Monday, December 27, 2010

விக்கிலீக்ஸ் - தீவிரவாதத்திற்கு ஆள் சேர்க்கும் மையங்களா இந்திய மதரசாக்கள்?உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.  

"the vast majority (of Indian muslims) remain committed to the Indian state" --- INDIA'S DEMOCRACY AND ECONOMY MINIMIZE EXTREMIST, 2(c), wikileaks cablegate.

உலகை மிகுந்த பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கும் விக்கிலீக்ஸ் மூலமாக கசிந்த, இந்திய முஸ்லிம்கள் குறித்த ஆவணத்தில் இருக்கும் ஒரு கருத்தை தான் நீங்கள் மேலே பார்த்தீர்கள். 

இந்தியாவிற்கான முன்னாள் அமெரிக்க தூதர் டேவிட் முல்போர்டின் (David C.Mulford) கருத்துக்களை கொண்ட அந்த ஆவணத்தில் இருந்து சில தகவல்களை சற்று விரிவாக இங்கு பார்ப்போம். அந்த ஆவணத்தை முழுமையாக படிக்க விரும்புபவர்கள் இந்த பதிவின் கடைசியில் கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை சுட்டவும்.

------------------------------
Friday, 02 December 2005, 12:54
C O N F I D E N T I A L SECTION 01 OF 06 NEW DELHI 009127
SUBJECT: INDIA'S DEMOCRACY AND ECONOMY MINIMIZE EXTREMIST
RECRUITMENT OF JUVENILES (C-CT5-00623)
REF: STATE 211901
NEW DELHI 00009127 001.2 OF 006

இந்திய முஸ்லிம்களின் தேசப்பற்று மற்றும் பயங்கரவாத ஆதரவின்மை:

2.(C). 1991ஆம் ஆண்டு இந்திய சென்சஸ் படி, முஸ்லிம்களின் மக்கள் தொகை பதினைந்து சதவிதத்திற்கும் சற்று குறைவாக உள்ளது. 1981-2001 இடையேயான காலக்கட்டத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 33% உயர்ந்துள்ளது. அதே காலக்கட்டத்தில் இந்திய மக்கள் தொகை 24% உயர்ந்துள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய மைனாரிட்டி மார்க்கமாக இஸ்லாம் உள்ளது.

இந்தியாவின் பல நகரங்கள் மற்றும் மாநகரங்களில், குறிப்பாக வட இந்தியாவில், மூன்றில் ஒரு பங்கோ அல்லது அதனை விட மேலாகவோ முஸ்லிம்கள் வசிக்கின்றனர். பீகார் (12 மில்லியன்), மேற்கு வங்கம் (16 மில்லியன்), உத்தரபிரதேசம் (24 மில்லியன்) போன்றவை முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கக்கூடிய மாநிலங்கள். முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் (92%) சன்னிகள், ஏனையோர் ஷியாக்கள்.

இந்திய முஸ்லிம்களின் மக்கள் தொகை சுமார் 150 மில்லியன் என்று கணக்கிடப்பட்டுள்ளது (இந்தோனேசியாவிற்கு அடுத்து அதிக முஸ்லிம்கள் வாழக்கூடிய நாடு இந்தியா). மற்ற எந்த இந்திய குழுக்களையும் விட அதிக வறுமையில் வாடுபவர்களும் முஸ்லிம்கள் தான்.

சமயங்களில், பாரபட்சத்திற்கும் பாகுபாட்டிற்கும் (Discrimination and Prejudice) இலக்காகின்றனர் இந்திய முஸ்லிம்கள். இருந்தபோதிலும், அறுதிப் பெரும்பான்மையான முஸ்லிம்கள் இந்தியாவின் மீது தொடர்ந்து பற்று கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், அரசியலிலும் பொருளாதாரத்திலும் பங்கேற்க முயல்கினறனர்.

குறைந்த அளவிலான முஸ்லிம் இளைஞர்கள் மட்டுமே,  இந்திய அரசியல் தங்களது துயரங்களுக்கு பதில் சொல்லாது என்றெண்ணி Pan-Islamic (உலக முஸ்லிம்களை ஒரே இஸ்லாமிய நாட்டின் கீழ் கொண்டு வர வேண்டுமென்ற கொள்கையை உடைய இயக்கங்கள்) மற்றும் பாகிஸ்தான் ஆதரவு இயக்கங்களை நோக்கி ஈர்க்கப்படுகின்றனர். இந்த இயக்கங்கள் சில நேரங்களில் வன்முறைகளிலும் ஈடுபடுகின்றன.

இந்தியாவின் வலிமையான ஜனநாயகம், கலாச்சாரம் மற்றும் வளரும் பொருளாதாரம் போன்றவை முஸ்லிம் இளைஞர்களை இயல்பான வாழ்க்கையோடு ஒன்ற வைத்துள்ளது. இது, பயங்கரவாதத்திற்கு ஆள் சேர்ப்பதையும், அந்த இயக்கங்கள் செயல்படுவதையும் பெருமளவு குறைத்திருக்கின்றது.

3.(C). மதம் சார்ந்த, அரசியல் சார்ந்த, சமூகம் சார்ந்த இஸ்லாமிய அமைப்புகள் நிறைய இருந்தாலும், பெரும்பாலான முஸ்லிம்கள் மதச்சார்பற்ற அமைப்புகளிலேயே சேர்கின்றனர், ஆதரவளிக்கின்றனர். 

பாரதிய ஜனதா கட்சி முஸ்லிம் உறுப்பினர்களை கொண்டிருந்தாலும், பொதுவாக, முஸ்லிம்கள் மதச்சார்பற்ற கட்சிகளில் சேர்வது, அரசியல் சக்தியாக பா.ஜ.க உருவாகுவதை தடுக்கத்தான். 

இந்திய நாட்டிற்கு எதிராகவும், முஸ்லிமல்லாத இந்திய மக்களுக்கு எதிராகவும் தீவிரவாதத்தை ஆதரிக்கும் இஸ்லாமிய இயக்கங்கள் மிக குறைவே. காஷ்மீருக்கு வெளியே இந்த இயக்கங்களுக்கு செல்வாக்கோ, புகழோ இல்லை. 

7.(C). பெரும்பான்மையான இந்திய முஸ்லிம்களின் ஆதரவை பிரிவினைவாதமோ, தீவிரவாதமோ பெற்றதில்லை. பெரும்பான்மையான முஸ்லிம்கள் மிதவாத போக்கை கடைபிடிக்கின்றனர். 

பழமைவாத சன்னி அரசியல் இயக்கங்களான ஜமாத் இஸ்லாமி மற்றும் தியோபந்தி பிரிவு போன்றவை இஸ்லாமிய குறுகியவாதத்தை ஆதரிக்கின்றனர். இந்த இயக்கங்களின் உறுப்பினர்கள் சிலர் ஒசாமா பின் லேடனை admire செய்து தங்கள்  கருத்துக்களை வெளிப்படுத்துகின்றனர். இந்த அமைப்புகளின் தலைவர்கள் இது போன்ற தங்கள் பார்வைகளை பொதுவில் வெளிப்படுத்துவதில்லை. அதுபோல, பேச்சு  அளவில் தான் இவர்களின் ஆதரவு பயங்கரவாதிகளுக்கு இருக்கின்றதே தவிர, அதை தவிர்த்து  வேறுவிதமான ஆதரவை இவர்கள் பயங்கரவாதிகளுக்கு அளிப்பதாக தெரியவில்லை.  

அப்பாவி முஸ்லிம்கள் மீதான இந்து பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் மற்றும் அவ்வப்போது நடக்கும் மதக்கலவரங்கள் போன்றவை, சிறிய அளவிலான முஸ்லிம்களை வன்முறை என்னும் கோட்டையும் தாண்டி தீவிரவாதத்தின் பக்கம் அழைத்து சென்றிருக்கின்றன. 

இந்திய மதரசாக்கள்:

13.(C). இந்திய மதரசாக்கள், இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு ஆள் சேர்க்கும் இடங்களாகவும், அவைகளில் பல பாகிஸ்தானின் ISI-இன்  பொருளுதவியோடு நடப்பதாகவும் இந்திய ஊடகங்கள் வண்ணமயமான செய்திகளை வெளியிட்டிருக்கின்றன. எனினும், இது போன்ற செய்திகள் மேலோட்டமான பார்வையை கொண்டவை. தீவிரவாத குழுக்களுக்கு ஆள் சேர்க்கும் இடங்களாக இந்திய மதரசாக்கள் இருக்கின்றன என்ற குற்றச்சாட்டுக்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை. 

வட இந்திய சிறுவர் சிறுமியருக்கான தொடக்க நிலை மதரசாக்களை தொடர்ச்சியாக நிறுவி வருகின்றது தியோபந்தி பிரிவு. மதரசா கல்வியை ஐந்து வயது முதல் பல்கலைகழகம் வரை கொடுப்பதே அவர்களுடைய குறிக்கோள். அவர்களின் இந்த செயல்திட்டம், சிறுவர்களை, இயல்பான வாழ்கையிலிருந்து தனிமைப்படுத்தவோ, பயங்கரவாதத்தை நோக்கியோ அல்லது பயங்கரவாதத்திற்கு ஆள் சேர்க்கும் குழுக்களுக்கு எளிதான இலக்காகி விடுமோ என்பது போன்ற கவலையை சற்று தருகின்றது.        
------------------------------

இந்தியாவில் பயங்கரவாதம் பல வகைகளில் இருக்கிறதென்றும் (இந்து, இஸ்லாமிய மற்றும் சீக்கிய), அவர்கள் அனைவரும் சிறுவர்களை தங்கள் இயக்கங்களில் சேர்த்தாலும், இந்த ஆவணத்தில் நாம் பார்க்கபோவது இஸ்லாமிய பயங்கரவாதம் சிறுவர்களை தங்கள் இயக்கங்களில் சேர்ப்பது பற்றிதான் என்று கூறி தொடங்கும் அந்த நீண்ட ஆவணம், 

 • காஷ்மீர், 
 • சிறுவர்களை பயங்கரவாதத்திற்கு சேர்ப்பது, 
 • பயங்கரவாத எண்ணங்களை கொண்ட அமைப்புகளின் பட்டியல்,
 • எதனால் சிலர் தீவிரவாத குழுக்களில் சேர்கின்றனர்?, 
 • தங்கள் நடவடிக்கைகளுக்கு அவர்கள் கூறும் காரணங்கள்,
 • முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள், 
 என்று பலவற்றை அலசுகின்றது.

முழுமையாக அந்த ஆவணத்தை படிக்க விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை சுட்டவும். 

விக்கிலீக்ஸ்சை விடுவோம்.....

எங்கள் நாட்டுப்பற்றை சந்தேகிக்கும் அந்த மிகச் சில சகோதரர்களுக்கு நான் கூறிக்கொள்ள விரும்புவது...

நாங்கள் முஸ்லிம்கள்...நாங்கள் இந்தியர்கள்...

அன்றும் சரி, இன்றும் சரி, (இன்ஷா அல்லாஹ்) என்றும் சரி, தொடர்ந்து எங்கள் பங்களிப்பை எங்கள் நாட்டிற்கு செய்து கொண்டிருப்போம். நீங்கள் கூப்பாடு போட்டு கொண்டே இருங்கள். உங்களை திருப்திபடுத்துவது எங்கள் வேலையில்லை. நல்ல செயல்களை செய்து இறைவனை திருப்திபடுத்துவதே எங்கள் வேலை. இறைவன் எங்கள் உள்ளங்களை நன்கு அறிவான்.

இந்த நாட்டின் ஒற்றுமை தொடர்ந்து நீடிக்க இறைவன் உதவி புரிவானாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.      


One can read the entire document from here

My sincere thanks to:
1. ibnlive.com 

References:
1. WikiLeaks Cablegate: Indian Muslim population largely unattracted to extremism - ibnlive.com, reproduced from wikileaks.ch


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ. 


12 comments:

 1. அஸ்ஸலாமு அலைக்கும்
  அன்பின் சகோதரன் ஆஷிக்,
  பெரும்பாலான ஊடகங்கள் கண்டுகொள்ளாத விக்கிலீக்சின் இன்னொரு பக்க அறிக்கையை எமக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறீர்கள். அதற்காக உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். முஸ்லிம்களுடைய தேசபற்றை சந்தேகிக்க எவனுக்கும் இந்திய நாட்டில் அருகதையில்லை. ஏனெனில் வெள்ளையன் காலத்தில் இருந்தே சுதந்திரத்திற்கும் அதற்குப் பின்னர் பல பாகுபாடுகள் காட்டப்பட்டிருந்தாலும் தொடர்ந்து இந்த தேசத்திற்கு விசுவாசமாய் நடப்பவர்கள் முஸ்லிம்கள்.

  ReplyDelete
 2. அஸ்ஸலாமு அலைக்கும். சரியான மொழியாக்கம்.இன்னும் நம் நாட்டின் உளவுத்துறை,ஊடகத்துறை,நீதித்துறை,காவல்துறை இன்னும் ஏனைய அரசு துறைகளில் திட்டமிட்டு ஊடுருவியுள்ள ஆர் எஸ்எஸ் பயங்கரவாதிகள் பரப்பி வரும் நச்சு கருத்துகள்,நடத்தி வரும் கலவரங்கள்,குண்டு வெடிப்புகள் இதை பற்றி ஏதேனும் விக்கிலீக்ஸ் கேபிள் உள்ளதா? அறிய தரவும்.

  ReplyDelete
 3. சகோதரர் ஷாநவாஸ்கான்,

  வ அலைக்கும் சலாம்,

  இந்த கேபிள், பயங்கரவாதத்திற்கு சிறுவர்களை ஆள் சேர்ப்பது குறித்து பேசுகின்றது. முழுக்க, முழுக்க முஸ்லிம்களை பற்றி மட்டுமே பேசும் ஆவணம். இருந்தபோதிலும், பின்வரும் கருத்துக்களும் அதில் இருக்கின்றன.

  1.-------------
  In Gujarat and Western India, particularly in Mumbai, many Muslims were traumatized by anti-Muslim rioting following the destruction of Babri Mosque in 1992, and the Godhra train violence of 2002. We speculate that their principal motivation is revenge for senseless and painful attacks inflicted on them, their families, and their communities by Hindu extremists.
  ---------------

  2. ----------------
  Attacks by Hindu extremists on innocent Muslims and periodic bouts of bloody communal rioting, have led a small number of Muslims to cross the line from sympathizing with violence to engaging in terrorism.
  ------------------

  ஆக, இந்து பயங்கரவாதத்தை பற்றிய கேபிள் இது இல்லை. சிலவற்றை விளக்க இந்து பயங்கரவாதத்தை மேற்கோள் காட்டி இருக்கிறார்கள்...

  நன்றி,

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹ்மத் அ

  ReplyDelete
 4. //இந்த நாட்டின் ஒற்றுமை தொடர்ந்து நீடிக்க இறைவன் உதவி புரிவானாக...//--ஆமீன்.

  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  மிக்க நல்லதொரு ஆக்கம் சகோதரர் ஆஷிக் அஹ்மத்.

  அமெரிககா பற்றி விக்கிலீக்ஸ் புட்டு புட்டு வைத்தபோது மீடியாக்கள் 'இதை தலைப்புச்செய்தியாக்கவா... மறைக்கவா...' என்று மென்று விழுங்கின. கடைசியில் வேறு வழியின்றி... "சென்றவாரம் விக்கிலீக்ஸ் என்ற ஒரு இணையதளம்..." என்று புளிச்சமாவு செய்தி சொல்ல ஆரம்பித்தனர்..!

  "இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் மீண்டும் செயல்படத் தொடங்கி விட்டதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு இந்திய ராணுவத் தளபதி தீபக் கபூர் தந்த ரகசிய தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்ட செய்தியை... சூட்டோடு சூடாக...
  // "பாகிஸ்தானில் இந்தியாவிற்கு எதிராக தீவிரவாத முகாம்கள் செயல்பாடு"-விக்கிலீக்ஸ் அம்பலம்..!(???) //--- என்று தலைப்புச்செய்தியாய் கதறின. உடனே விக்கிலீக்ஸ் இந்தியாவின் ஹீரோவாகி விட்டது. அதற்குப்பிறகு விக்கிலீக்ஸ்...விக்கிலீக்ஸ்...விக்கிலீக்ஸ்!

  அப்புறம்தான் வந்தது விக்கிலீக்சின் இந்த நியூஸ். இது வெகுஜன ஊடகத்தால் தொலைக்கப்பட்ட கண்டுகொள்ளப்படாத கெட்ட அதிர்ச்சி செய்தி. ஏற்கனவே உண்மையை அட்லீஸ்ட்... ரகசியமாகவாவது சொன்ன ஒரு காங்கிரஸ் காரர் ராகுல் காந்தியை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. ஏஜென்டாக்கி விட்டனர்.(அம்மா இத்தாலி... மகன் பாகிஸ்தானி... பலே)

  இதுவரை முஸ்லிம்கள் பற்றி பொய்யான ப்ரோபகண்டா செய்து வந்த இந்திய உள்துறை அமைச்சகம், சிபிஐ, ரா, அனைத்து இந்திய முக்கிய பிரபல வெகுஜன ஊடகங்கள்,(விதிவிலக்கு:ஆஜ்தக், ஹெட்லைன்ஸ் டுடே, தெஹல்கா...), சங்பரிவார், பல அரசியல் கட்சிகள் ஆகிய அனைத்தும் போட்டுக்கொண்ட முகமூடிகள் கிழிக்கப்பட்டுள்ளன.

  விக்கிலீக்ஸ்... இந்திய முஸ்லிம்கள் பற்றிய உண்மையை கூறிவிட்டது.

  அதுமட்டுமில்லாது... ஹிந்துத்துவாவின் 'ஹிட்டன் ஃபைலாகிய' அதன் உண்மை பயங்கரவாத முகத்தையும் பிரகாசமான வால்பேப்பராக்கி விட்டது.

  எனவே..., அதுவரை விக்கிலீக்ஸ்-ஐ போற்றி புகழ்ந்த அத்துணை பேரும் இப்போது விக்கிலீக்சை வெறுக்கிறார்கள்.  விக்கிலீக்ஸ்...

  இந்திய முஸ்லிம்களுக்கு இன்னொரு ஹேமந்த் கார்கரே..!

  அல்லது...

  இன்னொரு ஆஜ்தக்-தெஹல்கா..!

  இதனால்... அது இந்தியாவின் வில்லனும் கூட...!

  ReplyDelete
 5. நன்றாக எழுதி வருகிறீர்கள். பாராட்டுகிறேன். நீங்கள் திண்ணை, தமிழ்பேப்பர் போன்ற வலைத்தளங்களில் எழுத கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அறிவுக்கு தீனி போடவும் எதிர்வாதம் செய்யவும் அங்கு நல்ல வாய்ப்புள்ளது. உங்கள் கட்டுரை பலரை சென்று சேரவும் உதவும். ஏனெனில் இந்த இந்துத்துவவாதிகள் இந்த வலைதளங்களில் தான் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான கட்டுரைகளை வெளியிட்டு தங்களது அறிவுஜீவிதனத்தை மெச்சிக்கொள்கின்றனர். அவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்க நாகூர் ரூமி தவிர வேறொருவறில்லை. அதனால நீங்க அங்க வாங்க சகோதரரே.. உங்களிடம் நாங்கள் இன்னும் எதிர்பார்க்கிறோம்.

  ReplyDelete
 6. சகோதரர் முஹம்மது ஆஷிக்,

  வ அலைக்கும் சலாம்,

  விக்கிலீக்ஸ்சின் அந்த ஆவணத்தை படித்ததிலிருந்து மிகுந்த மனக்குழப்பம். தங்களுக்குள்ளாக பரிமாறிக்கொள்ளப்படும் இது போன்ற தகவல்களை அமெரிக்க அரசாங்கமே வெளியிடலாம் அல்லவா? அதன் மூலமாக அனைத்து முஸ்லிம்களையும் ஓரே வட்டத்திற்குள் அடைத்து விட்ட ஒரு சிலரது எண்ணங்கள் மாற வாய்ப்புள்ளது அல்லவா?

  இது ஒரு புறம் இருக்க, நம் ஆதங்கத்தை ஆதாயமாக்க முயலும் ஒரு சிலரை நினைத்தால் இன்னும் வருத்தமாக இருக்கின்றது. உதாரணத்துக்கு, பாபர் மசூதி தீர்ப்பு வந்த நேரம். முஸ்லிம்கள் அதிர்ச்சியில் இருந்த தருணம். அப்போது என் நெருங்கிய நண்பரிடம் பேசிய ஒரு சகோதரர் "பார்த்தீர்களா, இந்த நாட்டில் உங்களுக்கு நியாயம் கிடைக்காது, இன்னும் ஏன் இந்த நாட்டின் மீது நம்பிக்கை கொண்டிருக்கின்றீர்கள்?" என்று கேட்டாராம். அதற்கு என்னுடைய நண்பர் சொன்னாராம் "மூட்டை பூச்சி கடிக்கின்றது என்பதற்காக வீட்டை கொளுத்த சொல்கின்றீர்களே" என்று. ம்ம்ம்ம்.

  இந்த நாட்டிற்கு தொடர்ந்து நம் பங்களிப்பை அளிக்க எல்லாம் வல்ல இறைவன் உதவி புரிவானாக...ஆமீன்.

  நம் ஆதங்கத்தை ஆதாயமாக பயன்படுத்த நினைக்கும் சிலரிடம் இருந்து நம் சகோதரர்களை காத்தருள்வானாக...ஆமீன்.

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹ்மத் அ

  ReplyDelete
 7. (விவாத தொடர்ச்சி...)

  //"மூட்டை பூச்சி கடிக்கின்றது என்பதற்காக வீட்டை கொளுத்த சொல்கின்றீர்களே"//=--இதுதான் நெத்தியடி..!

  நாதுராம் கோட்சே தவிர்த்து குற்றம் நிரூபிக்கப்பட்ட வேறு எந்த மூட்டைப்பூச்சிகளுக்கும் தண்டனை நிறைவேற்றப்படவில்லை.

  ஆனால், சில "மூட்டைப்பூச்சி ஒழிப்பு மருந்து"களுக்கு என்ன நேர்ந்தது என்று இப்போது அலசுவோம்...

  தென்காசி சிபிசிஐடி சிறப்புப் புலனாய்வுக்குழு தலைவரான திரு.ஆர்.பாலன், (இவர் தற்போது 'தண்ணி இல்லாத காட்டில்' இருக்கிறாரா அல்லது பதவி உயர்வு ஏதும் பெற்று சிட்டியில் உள்ளாரா என தெரிந்தவர்கள் கூறவும்...)

  கொலை மிரட்டல் விடப்பட்ட அடுத்தநாள்... 'கர்மவீரர்', 'அஞ்சாநெஞ்சர்' மும்பை ATS தலைவர் திரு.ஹேமந்த் கார்கரே என்ன ஆனார் என்று தெரியும்...

  தெஹல்கா-ஆஜ்தக்-ஹெட்லைன்ஸ் டுடே ஆகியவற்றுக்கு ஏற்படும் தொல்லைகள், மிரட்டல்கள், தாக்குதல்கள் என நிறைய படித்திருக்கிறோம்...

  ஹேமந்த் கார்கரேயை ஆஸ்திரியாவிலிருந்து இந்தியாவிற்கு இழுத்து வந்து மாலேகான் வழக்கை ஒப்படைத்த முன்னாள் உள்துறை மந்திரி-காங்கிரஸின் மூத்த முக்கிய கேபினட் அந்தஸ்து நபர்... சிவராஜ் பாட்டீல் இப்போது எம்.பி-யாகவாவது உள்ளாரா என்று தெரிந்தவர்கள் கூறலாம்...

  கார்கரே மரணத்தில் சந்தேகம் உள்ளதாக பாராளுமன்றத்தில் கூறிய முன்னாள் கேபினட் அமைச்சர் ஏ.ஆர்.அந்துலே இப்போது என்ன ஆனார்... எங்கு இருக்கிறார் என்று தெரிந்தவர்கள் கூறலாம்...

  ஹிந்துத்துவா தீவிரவாதம் பற்றி கருத்து கூறிய ராகுல்காந்தியைத்தான் ஏற்கனவே பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ-யில் அட்மிஷன் போட்டுவிட்டார்கள்(!?) என்று கூறிவிட்டேன்...

  இருந்தாலும் தற்போது 'மூட்டைப்பூச்சி மருந்துகள்' கொஞ்சம் கொஞ்சமாய் பெருகி வருவதால்(இறைவனுக்கு நன்றி)...

  'வீட்டைக்கொளுத்தும் எண்ணம்' வேகம் வேகமாய் குறைந்து வருகிறது(இறைவனுக்கு நன்றி).

  இதைத்தான் விக்கிலீக்சும் சொல்லி இருக்கிறது.


  இறைவா..! 'மூட்டைப்பூச்சி மருந்துகளை'...

  'மூட்டைப்பூச்சிகளிடமிருந்து' காப்பாற்றுவாயாக...!

  ReplyDelete
 8. I forgot to add a foot note on Late.Hament Karkare...

  Why was he transferred to RAW-Austria(தண்ணி இல்லாத காடு?) for seven years..?

  In 1998, Karkare took the bold step of arresting Shiv Sena leader Anand Dighe from Thane. The Shiv Sena was trying to foment communal tensions at Haji Malang in Kalyan, where both Hindus and Muslims went to pray. Dighe was to Thane what Bal Thackeray is to Mumbai, and his arrest frustrated the terror tactics of Shiv Sena.

  No need to tell who were the then ruling party... at central and in state.

  ReplyDelete
 9. சகோதரர் அனானி,

  முன்பு என்னை மட்டும் தான் அந்த வார்த்தையை கொண்டு அழைத்தீர்கள், இப்போது அனைவரையுமா? ...என்னால் உங்கள் பின்னூட்டத்தை அனுமதிக்க முடியாது...

  நன்றி,

  இறைவன் உங்களுக்கு கூடிய விரைவில் நேர்வழி காட்டுவானாக என்று பிரார்த்திக்கும் சகோதரர்களில் ஒருவன்...

  ஆஷிக் அஹ்மத்

  ReplyDelete
 10. சகோதரர் அனானி,

  -------
  நன்றாக எழுதி வருகிறீர்கள். பாராட்டுகிறேன்.
  --------

  நன்றி...எல்லாப் புகழும் இறைவனிற்கே....

  ------
  அதனால நீங்க அங்க வாங்க சகோதரரே..
  ------

  இன்ஷா அல்லாஹ்...

  தங்கள் கருத்துக்களுக்கு நன்றி,

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹ்மத் அ

  ReplyDelete
 11. Hello,
  You have replied for my questions as you do not have answer..

  Now one more question to you.

  Who killed this man??

  http://en.wikipedia.org/wiki/Salmaan_Taseer

  Can you let us know if this assasination is according to Quran? I guess your answer would be yes.
  If you really feel that killing of such persons are bad, who needs your Dawwah work? Muslims or Evolutionists or Non muslims or Hindus or Kafirs??

  Your Quran needs to reach you; Open your heart and read it. Teach it to your fellow muslims and save us from those animals.

  ReplyDelete
 12. Assalamu alaikkum varah,
  can you post the article about the Muslim's involvement in freedom fighting.

  ReplyDelete