Monday, January 23, 2012

'9/11 - என்ன மாதிரியான மதம் இது?'நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்..

                                                        "9/11 தாக்குதலின் போது, மனக்குழப்பத்தில் இருந்த பலரையும் போல, ஜோஹன்னாஹ் சகரிச் தன்னைத்தானே கேட்டுக்கொண்டார், 'இம்மாதிரியான செயலை செய்ய இவர்களை ஊக்குவிக்கிறதென்றால் என்ன மாதிரியான மதம் இது?'

இந்த சகோதரி, இஸ்லாத்தை தவிர மற்ற மதங்களை படித்திருக்கின்றார். இஸ்லாம் குறித்த தன்னுடைய எண்ணங்களை உறுதிப்படுத்திக்கொள்ள ஒரு குர்ஆன் பிரதியை வாங்கி வந்து படிக்க ஆரம்பித்தார். 

ஏழு வசனங்கள் கொண்ட  முதல் அத்தியாயம், அன்புடைய இறைவனிடம் இருந்து வழிகாட்டுதலை பெறுவதை பற்றி இருந்தது. சில வாரங்களில் குர்ஆன் முழுவதையும் படித்துவிட்டார் சகரிச். 9/11 அரங்கேறி சுமார் பத்து வாரங்களுக்கு பிறகு, 'நான் இப்போது உணர ஆரம்பித்தேன்' என்று கூறும் இவர், 'நான் ஒரு முடிவை தற்போது எடுக்க வேண்டும்' 

இஸ்லாம் குறித்து மிகத் தீவிரமாக ஆராய ஆரம்பித்தார் சகரிச். இசை பயிற்றுவித்து கொண்டிருந்த இவர், சில மாதங்களில், பாஸ்டனில் உள்ள இஸ்லாமிய கழகத்தில் ஷஹாதா(1) எனப்படும் இஸ்லாமிய உறுதிமொழியை கூறி முஸ்லிமாகிவிட்டார். 

சகரிச் நினைவு கூறுகின்றார், 'ஆச்சர்யமாக இருக்கின்றது. ஒரு நடுத்தர வயது பெண்மணி, யாரையும் சார்ந்து வாழாதவள், அப்போது அதிகம் விமர்சிக்கப்பட்ட மார்க்கத்தை நோக்கி திரும்பியிருக்கின்றேன்'. 

ஆம். தீவிரவாதத்தோடும், வன்முறையோடும் தொடர்புப்படுத்தப்பட்ட ஒரு மார்க்கத்தை நோக்கி, அதுவும் 9/11-க்கு பிறகு, அமெரிக்கர்கள் திரும்பியது ஆச்சர்யமான ஒன்றே. ஜோஹன்னாஹ் சகரிச் போல, ஒரு ஆர்வத்தால் இஸ்லாமை படிக்க ஆரம்பித்து பின்னர் அதனை தழுவியது ஒரு சிலரல்ல. அப்படியாக நிறைய பேர் இருக்கின்றனர். 

வல்லுனர்களின் தகவலின்படி, 9/11-க்கு பிறகு முஸ்லிமானவர்களில் பெண்களே பெரும்பான்மையினர்.  இனரீதியாக, ஹிஸ்பானிக்ஸ் (ஸ்பானிஷ் மொழி பேசுபவர்கள்) மற்றும் ஆப்பிரிக்க அமெரிக்க மக்களே அதிகமாக இஸ்லாத்தை தழுவுகின்றனர். 

ஒவ்வொரு வருடமும், அமெரிக்காவில், எத்தனை பேர் இஸ்லாமை நோக்கி வருகின்றனர் என்பது குறித்த தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை என்றாலும், சுமார் 20,000 பேர் வரை அது இருக்கலாம் என்று மதிப்பீடு செய்திருக்கின்றனர். 

சிலருடைய இஸ்லாமிய தழுவல்கள் தலைப்பு செய்தியாக மாறி விடுகின்றன.  தாலிபான்களால் சிறைவைக்கப்பட்டு வெளியான பின்னர் இஸ்லாத்தை தழுவிய சகோதரி யுவான் ரிட்லி, பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் உறவினரான சகோதரி லாரன் பூத், சென்ற வருடம் இஸ்லாத்தை தழுவிய rap இசை பாடகரான சகோதரர் லூன் போன்றவர்களை இதற்கு உதாரணமாக கூறலாம். 

தென் கரோலினாவை சேர்ந்த ஏஞ்சலா கொலின்ஸ், எகிப்து முதல் சிரியா வரை பல நாடுகளுக்கு பயணப்பட்டவர். அந்த நாடுகளில் உள்ள மக்களின் அன்பாலும், பெருந்தன்மையாலும் கவரப்பட்டவர். 9/11-க்கு பிறகு, முஸ்லிம்களுக்கு எதிரான மனநிலை நிலவிய போது, அதனை எதிர்க்கொள்ள முடிவு செய்தார்.

'என் நாடு இவர்களை தீவிரவாதிகளாகவும், பெண்களை அடிமைப்படுத்துபவர்களாகவும் தனிமைப்படுத்துவதை கண்டேன். இம்மாதிரியான உண்மைக்கு புறம்பான ஒன்றை நான் கற்பனை செய்ததில்லை. இவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டுமென்று முடிவு செய்தேன். அப்போது, இஸ்லாம் குறித்த தெளிவான அறிவு இல்லாமல் இவர்களுக்காக வாதிட முடியாது என்பதை உணர்ந்தேன்'   

இஸ்லாமை தழுவிய மற்றவர்களை போலவே, திருத்துவம் உள்ளிட்ட சில கிருத்துவ நம்பிக்கைகள் தனக்கு என்றுமே சரியென பட்டதில்லை என்று கூறுகின்றார் ஏஞ்சலா

இஸ்லாமை படிக்க ஆரம்பித்த இவர், 9/11 நடந்து சில மாதங்களுக்கு பிறகு இஸ்லாமை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார். 'இறைவன் என்றால் யார் என்பது குறித்த இஸ்லாமின் விளக்கம் மிக அழகானது. என் மனதில் இருந்த எண்ணங்களுடன் அது ஒத்துப்போனது' என்று கூறுகின்றார் ஏஞ்சலா. 

சிகாகோவை சேர்ந்த சகோதரி கெல்லி காப்மேனும் இதே போன்றதொரு அனுபவத்தை கூறுகின்றார். ஒபாமாவிற்காக தேர்தலில் பிரச்சாரம் செய்த இவரை, இவரது உறவினர்கள் கண்டித்தனர். அதற்கு காரணம், ஒபாமாவை முஸ்லிம் என்று அவர்கள் தவறாக நினைத்துவிட்டனர். இது, இஸ்லாம் குறித்து அறிந்துக்கொள்ள சகோதரி கெல்லியை தூண்டியது. 

சுமார் ஒரு வருட ஆய்வுக்கு பிறகு, எந்த விதமான தவறையும் இஸ்லாத்தில் அவர் காணவில்லை. அமைதிக்கு எதிராக இஸ்லாம் இருக்கின்றது என்று ஒரு பொதுக்கூட்டத்தில் ஒருவர் பேச, அதனை நேருக்கு நேராக எதிர்க்கொண்டார் கெல்லி. இந்த சமயத்தில் தான் இஸ்லாமை தன் வாழ்வியல் நெறியாக கெல்லி ஏற்றுக்கொண்டார். 

இஸ்லாமை ஏற்பவர்களின் எண்ணிக்கை மெதுவாக, அதேநேரம் உறுதியாக உயர்ந்து வருகின்றது. இதனை எதிர்கொள்ள பள்ளிவாசல்கள் பல்வேறு ஏற்பாடுகளை செய்கின்றன. தொழுகைகள், பிரார்த்தனைகள், அடிப்படை நம்பிக்கைகள், ஒழுக்கம் என்று இவை குறித்த வகுப்புகள் இங்கு புதியவர்களுக்காக நடத்தப்படுகின்றன. 

வெல்மிங்டனில் உள்ள இஸ்லாமிய மையத்தின் புதிய முஸ்லிம்களுக்கான வகுப்புகளை உருவாக்கும் பொறுப்பை ஏற்றுள்ள வக்கார் ஷரீப், தன்னுடைய பள்ளிவாசலில் ஒவ்வொரு மாதமும் 4-5 பேர் இஸ்லாத்தை தழுவுவதாக கூறுகின்றார். 

உற்சாகத்துடன் இருந்தாலும், தங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் எதிர்வினையை எண்ணி வருத்தப்படுகின்றனர் சில புதிய முஸ்லிம்கள். மன உளைச்சலுக்கும், தாக்குதலுக்கும் தாங்கள் ஆளாக்கப்படலாம் என்றும் அவர்கள் எண்ணுகின்றனர். 

'இஸ்லாம் மீதான தவறான எண்ணம் சற்றே களையும் வரை, இதுப்போன்ற சூழ்நிலையை நாங்கள் எதிர்க்கொண்டுதான் ஆக வேண்டுமென்று நினைக்கின்றேன்' என்று கூறுகின்றார் கெல்லி. இவருடைய பெற்றோர்கள் தங்கள் மகளின் முடிவை ஏற்றுக்கொண்டாலும், கெல்லியின் மாமா தன் மகளை இவரை பார்க்கக்கூடாதென்று தடை விதித்துவிட்டார். 'எதற்காக இவர்கள் எங்களை பார்த்து அச்சப்பட வேண்டும்?'

த்ரிஷா ஸ்கோயர்ஸ் முஸ்லிமாகி இன்னும் ஒரு மாதம் கூட முடிவடையவில்லை.  தன்னுடைய முடிவை தன் நண்பர்கள் சிலரிடம் கூறிய த்ரிஷாவிற்கு கிடைத்ததோ கலவையான எதிர்வினைகளே.

வேலைக்கு போகும் போது ஹிஜாப்(2) அணிவதில்லை த்ரிஷா. தன் மேலாளர் இதுக்குறித்து என்ன சொல்லுவார் என்ற தெளிவின்மையே இதற்கு காரணம். 

எனினும், மற்ற புதிய முஸ்லிம்களோ, இதுப்பற்றியெல்லாம் கவலைப்படுவதாக தெரியவில்லை. 

'என்னை இந்த சமூகம் ஏற்றுக்கொள்ளுமா என்பது பற்றியெல்லாம் நான் கவலைப்படுவதில்லை' என்று கூறும் ஏஞ்சலினா, தன்னை போலவே இஸ்லாத்தை தழுவிய தன் கணவருடன் தற்போது பிரேசிலில் வசித்து வருகின்றார், 'இறைவனை நான் கண்டுக்கொண்டேன். அது எனக்கு போதுமானது'"   

சில மாதங்களுக்கு முன்பாக (24/08/2011) "Huffington Post" இணையத்தில் வெளியான கட்டுரை தான் நீங்கள் மேலே படித்தது. 

இஸ்லாம் மீது எதிர்மறையான கருத்துக்களை கொண்டவர்களுக்கான என்னுடைய வேண்டுகோள் மிக எளிமையானது. உங்களைப்போல நிறைய பேர் இங்கு உண்டு. அவர்களில் பலர் குர்ஆனை திறந்த மனதோடு படித்த பிறகு தங்கள் மனதை மாற்றிக்கொண்டதும் உண்டு. சில நாட்களிலேயே முழுமையாக படித்து முடித்து விடக்கூடிய குர்ஆனை நீங்கள் ஏன் முன்முடிவின்றி படித்துப்பார்க்க முன்வரக்கூடாது? 

குர்ஆன் அர்த்தங்களின் தமிழ் மொழிபெயர்ப்பை ஆன்லைனில் முழுமையாக படிக்க ஆர்வமுள்ளவர்கள் <<இங்கே>> சுட்டவும். அல்லது pdf வடிவில் பெற விரும்புபவர்கள் எனக்கு ஒரு மெயில் அனுப்பவும் (aashiq.ahamed.14@gmail.com).     

சமீபத்தில் நான் கண்ட காணொளிகளில் என்னை மிகவும் பாதித்த ஒன்றை இங்கே உங்களுடன் பகிர்ந்துக்கொண்டு விடைபெறுகின்றேன். இந்த பனிரெண்டு வயது சிறுவனுக்கும், அவனை அற்புதமாக வளர்த்திருக்க கூடிய அவனது பெற்றோருக்கும் மிகச்சிறந்த நற்கூலியை இறைவன் தந்தருள்வானாக...ஆமீன்.


சகோதரர் முஹம்மது ஆஷிக் இன்று வெளியிட்டுள்ள அதிரடியான பதிவையும் பார்த்துவிடுங்கள்... <<போலி நாத்திகம் எனும் நடுநிலை முக்காடு>>

இறைவன் நம்மை நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.  

வார்த்தைகளுக்கான விளக்கங்கள்:
1. ஷஹாதா - இறைவன் ஒருவனே என்றும், முஹம்மது (இவர்கள் மீது அமைதி நிலவுவதாக) அவர்கள் இறைவனின் தூதர் என்றும் கூறப்படும் உறுதிமொழி.  
2ஹிஜாப் - பல்வேறு அர்த்தங்களை கொண்டது. இங்கே, முகம் கைமணிகட்டு தவிர்த்து உடலின் மற்ற பாகங்கள் மறையுமாறு உடையணியும் முறையை குறிப்பிடுகின்றது. 

குறிப்பு:
1. இந்த பதிவு வார்த்தைக்கு வார்த்தையான மொழிபெயர்ப்பு அல்ல. அது போல, மொழிபெயர்க்க கடினமாக இருந்த சில வரிகள் தவிர்க்கப்பட்டுள்ளன. இதனை அதன் மூல மொழியில் முழுமையாக படிக்க விரும்புபவர்கள் கீழே உள்ள லின்க்கை சுட்டவும். 

Reference:
1. Conversion To Islam One Result Of Post-9/11 Curiosity - Huffington Post, dated 24th August 2011. link

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ 


38 comments:

 1. சலாம் நண்பரே இறைவன் தங்களுக்கு கல்வி அறிவை மென்மேலும் விசலமாக்குவானாக வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 2. Assalamu alikum bro! Alhamdulilah
  good post bro! Jazhkallahu kair

  ReplyDelete
 3. Assalamu alikum bro! Alhamdulilah
  good post bro! Jazhkallahu kair

  ReplyDelete
 4. நண்பரே ஒரு சந்தேகம் உங்களிடம் கேட்கலாமா. அது இஸ்லாம் குறித்தது.

  ReplyDelete
 5. மக்களை பிளவுபடுத்துகிறது மீடியா.- - "நீதிபதி மார்கண்டேய கட்ஜு"

  ஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் ‘குண்டு வைத்தது நாங்கள் தான் என்று இந்தியன் முஜஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘ என்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன.

  அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள்.

  எஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும். யாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது?

  முஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா.

  எந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.

  மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்.

  நிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.

  மீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்?

  குண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்தது
  என்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்? - "நீதிபதி மார்கண்டேய கட்ஜு"
  ---------------------------------------------
  பெரியாரிஸ்டுகளான கலைஞரும், வீரமணியும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக யாரும் பெரியாரையோ அல்லது அவரின் தத்துவங்களையோ சாடுவதில்லை.

  நந்திகிராமில் எளிய மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விட்டது கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்பதற்காக யாரும் கம்யூனிசத்தை திட்டுவதில்லை.

  நாடு முழுவதும் குண்டு வைக்கும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இந்துக்கள் என்பதற்காக யாரும் இந்து மதத்தை விமர்சிப்பதில்லை.

  உலகம் முழுவதும் மக்களை கொன்று குவிக்கும் அமெரிக்கா கிறிஸ்துவர்கள் என்பதற்காக யாரும் கிறுஸ்தவத்தை விமர்சிப்பதில்லை.

  ஆனால், இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் செய்கின்ற அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தைத் தான் காய்ச்சி எடுக்கின்றனர்.

  இந்த ஒரு விசயத்தில் மட்டும் பெரியாரிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், இந்துத்துவ சக்திகளும் ஊடகங்களூம் , வலைப்பதிவர்களும் ஒன்றுபோல் உள்ளனர்.

  ராஜபக்சே வுக்கு இந்தியாவில் பாதுகாப்பளித்து வரவேற்கப்படுவதை எதிர்ப்பவர்களே கண்டிப்பவர்களே! இதை பயங்கர படுங்கொலைகாரர்களான அத்வானிக்கும் நர மோடிக்கும் செய்தீர்களா?
  ---------------------------------------

  இலங்கையில் முஸ்லிம்களுக்கு நடந்திருப்பது என்ன? நடப்பது என்ன? என்பது பற்றி தெளிவாக இந்திய மக்களுக்கு கூற வேண்டியுள்ளது. உண்மை அறியாத மக்கள் கொடூரப் புலிகளுக்கு ஆதரவுக் கொடி தூக்குகின்றனர்

  பாஸிச வெறியர்களினால் இலங்கை முஸ்லிம்கள பாதிக்கப்பட்டவர்களாக, இருக்கிற இடமே தெரியாத நிலையில் இருக்கும் போது இந்தியா வாழ் தமிழர்களில் பலர் இந்தப்பிரச்சினை பற்றி தெளிவான அறிவின்றி இந்த கொடும் புலிகளை ஆதரிப்பதை நாம் காணும் போது மனம் வேதனையடைகிறது.

  இவர்கள் தமிழனின் உரிமைக்காக போராடுகின்றார்கள் என்று வெளி உலகம் நினைக்கிறது. ஆனால் புலிகள் இயக்கத்தினர் தமிழர்களுக்கே எதிரானவர்கள் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன.

  ஈழத்தில் புலிகளால் வதைக்கப்பட்ட, இன அழிப்பு செய்யப்பட்ட‌ இஸ்லாமியர்கள் குறித்துப் பேச மறுப்பவனும் பேசுவதைத் தடைசெய்பவனும் தான் விரும்பிய குரலில் இஸ்லாமியர்களைப் பேச நிர்ப்பந்திப்பவனும் இஸ்லாமியர்களின் தோழனா அல்லது மூத்த‌ நரேந்திர மோடியா எனத் தோழர்கள் சிந்திக்க வேண்டும்.


  CLICK AND READ.

  1.
  பகுதி 1. ஈழத்தமிழ் முஸ்லீம் இன‌ஒழிப்பு. மன்னித்து மறந்துவிடுங்கள்.


  2.
  பகுதி 2. புலிகளின் முஸ்லீம் இன அழிப்பு. மன்னிப்போம் மறக்கமாட்டோம்.


  3.
  பகுதி 3. புலிகளின் தமிழ்முஸ்லிம் இனஒழிப்பின் ஈரநினைவுகள்..


  ..

  //சிராஜ் said...
  விடுங்க சகோ, வரலாற்றில் நாம் பார்க்காத எதிர்ப்பா??? எல்லா எதிர்ப்பையும், பொய்ச் பிரச்சாரங்களையும் தாண்டி உலகில் அதி வேகமாக வளரும் மதம்(In terms of conversion ) என்ற பெருமையை இந்த நொடி வரை தக்க வைத்துள்ளோம். ஒப்பிடக்கூட நமக்கு அருகில் யாரும் இல்லை என்பதுதான் இதில் ஹைலைட் . இந்த நூற்றாண்டு நமக்கானது, இன்ஷா அல்லாஹ். - சிராஜ் said...//
  ---------------------------------------

  ReplyDelete
 6. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 7. சகோதரர் அக்கப்போறு,

  உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுதாக...

  கேளுங்கள் சகோதரர். உங்களுக்கு பதில் சொல்லும் அளவு இறைவன் எனக்கு கல்வி அறிவை கொடுத்திருந்தால் பதில் சொல்கின்றேன்.

  பொதுவில் கேட்பதில் ஏதேனும் தயக்கம் இருந்தால் மெயில் அனுப்புங்கள்.

  அதுபோல, இஸ்லாம் குறித்த கேள்வி கேட்கும் போது, குர்ஆனை முதலில் நீங்கள் முழுமையாக படித்துவிடுவது நல்லது. ஏனென்றால் நீங்கள் என்னிடம் கேட்க நினைக்கும் பல கேள்விகளுக்கு குரானை படிப்பதால் பதில் கிடைக்கலாம் (இறைவன் நாடினால்). ஆகையால் தாங்கள் இதுவரை குர்ஆன் படித்ததில்லை என்றால் எனக்கு ஒரு மெயில் அனுப்புங்கள் (aashiq.ahamed.14@gmail.com). அனுப்பி வைக்கின்றேன்..

  நன்றி

  ReplyDelete
 8. சகோதரர் பராரி,

  வ அலைக்கும் சலாம்,

  தங்களின் வருகைக்கும் துவாவிற்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 9. சகோதரர் ஜாபர் கான்,

  வ அலைக்கும் சலாம்,

  வருகைக்கும் துவாவிற்கும் நன்றி...

  ReplyDelete
 10. வாஞ்சூர் அப்பா அவர்களுக்கு,

  அஸ்ஸலாமு அலைக்கும்,

  பயனுள்ள தகவல்களுக்கு ஜசாக்கல்லாஹு க்ஹைர்..

  ReplyDelete
 11. சகோதரர் ஹைதர் அலி,

  வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு..

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரர்..

  ReplyDelete
 12. tamil moliyil quran tafsir(ibn kathir,tafheem) pdf vadivil kidayikuma

  ReplyDelete
 13. சகோதரர் sailan,

  அஸ்ஸலாமு அலைக்கும்,

  மெயில் அனுப்புங்கள் சகோதரர்..

  வஸ்ஸலாம்..

  ReplyDelete
 14. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ ஆஷிக்!

  அருமையான பதிவு. இஸ்லாத்தை தவறாக விளங்கியிருக்கும் பல மாற்று மத சகோதரர்கள் தெளிவடையும் விதத்தில் பதிவை தந்ததற்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. Naam anaivarum meetapadum oruvanidam ellam kariyathayum vittu viduvom. . . Melum ithu mathiri'ya pathivukailai veli vidum unkaluku ALLAH arul purivanaka. . .

  ReplyDelete
 16. Naam anaivarum meetapadum oruvanidam ellam kariyathayum vittu viduvom. . . Melum ithu mathiri'ya pathivukailai veli vidum unkaluku ALLAH arul purivanaka. . .

  ReplyDelete
 17. Naam anaivarum meetapadum oruvanidam ellam kariyathayum vittu viduvom. . . Melum ithu mathiri'ya pathivukailai veli vidum unkaluku ALLAH arul purivanaka. . .

  ReplyDelete
 18. Insha Allah. . Mudintha varai ovvoruvarum islam patriya unmai karuthukalai eduthuraika ALLAH arul purivanka. .

  ReplyDelete
 19. http://www.vinavu.com/2012/01/23/tyranny-of-saudi-oger/

  ReplyDelete
 20. சலாம்சகோ...

  நிச்சயம் இஸ்லாம் பற்றி படிப்பவர்களின் மனம் மாற்றம் அடைகிறது என்பதே உண்மை...அதை சில பேர் வெளியே சொல்கிறார்கள்...பல பேர் மறைக்கிறார்கள்..

  ReplyDelete
 21. ஸலாம், ஆஷிக்.

  மாஷாஅல்லாஹ்.

  இவர்களுடைய தேடலும் கவலையும் உண்மையாயிருந்தால் குர்ஆனை படிக்கட்டும், அதில் தீர்விருக்கிறது என்பதை தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

  போலிகளும் முகமூடிகளும் படிக்க மாட்டார்கள்.

  ReplyDelete
 22. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  //'9/11 - என்ன மாதிரியான மதம் இது?'//
  என்ற தலைப்பை படித்ததும் 9/11ஆல் பாதிக்கப்பட்ட ஒரு க்ரூப் இஸ்லாத்திற்கு எதிராக தோன்றியுள்ளதோ என நினைத்தேன். அல்ஹம்துலில்லாஹ்

  அருமையான பகிர்வு

  ReplyDelete
 23. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.

  நெகிழ்ச்சியான பதிவு.

  ReplyDelete
 24. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

  அல்ஹம்துலில்லாஹ்!

  9/11 தொடர்பாக உங்கள் தளத்திலும் அருமையான பதிவு!.

  இஸ்லாத்தை குறைந்த பட்சம் முன்முடிவுகளன்ற நோக்கிலாவது அணுகினாலே போதும். அவர்களின் மன நிலையில் தெளிவான மாற்றம் வரும் என்பதை தான் மீண்டுமொரு முறை நிருபித்து இருக்கிறது மேற்கண்ட சகோ' க்களின் வாழ்வியல்கள்

  பகிர்ந்த பதிவிற்கு
  ஜஸாகல்லாஹ் கைரன் சகோ

  ReplyDelete
 25. சகோதரர் சுவனப்பிரியன்,

  வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

  அல்ஹம்துலில்லாஹ். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

  ReplyDelete
 26. சகோதரர் நஷீர்,

  அஸ்ஸலாமு அலைக்கும்,

  தங்களுடைய கருத்துக்களுடன் உடன்படுகின்ரேன். தங்கள் துவாவிற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 27. வினவு லிங்க் கொடுத்துள்ள அனானி அவர்களுக்கு,

  உங்கள் மீது அமைதி நிலவுவதாக...

  அந்த வினவின் பதிவிற்கு அன்றைய தினமே முஹம்மது ஆஷிக் அவர்கள் தன் பதிவில் பதில் சொல்லிருந்தாரே. பார்க்கலையா நீங்கள்? பார்க்கவில்லை என்றால் இதோ அந்த லிங்க்

  http://pinnoottavaathi.blogspot.com/2012/01/blog-post_23.html

  நன்றி பிரதர்.

  ReplyDelete
 28. சகோதரர் ஹாஜா மைதீன்,

  வ அலைக்கும் சலாம்,

  உண்மைதான். அல்ஹம்துலில்லாஹ்.

  ReplyDelete
 29. வாஞ்சூர் அப்பா,

  அஸ்ஸலாமு அலைக்கும்,

  சுட்டிகளுக்கும் வருகைக்கும் நன்றி..

  ReplyDelete
 30. சகோதரர் பீர்,

  வ அலைக்கும் சலாம்,

  ஊக்கத்திற்கு நன்றி...அல்ஹம்துலில்லாஹ்,

  ReplyDelete
 31. சகோதரர் சீனி,

  அஸ்ஸலாமு அலைக்கும்,

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

  ReplyDelete
 32. சகோதரி ஆமினா,

  வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

  ஊக்கத்திற்கு நன்றி...

  ReplyDelete
 33. சகோதரர் பாஸித்,

  வ அலைக்கும் சலாம்,

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

  ReplyDelete
 34. சகோதரர் குலாம்,

  வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

  ReplyDelete
 35. சலாம் சகோ...

  இஸ்லாத்தை குறைந்த பட்சம் முன்முடிவுகளன்ற நோக்கிலாவது அணுகினாலே போதும். அவர்களின் மன நிலையில் தெளிவான மாற்றம் வரும் என்பதை தான் மீண்டுமொரு முறை நிருபித்து இருக்கிறது மேற்கண்ட சகோ' க்களின் வாழ்வியல்கள். நிச்சயம் இஸ்லாம் பற்றி படிப்பவர்களின் மனம் மாற்றம் அடைகிறது என்பதே உண்மை...அதை சில பேர் வெளியே சொல்கிறார்கள்...பல பேர் மறைக்கிறார்கள்

  ReplyDelete