Friday, March 26, 2010

எழுத்து விவாதங்களில் பங்கேற்கும் முஸ்லிம்கள் கவனத்திற்கு - I


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்...


             நம்மில் பலரும் சில இணையதளங்களில் வரும் இஸ்லாத்திற்கெதிரான பதிவுகளை எதிர்கொண்டு எழுத்து விவாதங்களில் பங்கேற்றிருப்போம். எழுத்து விவாதங்கள் என்பது, பெரும்பாலான நேரங்களில் திசை திரும்பிதான் போகின்றன. எழுதும் நமக்கும் ஒருவித சோர்வைத்தான் தருகின்றன. விவாதங்களில் கலந்து கொள்ளாமல் விடலாம் என்றால் அதுவும் முடியாது. ஏனென்றால் நம்மிடம் பதிலில்லை என்று நினைக்க வாய்ப்புள்ளது. 

ஆனால் இந்த விவாதங்கள் சரியான முறையில் நடந்தால் நமக்கு நிறைய பலனுள்ளது. சமீப காலங்களாக எழுத்து விவாதங்கள் நம் சகோதரத்துவத்தை பறைச்சாற்றி வருகின்றன. ஒற்றுமையை அதிகரிக்க வைத்திருக்கின்றன. அந்த வகையில் இந்த விவாதங்களை முன்வைப்போரை நாம் பாராட்டித்தான் ஆக வேண்டும். 

அதுமட்டுமல்லாமல், நிறைய சகோதரர்களை இப்போதெல்லாம் விவாதங்களில் காணமுடிகிறது. இது இன்னும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. அல்ஹம்துலில்லாஹ், எல்லாப் புகழும் இறைவனுக்கே... 

இந்த பதிவுகள் எழுத்து விவாதங்களில் பங்கேற்கும் நம் சகோதரர்களுக்கு ஒரு சிறு உதவி.

இந்த பதிவுகளில் இரண்டு விஷயங்களை பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். அதுவும் முழுமையாக அல்ல, சின்ன அடிப்படையை மட்டும்தான்...

1. நான் எப்போதும் சொல்லுவதுண்டு, நாத்திகத்தை வெல்ல இஸ்லாமினால் மட்டுமே முடியும் என்று. அது அவ்வப்போது நிரூபணமாகி தான் வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்...       

நமக்கெல்லாம் தெரிந்ததுதான், நாத்திகத்திற்கு இன்றைய சூழ்நிலையில் பெரிதும் உதவி புரிவது பரிணாம வளர்ச்சி கோட்பாடுதான். அது ரீலா இல்லை ரியலா என்ற விவாதம் அன்றிலிருந்து இன்றுவரை இருந்து கொண்டுதான் இருக்கிறது.

பெருமளவு மக்களை திசைதிரும்ப வைத்திருக்கிறது இந்த நிரூபிக்க படாத தத்துவம். பரிணாம வளர்ச்சி கோட்பாடு (அல்லது தத்துவம்) இந்த வகையில் தான் முக்கியத்துவம் பெறுகிறது.

நம் ஒவ்வொருவரும் இந்த தத்துவத்தின் அர்த்தமற்ற வாதங்களை அம்பலப்படுத்துவது முக்கியம். ஒவ்வொரு விவாதத்தின் போதும் இதை சேர்த்துக்கொள்வதும் காலத்தின் அவசியம்.

மிக முக்கியமான ஒன்று, பரிணாம வளர்ச்சி கோட்பாட்டின் எல்லாப் பகுதிகளையும் நான் மறுப்பதில்லை. ஏனென்றால், பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை என்னை பொறுத்தவரை இரண்டாக பிரிக்கலாம்.

  • Micro or Horizontal Evolution
  • Macro or Vertical Evolution

இந்த Macro பரிணாம வளர்ச்சிதான் விவகாரமே. இதிலிருந்து அது வந்தது, அதிலிருந்து மற்றொன்று வந்தது, (இப்போதைக்கு) கடைசியாய் நாம் வந்தோம் என்று சொல்லுகிற இந்த macro evolution தான் பிரச்சனையே. நடுநிலையோடு சிந்திக்கிற எவரும் இந்த macro பரிணாம கொள்கையால் குழம்பி போவது உறுதி...

"Biological evolution is a change in the genetic characteristics of a population over time. That this happens is a fact. Biological evolution also refers to the common descent of living organisms from shared ancestors. The evidence for historical evolution -- genetic, fossil, anatomical, etc. -- is so overwhelming that it is also considered a fact. The theory of evolution describes the mechanisms that cause evolution. So evolution is both a fact and a theory"  --- Talk Origins Site   

நான் மேலே குறிப்பிட்டுள்ள வாசகம் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை ஆதரிக்கும் பிரபல தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. அவர்களாலும் Macro பரிமாண வளர்ச்சி கோட்பாடு உண்மை என்று உறுதியாக சொல்ல முடியவில்லை.

பரிணாம வளர்ச்சி கோட்பாடு என்றாலே இந்த Macro Evolution தான் பலருக்கும் ஞாபகம் வரும். அதனால் தான் வெறுமனே பரிணாம வளர்ச்சி கோட்பாடு என்றே சொல்கின்றனர்.

நான் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை பற்றி இங்கு விளக்க போவதில்லை. ஆனால் நான் கூற விரும்புவதெல்லாம், நீங்கள் ஒரு நாத்திகரை (அல்லது வேறு யாரையும்) விவாதத்தில் சந்தித்தால், அவருக்கு பரிணாம வளர்ச்சி கோட்பாட்டில் நம்பிக்கை இருந்தால், அவரை கண்ணியத்தோடு அணுகி விளக்கம் கேளுங்கள், பரிணாம வளர்ச்சி கோட்பாட்டிற்கும் பகுத்தறிவுக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்று?

மற்றொன்று, எல்லா நாத்திகர்களும் பரிணாம வளர்ச்சியை ஏற்றுக்கொண்டவர்கள் என்று நாம் நினைத்து விடக் கூடாது. ஏனென்றால் அதனை ஏற்றுக்கொள்ளாத சில பேர் இருக்கிறார்கள்...
  
எப்படி ஒருவருக்கு பரிணாம வளர்ச்சியில் நம்பிக்கை இருக்கிறதா என்று அறிவது? 

சுலபம், நமக்கு தெரியாததுமல்ல, நாம் எப்படி இந்த உலகிற்கு வந்திருப்போம் என்ற ஒரே ஒரு கேள்வியை கேட்டால் போதும்....

அதற்கு அவர் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை விளக்கமாக கொடுத்தால் அவர்தான் நாம் எதிர்பார்க்கும் சகோதரர். 

அவரிடம் ஆரோக்கியமான முறையில் விவாதியுங்கள். பரிணாம வளர்ச்சி கோட்பாட்டின் அபத்தங்களை எடுத்துக் கூறுங்கள். 

அவர்கள்,தாங்கள் இவ்வுலகில் இருப்பதற்கு வேறெந்த காரணத்தை வேண்டுமென்றாலும்  கூறட்டும், பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை மட்டும் கூறக்கூடாது என்ற அளவில் விவாதங்கள் இருக்கவேண்டும். 

"சரிப்பா, நான் எப்படியோ வந்துட்டேன்" என்று சொல்லி தாங்கள் இவ்வுலகில் இருப்பதற்கான காரணங்களை தேடி ஆராயட்டும், பரிணாம வளர்ச்சி என்ற படுத்து விட்ட கோட்பாட்டை மட்டும் உதவிக்கு கொண்டு வரக்கூடாது.     

இதற்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான், பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை பற்றி நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். மேலோட்டமாக அல்ல, ஆழமாக...   

பரிணாம வளர்ச்சியை பற்றி அறிய விரும்புகிறவர்கள், பரிணாம வளர்ச்சி ஆதரவு மற்றும் எதிர்ப்பு தளங்களை பார்க்கலாம்.

பரிணாம வளர்ச்சி கோட்பாட்டின் இரு முக்கிய தூதர்கள் என்றால், அன்று டார்வின் இன்று ரிச்சர்ட் டாகின்ஸ் (Richard Dawkins). 



டார்வினை பற்றி பேச தேவையில்லை, அவரே அவரது புத்தகத்தில் தன்னால் சிலவற்றை தற்போது நிரூபிக்க முடியாதென்றும், எதிர்காலத்தில் நிரூபிக்க படலாம் என்றும் கூறிவிட்டார். 

இப்போது நம்முடைய கவனமெல்லாம், தற்காலத்திய பரிணாம வளர்ச்சி கோட்பாட்டின் காவலர் ரிச்சர்ட் டாகின்ஸ் பற்றித்தான் இருக்கவேண்டும். டாகின்ஸ், ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் விலங்கியல் துறையின் பேராசிரியராய் இருந்தவர். 

இவர் எழுதி பரபரப்பாய் விற்பனையான புத்தகம் "The God Delusion". இதில் கடவுள் ஏன் இல்லை என்று விளக்குகிறார் டாகின்ஸ். அதையாவது  இவர் தெளிவாக சொன்னாரா என்றால்...இல்லை. குழப்பம் மட்டுமே மிஞ்சுகிறது...




உதாரணத்துக்கு....

"God almost certainly does not exist" --- Richard Dawkins in his book "The God Delusion", Page No:158 

"The God Delusion" என்பதற்கு பதிலாக "The Dawkins Delusion" என்று வைத்திருக்கலாம், பொருத்தமாக இருந்திருக்கும்.

நீங்கள் விவாதங்களில் சிலர் இந்த புத்தகத்தை மேற்கோள் காட்டுவதை பார்க்கலாம். 

டாகின்ஸ்சுடைய இந்த புத்தகம் முஸ்லிம்களிடையே பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், மற்றவர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது உண்மை. 

இந்த புத்தகத்தில் பரிணாம வளர்ச்சியையும் வைத்துதான் கடவுள் இல்லை என்று வாதிடுகிறார் டாகின்ஸ். 

நான் மேலே சொன்ன ஒரு சிறு உதவி இங்கேதான். நீங்கள் உங்கள் விவாதங்களில் டாகின்ஸ்சை பற்றியோ அல்லது அவரது இந்த புத்தகத்தை பற்றியோ அல்லது பரிமாண வளர்ச்சி பற்றியோ உங்களிடம் கேள்விகள் வைக்கப்படுமானால் நீங்கள் நான் இப்போது குறிப்பிட போகும் இரு நபர்களது விளக்கங்களை பரிசீலனை செய்யலாம். 

உலகளவில் முஸ்லிம்கள் பல நாத்திகர்களுடன் விவாதங்களில் கலந்து கொண்டு வருகின்றனர். அவர்களில் எனக்கு தெரிந்த வெளிநாட்டைச் சேர்ந்த சிலர் Shabir Ally, Adam Deen மற்றும் Hamza Andreas Tzortzis ஆவர். 

இவர்களில் ஆடம் தீன் மற்றும் ஹம்சாவை பற்றித்தான் பார்க்கப்போகிறோம். ஆடம் மற்றும் ஹம்சா இருவரும் பல பிரபல நாத்திகவாதிகளுடன் நேரடி விவாதம் புரிந்தவர்கள்/புரிந்து கொண்டிருப்பவர்கள்.




டாகின்ஸ்சுடைய புத்தகத்தை பற்றிய உண்மைகளை அம்பலப்படுத்தி வருபவர்கள். மேற்குலகில் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்து (குறிப்பாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன்) பல பல்கலைகழகங்களில் தொடர்ச்சியாக இந்த புத்தகத்தை பற்றி பேசி, விவாதித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.                           



நீங்கள் இவர்களுடைய தளத்திலிருந்து இவர்களது விவாத வீடியோக்களையும், இவர்களது எழுத்து வாதங்களையும் பார்க்கலாம்/படிக்கலாம், பதிவிறக்கம் செய்யலாம்.


  1. hamzatzortzis.blogspot.com
  2. hamzatzortzis.com
  3. adamdeen.com

ஆக, உங்கள் முன் பரிணாம வளர்ச்சி மற்றும் டாகின்ஸ்சுடைய புத்தகத்தை யாராவது மேற்கோள் காட்டினால் (நிச்சயம் காட்டுவார்கள்) இந்த இரு சகோதரர்களின் வாதங்களையும் நீங்கள் விரும்பினால் பயன்படுத்தி கொள்ளலாம்.

நீங்கள் கேட்பது புரிகிறது, ஏன் டாகின்சை நேரடி விவாதத்திற்கு அழைக்க கூடாது?

அழைக்காமலா இருந்திருப்பார்கள் நம் சகோதரர்கள்?, நாம் தான் இந்த விஷயத்தில் முன்னோடிகள் ஆயிற்றே (அல்ஹம்துலில்லாஹ்)... பிரிட்டனின் முன்னணி பத்திரிக்கையான டைம்ஸ் தினசரி மூலமும் சில முறை அழைப்பு விடுத்தாகி விட்டது... பயனில்லை...



டாகின்சை பற்றி பேசும்போது உமர் (ரலி) அவர்கள் ஞாபகம் தான் வருகிறது.

நாயகம் (ஸல்) அவர்கள் குறைஷிகளால் மிகுந்த கஷ்டப்பட்டு கொண்டிருந்த போது,   "இறைவா, உமர் அல்லது அபு ஜஹல் ஆகிய இருவரில் ஒருவரை இஸ்லாத்தை ஏற்க வைத்துவிடு" என்று துவா செய்தார்கள். இறைவன் உமர் (ரலி) அவர்களை இஸ்லாத்தை ஏற்கவைத்து நாயகம் (ஸல்) அவர்களது கரத்தை வலுப்படுத்தினான். அன்றிலிருந்து இன்றுவரை இஸ்லாத்தை எதிர்த்த பலரும் இஸ்லாமின்பால் தங்களை ஐக்கியப்படுத்தி வருகிறார்கள்.

இன்ஷா அல்லாஹ், துவா செய்வோம், டாகின்ஸ்சை இறைவன் இஸ்லாத்தில்பால் கொண்டுவர வேண்டுமென்று...                  

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

இறைவன் நம் ஈமானை அதிகரிக்க செய்வானாக...ஆமின்...

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ    







10 comments:

  1. அன்பு சகோதரர் ஆஷிக்,
    தாங்கள் குறிப்பிட்டது போன்று நாத்திகத்தை வெல்லும் ஒரே சித்தாந்தம் இஸ்லாம் மட்டுமே. மனிதக் கரங்களால் உருவான சித்தாந்தங்கள் தோல்வியைத் தான் தழுவும். இணையத்தில் தற்போது அதிகமாக விமர்சிக்கப்படுகின்ற சித்தாந்தமாக இஸ்லாம் இருக்கின்றது. சிலர் அறியாமையினாலும் பலர் காழ்ப்புனர்ச்சியினாலும் இஸ்லாத்தை விமர்சித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு பதிலுரைக்க ஏதுவாக தகவல்களை தந்தமைக்கு நன்றி ஆஷிக். Dr. அப்துலாஹ் (பெரியார்தாசன்) போன்று சகோதரர் ரிச்சர்ட் டாகின்ஸ் அவர்களும் நேர்வழி பெற ஏக இறைவன் அருள் புரிவானாக.

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

    இணைய உலகில் நுழைந்திருக்கும் நான் இஸ்லாத்திற்கு எதிராக பரப்பப்படும் அவதூறுகளுக்கும் விமர்சனங்களுக்கும் பதில் கூறலாம் என்று நினைத்திருந்தேன். தங்கள் வலைப்பூவை பார்த்தபின் அதற்க்கான அறிவு என்னிடம் இல்லை என்பதை அறிந்துக் கொண்டேன். தங்களுடைய எழுத்து என்னை பிரம்மிக்க வைத்துவிட்டது. தங்களுடைய பணி சிறக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.

    ஒரு சிறிய ஆலோசனை: தங்கள் வலைப்பூவின் Templateஐ மாற்றினால் இன்னும் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  3. எல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரால்,

    அன்பு சகோதரர் அப்துல் பாஸித் அவர்களுக்கு,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    தங்களுடைய பாராட்டுக்கு நன்றி, எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே...

    //தங்கள் வலைப்பூவை பார்த்தபின் ............................................. கொண்டேன்//

    இல்லை பாஸித், நீங்கள் தவறாக நினைத்து விட்டீர்கள், சுமார் ஒன்பது மாதங்களுக்கு முன் வரை என் நிலைமையும் அதுதான். எப்போது நாம் அப்படி நினைத்து நின்று விடுகிறோமோ அப்போதுதான் பிரச்சனையே. உங்களுக்கு குரானின் ஒரு வசனம் அல்லது ஒரு ஹதீசாவது முழுமையாக, தெளிவாக தெரிந்தால் அதை அடுத்தவர்க்கு சொல்லுங்கள். நீங்கள் விமர்சனங்களுக்கு பதிலளிக்க பதிலளிக்க நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டு விடுவீர்கள். அப்படித்தான் நான் கற்றேன்...சுபானல்லாஹ்.

    இறைவன் நமக்கு அழகான மார்க்கத்தை தந்திருக்கிறான். அதை எடுத்து செல்வது நம் கடமை.

    எங்கள் எழுத்துக்கள் உங்களை இஸ்லாத்திற்கு எதிரான விமர்சனங்களுக்கு பதிலளிக்க தூண்ட/உதவ வேண்டுமே தவிர, விலகிச் செல்ல வைக்கக்கூடாது. அப்படி வைத்தால் நாங்கள் எழுதுவதை விடுவது தான் சிறந்தது. புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

    //ஒரு சிறிய ஆலோசனை: தங்கள் வலைப்பூவின் Templateஐ மாற்றினால் இன்னும் நன்றாக இருக்கும்.//

    நன்றாகத்தான் இருக்கும். இன்ஷா அல்லாஹ் விரைவில் அதை கற்றுக் கொள்கிறேன், தற்போதைக்கு அதில் எனக்கு அனுபவம் குறைவு. இன்ஷா அல்லாஹ் விரைவில் மாற்றம் வரும்...

    இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் இஸ்லாத்தில் நிலைக்க செய்வானாக....ஆமின்

    வஸ்சலாம்..

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  4. இன்ஷா அல்லாஹ் நான் எழுத தொடங்குகிறேன். template பற்றி தெரிய வேண்டுமானால் basith27@gmail.com என்ற முகவரியில் என்னை தொடர்பு கொள்ளவும். இன்ஷா அல்லாஹ் நான் அதைப் பற்றிவிளக்குகிறேன்.

    ReplyDelete
  5. ஆஷிக் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்
    தங்கள் பதிவின் ஒவ்வொரு கட்டுரையும் மிக மிக அருமை. தங்கள் வலைப்பதிவு மென்மேலும் வளர துஆச் செய்கிறேன்.
    நண்பர் அப்துல் பாசித் அவர்களுடன் நானும் இணைந்து தங்களுக்கு வலைப்பதிவு பற்றிய அனைத்து உதவிகளும் என்னால் இயன்றவரை செய்ய தயாராக உள்ளேன். எனது மின்னஞ்சல் masdooka@gmail.com

    ReplyDelete
  6. zazakallahair ... brother well article.. may allah give u more knowledge to do better inshaallah

    ReplyDelete
  7. //நான் எப்போதும் சொல்லுவதுண்டு, நாத்திகத்தை வெல்ல இஸ்லாமினால் மட்டுமே முடியும் என்று. அது அவ்வப்போது நிரூபணமாகி தான் வருகிறது//

    அது எவ்வாறு இஸ்லாமினால் மட்டுமே என்பதை விரிவாக்கவும், அதற்கான காரணங்கள் / கோட்பாடுகள் என்ன ? பிற மதங்கள் எதில் பின்னடைகின்றன ? தாங்கள் கூறுவதை எந்த ரகத்தில் எடுத்துக் கொள்வது என்பதில் தெளிவு இல்லை.

    ReplyDelete
  8. சரி அதனால் என்ன?....பரிணாமம் இல்லை என்றால் கடவுள் உண்டு என்பதை நிரூபிப்பதாகிவிடுமா? அல்லது இதுதான் கடவுள் என்பதற்கு ஆதாரமாகிவிடுமா?

    ReplyDelete
  9. சரி அதனால் என்ன?....பரிணாமம் இல்லை என்றால் கடவுள் உண்டு என்பதை நிரூபிப்பதாகிவிடுமா? அல்லது இதுதான் கடவுள் என்பதற்கு ஆதாரமாகிவிடுமா?

    ReplyDelete
  10. சகோதரர் அனானி,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    -----
    பரிணாமம் இல்லை என்றால் கடவுள் உண்டு என்பதை நிரூபிப்பதாகிவிடுமா?
    -----

    ஆகாது....

    ------------
    அல்லது இதுதான் கடவுள் என்பதற்கு ஆதாரமாகிவிடுமா?
    -------------

    ஆரம்ப கால உலகை ஆழ்ந்து படிக்கும் போது, உயிரினங்கள் முதன் முதலாக காணப்படும் போதே முழுமையாகவும், சிக்கலான வடிவமைப்பை கொண்டதாகவும் இருக்கின்றன. இது மிகவும் மர்மமாக இருக்கின்றது. இந்த சூழ்நிலையே, சில விஞ்ஞானிகளை, உயிர் என்பது இங்கே உருவாகவில்லை, வேறெங்கிருந்தோ பூமிக்கு வந்திறங்கியிருக்க வேண்டுமென்ற கருத்தை முன்வைக்க வைத்தது - க்றிஸ் மெக்கே, NASA Ames Research Center.

    அப்புறம், intelligent design என்று ஒரு கோட்பாடு உள்ளது..அது பற்றி கொஞ்சம் படிச்சு பாருங்களேன் ..உங்கள் கேள்விக்கு பதிலாய் அது அமையலாம்...

    தங்கள் கருத்துக்கு நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத்

    ReplyDelete