Monday, April 11, 2011

இஸ்லாம்-முஸ்லிம்கள் குறித்து சில கேள்விகள்...




நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். 

இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் குறித்து இந்த பதிவில் நான் எழுப்பியிருக்கும் கேள்விகள், முஸ்லிமல்லாத சகோதரி/சகோதரிகள் தங்களுக்குள்ளாக கேட்டுக்கொண்டிருக்கும் கேள்விகளாக இருக்கலாம். 

இந்த பதிவை படிக்கும் முஸ்லிமல்லாத சகோதர/சகோதரிகளுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள், இந்த பதிவை நீங்கள் எந்தவொரு முன் முடிவுமின்றி படியுங்கள். பின்னர் இந்த பதிவில் கூறப்பட்டுள்ள மையக்கருத்து குறித்து ஆழ்ந்து சிந்தித்து பாருங்கள். இறைவன் உங்களுக்கு இந்த பயணத்தை எளிதாக்கி வைப்பானாக...ஆமீன். 

பதிவிற்குள் செல்வோம், 

1. தங்கள் சொத்துபத்துகளை பற்றி சிறிதும் கவலைப்படாமல் அவற்றை அப்படியே விட்டு விட்டு நாயகம் (ஸல்) அவர்களுடன் மக்காவிலிருந்து மதீனாவிற்கு இடம் பெயர்ந்து சென்றனர் முஸ்லிம்கள்....இது அன்று நடந்த சம்பவம். 

"ஒன்று நீங்கள் இஸ்லாமை துறக்க வேண்டும், அல்லது உங்கள் குழந்தைகளை துறக்க வேண்டும்" என்ற இக்கட்டான கேள்வி ஆமினாஹ் அசில்மி அவர்களது விவாகரத்து வழக்கில் முன்வைக்கப்பட்டது. இருபது நிமிடங்கள் ஆழ்ந்த சிந்தனைக்கு பிறகு, கனத்த உள்ளத்தோடும் கலங்கிய கண்களோடும் சகோதரி ஆமினாஹ் அசில்மி சொன்ன பதில் "என்னால் இஸ்லாத்தை துறக்க முடியாது"......இது இன்று நடந்த சம்பவம். 

இந்த இரண்டு சம்பவங்களுக்கு இடையே இவர்களைப்போன்ற பலர் வந்து சென்றிருக்கலாம். 

  • ஒரு மார்க்கத்திற்காக, எதனையும் தியாகம் செய்ய இவர்களுக்கு எப்படி மனம் வருகின்றது? 
  • ஒரு மார்க்கம் இவர்களை இப்படி கட்டி போட்டிருக்கிறதென்றால் அதற்கு என்ன காரணம்?

2. சில வருடங்களுக்கு முன்பு (2007), பிரிட்டனில், முஸ்லிம் இளைஞர்களிடையே ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 

பிரிட்டனில், இஸ்லாமிய ஷரியத் சட்டத்திற்கு உட்பட்டு வாழ விரும்புவதாக பெருவாரியான இளைஞர்கள் (40%) கருத்து தெரிவித்திருந்தனர். இது, அந்த கருத்துக்கணிப்பை நடந்தியவர்களை அதிர்ச்சியுற செய்தது. 

பொதுவாக, இளைஞர்கள் என்பவர்கள் ஜாலியாக இருக்க விரும்புபவர்கள் என்ற எண்ணம் நம்மிடையே இருக்கின்றது. அப்படியிருக்க, முஸ்லிம் இளைஞர்கள், கடுமையான சட்டதிட்டங்கள் என்று விமர்சிக்கப்படுகின்ற ஷரியத் சட்டத்திற்கு கீழ் வாழ விருப்பப்படுவது எதனால்? 

3. 30-40 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், உலகளவில், ஹிஜாப் என்னும் ஆடை முறையை அணியும் முஸ்லிம் பெண்களின் எண்ணிக்கை குறைவான அளவிலேயே இருந்ததாக அறிகின்றோம். 

ஆனால் இன்றோ, அறுதிப்பெரும்பான்மையான முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிகின்றனர். 

விஞ்ஞானம் அபரிமிதமான வளர்ச்சியை கண்டுள்ள இந்நாளில், முஸ்லிம் பெண்கள் கல்வி அறிவில் சிறந்து விளங்கும் இந்நாளில், இயல்பாகவே, ஹிஜாப் அணியும் பெண்களின் எண்ணிக்கை குறைந்திருக்க வேண்டுமென்பது ஹிஜாபை விமர்சிப்பவர்களின் பார்வையாக இருக்க வேண்டும். ஆனால் நிலைமை தலைக்கீழாக அல்லவா இருக்கின்றது? 

விஞ்ஞானம் அற்புத வளர்ச்சியை பெற்றுள்ள இந்நாளில் தான் கல்வி அறிவில் சிறந்து விளங்கும் முஸ்லிம் பெண்கள் அதிக அளவில் விரும்பி ஹிஜாப் அணிகின்றனர். இது எதனால்?

4. மது அருந்த இஸ்லாம் தடை விதித்த போது, தாமதிக்காமல் தங்கள் வீட்டிலிருந்த மதுக்குடுவைகளை உடைத்து நொறுக்கினர் முஸ்லிம்கள். அதுபோல, பெண்களின் ஹிஜாப் குறித்த கட்டளை வந்த போது, உடனடியாக, தங்களிடமிருந்த ஆடைகளை சிறு துணிகளாக கிழித்து, ஹிஜாபை பேணிக்கொண்டனர் பெண்கள். 

இன்றளவும் கூட, இஸ்லாமை சரிவர பின்பற்றும் ஒரு முஸ்லிம், தன்னுடைய கருத்தில் உறுதிப்பாடாக இருந்து, அதற்கு எதிரான கருத்தை குரானிலிருந்து எடுத்து காட்டினால் சட்டென்று தன் நிலையை மாற்றி கொள்வார். 

ஒருவருடைய பழக்கவழக்கங்களை திடீரென மாற்றுவதென்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. நாம் எத்தனையோ சகோதரர்களை பார்த்திருப்போம், மது அருந்த மாட்டேனென்று, புகை பிடிக்கமாட்டேனென்று சத்தியம் செய்வார்கள். ஆனால் நடைமுறைப்படுத்த சிரமப்படுவார்கள்.

ஆனால், இஸ்லாம் கூறிய ஒரு கட்டளைக்கு அடிபணிந்து, தங்கள் வீட்டிலிருந்த மதுக்குடுவைகளை உடைத்தெறிந்திருக்கின்றார்கள் என்றால், தங்களுடைய நீண்ட நாள் பழக்கத்தை ஒழித்துவிட நாடுகின்றார்கள் என்றால், அப்படி என்ன இருக்கின்றது இந்த மார்க்கத்தில்? 

ஒரு கட்டளை, ஒரு மனிதருக்குள் இந்த அளவு பாதிப்பை, மாற்றத்தை ஏற்படுத்துகின்றது என்றால் இதற்கு என்ன காரணம்?     

5. நம் பதிவுலகில், இஸ்லாமிய அழைப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் எண்ணற்ற தளங்கள் உண்டு (இந்த தளங்களை நடத்துபவர்களில் குறிப்பிடத்தக்க தொகையினர் இளைஞர்கள் [17-18 வயது டீனேஜர்கள் கூட உண்டு]). இஸ்லாத்திற்காக இத்தனை உள்ளங்களா என்று நான் வியந்ததுண்டு. 

அழைப்பு தளங்கள் மட்டுமல்லாது, பொதுவான விஷயங்கள் குறித்து எழுதும் பெரும்பாலான முஸ்லிம் பதிவர்களும் இஸ்லாமிய வரையரைக்குட்பட்டே எழுதுகின்றனர். இஸ்லாம் குறித்த தகவல்களை தங்கள் தளங்களில் பார்வைக்கு வைத்தே இருக்கின்றனர். இவை மட்டுமல்லாமல், அவ்வப்போது இஸ்லாம் குறித்த கட்டுரைகளையும் பதிவு செய்தே வருகின்றனர்.

ஆக, பதிவுலகை பொருத்தவரை, பெரும்பாலான முஸ்லிம் பதிவர்கள் மார்க்கத்திற்கு உட்பட்டே செயலாற்றுகின்றனர். 

ஒரு விஷயம் குறித்து எழுதும் போது, இது இஸ்லாமிற்கு உட்பட்டு தான் இருக்கின்றதா என்று ஆராய்ந்து செயல்படுமளவு எப்படி ஒரு மார்க்கம் ஒருவருடைய அன்றாட வாழ்வில் அதிகாரம் செலுத்துகின்றது?  

6. பெண்களை தவறாக நடத்தும் மார்க்கம் இஸ்லாம் என்ற விமர்சனம் தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றது. ஆனால், இஸ்லாமை நன்கு ஆராய்ந்து, அதனை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்போரில் பெரும்பாலானவர்கள் பெண்களே. இது ஏன்? 

7. சென்ற ஆண்டு, கவனிக்கப்படதக்க ஆய்வொன்று அமெரிக்காவில் நடத்தப்பட்டது. அமெரிக்க சராசரியை பொருத்தவரை, ஆண்களை விட பெண்களே இறைபக்தியில் சிறந்து விளங்குகின்றனர். ஆனால், முஸ்லிம்களை பொருத்தவரை, ஆண்கள் பெண்கள் என்று வித்தியாசமில்லாமல் இருபாலரும் இறைபக்தியில் சமமாகவே சிறந்து விளங்குகின்றனர். 

அதுமட்டுமல்லாமல், "உங்கள் அன்றாட வாழ்வில் மார்க்கம் முக்கிய பங்கு வகிக்கின்றதா?" என்ற கேள்விக்கு, எண்பது சதவித (80%) முஸ்லிம் அமெரிக்கர்கள் "ஆம்" என்று பதில் அளித்திருக்கின்றனர். இது அமெரிக்க சராசரியை விட 15% அதிகம். 

தங்கள் தினசரி வாழ்வில் இஸ்லாமிற்கு முக்கிய பங்குள்ளதாக 80% முஸ்லிம் அமெரிக்கர்கள் கூறியிருந்தாலும், இந்த சதவிதம் மற்ற நாடுகளோடு ஒப்பிடும் போது குறைவுதான். உதாரணத்துக்கு, வேறு சில நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், இதே கேள்விக்கு, எகிப்தில் 100% முஸ்லிம்களும், இந்தோனேசியா மற்றும் பங்களாதேஷில் 99% முஸ்லிம்களும், ஜெர்மன் முஸ்லிம்கள் 82% பேரும் "தங்கள் தினசரி வாழ்வில் இஸ்லாம் முக்கிய பங்காற்றுவதாக" தெரிவித்துள்ளனர். (2007ஆம் ஆண்டு பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வில், வேறெதையும் விட இஸ்லாம் தங்கள் வாழ்வில் அதிமுக்கியமானது என்று 86% பிரிட்டிஷ் முஸ்லிம்கள் தெரிவித்திருந்தனர்).

  • எப்படி ஒரு மார்க்கம், ஆண் பெண் வித்தியாசமில்லாமல், ஒருவருடைய அன்றாட வாழ்வில் பின்னி பிணைந்திருக்கின்றது? 
  • இஸ்லாமை தவிர்த்து விட்டு, முஸ்லிம்களின் வாழ்க்கையை பார்க்க முடியாது என்ற நிலை ஏற்பட்டிருக்க என்ன காரணம்?  

8. நிச்சயமாக முஸ்லிம்களுக்கிடையிலும் கருத்து வேறுபாடுகள் உண்டு. இவை மார்க்கத்தை சரியான வழியில் பின்பற்றுவது குறித்த கருத்து வேற்றுமைகள். ஆனால், இஸ்லாத்திற்கெதிராக ஒரு நிகழ்வு நடந்தால் அதை ஒன்று சேர்ந்து சந்திக்கும் இவர்களது செயலாற்றல் அளப்பரியது. 

  • எதற்காக ஒரு மார்க்கத்தின் மீது இந்த அளவு பற்று வைத்திருக்கின்றனர்?
  • ஒரு மார்க்கத்துக்கு எதிரான செயல்பாடுகள் மிகப்பெரிய அளவில் எதிர்ப்புகளை சந்திக்கின்றதென்றால் அதற்கு என்ன காரணம்?     

9. மேலே பார்த்ததையெல்லாம் விட முக்கியமாக, இப்போது பார்க்கப்போகும் கருத்து ஆழ்ந்து சிந்திக்கப்பட வேண்டியது. 

உலகில், ஒரு மார்க்கத்தின் மீது அதிக விமர்சனங்கள் வைக்கப்படுகிறதென்றால் அது இஸ்லாம் மீதாக தான் இருக்க முடியும். உதாரணத்திற்கு, 1800-1950க்கு இடையேயான காலக்கட்டத்தில், சுமார் 60,000 புத்தகங்கள் இஸ்லாத்திற்கெதிராக எழுதப்பட்டிருந்ததாக டைம்ஸ் பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

  • வரலாறு முழுக்க இது போன்ற விமர்சனங்கள் தொடர்ந்து வந்திருக்கும் நிலையில், இவை, இஸ்லாத்திற்கு எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தவில்லையே...ஏன்? 
  • வழக்கம் போல இஸ்லாம் தொடர்ந்து மக்களை கவர்ந்திழுத்து வருகின்றனதே...எப்படி? 

மேலே கூறப்பட்டுள்ள கருத்துக்கள் நிச்சயம் நமக்குள்ளாக பிரதிபலித்து கொள்ளப்படவேண்டியவை. 

முஸ்லிம்கள் இப்படி கட்டுண்டு இருப்பதற்கு "நீங்கள் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கின்றீர்கள்" என்பது போன்ற கருத்துக்கள் பதிலாகாது. 

அதுபோலவே, விஞ்ஞான முன்னேற்றங்களால் இஸ்லாத்தின் வீரியம் குறைந்து விடும் என்று எண்ணுவதும் அறியாமையின் உச்சமாகவே அமையும். 

முஸ்லிமல்லாத சகோதர/சகோதரரிகள் இந்த பதிவின் மையப்பொருள் குறித்து நன்கு சிந்தியுங்கள். "சரி, இவர்களை ஆட்டி வைக்கும் அந்த புத்தகத்தில் அப்படி என்னதான் இருக்கிறதென்று படித்து தான் பார்ப்போமே" என்ற முடிவிற்கு நீங்கள் வந்தால், குர்ஆனை கேட்டு எனக்கு ஒரு மெயில் (aashiq.ahamed.14@gmail.com) அனுப்புங்கள். குர்ஆன் அர்த்தங்களின் தமிழ் மொழிபெயர்ப்பை (மூன்று சகோதரர்களின் வெவ்வேறு தமிழாக்கங்கள்) உங்களுக்கு (soft copy) அனுப்பி வைக்கின்றேன்.

அல்லது, கீழ்காணும் லிங்கிலிருந்து குர்ஆனை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். 
படிப்பவர் புருவத்தை உயர வைக்கும் ஒரு குர்ஆன் வசனத்தோடு உங்களிடமிருந்து விடை பெறுகின்றேன். 

இன்னும், (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு அருளியுள்ள(வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உள்ளவர்களாக இருப்பீர்களானால், உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால், அல்லாஹ்வைத் தவிர உங்கள் உதவியாளர்களை அழைத்துக்கொண்டு இது போன்ற ஒரு அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள் --- குர்ஆன் (2:23).

என்னவொரு அதிகாரத்தோரணை?

இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமீன்.     

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன். 

References:
1. ஏன் இஸ்லாம்? --- ஆமினா அசில்மி. link.
2. UK Muslim community statistics. link. 
3. முஸ்லிம் அமெரிக்கர்கள் - ஓர் ஆய்வு. link.
4. Between 1800-1950, 60,000 books written against Islam: The Times, dated 16th April 1979.

உங்கள் சகோதரன், 
ஆஷிக் அஹமத் அ 






35 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
    அருமையான பதிவு

    // உதாரணத்திற்கு, 1800-1950க்கு இடையேயான காலக்கட்டத்தில், சுமார் 60,000 புத்தகங்கள் இஸ்லாத்திற்கெதிராக எழுதப்பட்டிருந்ததாக டைம்ஸ் பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.//

    இந்த விஷயத்தை இன்று தான் தெரிந்து கொண்டேன்

    //அதுபோலவே, விஞ்ஞான முன்னேற்றங்களால் இஸ்லாத்தின் வீரியம் குறைந்து விடும் என்று எண்ணுவதும் அறியாமையின் உச்சமாகவே அமையும்.//

    உச்சத்திற்கு உச்சமாக அமையும்

    நன்றி சகோ

    ReplyDelete
  2. நல்ல பதிவு.

    ReplyDelete
  3. சகோதரர் ஹைதர் அலி,

    வ அலைக்கும் சலாம்,

    மிகச் சரி. விஞ்ஞான முன்னேற்றங்கள் இஸ்லாத்தை பொய்பிக்காத நிலையில், விஞ்ஞான முன்னேற்றங்களால் இஸ்லாத்தின் வீரியம் குறைந்து விடும் என்று நம்புவது அபத்தம்.

    விஞ்ஞான முன்னேற்றங்களால் ஒரு கொள்கை பாதிக்கப்படும் என்றால், அது நாத்திகம் தான்.

    தங்களின் கருத்துக்கு நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
  4. சகோதரர் மு.இ.ஷாஃபி,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    ----நல்ல பதிவு------

    எல்லாப் புகழும் இறைவனுக்கே...தங்களின் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)

    வாழ்த்துக்கள்.
    நல்ல பதிவு.
    தொட‌ருங்கள்.

    வாஞ்சையுடன் வாஞ்ஜூர்.

    ReplyDelete
  6. அன்புச் சகோ. ஆஷிக்,
    அஸ்ஸலாமு அலைக்கும்.

    இந்தப் பதிவை நீங்கள் எடுத்து வைத்திருக்கும் விதம் (வே ஆஃப் ப்ரஸண்ட்டேஷன்) மிகவும் அருமையாக இருக்கிறது. படிப்போர் பயன்பெறப் பிரார்த்தனைகளும் கூடவே உங்களுக்கு வாழ்த்துகளும்!

    ReplyDelete
  7. அன்பு வாஞ்சூர் அப்பா,

    வ அலைக்கும் சலாம்,

    தங்களின் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி...

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
  8. அன்பிற்குரிய வஹ்ஹாபி அவர்களுக்கு,

    வ அலைக்கும் சலாம்,

    --------
    இந்தப் பதிவை நீங்கள் எடுத்து வைத்திருக்கும் விதம் (வே ஆஃப் ப்ரஸண்ட்டேஷன்) மிகவும் அருமையாக இருக்கிறது.
    ---------

    அல்ஹம்துலில்லாஹ்.

    ------
    படிப்போர் பயன்பெறப் பிரார்த்தனைகளும் கூடவே உங்களுக்கு வாழ்த்துகளும்!
    ------

    ஜசக்கல்லாஹு க்ஹைர்...

    தங்களின் கருத்துகளுக்கு நன்றி...

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
  9. அஸ்ஸலாமு அலைக்கும்!

    சிறந்த பதிவு. குர்ஆனின் மூலம் அறிவியல் வளர்கிறது என்று பலரும் பல முறை நிரூபித்திருக்கிறார்கள். ஆனால் எதிர் தரப்பாருக்கு மனக்கண் திறக்க வேண்டுமே! அவர்களுக்காக பிரார்த்திப்போம்.

    ReplyDelete
  10. சகோதரர் சுவனப்பிரியன்,

    வ அலைக்கும் சலாம்,

    -------
    ஆனால் எதிர் தரப்பாருக்கு மனக்கண் திறக்க வேண்டுமே!
    -------

    திறந்து கொண்டு தானே இருக்கின்றது. அதனால் தானே இஸ்லாத்தில் பலரும் தங்களை ஐக்கியப்படுத்தி வருகின்றனர்.

    நிச்சயமாக தொடர்ந்து பிரார்த்திப்போம், மற்றவர்களுக்கும் இறைவன் நேர்வழி காட்ட வேண்டுமென்று ...

    தங்களுடைய கருத்துக்களுக்கு நன்றி...

    உங்கள் சகோதரன்,
    ஆஹிக் அஹமத் அ

    ReplyDelete
  11. அஸ் ஸலாமு அலைக்கும் வ றஹ்மத்துல்லாஹ் சகோ.ஆஷிக்,

    அருமையான பதிவு. அல்ஹம்துலில்லாஹ். மறைந்த சகோ. அஸ்சில்மி அவர்களின் வாழ்க்கை நம் எல்லோருக்கும் ஒரு பாடம். கோர்ட்டின் வழக்கைப் பற்றி படித்தால் படிக்கும் எவரின் கண்ணிலிருந்தும் அருவி பெருகும். அதே போல், அமெரிக்க வரலாற்றிலேயே ஒரு மார்க்கத்தை ஏற்றதற்காக குழந்தைகளை அந்த தாயின் கஸ்டடியில் தர முடியாது என்று தீர்ப்பு வந்ததும் அவரின் வழக்கில்தான். அல்லாஹ் அவரின் கப்ரில் விசாலத்தையும், வெளிச்சத்தையும், அவனின் கருணையையும் தந்தருள்வானாக. ஆமீன்.

    //மீதாகத் இருக்க //
    இந்த இடத்தில் தவறை சரி செய்யவும்.

    அதே போல், அமெரிக்காவிலேயே பல பேருக்கு தெரியும்படி இஸ்லாத்தை பற்றி படிக்க சிலர் பயப்படுவது உண்டு. டோல் ஃப்ரீ லைனில் ஃபோன் செய்யும்போதும் தங்களின் ஃபோன் நம்பர் தெரிந்து விடுமோ என்று பப்ளிக் ஃபோன் உபயோகிப்பவரும், குர்’ஆனை அனுப்பி வைக்க தம் அட்ரஸ் இல்லாது வேறு அட்ரஸ் தருபவர்களும் அமெரிக்காவில் உண்டு. எனவே soft copy இருக்கும் தளத்தின் முகவரியை இங்கே குறிப்பிட்டு விடுங்கள். தங்களுக்கு பெர்சனலாய் மெயில் எழுதாமல் தங்களுக்கும் ஒரு hard copy காப்பி குர்’ஆன் வேண்டும் என்பவர்களுக்காக ஒர் request form (like comment form) வைத்து விடுங்கள். இது எளிதாக இருக்கும் என்பது என் கருத்து. இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் இதை எளிதாக்குவானாக.

    அல்லாஹ், உங்களின் இந்த அமலை பொருந்திக் கொள்வானாக. ஆமீன்.

    ReplyDelete
  12. Assalamu Aleykum wa rahmatullahi wa barakatuh,
    Dear brother Aashiq Ahamed A,
    Masha'allah an other interesting article....
    Jazakallah kheir for sharing this with us.
    It's true that too many people think that women are maltreated in ISLAM, mostly when a woman is veiled !!!!
    Hope that it will change it, INSHA'ALLAH...

    May ALLAh(swt) reward you for all your good deed...Aamin...

    Keep going on this way...


    Your sister,
    M.Shameena

    ReplyDelete
  13. சகோதரி அன்னு,

    வ அலைக்கும் சலாம்,

    என்னை மிகவும் பாதித்த அறிஞர்களில் ஒருவர் ஆமீனாஹ் அசில்மி அவர்கள். அதனாலேயே இந்த தளத்தை தொடங்கிய போது அவர் பற்றிய கட்டுரையை முதலில் பதித்தேன்.

    தாங்கள் குறிப்பிட்டது போன்று, குர்ஆனை எங்கு தரவிறக்கம் செய்யலாம் என்று அலசி அந்த லிங்கை பதிக்கின்றேன்.

    hardcopy அனுப்ப தற்போதைய நிலையில் முடியாது. நாங்கள் (நான் மற்றும் ஷேக் தாவுத்) ஏற்கனவே அனுப்பி கொண்டு தான் இருந்தோம். தனிப்பட்ட முறையில் செயல்படுவதால் hardcopy கிடைப்பதில் சிரமம் இருக்கின்றது. இன்ஷா அல்லாஹ் இது எளிமையாகும் போது தளத்தில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும்.

    தங்களுடைய கருத்துகளுக்கு நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
  14. Dear Shameena,

    Wa Alaikum salaam,

    Muslim women are clear in what they are doing like you. So we need not worry about this...

    thanks for your comments,

    take care,

    Your brother,
    Aashiq Ahamed

    ReplyDelete
  15. islam ask you to kill the people by the way of terrorism

    ReplyDelete
  16. Dear Anony,

    May peace and blessings of Almighty be upon u..

    -----
    islam ask you to kill the people by the way of terrorism
    -----

    Is it so?...If Islam says like that, there are 1.6 billion muslims are there in this earth. To prove each one of them is a good muslim, they have to go and kill others. Is this what happening?

    God has given us intelligence. Pls use it to find truth.

    May The Almighty bring happiness and peace in your family....

    Your brother,
    Aashiq Ahamed A

    ReplyDelete
  17. yen ippadi pidhatrugireergal, dhayavu seidhu munne vaarungal. Original islamiyargal agiya arabu naadugalileye yarum islamai kadai bidipadhil arvam illamal irukinraargal. inge nadhu sagodharargal dhan adharku peridhum mukkiyathuvan alithu namakulley pirivinai adhigapaduthuginranar. Budhar kooradha vishayama, bahavathgeedhai kooradha vishayama!!!!!! aanal ivaigalil ungalukku sudhandhiram undu enave thappithu kolgireer adhil kattayam undu aagave adharkul moozhgadikireergal.

    ReplyDelete
  18. Mr.Aashiq ahmedh, where are you from?

    ReplyDelete
  19. kadavuley kodumayada idhellam, suya sindhanai..... suya mariyadhai...... anavaraukkum ore sudhandhiram enru yosiyungal...... kadavul enru namakkul pirivainai erpattu irukaadhu inru pirindhu mallu katti kondu madiyil ganamum irundhu irukaadhu.

    ReplyDelete
  20. சகோதரர் அனானி,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    தங்களுடைய கருத்துக்கள் எனக்கு புரியவில்லை. மன்னிக்கவும். ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ பின்னூட்டம் இடுமாறு கேட்டு கொள்கின்றேன். தங்லிஷ் மிகவும் கடினமாக இருக்கின்றது.

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
  21. சகோதரர் அனானி,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    ----
    Mr.Aashiq ahmedh, where are you from?
    ----

    பாண்டிச்சேரி

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
  22. Sagodharar Aashiq Ahmed,idhu tanglish alla, en kaniporiyil tamizhakam vara villai mannikavum. Yen neengal islamuthukku maarineergal, yar ungalin thalai murayil mudhalil maatrapattar.

    ReplyDelete
  23. Dear brother Anonymous who said :"islam ask you to kill the people by the way of terrorism".
    here you see that ISLAm is against violence(proff from the AL-QURAAN) :
    {2:84} :
    And when We made a covenant with you: You shall not shed your blood and you shall not turn your people out of your cities; then you gave a promise while you witnessed.

    {2:85} :Yet you it is who slay your people and turn a party from among you out of their homes, backing each other up against them unlawfully and exceeding the limits; and if they should come to you, as captives you would ransom them-- while their very turning out was unlawful for you. Do you then believe in a part of the Book and disbelieve in the other? What then is the re ward of such among you as do this but disgrace in the life of this world, and on the day of resurrection they shall be sent back to the most grievous chastisement, and Allah is not at all heedless of what you do.

    {4:29} :O you who believe! do not devour your property among yourselves falsely, except that it be trading by your mutual consent; and do not kill your people; surely Allah is Merciful to you.

    {4:92} : And it does not behoove a believer to kill a believer except by mistake, and whoever kills a believer by mistake, he should free a believing slave, and blood-money should be paid to his people unless they remit it as alms; but if he be from a tribe hostile to you and he is a believer, the freeing of a believing slave (suffices), and if he is from a tribe between whom and you there is a convenant, the blood-money should be paid to his people along with the freeing of a believing slave; but he who cannot find (a slave) should fast for two months successively: a penance from Allah, and Allah is Knowing, Wise.

    {4:93} : And whoever kills a believer intentionally, his punishment is hell; he shall abide in it, and Allah will send His wrath on him and curse him and prepare for him a painful chastisement.

    {5:27} : And relate to them the story of the two sons of Adam with truth when they both offered an offering, but it was accepted from one of them and was not accepted from the other. He said: I will most certainly slay you. (The other) said: Allah only accepts from those who guard (against evil).

    {5:28} : If you will stretch forth your hand towards me to slay me, I am not one to stretch forth my hand towards you to slay you surely I fear Allah, the Lord of the worlds.


    {5:29} : Surely I wish that you should bear the sin committed against me and your own sin, and so you would be of the inmates of the fire, and this is the recompense of the unjust.

    {5:30} : Then his mind facilitated to him the slaying of his brother so he slew him; then he became one of the losers.

    You can also read {5:32}, {6:137}, {6:140}, {6:151}, {16:58}, {16:59}, {17:33}, {25:68} and {81:8}.
    Hope that you understand it !!!

    Your sister,
    M.Shameena

    ReplyDelete
  24. அஸ்ஸலாமு அலைக்கும்!

    அருமையான பதிவு ....

    ReplyDelete
  25. சகோதரர் முஹம்மத்,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    தங்களின் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி...

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
  26. அஸ்ஸலாமு அலைக்கும்

    இப்படிபட்ட தியாகிகளை கொண்ட இஸ்லாத்தை வல்ல ஏகன் நமக்கு தந்துள்ளான் - அல்ஹம்துலில்லாஹ்.

    இதில் இருந்து கொண்டு தான் நாம் ஒரு தேர்தலை சந்திக்கக்கூட ஒற்றுமையற்ற நிலை

    இந்நிலை என்று போகும்

    இதை போக்க நாம் என்ன செய்ய வேண்டும் ... வல்ல ஏகனே நமக்கு வழி காட்டட்டும் - ஆமின்.

    ReplyDelete
  27. சகோதரர் ஜமால்,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    -------
    இப்படிபட்ட தியாகிகளை கொண்ட இஸ்லாத்தை வல்ல ஏகன் நமக்கு தந்துள்ளான் - அல்ஹம்துலில்லாஹ்.
    ----------

    சுபானல்லாஹ்.

    --------
    இதில் இருந்து கொண்டு தான் நாம் ஒரு தேர்தலை சந்திக்கக்கூட ஒற்றுமையற்ற நிலை

    இந்நிலை என்று போகும்

    இதை போக்க நாம் என்ன செய்ய வேண்டும்
    ----------

    குரான், ஹதீஸ்கள் அடிப்படையில் ஒன்று சேர வேண்டும். தர்காக்கள் போன்றவற்றுக்கு வெளிப்படையாக/மறைமுகமாக ஆதரவளிக்காமல் இந்த பித்அத்களை துடைத்தெறிய முன்வரவேண்டும். பின்னர் தவ்ஹீத் இயக்கங்கள் ஒன்றாக பேசி தங்களுக்குள்ளான வேறுபாட்டை களைய முன்வரவேண்டும்.

    தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோதரர்

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
  28. சகோ.ஆஷிக் அஹமத்
    அஸ்ஸலாமு அலைக்கும்.
    ஒவ்வொரு பதிவும் அருமை. அதிலும்
    குர்ஆன், ஹதீஸ் இற்கு எதிராக வளையாமலும்,
    இஸ்லாத்தின் பெருமைகளை பறை சாற்றும் விதமான
    உங்கள் பதிவுப்போக்குகளும், google இல் தட்டினால்
    முதல் வரிசையில் வரத்துடிக்கும் பதிவுலகில் ஒரு
    தனித்துவமே!
    sheloo,
    இலங்கை.

    ReplyDelete
  29. சகோதரர் ஷேலூ,

    வ அலைக்கும் சலாம்,

    எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே உரித்தாவதாக..தங்களின் வருகைக்கும், ஊக்கத்திற்கும் மிக்க நன்றி.

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
  30. as salamu alaykum Bro. Aashiq,

    You can use this form for hard copy Qur'an and other literature. The orgn is in USA. This will work for only US and CA residents. Atleast for them they can use it. For other countries, if I come to know I will share with you, insha Allag.

    http://www.gainpeace.com/index.php?option=com_form&Itemid=108


    p.s: I think you can ask Discover Islam in B'lore for India. Not sure, I will also verify, you can do in your side also, insha Allah.

    wa Salam,

    ReplyDelete
  31. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ ஆஷிக்.

    உங்களின் பதிவுகள் மூலம் பல பொக்கிஷங்கள் வெளி வந்துள்ளது மிக்க நன்றி.

    நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு ஆதாரமும் மனதிர்க்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது.

    உங்களின் பதிவுகள் பலரது அறியாமை உணர்வுகளை தகர்த்தெறிகின்றது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  32. சகோதரர் அந்நியன்,

    வ அலைக்கும் சலாம்,

    தங்களின் வருகைக்கும், ஊக்கத்திற்கும் நன்றி. எல்லாப் புகழும் இறைவனிற்கே...

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
  33. Sister annu,

    Wa alaikum salaam,

    done. jazakkallaahu khair

    your brother,
    aashiq ahamed a

    ReplyDelete
  34. Wa alaikum salaam,
    my name is rajak.
    enaku drinking,smoking,palakkam ullathu,
    idhu sariya? (or)thavara?
    quranil irkiradha?
    {oru hindu ponnu thavaru endru quranil ulladhu endru ennidam vathadiyadhu.
    idhu thavara?}
    keelulla numberku call seithu sollunga,please,
    by...
    rajak.
    9750736084

    ReplyDelete
  35. Wa alaikum salaam,
    my name is dhivyasivam,
    enaku rajak endru muslim madhathill oru nanbar irukirar.avaruku drinking&smoking.pazhakam irukiradhu,
    avaruku siru vayadhu thaan naanum niraiya sdvice pannitaen kaetka marukiraar,
    enaku oru udhaviyaaga avaruku neengal eduthuraikavum.
    avarin mobile number,9750736084.
    neengal enaku udhvi seiveergal endru nambugiraen.
    by......
    dhivyasivam

    ReplyDelete