Monday, May 9, 2011

இஸ்லாமிற்கெதிரான பதிவுகளால் என்னென்ன நன்மைகள்?நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். 
 
இஸ்லாமிற்கெதிரான பதிவுகள் குறித்து உரையாடும் போது முஸ்லிம்கள் பலரும் ஒப்புக்கொள்ளக்கூடிய கருத்துக்கள், 

 • அம்மாதிரியான பதிவுகள் நம்மை சீர்தூக்கி பார்க்க உதவுகின்றன, 
 • இவற்றிற்கு பதில் கண்டெடுக்க முயற்சி செய்வதன் மூலம் இஸ்லாம் குறித்து மேலும் அறிந்து கொள்கின்றோம், 
 • இது போன்ற பதிவுகள் முஸ்லிமல்லாதவரை இஸ்லாம் நோக்கி கொண்டு வருகின்றன 

என்பன போன்றவையாகும்.

ஆம். இந்த கருத்துக்கள் உண்மைதான். இஸ்லாமை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டவர்களையோ அல்லது இஸ்லாமிற்கு வெளியே இருந்து விட்டு மீண்டும் உள்ளே நுழைந்தவர்களையோ காரணம் கேட்டோமேயானால் மேலே சொல்லப்பட்டுள்ள பதில்களில் ஏதாவது ஒன்றை பெரும்பாலானவர்கள் கூறுவார்கள். 

ஆக, இஸ்லாமிற்கு எதிரான பதிவுகள் நமக்கு நன்மைகளையே விளைவிக்கின்றன என்பது பெரும்பாலான முஸ்லிம்களின் கருத்தாக இருக்கின்றது. 

நாம் மேலே பார்த்த காரணங்கள் மட்டுமல்லாது வேறு மாதிரியான நன்மைகளை இந்த பதிவுகள் தருகின்றனவா?...ஆம் என்றால் எம்மாதிரியான நன்மைகள் அவை?

நாம் மேலே பார்த்தவைகள் மட்டுமல்லாது வேறு பல நன்மைகளையும் அம்மாதிரியான பதிவுகள் நமக்கு தருகின்றன என்பதை ப்ராட்டிகலாக விளக்க முயற்சிக்கும் பதிவே இது...

இந்த பதிவிற்கு நான் உதாரணமாக எடுத்து கொள்ளப்போவது, உலகின் "உண்மையான" கம்யுனிஸ்ட்களான வினவு குழுவினரை தான் (பித்தலாட்டங்களில் ஈடுபடுபதற்கு பெயர் தான் உண்மையான கம்யுனிசமோ?...பார்க்க <<வினவின் பித்தலாட்டம் அம்பலம்>> மற்றும் <<திருந்த மாட்டீர்களா வினவு>>)

பல மாதங்களுக்கு முன் அஹ்மதியாக்கள் குறித்த ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது வினவு. வழக்கம் போல தங்களது இஸ்லாத்திற்கெதிரான வாதங்களை போகிற போக்கில் தெளித்து விட்டு போனார்கள் வினவு குழுவினர். அக்கட்டுரையின் மையக்கருத்து நியாயமானதாய் இருக்க, அதற்கு ஆதரவாக என்னுடைய கருத்தை தெரிவித்து விட்டு, இஸ்லாமிற்கு எதிரான கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்தேன். 

பின்னூட்டங்கள் வளர ஆரம்பித்தன. மேலும் பலரும் தங்களது இஸ்லாம் குறித்த விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பித்தனர். மிக நீண்ட உரையாடல் அது. பலருக்கும் பதில் சொல்ல ஆரம்பிக்க இஸ்லாம் குறித்த பல தகவல்களை அறிந்து கொள்ள ஆரம்பித்தேன். அறிந்தவற்றை கருத்துக்களாக முன்வைத்தேன். இதில் கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு விஷயம், அது தான் நான் பதிவுலகில் கலந்து கொண்ட முதல் உரையாடல்.

இங்கே சற்று நிறுத்தி ஒரு விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். இஸ்லாமிற்கு எதிரான வாதங்களுக்கு பதில் தேட தொடங்கியபோது நான் வியப்படைந்த ஒரு விஷயம், அழைப்பு பணியில் ஈடுபட்டிருந்த எண்ணற்ற சகோதர சகோதரிகளை கண்டு தான். அதிலும் இளைஞர்கள் அதிகளவில் இருந்தது என்னை மேலும் உற்சாகப்படுத்தியது.
 

எவ்வளவு அழகாக பணியாற்றுகின்றார்கள்!!! சுப்ஹானல்லாஹ்(1). இஸ்லாம் மீது அவர்கள் கொண்டிருந்த தன்னம்பிக்கையும், ஆழ்ந்த இஸ்லாமிய ஞானமும், எதை கண்டும் அஞ்சாத அவர்களது உள்ளமும் என்னை திணறடித்தன. பல்வேறு கொள்கை கொண்டவர்களுடன் அவர்கள் புரிந்த/புரிந்து கொண்டிருக்கும் உரையாடல்களும் என் தேடல்களுக்கு நல்ல தீனியாய் அமைந்தன. 

பதிவை தொடர்வோம்.  

அந்த பதிவில் கருத்து தெரிவித்த பி.ஏ.ஷேக் தாவுத் (அத்திக்கடையன் வலைத்தளத்தை நடத்தியவர். அந்த தளம் தற்போது செயல்படவில்லை. ஆனால் மின்னஞ்சல், பின்னூட்டங்கள் மூலமாக தொடர்ந்து உற்சாகத்துடன் செயல்பட்டு கொண்டிருக்கின்றார்), என்னுடைய கருத்துக்களை படித்து விட்டு, எனக்கு ஊக்கமளிக்கும் விதமாக மெயில் அனுப்பினார். மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். ஈமானை(2) பற்றி பிடித்து கொண்டிருப்பவர்களின் நட்பை நாம் என்றும் விரும்புவோம். முழுமையான முஸ்லிமாக வாழ முயற்சிக்கும் மற்றொரு சகோதரர் என் நட்பு வட்டாரத்தில் சேர்ந்தது மிகுந்த மகிழ்ச்சியை தந்தது.       

வினவின் அதே பதிவில் எனக்கு அறிமுகமான மற்றொரு நபர் சகோதரர் "நெத்தியடி" முஹம்மத் அவர்கள். ஆம், பின்னூட்டவாதி தளத்தை நடத்தி கொண்டிருக்கும் முஹம்மது ஆஷிக் பற்றி தான் பேசுகின்றேன். அவருக்கும் அது தான் முதல் விவாதம் என்று நினைக்கின்றேன். அவருடைய ஊக்கமும் எனக்கு பலத்தை கொடுக்க மேலும் மேலும் பதில்களை பதித்தோம். 

மேலும் ஒரு நம்பிக்கையாளர் அணியில் சேர்ந்த உற்சாகத்துடன் செயல்பட ஆரம்பித்தோம். 

இப்படி எங்கள் மூவரையும் உருவாக்கி எங்கள் அழைப்பு பணிக்கு அடித்தளம் போட்டது வினவின் அந்த பதிவு தான்.

பின்னர் சகோதரர்களின் ஆலோசனைப்படி எதிர்க்குரல் தளம் தொடங்கப்பட்டது. நானும், ஷேக் தாவுத்தும் எங்களது வலைத்தளங்களின் மூலம் செயல்பட, பின்னூட்டங்கள் வாயிலாக தன்னுடைய செயல்பாட்டை தொடர்ந்தார் முஹம்மது ஆஷிக்.  

வினவு தளத்தில் மேலூர் ஷாஜஹான் அவர்கள் நடத்திய விவாதங்களையும் மறக்க முடியாது.

பிறகு, எங்களுடைய நட்பு வட்டாரம் போதாதென்று நினைத்த வினவு குழுவினர் மேலும் ஒரு சகோதரரை எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்கள். அவர், வலையுகம் தளத்தை நடத்தி வரும் சகோதரர் ஹைதர் அலி. வினவின் இஸ்லாமிய எதிர்ப்பு பதிவுகளில் பின்னூட்டமிட்டு கொண்டிருந்தார் ஹைதர் அலி. அதன் மூலமாக அவர் எங்களுக்கு அறிமுகமாக, நாளடைவில் எங்களது நட்பு வட்டாரத்தில் சேர்ந்தார். வினவின் பின்னூட்ட பித்தலாட்டத்தை வெளிக்கொண்டு வந்ததில் சகோதரர் ஹைதர் அலிக்கும் பங்குண்டு.  

இப்படி எங்கள் நால்வருக்கும் உள்ள ஒரு ஒற்றுமை, நாங்கள் அனைவரும் வினவின் இஸ்லாத்திற்கெதிரான பதிவுகள் மூலம் உருவாக்கப்பட்டவர்கள் என்பதுதான்.

பின்னர், முஹம்மது ஆஷிக்கும், ஹைதர் அலியும் தங்களது வலைத்தளங்களை தொடங்கினார்கள். இன்று முஹம்மது ஆஷிக்கும், ஹைதர் அலியும் தங்களது தளங்கள் மூலமாக சிறப்பானதொரு அழைப்பு பணியை மேற்கொண்டிருக்கின்றார்கள் என்றால் அதற்கு அஸ்திவாரம் போட்டு, அவர்களுக்கு ஊக்கமாய் இருந்தது வினவும் அதன் இஸ்லாமிய காழ்ப்புணர்வு பதிவுகளும் தான். 

வெவ்வேறு திசையில் பயணித்து கொண்டிருந்த எங்கள் நால்வரையும் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தி நாங்கள் ஒன்றிணைந்து  செயல்பட துணையாய் நின்றது வினவின் பதிவுகளே. 

இன்று மேலும் பல பதிவுலக சகோதர சகோதரிகளை எங்கள் குழுவில் இணைத்து கொண்டு அழகான முறையில் செயல்பட்டு கொண்டிருக்கின்றோம். அல்ஹம்துலில்லாஹ்(3)

ஈமானை இறுக பற்றி பிடித்திருப்பவர்கள் மத்தியில் இருப்பது ஒரு அற்புதமான அனுபவம். இந்த அனுபவத்தை பெறுவதற்கு எது ஆரம்பமாக (source) இருந்தது என்று உற்று நோக்கினோமேயானால் அது இஸ்லாத்திற்கெதிரான பதிவுகளில் தான் போய் நிற்கும்.    

இறைவன் மீது ஆணையாக, வினவில் அந்த பதிவு வந்திருக்காவிட்டால், அதில் நான் கலந்துரையாடாமல் இருந்திருந்தால் இன்று நானோ அல்லது எதிர்க்குரலோ அழைப்பு பணியில் இருந்திருக்க முடியுமா என்பது சந்தேகமே. 

ஆக, 

 • முதல் பத்தியில் நாம் பார்த்த நன்மைகள் மட்டுமல்லாது ஈமானில் சிறந்து விளங்குபவர்களை நமக்கு அடையாளம் காட்டுபவையும் இத்தகைய பதிவுகள் தான். 
 • அடையாளம் காட்டி, அவர்களுடன் நம்மை இணையச் செய்து இறையச்சம் உள்ள நல்லடியார்களாக நம்மை தொடரச்செய்வதும் இவை தான். 
 • இவையெல்லாம் விட மேலாக, அழைப்பு பணியில் ஈடுபட புதிது புதிதாக பலரை உருவாக்கி, அழைப்பு பணியை தொய்வில்லாமல் கொண்டு செல்வதும் இத்தகைய பதிவுகள் தான்.       

இஸ்லாமிற்குள் முழுமையாக நுழைந்து விட சொல்கின்றது குர்ஆன். அறியாமையால் சில முஸ்லிம்கள் இது தெரியாமல் இருந்து விடுகின்றனர். அவர்கள் அறியாத இந்த செய்தியை அவர்களுக்கு உணர்த்தி அவர்களை முழுமையாக இஸ்லாமிற்குள் நுழைய செய்வதும் இஸ்லாமிய காழ்ப்புணர்வு பதிவுகள் தான்.

இப்படி எல்லா வகையிலும் நமக்கு உறுதுணையாய் இருந்து, சத்தியமார்க்கத்தை முஸ்லிமல்லாத சகோதர சகோதரிகளுக்கு கொண்டு செல்ல உதவியாய் இருக்கும் அத்தகையோருக்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

இப்போதைக்கு நம்மால் முடிந்தது "நன்றி" என்ற அழகான சொல் மட்டுமே....

அல்லாஹ்வின் ஒளியை தமது வாய்களால் ஊதியணைக்க நினைக்கின்றனர். மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துவான் --- குர்ஆன் 61:08  

முஸ்லிமல்லாத சகோதர சகோதரிகளுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள். நீங்கள் இரு தரப்பு வாதங்களையும் கண்டு குழம்பி போயிருக்கலாம். அது இயல்பானது தான், நாங்கள் ஒவ்வொருவரும் அனுபவித்தது தான்.

இப்போது எது உண்மை என்று எப்படி கண்டுபிடிக்க போகின்றீர்கள்? எப்படி பார்த்தாலும் உங்களுக்கு இருப்பது ஒரே வழிதான். நீங்களாக குர்ஆனை முழுமையாக படிக்க முன்வருவது தான் அது. அப்படி தாங்கள் தயாராக இருக்கும் பட்சத்தில் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எனக்கு ஒரு மெயில் (aashiq.ahamed.14@gmailcom) அனுப்புவது தான். இன்ஷா அல்லாஹ் குர்ஆன் அர்த்தங்களின் தமிழ் மொழிபெயர்ப்பை அனுப்புகின்றேன் (மூன்று வெவ்வேறு சகோதரர்களால் மொழிபெயர்க்கப்பட்ட மூன்று வெவ்வேறு தமிழாக்கங்கள்)

அல்லது, கீழ்காணும் லிங்கிலிருந்து குர்ஆனை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இறைவா, இஸ்லாத்திற்கெதிரான விமர்சனங்களை ஆரோக்கியமான முறையில் முன்வைக்க செய்து, அவற்றிற்கு பதில் சொல்லுமளவு எங்களது கல்வி ஞானத்தை உயர்த்துவாயாக...ஆமீன்.

இறைவா, வினவு போன்றவர்களின் சூழ்ச்சிகளை கடந்த காலங்களில் எங்களுக்கு உணர்த்தியது போல், இனியும் உணர்த்தி அவர்களுக்கு தகுந்த பாடத்தை கொடுக்குமளவு எங்களது கல்வி ஞானத்தை அதிகப்படுத்துவாயாக...ஆமீன்.  

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

வார்த்தைகளுக்கான விளக்கங்கள்:
1. சுப்ஹானல்லாஹ் - புகழ் அனைத்தும் இறைவனுக்கே உரித்தாவதாக.
2. ஈமான் - நம்பிக்கை.
3. அல்ஹம்துலில்லாஹ் - எல்லாப் புகழும் இறைவனிற்கே.

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ


46 comments:

 1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  என்னையும் உங்கள் பதிவில் இணைத்ததற்கு மிக்க நன்றி சகோ.ஆஷிக் அஹ்மத்.

  அல்ஹம்துலில்லாஹ்.

  அந்த அஹ்மதியா பதிவில் மட்டும் வினவு, உடனே அந்த சர்ச்சைக்குறிய வரியை நீக்கி இருந்திருந்தால்...?

  இன்று 'பின்னூட்டவாதி' அளவுக்கு வந்திருக்க அவசியம் இல்லாதே போயிருக்கும்..!

  ம்ம்ம்....

  வினவின், 'தான் மட்டுமே எப்போதும் சரி' என்ற அகந்தை மற்றும் பிழைப்புவாத பித்தலாட்டத்திற்கு ஒருவகையில் நன்றி தெரிவிக்கத்தான் வேண்டி இருக்கிறது.

  தீமை போன்ற ஒரு விஷயத்திலும் நமக்கு அல்லாஹ் இப்படி நலவு நாடுகிறான். அல்ஹம்துலில்லாஹ்.

  எல்லா Islamophobia காரர்களுக்கும் //இப்போதைக்கு நம்மால் முடிந்தது "நன்றி" என்ற அழகான சொல் மட்டுமே....// :)

  இவர்களின் கேள்விகளால்... நான்/நாம், நம் இஸ்லாமிய அறிவை மேலும் கூர் தீட்டி இன்னும் பெருக்கிக்கொண்டோம் என்பது உண்மை.

  "நம் பதில்களுக்கு... ஏதாவது சொல்லி மறுக்க வேண்டும்" என்பதற்காகவாவது... 'அந்த பதிவர்கள் குர்ஆன், ஹதீஸ்.. இவற்றை புரட்டி உண்மைகளை அறிந்து கொள்ள மாட்டார்களா' என்ற ஆவலில்தான் தொடர்ந்து நான் விவாதிப்பது சகோ. ஆஷிக் அஹ்மத்.

  //இது போன்ற பதிவுகள் முஸ்லிமல்லாதவரை இஸ்லாம் நோக்கி கொண்டு வருகின்றன//--என்பதால்... Islamophobia கார பதிவர்களுக்கு தொடர்ந்து பதில் தருகிறோம்.தந்து கொண்டும் இருக்கிறோம்.

  ஆனால்...

  ReplyDelete
 2. தொடர்ச்சி...

  வேறு சில Islamophobia-காரர்கள் இருக்கிறார்கள்.

  இவர்கள் 'ஜிஹாத்' என்ற ஒரு வட்டத்தை விட்டு வெளியே வரவே மாட்டார்கள்.

  இதுபற்றிய குர்ஆன் வசனத்தை மட்டும் எடுத்துக்கொண்டு பதிவு போட்டு குதர்க்கம் புரிவார்கள்.

  எப்படி..?

  உதாரணமாக இப்படி..!

  நம் இந்திய நாட்டு பிரதமர்,

  "பாக்கிஸ்தானியரை விரட்டி விரட்டி கொல்லுங்கள், கண்டவுடன் சுட்டு பொசுக்குங்கள்..." ---என்று சொல்வார்.

  எப்போது?

  கார்கிலில் பாகிஸ்தான் எல்லையில் போருக்கு தயாராகும் நம் இந்திய இராணுவத்தினரிடம்..!

  அதே பிரதமர்,

  "பாக்கிஸ்தாநியரிடம் கைகுலுக்கி நண்பராக இருங்கள், பரஸ்பரம் உதவிக்கொள்ளுங்கள், இன்முகம் காட்டி பேசுங்கள், நம் நாட்டுக்கு சுற்றுலா வந்தால் உபசரியுங்கள், கடுஞ்சொல் கூறாதீர்கள், இதோ கராச்சிக்கு பஸ்...லாகூருக்கு ரயில்..." என்பார்,

  எங்கே? எப்படி? எப்போது?

  பொதுமக்களிடம், பொதுமேடையில், அமைதி காலத்தில்..!

  இரண்டும் வெவ்வேறு சூழ்நிலையில் பேசப்பட்டவை என்றும்...

  இரண்டுமே மிக மிக சரியானவை என்பதையும்,

  ஒருத்தருக்கு சொல்லப்பட்டது மற்றவருக்கு பொருந்தாது என்பதையும்...

  மீண்டும் மீண்டும் மீண்டும்... எத்தனைமுறை எடுத்து சொன்னாலும் ஏன் இந்த "குதர்க்கவாத பதிவர்கள்" புரிந்து கொள்ளவே மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறார்கள்..?

  குர்ஆனை காபி பேஸ்ட் பண்ணி குதர்க்கமாக பதிவு போடும் இந்த குதர்க்க வாதிகள் இதை மட்டுமாவது அறிந்து கொண்டால்...

  நம் நாட்டில் அமைதி ஆறாய் பெருக்கெடுத்து அல்லவா ஓடும்..?

  இது ஒன்றுதான் இந்த Islamophobiaகாரர்களிடம் நான் விரும்பாதது.

  'குர்ஆன் காபிர்களை கொல்ல சொல்கிறது' என்று மீண்டும்.. மீண்டும் மீண்டும் பதிவு போடுவதால்...

  எனக்கென்னவோ...

  இவர்கள் முஸ்லிம்கள் அல்லாத பிற சமயத்தவரை எல்லாம்....

  "இஸ்லாமிய எதிர்ப்பு பயங்கரவாதி"களாய் ஆக்கி இந்திய அமைதிக்கு குந்தகம் விளைவிக்க நாடி...

  இப்படி தொடர்ந்து உண்மைக்கு மாறாய் ஜிஹாத்-ஐ திரித்து 'பயங்கரவாத பதிவு' வெளியிடுகிறார்களோ என்ற ஐயம் தோன்றுகிறது..!

  விளக்கம் சொன்ன பிறகும் மீண்டும் தொடர்ந்து வேறு தலைப்பில் அதையே போடுவதால், இவர்கள் ஏதோ சந்தேகம் கேட்பதாக எனக்கு தெரியவில்லை..!

  இந்திய-தமிழக அரசுகள்... இனி இந்த பதிவர்களை சட்டம் போட்டு தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.... என்று கேட்டுக்கொள்கிறேன்.

  ReplyDelete
 3. சகோதரர் சுல்தான்,

  அஸ்ஸலாமு அலைக்கும்,

  தங்களது வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி சகோதரர்

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அமைதியையும், மகிழ்ச்சியையும் இறைவன் தந்தருள்வானாக..ஆமீன்

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹ்மத் அ

  ReplyDelete
 4. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... "இஸ்லாமோஃபோபியா" பதிவுகளினால் இஸ்லாத்திற்கு கிடைக்கும் நன்மைகளை அருமையாக பட்டியலிட்டுள்ளீர்கள் சகோ, மாஷா அல்லாஹ்!

  //அழைப்பு பணியை தொய்வில்லாமல் கொண்டு செல்வதும் இத்தகைய பதிவுகள் தான்//

  நிதர்சனமான உண்மை! அது அவர்களுக்கும் புரியவேண்டும். இன்ஷா அல்லாஹ் இந்த பதிவின் மூலமாவது இனி புரியும்.

  ReplyDelete
 5. அஸ்ஸலாமு அலைக்கும்
  அன்பின் சகோதரன் ஆஷிக்,
  இஸ்லாமிய எதிர்ப்பு பதிவுகளால் எந்த விதமான நன்மைகள் ஏற்படுகிறது என்பதை வேறொரு கோணத்தில் யோசித்து மிக அழகாக சொல்லியிருக்கின்றீர்கள். இஸ்லாமிய எதிர்ப்பு பதிவு ஒன்று தம் உள்ளத்தில் இருக்கும் விஷமத்தை வெளிப்படுத்தும் வண்ணமோ அல்லது ஹிட்சுக்காகவோ அல்லது ஒன்றும் தெரியாமல் அரைகுறையாக அறிந்ததை வைத்து இப்போது வருகிறது. இந்துத்துவவாதிகள், கள்ளக் கிறித்தவர்கள் மற்றும் சித்தாந்தவாதிகளில் பலர் (கம்யூனிஸ்டுகள், நாத்திகர்கள் உட்பட) முதல் வகையை சார்ந்தவர்களாக தான் இருக்கின்றனர். நன்றாக உண்மை விளங்கியும் தமது இருப்பிற்கு ஆபத்து என்றெண்ணி இஸ்லாத்திற்கு எதிராக தமது எழுத்தை அமைத்துக் கொள்கின்றனர். ஹிட்சுக்காக எழுதும் வகையினர் அவ்வப்போது தோன்றி எதையாவது எழுதி விட்டு அந்த சமயத்தில் கிடைக்கும் ஹிட்சையும் பின்னூட்டங்களையும் கண்டு மனம் பூரித்து விடுவார்கள். அடுத்த நாளே முதல் நாள் எழுதியதற்கு மாற்றமாக எழுதுவதைக் கண்டு இவர்களுக்கு வெட்கம் வராது. ஏனெனில் ஹிட்ஸ் தான் இவர்களின் இலக்கு. மூன்றாவது வகையினர் தாங்கள் அரைகுறையாக அறிந்த ஒன்றை (அது சரியோ அல்லது தவறோ) எழுதி வைத்து விட்டு அதன் மீது நின்று விவாதமும் புரிந்து கொண்டிருக்கின்றனர். இதில் பெரும்பாலனவர்கள் உண்மையை எடுத்து சொல்லும் போது தமது தவறை உணர்ந்து சரிப்படுத்தி கொள்கின்றனர். ஆனால் சிலர் தான் எழுதியது தான் சரி என்று வாதிடும் குணத்தை உடையவர்களாக இருக்கின்றனர். எது எப்படியிருப்பினும் இஸ்லாத்திற்கெதிராக எழுதும் இவர்களின் ஒவ்வொரு எழுத்துக்களும் அவர்கள் எதிர்பார்த்த முடிவை கொடுக்கவில்லை என்பது தான் நிதர்சனம்.

  ReplyDelete
 6. வினவின் அஹமதியா பதிவில் பக்கம் பக்கமாக ஆங்கிலத்தில் மட்டுமே வாதிட்ட ஆஷிக்கை நினைத்து பார்க்கிறேன். ஆனால் இப்போது அதே வினவின் பித்தலாட்டத்தை அழகிய தமிழில் படம் வரைந்து பாகங்களை குறித்து வெளியிட்ட ஆஷிக்கையும் நினைத்து பார்க்கிறேன். அதே போன்று "நெத்தியடி" என்ற அடைமொழியுடன் வாதிட்ட முஹம்மத் ஆஷிக் அவர்களையும் மறக்க முடியாது. ஒவ்வொரு பாயிண்ட்டுக்கும் ஒரு குட்டி உதாரணம் வேறு சொல்லி விளக்குவார். அவரின் பின்னூட்டங்களை கண்டு நான் எப்போதும் அசந்து போவது தான் வாடிக்கை.

  ReplyDelete
 7. ஹைதர் பாயை எடுத்துக்கொண்டால் அவரை ம.க.இ.க வின் உறுப்பினர் என்றே நான் எண்ணியிருக்கிறேன். ஏனெனில் அவருடைய ஆரம்ப கால பின்னூட்டங்கள் அந்த சாயலில் தான் இருந்தன. ஆனால் ஹைதர் பாய் தான் வினவின் பித்தலாட்டத்தை வெளிக்கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றினார் என்பதை என்னும் போது என்னுடைய எண்ணம் எவ்வளவு தவறானது என்றெண்ணி ஒரு தடவை தனியாக சிரித்திருக்கிறேன். ஆனால் இன்று மூவரும் (எதிர்க்குரல், பின்னூட்டவாதி மற்றும் வலையுகம் ) தத்தமது வலைப்பூக்களினூடாக இஸ்லாத்தை முடிந்த வரையில் எடுத்து சொல்கிறீர்கள் என்பதை என்னும் போது மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. குறிப்பாக இந்த மூன்று வலைப்பூக்கள் உருவாக "வினவு" ஒரு மறைமுக காரணம் என்பதால் கொஞ்சம் சத்தமாகவே வினவு கம்பெனிக்கு கேட்கும் தொனியில் சொல்கிறேன் "நன்றி".

  ReplyDelete
 8. ஸலாம் ஆஷிக். நான் இந்தப் பதிவுலகிற்கு வந்தபின்னரே இஸ்லாம் குறித்து அதிகமதிகம் தெரிந்துகொண்டிருக்கிறேன். அதிலும், முஸ்லிம் பதிவர்கள் எழுதும் இஸ்லாமியப் பதிவுகளைக் காட்டிலும், இஸ்லாமிய எதிர்ப்புப் பதிவுகளை வாசித்து, அவற்றிற்குப் பதில் தேடி (விவாதிக்க அல்ல, எனக்கு தெளிவுகிட்ட வேண்டி) அறிந்துகொண்டதே அதிகம்!! அந்த வகையில், நானும் உங்களோடு சேர்ந்து அவர்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.

  நான் பதிவுலகுக்கு வந்த சமயத்தில், சில நாத்திகவாதிகளின் பதிவுகளுக்கு நண்பர்கள் பீர் முஹம்மது, அ.மு.செய்யது ஆகியோர் விளக்கமாக பதில் சொல்லிக் கொண்டிருந்தவர்களில் முதன்மையானவர்கள்.

  திருமதி.நாஸியாவும் இஸ்லாமிய கருத்துக்களை மிக அழகிய முறையில், அழுத்தமாக எழுதுபவர். தற்போது பிற பணிகள் காரணம் அவர்கள் பதிவுலகில் தற்காலிகமாக இல்லை என்றறிகிறேன்.

  நானும் இதுபோன்றதொரு கேள்வியால் தூண்டப்பட்டு, என் அறிவுக்கு எட்டிய வகையில் ஒரேயொரு பதிவு எழுதினேன்: வில்லன் இல்லாத சினிமா

  ReplyDelete
 9. அஸ்ஸலாமு அலைக்கும்! சகோ ஆஷிக்!

  சிறந்த பதிவு. முன்பு நான் தமிழ்மணத்தில் வந்தபோது இஸ்லாத்துக்கு எதிராக நேசகுமார், அரவிந்தன் நீலகண்டகன், கால்கரி சிவா, ம்யூஸ், என்று ஒரு பெரும் படையே இஸ்லாத்தின் மீது புழுதி வாரி தூற்றிக் கொண்டிருந்தது. அன்று இந்த அளவு தவ்ஹீத் வளர்ச்சியும் இல்லாத நேரம். அதைப்பார்த்து வெகுண்டு ஒரு வலைப்பூவை ஆரம்பித்து ஓரளவு பதில்களும் கொடுத்துக் கொண்டிருந்தேன். அது இன்று வரை தொடர்கதையாகி விட்டது. விடவும் முடியவில்லை. ;- )

  எனவே என்னை தமிழ் மணத்துக்கு கொண்டு வந்தவர்களும் எதிர் தரப்பினரே! அவர்களுக்கு என் நன்றி!

  ReplyDelete
 10. சகோதரர் முஹம்மது ஆஷிக்,

  வ அலைக்கும் ஸலாம்,

  1. --------
  'குர்ஆன் காபிர்களை கொல்ல சொல்கிறது' என்று மீண்டும்.. மீண்டும் மீண்டும் பதிவு போடுவதால்...
  ----------

  விளங்கி கொள்வதற்கு எவ்வளவோ வழிகள் இருக்கின்றன சகோதரர். அதில் ஒரு வழி நாயகம் (ஸல்) அவர்களது வாழ்க்கையை பார்ப்பது. அவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள்? அவர்களை விட இஸ்லாமை முழுமூச்சாக கடைபிடித்தவர்கள் உண்டா?

  அற்புத மனிதரான உமர் (ரலி) அவர்களுக்கு கூட இந்த விசயம் தெரியாமல் போயிற்றே? தெரிந்திருந்தால் மற்ற மதத்தவரை கொன்று குவித்திருப்பாரே? இந்த அடிப்படையான விஷயம் எப்படி அவருக்கு தெரியாமல் போனது?

  ஆக, இன்று உலகிலுள்ள முஸ்லிம்களில் பெரும்பாலானோர் குரானின் அந்த வசனத்திற்கு முரண்பட்டு கொண்டு உண்மையான முஸ்லிம்களாக இல்லாமல் வாழாமல் இருக்கின்றனர். அந்தோ பரிதாபம்.

  இறைவா, அறியாமையில் செயல்பட்டு கொண்டிருக்கும் அந்த சிலருக்கு கூடிய விரைவில் நேர்வழியை காட்டுவாயாக...ஆமீன்

  2. ---------
  விளக்கம் சொன்ன பிறகும் மீண்டும் தொடர்ந்து வேறு தலைப்பில் அதையே போடுவதால், இவர்கள் ஏதோ சந்தேகம் கேட்பதாக எனக்கு தெரியவில்லை..!
  ---------

  நன்றாக புரிந்து கொண்டார்கள். வேறு எந்த கொள்கையை தாக்குவதை காட்டிலும் இஸ்லாமை தாக்கினால் அதற்கு நல்ல பரபரப்பு இருக்குமென்று. இதுவும் நல்லதுக்கு தான். எப்படி என்று கேட்கின்றீர்களா? பதிவை இன்னொரு முறை படித்து பார்த்து கொள்ளுங்கள்.

  3. --------
  "நம் பதில்களுக்கு... ஏதாவது சொல்லி மறுக்க வேண்டும்" என்பதற்காகவாவது... 'அந்த பதிவர்கள் குர்ஆன், ஹதீஸ்.. இவற்றை புரட்டி உண்மைகளை அறிந்து கொள்ள மாட்டார்களா' என்ற ஆவலில்தான் தொடர்ந்து நான் விவாதிப்பது சகோ. ஆஷிக் அஹ்மத்.
  -------

  அல்ஹம்துலில்லாஹ்..நிதர்சனமான உண்மை சகோதரர். இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து செயலாற்றுவோம்.

  ReplyDelete
 11. தொடர்ச்சி....

  சமயங்களில் இஸ்லாமிய எதிர்ப்பு பதிவுகளை காணும் போது விரக்தி ஏற்படுவதுண்டு. முஸ்லிம்களும் விளக்கம் சொல்லிக்கொண்டு தான் இருக்கின்றார்கள் இருந்தாலும் இது புரியாமல் மேலும் மேலும் வேறு சிலர் வந்து அதே கேள்வியை கேட்கின்றார்களே என்று...என்னை போல மேலும் சில சகோதரர்களும் இத்தகைய விரக்தியை அனுபபித்திருக்கலாம்.

  ஆனால் இத்தகைய நேரத்தில் எனக்கு உறசாகமாக இருப்பது பின்வரும் இறைவசனங்கள் தான்

  "உங்களுக்கு முன் சென்று விட்ட (நம்பிக்கையுடைய)வர்களுக்கு ஏற்பட்டதைப் போன்ற நிலை உங்களுக்கு வாரமலேயே நீங்கள் சுவனத்தில் நுழைந்து விடலாம் என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்களா? (அல்குர் ஆன் 2:214)"

  “அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களினால் அவர்கள் மனம் தளர்ந்து விடவில்லை;ஊக்கம் குன்றிவிடவில்லை.(அசத்தியத்திற்கு முன்) அவர்கள் பணித்திடவுமில்லை.நிலைகுலையாத இத்தகைய பொறுமையாளர்களையே இறைவன் நேசிக்கிறான்.”(3:146)

  அல்ஹம்துலில்லாஹ்..எவ்வளவு அழகான நேர்த்தியான வசனங்கள்!!!!!!!!!!!!!!!

  எனக்கு பெரும் ஊக்கமாய் இருப்பவை இவை. இன்ஷா அல்லாஹ், திரும்ப திரும்ப கேட்பவையும் இறைவன் நமக்கு கொடுத்திருக்கும் சோதனைகள் என்பதை உணர்ந்து பொறுமையுடன் பதிலளிப்போம்.

  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரர்,

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹ்மத் அ

  ReplyDelete
 12. வ அலைக்கும் ஸலாம் (வரஹ்) சகோதரி அஸ்மா,

  -------
  நிதர்சனமான உண்மை! அது அவர்களுக்கும் புரியவேண்டும். இன்ஷா அல்லாஹ் இந்த பதிவின் மூலமாவது இனி புரியும்.
  -------

  இன்ஷா அல்லாஹ்...தான் நாடுவோருக்கு இறைவன் நேர்வழி காட்டுகின்றான். அந்த பட்டியலில் அவர்கள் இருக்க வேண்டுமென்று துவா செய்வோம்....

  நன்றி.

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹ்மத் அ

  ReplyDelete
 13. அன்பு சகோதர சகோதரிகளுக்கு
  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

  இணையம் என்கிற முகம் தெரியா ஊடகத்தில் அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்காக ஒன்றினைந்த நம்மை போன்ற சகோதரர்கள் இந்த நற்செய்தியை பெற்றுக் கொள்ளுங்கள்.

  அறிவிப்பாளர்:உமர்(ரலி)
  முஹம்மது நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்:

  “அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் இறைத்தூதராகவோ,இறைவழியில் உயிர் நீத்த தியாகிகளாகவோ(ஷஹீத்களாகவோ)
  இருக்கமாட்டார்கள்.ஆனால்,மறுமைநாளில் அல்லாஹ்விடம் அவர்களுக்குக் கிடைக்கும் அந்தஸ்தைக் கண்டு நபிமார்களும் தியாகிகளும் ஆதங்கப்படுவார்கள்!” மக்கள் வினவினார்:”அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் யார்?” அண்ணலார் பதில் அளித்தார்கள்: “அவர்கள் ஒருவருக்கொருவர் உறவினர்களாய் இல்லாமலிருந்தும், தமக்கிடையே எந்தவிதக் கொடுக்கல் வாங்கலும் இல்லாமிலிருந்தும், இறைவனின் மார்க்கத்திற்காகவே ஒருவரையொருவர் நேசித்து வந்தவர்கள். இறைவன் மீது ஆணையாக! அவர்களின் முகங்கள் ஒளிவீசிக் கொண்டிருக்கும். அவர்களைச் சுற்றிலும் எல்லாத் திசைகளிலும் ஒளிமயமாகவே இருக்கும். மக்கள் அனைவரும் அச்சத்தில் ஆழ்ந்திருக்கும்(மறுமை)நேரத்தில் அவர்களுக்கு அச்சம் ஏதும் இராது. மக்கள் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் நேரத்தில் அவர்களுக்கு எந்தத் துயரமும் இராது.”

  ReplyDelete
 14. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

  அறிவிப்பாளர்: அம்ருபின் அவ்ஃப் (ரலி)

  நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நவின்றார்கள்

  இஸ்லாமிய மார்க்கம் தொடக்கத்தில் மக்களுக்கு அந்நியமானதாக இருந்தது,விரைவில் இது முன்போலவே அந்நியமானதாகிவிடும்;
  எனவே அந்நியமானவர்களுக்கு என் வாழ்த்துக்கள்!
  இவர்கள் எனக்குப் பின்னால் மக்கள் சீர்குலைத்துவிட்ட என் வழிமுறைகளை உயிர்ப்பிப்பதற்காக எழக்கூடியவர்கள் ஆவார்கள்.
  (நூல்:மிஷ்காத்)

  நபியவர்கள் முன்னறிப்பு செய்த கூட்டத்தில் நாம் தொடர்ச்சியாக இருக்க அல்லாஹ் நமக்கு உதவி செய்வானாக

  ReplyDelete
 15. சகோதரர் ஷேக் தாவுத்,

  வ அலைக்கும் ஸலாம்

  ---
  இதில் பெரும்பாலனவர்கள் உண்மையை எடுத்து சொல்லும் போது தமது தவறை உணர்ந்து சரிப்படுத்தி கொள்கின்றனர்.
  ---

  எல்லாப் புகழும் இறைவனிற்கே. உண்மை தான் சகோதரர். அந்த சகோதரர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  -----
  எது எப்படியிருப்பினும் இஸ்லாத்திற்கெதிராக எழுதும் இவர்களின் ஒவ்வொரு எழுத்துக்களும் அவர்கள் எதிர்பார்த்த முடிவை கொடுக்கவில்லை என்பது தான் நிதர்சனம்.
  -----

  ஒரு பலனையும் கொடுக்க போவதில்லை. எதற்கோ இறைத்த நீர் போல தான் ஆகியது/ஆகிக்கொண்டிருக்கின்றது.

  ----
  ஆனால் இன்று மூவரும் (எதிர்க்குரல், பின்னூட்டவாதி மற்றும் வலையுகம் ) தத்தமது வலைப்பூக்களினூடாக இஸ்லாத்தை முடிந்த வரையில் எடுத்து சொல்கிறீர்கள் என்பதை என்னும் போது மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
  ----

  அல்ஹம்துளில்லாஹ்.

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹ்மத் அ

  ReplyDelete
 16. சகோதரி ஹுசைனம்மா,

  வ அலைக்கும் ஸலாம்,

  சகோதரி நாசியாவை தெரியும். மற்ற இருவர் பற்றியும் இப்போது தான் அறிந்து கொள்கின்றேன். அறிமுகத்திற்கு ஜசக்கல்லாஹு க்ஹைர்.

  தங்களது பதிவை படித்தேன். அல்ஹம்துலில்லாஹ் தெளிவான விளக்கங்கள். ஜசக்கல்லாஹு க்ஹைர். மற்றபடி, சிலர் சொன்னது போல, தாங்கள் "அந்த வார்த்தை" உபயோகித்ததில் எனக்கு துளியும் உடன்பாடில்லை. மன்னிக்கவும்...

  தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹ்மத் அ

  ReplyDelete
 17. சகோதரர் ஜமால்,

  அஸ்ஸலாமு அலைக்கும்,

  தங்களின் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி சகோதரர்..

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹ்மத் அ

  ReplyDelete
 18. சகோதரர் சுவனப்பிரியன்,

  வ அலைக்கும் ஸலாம்,

  தங்களைப் போன்றோர்கள் தான் எங்களுக்கு மிகப்பெரிய ஊக்கத்தை, உற்சாகத்தை தந்தீர்கள். நீங்கள், சுல்தான் பாய், நல்லடியார், வஹ்ஹாபி போன்றவர்கள் நம் உம்மத்துக்கு ஆற்றிய பணிகளுக்கு தக்க நற்கூலியை இறைவன் வழங்குவானாக.

  இன்று நாம் சென்றால் அடுத்த குழுவை இறைவன் வர வைப்பான். இன்ஷா அல்லாஹ்.

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹ்மத் அ

  ReplyDelete
 19. @ஆஷிக்,
  கண்டிப்பாக நீங்கள் குறிப்பிட்ட வஹ்ஹாபி, சுல்தான் பாய் , நல்லடியார், வாஞ்சூர் அப்பா மற்றும் பல சகோதரர்கள் இந்த உம்மத்திற்கு ஆற்றிய சேவைகளுக்கு இறைவன் ஈருலகிலும் கூலியை வழங்குவானாக.

  நான் மிகவும் சிலாகித்து படித்தது அண்ணன் வஹ்ஹாபி அவர்களின் ஆக்கங்களை தான். அதிலும் அவர் நேசக்குமாருக்கு கொடுக்கும் பதிலடிகள் திண்ணை இணைய இதழில் மிகவும் பிரசித்தம். இந்துத்துவாக்களுக்கு எதிரான அண்ணன் வஹ்ஹாபி அவர்களின் கட்டுரைகளை படிக்கும் போதே ஒருவித ஈர்ப்பு என்னை ஆட்கொள்ளும்.

  ReplyDelete
 20. சகோதரர் ஹைதர் அலி,

  வ அலைக்கும் ஸலாம்,

  ----------
  அறிவிப்பாளர்:உமர்(ரலி)
  முஹம்மது நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்:

  “அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் இறைத்தூதராகவோ,இறைவழியில் உயிர் நீத்த தியாகிகளாகவோ(ஷஹீத்களாகவோ)
  இருக்கமாட்டார்கள்.ஆனால்,மறுமைநாளில் அல்லாஹ்விடம் அவர்களுக்குக் கிடைக்கும் அந்தஸ்தைக் கண்டு நபிமார்களும் தியாகிகளும் ஆதங்கப்படுவார்கள்!” மக்கள் வினவினார்:”அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் யார்?” அண்ணலார் பதில் அளித்தார்கள்: “அவர்கள் ஒருவருக்கொருவர் உறவினர்களாய் இல்லாமலிருந்தும், தமக்கிடையே எந்தவிதக் கொடுக்கல் வாங்கலும் இல்லாமிலிருந்தும், இறைவனின் மார்க்கத்திற்காகவே ஒருவரையொருவர் நேசித்து வந்தவர்கள். இறைவன் மீது ஆணையாக! அவர்களின் முகங்கள் ஒளிவீசிக் கொண்டிருக்கும். அவர்களைச் சுற்றிலும் எல்லாத் திசைகளிலும் ஒளிமயமாகவே இருக்கும். மக்கள் அனைவரும் அச்சத்தில் ஆழ்ந்திருக்கும்(மறுமை)நேரத்தில் அவர்களுக்கு அச்சம் ஏதும் இராது. மக்கள் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் நேரத்தில் அவர்களுக்கு எந்தத் துயரமும் இராது.”
  ---------------
  நூல்: புஹாரி மற்றும் முஸ்லிம்.

  அல்ஹம்துலில்லாஹ்...அல்ஹம்துளில்லாஹ்...அல்ஹம்துலில்லாஹ்..

  எவ்வளவு அழகான ஹதீஸை தந்திருக்கின்றீர்கள். படித்தவுடன் கண்களில் கண்ணீர் நிறைந்து விட்டது. ஆம், இஸ்லாத்தை முழுமையாக பின்பத்ற்ற நினைக்கும் அந்நியர்களில் ஒருவராக இருப்போம்...இன்ஷா அல்லாஹ்...

  தங்கள் வருகைக்கும் அழகான ஹதீஸ்களுக்கும் நன்றி,

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹ்மத் அ

  ReplyDelete
 21. அஸ்ஸலாமு அலைக்கும்,

  வாஞ்சூர் அப்பாவை மறந்து விட்டேன். நினைவூட்டியதற்கு நன்றி ஷேக் தாவுத்

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹ்மத் அ

  ReplyDelete
 22. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
  அல்ஹம்துலில்லாஹ்! எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே., கண்ணியம் வாய்ந்த அல்லாஹ்வின் அழைப்புப் பணியாளர்களுக்கு மத்தியில் இந்த சிறியோனின் பின்னூட்டத்தையும் அனுமதித்தற்கு நன்றி சகோதரரே.,

  ReplyDelete
 23. சகோதரர் குலாம்,

  வ அலைக்கும் ஸலாம்,

  தங்களின் வருகைக்கு நன்றி குலாம்...'உம்மத்' என்னும் அழகிய செயல்திட்டத்தை தொடங்கி அதில் நம் சகோதரர்களை ஒன்றிணைத்து அழைப்பு பணிக்கு வித்திட்ட உங்களுக்கு ஈருலகிலும் நற்கூலியை இறைவன் வழங்குவானாக...ஆமீன்.

  உங்களின் தளம் மற்றும் பின்னூட்டங்கள் வாயிலாக எனக்கு என்றென்றும் உறுதுணையாய், பக்கபலமாய், ஆதாரவாய் நிற்கும் உங்களுக்கு ஜசக்கல்லாஹு க்ஹைர்...

  ----
  இந்த சிறி***
  ----

  இது போன்ற வார்த்தைளை தவிர்த்து கொள்ளுங்கள் சகோதரர்...

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹ்மத் அ

  ReplyDelete
 24. Masha Allah. As a regular reader (only) of Tamilmanam, I used to get upset for lacking knowledge and time to respond to anti-Islamic posts. After seeing u people, all of u, from Vanjoor Appa until Ashiq(s), am really glad. All praise to the Almighty.
  Continue the good efforts, Brothers and Sisters..!

  ReplyDelete
 25. அஸ்ஸலாமு அழைக்கும் ! ( உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.,)
  நீங்களும் இஸ்லாமியர், நானும் இஸ்லாமியர் , உங்களின் கருத்தும் , எனது கருத்தும் ஒன்று, நீங்கள் என்னை / கருத்தை எற்றுகொண்டவர், நான் உங்களின் / கருத்தை ஏற்று கொண்டவர். புரியவில்லையா., பி.ஜே கூட்டத்தில் பி.ஜே வை நேசிப்பவர்களின் (?!!) கூட்டத்துக்கும் வித்தியாசம் வேண்டும் அல்லவா., கேள்விகளை நான் கேட்கிறேன்,, காரம் அதிகம் இருக்கும் , பதில் கொடுங்கள், காரணம் அந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் பட்சத்தில் ஒரு பெயர் தாங்கி ( என்னை போன்ற., ., இந்த இடத்தில ஒரு சிறிய சுயபுராணம் அவசியமாகிறது.,பெண்களுக்கு தராவீஹ் தொழுகை வைக்கும் அளவிற்கும், தவ்ஹீத் சிந்தனையில் முழு நம்பிக்கையும், மத பிரசங்கள் நான் செய்தால் மற்றவர்களை எனது கருத்தில் இருக்கும் உண்மையை உணரவைக்கும் திறமையும் ( நண்பர்கள் சொன்னது) அடியேனின் இயல்பாய் அமைந்த அம்சங்கள்., الحمدلله ) முஸ்லிமை , மற்றவர்களுக்கு முன்மாதிரி ஆக்கும் வாய்ப்பு கிடைக்கும்., உங்களின் அனுமதி வேண்டி.......

  ReplyDelete
 26. Dear bother Anony,

  Assalaamu Alaikum,

  Thanks for your visit and encouraging comments. All Praise due to Allah(swt)...

  Your brother,
  Aashiq Ahamed A

  ReplyDelete
 27. சகோதரர் சர்புதீன்,

  வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு....

  தங்களின் கேள்விகள் காரமாக இருக்கலாம். ஆனால் கண்ணியமானதாக இருக்க வேண்டும். கண்ணியமான கேள்விகள் தான் அறிவுக்கு வித்திடும். இஸ்லாம் நமக்கு சொல்லி கொடுப்பதும் அதுதான். அழகான, தெளிவான முறையில் உங்கள் கேள்விகள் அமைய வேண்டியவனாக உங்களை கேள்விகள் கேட்க அழைக்கின்றேன்...இன்ஷா அல்லாஹ்...

  நன்றி,

  உங்கள் சகோதரன்,

  ReplyDelete
 28. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

  மாஷா அல்லாஹ்!

  ReplyDelete
 29. சகோதரர் ஜாபர்,

  வ அலைக்கும் ஸலாம்,

  தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரர்...

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹ்மத் அ

  ReplyDelete
 30. சகோதரர் தமிழன்,

  அஸ்ஸலாமு அலைக்கும்,

  மறுபடியும் ஒரு லின்க்கா? இவையெல்லாம் எங்களை சட்டை செய்யாது சகோதரர். அனைத்தையும் பார்த்து விட்டு தான் வந்திருக்கின்றோம்.

  நீங்கள் கொடுத்தது மாதிரியே நான் ஒரு லிங்க் கொடுத்தால் இஸ்லாம் உண்மை என்று நம்பிவிடுவீர்களா என்ன? ஆம் என்றால் சொல்லுங்கள் நூற்றுக்கணக்கில் தருகின்றேன்.

  தீர ஆராய வேண்டும் சகோதரர். ஒன்று செய்வோம். நீங்கள் கொடுக்கும் லின்க்குகளின் துணைக்கொண்டு இஸ்லாத்தை ஆராயுங்கள். அதுபோல உங்கள் கொள்கையையும் நன்கு ஆராயுங்கள். பின்பு நான் சொன்ன ஒப்பந்தத்திற்கு வாருங்கள். இதுவே நாம் இருவரும் உண்மையை அறிந்து கொள்ள சிறந்த வழி. என்ன சொல்கின்றீர்கள் சகோதரர்?

  அப்புறம் இந்த Proxy மாற்றி கொண்டு வருவதெல்லாம் ஓல்ட் யுக்தி. கணினி வேகத்தை குறைக்கும். வேறு மாதிரி எதையாவது ட்ரை பண்ணுங்கள்.

  உங்கள் சகோதரர்,
  ஆஷிக் அஹ்மத் அ

  ReplyDelete
 31. Aashiq, Assalamu'Alaykum Wa Rahmatullahhe Wa Barakatuhu...

  Very good post. May Allah give all the blessings and happiness to you and to your family. Keep up the good work and continue the same. Best wishes my dear friend. I'm lucky to be your friend from childhood...

  Salam, Anas...

  ReplyDelete
 32. Dear Anas,

  Wa alaikum salaam wa rahmathullaahi vabara kaaththuhu....

  Thanks for your visit and appreciation. All praise due to Allah(swt)...

  May Allah(swt) bless you and your family with peace and joy...

  Yours,
  Aashiq Ahamed A

  ReplyDelete
 33. அன்பான தம்பி ஆஷிக்,
  அஸ்ஸலாமு அலைக்கும்.

  நடப்பை நன்றாகச் சொல்லியிருக்கின்றீர்கள்.

  இஸ்லாத்தை எதிர்ப்பவர்கள் இன்னும் நிறைய எழுதவேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பும்.

  விளைவு என்னவாக இருக்கும் என்பது உங்கள் பதிவில் விளக்கமாக, தெளிவாகவே உள்ளது.

  ஜஸாக்கல்லாஹு கைரா!

  ReplyDelete
 34. அன்பு அண்ணன் வஹ்ஹாபி அவர்களுக்கு,

  வ அலைக்கும் ஸலாம்,

  தங்களை போன்றவர்களை பார்த்தே நாங்கள் வந்தோம். உங்களைப் போன்றவர்களின் ஊக்கம் நாங்கள் சரியான திசையில் செல்லும்போது தொடர்ந்து கிடைக்க வல்ல இறைவன் உதவி புரிய வேண்டும்.

  தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹ்மத் அ

  ReplyDelete
 35. Dear Aashiq Ahamed,
  Assalamu Aleykum wa rahmatullahi wa barakatuh,
  Masha'allah an other wonderful article again !!!
  Friendship made by faith are always the best, and you proved it, Alhamdullilah !
  I'm very very very proud to be one of your relatives !!!

  May ALLAh(swt) bless, and reward you for all your good deed...Aamin...

  Keep going into the straigh path...

  Jazakkallahu kheir fr sharing this with us.  Your sister,
  M.Shameena

  ReplyDelete
 36. (ப்லோக்கேரில் பிரச்சனை இருந்ததால் கமெண்ட்கள் அழிக்கப்பட்டுள்ளன. அதனால் மீண்டும் பின்னூட்டத்தை பதிக்கின்றேன்)

  அன்பு அண்ணன் வஹ்ஹாபி அவர்களுக்கு,

  வ அலைக்கும் ஸலாம்,

  தங்களை போன்றவர்களை பார்த்தே நாங்கள் வந்தோம். உங்களைப் போன்றவர்களின் ஊக்கம் நாங்கள் சரியான திசையில் செல்லும்போது தொடர்ந்து கிடைக்க வல்ல இறைவன் உதவி புரிய வேண்டும்.

  தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹ்மத் அ

  ReplyDelete
 37. Dear Shameena,

  Wa alaikum salaam (varah)

  ----------
  Friendship made by faith are always the best
  ----------

  correctly said...

  Thanks for your visit and comment...

  Yours,
  Aashiq Ahamed

  ReplyDelete
 38. ASSALAMUALAIKUM....

  ALHAMDULILAH உங்கள் பதிவை படிக்கும் போது மிக சந்தோசமாக இருக்கிறது சகோதரே.. இன்ஷாஅல்லாஹ் உங்கள் நட்பு வட்டாரங்கள் மேலும் வளரட்டும் தொடரட்டும்..

  உங்களை போன்றே இஸ்லாமிய எதிர்ப்பு தளத்தை பார்த்து சுயமாக தளத்தை தொடங்கியவர்களில் நானும் ஒருவன். நான் என் ஊரின் அடையாளத்தோடு தளம் அமைத்து http://nagoreflash.blogspot.com/ என்னால் முடிந்த பதிவுகளை அளித்து வருகிறேன். அதற்கு உங்கள் தளத்தின் பதிவுகளும் பேருதவி புரிந்து வருகிறது ஜசக்கல்லாஹ்.

  இஸ்லாமிற்கு எதிரான பதிவுகள் நமக்கு நன்மைகளையே விளைவிக்கின்றன என்ற உங்களின் கருத்தை நான் முழுவதுமாக எற்றுகொள்கிறேன். வாழ்த்துக்கள்

  ReplyDelete
 39. அஸ்ஸலாமு அலைக்கும்,

  வாங்க NAGORE FLASH அப்துல்லா...இறைவன் அருளால் நலமோடு இருப்பீர்கள் என்று நம்புகின்றேன். உங்கள் தளத்தை நான் பார்வையிட்டதுண்டு. ஆனால் சமீப காலங்களில் அது நின்று விட்டது. இன்ஷா அல்லாஹ் மீண்டும் தொடர்கின்றேன் சகோதரர்.

  ------
  உங்களை போன்றே இஸ்லாமிய எதிர்ப்பு தளத்தை பார்த்து சுயமாக தளத்தை தொடங்கியவர்களில் நானும் ஒருவன்.
  ----------

  அல்ஹம்துலில்லாஹ். என்ன செய்வது சகோதரர்???...அவர்கள் நம்மை வதைப்பதாக நினைத்து கொண்டு விதையை போட்டு விட்டு சென்று விடுகின்றனர்.

  இவர்கள் மேலும் மேலும் இப்படி செய்தால், முஸ்லிம் பெற்றோகளுக்கு பிறந்த பலர் இஸ்லாமினுள் தங்களை முழுமையாக ஐக்கியப்படுத்தி கொள்வர். இன்ஷா அல்லாஹ்...

  தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.,

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹ்மத் அ

  ReplyDelete
 40. ALAIKUMSALAM...

  ZAZAKALLAHAIRUN BROTHER ASHIK AHMED.

  ReplyDelete
 41. // இவையெல்லாம் விட மேலாக, அழைப்பு பணியில் ஈடுபட புதிது புதிதாக பலரை உருவாக்கி, அழைப்பு பணியை தொய்வில்லாமல் கொண்டு செல்வதும் இத்தகைய பதிவுகள் தான். //

  அஸ்ஸலாமு அலைக்கும்,

  சரியாக கூறினீர்கள் ஆஷிக், இஸ்லாத்திற்கு எதிராக பொய் பிரச்சாரங்களையும், நம்பக மில்லாத ஹதீஸ்களையும் எடுத்து வைத்துக்கொண்டு (செங்கொடி, தருமி போன்றோர் etc.) அதற்காக அதிக நேரம் செலவிட்டு பல பதிவுகளை எழுதும் போது, உண்மையை உரைக்க நாம் எதற்கு தயங்க வேண்டும் என்ற எண்ணத்தை நமக்கு கொடுப்பதும் இது போன்ற பதிவுகள் தான்.

  ReplyDelete
 42. சகோதரர் ரஹ்மான் (??),

  அஸ்ஸலாமு அலைக்கும்,

  தாங்கள் குறிப்பிட்டுள்ள சம்பவங்கள் போன்று நாயகம் (ஸல்) அவர்களது காலம் தொட்டு நடந்துவருகின்றது. இதனால் இஸ்லாமிற்கு ஒருவித பங்கமும் வரப்போவதில்லை. நன்றாக யோசித்து பாருங்கள். இஸ்லாமிற்கெதிராக காலங்காலமாக எதிர்மறை கருத்துக்கள் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன. இருப்பினும் இஸ்லாம் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றதே, ஏன்?.

  ஒரே ஒரு முறை குர்ஆனை முழுமையாக படித்தால் போதும். நீங்கள் சொன்ன பிரச்சனைகள் பல ஓடிவிடும். ஆக பிரச்சனை என்பது குர்ஆனை பொருளறிந்து படிப்பதிலும், அதற்கான ஆர்வத்தை காட்டுவதிலும் இருக்கின்றது. We are not playing number game...

  என்னைச் சுற்றிலும் இஸ்லாத்தை தழுவிய பலர் இருக்கின்றனர் (மூன்று சகோதரிகள், நான்கு ஆண்கள்). இவர்கள் இஸ்லாமை அதன் படி வாழ்ந்துக்காட்டி கொண்டிருக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி மிகப்பெரியது. அதுவே நமக்கு பேரின்பத்தை கொடுக்கக்கூடியது.

  மற்ற மதங்கள் தங்கள் நம்பிக்கையாளர்களை மற்ற மார்க்கதிற்கும்/நாத்திகத்திற்கும் கொடுத்துக்கொண்டிருக்க இஸ்லாம் மட்டுமே நாத்திகர்களையும், மற்றவர்களையும் கவர்ந்துக்கொண்டிருக்கின்றது. அதற்கு நானும் என் நண்பர்களுமே சாட்சி.

  சோ நீங்கள் சொன்ன விசயங்கள் காலந்தொட்டே நடந்துக்கொண்டிருக்கின்றன. நீங்கள் ஒரு பகுதியை மட்டுமே பார்த்திருக்கிண்றீர்கள், காலம் செல்ல செல்ல நீங்கள் குறிப்பிட்டவர்கள் எப்படி மறுபடியும் திசை மாறுவார்கள் என்பதையும் நான் பார்த்திருக்கின்றேன்.

  So, I least care about what you said....நாம் வழக்கம் போல நம் தாவாஹ் பணியை தொடர்வோம். இஸ்லாம் குறித்த சந்தேகங்களை களைவோம். நேர்வழி காட்டவேண்டியது இறைவன் ஒருவனே...

  தான் நாடுவோரை அவன் தேர்தெடுக்கின்றான், நேர்வழி காட்டுகின்றான் - குர்ஆன்...

  புரிந்துக்கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கின்றேன்...

  நன்றி,

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹமத் அ

  ReplyDelete
 43. How to answer the web www.alisina,www.answering islam, newageislam

  ReplyDelete
 44. Brother C.Sugumar,

  Peace be upon you....

  //How to answer the web www.alisina,www.answering islam, newageislam///

  That is not a big bet brother. There are huge number of Islamic sites refuting claims of above said sites.

  For instance, you can refer to my article (given below) which gives details of some of the sites i am referring to...

  http://www.ethirkkural.com/2010/04/ii.html

  thanks for the question..

  your brother,
  aashiq ahamed a

  ReplyDelete