Friday, April 2, 2010

எழுத்து விவாதங்களில் பங்கேற்கும் முஸ்லிம்கள் கவனத்திற்கு - II



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்

இந்த தலைப்பில் முன்னர் வெளியான பதிவின் தொடர்ச்சி...


2. சென்ற பதிவு நாத்திகர்களுக்கானது என்றால், இந்த பதிவு இஸ்லாத்திற்க்கெதிராக வைக்கப்படும் வாதங்களை எதிர்க்கொள்வது பற்றியது.  

எழுத்து விவாதங்களில் நம் முன்னால் வைக்கப்படும் பெரும்பாலான கேள்விகளுக்கு பதிலளிப்பதில் பெரிய அளவில் சிரமம் இருக்காதென்றாலும் (அல்ஹம்துலில்லாஹ்) பல சமயங்களில் நமக்கெல்லாம் தோன்றுவது, 

சரி, இதையெல்லாம் எங்கிருந்து கொண்டு வருகிறார்கள்? 

இணைய தளங்களில் அதிகம் உலா வருபவர் என்றால் உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் இவர்கள் எங்கிருந்து இந்த கேள்விகளை கொண்டு வருகிறார்கள் என்று... 

பெரும்பாலான கேள்விகள் கீழ்காணும் ஆங்கில எழுத்துக்களை முதல் எழுத்தாக கொண்ட தளங்களாக தான் இருக்கும்,

  • a
  • j
  • f
  • t
  • d        

இந்த தளங்களில் வெளியாகும் தகவல்கள் பல, மனோத்தத்துவ ரீதியாக பாதிப்பை உண்டாக்குவதையே குறிக்கோளாய் கொண்டவை. உள்ளே உள்ள விஷயங்கள் என்றால் ஒன்றும் பெரிதாக இருக்காது. 

உதாரணத்துக்கு, ஒரு பதிவு துவங்கும் போதே இப்படி துவங்கும், "நிச்சயம் இந்த பதிவை முஸ்லிம்கள் படித்தால் அவர்கள் முஸ்லிம்களாக இருக்க மாட்டார்கள்" 

இதை படித்த உடனே சில முஸ்லிம்களுக்கு மனதில் ஒரு சிறு சலசலப்பு உண்டாகிவிடும். பின்னர் அவர்கள் அந்த பதிவை படிக்கும் போது, ஒரு வேலை இது உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகம் உருவாகிவிடும். 

வேறு சில பதிவுகள் இன்னும் தமாசாக இருக்கும், அதாவது, "இந்த பதிவிற்கு முஸ்லிம்களால் பதில் சொல்ல முடியாது அல்லது பதில் இருக்காது" என்று தொடங்குவார்கள் அல்லது முடிப்பார்கள். 

இது போன்ற பதிவுகளிலும் விஷயம் பெரிதாக இருக்காது, முன்னரே கேட்கப்பட்ட கேள்விகளாகத்தான் பெரும்பாலும் இருக்கும்.

ஆனால் ஒன்று, இந்த தளங்கள் முஸ்லிம்களுக்கு பெரும் உதவி புரிகின்றன என்றால் அது மிகையாகாது. ஏனென்றால் இவற்றுக்கு பதில் தேடுவதன் மூலம் நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம், அவர்களுடைய உண்மை முகங்களும் தெரிய வரும், நம் ஈமானும் அதிகரிக்கும்...அல்ஹம்துலில்லாஹ்...

ஆக, நான் கூறிக்கொள்ள விரும்புவதல்லாம், இஸ்லாத்திற்கெதிராக சிலர் கொண்டுவரும் விமர்சனங்களை முடிந்தவரை உணர்வுப்பூர்வமாக அணுக வேண்டாம் என்பதுதான். 

இன்னொன்றையும் சொல்லிவிட வேண்டும், நான் பார்த்தவரையில்     இஸ்லாத்திற்க்கெதிரான வாதங்களுக்கு பதிலளிக்கும் பெரும்பாலான நம் சகோதரர்கள் மிகுந்த விவேகத்துடன் வாதங்களை கையாள்கிறார்கள்...அல்ஹம்துலில்லாஹ்.     

நான் சொன்ன இரண்டாவது சிறு உதவி இங்கேதான். நான் மேலே சொன்ன தளங்களின் வாதங்களை நம் சகோதரர்கள் எப்படி கையாண்டு இருக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டுமானால் கீழ்க்காணும் தளங்களை பார்க்கலாம். அதுமட்டுமல்லாமல் இஸ்லாத்திற்க்கெதிரான பல்வேறு கேள்விகளுக்கான பதில்களையும் இந்த தளங்களில் பெறலாம்...இன்ஷா அல்லாஹ்...

  • http://www.muslim-responses.com/answering_the_critics
  • http://www.call-to-monotheism.com/refuting_anti_islamic_websites
  • http://www.bismikaallahuma.org/polemical-rebuttals/
  • http://www.time4truth.com/refutations.htm
  • http://answering-christianity.org/ac.htm
  • thedeenshow.com

இவை எனக்கு தெரிந்த, குறித்து வைத்த தளங்கள். இதுபோல ஏராளமான தளங்கள் இருப்பதாகவே தெரிகிறது. உங்களுக்கு இதுபோன்ற தளங்கள் தெரியுமானால் கமெண்ட் பகுதியில் தெரியப்படுத்தலாம். உபயோகமாக இருக்கும்..இன்ஷா அல்லாஹ்...
 .



சமீபகாலமாக, தமிழ் வலையுலகில் சிலர்,  Ibn Warraq அவர்களுடைய "Why I am not a Muslim (1995)" என்ற புத்தகத்தை பயன்படுத்தி எழுதி வருகின்றனர். இது ஆச்சர்யமான விஷயம். ஏனென்றால் அந்த புத்தகத்தின் தரம் அப்படி. எது எப்படியிருந்தாலும் சரி, அந்த புத்தகத்தின் அபத்தமான வாதங்களை அம்பலப்படுத்த பல இஸ்லாமிய தளங்கள் இருக்கின்றன. உதாரணத்துக்கு...

  • http://www.islamawareness.net/FAQ/warraq1a.html

நான் சமீபத்தில் பார்த்த ஒரு தளம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. இந்த தளத்தை நடத்துபவர்கள் தங்களை அடையாள படுத்திக்கொள்ள விரும்பவில்லை, தாங்கள் ஆணா பெண்ணா என்பது உட்பட...அவர்களுக்கு பெயர் உண்டு, ஆனால் அந்த பெயரை வைத்து நாம் எதையும் யூகிக்க முடியாது. 

அந்த தளம்...http://www.loonwatch.com/ 

சரி அவர்கள் யாராயிருந்தால் நமக்கென்ன? அவர்கள் சொல்லக்கூடிய விஷயம் என்ன என்பதுதான் முக்கியம். 

அவர்களுடைய நோக்கம், இஸ்லாத்திற்கெதிராக வைக்கப்படும் கருத்துக்களுக்கு பதில் சொல்லுவது. 

இஸ்லாத்திற்கெதிராக செயல்பட்டு பிரபலமாக உள்ள நபர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கென்று ஒரு பகுதி ஒதுக்கி, அவர்களது கருத்துக்களுக்கு பதில் கூறுவது. 



நான் மேல குறிப்பிட்ட இஸ்லாமிய எதிர்ப்பு தளங்களின் தலையாய குரு யாரென்றால், ராபர்ட் ஸ்பென்சர் (Robert Spencer) என்பவர்தான். இவர் தான் 'J' என்று தொடங்கும் தளத்தை நடத்துபவர், அதுபட்டுமல்லாமல் இவரது உதவியை/வாதங்களை மற்ற தளங்களும் நிறையவே பயன்படுத்தி கொள்ளும்.

இவரது நூல்களை/கருத்துக்களை அம்பலப்படுத்தி இவரை சங்கடத்தில் ஆழ்த்தி வருகிறது இந்த தளம். அதுமட்டுமல்லாமல், ராபர்ட் ஸ்பென்சரை எழுத்து விவாதத்துக்கு அழைத்துக் கொண்டிருக்கிறது.                

நான் மேல குறிப்பிட்டுள்ள முஸ்லிம்களுடைய தளங்கள் ராபர்ட் ஸ்பென்சருடைய வாதங்களுக்கு தெள்ளத்தெளிவாக பதிலளித்து வந்தாலும், இவர்கள் செய்வது சிறிது வித்தியாசமானது. ஏனென்றால் இவர்களுடைய வாதங்களில் நகைச்சுவை ததும்பும். 

ஆக, உங்கள் முன் யாராவது ராபர்ட் ஸ்பென்சருடைய புத்தகங்களை/கருத்துக்களை முன்வைத்தால் நீங்கள் இவர்களுடைய தளத்தையும் ஆவணச்செய்யலாம்.        

இந்த தளத்தில் நான் மிகவும் ரசித்த இரு பதிவுகள்... 
  • All terrorists are Muslims...except the 94% that aren't...
  • Fathima Bary needs to read her Bible...  

நிச்சயமாக உங்களிடம் நீங்கள் கேள்விப்படாத வித்தியாசமான ஒரு கருத்தை நம் முஸ்லிமல்லாத சில சகோதரர்கள் முன்வைத்தால் அவை பெரும்பாலும் இந்த Anti-Islam தளங்களில் இருந்து எடுக்கப்பட்டவையாகத்தான் இருக்கும். அந்த கருத்துக்களுக்கு பதிலளிக்க நாம் மேலே பார்த்த இஸ்லாமிய தளங்கள் உதவியாய் இருக்கும், இன்ஷா அல்லாஹ்... 

ஆக, இந்த பதிவின் மூலமாக நான் சொல்ல வருவதெல்லாம் இதுதான், 

இஸ்லாத்திற்கெதிராக கேள்விகள் வைக்கப்படும்போது, பெரும்பாலான கேள்விகளுக்கு நம்மால் சுலபமாக பதிலளித்து விட முடியும் (இன்ஷா அல்லாஹ்). அப்படி அதில் சிரமமிருந்தால் நாம் மேலே பார்த்த தளங்களை நீங்கள் பரிசீலனை செய்யலாம் என்பதுதான். 

என்னதான் இஸ்லாத்திற்கெதிராக விமர்சனங்கள் அதிகளவில் வைக்கப்பட்டாலும், இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொள்வோர் எண்ணிக்கை மட்டும் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது. இஸ்லாத்திற்க்கெதிரான அவர்களது திட்டங்கள்/சூழ்ச்சிகள் பலிக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது.

திட்டமிட்டுச் சதி செய்தார்கள்; அல்லாஹ்வும் சதி செய்தான்; தவிர அல்லாஹ் சதி செய்வதில் மிகச் சிறந்தவன் ஆவான் --- Qur'an 3:54      
 And they planned and Allah too planned, and Allah is the best of planners --- Qur'an 3:54

குரானின் இந்த வசனம் தான் நினைவுக்கு வருகிறது சிலரை நினைத்தால்...

முடிப்பதற்கு முன் ஒரு சிறு யோசனை. இது விதண்டாவாதம் புரியும் சில முஸ்லிமல்லாத சகோதரர்களுக்கு மட்டும் பொருந்தக்கூடியது. 

நான் நினைப்பதுண்டு, அவர்கள் மட்டும்தான் கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்க வேண்டுமா என்ன? 

நம்மிடம் கேள்வி கேட்கும் பெரும்பாலானோர், நாம் தவறான கொள்கையில் இருப்பதாகவும், அதிலிருந்து நம்மை காப்பாற்றுவதாகவும் நினைத்துதானே நம்மிடம் இஸ்லாத்தை பற்றி கேட்கின்றனர், வாதம் புரிகின்றனர்?

நம்முடைய நிலையும் அதுதானே?, அவர்கள் தவறான கொள்கையில் இருப்பதாக தானே நாமும் நினைக்கிறோம்?

ஆக,விவாதம் என்று வரும்போது, நம் கொள்கையைப் பற்றி ஒரு கேள்வியை அவர்களும், அவர்கள் கொள்கையைப் பற்றி ஒரு கேள்வியை நாமும் ஏன் கேட்கக்கூடாது? அவர்கள் எந்த கொள்கையை சேர்ந்தவர்களாகவும் இருக்கட்டும்,

  • மற்ற மதங்களை சேர்ந்தவர்களாக,
  • நாத்திகர்களாக,
  • இறைவன் இருக்கிறான், ஆனால் மதங்களை/மார்க்கங்களை நம்ப மாட்டோம் என்று சொல்லுபவர்களாக,

என்று யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஒரு கேள்வி நீங்கள், ஒரு கேள்வி நான் என்று ஏன் உடன்பாடு வைத்துக்கொள்ள கூடாது?

அவர்களிடம் பதிலில்லையென்றால் அவர்களை புண்படுத்தாமல் அடுத்த கேள்விக்கு சென்று விட வேண்டியதுதான்.

இது இஸ்லாத்தை பற்றி உண்மையிலேயே அறிந்து கொள்ள வேண்டும் என்று வருபவர்களுக்கு பொருந்தாது. விதண்டாவாதம் புரிபவர்களுக்கு மட்டுமே.  

இது என் தனிப்பட்ட கருத்து. மாற்றுக் கருத்து உடையவர்கள் தங்கள் கருத்துக்களை தயவு கூர்ந்து தெரிவிக்கவும்...


இறைவன் நம் எல்லோரையும் என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமின். 

மேலும் "அல்லாஹ் இறக்கி வைத்த இதைப் பின்பற்றுங்கள்" என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் "அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்களை எந்த வழியில் கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்" என்று கூறுகிறார்கள்;
என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும்,நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா? - Qur'an 2:170        

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்....


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ   







10 comments:

  1. சகோதரர் ஆஷிக் அவர்களுக்கு! தங்களின் மீது இறைவனின் அருள் என்றென்றும் நிலவட்டுமாக. தாங்களின் கருத்துக்களை நான் உளமாற வரவேற்கிறேன். மேலும் தாங்கள் குறிப்பிடாமல் இருந்த இன்னொரு விபரமும் குறிக்க விரும்புகிறேன்; தங்களின் அனுமதியுடன்.இஸ்லாம் என்பது எந்த இயக்கத்தின் அல்லது நாட்டின் எந்த விதமான வற்புறுத்துதலும் இன்றி யாருடைய அத்தாரிட்டியும் இன்றி தானாக மக்கள் தன்னை இணைத்துக் கொள்ளும் இறைஇயக்கமாக இருந்து கொண்டிருக்கிறது. அதே சமயம் மற்ற மதங்களிலும் வழிகளிலும் சித்தாந்தங்களிலும் இருப்பவர்களின் அடிவயிற்றை அது பிசைந்து கொண்டிருக்கிறது. எவ்வளவு முன் பின் முயற்சிகளின் பின்னும் தாங்கள் தோற்றுக் கொண்டிருக்கிறோம் என்ற விபரம் அவர்களுக்குத் தெரிந்தே இருக்கிறது. ஆதலால் அசைக்க முடியாததை அசைத்துப் பார்க்க ஆசைப்படுகிறார்கள். குறைந்த பட்சம் சலனங்களை ஏற்படுத்த நினைக்கின்றார்கள். மேலும் முக்கியமாக அதன் மூலமாவது தாங்களின் கூட்டத்திற்கு வலுவை சேர்க்க நினைக்கிறார்கள்.தங்களின் அதிமேதாவித்தனத்தையும் கொள்கைகளையும் மற்றவர்களின் மீது திணிக்கப் பார்க்கிறார்கள். ஆகவே இஸ்லாமிய சகோதரர்கள் உணர்ச்சிவயப்பட்டு யாரையும் ஏசவேண்டாம்.எது பற்றிய அறிவு உங்களுக்கு இல்லையோ அதில் தர்க்கம் செய்து நேரத்தை வீணடிக்காதீர்கள். முடிந்த வரை அவர்களுக்கும் இறைவனின் நேர்வழி கிடைக்க பிரார்த்தியுங்கள்.
    என்றென்றும் அன்புடன்;இருமேனி முபாரக்.

    ReplyDelete
  2. அன்பு சகோதரர் ஆஷிக்,
    மிகவும் தேவையான தகவல்களை தந்திருக்கின்றீர்கள். தங்களுடைய தகவல்களுக்கு பிறகே பல இஸ்லாமிய இணையதளங்களைப் பற்றி அறிந்து கொண்டேன். இணையத்தில் இஸ்லாத்திற்கெதிராக விவாதம் செய்பவர்கள் கேள்விகளை மட்டும் கேட்பவர்களாகவே இருக்கின்றார்கள். எந்த ஒரு கேள்வியையும் எதிர்கொள்ள அவர்கள் தயாரில்லை.
    /*
    நம்மிடம் கேள்வி கேட்கும் பெரும்பாலானோர், நாம் தவறான கொள்கையில் இருப்பதாகவும், அதிலிருந்து நம்மை காப்பாற்றுவதாகவும் நினைத்துதானே நம்மிடம் இஸ்லாத்தை பற்றி கேட்கின்றனர், வாதம் புரிகின்றனர்?

    நம்முடைய நிலையும் அதுதானே?, அவர்கள் தவறான கொள்கையில் இருப்பதாக தானே நாமும் நினைக்கிறோம்?

    ஆக,விவாதம் என்று வரும்போது, நம் கொள்கையைப் பற்றி ஒரு கேள்வியை அவர்களும், அவர்கள் கொள்கையைப் பற்றி ஒரு கேள்வியை நாமும் ஏன் கேட்கக்கூடாது? அவர்கள் எந்த கொள்கையை சேர்ந்தவர்களாகவும் இருக்கட்டும், */
    கண்டிப்பாக இந்த முறையை தான் நாம் பின்பற்ற வேண்டும். இது தான் விவாதம் செய்வதற்கான வழிமுறையும் கூட.

    இந்த மார்க்கத்தின் தந்தை ஏகத்துவ இமாம் இபுராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் போன்று அறிவுப்பூர்வமான வாதங்களை விவாதங்களில் எடுத்து வைத்து நாம் நேர்வழியில் இருப்பதைப் போன்று மற்றவர்களையும் நேர்வழிக்கு அழைக்கும் கூட்டத்தினர்களாக ஏக இறைவன் நம்மை தெரிவு செய்வானாக.

    ReplyDelete
  3. இணைய உலகில் இன்றைய காலகட்டத்திற்கு மிக முக்கியமான விஷயங்களை மிக அழகாக எடுத்து வைத்து இருக்கிறீர்கள். உண்மையை தேடுபவர்களுக்கு அழகான முறையில் அமைந்த விவாதம் நிச்சயமாக பலனளிக்கும். வீண் தர்க்கம் முஸ்லிமாகிய நமக்கு அழகல்ல. ஏனெனில் வீண் தர்க்கம் செய்யும் மூடர்களுக்கு என்ன பதிலளிக்க வேண்டும் என்பதை அல்லாஹ்வே நமக்கு சொல்லித் தந்திருக்கிறான். அல்லாஹ் கூறுகிறான்:

    இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள்; மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால் "ஸலாம்" (சாந்தியுண்டாகட்டும் என்று) சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள். (அல்குர்ஆன்: 25:63)

    ஜஸாகல்லாஹ் ஹைரன்!!!

    ReplyDelete
  4. அம்புடும் ஆங்கில தளமாக இருக்கிறது என்னை மாதிரி ஆங்கிலம் தெரியாத தமிழ் மட்டும் தெரிந்த சகோதரர்கள் ஆய்வு செய்ய தழிழ் தளங்கள் இருக்கிறதா?

    ReplyDelete
  5. சகோதரர் ஹைதர் அலி அவர்களுக்கு,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    //அம்புடும் ஆங்கில தளமாக இருக்கிறது என்னை மாதிரி ஆங்கிலம் தெரியாத தமிழ் மட்டும் தெரிந்த சகோதரர்கள் ஆய்வு செய்ய தழிழ் தளங்கள் இருக்கிறதா?//

    இதற்கு என்னால் பதில் சொல்ல இயலவில்லை. தெரிந்த சகோதரர்கள் உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

    பதில் சொல்ல முடியாததற்கு மன்னிக்கவும்...

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  6. MOHD said...// //அம்புடும் ஆங்கில தளமாக இருக்கிறது என்னை மாதிரி ஆங்கிலம் தெரியாத தமிழ் மட்டும் தெரிந்த சகோதரர்கள் ஆய்வு செய்ய தழிழ் தளங்கள் இருக்கிறதா?//

    இதற்கு என்னால் பதில் சொல்ல இயலவில்லை. தெரிந்த சகோதரர்கள் உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

    பதில் சொல்ல முடியாததற்கு மன்னிக்கவும்... //

    அஸ்ஸலாம் அழைக்கும்,
    உங்கள் தேடுதலுக்கு www.onlinepj.com இல் பதில் கிடைக்கும் என்று நம்புகிறேன்..

    ReplyDelete
  7. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

    சகோதரர்களுக்கு,

    வினவு பதிவில் இருந்து நான் உங்களை / எதிர்க்குரல் தொடர்கிறேன். அல்லாஹ் ஒவ்வொரு முஸ்லிமையும் அறிவில் சிறந்தவர்களாகவும், இஸ்லாமிற்கு எதிரான அவதூறுகளுக்கு பதில் அளிப்பவர்களாகவும் ஆக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை.

    தலிபான் மற்றும் இஸ்மாலிய இயக்கங்களை பற்றிய செய்தி என்றால் தீவிரவாதிகள் என்றும், இன வெறி கொண்ட கூலிப்படையான LTTE பற்றிய செய்தி என்றால் தேச புதல்வர்களாகவும் , உலக நாயகர்களாகவும் செய்தி பிரசுரிக்கும் லங்காஸ்ரீ / தட்ஸ் தமிழ் போன்ற இனைய பத்திரிக்கைகளை, அவர்களின் இரட்டை நிலையை தொளுரிக்கலாமே ?

    இலங்கை தமிழர்கள் மட்டுமே உலக மேதாவிகள் என நினைக்கும் இவர்களுக்கு எதிராக நாம் களமிறங்குவது அவசியம் இல்லையா ?

    உலக ரௌடி அமெரிக்கவால் தீவிரவாத இயக்கமாக அறிவிக்கபட்ட டாப் 10 பட்டியலில் LTTE யும் உள்ளதை பார்த்த பிறகு அவர்களின் இரட்டை நிலையை வெளிபடுதுவதே சரியாக இருக்கும் என்பது எனது கருத்து.


    அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்...


    உங்கள் சகோதரன்,

    ஷரீப் கான்.

    ReplyDelete
  8. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ... :)
    //ஆனால் ஒன்று, இந்த தளங்கள் முஸ்லிம்களுக்கு பெரும் உதவி புரிகின்றன என்றால் அது மிகையாகாது. ஏனென்றால் இவற்றுக்கு பதில் தேடுவதன் மூலம் நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம், அவர்களுடைய உண்மை முகங்களும் தெரிய வரும், நம் ஈமானும் அதிகரிக்கும்...அல்ஹம்துலில்லாஹ்...//

    நிதர்சனமான உண்மை.... எனக்கே இது பொருந்தும் இஸ்லாத்திருக்கு எதிராக வாதம் புரிபவர்களின் கருத்தை ஆதாரப்பூர்வமாக எதிர்க்க தகவல்கள் தேடும் பொழுது...
    எனக்கு இது வரை இஸ்லாத்தை பற்றி தெரியாத பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன்... சுப்ஹானல்லாஹ்.......!!!

    ReplyDelete
  9. அஸ்ஸலாமு அழைக்கும்
    இந்த தளத்தின் அணைத்து வாசகர்களுக்கும் மற்றும் இந்த தளத்தின் ஆசிரியர் அவர்களுக்கும் ஓர்
    அன்பான வேண்டுகோள் .இந்த தலத்தில் இஸ்லாத்தை விமர்சிப்பவர்களோடு எவ்வாறு விவாதம் செய்வது சம்பந்தமான சில ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது அனைத்தும், பயன் உள்ளவை அல்ஹம்து லில்லாஹ் ..
    இஸ்லாத்தை கடுமையாக விமர்சித்து எழுதும் ஏரளாமான தமிழ் இணையங்களும் உள்ளன .அவர்களோடு சில முஸ்லிம் சகோதரர்களும் எழுத்து விவாதத்தை நடத்தி வருகின்றனர் .அதில் முக்கியமானவை செங்கொடி என்ற கம்0யூனிஸ்ட் வெறியன் நடத்தும் www.senkodi.wordpress.com என்ற இணையதலமாகும் .அதில் அவன் இஸ்லாத்தை தாறு மாறாக விமர்சித்து எழுதி வருகிறான் .இவனோடு இப்ராஹீம் என்றே ஒரே ஒரு முஸ்லிம் சகோதரர் மட்டும் விவாதம் செய்து இவனுக்கு மறுப்பு கொடுத்து வருகின்றார் .ஆனால் அதே இணையத்தில் செங்கோடிக்கு ஆதரவாக ஏரளாமான கம்யூனிஸ்ட் வெறியர்கள் எழுதி வருகின்றனர் .ஆதலால் நல்ல சிந்தனயுள்ள ,எழுத்தாற்றல் உள்ள ,விவாதம் செய்வதில் ஆர்வம் உள்ள முஸ்லிம் சகோதர்கள் செங்கோடியோடு விவாதம் செய்யலாம் .இவனோடு தன்னந்தனியாக போராடி கொண்டிருக்கும் சகோ.இபுராஹீம் அவர்களுக்கும் தோல் கொடுத்ததாகும் .அத்தோடு இஸ்லாத்தை பற்றி விமர்சனங்களுக்கு நாம் பதில் தேடும் போது நம்முடைய மார்க்க அறிவும் வளரும் .இந்த பயனுள்ள காரியத்தை செய்ய வருமாறு எதிர்க்குரல் இணையத்தின் ஆசிரியருக்கும் ,வாசர்களுக்கும் நான் அழைப்பு கொடுக்கிறேன் .கடவுள் இல்லை என்ற கருகி போன கம்யுனிச செம்படையை விரட்ட அறிவார்ந்த ஏகத்துவ படை கிளம்பட்டும் .வெற்றியை தர அல்லாஹ் போதுமானவன்

    ReplyDelete