரர் விஜயகுமார்,

  உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

  சூப்பரா சொன்னீங்க. சிலர் நம்பிக்கையில் துவழ்ந்து அறிவியலை அதனை நோக்கி கொண்டு செல்லாமல் இருந்திருந்தால் இத்தகைய பதிவுக்கு அவசியம் இல்லை சகோதரர்...

  தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

  ReplyDelete
 8. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

  வழக்கம் போலவே ஒரு அருமையான அறிவியல் ஆக்கம், இறைவன் உங்களின் கல்வி அறிவை விசாலப்படுத்துவானாக.

  ReplyDelete
 9. சகோதரர் சையத் இப்ராஹீம்ஷா,

  வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

  துவாவிற்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி பிரதர்..

  வஸ்ஸலாம்..

  ReplyDelete
 10. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

  எப்போதும் போல அறியாத தகவல்களுடன் கூடிய பதிவு.

  நாம் அறியாத புது புது செய்திகள் எப்போதும் நம்மை மீறிய சக்தியை நம்பாதவர்களையும் கொஞ்சம் அசைத்து பார்க்கிறது என்றால் மிகையில்லை.

  பதிவுக்கு நன்றி சகோ.

  ReplyDelete
 11. Assalamu alikum bro!
  Masha allah
  super post bro!
  Jazhkallahu kair!

  ReplyDelete
 12. சலாம் சகோ! சிந்திக்க வைக்கும் பதிவு. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. ஸலாம் சகோ.ஆஷிக்,
  பரிணாம மயானத்தை நோக்கி எதிர்க்குரல் எனும் வாகனத்தில் பிரயாணிக்கையில், மயானப்பாதையில் அது நெருங்கி விட்டதை அறிவிக்கும் மீண்டும் ஒரு மைல்கல் பதிவு..!

  நன்றி சகோ..! மீண்டும் அருமை..!

  ///"பரிணாமம் இல்லாமல் உயிரியலில் எதுவுமே அறிவுக்கு ஒத்து வராது"///

  ---அடக்கொடுமையே..!

  இப்படியும் சொல்பவர்கள் அறிவியல் அறிந்தோரா..?

  சுமார் 2350 ஆண்டுகளுக்கு முந்திய அரிஸ்டாட்டில்தான் 'உயிரியலின் தந்தை' என்று அறிவியல் சொல்வது அவர்களுக்கு தெரியாதா..?

  சுமார் 150 வருடங்களுக்கு முன்னால் சார்லஸ் டார்வின் சொன்ன அறிவியலுக்கு மாறான கோட்பாடான பரிணாமத்துக்கு முன்பு இரண்டாயிரம் வருஷமா உலகில் உயிரியலே இருந்தது இல்லையா..!?! இந்த காலகட்டத்தில் உலகில் வாழ்ந்த எவருக்குமே உயிரியல் பற்றிய எவ்வித அடிப்படை அறிவியலும் அதுவரை தெரியவே தெரியாதா..?

  அடப்பரிதாபமே..!

  ReplyDelete
 14. உயிரியல் உலகம் தொடர்ந்து பல ஆச்சர்யங்களை தந்துக்கொண்டிருக்கின்றது. உயிரினங்கள் குறித்த புதிய புதிய தகவல்கள், கண்டுபிடிப்புகள் நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்துகின்றன.//ஆம் ஆஷிக் உயிரியல் உலகம் தொடர்ந்தும் பல ஆச்சரியங்களை தந்துகொண்டே இருக்கிறது. உங்கள் அறிவியல்தேடலுடன்கூடிய பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. Salaam friend Some questions

  ஆஸிக்கிற்கு கேள்விகள்

  1. பாக்டீரியா பரிணாம் வளர்ச்சி அடைகிறதா ?

  ஆம்/இல்லை

  இல்லை என்றால் மட்டும் இரண்டாம் கேள்வி

  ஆம் என்றால் மூன்றாம் கேள்விக்கு வந்து விடலாம்.

  2. பாக்டீரியா பரிணாம் வளர்ச்சி அடைவதே இல்லை என‌ ஏதாவது ஒரு ஆய்வுக் கட்டுரை தர முடியுமா?

  3. பாக்டீரியாவில் மைக்ரோ,மேக்ரோ பரிணாமம் உண்டா? ஆய்வுக் கட்டுரை த்ரவும்

  4. இரு வெவ்வேறு வகை பாக்டீரியா என எப்படி வகைப்படுத்துகி றார்கள்?.

  5. ஈ கோலி பாக்டீரியா மீது நடத்தப்பட்ட பரிணாம பரிசோதனை பற்றி உங்கள் கருத்து என்ன?

  6. சிம்பியோஜெனெசிஸ் கொள்கையை ஏற்கிறீர்களா?

  7. இந்த ஆய்வுக் கட்டுரையில் ஒரு பாக்டீரிய இரு வெவேறு வகையாக பரிணாம் மாற்றம் அடைந்தது என கூறுகிறார்கள்.இது பற்றி மாற்ருக் கருத்து ஆய்வுக் கட்டுரை தார இயலுமா?
  http://www.sciencedaily.com/releases/2012/02/120221212534.htm
  Caught in the Act: Scientists Discover Microbes Speciating

  ScienceDaily (Feb. 21, 2012) — Not that long ago in a hot spring in Kamchatka, Russia, two groups of genetically indistinguishable microbes parted ways. They began evolving into different species -- despite the fact that they still encountered one another in their acidic, boiling habitat and even exchanged some genes from time to time, researchers report. This is the first example of what the researchers call sympatric speciation in a microorganism.
  XXXXXX
  Thank you

  ReplyDelete
 16. சகோதரர் சார்வாகன்,

  வ அலைக்கும் சலாம்,

  வழக்கம் போலவேவா?. இந்த பதிவுல பாக்டீரிய பரிணாமத்தை பத்தி ஒன்னும் பேசல. இன்ஷா அல்லாஹ் அது பரிணாமத்தின் ஆதாரமா என்று எதிர்கால பதிவுகளில் பார்ப்போம் என்று தான் சொன்னேன். விரிவாக அது குறித்து எழுதுகின்றேன். அப்போ வந்து இந்த கேள்விகளை கேட்பது நலம்.

  அப்புறம் சிம்பயோஜெனேசிஸ்சை நான் ஏற்பேனா என்பது பதிவுக்கு சிறிதும் கூட சம்பந்தம் இல்லாதது. பதிவில் கூறப்படாததும் கூட.

  இந்த பதிவை தாங்கள் மறுத்தளிக்க வேண்டுமென்றால், 1. நான் பாக்டீரியாக்கள் குறித்து கூறியுள்ள தகவல் (ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவை தடுப்பாற்றலை கொண்டிருக்கின்றன என்பதை) தவறு என்று நிரூபிக்கவேண்டும். 2. பரிணாமம் இல்லாமல் எதுவுமே அறிவுக்கு ஒத்துவராது என்று நிரூபிக்கவேண்டும். அவ்ளோதான். இதை தாண்டி நீங்கள் என்ன சொன்னாலும், எழுதினாலும் அது இந்த பதிவை மறுப்பதாக ஆகாது.

  அடுத்து, உங்களை போன்ற நேர்மை குறைந்த ஆட்களுடன் உரையாட எனக்கு என்றுமே விருப்பம் இல்லை. தாங்கள் சென்ற பதிவில் உளறிக்கொட்டிவிட்டு பாதியிலேயே விட்டு சென்ற உரையாடலை தொடர்ந்தால் என்னுடைய புரிதலை மாற்றிக்கொள்ள ஏதுவாய் இருக்கும்.

  நன்றி...

  ReplyDelete
 17. சகோதரி ஆயிஷா,

  வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு..

  //நாம் அறியாத புது புது செய்திகள் எப்போதும் நம்மை மீறிய சக்தியை நம்பாதவர்களையும் கொஞ்சம் அசைத்து பார்க்கிறது என்றால் மிகையில்லை. //

  உண்மை..

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிஸ்டர்..

  ReplyDelete
 18. சகோதரர் முஹம்மத் பைசல்,

  அஸ்ஸலாமு அலைக்கும்,

  அல்ஹம்துலில்லாஹ்..ஊக்கத்திற்கு நன்றி..

  ReplyDelete
 19. சகோதரர் ஜாபர் கான்,

  வ அலைக்கும் சலாம்,

  தொடர்ச்சியான ஊக்கத்திற்கு நன்றி..

  ReplyDelete
 20. சகோதரர் சுவனப்பிரியன்,

  வ அலைக்கும் சலாம்,

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரர்..

  ReplyDelete
 21. சகோதரர் முஹம்மது ஆஷிக்,

  வ அலைக்கும் சலாம்

  அல்ஹம்துலில்லாஹ்..

  //இப்படியும் சொல்பவர்கள் அறிவியல் அறிந்தோரா..?
  சுமார் 2350 ஆண்டுகளுக்கு முந்திய அரிஸ்டாட்டில்தான் 'உயிரியலின் தந்தை' என்று அறிவியல் சொல்வது அவர்களுக்கு தெரியாதா..?///

  அட அத விடுங்க. பரிணாமம் என்றால் உயிரினங்கள் மாற வேண்டும். உயிரினங்களுக்குல்லாக ஏற்படும் மாற்றங்கள் பரிநாமத்திர்க்கான ஆதாரங்கள் ஆகாது. ஆனால் சிலர் இதனை பரிநாமதிர்க்கான ஆதாரமாக காட்டுவது தான் நகைச்சுவையானது.

  வருகைக்கும் தூக்கலான பின்னூட்டத்திற்கும் நன்றி..

  ReplyDelete
 22. சகோதரர் அம்பலத்தார்,

  அஸ்ஸலாமு அலைக்கும்,

  தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி..

  ReplyDelete
 23. சலாம் சகோ....

  நல்ல தகவல்கள்... பகிர்ந்ததற்கு நன்றி

  ReplyDelete
 24. சலாம் சகோ ஆசிக் அஹமது,

  எத்தனையோ அலுவல்களுக்கு மத்தியில், அறிவியல் கட்டுரைகள் எழுதும் உங்களைப் பார்த்து ஆச்சரியமாக உள்ளது. நிற்க.

  நீங்களும் எத்தனையோ பதிவுகள் இட்டு விட்டீர்கள், பரிணாமம் தொடர்பில். இன்னும் அதே நபர்கள் அதே கேள்விகளுடன் வருகிறார்களே ஏன் சகோ????
  இறைவனை மறுக்க வேண்டும் என்பதற்காக இப்படி பரிணாமத்தை பிடித்துக்கொண்டு தொங்குபவர்களை பார்த்தால் பாவமாகத்தான் இருக்கிறது.

  ReplyDelete
 25. ஹி..ஹி..ஹி...
  20 மைனஸ் வோட்டா?????? கலக்குராங்கப்போ.....
  வினை விதைத்தவன் வினை அறுப்பான்......
  சொல்லனும்னு தோணிச்சு சொன்னேன்....
  ஹி..ஹி..ஹி...

  ReplyDelete
 26. இந்த கள்ள வோட்டு கும்பல என் நண்பனின் தளத்துப் பக்கம் பார்த்தேன் சகோ..ஹி..ஹி..ஹி..

  ReplyDelete
 27. Assalamu alakkum brther,

  Very good article with nice points. I have often heard friends telling me that "nothing in biology makes sense except in the light of evolution" and its good read a rebuttal from none other than you !!!

  ReplyDelete
 28. அறிவார்ந்த செய்திகளைத் தாங்கிய கனமான பதிவு

  ReplyDelete
 29. சகோதரர் NKS.ஹாஜா மைதீன்,

  வ அலைக்கும் சலாம்,

  வருகைக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 30. சிராஜ் பாய்,

  வ அலைக்கும் சலாம்,

  அல்ஹம்துலில்லாஹ்...

  //நீங்களும் எத்தனையோ பதிவுகள் இட்டு விட்டீர்கள், பரிணாமம் தொடர்பில். இன்னும் அதே நபர்கள் அதே கேள்விகளுடன் வருகிறார்களே ஏன் சகோ????
  இறைவனை மறுக்க வேண்டும் என்பதற்காக இப்படி பரிணாமத்தை பிடித்துக்கொண்டு தொங்குபவர்களை பார்த்தால் பாவமாகத்தான் இருக்கிறது.//

  நேர்வழி காட்ட இறைவன் போதுமானவன்..

  //20 மைனஸ் வோட்டா?????? கலக்குராங்கப்போ.....///

  எல்லாம் ஒரே ஆளு/ஒரே க்ரூப் போடுறது தானே. படிச்சு கூட பார்த்திருக்க மாட்டாங்கன்னு நினைக்குறேன். இதெல்லாம் கணக்குளையே வராத வோட்டு தானே...ஹி ஹி

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

  ReplyDelete
 31. வ அலைக்கும் சலாம்,

  அல்ஹம்துலில்லாஹ்....என்னுடைய தேடலுக்கு பின்னணியில் உங்களுக்கும் ஒரு இடம் உண்டு என்பதை நான் மறக்கவில்லை பிரதர். அல்லாஹ் நம் கல்வி ஞானத்தை விசாலமாக்க போதுமானவன்..

  கருத்துக்கு நன்றி..

  ReplyDelete
 32. சென்னை பித்தன் அய்யா அவர்களுக்கு,

  உங்கள் மீதும் குடும்பத்தினர் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக என்று பிரார்த்தித்தவனாக,

  //அறிவார்ந்த செய்திகளைத் தாங்கிய கனமான பதிவு//

  புகழ் அனைத்தும் இறைவனுக்கே உரித்தாவதாக...

  வருகைக்கும் கருத்துக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி அய்யா..

  ReplyDelete
 33. //ஆனால் நம்மை ஆர்வப்படுத்தும் தகவல் என்னவென்றால், 30000 ஆண்டுகளுக்கு முந்தைய பாக்டீரியாக்கள் மேலே சொன்ன ஆன்டிபயாடிக்கை எதிர்க்கக்கூடிய தன்மையை கொண்டிருந்திருக்கின்றன என்பதுதான்.//

  காரணம் ?

  ஆண்டிபயாடிக் என்பது
  ny substance produced by a microorganism that is antagonistic to the growth of other microorganisms in high dilution .

  அதாவது இன்னொரு நுண்ணுயிரியினால் உற்பத்தி செய்யப்படும் ஒரு பொருள் ,
  அதன் நோக்கம் அதை சுற்றி மற்ற நுண்ணுயிரிகள் வளராமல் தடுப்பதற்காக ( for the survival - பரிணாமம் ) அதனால் கையாளப்படும் ஒரு தந்திரம் .
  An antibacterial is a compound or substance that kills or slows down the growth of bacteria.The term is often used synonymously with the term antibiotic(s)"

  Vancomycin என்பது Amycolatopsis orientalis எனும் கிருமியினால் உற்பத்தி செய்யப்படும் ஒரு ஆண்டிபயாடிக் , அந்த Amycolatopsis orientalis கிருமி பழங்காலதிளிருந்தே இருந்து வருகிறது , அந்த காலத்தில் அதனை எதிர்த்து வளரும் சக்தி படைத்த ஒரு கிருமியினை தான் தற்போது கண்டு பிடித்து உள்ளார்கள் . இதுவே பரிணாமம் ( survival of fittest போட்டியின் ஒரு எடுத்துக்காட்டே .
  இது பற்றி பதிவு எழுத ஆசை , இருப்பினும் நேரம் ஒத்துழைக்க வில்லை . முடிந்தால் விரைவில் பதிலிடுகிறேன்

  ReplyDelete
 34. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.சகோ.
  தங்களின் பதிவுகள் அனைத்தும் அனைவருக்கும் உபயோகப்படும் வகையில் அமைகிறது. எல்லாம் அறிந்த இறைவனுக்கே புகழனைத்தும். இன்னுமின்னும் பல நல்ல விசயங்களை அறித்தாருங்கள்.. வஸ்ஸலாம்..

  ReplyDelete