Wednesday, February 15, 2012

பிபிசி - டாகின்ஸ் - நகைச்சுவை ட்ரீட்




நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். 

நேற்று பிபிசி ரேடியோ தளத்தில் வெளியான டாகின்ஸ் கலந்துக்கொண்ட உரையாடல் படுசுவாரசியமாக இருந்தது.

கிருத்துவத்தை விமர்சிக்க போய் தன் தலையில் தானே மண்ணை வாரி கொட்டிக்கொண்டார் டாகின்ஸ். பரிணாமத்திற்கு எதிரான தளங்கள் தற்போது இந்த ரேடியோ உரையாடலை கொண்டாடிக்கொண்டிருக்கின்றன. 

அந்த உரையாடலின் பின்னணி இதுதான். 

ரிச்சர்ட் டாகின்ஸ் நிறுவனத்திற்காக பிரிட்டனில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டிருக்கின்றது. அந்த ஆய்வின் முடிவின்படி, பிரிட்டனில் 54% மக்கள் கிருத்துவத்தை நம்புகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெயரளவிற்கு தான் கிருத்தவர்கள் என்று கூறிக்கொள்கின்றார்களே ஒழிய (உண்மையான) கிருத்துவர்கள் கிடையாதாம் (????). 

டாகின்ஸ் ஒரு நாத்திகர் அல்லவா? அவர் நிறுவனத்திற்காக இப்படியான ஒரு ஆய்வு நடத்தப்படுகின்றது என்றால் நாம் படு கவனமாக தான் இதனை பார்க்கவேண்டும். காரணம், நிச்சயம் இதில் ஏதேனும் உள்அர்த்தம்/பாகுபாடு இருக்கலாம். 

அதெப்படி இவர்கள் (உண்மையான) கிருத்துவர்கள் இல்லை என்று கண்டுபிடித்தார்கள்? 

எப்படி என்றால், இவர்கள் சர்ச்சுக்கு செல்வது கிடையாது, பைபிளை படிப்பது கிடையாது, ஏசுவை கடவுளின் மகன் என்று ஏற்பது கிடையாது. இவ்வளவு ஏன், புதிய ஏற்பாட்டின் முதல் புத்தகத்தின் பெயர் கூட இவர்களுக்கு தெரியவில்லை. ஆகையால் டாகின்ஸ் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார். கிருத்துவ நம்பிக்கையின் முக்கியமானவற்றை இவர்கள் பின்பற்றாததால்/தெரியாததால் இவர்கள் கிருத்துவர்கள் கிடையாது. 

மொத்தத்தில், இவர்கள் தங்களை கிருத்துவர்கள் என்று கூறிக்கொண்டாலும் இவர்கள் நம்பிக்கை இல்லாதவர்களே. பிரிட்டன் ஒரு கிருத்துவ தேசம் என்று கூறிக்கொண்டு தான் அங்கே நம்பிக்கை சார்ந்த பள்ளிகள் எல்லாம் நடத்தப்படுகின்றன. இப்போது இப்படியான முடிவுகள் வந்திருப்பதால், பிரிட்டன் ஒரு கிருத்துவ நாடு என்ற நிலை பரிசீளிக்கப்பட வேண்டும். இது தான் டாகின்ஸ் சொல்ல வருவது. 

நீங்கள் மேலே பார்த்தவற்றை தான் பிபிசி-க்கு அளித்த பேட்டியில் சொல்லிக்கொண்டிருந்தார் டாகின்ஸ். 

தன் வாயால் கெடும் என்று எதையோ பார்த்து சொல்வார்களே, அது போல தான் அமைந்தது அடுத்தடுத்த நிகழ்வுகள். 

இந்த உரையாடலில் டாகின்ஸ்சுடன் சேர்ந்து கலந்துக்கொண்டார் Reverend ஜைல்ஸ் ப்ரேசர். கிருத்துவம் குறித்து பலருக்கு பலவிதமான பார்வை இருக்கின்றது என்றும், தங்களை கிருத்துவர்கள் என்று மக்கள் அடையாளப்படுத்திக்கொண்டனர் என்றால் அத்தோடு விட்டுவிடுவதே சரியானது என்றும் வாதிட்டார் அவர். அதனைத் தாண்டி, சில குழப்பம் ஏற்படுத்தும் முட்டாள்தனமான கேள்விகளை கேட்டு, அதனை கொண்டு ஒரு முடிவிற்கு வருவதெல்லாம் தேவையற்றது என்று கூறினார் அவர். 

உரையாடலின் நடுவே டாகின்ஸ்சை நோக்கி ஒரு பிடி போட்டார் பாருங்கள் ப்ரேசர்.  

இதோ அந்த உரையாடல், 

"ரிச்சர்ட், (டார்வினின்) origin of species புத்தகத்தின் முழு பெயரை சொல்லுங்களேன். நீங்கள் சொல்வீர்கள் என்று நம்புகின்றேன்" 

"ஆம், என்னால் முடியும்.." 

"சொல்லுங்க.." 

"on the origin of species...அ.......on the origin species....அ........பிறகு ஒரு உப தலைப்பு வரும்...பாதுகாக்கப்பட்ட இனங்கள் குறித்து அது பேசும்...."

கடைசி வரை புத்தகத்தின் முழு பெயரை சொல்லவில்லை டாகின்ஸ். டார்வினின் புத்தகத்தின் முழு பெயர் "On the origin of Species by Means of Natural Selection, or the Preservation of Favored Races in the Struggle for Life"......

ஆஹா....டார்வினின் புத்தகத்தின் பெயர் டாகின்ஸ்சுக்கு தெரியவில்லை. ஆகையால் அவர் வாதப்படி அவர் பரிணாமத்தை (முழுமையாக) நம்பவில்லை. :) :)

இதனையே பிரதிபலித்தார் ப்ரேசர்..

"ரிச்சர்ட், டார்வினிசத்தின் பெரிய நம்பிக்கை நீங்கள். பரிணாமத்தை நம்பும் மக்களிடம் போய் டார்வினின் புத்தகத்தின் பெயர் கேட்டு, 2% மக்கள் மட்டுமே சரியான பதில் சொல்லிருப்பார்களேயானால், பரிணாமத்தின் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்லிடலாமா? இம்மாதிரியான கேள்விகள் நியாயமில்லாதவை...."

ஒருவர் சரிவர தன் நம்பிக்கையை பின்பற்றவில்லை என்பதற்காக அவரை நம்பிக்கையாளர் இல்லை என்று கூறிவிட முடியுமா - ப்ரேசேரின் இத்தகைய கேள்விகள் தெளிவாக இருந்தன.  

டாகின்ஸ் சிக்கி திணறிய அந்த பகுதியை கீழே கேட்கலாம். முழுமையாக கேட்க விரும்புபவர்கள் பதிவின் கடைசியில் கொடுக்கப்பட்டுள்ள பிபிசி லின்க்கை சுட்டுங்கள்.


அட அதை விடுங்கள். இப்போது சில கேள்விகளை பார்ப்போம். பரிணாம நம்பிக்கையாளர்களிடம் போய், 
  • டார்வினின் புத்தகத்தின் பெயர் என்ன? 
  • டார்வினின் புத்தகத்தை படித்திருக்கிண்றீர்களா?, 
  • அதில் சொல்லப்பட்டுள்ள கோட்பாடு என்ன?
  • பரிணாமம் என்றால் என்ன?

இப்படியாக கேள்வி கேட்டால் எத்தனை பேர் சரியாக பதில் சொல்வார்கள்?? அதனை வைத்து இவர்கள் சும்மாச்சுக்கும் தான் பரிணாமத்தை நம்புகின்றார்கள் என்று கிருத்துவர்கள் சொன்னால் டாகின்ஸ் கூடாரம் ஏற்றுக்கொள்ளுமா? 

என்னவோ போங்க...

இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன்.  

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்..

References:
1. Majority of Christians 'tick the box' - BBC Radio 4, 14th Feb 2012. link
2. Richard Dawkins's English Inquisition - Evolution News. 14th Feb 2012. link

வஸ்ஸலாம்...

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ 






64 comments:

  1. ஹாஹா. அடிச்சாறையா ஒரு அடி.

    ReplyDelete
  2. //கிருத்துவ நம்பிக்கையின் முக்கியமானவற்றை இவர்கள் பின்பற்றாததால்/தெரியாததால் இவர்கள் கிருத்துவர்கள் கிடையாது. //

    அறிவியலில் கூறப்பட்டிருப்பதின் படி மட்டும் தான் வாழ வேண்டும். நம்பிக்கையின் படி வாழ கூடாது என்றறகொள்கையுடைய டாகின்ஸ் இப்போது கிருஸ்துவ நம்பிக்கையின் படி ஆய்வு நடத்தி தீர்ப்பு கூறி இருக்கின்றார். அவரை அறியாமல் அவரே ஆத்திகத்திடம் சரண்டைந்து விட்டார்.

    //"ரிச்சர்ட், டார்வினிசத்தின் பெரிய நம்பிக்கை நீங்கள். பரிணாமத்தை நம்பும் மக்களிடம் போய் டார்வினின் புத்தகத்தின் பெயர் கேட்டு, 2% மக்கள் மட்டுமே சரியான பதில் சொல்லிருப்பார்களேயானால், பரிணாமத்தின் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்லிடலாமா?//

    இது தான் மரண அடி, வேலி போற ஓணான எடுத்து சட்டைக்குள்ள விட்ட கதையால்ல இருக்கு. ஹி ஹி

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!

    ஹாஹாஹா... செமையா மாட்டிக்கிட்டாரு!

    ReplyDelete
  4. சலாம் சகோ எதிர்க்குரல் அஹமது ஆசிக்,

    என்னத்த சொல்றது???? கோவி கண்ணன் இந்த ஏரியாவுக்குள்ள நுழைய மாட்டார், ஏன்னா அவர் நாத்திகர் இல்ல. வேற வழி, நம்ம தோஸ்த் சார்வாகன் தான் பதில் சொல்லணும்.
    காத்திருக்கிறேன்.

    நான் நெனைக்கிறேன் எல்லா நாத்திகர்களும் அந்த essay -ய (அந்த புத்தக பெயர் தான்) மனப்பாடம் பண்ணிக்கிட்டு இருக்காங்கன்னு. மனப்பாடம் செஞ்சு முடிஞ்ச உடனே வருவாங்க.

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும்! சகோ.
    நல்ல பதிவு! உலகில் உள்ள ஏனைய தத்துவ வாதிகள் பலரும் இந்த ரிச்சர்ட்'டை போல் உள்ளவர்கள் என்பதை அவரே இங்கு உணர்த்திவிட்டார்! :)

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் )

    பாவம் இம்புட்டு கஷ்டப்பட்டு அவர் செஞ்ச ஆராய்ச்சி கடைசியில ஒத்த கேள்வியிலயே புஸ்வானமா போயிடுச்சே ஹா..ஹா... :-))).

    ReplyDelete
  7. சலாம் சகோ

    டாக்கின்ஸையே காமெடி பீஸாக்கியாச்சா ஹி...ஹி...ஹி...

    ReplyDelete
  8. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

    ஹலோ ஆஷிக்!

    டாகின்ஸை வச்சி காமெடி கீமெடி பண்ணலையே...BBC

    ReplyDelete
  9. டாகின்சிற்கு டார்வினின் புத்தகப் பெயர் முழுதாக தெரியவில்லை என்பது மிகப் பெரிய ஆச்சரியம், மற்றும் கடும் அதிர்ச்சி தருகிறது. டாகின்சாவது டார்வினின் புத்தகத்தை முழுதாக படித்து இருப்பாரா???? இந்த சந்தேகத்தை தவிர்க்க முடியவில்லை சகோ. அனைத்து பரிநாமவாதிகளும் நுனிப்புல் மேய்கிறார்களோ????

    ஆமாம் நீங்க BBC தமிழ் நிருபரா???? பரிணாமம் பத்தி BBC ல யார் பேசினாலும் உடனே தெரிஞ்சிருதே, அதனால தான் கேட்டேன்.

    ReplyDelete
  10. //டாகின்சாவது டார்வினின் புத்தகத்தை முழுதாக படித்து இருப்பாரா???? //

    சரியான கேள்வி.

    //இந்த சந்தேகத்தை தவிர்க்க முடியவில்லை சகோ. அனைத்து பரிநாமவாதிகளும் நுனிப்புல் மேய்கிறார்களோ????//

    எந்த அளவு இருந்திருகின்றனர் பாருங்கள். அப்படியெனில் இவ்வளவு நாள் வாதிடுவது எல்லாம் பரிணாமத்தை பற்றியே தெரியாமலா?

    ReplyDelete
  11. சகோதரர் கார்பன் கூட்டாளி,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    சகோதர சகோதரிகள் எல்லாம் புல் பார்ம்ள இருக்கீங்க போல.. :)

    கருத்துக்கு நன்றி சகோதரர்..

    ReplyDelete
  12. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
    இதை படிக்கும் போது எனக்கு சிறு வயதில் படித்த ஒரு கதை ஞாபகம் வருது.வால் போய் கத்தி வந்தது டும் டும் டும் கத்தி போய் மாங்காய் வந்தது டும் டும் டும் ...
    அது போல நமக்கு லோக்கல் பரினாமவியாதிகள் போய் இண்டர்நேஷனல் பரினாமவியாதி மாட்டி இருக்கார் .

    ReplyDelete
  13. சகோதரர் ஹாஜா மைதீன்,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    //இது தான் மரண அடி, வேலி போற ஓணான எடுத்து சட்டைக்குள்ள விட்ட கதையால்ல இருக்கு. ஹி ஹி//

    உண்மை..கருத்துக்கு நன்றி....

    ReplyDelete
  14. சகோதரர் அப்துல் பாஸித்,

    வ அலைக்கும் சலாம்...

    மாட்டிகிட்டாரா..சிக்கி சிதருனத பாத்தீங்கல்ல... :) :)

    ReplyDelete
  15. வ அலைக்கும் சலாம் சிராஜ் பாய்,

    //வேற வழி, நம்ம தோஸ்த் சார்வாகன் தான் பதில் சொல்லணும்.//

    :) :)

    //நான் நெனைக்கிறேன் எல்லா நாத்திகர்களும் அந்த essay -ய (அந்த புத்தக பெயர் தான்) மனப்பாடம் பண்ணிக்கிட்டு இருக்காங்கன்னு. மனப்பாடம் செஞ்சு முடிஞ்ச உடனே வருவாங்க.//

    பெரியார்தாசன் இஸ்லாத்தை ஏற்ற போது, அவர் குரானை சரியான படிக்கவில்லை என்று வினவு பித்தலாட்டகாரர்கள் சொன்னார்கள். அப்போது கேட்டோம், ஏம்பா தம்பி, எத்தன பேறு 'மூலதனத்த' முழுமையா படிச்சு கரைச்சு குடிச்சு கம்யுனிஸ்ட்டா இருக்காங்கன்னு...இப்ப அது தான் நினைவுக்கு வருது... :)

    ReplyDelete
  16. சகோதரர் தமீம் அன்சாரி,

    வ அலைக்கும் சலாம்,

    //நல்ல பதிவு! உலகில் உள்ள ஏனைய தத்துவ வாதிகள் பலரும் இந்த ரிச்சர்ட்'டை போல் உள்ளவர்கள் என்பதை அவரே இங்கு உணர்த்திவிட்டார்! :)//

    என்னவோ சகோதரர்..இப்போதெல்லாம் நாத்திகர்கள் பின்னடைவு மேல பின்னடைவை சந்தித்து வருகின்றார்கள்..

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  17. சகோதரர் ஜெய்லானி,

    வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

    //பாவம் இம்புட்டு கஷ்டப்பட்டு அவர் செஞ்ச ஆராய்ச்சி கடைசியில ஒத்த கேள்வியிலயே புஸ்வானமா போயிடுச்சே ஹா..ஹா... :-))).//

    ஹா ஹா ஹா ஹா...நான் ஒரு பதிவுல சொல்ல வந்த விசயத்த நீங்க சிம்பிளா ஒரே வரில சொல்லிட்டீங்களே பிரதர்...

    ReplyDelete
  18. சகோதரி ஆமினா,

    வ அலைக்கும் சலாம்...

    //டாக்கின்ஸையே காமெடி பீஸாக்கியாச்சா ஹி...ஹி...ஹி..//

    சிஸ்டர், நல்லா பாருங்க. நாமளா அவர காமெடி பீஸ் ஆக்கினோம்? அவராகவே இல்ல --------- (fill in the blanks)

    ReplyDelete
  19. சலாம் சகோ ஆஷிக்!

    பரிணாமவியலாருக்கு அடுத்த அடியா! பார்ப்போம் சார்வாகனின் பதிலை!

    ReplyDelete
  20. அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...
    சகோ.ஆஷிக் அஹமத்,
    பொதுவாக மெத்தப்படித்தவர்களுக்கு எதோ ஒரு டென்ஷனில் ஒரு முக்கியமான ஒரு விஷயம் மறந்து விடும். அதற்காக அவர்களுக்கு அதில் ஒன்றுமே தெரியாது என்ற முடிவுக்கு வர முடியாது. அந்த நேரத்தில் அது மறந்துபோயி விட்டது எனலாம். சிலநேரம் மிக இலகுவான சூராக்கள் கூட சமயம் சில பெரிய உலமாக்களுக்கு தட்டுகிட்டு போக வாய்ப்பு உண்டு. அதனால் கேலி செய்வது சரியாக படவில்லை. மறதி மனித இயற்கை. மனிதன் அப்படித்தான் படைக்கப்பட்டு உள்ளான்.

    //ஒருவர் சரிவர தன் நம்பிக்கையை பின்பற்றவில்லை என்பதற்காக அவரை நம்பிக்கையாளர் இல்லை என்று கூறிவிட முடியுமா - ப்ரேசேரின் இத்தகைய கேள்விகள் தெளிவாக இருந்தன.//

    -----இன்று ஒருவர் --இஸ்லாமிய பெற்றோருக்கு பிறந்தவர்-- தர்ஹாவில் சென்று சமாதி வழிபாடு செய்தால் அந்த ஷிர்க் வைத்த நிலையில் அவரை முஸ்லிம் என்று சொல்லலாமா..?

    தங்கள் பதிவில் ஏனோ முதல் முறையாக ஒன்ற முடியவில்லை..! இது காமடி பதிவு என்றால் ஓகே..! "காமடி" குறிச்சொல் மிஸ்ஸிங் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  21. சகோதரர் முஹம்மது ஆஷிக்,

    வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

    //இது காமடி பதிவு என்றால் ஓகே..! "காமடி" குறிச்சொல் மிஸ்ஸிங் என்று நினைக்கிறேன்.// - ஆமாம் பிரதர். தலைப்பில் போட்டேன். குறிச்சொல்லில் சேர்க்கவில்லை,. தற்போது உங்கள் கமெண்ட் பார்த்தவுடன் சேர்த்துவிட்டேன். ஜசாக்கல்லாஹ்.

    ReplyDelete
  22. @ முஹம்மது ஆஷிக்

    இது காமெடி பதிவாக இருந்தாலும், உண்மைக்கு புறம்பான ஒன்றை செய்துவிடக்கூடாது என்பதில் மிக கவனமாகவே இருந்தேன்.

    //பொதுவாக மெத்தப்படித்தவர்களுக்கு எதோ ஒரு டென்ஷனில் ஒரு முக்கியமான ஒரு விஷயம் மறந்து விடும். அதற்காக அவர்களுக்கு அதில் ஒன்றுமே தெரியாது என்ற முடிவுக்கு வர முடியாது. அந்த நேரத்தில் அது மறந்துபோயி விட்டது எனலாம்.////அதனால் கேலி செய்வது சரியாக படவில்லை. மறதி மனித இயற்கை. மனிதன் அப்படித்தான் படைக்கப்பட்டு உள்ளான்//

    மறுக்கவில்லை. ஆனால் பதிவை நீங்கள் கவனமாக நோக்கினால் டாகின்ஸ் என்னும் மனிதனின் ஞாபக மறதியை விமர்சனம் செய்யவில்லை. மாறாக இவர்கள் ஆய்வு செய்த முறையை தான் விமர்சனம் செய்திருக்கின்றேன். "ஒரு புத்தகத்தின் பெயர் தெரியவில்லை. ஆகையால் இவர்கள் கிருத்துவர்கள் கிடையாது" என்ற அளவுக்கொளில் நடத்தப்பட்ட அந்த ஆய்வைக்கொண்டு டாகின்ஸ் பேசுகின்றார் என்றால், தற்போது அவராலேயும் புத்தகத்தின் பெயர் சொல்ல முடியவில்லை. அதனால் இவர் பரிணாம நம்பிக்கையாளர் இல்லை என்று சொல்லிட முடியுமா? புத்தகத்தின் பெயர் தெரியவில்லை என்பதற்காக தங்களை கிருத்துவர்கள் என்று ஒப்புக்கொண்டவர்களை இவர் இல்லை என்கின்றார் என்றால் இது அறிவுக்கு ஒத்துவருகின்றாதா என்பதே பதிவின் நோக்கம். இதற்கு தான் தன் வாயாலேயே கெட்டார் என்று குறிப்பிட்டேன்.

    ReplyDelete
  23. @ முஹம்மது ஆஷிக்

    //-----இன்று ஒருவர் --இஸ்லாமிய பெற்றோருக்கு பிறந்தவர்-- தர்ஹாவில் சென்று சமாதி வழிபாடு செய்தால் அந்த ஷிர்க் வைத்த நிலையில் அவரை முஸ்லிம் என்று சொல்லலாமா..?//

    சகோதரர், எப்போது அவர் ஷிர்க் வைத்தாரோ அப்போதே அவர் இஸ்லாத்தில் இல்லை. ஒருவர் ஷிர்க் வைக்காமல் இருந்து, அவர்கள் இஸ்லாமிய கோட்பாடுகளை பின்பற்றாததால் அவரை நாம் முஸ்லிமல்ல என்று சொல்லிட முடியாது என்றே நினைக்கின்றேன். அதுமட்டுமல்லாமல், நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த கருத்து ப்ரேசர் அவர்களுடையது. கிருத்துவ பார்வையிலேயே இந்த பதிவு அனுகப்பட்டுள்ளது. டாகின்ஸ் சொன்ன காரணங்களை உற்று நோக்கினால் பல விசயங்கள் புரியும்.

    சர்ச்சுக்கு போகவில்லை - இதனால் கிருத்துவ நம்பிக்கைக்கு என்ன பிரச்சனை?
    பைபிளை படிப்பது கிடையாது - இதனால் கிருத்துவ நம்பிக்கைக்கு என்ன பிரச்சனை?
    ஏசுவை கடவுளின் மகன் என்று ஏற்பது கிடையாது - இப்படியான கிருத்துவர்கள் ஆரம்ப காலத்தில் இருந்தே இருக்கின்றனர். இதனால் கிருத்துவ நம்பிக்கைக்கு என்ன பிரச்சனை?

    ஆகையால், இவற்றையெல்லாம் வைத்து ஒருவர் கிருத்துவர் இல்லை என்று சொல்லிட முடியாது. இவர்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட அளவுகோல் தவறு என்ற ரீதியிலேயே இந்த பதிவு பின்னப்பட்டுள்ளது. ப்ரேசர் அவர்களின் 2% கருத்தை பார்த்தால் இன்னும் நமக்கு இந்த நிலைமை குறித்து விளங்கும்.

    //தங்கள் பதிவில் ஏனோ முதல் முறையாக ஒன்ற முடியவில்லை.// - இந்த விளக்கங்கள் திருப்திகரமாக இருக்கும் என்று நம்புகின்றேன். இன்ஷா அல்லாஹ்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  24. வாழ்க வளமுடன் சகோக்களே
    என்னை அழைத்த பாசமிகு சகோக்கள் சுவனன்,சிராஜ் ஆகியோருக்கு நன்றி.
    சரி டாக்கின்ஸ் அந்த உரையாடலில் டார்வினின் புகழ் பெற்ற புத்தக்த்தின் முழு பெயரை கூறவில்லை.ஏன் இரு வாய்ப்புகள்.

    1.ரிச்சர்ட் டாக்கின்ஸ் பெயர் தெரியாமல் அப்படி கூறினார்.
    .
    2.தெரிந்து இருந்தும் அக்கட்டத்தில் உடனே கூற இயலவில்லை.

    முதல் சந்தர்ப்பத்தின் வாய்ப்பு மிக அரிது ஏன் எனில் டார்வினின் அப்புத்தகத்தை ஆடியோ புத்தக்மாக் சில திருத்தங்களோடு(editing) டாக்கின்ஸே வாசித்தது கேட்டு இருக்கிறேன்.
    http://atheistmovies.blogspot.com/2008/07/on-origin-of-species-charles-darwin.html
    புத்தக்த்தின் முழு பெயர் ஒரு சமயம் கூற முடியவில்லை எனில் அதில் இருக்கும் விவரம் எதுவும் அறிந்திருக்க முடியாதா?.இது நகைச்சுவை பதிவு என்பதால் அப்ப்டித்தான் குறிப்பிடுவீர்கள்.மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள்

    மனிதர்கள் யாரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல!!!!!!.

    இயற்கைத் தேர்வின் மூலம் உயிரினங்களின் தோற்றம் என்ற டார்வினின் கொள்கையை அனைவரும் புத்தக்ம் படித்து அறிய வேண்டுகிறேன்.படியுங்கள்,அறியுங்கள்,பிறகு விமர்சியுங்கள்.
    நம்மை எப்போதும் வாழ்த்தும் சகோதர உள்ளங்களுக்கு நன்றி
    *****************
    டிஸ்கி சந்தேகம் இருப்பின் என் தளத்தில் பின்னூட்டம் இடலாம்.பரிணாம சந்தேகத்திற்கு மட்டுமே பதில்[தேவைப் பட்டால் பதிவு] அளிப்பேன்,மதம் குறித்து எதிர் கேள்வி கேட்க மாட்டேன் என உளமாற உறுதி அளிக்கிறேன்.

    ReplyDelete
  25. சாதாரண மனிதனின் மறதிக்கும் ,இன்று உலகை வியாப்பித்திருக்கும் கொள்கையின் உலகம் அறிந்த ஒரு ஆய்வாளர் மூல கர்த்தாவின் நூலின் பெயரை மறந்த மறதிக்கும் வித்தியாசங்கள் இல்லையா? பல குடிகார வட்டி தொழில் செய்யும் காமுகர்களுக்கு கூட பள்ளிவாசலை இடித்துவிட்டார்கள் என்றால் கோபம் பீரிட்டு வரும்.ஆக இங்கே ஆசிக் அஹ்மது வற்புறுத்த வருவது டர்க்கின்ஸ் ஆய்வு மூலம் கூறும் முடிவு தவறானது என்பது மட்டுமே .அதனுள் காமெடி மறைந்திருக்கிறதே ஒழிய காமெடி மிஸ்ஸிங் என்பது தவறு.
    "ஒரு முஸ்லிமுக்கும் காபிருக்கும் உள்ள வித்தியாசம் தொழுகையே ' என்று நபி[ஸல்] அவர்களின் செய்தி இருந்தாலும் கூட ஒருவன் ஷிர்க் வைத்தாலும் அவனை முஸ்லிம் இல்லை என்று கூற யாருக்கும் அதிகாரம் இல்லை என்பதே நபி[ஸல்] அவர்களுடைய கருத்து.

    ReplyDelete
  26. சகோதரர் இப்ராஹீம்,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    //அதனுள் காமெடி மறைந்திருக்கிறதே ஒழிய காமெடி மிஸ்ஸிங் என்பது தவறு//

    குறிச்சொல்லில் காமெடி என்ற வார்த்தையை சேர்த்திருக்கலாம், அது மிஸ்ஸிங் என்று தான் அவர் சொன்னார்.

    தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  27. சலாம் சகோ...

    இதுதான் சொந்த காசில் சூனியம் வைத்து கொள்வதோ....

    ReplyDelete
  28. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

    இப்படி கேட்டு இருக்கலாம்

    உங்கள் தந்தையின் பெயர் தந்தையின் தந்தை பெயர் அவருடைய தந்தையின் பெயர் கண்டிப்பாக மூன்றாம் தலைமுறைக்கு தினறும் அப்படி தினறும் போது உங்கள் பாட்டன் யாரு என்று தெரியாததால் நீங்கள் அனாதை என்று சொல்லி இருக்கலாம்
    ஹி ஹிஹி

    என்னமோ புஸ்தக பெயர் கேட்டகலாம் அவருக்கு தெரியவில்லை என்றவுடன் இவுகளுக்கு சிப்பு வந்துருச்சாம் சிப்பு

    இது ஒரு காமடி இதுக்கு ஒரு பதிவு

    ReplyDelete
  29. அஸ்ஸலாமு அலைக்கும்
    சகோதரர் ஹைதர் அலி,
    பதிவில் மிக தெளிவாக ஆஷிக் எடுத்துக் காட்டியிருப்பது தங்களுக்கு தெரியவில்லையா? கிறிஸ்தவர்களால் மதப்புத்தகம் என்று நம்பப்படுகின்ற புதிய ஏற்பாட்டின் முதல் பெயர் கூட தெரியவில்லை என்பதால் அவர்க கிறிஸ்தவத்தை கைவிட்டனர் என்ற முடிவுக்கு டாகின்ஸ் & கோ வரும்போது, நாத்திகர்களின் வேதநூலான ஆரிஜின் ஆப் ஸ்பீசிஸ் தொடர்பான கேள்விகள் எழும் தானே. இதை தான் ஆஷிக் அஹமத் இங்கே குறிப்பிட்டிருக்கிறார். எனவே டாகின்ஸ் ஏன் புத்தகத்தின் முழு பெயரை உச்சரிக்கவில்லை என்று அதற்கு மறதியாக கூட இருக்கலாம் என்று முடிவுக்கு வருபவர்கள் அதே காரணத்தை கிறிஸ்தவர்களுக்கு கொடுக்க மறுப்பது முரண்நகை அல்லவா? எனவே இது நகைச்சுவை உணர்வை தரக்கூடியது என்பதில் எனக்கு வேறு கருத்து இப்போதைக்கு இல்லை ஹைதர் பாய்.

    ReplyDelete
  30. என்ன இங்க சண்ட..என்ன இங்க சண்ட...

    சகோ சார்வாக்கனே வந்துட்டு அமைதியா போய்ட்டாரு. நீங்க ஏன் சண்ட போடறீங்க???

    டாகின்ஸ் சொன்ன வார்த்தைய வச்சு அவர மடக்கிட்டாங்க அப்படிங்கிறது தான் பதிவின் சாரம். மற்றபடி டாகின்ஸ் முட்டாள்னு பதிவு பேசல.
    சோ, நோ worries .

    ReplyDelete
  31. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
    // "ஒரு முஸ்லிமுக்கும் காபிருக்கும் உள்ள வித்தியாசம் தொழுகையே ' என்று நபி[ஸல்] அவர்களின் செய்தி இருந்தாலும் கூட ஒருவன் ஷிர்க் வைத்தாலும் அவனை முஸ்லிம் இல்லை என்று கூற யாருக்கும் அதிகாரம் இல்லை என்பதே நபி[ஸல்] அவர்களுடைய கருத்து.//

    இதில் ஒரு முஸ்லிமுக்கும் காபிருக்கும் உள்ள வித்தியாசம் தொழுகையே என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் சரி

    ஒரு முஸ்லிம் என்பவர் யார் ?
    இறைவன் ஒருவனே என்றும் முகம்மது நபி அவனின் தூதர் என்றும் ஏற்று கொள்பவர்கள் மட்டுமே முஸ்லிம் சரியா?
    அப்படி இருக்க

    // ஒருவன் ஷிர்க் வைத்தாலும் அவனை முஸ்லிம் இல்லை என்று கூற யாருக்கும் அதிகாரம் இல்லை என்பதே நபி[ஸல்] அவர்களுடைய கருத்து.//

    இந்த கருத்து எங்கிருந்து வந்தது ???

    ஷிர்க் என்றால் இணை வைத்தல்.இறைவனுக்கு இணை வைத்தால் அவன் இறைவன் ஒருவன் என்னும் கலிமாவை மீறி விட்டாலே அவன் முஸ்லீம் இல்லையே .
    முஸ்லீம் இல்லாத ஒருவன் தொழுதால் அவனை முஸ்லீம் என்று ஏற்று கொள்ள முடியுமா ?
    என்னை பொறுத்த வரை மேலே சகோ இப்ராகிம் கூறிய கருத்து நச்சு கருத்து
    இதை கண்டுக்கொள்ளாமல் பிரசுரித்த தங்களுக்கு என் கண்டனத்தை பதிவு செய்கிறேன்

    ReplyDelete
  32. வ அலைக்கும் ஸலாம் சகோதரர் ஜாகிர்,

    //இதை கண்டுக்கொள்ளாமல் பிரசுரித்த தங்களுக்கு என் கண்டனத்தை பதிவு செய்கிறேன்//

    தவறு தான். அதேநேரம் பிரசுரிக்காமல் எப்படி இருப்பது சகோதரர்?

    பிரசுரித்து விட்டு விளக்கம் கேட்பது, கொடுப்பதே சரியான அணுகுமுறையாக இருக்க முடியும். அவர் சொன்னவுடன் இதுக்குறித்து நான் தெளிவுபடுத்திக்கொண்டு அவரிடம் கேட்கலாம் என்றிருந்தேன்.

    @ சகோதரர் இப்ராஹீம், சகோதரர் ஜாகிர் அவர்களின் கேள்விக்கு பதில் அளியுங்கள்...

    ReplyDelete
  33. சகோதரர் சார்வாகன்,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    //என்னை அழைத்த பாசமிகு சகோக்கள் சுவனன்,சிராஜ் ஆகியோருக்கு நன்றி.//

    ஆமாம் உங்களை எதிர்ப்பார்த்து இருந்திருக்கின்றார்கள். ஆனால் நீங்கள் இங்கே கூறிய பதிலுக்காக அல்லவே அல்ல....

    //சரி டாக்கின்ஸ் அந்த உரையாடலில் டார்வினின் புகழ் பெற்ற புத்தக்த்தின் முழு பெயரை கூறவில்லை.ஏன் இரு வாய்ப்புகள்.//

    இது பதிவின் மையம் கிடையாது சகோதரர். பதிவின் சென்ட்ரல் பாய்ன்ட் என்ன தெரியுமா?

    //"பரிணாமத்தை நம்பும் மக்களிடம் போய் டார்வினின் புத்தகத்தின் பெயர் கேட்டு, 2% மக்கள் மட்டுமே சரியான பதில் சொல்லிருப்பார்களேயானால், பரிணாமத்தின் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்லிடலாமா? இம்மாதிரியான கேள்விகள் நியாயமில்லாதவை...."//

    --- இது தான்.

    பரிணாமம் குறித்த கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை என்பதற்காக அவர்களை பரிணாமத்தை நம்பாதவர்கள் என்று சொல்லிட முடியுமா? சொல்லமுடியாது என்றால் டாகின்ஸ்சின் ஆய்வு முடிவும் அப்படித்தானே? - இது தான் நான் பதிவில் சொல்ல வந்த விசயம். இதனை நீங்கள் தொடவே இல்லை.

    //இயற்கைத் தேர்வின் மூலம் உயிரினங்களின் தோற்றம் என்ற டார்வினின் கொள்கையை அனைவரும் புத்தக்ம் படித்து அறிய வேண்டுகிறேன்.படியுங்கள்,அறியுங்கள்,பிறகு விமர்சியுங்கள்.//

    நீங்கள் டார்வினின் புத்தகத்தை முழுவதுமாக படித்திருப்பீர்கள் என்றே நம்புகின்றேன். சரிதானே சகோதரர்?

    உங்களை எதிர்பார்த்தார்கள். ஆனால் எதிர்ப்பார்ப்பை பொய்யாக்கிவிட்டீர்கள்.

    நன்றி...

    ReplyDelete
  34. /* //இயற்கைத் தேர்வின் மூலம் உயிரினங்களின் தோற்றம் என்ற டார்வினின் கொள்கையை அனைவரும் புத்தக்ம் படித்து அறிய வேண்டுகிறேன்.படியுங்கள்,அறியுங்கள்,பிறகு விமர்சியுங்கள்.// */

    நேரம் கிடைத்தால் அந்த புத்தகத்தை படிக்க முயற்ச்சிக்கிறேன் சகோ சார்வாகன். ஒரே ஒரு கவலை தான், எவ்வளவு முயன்றாலும் அந்த புத்தக பெயரை மனப்பாடம் செய்ய முடியாது என்றே நினைக்கிறேன். அதுவே ஒரு சிறு கையேடு அளவுக்கு இருக்கு.

    அதே மாதிரி, நீங்களும் இஸ்லாத்தை விமர்ச்சிப்பதற்கு முன்னாள் ஒரு முறை குரானை முழுதும் படித்து விடுங்களேன்......

    உங்கள் கேள்விகளில் இருந்தே என்னால் புரிந்து கொள்ள முடிகிறது, நீங்கள் இன்னும் குரானை முழுதுமாக படிக்க வில்லை என்று. சரிதானே என் அன்புச் சகோதரனே!!!!

    ReplyDelete
  35. டாகின்சின் அந்த வாதப்படி, அந்த கிறித்தவர் கேட்ட கேள்வி நியாயமானது தானே சார்வாகன்???? சோ, அந்த கருத்து கணிப்பு ஒரு ஹம்பக் என்று தான் சொல்ல வேண்டும்.

    ReplyDelete
  36. சகோ ஆஸிக்
    டாக்கின்ஸ் சொன்ன கருத்துகளுக்கு அவ்ரே பொறுப்பு.நான் அல்ல.
    நான் ரிச்சர்ட் டாக்கின்ஸ்(யார்) சொல்லும் ஒவ்வோரு கருத்தும்,வார்த்தைகளும் அவை அப்படியே சரிதான் என வாதிட மாட்டேன்.சரி பல கிறித்தவர்களுக்கு புதிய ஏற்பாட்டின் முதல் புத்தகத்தின் பெயரை(மத்தேயு) உடனே கூற முடியாதது போல் டாக்கின்ஸாலும் கூற இயலவில்லை.

    டாக்கின்ஸ்கு டார்வினின் கருத்துகள் நன்கு தெரியும் என்பதற்கு அத்தாட்சி [எழுதிய புத்தகங்கள்,பரிணாம்வியலில் முனைவர் பட்டம்,பல விவாதங்கள்]நிறைய உண்டு.அவர் கூறிய பரிணாம் விளக்கம் எங்கேனும் தவறு என்றால் அறியத் தாருங்கள். பிரிட்டன் வாழ் கிறித்த்வர்கள் கிறித்தவ வேதம் பற்றி நன்கு அறிந்தவர்கள் என்பதை எப்படி உறுதி செய்வது என்பது பற்றி கேளுங்கள்.

    இதில் இருந்து வேறு எதுவும் கருத்து கொள்ள இயலாது.உங்களின் இப்பதிவிலேயே இஸ்லாமிய பதிவர்களுகிடையில் கூட சில கருத்து மாறுபாடுகள் இருக்கிறதல்லவா!.அதுபோல் டாக்கின்ஸின் கருத்தில் இருந்து சிறிது மாறுபடுகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். கிறித்தவ்ர்களுக்கு வேதம் தெரிவதை விட அந்நாட்டில் மத சார்பற்ற சட்டங்களே நீடிக்க வேண்டும்,மதம் அரசியல் கலப்பு கூடாது என்பதுதான் அவ்விவாதத்தின் சாரம்.

    அந்த விவாதம் ஏன் நடந்தது அதன் காரண் காரியங்கள் என்ன என்பது பற்றி ஒரு பதிவு எழுதியுள்ளேன்.
    ****************
    சகோ சிராஜ்
    நான் குரானை படிக்கவில்லையா,நீங்க பதிவுலக்த்திற்கு புதுசு !!!!!!.
    எதற்கும் சகோ சுவன‌ப்பிரியனிடம் கேட்டு உறுதி செய்து கொள்ளுங்கள்.
    நன்றி

    ReplyDelete
  37. சகோதரர் சார்வாகன்,

    //டாக்கின்ஸ் சொன்ன கருத்துகளுக்கு அவ்ரே பொறுப்பு.நான் அல்ல.//

    மிக்க சந்தோசம். இதை தான் எதிர்பார்த்தேன். இன்ஷா அல்லாஹ் உங்களின் இந்த பின்னூட்டம் எதிர்க்காலத்தில் மிகவும் பயன்பட போகின்றது எனக்கு.

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    ReplyDelete
  38. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ


    " இப்ராஹீம், யூதராகவோ, கிறித்தவராகவோ இருந்ததில்லை. மாறாக அவர் உண்மை வழியில் நின்ற முஸ்லிமாக இருந்தார். இணை கற்பித்தவராக அவர் இருந்ததில்லை"
    அல்குரான் 3.67
    இதற்கு சகோ இப்ராகிம் என்ன சொல்ல போகிறார் ?

    ReplyDelete
  39. ///@ சகோதரர் இப்ராஹீம், சகோதரர் ஜாகிர் அவர்களின் கேள்விக்கு பதில் அளியுங்கள்...///

    நான் படித்த நபிவழிசெய்தி வைத்தே சொல்லியுள்ளேன் ஒரு போரில்,ஒரு நபித்தோழர் ,நபி[அவர்கள் மீது சமாதானம் நிலவட்டும்]அவர்களிடம் , "நான் எதிரி ஒருவர் லாயிலாஹ் இல்லல்லாஹ் என்று சொன்ன பிறகும் அவர் எனது வாளுக்கு பயந்துதான் அவ்வாறு கூறினார் என்று கருதி வெட்டி வீழ்த்தினேன் என்று கூறினார். உடன் நபி[அவர்கள் மீது சமாதானம் நிலவட்டும்] நீ அவர் உள்ளத்தை திறந்து பார்த்தாயா? அதற்கு முன் அவர் இருந்த நிலைக்கு நீ சென்றுவிட்டதை பார்க்க முடிகிறது என்று கூறுகிறார்கள்.[புஹாரி] .
    இப்போது பல முஸ்லிம்கள் ஷிர்க் செய்கிறார்கள் என்றால் அவர்களின் அறியாமையும் ,ஆலிம்கள் மீது அவர்கள் வைத்திருக்கும் வரம்பு கடந்த நம்பிக்கையும் காரணம்.எத்தனையோ மக்கள் ஷிர்க்கில் மூழ்கி இன்று சரியான வழிக்கு வந்துள்ளனர்.அவர்கள் இணை வைத்தால் அவர்களுக்குரிய தண்டனை இறைவனிடம் உண்டு.அவர்களை முஸ்லிம்களாக ஏற்றுக் கொள்வதும் மறுப்பதும் இறைவனின் அதிகாரத்திற்கு உட்பட்டது. ஒருவன் "லாயிலாஹா இல்லல்லாஹ் ,முஹம்மதுர் ரசூலல்லாஹ்"என்று சொன்ன பிறகு அவனை முஸ்லிம் இல்லை என்று என்று தீர்ப்பு கொடுக்க நமக்கு உரிமை இருக்கிறது என்பதற்கு ஜாஹிர் ஆதாரம் தர வேண்டும்

    ReplyDelete
  40. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
    சகோ இப்ராகிம் ,
    //"லாயிலாஹா இல்லல்லாஹ் ,முஹம்மதுர் ரசூலல்லாஹ்"என்று சொன்ன பிறகு அவனை முஸ்லிம் இல்லை என்று என்று தீர்ப்பு கொடுக்க நமக்கு உரிமை இருக்கிறது என்பதற்கு ஜாஹிர் ஆதாரம் தர வேண்டும்//


    மேலே நான் கொடுத்த குரான் வசனத்தை நீங்கள் பார்த்து விட்டு இந்த கேள்வியை கேட்டு இருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
    மேலே தாங்கள் கூறியுள்ள காலித் பின் வலீத் (ரஹ்) அவர்கள் சம்மந்த பட்ட ஹதீஸ் நடந்த சூழ்நிலையை பார்க்க வேண்டும் சகோ .அது போர் நடக்கும் சூழ்நிலை அந்த நேரத்தில் எதிராளி கலிமா சொன்ன போது அதை ஏற்காமல் காலித் பின் வலீத் அவர்கள் அவரை வெட்டி விடுவார் .
    இந்த இடத்தில் ரசூலுல்லாஹ் (ஸல் ) அவர்கள் அவரின் உள்ளத்தை நீ அறிந்தாயா ? என்று கேட்பார்கள் .இந்த இடத்தில் இது கேட்க பட வேண்டிய கேள்வி சகோதரா .ஆனால் நீங்கள் என்ன சொல்லி இருக்கிறீர்கள் என்றால்
    // ஒருவன் ஷிர்க் வைத்தாலும் அவனை முஸ்லிம் இல்லை என்று கூற யாருக்கும் அதிகாரம் இல்லை என்பதே நபி[ஸல்] அவர்களுடைய கருத்து.//
    இது ரசூலுல்லாஹ்வின் பெயரில் இட்டுக்கட்ட படும் ஹதீஸ் என்று தெரியவில்லையா? சகோ .ரசூலுல்லாஹ் சொன்ன கருத்தை திரித்து கூறபடுவது என்று விளங்கவில்லையா? சகோதரா ?

    ReplyDelete
  41. தொடர்ச்சி
    //இப்போது பல முஸ்லிம்கள் ஷிர்க் செய்கிறார்கள் என்றால் அவர்களின் அறியாமையும் ,ஆலிம்கள் மீது அவர்கள் வைத்திருக்கும் வரம்பு கடந்த நம்பிக்கையும் காரணம்//
    இது இப்போது இல்லை சகோ ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களின் தந்தையார் பெயரே அப்துல்லாஹ். அவர்களும் அல்லாஹ் வை தான் கடவுள் என்றார்கள் அவர்களை பற்றி சொல்லும் அல்லாஹ் காபிர் என்று சொல்கிறான் சரியா ?
    இங்கே நாம் கவனிக்க வேண்டியது என்ன வெனில் முஸ்லீம் என்றால் யார் என்று விளங்கினால் காபிர் என்பது யார் என்று விளங்கிவிடும்
    " நீங்கள் புறக்கணித்தால் (அது பற்றி எனக்குக் கவலையில்லை.) நான் உங் களிடம் எந்தக் கூலியையும் கேட்கவில்லை. என் கூலி அல்லாஹ்விடமே உள்ளது. நான் முஸ்லிமாக இருக்குமாறு கட்டளையிடப் பட்டுள்ளேன்' (என்றும் கூறினார்.)" 10:72
    இது நூஹ் நபி தன்னை முஸ்லீம் என்று சொன்னது .


    " இப்ராஹீம், யூதராகவோ, கிறித்தவராகவோ இருந்ததில்லை. மாறாக அவர் உண்மை வழியில் நின்ற முஸ்லிமாக இருந்தார். இணை கற்பித்தவராக அவர் இருந்ததில்லை" 3:67
    இது இப்ராகிம் நபியை முஸ்லீம் என்று சொல்லும் அல்லாஹ் அவர் இனைகற்பிக்க வில்லை என்றும் அதாவது ஷிர்க் வைக்க வில்லை என்றும் சேர்த்து சொல்கிறான்
    " 'எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் வழித் தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்' (என்றனர்" 2:128
    இது இப்ராகிம் நபியும் இஸ்மாயில் நபியும் கேக்கும் துவா .
    அதாவது முஸ்லீம் என்பவன் அல்லாஹ்வுக்கு கட்டுபடுபவன்

    ReplyDelete
  42. தொடர்ச்சி
    "'என் மக்களே! அல்லாஹ் உங்களுக்காக இம்மார்க்கத்தைத் தேர்வு செய்துள்ளான். முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் மரணிக்கக் கூடாது' என்று இப்ராஹீமும், யஃகூபும் தமது பிள்ளைகளுக்கு வலியுறுத்தினர்" 2:132
    ''எங்கள் இறைவனின் சான்றுகள் எங்களிடம் வந்த போது அதை நம்பினோம் என்பதற்காகவே எங்களை நீ தண்டிக்கிறாய்'' (என்று ஃபிர்அவ்னிடம் கூறி விட்டு) ''எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தருவாயாக! எங்களை முஸ்லிம்களாகமரணிக்கச் செய்வாயாக!'' என்றனர்." 7:126
    " நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுகின்ற விதத்தில் அஞ்சுங்கள்! நீங்கள் முஸ்லிம்களாகவே தவிர மரணிக்காதீர்கள்" 3:102


    "'எனக்கு என் இறைவன் நேரான பாதையைக் காட்டி விட்டான். அது நேரான மார்க்கம். உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கம். அவர் இணை கற்பித்தவராக இருக்கவில்லை' என்று கூறுவீராக!


    'எனது தொழுகை, எனது வணக்க முறை, எனது வாழ்வு, எனது மரணம் யாவும் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியன; அவனுக்கு நிகரானவன் இல்லை; இவ்வாறே கட்டளையிடப் பட்டுள்ளேன்; முஸ்லிம்களில் நான் முதலாமவன்' என்றும் கூறுவீராக 6:161,162,163.


    ஆக முஸ்லீம் என்பவன் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டவன் .அவனை அஞ்சுகிற விதத்தில் அஞ்சவேண்டும் என்றால் என்ன சகோ ?

    ReplyDelete
  43. தொடர்ச்சி
    அல்லாஹ் ஒருவனே அவனுக்கு ஈடு இணை இல்லை என்பதை அஞ்சுகிற விதத்தில் அஞ்சவேண்டும் என்று அல்லாஹ் சொல்கிறான் சகோதரா.
    //அவனை முஸ்லிம் இல்லை என்று என்று தீர்ப்பு கொடுக்க நமக்கு உரிமை இருக்கிறது என்பதற்கு ஜாஹிர் ஆதாரம் தர வேண்டும்//
    இதில் அவன் உள்ளத்தை அறிந்து சொன்னாயா என்று கேட்பதற்கு சந்தர்பம் சரி இல்லை என்று தெரியவில்லையா சகோதரா?
    ஷிர்க் அதாவது இணை வைக்க கூடாது என்பது இஸ்லாத்தின் அடிப்படை சகோதரா .அந்த அடிப்படையை வெளிப்படையாக மீறும் ஒருவனை முஸ்லீம் என்று சொல்லகூடாது என்பது அல்லாஹ் நமக்கு சொல்லிவிட்ட விஷயம் சகோதரா.

    இந்த விளக்கம் போதும் என்று நினைக்கிறேன் .
    நம் எல்லோரையும் அந்த ஈடு இணையற்ற அல்லாஹ்வை மட்டுமே வணங்குமாறு கடைசி வரை நிலைத்து இருக்க செய்யுமாறு அவனிடம் பிரார்த்தித்தவனாய் விடை பெறுகிறேன்
    வஸ்ஸலாம்

    ReplyDelete
  44. அற்ப்புதமான விவாதம்,

    தொடருங்கள் சகோ ஜாகிர் மற்றும் சையத் இப்ராஹீம்.

    ReplyDelete
  45. அஸ்ஸலாமு அலைக்கும்

    சகோதரர் இபுறாஹீம் அவர்களுக்கு
    அஹமதியாக்கள் என்று சொல்லபடுகின்ற காதியானி குழுவினர் கஃலீமவை எற்றுக் கொள்கிறார்கள் அவர்கள் முஸ்லிமா? ஒவ்வொரு தொழுகையிலும் பாங்கு சொல்லும் போது அஷ்ஹது அன்ன இலாஹிலாஹ அஷ்ஹது அன்ன முஹம்மதன் என்று கூறுகிறார்கள் கவனிக்கவும். அப்படி கூறுவதால் முஸ்லிமா?

    ReplyDelete
  46. This comment has been removed by the author.

    ReplyDelete
  47. This comment has been removed by the author.

    ReplyDelete
  48. @சகோ. S. Ibrahim//ஒருவன் ஷிர்க் வைத்தாலும் அவனை முஸ்லிம் இல்லை என்று கூற யாருக்கும் அதிகாரம் இல்லை என்பதே நபி[ஸல்] அவர்களுடைய கருத்து.//

    இஸ்லாத்தின் அடிப்படையில் முஸ்லிம் என்பவன் யார்? ஒரு முஸ்லிம் பெயர் கொண்ட தாயுக்கும் தந்தைக்கும் பிறந்து விட்டால் அவன் முஸ்லிமாக முடியுமா?
    "முஸ்லிம்" என்பது ஏற்பின் அடிப்பையில் உண்டாவதா? அல்லது பிறப்பின் அடிப்படையில் உண்டாவதா?.

    பிறப்பின் அடிப்படையில் என்றால் இந்த புவியில் பிறக்கும் அனைத்துமே முஸ்லிம்கள்தான்,

    ஏன்? இந்தப் பிரபஞ்சம் சூரியன் சந்திரன், கோள்கள் அனைத்துமே முஸ்லிம்கள்தானே.

    மேலும் "காபிர்" என்ற வார்த்தை தெரிந்தோ தெரியாமலோ தவறாக அர்த்தம் விளங்கிக் கொண்ட வார்த்தை, முஸ்லிம் அல்லாத அனைவரையுமே இவ்வார்த்தை இழிவாக அழைப்பதாக ஒரு தப்பான எண்ணம் அனைவரின் மனதிலும் விதைக்கப் பட்டிருக்கிறது என்றால் அது மிகையில்லை.

    குர் ஆனில் இறைவன் இறை நிராகரிப்புக்கு (குப்ர்), இணைவத்தலுக்கு (ஷிர்க்), நம்பிக்கைத் துரோகம் செய்பவர்களுக்கு (முனாபிக்), அறியாமையில் இருப்பவர்களுக்கு (ஜாஹ்ல்) என்று தனித் தனி சொல்லாடலைப் பயன் படுத்துகின்றான். மேலும் இறை நிராகரிப்பாளர்கள் (காபிர்)என்று இறைவன் அழைப்பது இறைவனின் அத்தாட்சிகளை கண்டு ஏற்று பிறகு அவனுக்கு இணை கற்பித்தவர்களையே அதாவது இறைவனுக்கும் அவனது தூதர்களுக்கும் அறிந்து கொண்டே தூரோகம் செய்தவர்களுக்கு.

    இஸ்லாத்தையும் அதன் கொள்கை கோட்பாட்டை சரிவர விளங்காதவர்கள் எல்லோரும் எவ்வாறு இறைநிராகரிப்பாளன் (காபிர்) ஆக முடியும்? இவர்களுக்குண்டான சரியான பதம் இவர்கள் இஸ்லாத்தைக் குறித்து சரிவர அறியாதவர்கள் (ஜாஹ்ல்) அவ்வளவுதான்.

    யார் இறைவனுக்குக் கட்டுப்பட்டவன், யார் இறைவனுக்கும் அவன் கட்டளைகளுக்கும் கட்டுப்படாதவன் என்று தீர்மானிக்கும் உரிமை இறைவனிடமே உள்ளது என்பதில் மாற்றுக்கருத்தும் இல்லை, அதே சமயம் ஒருவர் இஸ்லாத்திலேயே தொடர்ந்து நீடிப்பார் என்பதற்கோ அல்லது இறை நிராகரிப்பில் தொடர்ந்து நீடிப்பார் என்பதற்கோ எவராலும் உத்திரவாதம் கொடுக்கவும் முடியாது.

    “தொழுகையாளிகளுக்குக் கேடுதான் அவர்கள் எத்தகையோர் என்றால் தங்கள் தொழுகையில் பாராமுகமாக(வும் அசிரத்தையாக)வும் இருப்போர்.

    அவர்கள் பிறருக்கு காண்பிக்கவே தொழுகிறார்கள்" (104 -106).

    //ஒரு முஸ்லிமுக்கும் காபிருக்கும் உள்ள வித்தியாசம் தொழுகையே ' என்று நபி[ஸல்] //

    என்று நபி (ஸல்) கூறியிருந்தாலும் கேடு உண்டாக்கும் இது போன்ற இறைவனால் ஏற்றுக் கொள்ளப் படாத தொழுகையினால் யாருக்கு என்ன பலன்?.

    தொழுகையாளிக்கே இந்த கதி என்றால் தர்காக்களில் சென்று மண்டியிடுவோரின் நிலையையும் இதற்கு ஆதரவுக் கரம் நீட்டும் இமாம்களின் (?) நிலையை சொல்லவும் வேண்டுமா?



    இறைநம்பிக்கையாளனுக்கு மிகப் பெரும் பாக்கியம் (உண்மையாக தொழப்படும்) தொழுகை, இது மற்றவருக்கு கிடைப்பதில்லை (இப் பேரின்பம் விரைவில் அனைவருக்கும் கிடைக்க துஆ செய்வோம்) என்ற ரீதியிலே அந்த ஹதீஸை அணுகினால் எந்தக் குழப்பமும் ஏற்படாது.

    முஸ்லிம் எனும் அர்த்தம் இறைவனுக்கு முழுமையாக கட்டுப்பட்டு நடப்பது என்பதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் இருக்காது என்று எண்ணுகிறேன்.


    இறைவன் மிக அறிந்தவன்.

    ReplyDelete
  49. ஜாகிர் ,இணைவைப்பு கூடாது என்பதில் அனைத்து முஸ்லிம்களுக்கும் மாற்று கருத்து இல்லை.ஆனால் இணைவைப்பு என்பதிலே பல முஸ்லிம்கள் கருத்து வேறுபாட்டுடன் உள்ளனர்.இந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி விட்டால் ,இணைவைப்பதை அனைத்து முஸ்லிம்களும் தவிர்த்துவிடுவர்.ஆனால் இதற்கு இடையூறாக இருப்பவர்கள் ஆலிம்கள் என்ற பெயரில் இருக்கும் பண ஆசை பிடித்த இறை நம்பிக்கை அற்றவர்கள் .அதற்காக அப்பாவி முஸ்லிம்களை காபிர்கள் என்று சொல்லுவதை ஏற்கமுடியாது.தர்காவுக்கு செல்லும் அவர்களிடம் இணைவைப்பதை பற்றி கேட்டால் ,நாங்கள் என்ன சிலை களையா வணங்கு கிறோம் என்று கேட்பார்கள் .அவர்களிடம் இன்னும் வீரியமாக மார்க்கத்தை எடுத்து வைப்பதை விட்டுவிட்டு அவர்களை காபிர்கள் என்பது எங்ஙனம் சரி? .இதைத்தான் நபி[அவர்கள் மீது சமாதானம் நிலவட்டும்] அவரின் உள்ளத்தை திறந்து பார்த்தாயா? என்று கேட்கிறார்கள்?இன்சா அல்லாஹ் தொடர்வோம்

    ReplyDelete
  50. ஹைதர் அலி ////அஷ்ஹது அன்ன இலாஹிலாஹ அஷ்ஹது அன்ன முஹம்மதன் என்று கூறுகிறார்கள் கவனிக்கவும். அப்படி கூறுவதால் முஸ்லிமா?/

    ////ஒருவன் "லாயிலாஹா இல்லல்லாஹ் ,முஹம்மதுர் ரசூலல்லாஹ்"என்று சொன்ன பிறகு அவனை முஸ்லிம் இல்லை என்று என்று தீர்ப்பு கொடுக்க நமக்கு உரிமை இருக்கிறது என்பதற்கு ஜாஹிர் ஆதாரம் தர வேண்டும்////
    நான் சொன்னதையும் அஹமதியாக்கள் சொல்வதையும் சரிபார்த்துக் கொள்ளவும்

    ReplyDelete
  51. siraj///தொடருங்கள் சகோ ஜாகிர் மற்றும் சையத் இப்ராஹிம் ////

    நான் சையத் இப்ராஹீம் அல்ல .எஸ்.இப்ராஹீம்

    ReplyDelete
  52. //
    அட அதை விடுங்கள். இப்போது சில கேள்விகளை பார்ப்போம். பரிணாம நம்பிக்கையாளர்களிடம் போய்,
    டார்வினின் புத்தகத்தின் பெயர் என்ன?
    டார்வினின் புத்தகத்தை படித்திருக்கிண்றீர்களா?,
    அதில் சொல்லப்பட்டுள்ள கோட்பாடு என்ன?
    பரிணாமம் என்றால் என்ன?

    இப்படியாக கேள்வி கேட்டால் எத்தனை பேர் சரியாக பதில் சொல்வார்கள்?? அதனை வைத்து இவர்கள் சும்மாச்சுக்கும் தான் பரிணாமத்தை நம்புகின்றார்கள் என்று கிருத்துவர்கள் சொன்னால் டாகின்ஸ் கூடாரம் ஏற்றுக்கொள்ளுமா? //

    உண்மை தான்.

    மற்ற நண்பர்களை பற்றி எனக்கு தெரியாது .

    ஆனால் எனக்கு இதில் உள்ள அனைத்து கேள்விகளுக்கும் எனக்கு விடை தெரியாது தான் .

    எனக்கு ஒரு சந்தேகம் ,

    இறைவனை நண்பும் அனைவருக்கும் புனித பைபிள் , கிரந்தம் , திரு குரான் , கீதை போன்ற நூல்களை வரிக்கு வரி படித்திருப்பார்களா ? , அதில்
    சொல்லப்பட்டுள்ள கோட்பாடு என்ன என முழுவதும் அறிவார்களா ?

    என்னுடைய கருத்து என்னவென்றால் ஒரு புத்தகத்தின் பெயர் முக்கியம் அல்ல , அதை முழுவதும் நம்புவதும் பொருத்தம் அல்ல , நமக்கு சரி என்று படுகிற கருத்துகளுக்கு ஆதாரமாகவும் , நமக்கு உண்மையான கருத்துகளை உரைக்கும் ( என நாம் மனதார நம்பும் ) புத்தகத்தினை வழிகாட்டியாகவும் கொள்ளலாம் .

    மதம் சம்பந்தமான புத்தகத்தில் உள்ள கருத்துக்களை சரியாக படித்து ஞானி ஆனவர்களும் இருக்கிறார்கள் , தவறாக அர்த்தம் பண்ணிக்கொண்டு தீவிரவாதியானவர்களும் இருக்கிறார்கள் .

    ReplyDelete
  53. ///மதம் சம்பந்தமான புத்தகத்தில் உள்ள கருத்துக்களை சரியாக படித்து ஞானி ஆனவர்களும் இருக்கிறார்கள் , தவறாக அர்த்தம் பண்ணிக்கொண்டு தீவிரவாதியானவர்களும் இருக்கிறார்கள் /////
    ஆம் தீவிரவாதிகள் ஆனவர்களை விட நல்லவர்களாக ஆனவர்களே அதிகம்.ஆனால் உங்களது நாத்திக புத்தகங்களை படித்தவர்கள் நல்லவர்களைவிட தீயவர்களே அதிகம் .

    ReplyDelete
  54. //உங்களது நாத்திக புத்தகங்களை படித்தவர்கள் நல்லவர்களைவிட தீயவர்களே அதிகம்//
    நான் நாத்திகத்தை இதில் இழுக்கவே இல்லையே .
    .நான் அறிவியல் விரும்பி , நாத்திகவாதி அல்ல .

    ReplyDelete
  55. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
    சகோ இப்ராகிம்,
    //,இணைவைப்பு கூடாது என்பதில் அனைத்து முஸ்லிம்களுக்கும் மாற்று கருத்து இல்லை.ஆனால் இணைவைப்பு என்பதிலே பல முஸ்லிம்கள் கருத்து வேறுபாட்டுடன் உள்ளனர்.இந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி விட்டால் ,இணைவைப்பதை அனைத்து முஸ்லிம்களும் தவிர்த்துவிடுவர்.ஆனால் இதற்கு இடையூறாக இருப்பவர்கள் ஆலிம்கள் என்ற பெயரில் இருக்கும் பண ஆசை பிடித்த இறை நம்பிக்கை ................. .இதைத்தான் நபி[அவர்கள் மீது சமாதானம் நிலவட்டும்] அவரின் உள்ளத்தை திறந்து பார்த்தாயா? என்று கேட்கிறார்கள்?இன்சா அல்லாஹ் தொடர்வோம்//
    பணத்தாசை பிடித்த ஆலிம்களால் அப்பாவி முஸ்லீம்களை காபிர் என்று சொல்ல கூடாது எனும் உங்கள் நல்ல மனசை பாராட்டுகிறேன் சகோ
    அதே நேரம் அல்லாஹ் நமக்கு நாம் யார் நாம் என்ன செய்ய வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக சொல்லி விட்டான் சகோதரா


    "ஆதமுடைய மக்களின் முது குகளிலிருந்து அவர்களின் சந்ததிகளை உமது இறைவன் வெளியாக்கி,அவர்களை அவர்களுக்கு எதிரான சாட்சிகளாக்கினான். நான் உங்கள் இறைவன் அல்லவா?'' (என்று கேட்டான்.) ''ஆம்! (இதற்கு) சாட்சி கூறுகிறோம்'' என்று அவர்கள் கூறினர். ''இதை விட்டும் நாங்கள் கவனமற்று இருந்து விட்டோம்''என்றோ, ''இதற்கு முன் எங்களின் முன்னோர்கள் இணை கற்பித்தனர்; நாங்கள் அவர்களுக்குப் பின் வந்த சந்ததிகளாக இருந்தோம்; அந்த வீணர்களின் செயலுக்காக எங்களை நீ அழிக்கிறாயா?'' என்றோ கியாமத் நாளில் நீங்கள் கூறாதிருப்பதற்காக (இவ்வாறு உறுதி மொழி எடுத்தோம். )"7:172,173
    இது அல்லாஹ்வின் வார்த்தை சகோதரா.ஆலிம்கள் தான் தப்பு பண்ணினார்கள் அவர்கள் பண்ணிய தப்புக்கு எங்களை தண்டிபாயா?என்று மறுமை நாளில் யாரும் என்னிடம் கேட்காமல் இருப்பதற்காக நாம் முன்பு அல்லாவை பார்த்து சத்தியம் பண்ணி கொடுத்து விட்டு வந்து இருக்கிறோம் என்பதை ஞாபகம் காட்டுகிறேன் என்றும் அந்த ரஹ்மான் தெளிவாகவே சொல்லி விட்டான் சகோ .
    பணத்தாசை பிடித்த ஆலிம்கள் நமக்கு இஸ்லாத்தை எத்தி வைக்க வில்லை என்பதில் 100 சதவிகிதம் தங்களுடன் உடன்படுகிறேன் சகோ ,அதே நேரம் ஆலிம் என்பவர் யார் ?
    7 வருடம் மதரஸாவில் போய் படித்து பெரிய தலைப்பாகை கட்டியவரா? இல்லை, மார்க்கத்தை சரியான வழியில் அறிந்தவரே ஆலிம் சகோதரா.உங்களுக்கு இணைவைத்தல் தவறு என்று தெரியும் போது,எடுத்து சொல்ல வேண்டியது உங்கள் கடமையும் கூட.நமக்கு அதிகாரம் இல்லை நமக்கு அதிகாரம் இல்லை என்று திரும்ப திரும்ப சொல்லும் நீங்கள், அல்லாஹ் சொல்லி விட்டான் என்பதை ஒத்துக் கொள்கின்றீர்களா இல்லையா ? அல்லாஹ் சொல்வதை ஒத்துக்கொண்டால் அல்லாஹ் அப்படி சொல்கிறான் அதை நாம சொல்கிறோம் என்று ஒத்துகொண்டால் ஒரு தெளிவு கிடைக்குமே சகோ .மேலே நீங்கள் சொன்னதை மீண்டும் படித்து பார்த்து விட்டு மனசாட்சியுடன் சொல்லுங்கள் இது தெளிவான பதிலா?


    //ஒருவன் ஷிர்க் வைத்தாலும் அவனை முஸ்லிம் இல்லை என்று கூற யாருக்கும் அதிகாரம் இல்லை என்பதே நபி[ஸல்] அவர்களுடைய கருத்து.//


    இந்த கருத்து எங்கிருந்து வந்தது சகோ ,ரசூலுல்லாஹ் எந்த சூழ்நிலையில் இப்படி சொன்னார்கள் என்று உங்களுக்கு தெரிந்து இருந்தும் இப்படி கருத்தை திரித்து கூறுகிறீர்களே சகோ இது சரியா?
    ஒரு கருத்தை தவறாக சொல்லிவிட்டது விளங்குகிறதா சகோதரா?

    இன்னும் குழப்பம் இருக்கிறதா சகோ? நான் சொன்ன பதிலில் தெளிவில்லை என்று எண்ணுகிறீர்களா?

    ReplyDelete
  56. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
    @ Dr.Dolittle

    //இறைவனை நண்பும் அனைவருக்கும் புனித பைபிள் , கிரந்தம் , திரு குரான் , கீதை போன்ற நூல்களை வரிக்கு வரி படித்திருப்பார்களா ? , அதில்
    சொல்லப்பட்டுள்ள கோட்பாடு என்ன என முழுவதும் அறிவார்களா ?//


    நல்ல அழகான கேள்வி சகோ! ஆனால் இங்கே கவனிக்கப்பட வேண்டியது என்ன வெனில் ,
    இந்த கேள்வியின் மூல காரணகர்த்தா யார்?
    ஆஷிக் அல்லது டார்வின்?

    ReplyDelete
  57. அன்பு ஜாகிர் சகோதரருக்கு :
    இந்த கேள்வி யாரையும் காயப்படுத்த முன்வைக்கப்பட்டது அல்ல , அனைவருக்கும் அனைத்தும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை , ஆனால் ஒன்றுமே தெரியாத ஆள் என்று யாருமே இல்லை . டாகின்ஸ்க்கு அந்த கேள்விக்கு பதில் தெரியாத ஒரு காரணத்தினால் அவரை பகடி செய்தது பொறுக்க முடியாமல் , வேறு வழியின்றி இறைவனின் பெயரை இதில் இழுக்க நேர்ந்தது .மன்னித்து விடுங்கள் .

    azeliaskitchen book என்று ஒரு சமையல் புத்தகம் உள்ளது , அந்த புத்தகத்தின் பெயர் நினைவில் இல்லையென்றாலும் , அந்த புத்தகத்தில் கூறியுள்ள முறையை நினைவில் கொண்டு சமையல் செய்தால் சமையல் ருசிக்காமல் போய்விடுமா என்ன ?

    ReplyDelete
  58. This comment has been removed by the author.

    ReplyDelete
  59. சகோதரர் Dr.Dolittle,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    //டாகின்ஸ்க்கு அந்த கேள்விக்கு பதில் தெரியாத ஒரு காரணத்தினால் அவரை பகடி செய்தது பொறுக்க முடியாமல்//

    ஏன் சகோதரர் இப்படி? பதிவில் டாகின்ஸ்சை பகடி செய்யவில்லை பிரதர். அவர் எடுத்துக்கொண்ட அளவுக்கோலை தான் பகடி செய்திருக்கின்றேன். டாகின்ஸ் என்னும் தனி மனிதனை நான் பகடி செய்ததாக நீங்கள் நினைத்தால், அப்படி நினைக்க வைத்ததற்காக என்னை மன்னியுங்கள். ஆனால் என் பதிவு தெளிவாக இருப்பதாகவே நினைக்கின்றேன்.

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
  60. //ஏன் சகோதரர் இப்படி? பதிவில் டாகின்ஸ்சை பகடி செய்யவில்லை பிரதர். அவர் எடுத்துக்கொண்ட அளவுக்கோலை தான் பகடி செய்திருக்கின்றேன். டாகின்ஸ் என்னும் தனி மனிதனை நான் பகடி செய்ததாக நீங்கள் நினைத்தால், அப்படி நினைக்க வைத்ததற்காக என்னை மன்னியுங்கள். ஆனால் என் பதிவு தெளிவாக இருப்பதாகவே நினைக்கின்றேன். //

    தனி மனிதனை பகடி செய்யாமல் , தாங்கள் பின்பற்றும் கொள்கைக்கு ஆதரவான கருத்துக்களை நாகரீகமாக கூறும் உங்கள் பண்பு எனக்கு பிடித்திருக்கிறது ,

    யாரோ முகம் அறியாத டாகின்சுக்காக நாம் இவ்வளவு அக்கறை காட்டுகிறோம் .ஆனால் அறிவிலும் வயதிலும் மூத்தவர்களை , நமது சக பதிவர்களை பகடி செய்து தனி மனித தாக்குதல் நடத்தும் சில சகோதரர்களின் கமெண்ட்டை --//லூசு கண்ணன் said...
    இந்த சார்வாகனு,நரேனு,வவ்வாலு,காக்க்கா,குருவி,குருமி,தருமி இவாங்க எல்லோரையும் யாராவது பாத்திங்களா ப்ளீஸ் சொல்லுங்களே..//---தாங்கள் வெளியிடுவது தகுமா .?

    நாம் படித்தவர்கள் , நாகரீகத்தை உலகுக்கு அளித்த தமிழர்கள் , நாம் விவாதிப்பது ஒரு நல்ல நோக்கத்திற்காக ....

    விவாதப்பொருளை பகடையாக உருட்டலாமே தவிர , அறிவிலும் வயதிலும் மூத்தவர்களை இவ்வாறு விமர்சிப்பது முறையா ?

    ReplyDelete
  61. சகோதரர் Dr.Dolittle,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    //தாங்கள் வெளியிடுவது தகுமா .?//

    அந்த கமெண்ட்டை அழித்துவிட்டேன் பிரதர். சுட்டி காட்டி எடுத்துரைத்ததற்கு நன்றி...இனி இம்மாதிரியாக நடக்காமல் பார்த்துக்கொள்கின்ரேன்.

    ReplyDelete
  62. jahir//இன்னும் குழப்பம் இருக்கிறதா சகோ? நான் சொன்ன பதிலில் தெளிவில்லை என்று எண்ணுகிறீர்களா?////

    நான் சொல்லுவதை நீங்கள் இன்னும் உள்வாங்கி கொள்ளாமல் தொடருகிறீர்கள்.

    ///''இதற்கு முன் எங்களின் முன்னோர்கள் இணை கற்பித்தனர்; நாங்கள் அவர்களுக்குப் பின் வந்த சந்ததிகளாக இருந்தோம்; அந்த வீணர்களின் செயலுக்காக எங்களை நீ அழிக்கிறாயா?'' என்றோ கியாமத் நாளில் நீங்கள் கூறாதிருப்பதற்காக (இவ்வாறு உறுதி மொழி எடுத்தோம். )"7:172,௧௭௩/

    நமது மக்களில் பலர் இணைவைப்பு என்பது சிலை வணக்கம் மட்டுமே என்று நம்பி வருகின்றனர்.நாம் இதுவரை இணைவைப்பு பற்றிய விளக்கம் அளிப்பதில் பெரும் எதிர்ப்புகளையும் சோதனைகளையும் சந்தித்து வருகிறோம் .இந்த பாதையில் இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் அதிகமுள்ளது.ஆதலின் அதற்குள் அறியாமையிலிருக்கும் முஸ்லிம்களையும் காபிர்கள் என்று சொல்ல வேண்டாம்.என்பதே எனது வேண்டுக்கோள்.அவர்கள் உள்ளத்தை திறந்து பார்த்தாயா? என்று நபி[அவர்கள் மீது சமாதானம் உண்டாகட்டும்] என்ற கேள்வி இவர்களுக்கும் பொருந்தும்.எங்களது ஊர் வரலாற்றில் இந்த ஆண்டு ரசூலுல்லாஹ் கந்தூரி சாப்பாடு வசூல் ஆகாததால் ஒரு வாரம் தள்ளிபோட்டனர்.இன்னும் சிலர் பணம் கொடுத்து சாப்பாடு வாங்க மறுத்துவிட்டனர்.கடந்த ஆண்டு சன்மார்க்க விழிப்புணர்வு விழா என்று நடத்தி மீலாது விழா என்ற பெயரை எடுத்துவிட்டனர்.சன்மார்க்க விழாவை வருடத்திற்கு ஒருமுறை ராபியுலவ்வலில் தான் நடத்த வேண்டுமா?என்ற கேள்வியால் இந்த ஆண்டு இன்னும் நடத்த தயங்குகின்றனர்.இறைவனுக்கே புகழனைத்தும் .

    ReplyDelete
  63. http://www.pirapanjakkudil.blogspot.com/2013/01/1.html

    ReplyDelete