Wednesday, January 18, 2012

புதிய அறிவியல் பொற்காலம்?



நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். 

அறிவியல் ஆர்வலர்களுக்கு இந்த பதிவு எவ்விதத்திலாவது உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அளிக்குமானால் அந்த புகழ் அனைத்தும் இறைவனுக்கே உரித்தாவதாக...

                        சுமார் 350 ஆண்டுகள் பழமையானதும், பிரிட்டன் அரசுக்கு அறிவியல் ஆலோசனை வழங்கும் நிறுவனமும், அறிவியலாளர்களால் பெரிதும் மதிக்கப்படும் அமைப்புமான "The Royal Society", இஸ்லாமிய உலகில் நடைபெறும் அறிவியல் முன்னேற்றங்கள், கண்டுபிடிப்புகள், மற்றும் சவால்கள் குறித்த ஆய்வறிக்கையை, "புதிய பொற்காலம்? (A new golden age?)" என்ற தலைப்பில் வெளியிட்டது. இந்த பதிவின் பல தகவல்கள் அந்த ஆவணத்தை தழுவியே எழுதப்படுகின்றன. 

இராயல் கழகத்தின் அந்த நீண்ட ஆய்வறிக்கையை முழுமையாக படிக்க விரும்புபவர்கள், பதிவின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ள லின்க்கில் இருந்து அதனை பதிவிறக்கம் செய்துக்கொள்ளவும்.    


அறிவியலில் இஸ்லாமிய அறிஞர்களின் பங்களிப்பு மட்டும் இல்லையென்றால் இன்றைய ஐரோப்பா அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் முதன்மையாக விளங்கியிருக்க முடியுமா என்பது எனக்கு தெளிவாகவில்லை --- Mathematician Keith Devlin, Executive Director, center for the study of language and Information at Stanley University.
"நவீன அறிவியலின் இருதயத்தில் இருக்கக்கூடிய சொற்களான அல்ஜீப்ரா (Algebra), அல்கோரிதம் (Algorithm), அல்கலி (Alkali) எல்லாம் அரபியில் இருந்து வந்தவைதான், இவைகள் அவர்களது கலாச்சாரம் எந்த அளவு சிறந்திருந்தது என்பதை உணர்த்துகின்றன. அல்ஜீப்ரா இல்லாமல் நவீன கணிதமோ இயற்பியலோ இல்லை, அல்கோரிதம் இல்லாமல் கணிப்பொறிகள் இல்லை மற்றும் அல்கலி இல்லாமல் வேதியியல் இல்லை" --- BBC    

ஆம். ஏழாம் நூற்றாண்டு தொடங்கி பதினாறாம் நூற்றாண்டு வரையிலான இஸ்லாமிய அறிவியல் பொற்காலமானது, வியத்தகு முன்னேற்றங்களையும் கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்தியிருந்தது. கணிதம், இயற்பியல், வேதியியல், மருத்துவம், வானவியல், அறிவியல் அணுகுமுறை என்று பல்வேறு துறைகளிலும் தன் தனித்துவத்தை பதித்து அவை இன்றளவும் நிலைத்திருக்கும் அளவு தன் பாதிப்பை விட்டு சென்றிருக்கின்றது. (இதுக்குறித்த இத்தளத்தின் பதிவுகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்).

ஐரோப்பா தன் இருண்ட காலத்திலிருந்து மீண்ட போது, அங்கு நடைபெற்ற அறிவியல் புரட்சிக்கு உறுதுணையாக இருந்த முஸ்லிம்களின் அறிவியல் பங்களிப்பு, கடந்த மூன்று நூற்றாண்டுகளாக பின்னடைவை சந்தித்திருப்பது உண்மை. இதற்கு சிலுவை யுத்தம், காலனி ஆதிக்கம், வறுமை, முஸ்லிம்களின் தவறுகள் என்று பல்வேறு காரணங்களை கூறலாம்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட சரிவை ஆராய்ந்து, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் மீண்டும் தங்களின் பழைய நிலையை அடைய எம்மாதிரியான முயற்சிகளை இஸ்லாமிய உலகம் மேற்கொண்டுள்ளது? மீண்டும் மற்றுமொரு அறிவியல் பொற்காலத்தை கொண்டுவர இந்த நாடுகள் எம்மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன?

இந்த கேள்விகளுக்கு படிப்பவர் புருவங்கள் உயருமாறு விடை தருகின்றது இராயல் கழகத்தின் ஆய்வறிக்கை. அதேநேரம், இஸ்லாமிய உலகம் சந்திக்கும் சவால்கள், அதிலிருந்து எப்படி மீள வேண்டும் என்பது குறித்த வழிமுறைகளையும் அலசுகின்றது இந்த அறிக்கை.

அது சரி, இஸ்லாமிய உலகம் என்று எதனை குறிப்பிடுகின்றது இந்த ஆய்வு?

ஐ.நா-வுக்கு அடுத்த பெரிய அமைப்பான OIC-யில் (Organization of Islamic Co-operation) உறுப்பினராக உள்ள 57 நாடுகளையே இஸ்லாமிய உலகம் என்று குறிப்பிடுகின்றது இராயல் கழகத்தின் அறிக்கை.

இனி அந்த ஆய்வறிக்கையில் (மற்றும் வேறு சில மூலங்களில்) இருந்து சில தகவல்கள்.

அறிவியல் முன்னேற்றத்தில் இஸ்லாமின் பங்கு:

ஒரு மார்க்கம் அறிவியலுக்கு தடையாக இல்லாமல் உறுதுணையாக இருக்க முடியும் என்பதற்கு இஸ்லாமிய அறிவியல் பொற்காலம் ஒரு உதாரணம் என்று கூறும் இராயல் கழகம், OIC உறுப்பு நாடுகளில் நடக்கும் அறிவியல் கருத்தரங்குகள் தொழுகை/பிரார்த்தனைகளுடனேயே ஆரம்பிக்கின்றன, தொழுகை/பிரார்த்தனைகளுடனேயே முடிகின்றன என்று குறிப்பிடுகின்றது. அறிவியல் முன்னேற்றத்தில் சிறந்து விளங்கும் இந்நாடுகள் இறைநம்பிக்கையிலும் சிறந்து விளங்குவதாக அது மேலும் தெரிவிக்கின்றது.

பெண்கள்:

இஸ்லாமிய உலகின் மக்கட்தொகையில் பெரும்பாலானவர்கள் பெண்களே (~51%).

முஸ்லிம் பெண்கள் என்றாலே அவர்கள் அணியும் உடைக்கு தான் ஐரோப்பிய பார்வையாளர்கள் முக்கியத்துவம் கொடுப்பதாகவும், ஆனால், இஸ்லாமிய உலகின் பெண்களின் நிலையானது இந்த தலைப்புச்செய்திகள் சித்தரிப்பதை காட்டிலும் வித்தியாசமானது என்று குறிப்பிடுகின்றது இராயல் கழகம். இதற்கு காரணங்கள் இல்லாமலில்லை.

இஸ்லாமிய உலகின் 13 நாடுகளின் பெண் அறிவியல் பட்டதாரிகளின் சராசரி, அமெரிக்க சராசரியை (41%) விட மிக அதிகம்.    அல்ஜீரியாவின் அறிவியல் பட்டதாரிகளில் 71% பேர் பெண்கள். அதுபோல பஹ்ரைனில் 73%-மும், பாலஸ்தீனில் 49%-மும் பெண்கள்.

ஈரானின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களில் 70% பேர் பெண்கள். சவூதி அரேபியாவின் மாணவர்களில் 58% பேர் பெண்கள்.

கல்வியில் மகத்தான முன்னேற்றம் அடைந்துவரும் நிலையில், அறிவியல் சார்ந்த பணிகளில் பெண்களின் நிலை என்ன என்பது குறித்த தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை. ஆய்வுகள் நடத்தப்பட்ட இஸ்லாமிய உலகின் 24 நாடுகளில், எட்டில் மட்டுமே பெண் ஆய்வாளர்களின் எண்ணிக்கை உலக சராசரியை விட அதிகமாக இருக்கின்றது. அதுபோல, சவூதி அரேபியாவின் பணியிடங்களில் 16% மட்டுமே பெண்கள்.

இதுப்போன்ற நிகழ்வுகளை எதிர்க்கொள்ளவும், பெண் ஆய்வாளர்களின் பங்களிப்பை அதிகரிக்கவும் "இஸ்லாமிய பெண் விஞ்ஞானிகளின் கூட்டமைப்பு (Islamic network of women scientists)" நிறுவப்பட்டுள்ளது. ஈரானில் நடைப்பெற்ற முதலாவது இஸ்லாமிய பெண் ஆய்வாளர்களின் கருத்தரங்கில் (27th January 2010), 37 நாடுகளில் இருந்து பெண் விஞ்ஞானிகள் கலந்துக்கொண்டனர்.

ஈரான் மற்றும் துருக்கி:

அறிவியல் வளர்ச்சியில் சிறந்து விளங்கும் நாடுகளாக மத்திய கிழக்கு நாடுகள் இருக்கின்றன (குறிப்பாக துருக்கி மற்றும் ஈரான்). இந்த நாடுகளின் வளர்ச்சி விகிதம், உலக சராசரியை விட நான்கு மடங்கு அதிகமாகும்.

அறிவியல் வளர்ச்சியில், உலகின் வேறெந்த நாட்டை விடவும் ஈரான் மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றது. உலக சராசரியை விட பதினொரு மடங்கு அதிகமாக அது பயனித்துக் கொண்டிருக்கின்றது. கடந்த இருபது ஆண்டுகளில் மட்டும், ஈரான், அறிவியலின் பல்வேறு துறைகளில் சுமார் 54,000 ஆய்வு கட்டுரைகளை சமர்பித்துள்ளது/வெளியிட்டுள்ளது.

தனித்துவமான பல்வேறு கண்டுபிடிப்புகளை ஈரான் நிகழ்த்தியிருக்கின்றது. அணு அறிவியல், வான் வெளி அறிவியல் (Aerospace), மருத்துவம், விவசாயம், நேனோ தொழில்நுட்பம் (Nanotechnology), ஸ்டெம் செல் ஆய்வு போன்றவற்றில் ஈரானின் அபாரமான வளர்ச்சி பிரம்பிக்க வைக்கின்றது.

உலக சராசரியை விட 5.5 மடங்கு அதிகமாக அறிவியல் வளர்ச்சியை பெற்றுள்ள துருக்கியை பொருத்தவரை, 1990-2007 இடையேயான காலக்கட்டத்தில், அறிவியல் ஆய்வுகளுக்கான முதலீடு மட்டும் சுமார் 566% அதிகரித்துள்ளது. இது டென்மார்க், நார்வே மற்றும் பின்லாந்து போன்ற நாடுகளின் முதலீட்டை விட அதிகம். இதே காலக்கட்டத்தில், துருக்கியில் உள்ள ஆய்வாளர்களின் எண்ணிக்கை சுமார் 43% அதிகரித்துள்ளது.

துருக்கியில் இருந்து வெளிவரும் ஆய்வு கட்டுரைகளின் எண்ணிக்கை, கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது சுமார் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. 2008-ஆம் ஆண்டு நிலவரப்படி, ஆய்வு கட்டுரைகள் பிரசுரிப்பதில் எட்டாவது "மிகவும் முன்னேறிய" நாடு என்ற அந்தஸ்த்தை துருக்கி பெற்றது.

அறிவியல் வளர்ச்சியில் முன்னணியில் இருந்தாலும், பரிணாம கோட்பாடு குறித்த துருக்கியின் நிலைப்பாடு தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. 2009-ஆம் ஆண்டு, டார்வினின் 200-வது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட இருந்த ஆய்விதழை, துருக்கியின் அறிவியல் ஆய்வு கவுன்சில் ரத்து செய்து பெரிய சர்ச்சையை உண்டாக்கிய செய்தி இங்கு கவனிக்கத்தக்கது.

சவூதி அரேபியா:

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பாலைவனமாக காட்சியளித்த துவல் என்ற இடம், இன்று, உலகின் மிகச் சிறந்த கட்டமைப்பை பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றான "மன்னர் அப்துல்லாஹ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைகழக (KAUST)" கட்டிடங்களால் நிரப்பப்பட்டிருக்கின்றது.

சுமார் இருபது பில்லியன் டாலர்கள் மதிப்பீட்டில் உருவாகியுள்ள இந்த பல்கலைக்கழகம், உலகின் டாப்-10 சூப்பர் கம்ப்யூட்டர்களில் ஒன்றை தன்னிடத்தே கொண்டிருக்கின்றது.

உலகிலேயே மிகப்பெரிய "பெண்கள் மட்டும்" பயிலும் பல்கலைக்கழகத்தையும் சென்ற ஆண்டு சவுதி அரேபியா திறந்துள்ளது. இங்கே சுமார் 50,000 மாணவிகள் வரை பயிலலாம். ஐந்து பில்லியன் டாலர்கள் மதிப்பீட்டில் உருவாகியுள்ள இந்த பல்கலைக்கழகம், சுமார் 700 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையையும் தன்னிடத்தே கொண்டுள்ளது.

இவை மட்டுமல்லாமல் மேலும் பல அறிவியல் மையங்களை உருவாக்குவதில் சவூதி அரசாங்கம் முனைப்புடன் செயல்படுகின்றது.

உலகிலேயே, கல்விக்கு அதிகம் செலவிடும் நாடுகளின் வரிசையில் சவூதி அரேபியாவிற்கு ஐந்தாவது இடம்.

சவூதி அரேபியாவின் இத்தகைய நடவடிக்கைகள் உலகளவில் மாணவர்களை கவர்ந்து இழுப்பதாக குறிப்பிடும் இராயல் கழகம், ஒரு மிகச் சிறப்பான எதிர்காலத்திற்கு சவூதி அரேபியா தயாராகிக்கொண்டிருப்பதாக தெரிவிக்கின்றது.

மலேசியா:

ஆசியாவின் அதிநவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சாம்பியன்களில் ஒன்றாக மலேசியா திகழ்கின்றது. அறிவியல் ஆய்வுகளுக்கு செய்யப்பட்ட முதலீடுகள் சாதகமான முடிவுகளை தர ஆரம்பித்திருக்கின்றன. 2004-ஆம் ஆண்டு வாக்கில், மலேசியாவின் ஆய்வாளர்களின் எண்ணிக்கை 31,000-த்தை தொட்டது. இது 1998-ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 270% அதிகம். அதுபோல, புதிய கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை கோரிக்கைகளும் மலேசியாவில் இருந்து அதிகம் வருகின்றன. OIC உறுப்பு நாடுகளிலேயே, அதிக காப்புரிமை கோரிக்கை வைக்கும் நாடுகளின் வரிசையில் மலேசியாவிற்கு முதல் இடம்.

கத்தார்:

மிகச் சிறிய நாடாக இருந்தாலும், கத்தாரின் அறிவு சார்ந்த பொருளாதாரத்தின் வளர்ச்சி ஆச்சர்யப்பட வைக்கின்றது. கல்வி மற்றும் அறிவியல் வளர்ச்சிக்காக, சவூதி அரேபியாவிற்கு நிகரான முதலீட்டை கத்தார் செய்கின்றது. 1990-ஆம் ஆண்டிலிருந்து மட்டும் கல்வி, ஆராய்ச்சி மற்றும் கட்டமைப்பிற்காக சுமார் 133 பில்லியன் டாலர்களை அது செலவிட்டுள்ளது.

கத்தாரின் அறிவியல் மகுடத்தில் ஒரு இரத்தினகல்லாக "கல்வி நகரம் (Education City)" இருப்பதாக கூறுகின்றது இராயல் கழகம். சுமார் 2500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த நகரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பூங்காவையும் தன்னிடத்தே கொண்டுள்ளது. கத்தாரின் மற்றுமொரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம், சுமார் எட்டு பில்லியன் டாலர்கள் மதிப்பிலான சிட்ரா மருத்துவ ஆய்வுக் கழகம்.

பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ்:

இந்த இரண்டு நாடுகள் குறித்த சில வித்தியாசமான செய்திகள் கவனத்தை ஈர்த்தன.

சில நேரங்களில், புதுமையான முயற்சிகள் உலகளாவிய ஆய்விதழ்களில் வராமலேயே போய்விடுகின்றன என்று குறிப்பிடும் இராயல் கழகம், இதற்கு உதாரணமாக பங்களாதேஷையும், பாகிஸ்தானையும் சுட்டிக்காட்டுகின்றது.

பங்களாதேஷின் ஆய்வாளர்கள், குடிதண்ணீரில் இருந்து அர்சனிக் என்னும் நச்சுபொருளை நீக்கும் புதுமையான வழிமுறையை கண்டுபிடித்துள்ளனர். இந்த யுக்தியை கொண்டு, நாட்டின் மூன்று நகராட்சிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியுள்ளனர். பங்களாதேஷ் பற்றி பேசும் போது, அந்நாடு, மைக்ரோ-பைனான்ஸ் துறையில் முன்னோடியாக விளங்குவதையும் குறிப்பிட மறக்கவில்லை இராயல் கழகம்.

அது போல, சேரிகள் சார்ந்த நகராட்சிகளை மேம்படுத்த பாகிஸ்தான் மேற்கொள்ளும் இயக்கமுறைகளையும் புதுமையான முயற்சி என்று வர்ணிக்கின்றது அந்த அறிக்கை.

உள்நாட்டு பிரச்சனைகளால் பெரிதும் பாதிப்படைந்திருந்தாலும், 2000-ஆம் ஆண்டிலிருந்து ஒரு உறுதியான முன்னேற்றத்தை சந்தித்து வருகின்றது பாகிஸ்தான். 2001-2003 இடையேயான காலக்கட்டத்தில் மட்டும் அறிவியல் ஆய்வுகளுக்கான பட்ஜெட் 6000% உயர்ந்துள்ளது. உயர் கல்விக்கான பட்ஜெட், 2004-2008 இடையேயான காலக்கட்டத்தில் 2400% உயர்ந்துள்ளது.

2002-2008 இடையேயான காலக்கட்டத்தில், சுமார் ஐம்பது புதிய பல்கலைக்கழகங்கள் துவக்கப்பட்டிருக்கின்றன. மாணவர்களின் எண்ணிக்கை 1,35,000-திலிருந்து 3,65,000-மாக உயர்ந்துள்ளது. டிஜிட்டல் நூலகங்கள் மற்றும் ஆய்விதழ்களில் அதிக முதலீடு, ஆய்வு கட்டுரைகள் அதிகமாக வெளிவர புதிய முயற்சிகள் என்று பாகிஸ்தான் சிறப்பாக செயல்படுகின்றது.

இத்தகைய முயற்சிகளாலேயே, ஐ.நாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆணைக்குழு, "சிறந்த முன்மாதிரி வளரும் நாடு (best practice example for developing countries)" என்று பாகிஸ்தானுக்கு புகழாரம் சூட்டியது.

மேலும்:

நாம் மேலே பார்த்த தகவல்கள் மட்டுமல்லாமல், இராயல் கழகத்தின் அறிக்கை மேலும் பல நாடுகளின் புதுமையான முயற்சிகளை பட்டியலிடுகின்றது.

அறிவியல் வளர்ச்சியில், உலக சராசரியை விட 2.5 மடங்கு வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கும் UAE-யின் சுத்தமான சுற்றுசூழலை கொண்டுவர முயற்சிக்கும் மஸ்டர் நகரம் (Masdar City), காற்றாற்றலை (Wind Energy) உருவாக்குவதில் முன்னணியில் இருக்கும் எகிப்து என்று அந்த பட்டியல் நீளுகின்றது.

அரசியல்:

இஸ்லாமிய உலகின் பெரும்பாலான நாடுகளில் இஸ்லாமிய கட்சிகளே மக்களின் ஆதரவை பெற்று வருகின்றன என்கின்றது இராயல் கழகம். பல நாடுகளின் ஆட்சி கட்டிலிலும் இவையே உட்கார்ந்திருக்கின்றன என்று அது மேலும் குறிப்பிடுகின்றது. இதற்கு உதாரணமாக ஈரான், துருக்கி, மலேசியா மற்றும் சவூதி அரேபியா போன்ற நாடுகளை நோக்கி கை நீட்டுகின்றது. இந்த பட்டியலில் தற்போது மொராக்கோ, துனிசியா மற்றும் எகிப்தையும் சேர்த்துவிடலாம். இஸ்லாமிய கட்சிகள் ஆட்சியில் இல்லாத நாடுகளில், அவை பிரதான எதிர்கட்சியாக இருக்கின்றன.

இஸ்லாமிய உலகின் தற்போதைய அறிவியல் முன்னேற்றம் குறித்து நான் இங்கே பகிர்ந்துக்கொள்ள முயற்சித்திருப்பது மிகச் சிறிதே. இதுக்குறித்து முழுமையாக அறிந்துக்கொள்ள விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலங்களில் இருந்து அறிக்கைகளை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

மீண்டும் பொற்காலம் திரும்புமா?

இஸ்லாமிய அறிவியல் பொற்காலம் உலகிற்கு அளித்த பங்களிப்புகளை பிரசித்திப்பெற்ற அறிவியல் அமைப்புகள் நன்கு உணர்ந்தே இருக்கின்றன. அதனாலேயே, இராயல் கழகம் முதற்கொண்டு New Scientist வரை, அத்தகைய பொற்காலம் மறுபடியும் திரும்புகின்றதா என்று தலைப்பிட்டு கட்டுரைகளை வடிக்கின்றன.

குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை கல்வி மற்றும் அறிவியலில் தற்போதைய இஸ்லாமிய உலகம் கண்டுள்ள நிலையில், எந்த லட்சியத்தை முன்நோக்கி அவர்கள் முதலீடு செய்கின்றார்களோ அது கூடிய விரைவில் ஈடேறி உலக மக்கள் பயன்பெற இறைவனை பிரார்த்திப்போம்.

இஸ்லாமிய உலகிற்கு அப்பால் வாழும் முஸ்லிம்களாகிய நாம், இஸ்லாமை சரிவர பின்பற்றி, இஸ்லாமை அடுத்தவர்களுக்கு எடுத்துச் சொல்லி, நாம் சார்ந்த நாடு மற்றும் மக்களுக்கு நம்மால் முடிந்த அதிகபட்ச பங்களிப்பை நல்கி நம் வாழ்வை அமைத்துக்கொள்வோம். இதற்கு வல்ல இறைவன் உதவி புரிவானாக...ஆமீன்.

இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் வரலாற்றில் எந்த காலக்கட்டத்திலும் வென்றதில்லை. இறைவன் நாடினாலன்றி இப்போதும் வெற்றிப்பெற போவதில்லை. ஆகையால் இவர்களுக்கான முக்கியத்துவத்தை குறைத்துக்கொண்டு lets move ahead......

இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன்.

இறைவனே எல்லாம் அறிந்தவன்.

One can download the royal society's entire report from:
1. A new golden age? The prospects for science and innovation in the Islamic world - The Royal Society. link

My sincere thanks to:
1. The Royal Society.
2. New Scientist Website

References:
1. A new golden age? The prospects for science and innovation in the Islamic world - The Royal Society. link
2. The Mathematical Legacy of Islam - Mathematical Association of America. link
3. Science and Islam: The Language of Science - BBC. link
4. A rebirth of science in Islamic countries? - Research Trends. link
5. Islamic science: The revival begins here - New Scientist. link
6. Iran's science progress fastest in world: Canadian report - Press tv. link
7. Saudi Arabia opens largest women’s university in the world - Al Arabiya News. link
8. Iran showing fastest scientific growth of any country - New Scientist. link
9. Science and technology in Iran - wikipedia. link
10. Royal Society - wikipedia. link
11. Science Metrix - 30 years in Science. link
12. Conference of Women Scientists of Islamic World - themuslim.org. link

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ 






44 comments:

 1. அஸ்ஸலாமு அலைக்கும்
  அன்பின் சகோதரன் ஆஷிக்,
  அறிவியல் வளர்ச்சியில் பழம்பெருமை மட்டுமே பேசி விட்டு சென்று விடுவோமோ என்ற பயம் எனக்குள் இருந்தது. ஏனெனில் அறிவியலின் ஆரம்ப கால வளர்ச்சியில் இஸ்லாமிய உலகின் பங்களிப்பே மிகவும் போற்றத்தக்கதாக இருந்தது. ஆனால் இடையில் அறிவியலின் இருண்ட காலத்தில் இஸ்லாமிய நாடுகள் இருந்தன. கட்டுரையில் நீங்கள் குறிப்பிட்டது போன்று சில காரணிகளால் (சிலுவை போர்கள், அரசியல் அதிகாரத்தை மட்டும் நோக்கிய இஸ்லாமிய நாடுகளின் ஆட்சியாளர்கள், மேற்கத்திய காலனிய ஆதிக்கம் போன்றவைகள்) அறிவியலில் பின்தங்கியிருந்த இஸ்லாமிய உலகம் மீண்டும் பொற்காலத்தை நோக்கி பயணம் செய்வது மகிழ்வையே தருகிறது. முஸ்லிம்கள் பொதுவாகவே கல்வியறிவற்றவர்கள் என்ற எண்ணத்தில் இருக்கும் இஸ்லாமோபோபியாகாரர்களுக்கு கொஞ்சம் வருத்தத்தையும் இராயல் சொசைட்டியின் அறிக்கை அளித்திருக்கும்.

  ஆரோக்கியமான வழியில் அறிவியலை நாம் கொண்டு சென்றால் மனிதகுலத்திற்கு அதிகமதிகம் நன்மைகளை செய்யலாம். அதை நோக்கியே அறிவியலின் இத்தகைய வளர்ச்சி இருக்க வேண்டுமென்ற பிரார்த்தனைகளுடன்.

  ReplyDelete
 2. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.

  அறிந்திடா பல அறிய தகவல்களை அறிந்து கொண்டேன்.அருமையான பதிவுக்கு ஜசாகல்லாஹ் சகோ.
  -----------------------------
  இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் வரலாற்றில் எந்த காலக்கட்டத்திலும் வென்றதில்லை. இறைவன் நாடினாலன்றி இப்போதும் வெற்றிப்பெற போவதில்லை. ஆகையால் இவர்களுக்கான முக்கியத்துவத்தை குறைத்துக்கொண்டு lets move ahead......////

  மாஷா அல்லாஹ் சரியாக சொன்னீர்கள் சகோ.

  ReplyDelete
 3. Thank you very much for joining with me in the interest of public safety
  and peace in the world.Most of my friends and followers are youngsters
  and well educated persons interested in peace,unity and safety amongst all
  communities in the world.Accordingly we seek support from all of
  you to study and analyse the God's messages posted in the website
  www.goldenduas.com and same may be advertised all over the world on
  the reasons that every person is suffering due to all kind of
  natural calamaties in the world.Unless and otherwise God's messages posted in the
  website www.goldenduas.com are followed, no government and
  scientist can safeguard life and liberty of the public of all
  communities in the world according to Quranic verses 17:16 and 28:59.

  Your Success,
  U.Ibrahim Ali.

  ReplyDelete
 4. //இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் வரலாற்றில் எந்த காலக்கட்டத்திலும் வென்றதில்லை. இறைவன் நாடினாலன்றி இப்போதும் வெற்றிப்பெற போவதில்லை//
  It's true,
  //ஆகையால் இவர்களுக்கான முக்கியத்துவத்தை குறைத்துக்கொண்டு lets move ahead......//
  It's fine,

  Thanks for this important Post

  ReplyDelete
 5. இவை போன்ற வெளி வராத விடயங்களை வெளிடயுலகிற்கு கொண்டு வருவதற்கு நன்றி ஆஷிக்.

  அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் ரஹ்மத் செய்யட்டும்.

  ReplyDelete
 6. ராயல் சொசைட்டி அறிக்கை, மற்ற நாடுகளைத் திகைக்க வைத்திட்டது உண்மை.

  ReplyDelete
 7. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.

  தங்களின் இது சம்பந்தப்பட்ட "நாம் என்ன செய்தோம் இவ்வுலகிற்கு" போன்ற பழைய கட்டுரையையே சமீபத்தில் தான் படித்தேன்,

  எப்படி இருந்தோம் இப்படி ஆயிட்டோம் என்று வருத்த படுவதற்கு முன் எப்படியும் ஆக வில்லை இறைவன் நாடினால் நல்ல நிலைமைக்கே திரும்ப போகிறோம் என்று கூறுவது போல இருக்கின்றது.

  சவூதி, ஐக்கிய அமீரகம் போன்ற நாடுகள் தன்னிடம் உள்ள செல்வதை வைத்து சொகுசு வாழ்க்கை வாழ்கின்றன, அறிவியலில் அதிக முன்னேற்றம் என்பது குறைவாகவே உள்ளது, ஆனால் இரான், பாகிஸ்தான், மலேசியா, துர்க்கி போன்ற முஸ்லிம் நாடுகள் சவால் விடும் அளவிற்கு அதீத வளர்ச்சி அடைந்து வருகின்றன,இறைவன் நாடுனால் அந்த பொற்காலம் விரைவில் என எதிர்பார்ப்போம்.

  சில நாட்களாகவே தங்களின் பதிவையும் முஹம்மத் ஆஷிக் பதிவையும் நன்றாகவே எதிர்பார்த்து கொண்டிருந்தேன்.

  வாழ்த்துக்கள்.

  தொடருங்கள் சகோ.

  ReplyDelete
 8. அஸ்ஸலாமு அலைக்கும்
  அல்ஹம்துலில்லாஹ் மேலும் ஒரு நல்ல பதிவு
  //இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் வரலாற்றில் எந்த காலக்கட்டத்திலும் வென்றதில்லை. இறைவன் நாடினாலன்றி இப்போதும் வெற்றிப்பெற போவதில்லை. ஆகையால் இவர்களுக்கான முக்கியத்துவத்தை குறைத்துக்கொண்டு lets move ahead......//

  "நச்"
  "ஆய்வுகள் ஓய்வதில்லை"

  ReplyDelete
 9. ஸலாம் சகோ,
  நல்ல பதிவு அறிவியலில் அனைத்து நாடுகள் இனங்கள் முன்னேறுவது நன்று.இஸ்லாமிய உல்கின் பரிணாம் அறிவியல் குறித்த பார்வையை அறிய நீங்கள் குறித்த கட்டுரையில் பரிணாமம் குறித்த தகவல்கள் மட்டும் அளிக்கிறேன்.
  ____________
  இக்கட்டுரை பரிணாமம் ஆத‌ரிப்பது போல் உள்ளது வியப்பாக உள்ளது. இது குறித்த உங்கள் பார்வை.[முடிந்தால் சல்மானின் கட்டுரையையும் படிக்கவும்.]
  ஒரு வேளை அமெரிக்க க்ரியேஷன் இன்ஸ்டியூட்[ICR] போல் ஒரு பரிணாம் விமர்சன ஆய்வு அமைப்பு வருமா?
  ********
  Page num 17&18

  In 2009, when the Scientific and Technological Research Council of Turkey cancelled the publication of a journal celebrating the 200th anniversary of Charles Darwin’s birth and his work on evolution, the international scientific community protested loudly. So did many scientists within the Islamic world. The Turkish Academy of Science denounced the Council’s decision, declaring that evolution was a scientific fact and any ‘falsification, evasion, obstruction of communication in any way of this fact was unacceptable.’60

  Scholars such as Salman Hameed argue that a more serious debate about the compatibility of evolution and Islamic theology will soon be required across the Islamic world, because of rising education levels, access to the internet and greater exposure to these debates elsewhere.In handling this issue, Islamic world
  scientists are likely to have an emotive battle on their hands.

  61 Hameed S (2010). Equating evolution with atheism will turn Muslims against science. The Guardian. Available online at: http://www.guardian.co.uk/science/blog/2008/dec/12/islamic-creationismevolution-muslim

  ReplyDelete
 10. ஸலாம்

  சல்மான் ஹமீத் ஒரு பாகிஸ்தானியர் .ஹாம்சய்ர் பல்கலைகழகத்தின் பேராசிரியர்.அவருடைய இணைய தளம்.அவர் வழிநடத்தப் பட்ட பரிணாமம்(thesistic evolution) என்ற கருத்தை முன் வைக்கிறார்.பாருங்கள் இது குறித்தும் உங்கள் கருத்து அறிய விரும்புகிறேன்
  http://www.evolutionandislam.com/faq

  ReplyDelete
 11. சலாம் சகோ ஆசிக்,

  மாஷா அல்லாஹ். அழகான, கருத்துக் செறிவுள்ள, ஆழமான பதிவு. Well done . பெரிய இடைவெளிக்கு பின் பதிவிட்டிருந்தாலும், நச் என்ற பதிவு. இஸ்லாத்தில் பெண்களின் நிலை குறித்து விமர்சிப்பவர்களுக்கு ஆய்வில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை பதில் சொல்லும் .

  ReplyDelete
 12. சமீபத்திய பின்னடைவுகளுக்கு காரணம் அந்த அந்த நாடுகளின் ஆட்சியாளர்களும், பெரும்பான்மையான மக்களும் இஸ்லாத்தை பின்பற்றாததே காரணம். இஸ்லாமிய உலகில் படு வேகமான மாற்றங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. இன்னும் 15 அல்லது 20 வருடங்களில் அந்த பொற்க்காலம் வரும் என்றே எனக்கு தோன்றுகிறது, இன்ஷா அல்லாஹ்.

  ReplyDelete
 13. வெகு சமீபத்தில்தான் இங்கு 1000inventions என்ற கண்காட்சி பார்த்தேன். என் பிரமிப்பு இன்னும் தீரவில்லை. உங்கள் பதிவுகளிலும் படித்திருக்கிறேன் என்றாலும், இஸ்லாமியர்களின் ஆரம்பகட்ட அறிவியல் பங்களிப்பை, ஆதாரத்துடன், செயல்வடிவத்துடன், ஆவணங்களுடன், செயல்விளக்கத்துடனும் விரிவாகப் பார்த்தபோது வியந்து நின்றேன். உடனே இதே கேள்வியும் வந்தது. அப்படிப்பட்ட திறமையான சமூகம் ஏன் இப்போது எந்தக் கண்டுபிடிப்பிலும் ஈடுபடவில்லை என்று. இப்பதிவில் விடை இருக்குகிறது. ஒரு பக்கம் செல்வச்செழிப்பில் அமிழ்தல் என்றால் இன்னொரு பக்கம் தீவிரவாதம், அடக்குமுறை, வறுமை, ஆட்சியாளர்களின் அராஜகம் என்று தினப்படி வாழ்வே போராட்டமாகிவிட்டிருக்கும்போது கண்டுபிடிப்புகளுக்கு ஏது மனமும், நேரமும்? இன்ஷா அல்லாஹ், இந்நிலை மாறும். மீண்டும் பொற்காலம் திரும்பும்.

  ReplyDelete
 14. பேரனின் அறிவைக் கண்டு பெருமையடைகின்றேன். எல்லா புகழும் இறைவனுக்கே. மேலும் உமது சேவை தொடர அல்லாஹ்விடம் பிராத்திக்கின்றேன்

  ReplyDelete
 15. அஸ்ஸலாமு அலைக்கும்! சகோ ஆஷிக்!

  பல புதிய தகவல்கள். ஆச்சரியப்பட வைக்கிறது. முன்பு இருந்த அதே உத்வேகம் தற்போது இஸ்லாமியரிடத்தில் திரும்பவும் வந்து கொண்டிருக்கிறது. அது மேலும் தொடர வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.

  //பேரனின் அறிவைக் கண்டு பெருமையடைகின்றேன். எல்லா புகழும் இறைவனுக்கே. மேலும் உமது சேவை தொடர அல்லாஹ்விடம் பிராத்திக்கின்றேன் //

  அத்தா(தாத்தா) வின் வாழ்த்துக்களும் இந்த பதிவில் சேர்ந்து கொண்டது இப்பதிவின் சிறப்பு.

  ReplyDelete
 16. நீடூர் அப்பா அவர்களுக்கு,

  அஸ்ஸலாமு அலைக்கும்..

  கண்ணீர் வந்துவிட்டது. அல்ஹம்துலில்லாஹ். தங்களின் தொடர்ச்சியான ஊக்கத்திற்கு ஜசாக்கல்லாஹ். வேறென்ன சொல்வதென்று தெரியவில்லை. எல்லாப் புகழும் இறைவனிற்கே...

  உங்களுக்கும், வாஞ்சூர் அப்பாவிற்கும் நீண்ட ஆயுளை கொடுத்து, தொடர்ந்து இறைப்பணி ஆற்றிட இறைவன் அருள்புரிவானாக...ஆமீன்..

  வஸ்ஸலாம்..

  ReplyDelete
 17. அஸ்ஸலாமு அலைக்கும்
  உளவியல் ரீதியாக முஸ்லீம்களை உற்சாகப்படுத்தி அவர்களை முன்புபோலவே உண்ணதமான நிலையை நோக்கி நடைபோடவைக்கும் தகவல்கள் (அல்லாஹ்தூய்மையானவன்) தமிழுழகிற்க்கு இந்த அருமையான தகவலைத் தந்த உங்களுக்கு ஜஸாக்கல்லாஹ் கைரன்

  ReplyDelete
 18. This comment has been removed by the author.

  ReplyDelete
 19. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

  நல்ல இடுகை

  //OIC உறுப்பு நாடுகளிலேயே, அதிக காப்புரிமை கோரிக்கை வைக்கும் நாடுகளின் வரிசையில் மலேசியாவிற்கு முதல் இடம்.//

  மலேசியாவில் நான் இருந்தும் இதுவரை அறியாத தகவல்!


  புதிய அறிவியல் பொற்காலம்?

  கேள்விக்குறி முற்றுப்புள்ளியாய் மாறும்
  இன்ஷா அல்லாஹ்!

  ReplyDelete
 20. சலாம்

  பதிவு ..... படிக்கக்கூடியது ....

  ReplyDelete
 21. Assalamu alikum bro
  alhamdulilah
  alhamdulilah
  alhamdulilah
  thalai neimira vaika koodiya pathivu!!!
  Nan eraivanidam adikadi vendum dua'kalil ethum onru "ya allah Aashiq Ahamed
  evaruku menmelum kalvi arivai koduthu engaluku evarin kalvi'yai katru koduka vendum ya rahmaney"!
  Melum bro ungalai vazhvil oru moorai'yavathu nearil parkavendum bro!
  Jazha kallahu kair!!!

  ReplyDelete
 22. ஸலாம் சகோ.ஆஷிக்,
  Really...'an epic article' Congrats.

  எதையாவது குவோட் பண்ணி சிலாகிப்போம் என்றால்... எதை எடுக்க... எதை விடுக்க... மொத்த பதிவின் வரிகளும் முக்கியமே..!

  எனினும்....

  //அறிவியலில் இஸ்லாமிய அறிஞர்களின் பங்களிப்பு மட்டும் இல்லையென்றால் இன்றைய ஐரோப்பா அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் முதன்மையாக விளங்கியிருக்க முடியுமா என்பது எனக்கு தெளிவாகவில்லை --- Mathematician Keith Devlin, Executive Director, center for the study of language and Information at Stanley University.//

  //அல்ஜீப்ரா இல்லாமல் நவீன கணிதமோ இயற்பியலோ இல்லை, அல்கோரிதம் இல்லாமல் கணிப்பொறிகள் இல்லை மற்றும் அல்கலி இல்லாமல் வேதியியல் இல்லை" --- BBC//

  இவர்கள் என்ன சொல்கிறார்கள்...?

  அஸ்திவாரமே ஒரு புர்ஜ் கலீஃபாவுக்கு முக்கியம் என்று சொல்கிறார்களோ..?

  மண்ணுக்கு அடியே மறைத்துவிட்டதால் 'அஸ்திவாரத்தை இல்லை' என்று மறைக்க முயலும் வரலாற்று கயவர்களை என்ன சொல்ல...?

  ReplyDelete
 23. //மீண்டும் பொற்காலம் திரும்புமா?//
  இன்ஷாஅல்லாஹ் நிச்சயம் திரும்பும்.

  இதற்கு....

  உள்ளூர் அளவில் ஹிந்துதுவாவினர் பாகிஸ்தான் கொடி ஏற்றி முஸ்லிம்கள் மீது பழி போடுவதிலிருந்து.....

  சர்வதேச அளவில் கனிம/எண்ணெய் வளத்துக்கோ அல்லது முஸ்லிம் நாடுகளின் வளர்ச்சி பொறுக்காமல் அவர்கள் மேல் பயங்கரவாத பழி போடுவது வரை...

  அனைத்தும் நிருத்தப்பட வேண்டும்..! உலகில் சமநீதி நிலவ வேண்டும். முஸ்லிம் நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் இஸ்லாமை பின்பற்ற பிற நாடுகள் அனுமதிக்க வேண்டும்.

  எனில், உலகில் அமைதி திரும்பும்.
  எனில், மீண்டும் பொற்காலம்தான் என்றும்..!
  போர்க்காலம் இல்லை என்றும்..!

  தேடிபிடித்து நல்லதொரு பதிவை பதிந்ததற்கு மிக்க நன்றி சகோ..! மேலும் தங்கள் சேவை தொடர அல்லாஹ்விடம் பிராத்திக்கின்றேன்..! எல்லா புகழும் இறைவனுக்கே.

  ReplyDelete
 24. உங்கள் ஆய்வை பார்த்தது மிகவூம் சந்தோசமாக இருக்கின்றது. இது அனைத்தும் அல்லாஹ்வூக்கே புகழ்அனைத்தும். அல்ஹம்துலில்லாஹ்...
  இஸ்லாமிய சமூகம் இந்தளவூ முன்னேறிக்கொண்டிருக்கின்றது என்பது மிகவூம் சந்தோசமான விடயம் தான்....

  இருப்பினும் ஒவ்வொரு முஸ்லிமும் சிந்திக்க வேண்டிய விடயம். நான் இந்த அறிவியல் வளர்ச்சிக்கு என்ன செய்தேன் என்ன செய்கின்றேன் என்ன செய்வேன் என்பதை சிந்தித்து பதில் பெர முயற்சிசெய்யூங்கள்.
  1. அல்லாஹ்விற்கு சிறந்த அடியானாக ஹலால் ஹராம் பேனி வாழ்வது.
  2. படித்த சமூதாயத்தில் நானும் ஒரு பங்காளியாக வருவது.
  என்பதில் முயற்சி செய்தல். அல்லாஹ் எமக்கு அவன் அருளை அருள்வானாக! ஆமீன்.

  ReplyDelete
 25. சுட்டியை சொடுக்கி படியுங்கள்


  1.
  காணத்தவறாதீர்கள். உலகிலேயே மிக பெரிய, மிக சிறிய திருகுரான் பிரதிகளின் அரிய சிறுகண்காட்சி விடியோக்கள் .
  மழலைகள், சிறார்கள் குரான் ஓதும் விடியோக்கள்.


  .


  2. ---- >
  புலிகளின் தமிழ்முஸ்லிம் இனஒழிப்பின் ஈரநினைவுகள். பகுதி 3.
  ஈழத்தில் புலிகளால் வதைக்கப்பட்ட இன அழிப்பு செய்யப்பட்ட‌ இஸ்லாமியர்கள் குறித்தப் பேச மறுப்பவனும் பேசுவதைத் தடைசெய்பவனும் தான் விரும்பிய குரலில் இஸ்லாமியர்களைப் பேச நிர்ப்பந்திப்பவனும் இஸ்லாமியர்களின் தோழனா அல்லது மூத்த‌ நரேந்திர மோடியா எனத் தோழர்கள் சிந்திக்க வேண்டும்.

  இலங்கையில் முஸ்லிம்களுக்கு நடந்திருப்பது என்ன? நடப்பது என்ன? என்பது பற்றி தெளிவாக இந்திய மக்களுக்கு கூற வேண்டியுள்ளது. உண்மை அறியாத மக்கள் கொடூரப் புலிகளுக்கு ஆதரவுக் கொடி தூக்குகின்றனர்
  < ----

  ==============

  ReplyDelete
 26. ஐயா ஒரு சந்தேகம்,

  கட்டுரையில் குறிப்பிடப்படும் வளர்ச்சி என்பது, குறிப்பிட்ட நாட்டில் முதலில் இருந்ததை விடவும் எவ்வளவு கூடியிருக்கிறது என்பதுதானே ? அதாவது முன்பு அறிவியல் ஆய்வுகளுக்கு $10 முதலீடு செய்த ஒரு நாடு இப்போது $100 முதலீடு செய்தால் வளர்ச்சி வீதம் 900% (9 மடங்கு அதிகம்).

  அப்படியானால் முஸ்லிம் நாடுகளின் வளர்ச்சி வீதத்தை ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பீடு செய்வது ஏற்றதா ?

  ReplyDelete
 27. salaam brother
  congrats wow this post reached tamilmanam 50 plus votes i think this is first time a post got 51 votes in tamilmanam history . masha allah keep it up

  ReplyDelete
 28. அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..

  அல்ஹம்துலில்லாஹ்..

  புதிய தகவல்களுடன் கூடிய அருமையான பதிவு..

  //இஸ்லாமிய உலகின் பெண்களின் நிலையானது இந்த தலைப்புச்செய்திகள் சித்தரிப்பதை காட்டிலும் வித்தியாசமானது என்று குறிப்பிடுகின்றது இராயல் கழகம்//
  //ஈரானில் நடைப்பெற்ற முதலாவது இஸ்லாமிய பெண் ஆய்வாளர்களின் கருத்தரங்கில் (27th January 2010), 37 நாடுகளில் இருந்து பெண் விஞ்ஞானிகள் கலந்துக்கொண்டனர்.//

  உண்மையில் நம் பெண்களின் கல்வி வளர்ச்சியும் அதில் அவர்களுக்குள்ள பங்களிப்பையும் பார்க்கும் போது வியப்பாகவும்,மிகுந்த சந்தோசமாகவும் உள்ளது..

  பின்னைடைவுக்கு..'ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு சகோதரன் போன்றவன் அவனுடைய துன்பத்தைப் போக்குவதும் மானத்தை மறைப்பதும் அவனின் கடமை' என்ற மார்க்கத்தின் போதனையை மறந்து அடுத்தவர்களின் தலையீட்டை அனுமதித்ததும் ஒரு காரணம்..

  //மீண்டும் பொற்காலம் திரும்புமா?//
  இறையருளால் கண்டிப்பாக பொற்காலம் திரும்பும்.

  மனதில் உற்சாகம் தரக்கூடிய ஒரு நல்ல பதிவை தந்ததற்கு நன்றி சகோதரரே..

  அல்லாஹ் உங்களுக்கு அதிகமதிகம் ரஹ்மத்தை கொடுக்க பிராத்திக்கிறேன்..
  ஜசகல்லாஹ் ஹைர்..

  ReplyDelete
 29. சகோதரர் சார்வாகன்,

  வ அலைக்கும் சலாம்,

  //இக்கட்டுரை பரிணாமம் ஆத‌ரிப்பது போல் உள்ளது வியப்பாக உள்ளது.//

  பரிணாமத்திற்கு எதிராக துருக்கியில் நடந்த ஒரு சம்பவத்தை, ராயல் கழக அறிக்கையில் இருந்த தகவலை பகிர்ந்தேன். அது பலத்த சர்ச்சையை உருவாக்கியதையும் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன்.

  பிறகு, சல்மான் குறித்து என்ன சொல்ல வருகின்றீர்கள் என்று புரியவில்லை.அவர் இப்படி சொல்கின்றார் அவர் சொல்வதை கேளுங்கள் என்று சொல்ல வருகின்றீர்களா என்று புரியவில்லை. அவர் கருத்தை அவர் கூறி இருக்கின்றார். எல்லோருக்கும் தங்களது கருத்தை, தங்கள் interpretation-னை கூற உரிமை உண்டு. சகோதரர் சல்மான் கூறிய சிலவற்றை படித்தேன். அதிலேயே நிறைய கேள்விகள். இன்ஷா அல்லாஹ் முழுமையாக படித்துவிட்டு தேவை இருந்தால் அவரிடமே கேட்கின்றேன்.

  இதையெல்லாம் விடுங்கள், பரிணாமத்தை பற்றி பேசும் போது why don't we follow the evidence...அதுவே மிகச்சிறந்தது..

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 30. சகோதரர் ராஜன்,

  உங்கள் மீது அமைதி நிலவுவதாக...ஆமீன்.

  நீங்கள் அறிவியல் வளர்ச்சியையும், முதலீடு வளர்ச்சியையும் போட்டு குழப்பிக்கொண்டிருப்பதாக தெரிகின்றது.

  //அதாவது முன்பு அறிவியல் ஆய்வுகளுக்கு $10 முதலீடு செய்த ஒரு நாடு இப்போது $100 முதலீடு செய்தால் வளர்ச்சி வீதம் 900% (9 மடங்கு அதிகம்)//

  இதற்கு பெயர் முதலீடு வளர்ச்சி.

  அறிவியல் வளர்ச்சி என்பது, ஒரு நாடு, எத்தகைய அறிவியல் முன்னேற்றங்களை சந்தித்துள்ளது, எத்தனை ஆய்வுகள் அங்கிருந்து வெளிவந்துள்ளன etc etc என்று குறித்த தகவல்களாகும்.

  இது குறித்து மேலும் அறிந்துக்கொள்ள, reference பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள ஆய்வறிக்கைகளை படியுங்கள். ஆய்வு நடத்தப்படும் விதம் குறித்து உங்களுக்கு மாற்று கருத்து இருந்தால் அந்த ஆய்வு நிறுவனங்களுக்கு உங்கள் நிலையை விளக்கி தொடர்புக்கொள்ளுங்கள்,

  தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..

  ReplyDelete
 31. வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

  நேரமின்மையால் தனித்தனியாக பதிலளிக்க இயலவில்லை..

  கருத்து தெரிவித்த அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் நன்றி..

  ஜசாக்கல்லாஹு க்ஹைரன் கதீரா...

  ReplyDelete
 32. வணக்கம் !

  //உலக சராசரியை விட 5.5 மடங்கு அதிகமாக அறிவியல் வளர்ச்சியை பெற்றுள்ள துருக்கியை பொருத்தவரை, 1990-2007 இடையேயான காலக்கட்டத்தில், அறிவியல் ஆய்வுகளுக்கான முதலீடு மட்டும் சுமார் 566% அதிகரித்துள்ளது. இது டென்மார்க், நார்வே மற்றும் பின்லாந்து போன்ற நாடுகளின் முதலீட்டை விட அதிகம். இதே காலக்கட்டத்தில், துருக்கியில் உள்ள ஆய்வாளர்களின் எண்ணிக்கை சுமார் 43% அதிகரித்துள்ளது.//

  எல்லாமே எண்ணிக்கைதான்.

  முஸ்லிம் நாடுகளின் அறிவியல் வளர்ச்சி ஐரோப்பிய நாடுகளை முந்துவதைப்போன்ற மயக்கத்தை தருகிறது உங்களின் பதிவு. ஐயோ பாவம்!

  ReplyDelete
 33. சகோதரர் ராஜன்,

  சலாம்..

  //எல்லாமே எண்ணிக்கைதான்.//

  தவறு. நீங்கள் மேலே கூறியவை எண்ணிக்கைதான். அதே நேரம், //அறிவியல் வளர்ச்சியில், உலகின் வேறெந்த நாட்டை விடவும் ஈரான் மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றது. உலக சராசரியை விட பதினொரு மடங்கு அதிகமாக அது பயனித்துக் கொண்டிருக்கின்றது// - இது போன்ற தகவல்கள் எண்ணிக்கை கணக்கு அல்ல.

  நீங்கள் சொன்னது முதலீட்டு வளர்ச்சி. நான் சொல்வது அறிவியல் வளர்ச்சி.

  இந்த பதிவு ராயல் அறிக்கையை மட்டுமே முன்வைத்து எழுதப்படவில்லை. பதிவில் தெளிவாக கூறப்பட்டுள்ளது இது.

  தயவுக்கூர்ந்து பதிவில் இருக்கும் reference அனைத்தையும் பாருங்கள். நீங்கள் சொல்வது தவறு என்று உணர்வீர்கள்.

  இது குறித்து விவாதிக்க ஒன்றுமில்லை. ஆதாரங்கள் உங்கள் கண் முன்னமே இருக்கின்றன.

  //முஸ்லிம் நாடுகளின் அறிவியல் வளர்ச்சி ஐரோப்பிய நாடுகளை முந்துவதைப்போன்ற மயக்கத்தை தருகிறது உங்களின் பதிவு//

  new scientist முதற்கொண்டு அப்படித்தான் சொல்கின்றன.

  நன்றி,

  ReplyDelete
 34. Aashiq Ahamed

  வணக்கம் !

  //தவறு. நீங்கள் மேலே கூறியவை எண்ணிக்கைதான். அதே நேரம், அறிவியல் வளர்ச்சியில், உலகின் வேறெந்த நாட்டை விடவும் ஈரான் மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றது. உலக சராசரியை விட பதினொரு மடங்கு அதிகமாக அது பயனித்துக் கொண்டிருக்கின்றது// - இது போன்ற தகவல்கள் எண்ணிக்கை கணக்கு அல்ல.

  நீங்கள் சொன்னது முதலீட்டு வளர்ச்சி. நான் சொல்வது அறிவியல் வளர்ச்சி. //

  நீங்கள் அறிவியல் வளர்ச்சியையும் எண்ணிக்கையில்தான் தந்திருக்கிறீர்கள். இல்லையென்று சொல்வீர்களேயானால் பதிவிலிருந்தே copy paste செய்து போடுகிறேன்.

  முஸ்லிம் நாடுகளின் அறிவியல் வளர்ச்சியில் முன்னேற்றம் என்பது, முன்பு மிக மிக பின் தங்கிய நிலையில் இருந்து சிறிது வளர்ந்திருக்கிறார்கள் என்பதே.

  உலக சராசரி உலகின் மிக ஏழ்மையான நாடுகளையும் சேர்த்து பெறப்படுவது. அதை கணக்கில் எடுக்காதீர்கள்.

  //new scientist முதற்கொண்டு அப்படித்தான் சொல்கின்றன. //

  //Islamic science: The revival begins here - New Scientist//

  இந்த லிங்கில் அப்படியொன்றும் இல்லையே ? இருந்தால் இங்கே சுட்டுங்களேன்.

  ReplyDelete
 35. சகோதரர் ராஜன்,

  உங்கள் மீது அமைதி நிலவுவதாக...

  நேரமின்மையால் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் இந்நேரத்தில் இம்மாதிரியான விதண்டாவாதத்திற்கு நேரம் செலவிடுவது மிகுந்த கஷ்டத்தை கொடுக்கின்றது சகோதரர்.

  நான் பதிவில் கொடுத்துள்ள ஒரு new scientist லின்க்கை பேஸ்ட் செய்த நீங்கள் இன்னொரு new scientist லிங்க்கும் கொடுத்திருக்கின்ரேனே அதை ஏன் விட்டீர்கள் சகோதரர்? அதன் தலைப்பே இது தான் "வேறெந்த நாட்டை விடவும் அறிவியல் வளர்ச்சியில் ஈரான் முன்னனியில் இருக்கின்றது" "Iran showing fastest scientific growth of any country"

  இதில் ஐரோப்பிய நாடுகள் வராதா சகோதரர்?

  அதில் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது. //Scientific output has grown 11 times faster in Iran than the world average, faster than any other country//

  இதிளும் ஐரோப்பிய நாடுகள் வராதா என்று தாங்கள் தான் யோசிக்க வேண்டும்.

  ஏழ்மையான நாடுகளை கணக்கில் கொள்ளப்பட்டுள்ளதால் இதனை ஏற்கக்கூடாது என்று நீங்கள் கூறுவது அபத்தமானது. ஏன் என்றால் இந்த சராசரியில் ஐரோப்பிய நாடுகளும் உண்டு என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு உலகிலேயே அது அறிவியல் வளர்ச்சி பெற்றதாக செய்தி வரவில்லை.

  அடுத்து, அறிவியல் வளர்ச்சி என்பது scientific output etc குறித்தானது. அதாவது எத்தனை ஆய்வுகள் சமர்பிக்கப்பட்டுள்ளன etc போன்றவற்றை கொண்டு கணக்கிடப்படுவது. இதற்கு தான் லிங்க்களை படிக்க சொன்னேன். அவற்றில் தெளிவாகவே இருக்கின்றது நான் கூறும் தகவல்.

  இவர்கள் கணக்கிடுவது தவறு என்றால், அந்த ஆய்வு நிறுவங்களுக்கு எப்படி கணக்கிட வேண்டும் என்று விளக்கி உங்கள் கருத்தை சொல்லுங்கள்.

  தேவை ஏற்பட்டால் ஒழிய, உங்கள் அடுத்த கருத்திற்கு என்னிடம் இருந்து பதிலை எதிர்பார்க்காதீர்கள்.

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

  ReplyDelete
 36. வணக்கம் !

  //நேரமின்மையால் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் இந்நேரத்தில் இம்மாதிரியான விதண்டாவாதத்திற்கு நேரம் செலவிடுவது மிகுந்த கஷ்டத்தை கொடுக்கின்றது சகோதரர்.//

  வாதமா விதண்டாவாதமா என்பதை வாசிப்பவர்கள் முடிவு செய்யட்டும்.

  //நான் பதிவில் கொடுத்துள்ள ஒரு new scientist லின்க்கை பேஸ்ட் செய்த நீங்கள் இன்னொரு new scientist லிங்க்கும் கொடுத்திருக்கின்ரேனே அதை ஏன் விட்டீர்கள் சகோதரர்? அதன் தலைப்பே இது தான் "வேறெந்த நாட்டை விடவும் அறிவியல் வளர்ச்சியில் ஈரான் முன்னனியில் இருக்கின்றது" "Iran showing fastest scientific growth of any country"

  இதில் ஐரோப்பிய நாடுகள் வராதா சகோதரர்?

  அதில் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது. //Scientific output has grown 11 times faster in Iran than the world average, faster than any other country//

  இதிளும் ஐரோப்பிய நாடுகள் வராதா என்று தாங்கள் தான் யோசிக்க வேண்டும்.//

  //இவர்கள் கணக்கிடுவது தவறு என்றால், அந்த ஆய்வு நிறுவங்களுக்கு எப்படி கணக்கிட வேண்டும் என்று விளக்கி உங்கள் கருத்தை சொல்லுங்கள்.//

  அவர்கள் பாரபட்சமில்லாமல் தகவல்களைத் தந்திருக்கிறார்கள். அவற்றை வேறு அர்த்தம் தரும் விதத்தில் உபயோகிப்பது நீங்கள். அறிவியலில் (வளர்ச்சி வீதத்தில் அல்ல‌) ஐரோப்பிய நாடுகளை விட ஈரான் முண்ணனியில் இருக்கிறது என்ற அர்த்தம் வரும் விதத்தில் இந்த பதிவு இல்லை என்றால் முடிந்தது.

  ReplyDelete
 37. சகோதரர் ராஜன்,

  அஸ்ஸலாமு அலைக்கும்,

  //வாதமா விதண்டாவாதமா என்பதை வாசிப்பவர்கள் முடிவு செய்யட்டும்.//

  பெர்பெக்ட்...சூப்பரா சொன்னீங்க. ஆம் வாசிப்பவர்கள் முடிவு செய்து கொள்ளட்டும்.

  //அவர்கள் பாரபட்சமில்லாமல் தகவல்களைத் தந்திருக்கிறார்கள். அவற்றை வேறு அர்த்தம் தரும் விதத்தில் உபயோகிப்பது நீங்கள்.//

  படிப்பவர்கள், தந்திருக்கும் ஆதாரங்கள் மற்றும் பதிவை ஒப்பீட்டு பார்த்து முடிவு செய்து கொள்ளட்டும்..

  தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 38. //ஏழ்மையான நாடுகளை கணக்கில் கொள்ளப்பட்டுள்ளதால் இதனை ஏற்கக்கூடாது என்று நீங்கள் கூறுவது அபத்தமானது. ஏன் என்றால் இந்த சராசரியில் ஐரோப்பிய நாடுகளும் உண்டு என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு உலகிலேயே அது அறிவியல் வளர்ச்சி பெற்றதாக செய்தி வரவில்லை.//

  மற்றைய நாடுகள் வளர்ச்சியை காட்டினாலும் ஏழ்மையான நாடுகளின் வளர்ச்சி வீதம் மிக குறைவாகவோ அல்லது மைனஸ் ஆகவோ இருந்தால் உலக சராசரியும் மிக குறையும்.

  ஐரோப்பாவை பற்றி பின்வரும் வரிகள் விளக்கும்,
  Meanwhile, "European attitudes towards collaboration are bearing fruit", writes Archambaut. While Asia's growth in output was mirrored by North America's fall, Europe, which invests heavily in cross-border scientific collaboration, held its own, and now produces over a third of the world's science, the largest regional share. Asia produces 29 per cent and North America 28 per cent.

  ReplyDelete
 39. வளர்ச்சி வீதத்தை விளக்க,

  நாடு A 2010 இல் சமர்ப்பித்த ஆய்வுகள் 1,00,000, 2011 இல் 1,10,000. வளர்ச்சி வீதம் 10%. நாடு B 2010 இல் சமர்ப்பித்த ஆய்வுகள் 10,000, 2011 இல் 30,000. வளர்ச்சி வீதம் 200%. A யுடன் ஒப்பிடும்போது B யின் வளர்ச்சி வீதம் 20 மடங்கு அதிகம். எனவே அறிவியலில் B முண்ணனியில் இருக்கிறது, அப்படியா ?

  இவை பதில் எதிர்பார்த்து அல்ல, வாசகர்களின் பார்வைக்கு.

  கடைசியாக ஒன்று, இரானின் அறிவியல் பெரும்பாலும் Nuclear சம்பந்தமானதாமே ? ச்சும்மா கேட்டேன். newscientist இல் போட்டிருந்தார்கள்.

  நன்றி ! வாழ்க வளமுடன் !

  ReplyDelete
 40. சகோதரர் ராஜன்,


  //நாடு A 2010 இல் சமர்ப்பித்த ஆய்வுகள் 1,00,000, 2011 இல் 1,10,000. வளர்ச்சி வீதம் 10%. நாடு B 2010 இல் சமர்ப்பித்த ஆய்வுகள் 10,000, 2011 இல் 30,000. வளர்ச்சி வீதம் 200%. A யுடன் ஒப்பிடும்போது B யின் வளர்ச்சி வீதம் 20 மடங்கு அதிகம். எனவே அறிவியலில் B முண்ணனியில் இருக்கிறது, அப்படியா ?//

  சகோ, திரும்ப திரும்ப ஒரே புள்ளியில் தான் வந்து நிற்கின்றீர்கள். scientific output வைத்து அறிவியல் வளர்ச்சியை கணக்கிட கூடாதென்றால் மாற்று வழியை முன்வைத்து அவர்களுக்கு சொல்லுங்கள்.

  //இவை பதில் எதிர்பார்த்து அல்ல, வாசகர்களின் பார்வைக்கு.//

  குட். இதையே தான் நானும் சொல்கின்றேன். பதிவு ஆதாரங்கள் எல்லார் கண்முன்னேயும் இருக்கின்றன. படிப்பவர்கள் ஒப்பிட்டு அறிந்துக்கொள்ளட்டும். ஒரு விஷயத்தை திரிக்க வேண்டும் என்றால் தெளிவான ஆதாரங்கள் கொடுத்து வாதிக்க தேவை இல்லை.

  இனியும் இந்த விதண்டாவாதத்தை தொடராமல் படிப்பவர் பார்வைக்கு விட்டுவிடுவோமே..

  நன்றி

  ReplyDelete
 41. //இனியும் இந்த விதண்டாவாதத்தை தொடராமல் படிப்பவர் பார்வைக்கு விட்டுவிடுவோமே//


  இனியும் இந்த விதண்டாவாதத்தை தொடராமல் படிப்பவர் பார்வைக்கு விட்டுவிடுவோம்

  நன்றி !

  ReplyDelete
 42. சகோதரர் ராஜன்,

  சலாம்

  இனியும் இந்த விதண்டாவாதத்தை தொடராமல் படிப்பவர் பார்வைக்கு விட்டுவிடுவோம்.

  புரிந்து கொண்டதற்கு மிக்க நன்றி...

  ReplyDelete
 43. "ஏழாம் நூற்றாண்டு தொடங்கி பதினாறாம் நூற்றாண்டு வரையிலான இஸ்லாமிய அறிவியல் பொற்காலமானது,"

  Assalamu alaikum Ji,

  Pure Islam originated only from 14th century, So 7 to 14th growth in since, like Algebra, algorithms are Arabian's discovery not an Islamian's.
  Please correct me IF I'm wrong..
  harshadmohamad@gmail.com

  ReplyDelete