Tuesday, November 8, 2011

புத்தகங்கள் தலையணைகளாக, சோதனைகள் வாழ்க்கையாக...



அஸ்ஸலாமு அலைக்கும், 

நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

"இறைவன் ஏன் என்னை இவ்வளவு சோதிக்கின்றானோ தெரியவில்லை" - இம்மாதிரியான எண்ணம் நம்மில் பலருக்குள்ளும் ஒரு சந்தர்ப்பத்தில் எழுந்திருக்கலாம். அப்படியான சூழ்நிலையில் நம்மை உற்சாகப்படுத்தவும், சீர்தூக்கி பார்க்கவுமே இந்த பதிவு.

சகோதரி பிர்தவ்ஸ் - இவருடைய வாழ்க்கையை முதன் முதலாக படித்தபோது வியந்து போய் பார்த்துக்கொண்டிருந்தேன். கண்டிப்பான பிராமண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, இஸ்லாத்தை தழுவியதால் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு, சரியான இருப்பிடம் உணவு இல்லாமல் தவித்து என்று இவருக்கும், இவருடைய அண்ணனுக்கும் இறைவன் கொடுத்த சோதனைகள் ஏராளம்.

எனக்கு முதலில் அறிமுகமானது சகோதரி பிர்தவ்ஸ் அவர்களின் அண்ணனான சகோதரர் முஹம்மது உமர் தான்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் உறுப்பினராக இருந்தவர் உமர். வேதங்களில் நல்ல புலமை பெற்றவர். மைசூரில் இருந்து இவரது குடும்பம் பெங்களுருவுக்கு இடம் பெயர்ந்தபோது, கூடுதல் வருமானத்திற்காக சையத் கலீம் என்பவரது துணிக்கடையில் முதலீடு செய்தனர் இவரது குடும்பத்தினர். வரும் லாபத்தில், முதலீட்டிற்கு ஏற்ற பங்கை உமரின் குடும்பத்தினருக்கு கொடுத்துவிட வேண்டுமென்பது ஒப்பந்தம்.

சையத் கலீம் அவர்களின் நேர்மையான வியாபாரத்தால் கவரப்பட்ட உமரின் பெற்றோர், தாங்களும் அந்த கடையில் முதலீடு செய்திருப்பதால், சையத் கலீமுடன் சேர்ந்து பணியாற்றுமாறு உமரை கேட்டுக்கொண்டனர். ஆனால் முஸ்லிம்களுடன் பணியாற்ற மறுத்து விட்டார் உமர். நாளடைவில் பெற்றோர்களின் வற்புறுத்தல் அதிகமாக வேண்டா வெறுப்பாக அந்த கடையில் பணியாற்ற ஆரம்பித்தார் (அப்போது டிப்ளோமா படித்துக்கொண்டிருந்தால் பகுதி நேரமாகவே பணியாற்றினார் உமர்).

சையத் கலீம் அவர்களின் துணிக்கடை வாயிலாக உமருக்குள் மாற்றத்தை ஏற்படுத்தினான் இறைவன். அங்கே அவருக்கு குர்ஆன் கொடுக்கப்பட, மாற்றங்கள் மிக வேகமாக நடந்தேற ஆரம்பித்தன.

முஸ்லிம்கள் மீதான வெறுப்பு முற்றிலும் மறைந்து, இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார் உமர். தனக்குள் மாற்றத்தை ஏற்படுத்திய மார்க்கத்தை தன் குடும்பத்தினருக்கும் எடுத்துச் சொல்ல ஆரம்பித்தார். உமரின் இறைப்பணி வெற்றியளிக்க ஆரம்பிக்க, அவரின் சகோதரி பிர்தவ்ஸ்சும் இஸ்லாத்தை பின்பற்றுவதென முடிவெடுத்தார்.

இறைவனின் கடுமையான சோதனைகள் ஆரம்பித்தன.

எவ்வாறான சோதனைகள் அவை? இறைவனின் சோதனைகளை எப்படி கையாண்டனர் உமரும், சகோதரி பிர்தவ்சும்?

சகோதரியின் வார்த்தைகளில் இருந்து....

"கண்டிப்பான பிராமண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் நாங்கள். நான் (ஆஷா), என் சகோதரி வீணா மற்றும் எங்கள் அண்ணன் நாகராஜ் என்று நாங்கள் மூன்று பேர். கடைசிப் பிள்ளை என்பதால் என் மீது செல்லம் அதிகம். 

என் அண்ணன் ஆன்மீக விசயத்தில் மிகவும் தீவிரமானவர். தினமும் காலை மாலையென பூஜைகளை மேற்கொள்வார். முரட்டுத்தனமும் அதிகம். சமயங்களில் அவரிடம் அடி கூட வாங்கியிருக்கின்றோம். 

சையத் கலீம் என்பவரின் துணிக்கடைக்கு வேலைக்கு போக ஆரம்பித்ததில் இருந்து பூஜைகள் செய்வதை நிறுத்திவிட்டார் என் சகோதரர். இதனால் என் அம்மாவிற்கும், அவருக்குமிடையே பெரிய அளவிலான வாக்குவாதங்கள் நடைபெறும். அவருடைய நடவடிக்கைகளும் மாற ஆரம்பித்திருந்தன. என் சகோதரர் இப்போது அதிக பொறுப்பானவராக மாறியிருந்தார். மென்மையாக பேசவும் செய்தார். 

நான் அப்போது பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அவருடைய இந்த திடீர் மாற்றம் எனக்கு அதிர்ச்சியை தந்தது.    

தினமும் என் அம்மாவிடம் விவாதிப்பார். ஈஸ்வரனுக்கு எதற்கு மனைவி?, சர்வ வல்லமை படைத்த ஈஸ்வரனுக்கு எதற்கு குடும்பம், மகன்கள்?, இறைவன் அவ்வளவு வலிமையானவன் என்றால், விநாயகரின் தலையை ஏன் ஈஸ்வரனால் திரும்ப கொண்டுவர முடியவில்லை?...

இப்படியான அவருடைய கேள்விகளால் நான் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானேன். 

என் அண்ணனது நடவடிக்கைகளை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன். தினமும், சில நிமிடங்கள் தன் அறைக்குள் நுழைந்து பூட்டிக்கொள்வார். உள்ளே என்ன செய்துக்கொண்டிருக்கின்றார் என்பதை அறிய விரும்பினேன். ஒருநாள், அவர் வெளியே சென்றிருந்த நேரம், அவரது அறைக்குள் சென்று, எதையாவது மறைத்து வைத்திருக்கின்றாரா என்று தேட ஆரம்பித்தேன். அப்போது கையில் அகப்பட்டது ஒரு டைரி. அதனைத் திறந்தேன். உள்ளே இருந்த எந்த வார்த்தையும் எனக்கு புரியவில்லை, ஒரே ஒரு வார்த்தையை தவிர. அது நமாஸ் (தொழுகை) என்ற வார்த்தை. 

அன்று மாலை இது குறித்து என் சகோதரரிடம் கேட்க நினைத்தேன். அதற்கேற்ப, என் அம்மாவும் சகோதரியும் பாட்டி வீட்டிற்கு சென்றிருந்தனர். அந்த டைரி குறித்தும், அவருடைய இந்த மாற்றத்திற்கான காரணம் குறித்தும் கேட்டேன்.

என் சகோதரர் கூற ஆரம்பித்தார். ஆதாம், ஏவாள், இப்லீஸ் என்று விளக்க ஆரம்பித்தார். இந்த சிலை வணக்கங்கள் தவறென்றார். இவை மனிதனை நேரான பாதையிலிருந்து விலகிச் செல்ல வைக்கின்றன என்று கூறினார். 

இப்போது நான் ஆழ்ந்து சிந்திக்க ஆரம்பித்தேன். எப்படி மனிதனால் இறைவனின் உருவத்தை கற்பனை செய்யமுடியும்? வெற்று கண்களால் நம்மால் ஒரு குறிப்பிடத்தக்க தூரம் வரை வானத்தை பார்க்க முடியும். அதற்கு மேலாக பார்க்க நம்மால் முடியாது. நம் கண்களுக்கு அவ்வளவுதான் வரையறை. அது போல, நம் மனதிற்கும் ஒரு குறிப்பிடத்தக்க எல்லை இருக்க வேண்டும். நம்மால் அந்த வரையறையை வைத்துக்கொண்டு இறைவனின் உருவத்தை கற்பனை செய்ய முடியாது. 

என்னுடைய ஆய்வுக்கு பிறகு, இறைவனுக்கான இந்த உருவங்கள், மனிதர்களின் கற்பனையால் உருவானவை என்ற முடிவுக்கு வந்தேன். 

ஒருநாள், என் சகோதரர் வேலை செய்துக்கொண்டிருந்த சையத் கலீம் அவர்களின் கடைக்கு சென்றேன். அங்கே கலீம் அவர்களின் சகோதரர் குர்ஆன் ஓதிக்கொண்டிருந்தார். அது அப்துல்லாஹ் யூசுப் அலியால் மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கிலப் பதிப்பு. அல்-கஹ்ப்f என்ற அத்தியாயத்தில் இருந்து நான் வாசித்த வசனம் என்னை யோசிக்க வைத்தது. 'கடல் நீர் முழுவதும் மையாக ஆனாலும், இறைவனின் வார்த்தைகளை எழுதி முடிக்க முடியாது' என்று கூறியது அந்த வசனம்.

இறைவன் அவ்வளவு போற்றுதலுக்கு உரியவனா? இந்த வசனத்தை பிரதிபலிக்க ஆரம்பித்தேன். மனிதனின் படைப்பு, உயிரினங்கள், இந்த பூமி என்று இவை அனைத்து குறித்தும் பிரதிபலிக்க ஆரம்பித்தேன். ஆம், அந்த வசனம் கூறுவது உண்மைதான். எனக்குள் தெளிவு பிறக்க ஆரம்பித்தது. 

இஸ்லாத்தை பின்வற்றுவதென முடிவெடுத்தேன். இதனை என் குடும்பத்தில் யாரிடமும் கூறவில்லை. இந்த இடைநேரத்தில், இஸ்லாம் குறித்த சரியான புரிதலை என் குடும்பத்தாரிடம் கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருந்தார் என் சகோதரர். அவர்களிடம் இஸ்லாம் குறித்து பல தலைப்புகளில் பேசுவார், விளக்க முயற்சிப்பார். அவருடைய உரையாடல்களை உற்று கவனிப்பேன். எனக்குள் இருந்த பல்வேறு கேள்விகளுக்கும் பதில் கிடைக்க ஆரம்பித்தது. 

டிப்ளமா இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த போது, இனி என்னுடைய வாழ்வை ஒரு முஸ்லிமாக தொடர வேண்டுமென்று முடிவெடுத்தேன். வீட்டில் நடந்த பூஜைகளை புறக்கணிக்க ஆரம்பித்தேன். 

'ஒரு பெண்ணாக எப்படி வீட்டிலிருந்து வெளியேறுவது?'

'ஒரு பெண் என்பதால், உண்மையை ஏற்றுக்கொள்வதிலிருந்தும், பின்பற்றுவதிலிருந்தும் பின்வாங்க வேண்டுமா?..........கூடாது' - இதுப்போன்ற எண்ணங்கள் தோன்ற ஆரம்பித்தன.

இந்த கால கட்டத்தில் என்னுடைய சகோதரியும் இஸ்லாம் குறித்து தெளிவுபெற ஆரம்பித்தார். ஒரு விநாயகர் சதுர்த்தியின் போது, நாங்கள் மூவரும் வீட்டில் நடக்கும் சம்பிரதாயங்களை எதிர்க்க ஆரம்பித்தோம். எங்களுடைய நடவடிக்கைகளை என் தாய் கண்டித்தார். கடுமையான வாக்குவாதங்களுக்கு பிறகு எங்களை வீட்டை விட்டு வெளியேறச் சொல்லிவிட்டார்.

நாங்கள் வெளியில் தங்குவதற்கான ஏற்பாடுகளை கவனிக்க சென்றார் எங்கள் சகோதரர். சையத் கலீம் அவர்களின் கடையில் வேலை செய்த குர்ஷித் பாய் என்பவர் நாங்கள் தங்கிக்கொள்ள அவருடைய ஸ்டோர் ரூமை சில நாட்களுக்கு கொடுத்துதவ முன்வந்தார். என்னுடைய சகோதரி கடைசி நேரத்தில் எங்களுடன் வருவதில் இருந்து பின்வாங்கினார். ஆனால் நான் உறுதியாக இருந்தேன், அல்ஹம்துலில்லாஹ். என்னை சமாதானப்படுத்த முயற்சி செய்தார் அம்மா. தங்க நகைகளும், சிறந்த வரன் பார்த்து திருமணம் செய்து தருவதாகவும் கூறினார். எனக்கு இவையெல்லாம் தேவையில்லை என்று உறுதிப்பட தெரிவித்துவிட்டேன்.

அன்று மாலை, நானும் என் சகோதரரும் வீட்டிலிருந்து வெளியேறினோம். என் அண்ணனிடம் அப்போது இருந்ததோ நூறு ரூபாய் மட்டுமே. அல்ஹம்துலில்லாஹ், ஆனாலும் எங்களுக்கு அப்படியொரு துணிச்சலை இறைவன் கொடுத்திருந்தான்.

வீட்டிலிருந்து வெளியேறிய போது நான் இறுதியாண்டு டிப்ளோமா படித்துக்கொண்டிருந்தேன். கல்லூரியில் என்னை சந்தித்த என் அம்மா, பாட்டியை சந்திக்க சொல்லி கேட்டுக்கொண்டார். பாட்டி வீட்டிற்கு சென்றேன்.

'நீ முஸ்லிமாகி விட்டாயல்லவா?', என் பாட்டி கேட்டார்.

'ஆம்', பதிலளித்தேன்.

'நீ கிருத்துவராகவோ அல்லது வேறு எந்த மதத்தையும் வேண்டுமென்றாலும் ஏற்றுக்கொள். ஆனால் முஸ்லிமாக வேண்டாம். அவர்கள் மோசமாவர்கள்'.

'உங்களுக்கு இஸ்லாம் பற்றி தெரியவில்லை, அதனால் தான் இப்படி பேசுகின்றீர்கள்'.

என்னை ஒரு அறையில் அடைத்து வைக்க முயற்சித்தார்கள். 'என்னால் உங்களுடன் வாழ முடியாது' என்று கூறிவிட்டு அவர்களிடம் இருந்து தப்பிவந்துவிட்டேன். அன்றைய தினத்தில் எனக்கு அப்படியொரு வலிமையையும், துணிச்சலையும் கொடுத்திருந்தான் இறைவன், அல்ஹம்துலில்லாஹ்.

காவல்துறையிலும், கல்லூரி முதல்வரிடத்திலும் புகார் கொடுப்பேன் என்று மிரட்டினார் என் அம்மா. ஆனால் நாங்கள் எதற்கும் மசியவில்லை. எங்கள் நிலைப்பாட்டில் உறுதியுடன் இருந்தோம்.

நாங்கள் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகு, வேறொரு நிறுவனத்தில் ஷிப்ட் முறையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த என் சகோதரர் அந்த வேலையை கைவிட்டார். வெள்ளிக்கிழமை தொழுகைக்கு (கூட) அந்த வேளையில் போக முடியவில்லை என்பதே காரணம்.

ஒரு சிறிய இடத்தில் வாழ ஆரம்பித்தோம்.

சிறிய ஸ்டவ், ஒரு விரிப்பு (பாய்), சில சமையல் பாத்திரங்கள் - இவைதான் எங்களிடம் அப்போது இருந்த பொருட்கள். எங்களுடைய துணிமணிகளை தரையில் வைத்துக்கொள்வோம். புத்தகங்களை தலையணைகளாக பயன்படுத்திக்கொள்வோம். என்னுடைய துப்பட்டா தான் தரைவிரிப்பாக இருந்தது. சாப்பிடும் தட்டுக்களை கண்ணாடிகளாக உபயோகப்படுத்தி தலை வாரிய அந்த நாட்கள் இன்றளவும் எனக்கு நினைவிருக்கின்றது.

அல்ஹம்துலில்லாஹ், அவை என் வாழ்வின் மிக அழகான நாட்கள். இவ்வளவு சோதனைகளை அளித்து எங்களை கெளரவப்படுத்தியதற்காக இறைவனுக்கு என்றென்றும் நன்றி சொல்லிக்கொண்டிருக்கின்றோம்.

மதிய உணவோடு என்னை சந்திக்க கல்லூரிக்கு வருவார் என் அம்மா. வீட்டிற்கு திரும்ப வேண்டுமென்று சொல்லுவார். நான் மிகுந்த பசியுடன் இருந்தாலும், அந்த உணவை வாங்க மறுப்பேன்.

சுமார் 8-12 மாதங்கள் வேலையில்லாமல் இருந்தார் என் சகோதரர். சில நேரங்களில், வாழைப்பழங்கள் மற்றும் சில ரொட்டி துண்டுகளுடன் எங்கள் நாட்களை கழித்திருக்கின்றோம். விழித்திருந்தால் பசிக்கும் என்பதால், சில நாட்களில், கல்லூரியில் இருந்து திரும்பியவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து விட்டு உறங்க சென்று விடுவேன்.

இன்று என்னுடைய வாழ்வை திரும்பி பார்க்கின்றேன். இறைவனின் மகத்தான கிருபை மட்டும் இல்லையென்றால் எங்களால் இத்தனை சோதனைகளை கடந்து வந்திருக்க முடியாது.

அல்ஹம்துலில்லாஹ், தற்போது தொலைத்தொடர்பு (டெலிகாம்) துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்கின்றேன். என் சகோதரர், ஒரு பெரிய நிறுவனத்தில் மென்பொருள் பொறியியலாளராக பணிபுரிகின்றார்.

என் முஸ்லிம் நண்பர்களை கிண்டல் செய்த பள்ளி நாட்களை எண்ணிப்பார்க்கின்றேன். இன்றோ, அவன் முன்னால் என்னை நிற்க வைத்திருக்கின்றான் இறைவன். தினமும் அவனை ஐந்து முறை தொழ வைத்திருக்கின்றான்.

பல்வேறு சோதனைகளை கொண்டு எங்களுக்கு பயிற்சியளித்து தூய்மைபடுத்தியிருக்கின்றான் இறைவன். இதனை கண்களில் கண்ணீர் ததும்ப நினைத்துப் பார்க்கின்றேன்.

'இறைவன் யாரை அதிகம் நேசிக்கின்றானோ அவர்களுக்கு அதிக சோதனைகளை கொடுக்கின்றான்' என்று நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இந்த நபிமொழியை நினைவு கூறும்போதெல்லாம் இறைவன் எங்களுக்கு இன்னும் சோதனைகளை கொடுக்க வேண்டுமென்று எண்ணுகின்றோம். அதனை மகிழ்ச்சியுடன் எதிர்க்கொள்ள தயாராக இருக்கின்றோம்"

சுப்ஹானல்லாஹ்....

இவர்களின் அனுபவத்தை கேட்கும் போதே புது உற்சாகம் பிறக்கின்றது. இவர்களுக்கு மிகச் சிறந்த நற்கூலியை இன்மையிலும் மறுமையிலும் இறைவன் வழங்குவானாக...ஆமீன்.

சகோதரி பிர்தவ்ஸ் அவர்களுக்கு ஒரு அழகான, நிறைவான வாழ்வை இறைவன் கொடுத்திருக்கின்றான். ஒரு பெண், பின்பு ஆண் இரட்டையர்கள் என்று மூன்று குழந்தைகளை இறைவன் சகோதரிக்கு அருளியிருக்கின்றான். அல்ஹம்துலில்லாஹ்.

இறைவனின் சோதனைகள் நமக்கான பயிற்சிகள், நம்மை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள் என்றெண்ணி பொறுமை காப்போம். இன்ஷா அல்லாஹ்.

இறைவா, எங்களுக்கு எவ்வளவு சோதனைகளை கொடுத்தாலும் அதனை தாங்கிக்கொள்ளும் பொறுமையையும், வலிமையையும் தந்தருள்வாயாக...ஆமீன்.

அல்லாஹ் எந்தவொரு ஆத்மாவிற்கும் அது தாங்கிக்கொள்ள முடியாத அளவு சோதனையை கொடுப்பதில்லை - குர்ஆன் 2:286. 

இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக....ஆமீன்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

Please Note:
1. இந்த பதிவில் உள்ள மொழிபெயர்ப்பு முழுமையானதல்ல. முழுமையாக படிக்க கீழே உள்ள சுட்டிகளை பயன்படுத்தவும்.
2. சகோதரர் உமர் அவர்களின் அனுபவத்தை காண கீழே உள்ள youtube சுட்டியை பயன்படுத்தவும்.

My Sincere thanks to:
1. சகோதரி அன்னு.

References:
1. Firdouse Rao - My Journey to Islam: whyislam.org. link
2. Birth of Twins - Mumlovesme.com. link
3. Br.Omar rao - youtube. link
4. Muhammed Umar Rao - Islamreligion.com. link

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ 






45 comments:

  1. அல்லாஹு அக்பர்

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ..
    //அல்லாஹ் எந்தவொரு ஆத்மாவிற்கும் அது தாங்கிக்கொள்ள முடியாத அளவு சோதனையை கொடுப்பதில்லை - குர்ஆன் 2:286.//
    சத்தியமான வார்த்தைகள்...அல்லாஹ் அவர்களுக்கு மென்மேலும் கிருபை செய்ய போதுமானவன்...

    அன்புடன்
    ரஜின்

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    //அல்ஹம்துலில்லாஹ், அவை என் வாழ்வின் மிக அழகான நாட்கள். இவ்வளவு சோதனைகளை அளித்து எங்களை கெளரவப்படுத்தியதற்காக இறைவனுக்கு என்றென்றும் நன்றி சொல்லிக்கொண்டிருக்கின்றோம்//

    //இறைவனின் மகத்தான கிருபை மட்டும் இல்லையென்றால் எங்களால் இத்தனை சோதனைகளை கடந்து வந்திருக்க முடியாது//

    சுப்ஹான‌ல்லாஹ்...! இறைவனின் சோதனைகளைத் தாங்கிக் கொண்டு, அவற்றை அவர்கள் கடந்துவந்த பாதை, வாழ்வில் சோதிக்கப்படும் மற்றவர்களுக்கு நல்லதொரு பாடம். அவர்களுக்கு இறைவன் மென்மேலும் நல்வாழ்வையளித்து, மறுமையிலும் மகத்தான நற்கூலி வழங்குவானாக!

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...


    ” நான் மிகுந்த பசியுடன் இருந்தாலும், அந்த உணவை வாங்க மறுப்பேன்.”
    பசி வந்தால் பத்தும் பறந்துபோகும் என்றல்லவா படித்தோம். பசிவந்தும் சகோதரியின் மாறாத உள்ளம்- இறைவா! உனது கிருபைகளுக்கு எல்லையே இல்லை!

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...!
    மாஷா அல்லாஹ்!
    இறைவன் இவர்களுக்கு என்றென்றும் பரகத் செய்வானாக!(ஆமின்)

    ReplyDelete
  6. சகோதரர் Mohamed Faaique,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    வருகைக்கு நன்றி...

    ReplyDelete
  7. சகோதரர் ரஜின்,

    வ அலைக்கும் சலாம்,

    ///அல்லாஹ் அவர்களுக்கு மென்மேலும் கிருபை செய்ய போதுமானவன்...///

    ஆம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரர்..

    ReplyDelete
  8. (zalha)assalaamu alaikum varah............
    //இறைவன் யாரை அதிகம் நேசிக்கின்றானோ அவர்களுக்கு அதிக சோதனைகளை கொடுக்கின்றான்' என்று நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இந்த நபிமொழியை நினைவு கூறும்போதெல்லாம் இறைவன் எங்களுக்கு இன்னும் சோதனைகளை கொடுக்க வேண்டுமென்று எண்ணுகின்றோம். //

    //இறைவா, எங்களுக்கு எவ்வளவு சோதனைகளை கொடுத்தாலும் அதனை தாங்கிக்கொள்ளும் பொறுமையையும், வலிமையையும் தந்தருள்வாயாக...ஆமீன்.

    அல்லாஹ் எந்தவொரு ஆத்மாவிற்கும் அது தாங்கிக்கொள்ள முடியாத அளவு சோதனையை கொடுப்பதில்லை - குர்ஆன் 2:286.


    இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக....ஆமீன்.//
    jazaakallaahu khair to share such a heart touched life's story

    ReplyDelete
  9. சகோதரரி அஸ்மா,

    வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

    //அவர்களுக்கு இறைவன் மென்மேலும் நல்வாழ்வையளித்து, மறுமையிலும் மகத்தான நற்கூலி வழங்குவானாக!///

    ஆமீன்...

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிஸ்டர்...

    ReplyDelete
  10. சகோதரர் ஜபருல்லாஹ்,

    வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

    ReplyDelete
  11. சகோதரர் தமீம் அன்சாரி,

    வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

    ///இறைவன் இவர்களுக்கு என்றென்றும் பரகத் செய்வானாக!///

    ஆமீன்...

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரர்...

    ReplyDelete
  12. மாஷா அல்லாஹ்

    அல்லாஹ் தான் நாடியவர்களுக்கே நேர்வழி காட்டுகிறான்

    ReplyDelete
  13. ஸலாம் சகோ.....

    எங்களுக்கென்ன சோதனை.....
    இவர்களின் போராட்த்திற்கு எவ்வளவு பெரிய கூலி காத்திட்டிருக்கு
    மாஷா அல்லாஹ்....

    ReplyDelete
  14. ஸலாம் சகோ.ஆஷிக் அஹமத்,

    இதுபோன்று, பல இன்னல்களை சந்தித்து இவ்வுலகத்திற்கான தன் வாழ்வியல் நெறியாக இஸ்லாத்தை ஏற்றுத்தழுவி...

    பின்னர், இதனாலேயே சுமத்தப்படும் பற்பல சமூக பொருளாதார சோதனைகளை எல்லாம்...

    இறைப்பொருத்தம் மற்றும் மறுமைப்பேறு இவற்றை மட்டுமே நாடிவராக இன்முகத்துடன் ஏற்று தம் விடாமுயற்சியால் அவற்றை சாதனைகளாக்கி கடந்து வந்த-வந்து கொண்டிருக்கும்...

    இதுபோன்ற எண்ணற்ற புதிதாக இஸ்லாத்தை ஏற்பவர்கள் அனைவரின் இறைநம்பிக்கையுமே...

    சந்ததி சந்ததியாக முஸ்லிம் குடும்பங்களிலே பிறந்து முஸ்லிம்களாக வாழ்வபவர்களை விட...

    பற்பல மடங்கு உயர்வாகவும், உறுதியாகவும், இறையச்சத்தோடும் இருப்பதை நாமும் தொடர்ந்து கண்ட வண்ணமே இருந்து வருகிறோம், சகோ..!

    மாஷாஅல்லாஹ். இவர்களுக்கு நேர்வழி காட்டிய இறைவனுக்கே புகழனைத்தும்.

    இந்த புதிய முஸ்லிம் சகோதர்களுக்கும் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கும்...

    இவர்களிடம் மனமாற்றம் ஏற்படும் வகையில் தம் வாழ்க்கையை தூய இஸ்லாமிய நெறியில் செயல்வடிவம் கொடுத்து அமைத்திட்ட அந்த துணிக்கடை சகோதரர்களுக்கும்...

    ஈருலக வாழ்க்கையிலும் மென்மேலும் பரக்கத்தும் ரஹ்மத்தும் தந்தருள எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திக்கிறேன்.

    நிறைவானதொரு பதிவுக்கு நன்றி சகோ.ஆஷிக் அஹமத்.

    ReplyDelete
  15. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ ஆசிக்!

    //சிறிய ஸ்டவ், ஒரு விரிப்பு (பாய்), சில சமையல் பாத்திரங்கள் - இவைதான் எங்களிடம் அப்போது இருந்த பொருட்கள். எங்களுடைய துணிமணிகளை தரையில் வைத்துக்கொள்வோம். புத்தகங்களை தலையணைகளாக பயன்படுத்திக்கொள்வோம். என்னுடைய துப்பட்டா தான் தரைவிரிப்பாக இருந்தது. சாப்பிடும் தட்டுக்களை கண்ணாடிகளாக உபயோகப்படுத்தி தலை வாரிய அந்த நாட்கள் இன்றளவும் எனக்கு நினைவிருக்கின்றது.//

    இந்த வரிகளை படித்தவுடன் நெகிழ்ந்து விட்டேன். இவர்களுக்கு வளமான வாழ்வு இம்மையிலும் மறுமையிலும் கிடைக்க பிரார்ததிக்கிறேன்.

    ReplyDelete
  16. sister zalha,

    wa alaikum salaam va rahmathullaahi vabara kaaththuhu...

    //jazaakallaahu khair to share such a heart touched life's story///

    indeed, it is a very inspiring story...

    thanks for the dua sister...

    ReplyDelete
  17. சகோதரர் ஜமால்,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  18. அஸ்ஸலாமு அலைக்கும்
    அன்பின் சகோதரர் ஆஷிக்,
    சோதனைகள் வருகின்ற போது புத்துணர்ச்சியை கொடுக்க கூடிய ஆக்கத்தை தந்திருக்கிறீர்கள். சிறிய சோதனைகள் வந்தாலே தாங்கி கொள்ள முடியாத, தாங்கி கொள்ள மறுக்கின்ற முஸ்லிம்களின் மத்தியில் பல்வேறு சோதனைகள் வந்தபோதிலும் இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டதற்காக அதை தாங்கி கொண்ட சகோ உமர் மற்றும் சகோ பிர்தவ்ஸ் ஆகிய இருவருக்கும் இறைவன் ஈருலகிலும் வெற்றியை அளிப்பானாக. நமக்கும் அத்தகைய பொறுமையை இறைவன் தருவானாக.

    ReplyDelete
  19. சகோதரி F.NIHAZA,

    வ அலைக்கும் சலாம்...

    ///எங்களுக்கென்ன சோதனை.....///

    இறைவன் கொடுத்தாலும் அதற்கான வலிமையையும் சேர்ந்தே தர பிரார்த்திப்போம்..

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  20. சகோதரர் முஹம்மது ஆஷிக்,

    வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

    ///இந்த புதிய முஸ்லிம் சகோதர்களுக்கும் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கும்...
    இவர்களிடம் மனமாற்றம் ஏற்படும் வகையில் தம் வாழ்க்கையை தூய இஸ்லாமிய நெறியில் செயல்வடிவம் கொடுத்து அமைத்திட்ட அந்த துணிக்கடை சகோதரர்களுக்கும்...
    ஈருலக வாழ்க்கையிலும் மென்மேலும் பரக்கத்தும் ரஹ்மத்தும் தந்தருள எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திக்கிறேன்.///

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரர்...

    ReplyDelete
  21. சகோதரர் சுவனப்பிரியன்,

    வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

    தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  22. சகோதரர் ஷேக் தாவுத்,

    வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு

    ///இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டதற்காக அதை தாங்கி கொண்ட சகோ உமர் மற்றும் சகோ பிர்தவ்ஸ் ஆகிய இருவருக்கும் இறைவன் ஈருலகிலும் வெற்றியை அளிப்பானாக. நமக்கும் அத்தகைய பொறுமையை இறைவன் தருவானாக.///

    ஆமீன்...ஆமீன்...

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  23. அஸ்ஸலாமு அலைக்கும் பிரதர்

    மாஷா அல்லாஹ் ... அருமையான பகிர்வு .

    இறைவன் இவர்களை என்றென்றும் நேரான வழியில் அழைத்து,ஈருலகில் வெற்றி பெற செய்வானாக! ஆமீன் .

    ReplyDelete
  24. சகோதரி ஆயிஷா,

    வ அலைக்கும் சலாம்...

    எல்லாப் புகழும் இறைவனுக்கே உரித்தாவதாக...ஆமீன்...

    ///இறைவன் இவர்களை என்றென்றும் நேரான வழியில் அழைத்து,ஈருலகில் வெற்றி பெற செய்வானாக! ////

    ஆமீன்..

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  25. வாஞ்சூர் அவர்களுக்கு,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    நிறைவான சுட்டிக்கு நன்றி....உணர்ப்பூர்வமான காணொளி...ஜசாக்கல்லாஹ்...

    தங்களின் இறைப்பணியை அங்கீகரித்து சிறந்த நற்கூலியை இறைவன் தந்தருள்வானாக...ஆமீன்...

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  26. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...!

    அல்ஹம்துலில்லாஹ்.. ஒரு சிறு சோதனை வந்தாலும் துவண்டு விடும் நம்மை போன்றவர்களுக்கு இவர்களின் வாழ்க்கை ஒரு பாடம்..

    உண்மையில் பிறப்பால் முஸ்லிமாக இருக்கும் நம்மை விட அல்லாஹ்வின் கிருபையால் விரும்பி நம் மார்க்கத்திற்கு வரும் சகோதர சகோதரிகளின் ஈடுபாடோடு கூடிய இறையச்சம் நம் செயல் குறித்து சுயபரிசோதனை செய்ய வைக்கிறது என்றால் அது மிகையில்லை ..
    ------------------------
    24:46. நிச்சயமாக நாம் தெளிவுபடுத்தும் வசனங்களையே இறக்கியிருக்கிறோம்; மேலும் தான் நாடியோரை அல்லாஹ் நேர்வழிப் படுத்துகிறான்.
    -----------------------
    அல்லாஹ்வின் நாட்டத்தால் நேர்வழி அடைந்த சகோதர சகோதரிக்கு அல்லாஹ் அவனுடைய நல்லருளையும் ரஹ்மத்தையும் எப்போதும் அவர்களுக்கு வழங்குவானாக..ஆமீன்...

    ReplyDelete
  27. சகோதரரி சபிதா,

    வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு,

    //அல்லாஹ்வின் நாட்டத்தால் நேர்வழி அடைந்த சகோதர சகோதரிக்கு அல்லாஹ் அவனுடைய நல்லருளையும் ரஹ்மத்தையும் எப்போதும் அவர்களுக்கு வழங்குவானாக..///

    ஆமீன்...

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

    ReplyDelete
  28. Assalamu Alaikkum,
    Arabu naadugalil panipuriyum sagodharargal perunaal thozhugaikku sendru Allahu Akbar endru koorakooda manam illadhavargalaai ullanar melum veenkadhaigalai pesubavargalaga ullanar.idhu pondru islaathin pakkam varubavargalin irai achchaththai paarkkumbodhu nammidadam 10% kooda iraiyachcham illaiye endru vedhanai adaikiren.

    Kalam.
    (Tamil type vasadhi illai.ezhuththu pizhaigalukku mannikkavum)

    ReplyDelete
  29. assalamu alaikum

    dear admin,

    இந்த கட்டுரைக்கு ஏற்ற ஒரு தலைப்பை நான் தருகிறேன்.

    "இறைவனை அறிய இளம்பெண்ணின் இமாலய சாதனை"

    ReplyDelete
  30. வ அலைக்கும் சலாம் சகோதரர் கலாம்,

    நான் சொல்வதுண்டு. வெயிலில் இருப்பவர்களுக்கு நிழலின் அருமை தெரிகின்றது. நிழலில் இருந்துக்கொண்டு, வெயிலை பார்க்காதவர்களுக்கு நிழலின் அருமை புரியாமலையே போய்விடுகின்றது.

    இன்ஷா அல்லாஹ், காட்சிகள் மாறும் சகோதரர். துவா செய்யுங்கள்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

    வஸ்ஸலாம்...

    ReplyDelete
  31. சகோதரர் சாம் அப்துல் பாஸித்,

    வ அலைக்கும் சலாம்,

    //இந்த கட்டுரைக்கு ஏற்ற ஒரு தலைப்பை நான் தருகிறேன்.
    "இறைவனை அறிய இளம்பெண்ணின் இமாலய சாதனை"//

    மாஷா அல்லாஹ்...

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  32. எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே

    http://changesdo.blogspot.com/2011/11/blog-post_09.html

    ReplyDelete
  33. en kankal kalanki vittana........ MAY ALLAAH GRANT HIS MERCY AND RAHMATH UPON THEM.....

    IS IT POSSIBLE TO MEET THEM BROTHER / WHERE CAN WE MEET THEM ??

    ReplyDelete
  34. சகோதரர் ரில்வான்,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    நல்லதொரு முயற்சி. உங்கள் முயற்சியில் வெற்றியளிக்க இறைவனை வேண்டுகின்றேன்...

    வஸ்ஸலாம்...

    ReplyDelete
  35. சகோதரர் அனானி,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    //IS IT POSSIBLE TO MEET THEM BROTHER / WHERE CAN WE MEET THEM ??//

    என்னை மெயிலில் தொடர்புக்கொள்ளுங்கள் சகோதரர்.

    வஸ்ஸலாம்..

    ReplyDelete
  36. அன்புள்ள ஆஷிக் அஹ்மத் அவர்களுக்கு,
    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

    அல்லாஹ் உங்களுக்கு நோயற்ற வாழ்வையும், கடனற்ற செல்வத்தையும் தருவானாக!

    தங்களின் அழகிய தஃவாஹ் பணி தொடர என் நல்வாழ்த்துக்கள். நம் சகோதரிகள்: ஆமீனா அசில்மீ, யுவான் ரிட்லீ, பிர்தவ்ஸ் போன்றோரின் இஸ்லாமிய வாழ்வுக்கான ஆரம்ப சிரமங்கள் நம்மை கண்ணீர் சிந்த வைத்தது. பெண்களாயினும் தாங்கள் ஆண்களுக்கு சலைத்தவர்கள் இல்லை என சாதித்துக் காட்டியுள்ளனர். அல்-ஹம்துலில்லாஹ். பிறவி முஸ்லிம்கள் இவற்றிலிருந்து படிப்பினை பெறுவார்களாக!

    ReplyDelete
  37. அல்லாஹு அக்பர்

    ReplyDelete
  38. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    அல்ஹம்துலில்லாஹ்

    ReplyDelete
  39. *சகோதரர் ஆஷிக்.....

    மாஷா அல்லாஹ்! அருமையான பகிர்வு#

    ReplyDelete
  40. சோதனை இல்லாமல்
    சொர்க்கம் செல்ல முடியாது
    என்பது உறுதி,


    2:214. உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன; “அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள்; “நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” (என்று நாம் ஆறுதல் கூறினோம்.)

    3612.கப்பாப் இப்னு அல் அரத்(ரலி) அறிவித்தார்.
    இறைத்தூதர்(ஸல்) அவர்கள், கஅபாவின் நிழலில் தம் சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்ந்து கொண்டிருந்தபோது அவர்களிடம் (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைக்கும் கொடுமைகளை) முறையிட்டபடி, 'எங்களுக்காக (அல்லாஹ்விடம்) நீங்கள் உதவி கோரமாட்டீர்களா? எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யமாட்டீர்களா?' என்று கேட்டோம். அதற்கு அவர்கள், 'உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே (ஏகத்துவக் கொள்கையை ஏற்று இறைத்தூதரின் மீது நம்பிக்கை கொண்ட) ஒரு மனிதருக்காக மண்ணில் குழிதோண்டப்பட்டு, அவர் அதில் நிறுத்தப்பட, ரம்பம் கொண்டு வரப்பட்டு அவரின் தலை மீது வைக்கப்பட்டு அது ஒரு கூறுகளாகப் பிளக்கப்படும். ஆயினும், அ(ந்தக் கொடுமையான)து அவரை அவரின் மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. (பழுக்கச் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் அவர் (மேனி) கோதப்பட, அது அவரின் இறைச்சியையும் கடந்து சென்று அதன் கீழுள்ள எலும்பையும் நரம்பையும் சென்றடைந்து விடும். அ(ந்தக் கொடூரமான சித்திரவதையும் தீ)தும் கூட அவரை அவரின் மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (இஸ்லாத்தின்) விவகாரம் முழுமைப்படுத்தப்படும். எந்த அளவிற்கென்றால் வாகனத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனில் உள்ள) 'ஸன்ஆ' விலிருந்து 'ஹளர மவ்த்' வரை பயணம் செய்து சொல்வார். (வழியில்) அல்லாஹ்வைத் தவிர, அல்லது தன் ஆட்டின் விஷயத்தில் ஓநாயைத் தவிர வேறெவருக்கும் அவர் அஞ்சமாட்டார். ஆயினும், நீங்கள் தான் (கொடுமை தாளாமல் பொறுமை குன்றி) அவரசப்படுகிறீர்கள்" என்று கூறினார்கள்

    ReplyDelete
  41. subhanallah
    ennudaiya intha mana nilaikku yetha
    atumaiyana pathivu ithu
    ALHAMTULILLAAH

    ReplyDelete
  42. அல்லாஹ் தான் நாடியவருக்கே ஹிதாயத்தை கொடுக்கிறான் ..மறுமையில் அழகான பரிசைப்பெறவே இவர்கள் உலகில் சோதனைக்கு ஆளாக்கப்பட்டிருப்பர் . அல்ஹம்துலில்லாஹ்

    ReplyDelete