Tuesday, September 28, 2010

(பல) நாத்திகர்கள் அறியாமையில் இருக்கின்றார்களா?



அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.    


       பரிணாமம் குறித்து தேட துவங்கியதில் இருந்தே பல குழப்பங்கள். அவற்றில் சிலவற்றை பரிணாமம் தொடர்பான பதிவுகள் மூலம் பகிர்ந்து கொண்டு வருகின்றேன். அல்ஹம்துலில்லாஹ்.... அந்த வரிசையில் மற்றொரு குழப்பம். இந்த முறை பிரபல Berkeley பல்கலைக்கழக (University of California, Berkeley) தளத்திலிருந்து...

பரிணாமம் குறித்த தவறான புரிதல்களுக்கு(???) விளக்கம் தருவதற்காக ஒரு பகுதியை (Misconceptions about evolution and the mechanisms of evolution) ஒதுக்கி இருக்கின்றது அந்த தளம். மக்களிடையே உள்ள ஒரு தவறான புரிதலாக பின்வரும் கருத்தை முன்வைக்கின்றது அந்த தளம்,

பரிணாமமும் மதமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை ("Evolution and religion are incompatible")". 

இதற்கான பதிலாக பின்வருவதை கூறுகின்றது அந்த தளம்.

"Religion and science (evolution) are very different things. In science, only natural causes are used to explain natural phenomena, while religion deals with beliefs that are beyond the natural world.
The misconception that one always has to choose between science and religion is incorrect. Of course, some religious beliefs explicitly contradict science (e.g., the belief that the world and all life on it was created in six literal days); however, most religious groups have no conflict with the theory of evolution or other scientific findings. In fact, many religious people, including theologians, feel that a deeper understanding of nature actually enriches their faith" --- Misconceptions about evolution and the mechanisms of evolution, Understanding Evolution, University of California, Berkeley. 
மதம் மற்றும் அறிவியல் (பரிணாமம்) ஆகிய இரண்டும் மிகவும் வித்தியாசமானவை. அறிவியலில், இயற்கை நிகழ்வுகளை விளக்க இயற்கை காரணங்கள் பயன்படுத்தப் படுகின்றன. மதங்களோ, இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட நம்பிக்கைகளை கையாளுகின்றன. 
மதம் மற்றும் அறிவியல் ஆகிய இந்த இரண்டில் ஒன்றை தான் ஒருவர் தேர்வு செய்ய வேண்டும் என்பது தவறான கருத்து. ஆம், சில மத நம்பிக்கைகள் அறிவியலுக்கு நேர் எதிராக உள்ளன (உதாரணத்துக்கு, ஆறு literal நாட்களில் உலகம் மற்றும் அதிலுள்ள உயிரினங்கள் படைக்கப்பட்டன என்பது போன்ற நம்பிக்கைகள்); ஆனாலும், பெரும்பான்மையான சமய அமைப்புகளுக்கு பரிணாமம் மற்றும் மற்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் பிரச்சனையாக இருப்பதில்லை. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், பெரும்பான்மையான இறை நம்பிக்கையாளர்களுக்கு, வேத விற்பன்னர்கள் உட்பட, இயற்கை மீதான ஆழமான புரிதல் அவர்களது நம்பிக்கையை மேலும் செழிப்பாக்குகின்றது --- (Extract from the original quote of) Misconceptions about evolution and the mechanisms of evolution, Understanding Evolution, University of California, Berkeley.       
   
Berkeley தளத்தில் காணப்படும் இந்த விளக்கத்தில் என்னை கவனிக்க வைத்தன தொடர்ந்து வந்த கடைசி இரண்டு வரிகள், 

"Moreover, in the scientific community there are thousands of scientists who are devoutly religious and also accept evolution"
"மேலும், அறிவியல் உலகில், ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் ஆழ்ந்த இறைநம்பிக்கையும் அதே சமயம் பரிணாமத்தை ஏற்றுக் கொள்பவர்களாகவும் இருக்கின்றனர்"

பரிணாமத்தை நம்பும் ஆயிரக்கணக்கான அறிவியலாளர்கள் ஆழ்ந்த இறைபக்தி உள்ளவர்களாம். அட....

இதையே வேறு விதமாக சொல்லுவதென்றால், ஆயிரக்கணக்கான அறிவியலாளர்கள் நாத்திகர்கள் இல்லை, அவர்கள் இறைநம்பிக்கையாளர்கள்...




இப்போது, கடவுள் இல்லை என்று நிரூபிப்பதற்காக பரிணாமத்தை துணைக்கு அழைத்து வரும் நாத்திகர்களை பார்த்து நான் கேட்க விரும்புவது...

  • பரிணாமம் கடவுளை மறுப்பதாக இருந்தால் எதற்காக பரிணாமத்தை நம்பும் ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் இறைநம்பிக்கையாளர்களாக இருக்கவேண்டும்? 
  • இந்த விஞ்ஞானிகள் "உயிரினங்கள் சிறிது சிறிதாக மாறி பல்வேறு உயிரினங்களாக வந்திருக்கலாம், ஆனால் அதனை நடத்தும் அளவு இயற்கைக்கு தகுதி இல்லை (Natural Selection), இதற்கு பின்னணியில் ஒரு அற்புத சக்தி இருக்கின்றது" என்று நம்புபவர்களாக இருப்பார்களோ?   
  • பரிணாமத்தை நம்பும் ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் இறைநம்பிக்கை கொண்டிருக்கின்றார்கள் என்றால், பரிணாமம் கடவுளை மறுக்காது என்று அவர்கள் எண்ணுகின்றார்கள் என்று புரிந்து கொள்ளலாமா? 
  • பரிணாமம் கடவுளை மறுக்காது என்று தெள்ளத்தெளிவாக கூறுகின்றது talk origins தளம் (பார்க்க <<புரியாத புதிர்கள்...>>). Berkeley தளமோ, பரிணாமத்தை நம்பும் ஆயிரக்கணக்கான அறிவியலாளர்கள் கடவுள் பக்தி கொண்டுள்ளதாக கூறுகின்றது. ஆக, கடவுளை மறுக்காத ஒரு கொள்கையை ஆதாரமாகக் கொண்டு கடவுளை மறுப்பது அறிவுக்கு ஒத்துவருகின்ற ஒன்றா? 
  • இல்லை, talk origins மற்றும் Berkeley ஆகிய தளங்களின் கருத்து தவறா?     
    
பரிணாமம் சரியா தவறா என்கின்ற வாதம் ஒரு பக்கம், அப்படியே அது சரியாக இருந்தாலும் அது இறைவனை மறுக்காது, ஆயிரக்கணக்கான அறிவியலாளர்கள் இறைநம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்கின்ற கருத்துக்கள் மற்றொரு பக்கம். 

ஆக, பரிணாமம் உண்மையாக இருந்தாலும் சரி, பொய்யாக இருந்தாலும் சரி, அதனை வைத்து இறைவனை மறுக்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை. 

1) அப்படியென்றால், கடவுளை மறுக்க பரிணாமத்தை ஆதாரமாக காட்டும் நாத்திகர்கள் அறியாமையில் இருக்கின்றார்களா?     

2) கடவுளை மறுக்காத ஒரு கோட்பாட்டை தங்கள் கொள்கையை நியாயப்படுத்த பயன்படுத்துகின்றார்களா? 


இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் நிலைக்கச்செய்வானாக...ஆமின். 

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

My Sincere Thanks to: 
1. Talk Origins site. 
2. University of California, Berkeley site. 

Reference: 
1. http://evolution.berkeley.edu/evolibrary/misconceptions_faq.php#a1


உங்கள் சகோதரன், 
ஆஷிக் அஹ்மத் அ







10 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்
    அன்பின் சகோதரன் ஆஷிக்,
    பல நாத்திகர்கள் அறியாமையில் இருக்கின்றார்களா என்ற கேள்விக்குறி எல்லாம் வேண்டாம். கண்டிப்பாக அவர்கள் அறியாமையில் இருப்பதால் தான் நாத்திகர்களாகவே இருக்கின்றார்கள். எனவே அவர்களின் அறியாமையை அவர்களே உணர்ந்து கொள்ளும் காலம் வரும் வரை அவர்கள் நாத்திகர்களாகவே இருப்பார்கள்.

    ReplyDelete
  2. அன்புள்ள சகோதரர் ஆஷிக்...
    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.

    நாத்திகர்களுக்கு, 'கடவுள் இல்லை என்று சொல்லி' ஆத்திகர்களை எதிர்க்க இதுவரை பயன்பட்டு வந்த கொள்கை பரிணாமம். அதுவும் இப்போது குழப்படி என்றால், பாவம் நாத்திகர்கள் நிலை என்னாவது?

    ஆனால், இப்போது ஒன்று புரிகிறது. பரிணாமவியலாளர்களுக்கு நாத்திகத்திற்கு ஆள் சேர்ப்பதை விட படு அவசிய உடனடி தேவை: செத்துக்கொண்டிருக்கும் தங்கள் அடிப்படை கொள்கையான பரிணாமவியலுக்காவது ஆள் சேர்க்க வேண்டும். அதற்கு நாத்திகர்கள் மிகச்சிறிய தொகை ஆகி வருவதால் தங்கள் பரிணாமவியல் கொள்கையை குழப்பி சமரசம் செய்துகொண்டு அதன்மூலமாவது ஆத்திகர்களை ஆள் பிடிக்க முயற்சி செய்கிறார்கள்.

    ஆனால், இது பயனற்ற அப்பட்டமான அடிமுட்டாள்த்தனமான முயற்சி.

    ReplyDelete
  3. அன்பு சகோதரர் UFO,

    வ அலைக்கும் சலாம் (வரஹ்)...

    அப்படியே இதையும் சேர்த்து கொள்ளுங்கள்...

    நான் பரிணாமம் குறித்த தேடல்களின் மூலம் அறிந்து கொண்டது...

    1) அவர்கள் எதையெல்லாம் ஆதாரமாக காட்டினார்களோ அவை ஆதாரங்களில்லை.
    2) பொய், பித்தலாட்டங்கள் தங்கள் கொள்கையை நிரூபிக்க...
    3) பரிணாமம் இல்லையென்றால் உயிரியலே இல்லை என்றார்கள்...அதுவும் பொய்.
    4) விஞ்ஞானிகள் கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் என்பது போன்ற பிம்பத்தை உருவாக்கியிருந்தார்கள். அதுவும் பொய்.
    5) பரிணாமம் என்றால் என்னவென்று விளக்குவதிலேயே பல்வேறு குளறுபடிகள்...
    6) அவர்களுக்குள்ளாக அடிப்படையிலேயே சண்டைகள்....
    7) பரிணாமம் குறித்த அடிப்படையே நிரூபிக்க படாதது....ஆனால் பரிணாமம் உண்மை...இது கடைந்தெடுத்த பொய்...

    இப்படி பல...இந்த லிஸ்ட்டில் நீங்கள் குறிப்பிட்ட கருத்துக்கும் நிச்சயம் இடமுண்டு....

    மீன் வலை பார்த்திருக்கின்றீர்களா? அதில் உள்ள ஓட்டைகளை கூட எண்ணிவிடலாம் போல...ஆனால் பரிணாமத்தில் உள்ள................

    வாக்கியத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.....

    இறைவன் கூடிய விரைவில் இவர்களுக்கு நேர்வழி காட்ட வேண்டும்...ஆமின்

    நன்றி...

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  4. எல்லா மதங்களையும் ஆபாச வார்த்தைகளால் வறுத்தெடுக்கும் ஒருவர் ஒருமுறை, "முஸ்லிம்கள் நெசமாலுமே பகல் முழுசும் சாப்புடாமலும், தண்ணீ குடிக்காமலும் இப்பவும் நோன்பு இருக்கிறாங்களா?"" என்று கேட்டது ஞாபகம் வருது. இந்த ரீதியில் இருக்கிறது இவர்களின் இஸ்லாமிய அறிவு. மதவாதிகளை " மதம் என்னும் வட்டத்தை விட்டு சிந்திக்காதவர்கள்" என்று விமர்சிக்கும் இவர்கள், நாத்திகம் என்னும் அறியாமை மதத்தில் சிக்குண்டு சமூகத்தில் தங்களை அனாதையாக்கிக்கொண்டு வருகின்றனர்.

    ReplyDelete
  5. அஸ்ஸ‌லாமு அலைக்கும்,
    அல்ஹ‌ம்துலில்லாஹ் அல்லாஹும்ம‌ ஸ‌ல்லி அலா முஹ‌ம்ம‌தின்
    ச‌கோத‌ர‌ர் ஆஷிக், வேலைப்ப‌ளு அதிக‌மோ?
    கொஞ்ச‌ம் இடைவெளிக்குப் பின்ன‌ர் காண‌முடிகிற‌து..

    அல்லாஹ் உங்க‌ள‌து அனைத்து வேலைக‌ளையும் இலேசாக்கித் த‌ருவானாக‌!

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. Sir, please follow a positive approach.பரிணாமம் தவறு என்று நிரூபிப்பதால் கடவுள் இருக்கிறார் என்று அர்த்தம் ஆகாது. கடவுள் இருக்கிறார்,அவர் தான் உயிரினங்களை ஒட்டுமொத்தமாகப் படைத்தார் (பரிணாமத்தின் தேவை இன்றி) என்பதற்கு நீங்கள் அறிவியல்
    பூர்வமான விளக்கம் அளித்தால், நிரூபித்தால் அதை அறிவியல் உலகம் ஏற்றுக் கொள்ளத் தயாராகவே உள்ளது.கடவுளை ஏன் அறிவியல் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் கடவுளுக்கு ஆய்வுப் பூர்வமான எந்த நிரூபணமும் இல்லை.

    ReplyDelete
  8. Masha allah . jazakallaah khair ..

    ReplyDelete
  9. அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ

    சகோதர் ஆஸிக் அவர்களிடம் ஒன்றை கேட்கலாம் என்று இருக்கிறேன்.. தயவு செய்து பதில் தாருங்கள் .

    பரிணாமம் (அதாவது ஒரு செல்லில் இருந்துதான் தானாக மனிதன் வரை உருவானது ) எனும் கொள்கை இஸ்லாத்தோடு எப்படி ஒத்து போகிறது. பரினாமவியலாளர்கள் சிலரோ பலரோ கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கலாம் ,அனால் அப்படி நம்பியவர்கள் முஸ்லிம்களாக இருக்கிறர்களா? பரிணாமத்தை குர்ஆன் ஆதாரிக்கிறது என்று ஒரு அரபியர் குர்ஆணை மேற்கோள் காட்டி அவரது அறியாமையை வெளிக்காட்டியது போன்று நீங்களும் எதாவது வித்யாசமான சிந்தனைகளில் இருக்கிறீர்களா ? என்பதை யோசிக்க வைக்கிறது .. இந்துக்கள் கடவுளை நம்புகிறார்கள் அதே சமயம அவர்கள் பரிணாமத்தையும் நம்புகிறார்கள் . கேட்டாள் அவர்களின் மதம் பரிணாமத்தை ஆதரிபதாக ஆதாரம் காட்டுகிறார்கள் ,,ஏன் பரிணாமத்தை ஏற்காத இந்துக்களை அவர்கள் தூய இந்துக்கொல்கையில் இல்லை என்றும் விமர்சிகிறார்கள் . எனவே அவர்கள் தான் இப்படி இருக்கிறார்கள் என்றால் ? நிங்களும் இஸ்லாத்தில் பரிணாமம் ஆதரிக்க படும் என்கிறிர்களா? உங்கள் போக்கும் எதை நோக்கியது என்று புரியவில்லை.
    ஏதாவது உங்கள் மனம் நோகும் படி சொல்லியிருந்தால் மன்னித்து விடுங்கள் ,,உங்கள் இந்த கட்டுரையை படிக்கும் போது அடிகடி தோன்றிய எண்ணங்களை முன்வைத்தேன்

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ

      பரிணாமம் என்னும் அறிவுக்கு பொருந்தா கோட்பாட்டை அதன் வழி சென்றே விமர்சிப்பது தான் இத்தளத்தின் நோக்கம் சகோ.

      Delete