Tuesday, February 8, 2011

தயங்குகின்றார்களாம் ஆசிரியர்கள்...பரிணாமத்தை ஆதரிக்க !!!!!!!!!!!உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்

பரிணாம ஆதரவாளர்களுக்கு மற்றுமொரு அதிர்ச்சி தகவல். 

அமெரிக்காவின் பெரும்பாலான உயர்நிலை பள்ளி உயிரியல் ஆசிரியர்கள், பரிணாமத்தை ஆதரிப்பதில் தயக்கம் காட்டுகின்றார்களாம். யார் சொல்வது இதை?....கடந்த மாதம் 28-ஆம் தேதியிட்ட பிரபல ஆய்விதழான SCIENCE தான் தெரிவிக்கின்றது இந்த செய்தியை....

உயிரியல் ஆசிரியர்களிடையே நடத்தப்பட்ட தேசிய ஆய்வு முடிவுகளை ஆவணச் செய்த ஆய்வாளர்கள் அதிர்ச்சி தரக்கூடிய செய்திகளை வெளியிட்டுள்ளனர். 

1. 28% ஆசிரியர்கள் மட்டுமே தேசிய ஆய்வு குழுவின் பரிந்துரைகளின் படி பரிணாமத்தை நடத்துபவர்களாக இருக்கின்றனர். 

அது என்ன பரிந்துரை?...

பரிணாமம் நடந்ததற்கான ஆதாரங்களை அறிமுகப்படுத்துவது, உயிரியலின் பல பிரிவுகளை இணையக்கூடிய ஒன்றாக பரிணாமம் இருக்கிறதென்பதற்கு ஏற்றவாறு பாடத்திட்டங்களை வகுப்பது என இவைதான் அந்த பரிந்துரைகள். 

2. இதற்கு நேர்மாறாக, 13% ஆசிரியர்கள், படைப்புவாதத்தையோ அல்லது Intelligent Design கோட்பாட்டையோ (இதனை பற்றி படிக்க <<இங்கே>> சுட்டவும்) ஆதரித்து வெளிப்படையாகவே போதிக்கின்றனர். இதற்காக குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது வகுப்புகளில் செலவிடுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர், அறிவியல் முறைகளை வைத்து உயிரினங்களின் தோற்றத்தை அறிய முடியுமென்பதை நிராகரித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், பரிணாமம் மற்றும் படைப்புவாதம் என்ற இந்த இரண்டுமே நம்பிக்கைகளே ஒழிய, இந்த இரண்டையும் முழுவதுமாக நிரூபிப்பதோ அல்லது நிராகரிப்பதோ முடியாது என்றும் நினைக்கின்றனர்.          

மேலே பார்த்த தகவல்கள் உங்கள் புருவங்களை உயரச் செய்திருந்தால் மேற்கொண்டும் படியுங்கள். 3. அது சரி, மீதி இருக்கக்கூடிய சுமார் 60% ஆசிரியர்கள் எப்படி? 

இவர்கள் பரிணாமத்தையும் ஆதரிக்கவில்லையாம், படைப்புவாததையும் ஆதரிக்கவில்லையாம். இரண்டுக்கும் நடுவிலே இருக்கின்றார்களாம். இவர்களை "ஜாக்கிரதையான 60%" என்று குறிப்பிடுகின்றனர் ஆய்வாளர்கள். 

அதாவது, இந்த இரண்டில் எது சரி என்ற சர்ச்சையில் சிக்கி கொள்ளாமல் ஜாக்கிரதையாக இருக்கின்றார்களாம்!!!!!!!!!!

வகுப்புகளில் பரிணாமத்தை இவர்கள் மூன்று வழிகளில் அணுகுகின்றார்களாம். 

 • ஒரு சாரார், Micro Evolution (ஒரு உயிரினத்திற்குள் ஏற்படும் மாற்றங்கள்)  மட்டுமே உண்மை என்பது போல நடத்துகின்றார்களாம். அதாவது, ஒரு உயிரினத்திலிருந்து மற்றொரு உயிரினம் வந்திருக்க வேண்டுமென்று சொல்கின்ற Macro Evolution னை அவர்கள் பொருட்படுத்துவதில்லையாம். 
 • இரண்டாவது சாரார், பரிட்சைகளை கணக்கில் கொண்டு மட்டுமே பரிணாமத்தை நடத்துகின்றார்களாம். அதாவது " நீங்கள் நம்புகின்றீர்களோ இல்லையோ, பரீட்சைக்கு இது தேவைப்படும், அதனால் இதனை படியுங்கள்" என்று கூறுபவர்களாக இருக்கின்றார்களாம்.
 • மூன்றாவது சாராரோ, உயிர்கள் தோற்றம் குறித்து பேசுகின்ற அனைத்து கோட்பாடுகளையும் தங்கள் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துகின்றனராம். "நாங்கள் அனைத்தையும் உங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம். நீங்களே எது சரியென்று முடிவெடுத்து கொள்ளுங்கள்" என்று சொல்லுபவர்களாக இருக்கின்றார்களாம். 

ஆக, நாம் முன்னர் பார்த்த 13% ஆசிரியர்களை விட, இந்த 60% ஆசிரியர்கள் தான் பரிணாமவியலாளர்களுக்கு மிகுந்த கவலையை கொடுத்திருக்கின்றனர். 

சரி, ஆசிரியர்கள் பரிணாமத்தை ஆதரிக்க எந்த மாதிரியான நடவடிக்கைகள் தேவையென அந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர்?

 • நன்கு பயிற்றுவிக்கப்பட்ட உயிரியல் ஆசிரியர்களை பணியமர்த்துவது, 
 • கல்லூரிகளிலும், பல்கலைகழகங்களிலும் (எதிர்க்கால உயிரியல் ஆசிரியர்களுக்காக) பரிணாமம் குறித்த இளங்கலை பாடப்பிரிவை கொண்டு வருவது, 
 • கடைசியாக, அவ்வப்போது பரிணாமம் குறித்த மறுபயிற்சி (refresher courses) வகுப்புகளை ஆசிரியர்களுக்கு நடத்துவது, 

என இவை மாற்றங்களை கொண்டு வரலாமென இந்த ஆய்வை நடத்திய ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

இதில் நிச்சயமாக இரண்டாவது மற்றும் மூன்றாவது ஆலோசனைகளை செயல்படுத்த கல்விக்கூடங்கள் முன்வர வேண்டும். அப்போது தான் பரிணாமத்தின் உண்மை முகம் இன்னும் வேகமாக தெரிய வரும்.   

அதெல்லாம் சரி, பெரும்பாலான ஆசிரியர்களுக்கு பரிணாமம் பற்றிய தெளிவு இல்லை என்று அவர்கள் மீது பழியைப்போடும் பரிணாமவியலாளர்கள், தங்களுடைய பாரபட்சத்தை தள்ளி வைத்து விட்டு சிந்திக்க முன்வருவார்களா? ஏன் இத்தனை ஆசிரியர்கள் பரிணாமத்தை உண்மையென போதிக்காமல் குழப்பத்தில் இருக்கின்றார்கள் என்று ஆய்வு செய்ய முன்வருவார்களா?

பரிணாம கோட்பாடு என்னும் உரலுக்குள், "இது வரை கிடைத்த ஆதாரங்கள்" என்னும் உலக்கை சரியாக பொருந்த மாட்டேங்கின்றதே,  ஆசிரியர்களின் தயக்கத்திற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாமென இவர்களுக்கு புரியவில்லையா? சர்ச்சைக்கான அடிப்படை பிரச்சனை தங்களிடம் தான் உள்ளது என்பது தெரியவில்லையா?

இன்ஷா அல்லாஹ், துவா செய்வோம், பரிணாமவியலாளர்களின் எண்ணப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உண்மைகள் மேலும் வேகமாக பலரையும் சென்று அடையவேண்டுமென்று...

இறைவா, எங்களை என்றென்றும் நேர்வழியில் நிலை நிறுத்துவாயாக...ஆமீன்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

My Sincere Thanks to:
1. Pennsylvania State University.

Picture taken from:
1. Carbon friend's blog. (carbonfriend.blogspot.com )

References:
 1. High school biology teachers reluctant to endorse evolution in class - Penn State website, 27th January 2011. link
2. Teachers Fail Evolution Education - Scientific American, 28th January 2011. link
3. High School Biology Teachers in U.S. Reluctant to Endorse Evolution in Class, Study Finds - Science daily, 28th January 2011. link


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ 


9 comments:

 1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
  சகோ.ஆஷிக் அஹ்மத்,

  மீண்டும் ஒரு பரிணாமத்துக்கு ஒரு சம்மட்டி அடியா? பாவம், எவ்வளவு அடிதான் அதுவும் தாங்கும்..?

  எனக்கும் இதை ஒரு yet to be proved தியரி என்றுதான் பள்ளியில் சொல்லிக்கொடுத்தனர்.

  அப்புறம்...//பரிணாம கோட்பாடு என்னும் உரலுக்குள், "இது வரை கிடைத்த ஆதாரங்கள்" என்னும் உலக்கை// ...ம்ஹூம்...!?!

  ReplyDelete
 2. வ அலைக்கும் ஸலாம் சகோதரர் முஹம்மது ஆஷிக்,

  ---------
  மீண்டும் ஒரு பரிணாமத்துக்கு ஒரு சம்மட்டி அடியா? பாவம், எவ்வளவு அடிதான் அதுவும் தாங்கும்..?
  -----------

  :)))))

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹ்மத் அ

  ReplyDelete
 3. சகோதரர் முஹம்மது ஆஷிக்,

  அஸ்ஸலாமு அலைக்கும்,

  Science இதழில் வெளியான இந்த தகவல் குறித்து Access Research Network சில சுவாரசியமான விஷயங்களை சொல்லியிருக்கின்றது...

  படிக்க
  Are 72% of biology teachers hindering scientific literacy in the US?  நன்றி

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹ்மத் அ

  ReplyDelete
 4. wishes for your works to promote islam to nonislam people

  ReplyDelete
 5. சகோதரர் ஷர்புதீன்,

  அஸ்ஸலாமு அலைக்கும்,

  தங்களுடைய வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...எல்லாப் புகழும் இறைவனிற்கே...

  இஸ்லாம் குறித்த ஒரு விஷயம் தெளிவாக தெரிந்திருந்தாலும் அதனை அடுத்தவருக்கு சொல்லும் நாம் ஒவ்வொருவரும் அழைப்பாளர்களே. இறைவன் நம்முடைய முயற்சிகளை இலேசாக்கி வைக்க வேண்டுமென்று துவா செய்யுங்கள்...

  இறைவன் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும், மற்றும் உங்கள் நண்பர்களுக்கும் நல்ல உடல் நலத்தையும். மன அமைதியையும், மகிழ்ச்சியையும் தந்தருள வேண்டுமென்று பிரார்த்திக்கும்

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹ்மத் அ

  ReplyDelete
 6. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  //பரிணாம கோட்பாடு என்னும் உரலுக்குள், "இது வரை கிடைத்த ஆதாரங்கள்" என்னும் உலக்கை சரியாக பொருந்த மாட்டேங்கின்றதே,//

  நல்ல உவமானம் அருமையான பதிவு நாந்தான் தாமதமாக வந்திருக்கிறேன்

  (இறைவன் உங்களுக்கு நற்கூலி அளிப்பானாக)

  ReplyDelete
 7. வ அலைக்கும் ஸலாம் சகோதரர் ஹைதர் அலி,

  -----
  நல்ல உவமானம்
  ------

  வாக்கியத்திற்கு பதிலாக படத்தை போட வேண்டுமென்று பார்த்தேன். ஆனால் நான் புக்மார்க் செய்திருந்த அந்த படம் எங்கிருக்கிறதென்று கண்டுபிடிக்க முடியாததால் வாக்கியத்தையே சேர்த்து விட்டேன்.

  ------
  தாமதமாக வந்திருக்கிறேன்
  --------

  வேலை பளு அதிகமிருப்பதால் எனக்கும் பல பதிவுகளை உடனடியாக படிக்க முடியாமல் போகின்றது.

  தங்களுடைய துவாவிற்கு நன்றி...

  நன்றி,

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹ்மத் அ

  ReplyDelete
 8. // * இரண்டாவது சாரார், பரிட்சைகளை கணக்கில் கொண்டு மட்டுமே பரிணாமத்தை நடத்துகின்றார்களாம். அதாவது " தம்பி, இங்க பாருப்பா, பரிணாமத்த நீ நம்புறியோ இல்லையோ, அது பிரச்சன இல்ல. பரீட்சைக்கு இது தேவப்படும், அதனால இத படிச்சிக்கோ" என்று கூறுபவர்களாக இருக்கின்றார்களாம்.

  * மூன்றாவது சாராரோ, உயிர்கள் தோற்றம் குறித்து பேசுகின்ற அனைத்து கோட்பாடுகளையும் தங்கள் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துகின்றனராம். "நாங்கள் அனைத்தையும் உங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம். நீங்களே எது சரியென்று முடிவெடுத்து கொள்ளுங்கள்" என்று சொல்லுபவர்களாக இருக்கின்றார்களாம்.//

  குழந்தைகளின் அறிவுப் பசிக்கும், தேடல் வேட்கைக்கும் நல்ல தீனி. இன்னும் சொல்லப்போனால் அதுதான் சரியான வழிமுறையும் கூட. நல்ல பகிர்வு சகோ. நன்றி.

  ReplyDelete
 9. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி அன்னு,

  தங்களுடைய கருத்துக்கு நன்றி...எல்லாப் புகழும் இறைவனிற்கே

  நன்றி,

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹ்மத் அ

  ReplyDelete