Wednesday, August 1, 2012

பெங்களூர் - ஒலிம்பிக்ஸ் 2012 - இஸ்லாமை நோக்கி மக்கள்நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்...

பெங்களூர் மாநகரம். 

1. தன் கார் பழுதடைந்ததால் ஆட்டோவுக்காக காத்திருக்கின்றார் அந்த ஹிந்து சந்நியாசி. ஆட்டோ வருகின்றது. உட்காரும்போதே அவரை ஆச்சர்யம் தொற்றிக்கொள்கின்றது. தன் கண்ணெதிரே இருந்த இஸ்லாம் குறித்த துண்டுப்பிரசுரங்களை ஆர்வமாக எடுத்து படிக்க ஆரம்பிக்கின்றார். வியப்புடன் அந்த வார்த்தைகள் அவரிடம் இருந்து வெளிப்படுகின்றன "நீங்கள் எப்படியெல்லாம் இஸ்லாமை பரப்புகின்றீர்கள் என்பதை ஆச்சர்யத்துடன் பார்க்கின்றேன்". 

இஸ்லாம் குறித்து மேலும் அறிந்துக்கொள்ளும் ஆர்வம் அவருக்கு மிகுந்துவிட, அந்த ஆட்டோ ஓட்டுனரான  ஹபிஸ் முஹம்மத் சாதிக்கிடம் "குர்ஆன் அர்த்தங்களின் கன்னட மொழிப்பெயர்ப்பை" அனுப்புமாறு கேட்டுக்கொள்கின்றார். 

2. இதே போன்றே மற்றொரு நிகழ்வை விவரிக்கின்றார் மற்றொரு ஆட்டோ ஓட்டுனரான பாஷா. அன்று ஹெப்பலில் (Hebbal) இருந்து ஒரு வாடிக்கையாளரை ஏற்றிக்கொண்டு ஒரு தொலைத்தூர பயணத்திற்கு ஆயத்தமாகின்றார் பாஷா. பயணத்தின் போது அந்த ஆட்டோவில் இருந்த இஸ்லாம் குறித்த அனைத்து பிரசுரங்களையும் படித்த அந்த கஸ்டமர், தன் வீட்டு முகவரியை கொடுத்து குர்ஆன் அனுப்ப முடியுமா என்று கேட்டுக்கொள்ள பாஷாவிற்கு மகிழ்ச்சி தாளவில்லை.

அடுத்த நாளே குர்ஆன் அடங்கிய பரிசுப்பெட்டகத்தை அந்த கஸ்டமரின் வீட்டிற்கு சென்று கொடுக்கின்றார் பாஷா. புத்தகங்களுக்கு விலையாக ஆயிரம் ருபாய் நோட்டை எடுத்து அந்த வாடிக்கையாளர் நீட்ட நெகிழ்ச்சியுடன் கூறினார் பாஷா, "இல்லை சார். எனக்கு வேண்டாம். மறுமை நாளில் இதற்குரிய வெகுமதி எனக்கு கிடைத்தால் போதும்". 

பாஷாவின் பதில் ஒரு கணம் அந்த வாடிக்கையாளரை திகைக்க வைக்க தன் ஆசையை வெளிப்படுத்தினார் பாஷா, "என்னுடைய ஒரே ஒரு வேண்டுகோள், குர்ஆனை நீங்கள் படித்து புரிந்துக்கொண்டு உங்கள் குடும்பத்தினருக்கும் இந்த செய்தியை ஏற்றிவைக்க வேண்டும் என்பதுதான். உங்கள் நண்பர்களுக்கும் குர்ஆனை அறிமுகப்படுத்தி அவர்களுக்கும் நான் இத்தகைய பரிசுப்பெட்டகத்தை கொடுக்கும் நிலை ஏற்பட்டால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்".

3. வெள்ளரா சந்திப்பில் நிசார் அஹமது அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவம் சற்றே கிலியூட்டக்கூடியது. அவருடைய ஆட்டோவை பின்தொடர்ந்து வந்த போலிஸ் ரோந்து வாகனம் அவரை மடக்கியது அந்த சந்திப்பில் தான். 

முகத்தில் கலவரத்துடன் என்னவோ ஏதோ என்று பயந்து விசாரிக்க சென்ற அஹமதுவிடம் அந்த ரோந்து வாகனத்தில் இருந்த போலீஸ்காரர், "எனக்கு 'இஸ்லாம் குறித்த தவறான புரிதல்கள்' என்ற புத்தகத்தை கொடுக்க முடியுமா? பாதுகாப்பு பணியில் ஒருமுறை ஈடுபட்டிருந்த போது அதனை பார்த்திருக்கின்றேன். அன்றிலிருந்து அந்த புத்தகத்தை தேடிக்கொண்டிருக்கின்றேன். இன்று உங்கள் ஆட்டோவில் அந்த புத்தகத்தை கண்டவுடன் உங்களை பின்தொடர ஆரம்பித்துவிட்டேன்" என்று காரணத்தை கூறினார். 

மகிழ்ச்சியுடன் அந்த புத்தகத்தை அதிகாரிக்கு பரிசளித்துவிட்டு நடையை கட்டினார் நிசார் அஹமது. 

இந்த நிகழ்வுகள் உங்களில் பலருக்கு வியப்பையும், இவையெல்லாம் என்ன என்று அறியும் ஆர்வத்தையும் கொடுத்திருக்கலாம். நமக்கே இப்படியென்றால், இந்த பணியை செய்யும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு  எப்படியிருக்கும்? 

சென்ற மாதத்தின் பிற்பகுதியில் பெங்களூர் நகரின் முஸ்லிம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஒரு இனம் புரியாத பரபரப்பும், மகிழ்ச்சியும் தொற்றிக்கொண்டிருந்தது. சும்மாவா என்ன? இதுநாள் வரை வாடிக்கையாளர்களை ஏற்றி சென்றுக்கொண்டிருந்த அவர்களது வாகனம், இனி இறைச்செய்திகளையும் தாங்கி செல்லப்போகின்றது. 

இந்த செயல்திட்டத்திற்கு பின்னால் இருப்பது "சலாம் சென்டர்" என்ற அமைப்பு. இவர்களுடைய அணுகுமுறை நிச்சயம் புதுமையானது, புரட்சிகரமானது. இஸ்லாம் குறித்த தவறான புரிதலை களையவும், இஸ்லாமை எடுத்துக் கூறவும் ஆட்டோக்களில் சிறிய அளவிலான இஸ்லாமிய நூலகத்தை அமைத்து அழைப்பு பணியை மேற்கொண்டுள்ளது இந்த அமைப்பு. 

ஓட்டுனருக்கு பின்புறம், அழகாக வடிவமைக்கப்பட்ட ஸ்டாண்டில், இஸ்லாம் குறித்து பல்வேறு தலைப்புகளில் துண்டுப்பிரசுரங்கள் வைக்கப்படுகின்றன. பயணம் செய்பவர்கள் அந்த பிரசுரங்களை எடுத்து படிக்குமாறு ஊக்கப்படுத்தப்படுகின்றார்கள். இஸ்லாம் குறித்து மேலும் அறிந்துக்கொள்ள விரும்புபவர்கள் தங்கள் முகவரியை கொடுப்பதின் மூலம் குர்ஆன், நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு, இஸ்லாம் குறித்த தவறான புரிதல்களை விளக்கும் ஒரு புத்தகம் ஆகியவை அடங்கிய பரிசுப்பெட்டகத்தை பெற்றுக்கொள்ளலாம். 


ஒவ்வொரு மாதமும் ஆட்டோக்களில் வைக்கப்படும் துண்டுப்பிரசுரங்களின் தலைப்புகள் மாற்றப்படுகின்றன. 
  
சலாம் சென்டரின் "எல்லோருக்கும் குர்ஆன்" என்ற செயல்திட்டத்தின் ஒரு பகுதியான இந்த அணுகுமுறை பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டம் முதல்முறையாக அறிவிக்கப்பட்ட போது, இதனை செயல்படுத்த முன்வந்தவர் நாம் மேலே பார்த்த நிசார் அஹமத் என்ற சகோதரர் தான். 

நிசார் அஹமது ஒரு அற்புதமான பட்டத்திற்கு சொந்தகாரரும் கூட. பெங்களூர் நகரின் "மிக நேர்மையான ஆட்டோ ஓட்டுனர்" என்ற விருதை மாநகர போலிஸ் கமிஷனரிடம் பெற்றவர் இவர். தன் நேர்மையான வாழ்விற்கு காரணமான இஸ்லாமை அடுத்தவருக்கும் எடுத்து சொல்லவேண்டும் என்ற ஆழ்ந்த ஈடுபாடு நிசார் அஹமதுவிடம் இருந்து தீவிரமாகவே வெளிப்பட்டது. விளைவோ, அவர் தன் நண்பர்களுக்கு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்த, இன்று சுமார் 50 ஆட்டோக்கள் இறைச்செய்தியை அடுத்தவருக்கு எடுத்துக் கூறிக்கொண்டிருக்கின்றன.


ஆனால் விஷயம் இத்தோடு முடியவில்லை. வேறு பல நெகிழ்ச்சியான நிகழ்வுகளும் நடந்தேறியிருக்கின்றன. தன் மார்க்கத்தை அடுத்தவருக்கு எடுத்துக்கூற வேண்டிய நிலை வந்தபோது தான், இந்த ஆட்டோ ஒட்டுனர்களில் சிலர் தங்கள் மார்க்கத்தையே படிக்க ஆரம்பித்து இருக்கின்றனர். அந்த வகையில், தங்கள் வாடிக்கையாளர்களை விட தங்களுக்கே இந்த செயல்திட்டம் அதிகளவில் பயனளிப்பதாக கூறுகின்றனர் அவர்கள். 

"என் வாழ்க்கையை நேர்மையான முறையில் அமைத்துக்கொள்ள இந்த செயல்திட்டம் உதவுகின்றது. முன்பு என் வாடிக்கையாளர்களிடம் தவறான முறையில் நடந்துக்கொண்டதற்காக இன்று அதிகமதிகமாக வெட்கப்படுகின்றேன்" - உணர்ச்சிப்பெருக்கில் கூறுகின்றார் காதர் பாஷா என்ற ஓட்டுனர். 

இஸ்லாமை சரியாக விளங்கி இந்த ஆட்டோ ஓட்டுனர்கள் தங்கள் வாழ்வை அமைத்திடவும், இவர்கள் மேற்கொண்டுள்ள இந்த அற்புதமான முயற்சி மேலும் வெற்றியடையவும் பிரார்த்தியுங்கள்.  

ஒலிம்பிக்ஸ் 2012:

ஆஹா..வந்துவிட்டார்கள் IERA (இஸ்லாமிய கல்வி மற்றும் ஆய்வு மையம்).

பிரிட்டனை சேர்ந்த இந்த அமைப்பின் செயல்திட்டங்கள் என்றுமே ஆச்சர்யத்தையும், புதுமையையும், புத்துணர்ச்சியையும் கொடுக்கக்கூடியவை (அல்ஹம்துலில்லாஹ்). உலக நாத்திக மாநாட்டில் கலந்துக்கொண்டு அவர்களை அசரடித்தாகட்டும், பிரபல நாத்திகர்கள் என்று அறியப்படுபவர்களுடன் விவாதங்களில் கலந்துக்கொண்டு அவர்களை திணறடித்தாகட்டும், இவர்கள் என்றுமே ஆச்சர்யத்தை கொடுக்க தவறியதில்லை. 

இப்போது மற்றுமொரு செயல்திட்டத்துடன் அதிரடியாக இறங்கிவிட்டது இஸ்லாத்தை தழுவியவர்களால் துவக்கப்பட்ட இந்த அமைப்பு. 

மேட்டர் இதுதான். வரும் ஆகஸ்ட் நான்காம் தேதி, இதுவரை  பிரிட்டனில் இல்லாத அளவு, நூற்றுக்கணக்கான முஸ்லிம்களுடன் "வாழ்க்கை விளையாட்டு மட்டுமா? (Is life just a game?)" என்ற வாசகத்துடன்  ஒலிம்பிக் கிராமத்தில் அழைப்பு பணியை மேற்கொள்ளப்போகின்றது இந்த அமைப்பு. நீங்கள் இங்கிலாந்தில் வசிப்பவரா? ஒலிம்பிக் கிராமத்திற்கு வரும் ஆயிரக்கணக்கான மக்களில் சிலருக்காவது இஸ்லாமை எடுத்துக்கூற விரும்புகின்றீர்களா? நீங்களும் இந்த அழைப்பு பணியில் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு இங்கே பார்க்கவும். 

ஒலிம்பிக் கிராமத்திற்கு வெளியே அழைப்பு  பணியில் ஈடுபட்டுள்ள IERA குழுவினர் (மஞ்சள் டீ-ஷர்ட் அணிந்திருப்பவர்கள்)


நான்காம் தேதி நடப்பது நடக்கட்டும். அதுவரை ஏன் வெயிட் செய்யவேண்டுமென்ற நோக்கில் IERA-வின் சிலர் ஒலிம்பிக் போட்டிகள் துவங்கிய அன்றே களமிறங்கிவிட்டனர். மிக அருமையான இவர்களுடைய அழைப்பு பணி பொதுமக்கள், மீடியாக்கள் என்று சமூகத்தின் அனைத்து பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. 

இலண்டன் மேயர் போரிஸ் ஜான்சனுக்கு அழைப்பு பிரசுரம் அளிக்கப்பட்ட போது... 

IERA-வை பொருத்தவரை இந்த செயல்திட்டத்தில் பெண்களை அனுமதிக்கவில்லை. இது நிச்சயமாக ஆச்சர்யமான ஒன்று. மிக வீரியமான பெண்கள் அழைப்பு குழுவை கொண்டது இந்த அமைப்பு. கேம்பிரிஜ் பல்கலைகழக வளாகத்தில் செயல்படும் இவர்களின் பெண்கள் பிரிவை இதற்கு உதாரணம் கூறலாம். ஆயிரகணக்கானோர் கூடும் இடத்தில், பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த அச்சம் காரணமாக பெண்கள் பிரிவை இந்த குறிப்பிட்ட செயல்திட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கவில்லை என்று விளக்கம் கூறியிருக்கின்றது IERA. 

எது எப்படியோ, இவர்கள் அழைப்பு பணியை தொடங்கிய சில நாட்களிலேயே இறைவன் மகத்தான வெற்றியை கொடுத்துள்ளான். இதுவரை சுமார் 10-15 சகோதர சகோதரிகள் ஒலிம்பிக் கிராமத்தில் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ளனர். 

பாதுகாப்பு வீரர்களுக்கு இஸ்லாமை எடுத்து கூறுதல் 

"நான் முஸ்லிமாக முடியுமா?" என்று தாமாக முன்வந்து கேட்ட சகோதரியாகட்டும், கிருத்துவத்தை எடுத்து கூற வந்து முஸ்லிமான அந்த கிருத்துவ மிஷனரியாட்டும், விவாதத்திற்கு பின்னால் இஸ்லாமை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்ட அந்த நாத்திகர்களாகட்டும் - என பல சுவாரசியமான நிகழ்வுகளுடன் அசத்தலாக சென்றுக்கொண்டிருக்கின்றது இந்த ஒலிம்பிக் அழைப்பு பணி. 

IERA குழுவினர் 

உலகளவில் இஸ்லாமை எடுத்துக்கூறும் பணிகள் சமீப காலங்களாக அதிகரித்து இருக்கின்றன. அதிக அளவிலான புதிய முஸ்லிம்களையும் இப்போதெல்லாம் நட்பு வட்டாரத்தில் பார்க்க முடிகின்றது. இந்த சூழ்நிலையில் IERA எடுத்துள்ள இந்த மகத்தான பணி வெற்றி பெற இறைவனை பிரார்த்திப்போம். 

News update:

இறைவனின் அளப்பெரும் கிருபையினால் IERA-வின் "ஒலிம்பிக் தாவாஹ் தினம்" கடந்த நான்காம் தேதி அழகான முறையில் நிறைவுற்றது. சுமார் 500-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் அசத்தலான செயல்திட்டத்துடனும், அதிகபட்ச ஒழுக்கத்துடனும், நேர்த்தியான கட்டுக்கோப்புடனும் தங்கள் அழைப்பு பணியை மேற்கொண்டனர்.

ஒலிம்பிக் தாவாஹ் தினத்தில் கலந்துக்கொண்ட முஸ்லிம்களின் ஒரு பகுதியினர் 

இஸ்லாம் குறித்து மேலும் அறிய விரும்பியவர்களுக்கு குர்ஆன், குர்ஆன் அர்த்தங்களின் ஆங்கில மொழியாக்கம், குர்ஆனின் அறிவியல் உண்மைகள் குறித்த ஆய்வு புத்தகம் மற்றும் "வாழ்க்கை விளையாட்டு மட்டுமா?" என்ற தலைப்பிலான சிறுநூல் ஆகியவை அடங்கிய பை பரிசளிக்கப்பட்டது.

இஸ்லாம் குறித்து மேலும் அறிய விரும்பியவர்களுக்கு பரிசளிக்கப்பட்ட புத்தகங்கள்..

மேலும் தாவாஹ் தினத்தில் மட்டும் 17 சகோதர சகோதரிகள் இஸ்லாமை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டனர். அல்லாஹு அக்பர். தொடர்ந்து IERA-அமைப்பினர் தங்கள் அழைப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

நீங்கள் முஸ்லிமல்லாதவரா? இஸ்லாம் குறித்து அறிந்துக்கொள்ள விருப்பமா? நீங்கள் இஸ்லாமை அறிந்துக்கொள்ள விரும்பும் இந்த முடிவு உங்கள் வாழ்வில் மாற்றத்தை, புத்துணர்ச்சியை கொண்டுவரலாம். aashiq.ahamed.14@gmail.com என்ற முகவரிக்கு ஒரு மெயில் அனுப்புங்கள். இஸ்லாமின் மூலமான குர்ஆன் தமிழ்மொழிபெயர்ப்பு மற்றும் இறுதித்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றை மின்னூல் வடிவமைப்பில் பெற்றுக்கொள்ளுங்கள். 

இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன்.

இறைவேனே எல்லாம் அறிந்தவன்... 

References:
1. Auto Drivers Now Turn ‘Divine Couriers’ - karnataka muslims. link
2. Is life just a game - IERA. link

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ


36 comments:

 1. Thanks for sharing

  ReplyDelete
 2. சலாம்!

  திருமணத்துக்கு பிறகு நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு அசத்தலான பதிவு. ஆட்டோ டிரைவர்களின் பணி மகத்தானது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. Assalam alikum brother, thanks for sharing, IERA alway do good job, masha allah,
  Salam center topic is new thanks for sharing this information.

  ReplyDelete
 4. salaam,

  இஸ்லாம் ஒன்றே அனைத்து காரியங்களுக்கும் இறுதி தீர்வு என்பதை மக்கள் இன்று சிறிது சிறிதாக உணர ஆரம்பித்துவிட்டனர்.இஸ்லாம் சொல்வதை கேட்போம்,நபிவழி நடப்போம் இன்ஷா அல்லாஹ் ....


  புதிய வரவு:

  பைத்துல்மால்-திருவாளப்புத்தூர்-அழகிய முன்மாதிரி ஊர்(இஸ்லாமிய சகோதர,சகோதரிகளே இப்பதிவை அவசியம் படித்து நமது சமுதாயத்திற்கு உதவுங்கள்,அல்லாஹ் உங்களுக்கு உதவுவானாக)

  Read more: http://tvpmuslim.blogspot.com/2012/07/baitul-maal-thiruvalaputhur-A-beautiful-model.html


  விஜய் டி.விக்கு புகாரை உடனடியாக அனுப்புங்கள்

  read more-http://tvpmuslim.blogspot.in/2012/08/ban-vijay-tv-program-cinema.html

  ReplyDelete
 5. இவர்கள் அனைவரின் தாவா பணியையும் இறைவன் பொருந்திக் கொள்வானாக.. இம்மக்கள் போலே நம்மையும் உறுதியான தாவா செய்பவர்களாக ஆக்குவானாக....ஆமீன்...

  ReplyDelete
 6. முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் நாட்டில்... பலர் கூடும் இடத்தில் அல்லாஹ்வை மட்டுமே நம்பி தாவா செய்யும் இவர்கள் நிச்சயம் நமக்கு முன் மாதிரிகள்... இவர்களின் உறுதியான இறை நம்பிக்கை நமக்கு படிப்பினை....

  ReplyDelete
 7. Salaam,

  Very good post, I really appreciate your work (so far).

  ReplyDelete
 8. Assalamu alaikkum brother, thanks for sharing, IERA alway do good job, masha allah,
  Salam center topic is new thanks for sharing this information.
  by

  Kabeer

  ReplyDelete
 9. மிகவும் சிறப்பான செய்தி . உன் தொண்டு சிறக்க அல்லாஹ் அருள் செய்ய துவா செய்கின்றேன், அன்பான பேரனே உன்னை எனது உடன்பிறந்த அண்ணன் பேரன் என்று சொல்லிக்கொள்வதற்கு மிகவும் மகிழ்வடைகின்றேன்.அனைத்துப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!
  JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
  "Allah will reward you [with] goodness."

  ReplyDelete
 10. அஸ்ஸலாமு அலைக்கும்
  சகோ ஆஷிக் நீண்ட நாட்களுக்குப்பின் மிக அருமையான தகவல்களுடன் கூடிய இன்னோரு தாவா பதிவு
  இது போன்ற அழைப்புப்பணி செய்யும் சகோதரர்களுக்கும் நமக்கும் ஈமானை அல்லாஹ் அதிகப்படுத்துவானாக அவர்களைப்போல் நாமும் தாவா செய்வதற்குள்ள அறிவையும் ஆற்றலையும் எல்லாம்வல்ல அல்லாஹ் தந்தருள்வானாக

  ReplyDelete
 11. அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹ்)

  ஓர் இறையின்பால் நல்லதொரு அழைப்பு. அவர்களின் இந்த முயற்சியை அல்லாஹ் வெற்றியாக்குவானாக!

  சகோ. ஆஷிக் அழைப்பு பணியை தூண்டும் வகையில் நினைவூட்டும் பதிவு. அல்லாஹ் உங்களுக்கும் அவர்களுக்கும் அருள்புரியட்டும்.

  இஸ்லாத்தை அறிந்திட நினைக்கும் சகோதரர்கள் திருக்குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்பு புத்தக வடிவில் இலவசமாக வேண்டுமா?

  ஒரு sms (குறுஞ்செய்தி)அல்லது இ-மெயில் மூலம் உங்கள் விலாசத்தை இந்த நம்பருக்கு அல்லது மின்னஞ்சல் "கு" அனுப்புங்கள்.

  உங்கள் விலாசத்திற்கு திருக்குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்பு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

  +91-7305901723.
  mujahidhbg@gmail.com

  ReplyDelete
 12. ஆட்டோ ஓட்டுனர்களின் பணி மேலும் சிறக்க இறைவன் உதவி செய்வானாக...ஆமின்

  ReplyDelete
 13. மாஷா அல்லாஹ் எப்பவும் போல மிக அருமையான தகவல் சகோ.
  அழைப்புப் பணி மேற்கொள்ளும் இரு குழுவினருக்கும் அல்லாஹ் வெற்றியைக் கொடுப்பானாக.ஆமீன்.

  ReplyDelete
 14. மாஷா அல்லாஹ் அருமையான பகிர்வு.ஆசீக் அண்ணா.அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி கொடுப்பானாக ஆமீன்..பெங்களுர் மற்றும் ஒலிம்பிக்கில் தாவா பணி புரியும் அனைத்து சகோதரர்களின் நல்அமல்களை அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக..ஆமீன்

  (Is life just a game?) சிந்திக்க வைத்த கேள்வி...

  ReplyDelete
 15. மாஷால்லாஹ் இஸ்லாத்துக்ககாஹ மற்றும் நீங்கள் செய்யும் எந்த ஒரு நல்ல பணியுடனும் வல்ல இறைவனும் கூட இருக்கிறான்
  (தோல்விக்கு இடமே இல்லை) வெற்றி உங்களுக்கே.
  யா அல்லாஹ் இவர்களுக்கு வெற்றிமேல் வெற்றியையும் ஆபியா எனும் உன்னிடத்திலான சிறந்த நற்கூலியையும் கொடுப்பாயாக.
  Niswer srilanka / starnet.link@ymail.com

  ReplyDelete
 16. அஸ்ஸலாமு அலைக்கும் அண்ணே

  மாஷா அல்லாஹ்.. ஒலிம்பிக் கிராமத்தில் அழைப்புப்பணி மேற்கொள்ளும் அழைப்பாளர்களின் முயற்சிக்கு அல்லாஹ் நற்கூலி வழங்க போதுமானவன்..!

  மனம் மிகவும் நெகிழ்கிறது இஸ்லாத்தை எடுத்து சொல்ல இவ்வளவு முயற்சி எடுக்கும் சகோதரர்களை பார்க்கையில் கண்ணில் நீர் திரை இடுவதை தடுக்க இயலவில்லை சகோ.!

  அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும், (110:1)
  மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும், (110:2)
  உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக, மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் "தவ்பாவை" (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான். (110:3)

  சுப்ஹானல்லாஹ்

  அருமையான பகிர்வுக்கு ஜசாக்கல்லாஹு க்ஹைர் அண்ணே

  வஸ்ஸலாம்
  உங்கள் சகோதரி
  ஷர்மிளா ஹமீத்

  ReplyDelete
 17. great Work Masha Allah,May the words of Allah and His Messenger ring the strongest across the entire world!

  ReplyDelete
 18. An atheist embraces Islam! Look at the smile on his face when he completes reciting the Sahadah...

  *teary-eyed* :D
  May Allah subhanahu wa ta'ala reward the Mission Dawah, iERA,

  https://www.facebook.com/photo.php?v=10151034575997935

  ReplyDelete
 19. சிறப்பான சேவை! அல்லாஹ் அவர்களின் பணியை ஏற்றுக்கொள்வானாக!

  ReplyDelete
 20. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சகோதரே அல்லாஹ் உங்களுக்கும் நிசார் அஹமது அவர்களின் அருமையான பணிக்கு அல்லாஹ் நற்கூலிதருவானக (ஆமின்). IERA பணி எவ்வளவு பொறுமையாக இஸ்லாத்தை எத்திவைக்கிறார்கள். அல்ஹம்ந்துலில்ஹா

  ReplyDelete
 21. அருமையான அழைப்புப் பணியை ஆற்றிவரும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் IERA குழுவினருக்கும் இச்செய்தியை பதிவுலகில் கொண்டு வந்த தங்களுக்கும் ஈருலகிலும் அல்லாஹ் வெற்றியைத் தருவானாக ஆமீன்

  ReplyDelete
 22. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!

  சிறப்பானதொரு சேவை. அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழியை தருவானாக!

  ReplyDelete
 23. அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹ்)

  மிகவும் சிறந்த இந்தப்பணியை இறைவன் பொருந்திக்கொண்டு, இம்மையிலும் மறுமையிலும் வெற்றியை தந்தருள்வானாக...

  ReplyDelete
 24. syed hussain thursday,august,02,2012
  assalumualaikum,

  bengalur auto ottunarkalin sirappana sevaiyum; Olimbic 2012nIERA kuzhuvinarin dhairiymaana dhavapaiyum padithavudan kangal neermalgiyadhu. avargaludaya paniai Allah poruthikondu vetri tharavendumena enullam Allahvidam iranjugiradhu.aamin. jazakalla khairun.

  ReplyDelete
 25. Assalamu Alaikkum brother

  good sharing.

  we also should do something Insha ALLAH

  Natpudan Jamal

  ReplyDelete
 26. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

  வழக்கம் போல சிறப்பானதொரு பதிவு

  ஆட்டோ டிரைவர்கள் என்றால
  சாலை விதிகளை மீறி வாகனம் ஓட்டுபவர்கள் ,
  மீட்டருக்கு மேல துட்டு வாங்குபவர்கள்,
  ஒழுங்கின்றி கெட்ட வார்த்தைகள் பேசுபவர்கள்...
  என்ற நிலையை மாற்றி

  படித்தவர்கள் முதல் கடை நிலை பாமரர்கள் வரை பயணிக்கும் வாய்ப்புள்ள அதே ஆட்டோவில் இஸ்லாம் குறித்த செய்திகளை ஆட்டோ டிரைவர்களாலே அறிமுகப்படுத்துவது மிகவும் புரட்சிக்கரமானது!


  அடுத்து IERA அமைப்பு!
  அல்ஹம்துலில்லாஹ் அவர்களை பற்றி சொல்ல தேவையில்லை. லண்டன் ஒலிம்பிக் களத்திலும் தாவா செய்ய முற்பட்டது பிற மக்கள் மத்தியில் இஸ்லாத்தை நன்கு விளக்க அதிக வாய்ப்பு உள்ளதை காட்டுகிறது

  அவர்களுக்கும், ரமலான் மாதத்தில் சிறப்பானதொரு பகிர்வை தந்த உங்களுக்கும்- உங்கள் குடும்பத்தாருக்கும் அல்லாஹ் ரஹ்மத் வழங்க போதுமானவன்.

  உங்கள் சகோதரன்
  குலாம்

  ReplyDelete
 27. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
  மாஷாஅல்லாஹ் சிறப்பான பதிவு

  அல்ஹம்துலில்லாஹ் ஆட்டோ சாரதிகள் செய்யும் சேவை மகத்தானது. IERA அமைப்பு சகோதரர்களின் சேவை காலத்திற்கு ஏற்ப பணியாற்றும் உன்னதமான சேவையாகும்.அல்லாஹ் அனைவருக்கும் நல்லருள் புரியட்டும்..

  மின அருமையான பதிவை அளித்த ஆசீக் அண்ணாக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக..ஆமீன்

  உங்கள் சகோதரி
  பஸ்மின்

  ReplyDelete
 28. Alhamdulillah... nice info, thanks for sharing

  ReplyDelete
 29. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

  மாஷா அல்லாஹ்..வழமை போலவே அருமையான பதிவு சகோ..:)

  அல்ஹம்துலில்லாஹ் எவ்வளவு உன்னதமான பணி அவர்களுடையது அவர்களின் பணியை இலகுவாக்க இறை போதுமானவன்..

  அல்லாஹ் இம்மை,மறுமை இரண்டிலும் அவர்களின் நற்செயல்களை பொருந்திக் கொள்ளட்டும்..ஆமீன்..

  ஜஸாக்கல்லாஹ் ஹைர் சகோ..:-)

  ReplyDelete
 30. மாஷா அல்லாஹ் அருமையான பகிர்வு.ஆசீக் அண்ணா.அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி கொடுப்பானாக ஆமீன்..பெங்களுர் மற்றும் ஒலிம்பிக்கில் தாவா பணி புரியும் அனைத்து சகோதரர்களின் நல்அமல்களை அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக..ஆமீன்

  (Is life just a game?) சிந்திக்க வைத்த கேள்வி...

  ReplyDelete
 31. வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கம் கொண்டு வர மீண்டும் கட்டுப்பாடு

  ஜெத்தா: வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவுக்கு தங்க நகைகள் கொண்டு வர மீண்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது வெளிநாடு வாழ் இந்தியர்களை ஆத்திரமடையச் செய்துள்ளது.

  45 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுங்க சட்டத்தை இந்திய அரசு மறுபடியும் அமல்படுத்தியுள்ளது. அதன்படி வெளிநாடுகளில் வாழும் இந்திய ஆண்கள் தங்கள் ஊருக்கு வருகையில் ரூ.10,000 மதிப்புள்ள தங்க நகையும், பெண்கள் ரூ.20,000 மதிப்புள்ள நகைகளையும் மட்டுமே சுங்க வரியின்றி எடுத்து வர முடியும்.

  தற்போதுள்ள தங்க விலையைப் பார்க்கையில் ஆண்கள் 3.5 கிராமும், பெண்கள் 7.1 கிராம் தங்க நகைகள் மட்டுமே எடுத்து வர முடியும்.

  அதை விட அதிக தங்க நகைகள் கொண்டு வந்தால் நகையின் மதிப்பில் 10 சதவீதம் மற்றும் 3 சதவீத வரி செலுத்த வேண்டும். முன்பெல்லாம் 10 கிராம் தங்க நகைக்கு ரூ.300 வரியாக செலுத்தினால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.

  இந்த சட்டம் அமலுக்கு வந்தது தெரியாமல் ஏராளமான தங்க நகைகள் கொண்டு வந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் விமான நிலையங்களில் சிக்கினர்.

  தனது குடும்பத்தாரை இந்தியாவில் கொண்டுபோய் விட்டுவிட்டு அமீரகம் திரும்பிய விஜு நாயர் சவூதி கெசட் பத்திரிக்கைக்கு தெரிவித்ததாவது,

  எங்களின் நெருங்கிய உறவினரின் மகள் திருமணப் பரிசாக தங்க நகைகளை என் மனைவி இந்தியா கொண்டு சென்றார். கொச்சி விமான நிலையத்தில் எங்களை நிறுத்தி எங்களிடம் எவ்வளவு தங்க நகைகள் உள்ளது என்று விசாரித்ததும் அதிர்ச்சி அடைந்தோம்.

  நகைகளுக்கு எக்கச்சக்க சுங்கத் தீர்வை செலுத்த நாங்கள் விரும்பவில்லை. அதனால் நகைகளை விமான நிலையத்திலேயே வைத்து விட்டு ஊருக்கு சென்றோம்.
  அந்த நகைகள் என் மனைவி அடுத்த மாதம் அமீரகம் திரும்பும்போது எடுத்து வருவார் என்றார்.

  இந்த சட்டப்படி வழக்கமாக 40 முதல் 50 கிராம் தங்க நகைகள் அணியும் இந்திய பெண்கள் இனி ஒரு தங்க மோதிரம் மட்டுமே அணிந்து செல்ல முடியும் என்று அப்துல் ஜமீல் என்பவர் தெரிவித்துள்ளார்.

  இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு ஒத்துவராது என்றும், முரண்பாடானது என்றும் சவூதி அரேபியாவில் உள்ள கேரள சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த கூட்டமைப்பின் தலைவர் ஆர். முரளிதரன் சவூதி கெசட் பத்திரிக்கையிடம் கூறுகையில்,

  வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இந்த சட்டத்தை இந்திய அரசு வேண்டும் என்றே மீண்டும் அமல்படுத்தியுள்ளது.

  அதில் அடிக்கடி இநதியா வரும் வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களை குறிவைத்து இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

  http://tamil.oneindia.in/news/2012/08/02/world-nris-angry-at-reintroduction-decades-old-gold-customs-158888.html

  ReplyDelete
 32. Good work.May Allah shower mercy on all who took this initiative.

  ReplyDelete