Tuesday, October 12, 2010

திருந்த மாட்டீர்களா வினவு?


அஸ்ஸலாமு அலைக்கும், 

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின். 

நேற்று இத்தளத்தில் வினவின் உண்மை முகம் வெளியூலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டப்பட்ட (படிக்காதவர்கள் <<இங்கே>> சுட்டவும்) பிறகு, சகோதரர் வினவு இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் என்று ஒரு பின்னூட்டத்தை இட்டுருக்கின்றார். அடடா, என்னவொரு பதில் என்று மெய்சிலிர்க்க வைத்தது அந்த பின்னூட்டம். அது உங்கள் பார்வைக்கு, 

**********
நெத்தியடி முகம்மது மற்றும் தவறாக வழிநடத்தப்படும் சில மதவாத மொக்கைகளுக்கு ஒரு விளக்கம்.

தோழர் அலாவூதின் அவரது வேலை காரணமாக வெளியூரில் இருக்கிறார். அப்போது வினவில் வந்த கட்டுரை தொடர்பாக தோழர்கள் அவரை பின்னூட்டம் போடுமாறு கேட்டுக்கொண்டனர். ஒரு பிரவுசிங் செண்டரில் போய் அங்கு தமிழில் போடுவதற்கு சில தொழில் நுட்ப பிரச்சினை மற்றும் தெரியாமையால்அவரால் முடியவில்லை. அதையே ஒரு சாதாரண எழுத்துருவில் அடித்து தோழர்களிடம் அனுப்பி போடுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார். அதை அவருடைய தோழர்கள் யூனிகோடில் மாற்றி இங்கே போட்டிருக்கின்றனர். இதுதான் நடந்த்து. 

தற்போது இந்த விவகாரத்தினால் அவரது குடும்பத்தை உள்ளூர் ஜமாஅத்திலிருந்து நீக்குவதற்கு உள்ளூர் தவ்ஹீத் ஜமாஅத் மதவாதிகள் பெரும் முயற்சி செய்து வருகின்றனர். இதன் பொருட்டு வரும் நாட்களில் அவரை ஜமாஅத் அவரை விசாரிக்க இருக்கிறது. தான் ஒரு கம்யூனிஸ்ட் என்று அறிவித்துக் கொள்ளும் தோழர் அலாவூதின் அந்த விசாரணையை எதிர்கொள்ள இருக்கிறார். வினவு சார்பில் அவரது ஊருக்கு சென்று இந்த விவகாரங்களை நேரடி ரிப்போர்ட்டாக தருவது என்று முடிவு செய்திருக்கிறோம். பொதுவில் அந்த ஊர் இசுலாமிய மக்கள் எமது அமைப்புகளை ஆதரிப்பது மதவாத தவ்ஹீத் ஜமாஅத் காரர்களுக்கு பிடிக்க வில்லை. எனினும் உழைக்கும் மக்களென்ற முறையில் இசுலாமிய மக்கள் எங்களுடன்தான் சேருவார்கள். இது நல்ல விசயமென்று அந்த மதவாத மொக்கைகள் புரிந்து கொள்ள வேண்டும். எனினும் விரைவில் வினவு சார்பில் மணமேல்குடி சென்று ஒரு நம்பிக்கை ரிப்போர்ட் தருவதற்கு இந்த விவகாரம் உதவியிருக்கிறது. அந்த வகையில் நெத்தியடி அன்கோவிற்கு நன்றி. மற்றபடி இங்கே கூறப்பட்டுள்ள விவரங்கள் தோழர் அலாவூதின் எமக்கு தொலைபேசியல் சொன்னதுதான். 
**********

என்னவொரு அழகான ஆணித்தரமான பதில். நிச்சயமாக வினவின் இந்த பதில் பல கேள்விகளை உங்களுக்குள் எழுப்பியிருக்கும். 

1. சென்ற பதிவின் துவக்கத்திலேயே நான் தெளிவாக கூறினேன், தனி நபர் சாடல்களில் இறங்க வேண்டாமென்று. ஆனால், அதைத்தான் ("நெத்தியடி முகம்மது மற்றும் தவறாக வழிநடத்தப்படும் சில மதவாத மொக்கைகளுக்கு ஒரு விளக்கம்") முதலில் செய்திருக்கின்றது வினவு. சரி போகட்டும்....


2. அடுத்து வினவு பகன்ற வார்த்தைகள்,
தோழர் அலாவூதின் அவரது வேலை காரணமாக வெளியூரில் இருக்கிறார்
இது குறித்து பதிவின் கடைசியில் பார்ப்போம்.


3. பின்னர் வினவு கூறுகின்றது, அலாவுதீன், தகவல்களை சாதாரண எழுத்துருவில் அடித்து தோழர்களிடம் அனுப்பி போடுமாறு கேட்டுக்கொண்டாராம். அந்த தோழர்களில் ஒருவரான நந்தன் தகவல்களை பின்னூட்டமாக போட்டுவிட்டார் போல.

மிக்க சந்தோசம்.... 

ஆக, அலாவுதீன் என்ற பெயரில் வெளியான பின்னூட்டத்தை அலாவுதீன் போடவில்லை, நந்தன் போட்டிருக்கின்றார். அது சரி, நந்தன் இந்த தகவல்களை அவரது பெயரிலேயே போட்டு "அலாவுதீன் போட சொன்னார்" என்று கூறியிருக்கலாமே?. எதற்காக அலாவுதீன் பேசுவது போலவே போட்டார். படித்தவர்கள், வினவின் விளக்கத்தை காணும் வரை அலாவுதீன் தான் பின்னூட்டமிட்டார் என்று எண்ணி ஏமாந்தல்லவா போயிருப்பர்...

ஒருவேளை, நந்தன் நேர்மையில்லாத போலி கம்யுனிஸ்டோ? 

சரி....... நந்தன், அலாவுதீன் சொன்னதை போட்டு விட்டார். தன்னுடைய மெயில் ஐடியில் இருந்தே அதனை செய்து விட்டார். அதனால் ஓரே பொம்மை வந்து விட்டது. அதனை அப்படியே விட்டு விட வேண்டியது தானே? எதற்காக அலாவுதீனின் பொம்மை படம் மாற்றப்பட வேண்டும்? அலாவுதீனே பின்னூட்டத்தை இட்டார் என்ற மாயையை உருவாக்குவதற்காகத் தானே? 

பின்னூட்டங்களில் உள்ள படங்களை யார் மாற்றமுடியும்? தளத்தின் moderator தானே? இல்லை என்னை போன்ற பொது ஜனங்கள் கூட தாங்கள் இட்ட பின்னூட்டத்தை அது இடப்பட்ட பிறகு அதன் படத்தை மாற்ற முடியுமா? நந்தனால் அலாவுதீனின் படத்தை மாற்ற முடிகின்றது என்றால் அவர் moderator தானே? அவர் வினவு தானே? வினவு தானே அலாவுதீனின் பெயரில் தங்கள் கொள்கை பரப்பு பின்னூட்டத்தை போட்டுக்கொண்டது?

ஆனால், வினவு சொல்கின்றது "அலாவுதீனின் தோழர்கள் போட்டார்களாம்", ஓஹோ... அந்த தோழர்கள் வட்டாரத்தில் வினவு தான் முதன்மையானவரோ?


4. நந்தன் என்ற பெயரில் வந்து பனிரெண்டு பின்னூட்டங்களை போட்ட வினவு, அந்த பின்னூட்டங்களை தன் பெயரிலேயே போட்டிருக்கலாமே? கேள்வி எழுப்புபவர்களுக்கு தன் பெயரிலேயே பதில் சொல்லலாமே?


5. இந்த களேபரத்தில் மணமகளை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார்கள். அது எப்படி வினவு, முதலில் மணமகனின் படமும், மணமகளின் படமும் ஒன்றாக இருந்தது. சரி, ஒரே தோழர் இவ்விருவரின் கருத்தையும் இட்டார் என்று வைத்து கொள்வோம். பின்னர் எதற்காக மணமகனின் படம் மாற்றப்பட்டது?. ஒரு தோழர் மணமகனுக்காகவும், மற்றொரு தோழர் மணமகளுக்காகவும் பின்னூட்டம் இட்டார்களா என்ன?


6. பின்னர் வினவு அடிச்சதுதான் சூப்பர் காமெடி...

முன்னர் // அதையே ஒரு சாதாரண எழுத்துருவில் அடித்து தோழர்களிடம் அனுப்பி போடுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார். அதை அவருடைய தோழர்கள் யூனிகோடில் மாற்றி இங்கே போட்டிருக்கின்றனர். இதுதான் நடந்த்து// என்று சொன்னவர்கள் அந்த பின்னூட்டத்தின் இறுதியில் //மற்றபடி இங்கே கூறப்பட்டுள்ள விவரங்கள் தோழர் அலாவூதின் எமக்கு தொலைபேசியல் சொன்னதுதான்// என்று சொல்லி அடித்தார்கள் பாருங்கள் ஒரு பல்டியை. 

 • படிப்பவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்ற நினைப்பா வினவு அவர்களே? 
 • ஒருவர் ஒரே பின்னூட்டத்தில் முரண்பட்டு பேசுவாரா?

நல்ல தமாஷ் தான்...


உச்சகட்ட காமெடி:  

இதையெலாம் விட முத்தாய்ப்பாய் ஒரு நகைச்சுவை இருக்கின்றது...அதாவது மணமகன் அலாவுதீன் பணி நிமித்தமாக வெளியூரில் இருந்தாராம். ஆனால் அங்கு பின்னூட்டமிட்ட "காட்டரபி" என்ற நபர், தான் மணமகனுக்கு ஒன்று விட்ட மாமனுடைய மகன் என்றும், மணமக்கள் இரண்டு வார தேனிலவுக்கு சென்றிருக்கின்றார்கள் என்றும் பின்னூட்டமிட்டார். அடடா...மணமக்கள் மணமாகி மூன்று மாதம் கழித்து இரண்டு வாரம் தேனிலவுக்கு சென்றிருப்பது வினவுக்கு தெரியாமல் போச்சே?  மாப்பிள்ளையின் உறவினர் சொன்னது சரியா அல்லது வினவு சொன்னது சரியா? ஒரே குழப்பம். 

குற்றச்சாட்டுக்கு பதில் அளிப்பார்கள் என்று பார்த்தால், மேலும் பல குற்றச்சாட்டுகளுக்கு வழி வகுக்கின்றார்கள். என்னவொரு புரட்சி!!!!!!

நீங்கள் திருந்த வாய்ப்பே இல்லையா வினவு குழுவினரே?

வினவு சகோதரர்களே, நீங்கள் பித்தலாட்டத்தில் ஈடுபட்டீர்கள். அது சுட்டிக்காட்டப்பட்டது. வாசகர்களுக்கு நீங்கள் செய்த துரோகத்திற்கு முடிந்தால் வருத்தம் தெரிவியுங்கள். இல்லை, நாங்கள் இப்படித்தான் தவறு செய்வோம், அதை யாராவது சுட்டி காட்டினால் அதை ஒப்புக்கொள்ளாமல் சுட்டி காட்டியவரை திட்டுவோம் என்றால் உங்களால் புரட்சி என்ன....அதற்கு கிட்டே கூட வர முடியாது...

 "நீங்கள் அறிந்துகொண்டே உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்" --- குரான் 2:42

இறைவனின் இந்த வசனங்கள் எங்களுக்கு நன்றாகவே மனதில் பதிந்திருக்கின்றது...


இறைவன் கூடிய விரையில் வினவு சகோதரர்களுக்கு நேர்வழியை காட்டுவானாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன். 


உங்கள் சகோதரன், 
ஆஷிக் அஹ்மத் அ 


14 comments:

 1. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

  அன்பு சகோதரர் ஆஷிக் அஹ்மத்,

  பாவம்..! வினவு..! எத்தனை அடிதான் தாங்கும்..?

  // "நீங்கள் அறிந்துகொண்டே உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்" --- குரான் 2:42 //

  'வினவு'க்கான இறைவனின் அறிவுரை.
  மிகச்சரியாக எடுத்துப்போட்டுள்ளீர்கள்.

  சகோதரன்(ர்கள்) 'வினவு' கோபப்படாமல் மனம் திருந்தி இனிமேல் இதுபோன்ற செயல்களில் இருந்தும் விலகினால் நமக்கெல்லாம் மட்டற்ற மகிழ்ச்சிதான்.

  ReplyDelete
 2. நெத்தியடி....

  ReplyDelete
 3. சாதாரண மக்களும் தங்களது கருத்தை பகிர்ந்துக்கொள்ளும் வசதியும் எளிமையும் கொண்ட இந்த இணையம் என்ற ஊடகத்தை சிலர் தவறாக பயன்படுத்தி பாழ் படுத்துகின்றனர். ஒரு பொய்யை மறைக்க இன்னொரு பொய் என்று வினவு தளத்தின் கயமை நிரூபிக்கப்பட்ட பின்னரும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிறார்கள். வினவின் சாயம் வெளுத்துப்போச்சு. டொம்..டொம்..

  ReplyDelete
 4. அஸ்ஸலாமு அலைக்கும்
  அன்பின் சகோதரன் ஆஷிக்,
  புரட்சிக்காரர்களை உரித்து காயப்போடுவது என்று முடிவு எடுத்து விட்டது போல் தெரிகிறது. கூடிய சீக்கிரம் வினவில் ஒரு மறுப்பு கட்டுரை கீழேயுள்ள மாதிரி தலைப்பிட்டு வந்தாலும் ஆச்சர்யப்படுவதர்க்கில்லை.

  வினவு பதிவின் தலைப்பு = "எதிர்க்குரல் ஆஷிக்: நெத்தியடியின் அடியாள்"
  வினவு பதிவின் சாராம்சம்: எதிர்க்குரல் ஆஷிக் நீங்களோ உழைக்கும் வர்க்கத்தை சார்ந்தவர். தினமும் நீங்கள் உழைத்து தான் சாப்பிடுகிறீர்கள். அதை அறியாதவர்களல்ல நாம். ஆனால் இன்று நீங்கள் கூட்டணி சேர்ந்திருக்கின்ற நெத்தியடி எப்படிப்பட்டவர் தெரியுமா? அவர் உழைப்பாளிகளின் உழைப்பை சுரண்டும் வர்க்கத்தை சார்ந்தவர். அவருக்கு சவூதி அரேபியாவில் இரண்டு என்னைக் கிணறுகள் இருக்கின்றன. விண்ணை தொடும் பங்களாக்கள் பல இருக்கின்றன. அவரோடு உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த நீங்கள் கூட்டணி வைப்பது உழைக்கும் வர்க்கத்திற்கு செய்யும் துரோகமல்லவா? நெத்தியடிக்கு இந்த அறிவுரையை நாங்கள் சொல்ல முடியாது. (வினவின் மைன்ட் வாய்ஸ்: ஏன் என்றால் அவர் நிறைய கேள்விகள் கேட்டு எங்களை நார் நாராக கிழித்து விடுகிறார்.) ஏன் எனில் அவர் முதலாளித்துவ வர்க்கத்தை சார்ந்தவர். ஆனால் ஆஷிக்காகிய நீங்களோ எங்களை போன்ற உழைக்கும் வர்க்கம். இதற்கு பிறகும் நீங்கள் நெத்தியடியுடன் கூட்டணி சேர்ந்தால் நாளைக்கோ அல்லது நாளை மருநாளுக்கோ வருகின்ற புரட்சி உங்களை மன்னிக்காது. ஸ்டாலின், லெனின், மாவோ போன்றவர்களின் ஆன்மாக்களும் உங்களை மன்னிக்காது என்பதை மட்டும் உங்களுக்கு நினைவுருத்துகின்றோம்.

  ReplyDelete
 5. மணமேல்குடியில் இருந்து வினவு லைவ் ரிலே பண்ண போகிறோம் என்று வேறு சொல்லியிருக்கிறது. இன்னும் என்னென்ன கூத்து நடக்க போகிறதோ?

  ReplyDelete
 6. வினவின் சுயரூபம் தெரிந்ததால் தான் சில இணையதளங்களில் பகிர தடை செய்யப்பட்டுள்ளதோ!

  ReplyDelete
 7. நிங்கள் நெத்தியடியுடன் கூட்டு சேர்ந்தால் அவர்களுக்கு கோபம் தான் வரும்.ஏனென்றால் அவருக்கே பதில் சொல்ல அவர்களால் முடியவில்லை.

  ReplyDelete
 8. //நந்தன் நேர்மையில்லாத போலி கம்யுனிஸ்டோ?//

  communism ஒரு ஏமாற்று வித்தை... இதில் போலி என்ன ஒரிஜினல் என்ன... எல்லாம் FRAUD கள்தான்...

  ReplyDelete
 9. வினவு பாக்க நல்லவங்க மாதிரி இருந்தாங்கப்பா, இப்ப செஞ்சது fraud ன்னா இது வரைக்கும் செஞ்ச எல்லாமும் fraud தானே,

  உசாரய்யா உசாரு ஓரம் சாரம் உசாரு.பொது மக்களே உசாரு.

  ReplyDelete
 10. கம்யூனிசத்தின் உண்மை ரூபத்தை ஹாரூன் யஹ்யா போன்றவர்கள் தொகுத்து ஓர் படமாக எடுத்து இருக்கின்றனர், அத்தகைய படங்களை கம்யூனிசத்தை விரும்பும் எல்லோருக்கும் காட்ட வேண்டும், ரஷ்யாவின் தோல்வி எப்படி உருவாகியது என்பதை புரிய வைக்க வேண்டும். அப்பொழுதுதான் கம்யூனிசத்தின் போர்வையில் ஒளிந்திருக்கும் உண்மையெல்லாம் வெளிப்படும். பொய்யான ஒரு குறிக்கோளுக்கு பொய்யான ஒரு குழு, அதற்கு ஒரு தளம்... சுப்ஹானல்லாஹ்... இஸ்லாம் நிச்சயமாக தூய்மையானது, அல்லாஹ் அதன் தூய்மையை வெளிக்கொணர்ந்தே தீர்வான். இத்தகைய தவறுகள் செய்வதை அவர்களும், வினவும் மற்றும் இஸ்லாத்தில் இருந்து கொண்டே அதை எதிர்க்கும் தத்துவத்தின் பால் வாழும் மணமகனும் விட்டுவிடுவதே அவர்களுக்கு நல்லது....இல்லையென்றால்...அணு அளவிலும் குறைவிலா தீர்ப்பை எதிர் நோக்கியே ஆகவேண்டும். அல்லாஹு முஸ்த'ஆன்.

  இத்தகைய எதிர்க்குரல்கள் வரவேற்கத்தக்கவை. அல்லாஹ் தங்களின் முயற்சிகளுக்கு ஈருலகின் நன்மையையும் வாரி வழங்குவானாக. ஆமீன்.

  வ ஸலாம்.

  ReplyDelete
 11. வினவு மற்றும் தவறாக வழிநடத்தப்படும் சில புரட்சிகர மொக்கைகள் இனியாவது திருந்தட்டும்!!!

  ReplyDelete
 12. சகோதரர் ஆஷிக் அவர்களுக்கு.அஸ்ஸலாமு அலைக்கும். தங்களின் கடைசி இரு பதிவுகளின் தலைப்பை கண்ட போது சகோதரர் ஷேக் தாவூத் அவர்களின் பதிவின் தொடர்ச்சியோ என எண்ணம் கொண்டேன். முழுவதையும் படித்த போது இல்லை இது ஒரு புதிய அக்கபோர் என புரிகிறது. இவர்களுக்கு வேறு வேலையே இல்லை போலிருக்கிறது.என்ன சொல்ல வருகிறார்கள் இக்கூட்டத்தினர்?. முஸ்லிம்கள் அனைவரும் இவர்களின் கொடியை பிடித்து கொள்ள வேண்டும். அதுதான் உங்களுக்கு பாதுகாப்பு என்கிறார்களா?. இவர்களுடய முகமூடி மீண்டும் ஒரு முறை கிழிக்கப் பட்டிருக்கிறது.அப்புறம் உங்களுடய screen shot பார்த்தேன். மிகவும் தெளிவாக வலை விரித்து பிடித்திருக்கிறீர்கள்.மாஷா அல்லாஹ்.

  ReplyDelete
 13. அஸ்ஸலாமு அலைக்கும்,

  சகோதரர் ஆஷிக் அவர்களே,

  இஸ்லாம் என்று வந்துவிட்டால், எழுதும் அனைத்தும் பொய்யாகவோ, நுனிப்புல் மேய்ந்தோ, எந்த ஒரு விஷயத்தையும் உள்வாங்கிக்கொண்டோ, தீர விசாரித்து அல்லது படித்து அறிந்தோ எழுதியதில்லை, வினவு. கேள்வி கேட்டால் ஒன்றுக்கும் பதிலளிக்கவும் தெரிவதில்லை.

  இவர்களின் மற்ற அரசியல் பதிவுகள் எல்லாம் சிறப்பாக எழுதப்படுகின்றன. அதிலெல்லாம் முரனோ போலித்தனமோ குழப்பமோ இன்றி தெளிவாக எழுதுபவர்கள், கேட்கப்படும் கேள்விக்கும் குழப்பாமல் ஆணித்தரமாய் பதிலளிப்பவர்கள், இஸ்லாம் என்றால் மட்டும் மறை கழண்டு முன்னுக்குப்பின் என்ன சொல்வது என்று தெரியாமல் தட்டுத்தடுமாறி தமக்குத்தாமே முரண்பட்டு பைத்தியக்காரர்கள் போல உளறுகிறார்கள். அதில் ஏகப்பட்ட தில்லுமுல்லு பித்தலாட்டங்கள் வேறு..!

  இருந்தும் இவர்கள் இஸ்லாம் பற்றி தொடர்ந்து எழுதுவது வெறும் ஏழாயிரம் ஹிட்சுக்காகவும் இருநூறு முன்னூறு மருமொழிகளுக்காகவும் மட்டுமே என்பது எனது கருத்து. (அல்லாஹ்வை மனிதன்(?!) என்றும் சொல்கிறார்கள்) வினவில் வந்த எந்த இஸ்லாமிய எதிர்ப்பு இடுகைகளும் மேற்படி விஷயத்தில் சோடை போனதே இல்லை.

  முதலில் //மாக்சிய ஆசான்கள், பகத்சிங் படங்கள் சூழ ஒரு இசுலாமியத் திருமணம்!!//என்று பதிவிட்டவர்கள்...//அவர் செய்த ஒரே குற்றம் இசுலாமிய முறைப்படி திருமணம் செய்யாததுதான்//என்று அடித்த அந்தர் பல்டிகளையும்...,

  //ஏசுவிடமும், நபிகள் நாயகத்திடமும், புத்தனிடமும் அக்காலத்து மக்கள் பல கேள்விகளை எழுப்புகிறார்கள். அவற்றுக்கெல்லாம் அவர்கள் சளைக்காமல் விடையளித்தார்கள். அதன் காரணமாகத்தான் அவர்கள் முன்னோடிகளாகவும், ஞானிகளாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டார்கள். சொல்வதைச் செய். கேள்வி கேட்காதே என்பது அவர்கள் கொள்கையாக இருந்திருந்தால் நமக்கு பைபிளோ, குர்ஆனோகிடைத்திருக்காது. குண்டாந்தடி மட்டும்தான் கிடைத்திருக்கும்.//--x

  // கேள்வி கேட்டு விடை தேடியவர்களின் வாரிசுகள் கம்யூனிஸ்டுகள். குண்டாந்தடிகளின் வாரிசுகள் மதவாதிகள்//-y (x contradicts y)

  என்பன போன்ற முன்னுக்குபின்னான தெளிவற்ற பொருளற்ற லூசுத்தனமான உளறல்களையும்...,

  மேலும் தவ்ஹீத் ஜமாத்துக்கும் சுன்னத் ஜமாத்துக்கும் கூட வித்தியாசம் தெரியாமல் (சொல்லப்பட்ட ஊர் விலக்கல் விவகாரம் பொய்யாகவும் இருக்கலாம், சொன்னது வினவாச்சே!) இரண்டையும் குழப்பிக்கொண்டு பதிவு போடுவதும்...,

  இன்னும் நீங்கள் சுட்டிக்காட்டிய அத்தனை விஷயங்களையும் பார்த்துவிட்டு...,

  சமீபத்திய அந்த 'அணைந்தவிளக்கு' பதிவில் தொடர்ந்த 'வினவு மற்றும் வினவுகளின்' கோமாளித்தன மறுமொழி குப்பைகளையும் படித்த பின்னர்...,

  அதையெல்லாம் தொகுத்து ஒரு பதிவு போட்டு விளக்கலாம் என்றால்...,

  முதலில் இவர்கள் நாம் சொல்லும் எதையும் புரிந்து கொள்ளும் மனநிலையில் இருக்கிறார்களா?

  இனி இவர்களை எல்லாம் ஒரு குப்பையாகக்கூட மதிக்காமல் நாம் நம் ஆக்கப்பூர்வமான வேலையை தொடர்வோம் என்று முடிவு எடுத்து விட்டேன்.

  சூரியஒளி எப்பக்கம் கிடைக்கிறதோ அப்பக்கமாக வளைந்து நீண்டு வளரும் ஒரு மரத்தை விட கேவலமான அறிவை கொண்டவர்களான மண்ணாங்கட்டி களிமண் மண்டைகளான இவர்களிடம் போய் என்னத்த விவாதித்து என்னத்த புரியவைத்து... என்று நினைத்து...

  வினவை விட உயர்ந்த சிறந்த மக்களுக்கு என்றென்றும் பயனுள்ள ஜீவனாகிய மரங்களை, "மரங்களை வளர்ப்போம்" என்று எழுத ஆரம்பித்துவிட்டேன். அதைப்பற்றி விரிவாக...

  http://pinnoottavaathi.blogspot.com/2010/10/we-want-more-more-green.html

  //"நாம் ஒருவர். நமக்கு நால்வர்." ( !? ) / "We Want more & more GREEN"//

  ReplyDelete
 14. சகோதரர் முஹம்மது ஆஷிக்,

  வ அலைக்கும் அலைக்கும்,

  //இவர்களின் மற்ற அரசியல் பதிவுகள் எல்லாம் சிறப்பாக எழுதப்படுகின்றன. அதிலெல்லாம் முரனோ போலித்தனமோ குழப்பமோ இன்றி தெளிவாக எழுதுபவர்கள், கேட்கப்படும் கேள்விக்கும் குழப்பாமல் ஆணித்தரமாய் பதிலளிப்பவர்கள்//

  என்னால் உடன்பட முடியவில்லை. பித்தலாட்டங்களை எந்தவித குற்ற உணர்வுகளும் இல்லாமல் துணிந்து செய்பவர்களின் மற்ற பதிவுகளை மட்டும் எப்படி நம்புவது என்று தெரியவில்லை.

  அதை சுட்டி காட்டிய பின்பும் வாசகர்களிடம் வருத்தம் தெரிவிக்காமல் இருப்பது என்ன விதமான நோய் என்று தெரியவில்லை. ஸ்டாலினும், மாவோவும் இப்படிதான் நடந்து கொள்ள வேண்டுமென்று இவர்களுக்கு சொல்லி கொடுத்தார்கள் போல....

  இனி யார் இவர்களை நம்ப போகின்றார்கள்? இவர்கள் எந்த பதிவை போட்டாலும் சரி, அந்த பதிவுகளில் யார் இவர்களுக்கு ஆதரவாக பின்னூட்டமிட்டாலும் சரி, படிப்பவர்கள் அதனை சந்தேக கண்ணோடு தான் பார்ப்பார்கள்.

  அதெல்லாம் சரி, இந்த அளவு மக்களை ஏமாற்றுபவர்கள் எந்த நம்பிக்கையில் மக்களை தங்களோடு வந்து விடுமாறு அழைக்கின்றனர். குறைந்தபட்ச நேர்மை கூட இல்லாதவர்களுக்கு புரட்சி செய்ய என்ன தகுதி இருக்கின்றது?...வெட்க கேடு...

  நன்றி,

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹ்மத் அ

  ReplyDelete