Monday, November 1, 2010

50% பிரிட்டன் மக்கள் பரிணாமத்தை நம்பவில்லை...



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின். 

------------------------------------------------------------------------------------------------------------------------
பதிவிற்குள் செல்லும் முன் ஒருவர் புரிந்து கொள்ள வேண்டியது: 

இவ்வுலகில் உயிரினங்கள் எப்படி வந்திருக்கும் என்பதற்கு, நான் அறிந்த வரையில் மூன்று கோட்பாடுகள் உள்ளன.

Evolution Theory: தற்செயலாக வந்திருக்க வேண்டும் (Natural Selection + Random Mutations).
Creation Theory: கடவுள் படைத்தார்.
Intelligent Design Theory: பதிவில் பார்ப்போம்.
------------------------------------------------------------------------------------------------------------------------


நீங்கள் மேலே காணும் இந்த பதிவின் தலைப்பு என்னுடையதல்ல. பிரிட்டனின் பிரபல தினசரியான "The Guardian" தன்னுடைய கட்டுரை ஒன்றுக்கு வைத்த தலைப்பு தான் அது (Half of Britons do not believe in evolution, survey finds).   

சென்ற ஆண்டு, சார்லஸ் டார்வினின் "Origin of species" புத்தகம் வெளிவந்து 150 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டும், டார்வின் பிறந்து 200 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டும் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளின் பிரதிபலிப்பு தான் "தி கார்டியன்" பத்திரிகையின் இந்த தலைப்பு.

பிரிட்டனின் மதிப்புமிக்க நிறுவனமான காம்ரஸ் (ComRes), "Rescuing Darwin" என்ற தலைப்பில் நடத்திய இந்த ஆய்வு பல ஆச்சர்யமான தகவல்களை வெளிக்கொண்டு வந்துள்ளது. பரிணாமவியலாளர்களுக்கோ இந்த ஆய்வு முடிவுகள் அதிர்ச்சியை கொடுத்துள்ளன.

பரிணாமம் தொடர்பாக ஆய்வில் கேட்கப்பட்ட மூன்று கேள்விகளையும் அதற்குண்டான பதில்களையும் இந்த பதிவில் பார்ப்போம். ஆய்வு முடிவுகளை முழுமையாக படிக்க விரும்புபவர்கள் இந்த பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள சுட்டியில் இருந்து அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 


1) பரிணாமத்தை இரண்டாக பிரித்து கொண்டார்கள், ஆத்திக பரிணாமம் மற்றும் நாத்திக  பரிணாமம் (Theistic Evolution and Atheistic Evolution).  

a) மக்கள் முன் வைக்கப்பட்ட முதல் கருத்து,  

பரிணாமம் என்ற யுக்தியை பயன்படுத்தி இறைவன் இவ்வுலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் படைத்தார். (Theistic Evolution)

மேலே பார்த்த கருத்து குறித்து நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்று கேட்டதற்கு மக்கள் சொன்ன பதில்கள், 

நிச்சயமாக உண்மை (Definitely True) - 12%
ஏறக்குறைய உண்மை (Probably True) - 32% 
ஏறக்குறைய உண்மையில்லை (Probably Untrue) - 20%
நிச்சயமாக உண்மையில்லை (Definitely Untrue) - 26%         
தெரியாது (Don't Know) - 10%

ஆக, சுமார் 44% மக்கள், "பரிணாமம் உண்மைதான்...ஆனால் அதற்கு பின்னால் இறைவன் இருக்கின்றான்/இருக்கலாம்" என்று நம்புபவர்களாக இருக்கின்றனர்.


b) அடுத்ததாக மக்கள் முன் வைக்கப்பட்ட கருத்து,

இறைநம்பிக்கை என்பது அவசியமில்லாதது மற்றும் அசட்டுத்தனமானது என்ற கருத்தை பரிணாமம் உருவாக்குகின்றது (Atheistic Evolution).          

இதற்கு மக்கள் சொன்ன பதில்கள்,

நிச்சயமாக உண்மை - 13%
ஏறக்குறைய உண்மை - 21% 
ஏறக்குறைய உண்மையில்லை - 27%
நிச்சயமாக உண்மையில்லை - 30%         
தெரியாது - 10%

ஆக, சுமார் 57% மக்கள், "பரிணாமம் இறைவனை பொய்பிக்காது, மறுக்காது" என்று நம்புகின்றனர்.

இதற்கு அடுத்து வந்த மக்கள் கருத்து தான் பரிணாமவியலாளர்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கின்றது.   

அப்படி என்ன கேள்வி, அதற்கு அப்படி என்ன பதில் என்று கேட்கின்றீர்களா?....தொடர்ந்து படியுங்கள்.


2) பரிணாமத்திற்கு (Evolution Theory) மாற்றாக கருதப்படும் ஒரு கோட்பாடென்றால் அது "Intelligent Design" கோட்பாடு.

இந்த உலகில் உயிரினங்கள் தற்செயலாக (Natural Selection + Random Mutation) வர வாய்ப்பில்லை, இவ்வளவு சிக்கலான உடலமைப்பை கொண்ட உயிரினங்கள் இருக்கிறதென்றால், அதற்கு ஒரு அறிவார்ந்த சக்தி (Intelligent Designer) தான் காரணமாய் இருக்க வேண்டுமென்று வாதிடுகின்றது இந்த கோட்பாடு.

டெக்னிகலாக சொல்லுவதென்றால், இந்த பிரபஞ்சம் மற்றும் உயிரினங்களின் குறிப்பிடத்தக்க தன்மைகளை விளக்க இயற்கை தேர்வு (Natural Selection) ஒத்துவராது, ஒரு அறிவார்ந்த சக்தி பின்னணியில் இருக்கின்றது என்ற விளக்கமே சிறந்தது என்று கூறுகின்றது இந்த கோட்பாடு.

The theory of intelligent design holds that certain features of the universe and of living things are best explained by an intelligent cause, not an undirected process such as natural selection. --- Centre for Intelligent Design. 

இதனை படைப்பு கோட்பாட்டோடு (Creation Theory) குழப்பிக்கொள்ள கூடாது.

படைப்பு கோட்பாடென்பது, கடவுள் தான் அனைத்தையும் படைத்தார் என்று கூறும் கோட்பாடு. Intelligent Design கோட்பாட்டை பொறுத்தவரை, கடவுள் என்ற வார்த்தையை அது உபயோகிக்காது, புத்திசாலித்தனமான சக்தி என்றே குறிப்பிடும். அது போல குரான், பைபிள் போன்றவற்றை நிரூபிக்கவும் முயலாது.

இதனை பின்பற்றுபவர்களை பொறுத்தவரை, இந்த சிக்கலான உலகம், நிச்சயம் தற்செயலாக வர வாய்ப்பில்லை, இந்த சிக்கலான வடிவமைப்பிற்கு பின்னால் ஒரு "Intelligent Designer"  இருக்க வேண்டும் என்று கூறுபவர்கள். 

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், இந்த உலகின் உருவாக்கத்திற்கு பின்னால் ஒரு புத்திசாலித்தனமான சக்தி இருக்கிறதென்பதை தர்க்க ரீதியாக நிரூபிக்க முயல்பவர்கள் (Intelligent design logically implies a designer).
  
இந்த கோட்பாடை அறிவியலாக பரிணாமவியலாளர்கள் ஏற்பதில்லை.

படைப்பு கோட்பாடை அறிவியலாக ஏற்க முடியாததால் Intelligent Design என்ற கோட்பாட்டை கொண்டு வந்து அதற்கு அறிவியல் சாயம் பூசி கடவுள் என்ற conceptடை  நிரூபிக்க பார்க்கின்றார்கள் ஆத்திகர்கள் என்பது பரிணாமவியலாளர்களின் குற்றச்சாட்டு.

இந்த குற்றச்சாட்டை முற்றிலுமாக நிராகரிக்கின்றார்கள் Intelligent Design கோட்பாடை ஆதரிக்கும் அறிவியலாளர்கள். இந்த கோட்பாட்டை படைப்பு கோட்பாட்டோடு சேர்த்து விட்டால் இதனை எளிதாக முறியடித்து விடலாம் என்று கருதுவதால் தான் பரிணாமவியலாளர்கள் அப்படியொரு குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர் என்று விளக்கம் சொல்கின்றனர் இவர்கள்.     

பரிணாமவியலாளர்களுக்கும், Intelligent Design கோட்பாட்டை ஆதரிப்பவர்களுக்கும் இடையே நடக்கும் கருத்து யுத்தம் அறிவியல் உலகம் நன்கு அறிந்த ஒன்று. 

சரி, விசயத்திற்கு வருவோம்.

பரிணாமவியலாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அந்த விஷயம் என்னவென்றால், சுமார் 51% பிரிட்டன் மக்கள், "Intelligent Design" கோட்பாடு நிச்சயமாக உண்மை/ஏறக்குறைய உண்மை என்று சொன்னதுதான்.

"Intelligent Design" கோட்பாடு நிச்சயமாக உண்மை என்று 14% மக்களும், ஏறக்குறைய உண்மையென்று 37% மக்களும் கருத்து தெரிவித்திருக்கின்றார்கள். "Intelligent Design" கோட்பாடு நிச்சயமாக உண்மையில்லை என்று 19% மக்களும், ஏறக்குறைய உண்மையில்லை என்று 21% மக்களும் கருத்து தெரித்திருக்கின்றார்கள்.

ஆக, பெரும்பாலான மக்கள் Evolution Theoryயை நம்புவதை விட அதற்கு சவாலாக இருக்கக்கூடிய Intelligent Design Theoryயை நம்புகின்றார்கள். இது பரிணாமவியலாளர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம்.

இதுதான் பரிணாமவியலாளர்களுக்கு பலத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது. டார்வின் பிறந்த நாட்டில், அவர் மூலமாக பிரபலமான கோட்பாட்டை பெரும்பாலான மக்கள் ஏற்கவில்லை.

ஏற்கனவே "Intelligent Design" கோட்பாடை பள்ளிகளில் சேர்க்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகின்றது. இந்த நேரத்தில் இப்படியொரு கருத்து வந்து, எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றினால் டென்ஷன் அடையாமல் வேறு என்ன செய்வர்!!!!

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரிச்சர்ட் டாகின்ஸ், பிரிட்டன் மக்களின் அறிவியல் அறியாமை வருத்தப்படும் அளவுக்கு உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் பரிணாமவியலாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கும் என்றால் அமெரிக்க ஆய்வு முடிவுகளோ பேரதிர்ச்சியை கொடுப்பதாக உள்ளன.

ஆம், அமெரிக்க மக்களிடம் கடந்த இருபது வருடங்களாக நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் பரிணாமத்திற்கு எதிராகவே உள்ளது.

கடந்த ஆண்டு, தனது பரிணாமம் குறித்த ஆய்வு முடிவுகளை வெளியிட்ட பிரபல "Gallup" நிறுவனம், அதற்கு என்ன தெரியுமா தலைப்பு வைத்தது..."டார்வினின் பிறந்த நாளன்று, பத்தில் நான்கு பேரே பரிணாமத்தை நம்புகின்றார்கள்"....எப்படி இருக்கின்றது தலைப்பு?

மொத்தத்தில், பிரிட்டன் மற்றும் அமெரிக்க மக்களின் பரிணாமத்திற்கு எதிரான இந்த நிலைப்பாடு பரிணாமவியலாளர்களை திணறடித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், பள்ளிகளில், படைப்பு கோட்பாடையும் (Creation Theory), Intelligent Design கோட்பாட்டையும் சேர்க்க வேண்டுமென்று அதிகரித்து வரும் குரல்களால் பரிணாம உலகம் திக்குமுக்காடுகின்றது.

உதாரணத்திற்கு, பிரிட்டனில், அறிவியல் ஆசிரியர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், மூன்றில் ஒருவர் படைப்பு கோட்பாட்டை அறிவியல் வகுப்புகளில் பரிணாமத்துடன் சேர்ந்து நடத்த வேண்டுமென்று கூறியிருக்கின்றார்களாம்.

இங்கு நாம் பார்த்த செய்திகள் எல்லாம் ஒருபுறமிருக்கட்டும். இப்போது நான் சொல்லப்போகும் விஷயம் உங்களுக்கு இன்னும் ஆச்சர்யத்தை தரலாம்.

உலகில், படித்த மக்கள் அதிகமுள்ள நாடுகளில் இஸ்ரேலும் ஒன்று. அங்கு 2006 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், சுமார் 28% மக்கள் மட்டுமே பரிணாமத்தை நம்புவதாக தெரியவந்துள்ளது.

இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல, இந்த ஆண்டின் துவக்கத்தில், இஸ்ரேல் கல்வித்துறையின் தலைமை விஞ்ஞானியான கவ்ரியல் அவிடல் (Gavriel Avital) பரிணாமத்தின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பி மிகுந்த பரபரப்பை உண்டாக்கினார்.

ஆக, உலகின் முக்கிய நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் இஸ்ரேலின் பெரும்பாலான மக்கள் பரிணாமத்திற்கு எதிராகவே உள்ளனர். முஸ்லிம் நாடுகளைப் பற்றி சொல்லவே வேண்டாம். கிட்டத்தட்ட நிராகரிக்கப்பட்ட கோட்பாடாகவே அது கருதப்படுகின்றது.

இவ்வளவுக்கும் என்ன காரணம் என்று பரிணாமவியலாளர்கள் கருதுகின்றார்கள்?....

பதில் எளிதானது தான். பரிணாமம், பள்ளிகளில் சரியான முறையில் கற்பிக்கப்படுவதில்லை என்பது முக்கிய காரணங்களில் ஒன்று.

எது எப்படியோ, பரிணாமவியலாளர்கள் முன் மிகப்பெரிய சவால் இருக்கின்றது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.

இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் நிலைக்க செய்வானாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

Please Note:
Intelligent Design கோட்பாடு குறித்த தகவல்களை தமிழ் படுத்தியதில் சிரமங்கள் இருந்தன. சரியாக மொழி பெயர்த்திருக்கின்றேன் என்றே எண்ணுகின்றேன். என்னுடைய மொழிப்பெயர்ப்பில் தவறு இருப்பதாக கருதும் சகோதரர்கள் சரியான மொழிப்பெயர்ப்பை மறுமொழி வாயிலாக தெரியப்படுத்தவும்.

My sincere thanks to:
1. The Guardian.
2. The Daily Telegraph.

One can download the Rescue Darwin report from:
1. http://www.comres.co.uk/page1657513.aspx

References:
1. Rescuing Darwin survey - comres.co.uk
2. Science and Technology in the Israeli Consciousness - Samuel Neaman Institute survey.
3. Controversy over evolution in Israel - National center for science education, http://ncse.com, dated 21st February, 2010.
4. Poll reveals public doubts over Charles Darwin's theory of evolution - The Daily telegraph, dated 31st January, 2009.
5. Half of Britons do not believe in evolution, survey finds - The Guardian, 1st february 2009.
6. On Darwin's Birthday, Only 4 in 10 believe in Evolution - Gallup Poll Daily tracking, surveyed on Feb 6-7,2009.
7. What is the theory of Intelligent Design - FAQ section, Centre for Intelligent Design.
8. Intelligent Design - Wikipedia.
9. Evolution, Creationism, Intelligent Design - Gallup Poll Daily tracking, surveyed on May 8-11, 2008. gallup.com

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ.                






101 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்
    அன்பின் சகோதரன் ஆஷிக்,
    //எது எப்படியோ, பரிணாமவியலாளர்கள் முன் மிகப்பெரிய சவால் இருக்கின்றது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.//
    சவால்கள் மட்டுமல்ல கேள்விகள் பலவும் இருக்கின்றன. ஆனால் பதில்கள் தான் வர மாட்டேன் என்கிறது. நமது உள்ளூர் பரிணாமவியலாலர்களிட்த்தில் நீங்கள் முன்வைத்த கேள்விகள் கூட பதில்கள் இல்லாமல் பரணில் தூங்கி கொண்டிருக்கின்றன. துறை சார்ந்த வல்லுனர்கள் எங்கேப்பா? அவர்கள் ஒருவேளை இன்னும் ஆய்வில் இருக்கின்றார்களோ? அல்லது வேறு தளத்தில் போய் தங்களது அறிவு மேட்டிமையை (யாரும் கேள்வி கேட்காமல் இருக்கும் வரை) காட்டிக் கொண்டிருக்கிறார்களா?

    ReplyDelete
  2. //படைப்பு கோட்பாடென்பது, கடவுள் தான் அனைத்தையும் படைத்தார் என்று கூறும் கோட்பாடு. Intelligent Design கோட்பாட்டை பொறுத்தவரை, கடவுள் என்ற வார்த்தையை அது உபயோகிக்காது, புத்திசாலித்தனமான சக்தி என்றே குறிப்பிடும்.//

    கடவுள், Intelligent Designer - இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் உள்ள வித்தியாசம் எனக்கு புரிய வில்லை. intelligent design ஐ நம்புபவர்கள் கடவுளை நம்பியே ஆக வேண்டும் என்பதே என்னுடைய கருத்து.

    Intelligent design கோட்பாட்டிலாவது இதற்கு இடையே உள்ள வித்தியாசம் சொல்ல பட்டிருக்கிறதா?

    ReplyDelete
  3. சகோதரர் கார்பன் கூட்டாளி அவர்களுக்கு,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    உங்களுடைய கேள்விக்கு இங்கே பதில் கிடைக்கலாம்.

    http://www.c4id.org.uk/index.php?option=com_content&view=article&id=167&Itemid=31

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  4. சகோதரர் கார்பன் கூட்டாளி அவர்களுக்கு,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    நான் கொடுத்த சுட்டியில் ஐந்தாம் கேள்வியை பார்க்கவும். அது உங்களுடைய கேள்விக்கு நேரடியான பதிலாக இருக்கும் என்று நம்புகின்றேன்.

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  5. ஹா ஹா! இதில் என்ன பெரிய அதிர்ச்சி அடைய வேண்டி இருக்கிறது. ஆனந்தம் தான் கொள்ள வேண்டும்.

    படைப்பு கொள்கையை நம்பி திரிந்த பிரிட்டனில் நூறு சதவிகிதத்தில் இருந்து ஐம்பது சதவிகிதம் என வந்ததே பெரிய வெற்றிதான். பரிணாம கொள்கையை நம்பாத, பரிணாம கொள்கையை நம்பும் இடம் பெயர்ந்தவர்கள் இந்த கருத்தாய்வில் இணைந்து இருக்கலாம். அதன் மூலம் பாதிப்பு இருக்கத்தான் செய்யும். பிரிட்டனில் இன்னும் பல வருடங்களில் நூறு சதவிகிதம் பரிணாமத்தை நம்பினாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை.

    அல்லாவே பேரருளாளன். இப்படி சொல்லும் போது உலகில் பலருக்கு கோபமும், அதே உலகில் உள்ள பலருக்கு மகிழ்ச்சியும் உண்டாகிறது. கோபம் கொள்கிறார்கள் என்பதற்காக அதற்காக அல்லா இல்லை என்றாகிவிடுமா? மகிழ்ச்சி அடைகிறார்கள் என்பதற்காக இல்லாத அல்லா இருப்பதாக கணக்கிட முடியுமா?

    ReplyDelete
  6. சகோதரர் இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    1. //ஹா ஹா! இதில் என்ன பெரிய அதிர்ச்சி அடைய வேண்டி இருக்கிறது. ஆனந்தம் தான் கொள்ள வேண்டும்.//

    உங்களுக்கு உள்ள இந்த எண்ணம் ரிச்சர்ட் டாகின்ஸ் போன்றவர்களுக்கு இல்லையே என்று நினைக்கும்போது வருத்தமாக இருக்கின்றது. அவர் வருத்தமல்லவா படுகின்றார்?.

    2. //படைப்பு கொள்கையை நம்பி திரிந்த பிரிட்டனில் நூறு சதவிகிதத்தில் இருந்து ஐம்பது சதவிகிதம் என வந்ததே பெரிய வெற்றிதான். பரிணாம கொள்கையை நம்பாத, பரிணாம கொள்கையை நம்பும் இடம் பெயர்ந்தவர்கள் இந்த கருத்தாய்வில் இணைந்து இருக்கலாம். அதன் மூலம் பாதிப்பு இருக்கத்தான் செய்யும். பிரிட்டனில் இன்னும் பல வருடங்களில் நூறு சதவிகிதம் பரிணாமத்தை நம்பினாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை//


    டாகின்ஸ் போன்றவர்கள் வருத்தப்படுவதற்கு இது காரணமாக இருக்கலாம். அதாவது, டார்வின் பிறந்த நாட்டில், அவர் மூலமாக பிரபலமான கோட்பாட்டை 150 வருடங்கள் ஆகியும் இன்னும் மக்கள் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கின்றனரே???? என்று அவர் நினைத்திருக்கலாம்.

    இப்படியும் இருக்கலாம், பரிணாமம் என்ற "நிரூபிக்கப்பட்ட" கோட்பாட்டை இன்னும் மக்கள் ஏற்க தயங்குகின்றனரே???? என்ற ஏக்கமாகவும் இருக்கலாம்.

    உங்களுக்கு உள்ள இந்த மகிழ்ச்சி அவர் போன்றவர்களுக்கும் வர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  7. சகோதரர் இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    //படைப்பு கொள்கையை நம்பி திரிந்த பிரிட்டனில் நூறு சதவிகிதத்தில் இருந்து ஐம்பது சதவிகிதம் என வந்ததே பெரிய வெற்றிதான்.//

    உங்களுடைய இந்த கருத்தை மறுபரிசீலனை செய்யவும். படைப்பு கொள்கையை நம்புவதென்பது டார்வினுக்கு முன்பு வரை மக்களுக்கு இருந்திருக்கலாம். அதுவும் 100% இருக்க வாய்ப்பில்லை. டார்வினின் கோட்பாடு முன்வைக்கப்பட்ட பிறகு பலரும் அதை உண்மை என்று நம்பியே வந்திருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் பிரிட்டன், அமெரிக்காவை போல இறைநம்பிக்கையாளர்களை அதிகம் கொண்டுள்ள நாடும் அல்ல.

    ஆக, நான் என்ன நினைக்கிறேன் என்றால் பரிணாமத்தை நம்பி வந்த மக்கள் இப்போது தடம் புரள ஆரம்பித்திருகின்றனரே என்ற எண்ணம்தான் டாகின்ஸ் போன்றவர்களை வருத்தப்பட செய்திருக்கும்.

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  8. அஸ்ஸலாமு அலைக்கும், இதில் அழைக்கும் என்பதே சரியான வார்த்தை என கருதுகிறேன். அலைக்கும் என்றால் அலைகழிக்கும் என பொருள்படும். விளக்கம் தந்தால் மகிழ்வேன்.

    தங்கள் கருத்தினை ஏற்று கொள்கிறேன் சகோதரரே. உங்கள் பார்வையின் கோணத்திலும் இவ்விசயத்தை நோக்கலாம். நீங்கள் குறிப்பிட்டது போல நூறு சதவிகிதம் என்பது மிகைபடுத்தப்பட்டு சொன்ன விசயம் தான்.

    ReplyDelete
  9. 87% ப்ரிட்டன் மக்கள் க்ரிஸ்டியன்ஸ். எல்லாரும் க்ரிஸ்டியன்ஸ் ஆகிடலாம். 88% ப்ரிட்டன் மக்கள் வெள்ளையர்கள். வெள்ளை மக்கள் சிறந்தவர்கள். 100% ப்ரிட்டன் மக்கள் இங்க்லீஷ் பேசுவார்கல். இங்க்லீஷே சிரந்த மொழி.

    ReplyDelete
  10. அல்ஹம்துலில்லாஹ், அதிக சிரத்தை எடுத்து தமிழ்ப்படுத்தி, அழகாக தொகுத்துள்ளீர்கள். அல்லாஹ் உங்களின் இந்த ஆக்கத்தை நம் உம்மத்தினர்க்கு பயனுள்ளதாக ஆக்கி வைப்பானாக. தங்களின் முயற்சிக்கு ஈடு இணையற்ற கூலியை தந்தருள்வானாக.

    கடைசியில் தந்திருக்கும் Referenceஇல் லின்க்கையும் தந்திருந்தால் மேலும் படிக்க விருப்பமுள்ளவர்களுக்கு, அல்லது ஆங்கிலத்திலேயே அதை படிக்க விரும்புபவர்களுக்கு / தமிழறிய நண்பர்களுக்கு அனுப்ப உதவியாக இருக்கும் பாய். ஜஸாகுமுல்லாஹு க்ஹைர்.

    ReplyDelete
  11. சகோதரி அன்னு அவர்களுக்கு,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    தங்களுடைய ஆலோசனைப்படி லிங்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளன...jazakkallaahu khair...

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  12. //87% ப்ரிட்டன் மக்கள் க்ரிஸ்டியன்ஸ். எல்லாரும் க்ரிஸ்டியன்ஸ் ஆகிடலாம். 88% ப்ரிட்டன் மக்கள் வெள்ளையர்கள். வெள்ளை மக்கள் சிறந்தவர்கள். 100% ப்ரிட்டன் மக்கள் இங்க்லீஷ் பேசுவார்கல். இங்க்லீஷே சிரந்த மொழி.//

    சரிதான், 100% ஆங்கிலம் பேசினால் அதில் ஒரு அதிசயம் இல்லை, ஏனெனில் அது ஒரு ஆங்கில நாடு, அதே 50% மாக மாறினால் அது கவனிக்க பட வேண்டிய விஷயம் அல்லவா? புரிந்து கொள்வீர்கள் என நினைகிறேன்.

    ReplyDelete
  13. சகோதரர் அனானி,

    சலாம்,

    நான் ஏற்கனவே "Evolution Theory - மக்கள் என்ன சொல்கின்றார்கள்" பதிவில் சொன்னதுதான்...அதாவது, இத்தனை மக்கள் எதிர்க்கின்றார்கள் என்பதால், பரிணாமம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அது பொய்யென்று ஆகிவிடாது. மக்களிடம் விஷயம் சரியாக போய் சேரவில்லை என்று தான் அர்த்தம் கொள்ள வேண்டிவரும். அதுபோல, பரிணாமத்தை நம்புபவர்களும், எதனால் மக்கள் இப்படி சொல்கின்றனர் என்று ஆராய்ந்து இந்த பிரச்னையை நிவர்த்தி செய்ய முன்வரவேண்டும்.

    உலகம் தட்டை இல்லை என்று சொன்ன போது அதனை ஏற்காத மக்கள் பின்னாளில் அதனை ஏற்றுக்கொண்டனர். அதுபோல, பரிணாமத்தையும் மக்கள் ஏற்றுகொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருங்கள். டார்வின் அவரது கோட்பாட்டை முன்மொழிந்து 150 ஆண்டுகள் தானே ஆகின்றன....இன்னும் காலங்கள் இருக்கின்றன...பொறுமையோடு இருங்கள்.

    பலத்த ஆதரவுடன் இருந்த பரிணாமம் இப்போது ஆதரவு இழந்து சென்று கொண்டிருப்பதற்கு என்ன காரணம் என்றும் சற்று நிதானித்து யோசித்து பாருங்கள்.

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  14. நம் அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் ஏற்பட்டுமாக!
    சகோதரர் ஆஷிக் உங்களிடமிருந்து பரிணாமம் குறித்து மீண்டும் ஒரு அருமையான பதிவு! மாஷா அல்லாஹ்.,
    சகோதரர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு
    //அஸ்ஸலாமு அலைக்கும், இதில் அழைக்கும் என்பதே சரியான வார்த்தை என கருதுகிறேன். அலைக்கும் என்றால் அலைகழிக்கும் என பொருள்படும். விளக்கம் தந்தால் மகிழ்வேன்//
    அஸ்ஸலாமு அலைக்கும் என்பதே சரி., ஏனெனில் இவ்வார்த்தை அரபு மொழி மூலத்தின் நேரடி தமிழ் வார்த்தையே தவிர மொழிப்பெயர்ப்பல்ல (என் பின்னூட்டத்தின் தொடக்க வாக்கியமே இதன் நேரடி தமிழ் மொழிப்பெயர்ப்பாகும்)
    எனவே தமிழில் அலைக்கும் என்றோ அழைக்கும் என்றோ பயன்படுத்துவதால் பொருளில் எந்த மாற்றமும் ஏற்படாது. சரி., நீங்கள் பரிணாமம் குறித்து என்ன சொல்ல வருகிறீர்கள்., ஏனெனில் பரிணாமத்தை ஆதாரித்தால் மீண்டும் உங்கள் எண்ணத்தை பரிசிலனை செய்யுங்கள். அல்லது உண்மையேன்று வாதிட்டால் சகோதரின் பரிணாமம் குறித்த ஏனைய கேள்விக்கு பதில் தர முன்வாருங்கள்.

    ReplyDelete
  15. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    மீண்டும் பரிணாமத்திற்கு எதிரான ஒரு நல்ல தரமான முயற்சி..!

    intelligent design theory-யும் creation theory-யும் கிட்டத்தட்ட ஒன்றுதான். ஒரே வித்தியாசம்: அந்த இண்டேல்லிஜெண்டுக்கு பெயர் இறைவன். இது நாத்திகவாதிகள், 'ஆத்திகம் உண்மைதான்' என்று வெளிப்படையாக ஒத்துக்கொள்ளுவதன் தயக்கத்தின் வெளிப்பாடுதான்.

    இக்கோட்பாடு ஆத்திகத்தின் முதல்படி. நாத்திகத்தின் கடைசிப்படி.

    நாத்திக முகமூடி போட்ட போலி மனிதர்கள் அவர்கள்.இன்ஷாஅல்லாஹ் ஒருநாள் நூறு சதம் உண்மையை ஒத்துக்கொள்ளுவார்கள்.

    ReplyDelete
  16. சகோதரர் முஹம்மத் ஆஷிக்,

    வ அலைக்கும் சலாம் (வரஹ்)...

    //நாத்திக முகமூடி போட்ட போலி மனிதர்கள் அவர்கள்//

    இவர்கள் தங்களது கோட்பாட்டை "agnostic" என்று குறிப்பிடுகின்றார்கள்.

    ***Unlike creationism, the scientific theory of intelligent design is agnostic regarding the source of design ...***

    அதாவது, இந்த பிரபஞ்சம் மற்றும் உயிரினங்களின் தோன்றலை Intelligent Causeசை வைத்தே விளக்கமுடியும். ஆனால் அதை கடவுள் என்றெல்லாம் எங்களால் சொல்ல முடியாது என்கின்றார்கள் இவர்கள்...ம்ம்ம்ம்ம்

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  17. //G u l a m said...
    நம் அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் ஏற்பட்டுமாக!

    அஸ்ஸலாமு அலைக்கும் என்பதே சரி., ஏனெனில் இவ்வார்த்தை அரபு மொழி மூலத்தின் நேரடி தமிழ் வார்த்தையே தவிர மொழிப்பெயர்ப்பல்ல (என் பின்னூட்டத்தின் தொடக்க வாக்கியமே இதன் நேரடி தமிழ் மொழிப்பெயர்ப்பாகும்)
    எனவே தமிழில் அலைக்கும் என்றோ அழைக்கும் என்றோ பயன்படுத்துவதால் பொருளில் எந்த மாற்றமும் ஏற்படாது. சரி., நீங்கள் பரிணாமம் குறித்து என்ன சொல்ல வருகிறீர்கள்., ஏனெனில் பரிணாமத்தை ஆதாரித்தால் மீண்டும் உங்கள் எண்ணத்தை பரிசிலனை செய்யுங்கள். அல்லது உண்மையேன்று வாதிட்டால் சகோதரின் பரிணாமம் குறித்த ஏனைய கேள்விக்கு பதில் தர முன்வாருங்கள்//

    சகோதரர் குலாம் அவர்களுக்கு, விளக்கத்திற்கு மிக்க நன்றி.

    தனியாக இதுகுறித்து எழுதுகிறேன்.

    ReplyDelete
  18. //50% பிரிட்டன் மக்கள் பரிணாமத்தை நம்பவில்லை...//

    SO WHAT ...?

    ReplyDelete
  19. தருமி ஐயா,

    சலாம்...

    //SO WHAT ...?//

    It is a news, just like what "the guardian" and "the daily telegraph" published ...

    any comments?

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  20. //50% பிரிட்டன் மக்கள் பரிணாமத்தை நம்பவில்லை...//

    SO WHAT?

    //Islam: 1,570 million 22% in the world // so 78% dont believe Islam.

    SO WHAT?

    ReplyDelete
  21. ஷேக் தாவூத்,

    //நமது உள்ளூர் பரிணாமவியலாலர்களிட்த்தில் நீங்கள் முன்வைத்த கேள்விகள் கூட பதில்கள் இல்லாமல் பரணில் தூங்கி கொண்டிருக்கின்றன.//

    a good bugle!! எப்பவுமே இப்படித்தானா ஷேக் தாவூத்?

    உங்கள் கேள்விக்குப் பதில் சொல்லி நானும் கேள்வி கேட்டு 'அங்கன' காத்திருக்கிறேன். நீங்க இங்க என்னென்னமோ சொல்லிக்கிட்டு இருக்கீங்க!!

    ReplyDelete
  22. தருமி ஐயா,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    ***********************
    //50% பிரிட்டன் மக்கள் பரிணாமத்தை நம்பவில்லை...//

    SO WHAT?

    //Islam: 1,570 million 22% in the world // so 78% dont believe Islam.

    SO WHAT?
    ***********************


    ஐயா நீங்கள் நான் முன்னாடி சொன்னதை படித்தீர்களா என்று தெரியாததால் மறுபடியும் உங்களுக்காக,

    நான் ஏற்கனவே "Evolution Theory - மக்கள் என்ன சொல்கின்றார்கள்" பதிவில் சொன்னதுதான்...அதாவது, இத்தனை மக்கள் எதிர்க்கின்றார்கள் என்பதால், பரிணாமம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அது பொய்யென்று ஆகிவிடாது. மக்களிடம் விஷயம் சரியாக போய் சேரவில்லை என்று தான் அர்த்தம் கொள்ள வேண்டிவரும். அதுபோல, பரிணாமத்தை நம்புபவர்களும், எதனால் மக்கள் இப்படி சொல்கின்றனர் என்று ஆராய்ந்து இந்த பிரச்சனையை நிவர்த்தி செய்ய முன்வரவேண்டும்.

    புரியுதா?

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  23. தருமி ஐயா,

    சலாம்,

    //a good bugle!! எப்பவுமே இப்படித்தானா ஷேக் தாவூத்?
    உங்கள் கேள்விக்குப் பதில் சொல்லி நானும் கேள்வி கேட்டு 'அங்கன' காத்திருக்கிறேன். நீங்க இங்க என்னென்னமோ சொல்லிக்கிட்டு இருக்கீங்க!!//


    அவசரப்படாதீர்கள் ஐயா. ஸ்ரீ எப்போது பழைய கமெண்ட்ச allow செய்தார் என்று தெரியாது. நான் தமிழ்மணத்தில் மூன்று மணி நேரத்திற்கு முன்பு தான் பார்த்து தெரிந்து கொண்டேன். ஷேக் தாவுத் அவர்களிடமும் தெரிவித்து விட்டேன். என்னுடைய comment சையும் சேர்த்து விட்டேன். ஸ்ரீ allow பண்ணுவதற்காக waiting...

    அதனால் அவசரம் வேண்டாம் ஐயா..நாளை அலுவலகம் வந்து ஷேக் கமெண்ட் போடுவார்...இன்ஷா அல்லாஹ்...பொறுத்திருங்கள்

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  24. //உங்கள் கேள்விக்குப் பதில் சொல்லி நானும் கேள்வி கேட்டு 'அங்கன' காத்திருக்கிறேன். நீங்க இங்க என்னென்னமோ சொல்லிக்கிட்டு இருக்கீங்க!! //

    பரிணாமம் என்பது தெளிவாக எழுதப் பட்ட கதை என்பதை அழுத்தமாக பல வழிகளில் விளக்கி கொண்டு இருக்கிறோம், தங்களின் சரியான ஆதாரத்தையும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறோம்.

    ReplyDelete
  25. தருமி ஐயா,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    உங்களுடைய "so what?" என்ற கேள்வியை ரிச்சர்ட் டாகின்ஸ் அவர்களிடம் கேட்டால் இன்னும் தெளிவான பதில் கிடைக்கும் ஐயா.

    ஏனென்றால் அவர் தான் இந்த ஆய்வு முடிவுகளை கேட்டு வருத்தப்பட்டிருக்கின்றார்...

    "Richard Dawkins, the evolutionary biologist and author of The God Delusion, said the findings revealed a worrying level of scientific ignorance among Britons." --- The Daily Telegraph.

    "51% பிரிட்டன் மக்கள் பரிணாமத்தை நம்பவில்லை...அதனால் என்ன? (SO WHAT?)" அப்பிடின்னு ரிச்சர்ட் டாகின்ஸ்சிடமும் ஒரு வார்த்தை கேட்டு விடுங்கள் ஐயா...

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  26. //உலகம் தட்டை இல்லை என்று சொன்ன போது அதனை ஏற்காத மக்கள் பின்னாளில் அதனை ஏற்றுக்கொண்டனர்.//

    ஒன்றல்ல இரண்டல்ல அனேக இடங்களில் பூமியின் வடிவத்தை ஒரே மாதிரியாக வர்ணிக்கிறது குரான். 2:22; 13:3; 15:19; 20:53; 43:10; 50:7; 51:48; 55:10; 71:19; 78:6; 79:30; 84:3; 88:20; 91:6 குரானில் வரும் இந்த வசனங்களெல்லாம் ஒரே மாதிரியாக பூமியை தட்டை என பொருள் கொள்ளும்படி பூமியை விரித்திருப்பதாக கூறுகிறது.

    பூமியை விரித்து அதுவும் பேப்பர் வெயிட் மாதிரி மலையை வத்து இருப்பதாக நம்புவர்கள் கூட ஏற்றுக் கொண்டால் மகிழ்ச்சிதான்.

    முகமது அவரது கோட்பாட்டை முன்மொழிந்து 1400 ஆண்டுகள் தானே ஆகின்றன....இன்னும் காலங்கள் இருக்கின்றன...பொறுமையோடு இருங்கள்.

    ReplyDelete
  27. சகோதரர் அனானி,

    சலாம்....

    //பூமியை தட்டை என பொருள் கொள்ளும்படி//

    ஹி ஹி ஹி ....அவரவர் இஷ்ட படி கற்பனை செய்து கொள்ள அவரவர்க்கு உரிமை உண்டு....


    //முகமது அவரது கோட்பாட்டை முன்மொழிந்து 1400 ஆண்டுகள் தானே ஆகின்றன....இன்னும் காலங்கள் இருக்கின்றன...பொறுமையோடு இருங்கள்//


    பொறுமையோடு எங்கள் வேலையை செய்து கொண்டு தான் இருக்கின்றோம். இஸ்லாம் முன்மொழியப்பட்ட காலங்களில் இருந்து அதனை பின்பற்றுபவர்கள் குறைந்ததில்லை. அதிகமாகிக்கொண்டு தான் இருக்கின்றனர். ஆனால் பரிணாமம்?

    பரிணாமம் என்னும் "அறிவியலோடு(??)", இஸ்லாம் என்னும் மார்க்கத்தை compare பண்ணும் உங்களை நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கின்றது.

    ஒருவேளை குரானை அறிவியல் நூலாகவும் ஏற்றுக்கொண்டீர்களா அல்லது பரிணாமம் மதமாகி விட்டதா?

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  28. //அவர் தான் இந்த ஆய்வு முடிவுகளை கேட்டு வருத்தப்பட்டிருக்கின்றார்...//

    வருத்தப்படுகிறாரே என்று வருத்தப்படும் நீங்களே சொன்னால்தான் சரி .. நீங்களே சொல்லிவிடுங்கள்.

    ReplyDelete
  29. //பரிணாமம் என்னும் "அறிவியலோடு(??)", இஸ்லாம் என்னும் மார்க்கத்தை compare பண்ணும் உங்களை நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கின்றது. //

    ஆக, பரிணாமம் அறிவியல் இல்லை. அது ஒரு புராணம் என்கிறீர்களா?

    பரிணாம அறிவியலையும் இஸ்லாம் என்ற புராணத்தையும் compare பண்ணும் உங்களை நினைத்தால் எனக்கு நிரம்பவே ஆச்சர்யமாக இருக்கின்றது.

    ReplyDelete
  30. அஸ்ஸலாமு அலைக்கும்
    அன்பின் சகோதரர்களே,
    ////தருமி said...
    ஷேக் தாவூத்,
    //நமது உள்ளூர் பரிணாமவியலாலர்களிட்த்தில் நீங்கள் முன்வைத்த கேள்விகள் கூட பதில்கள் இல்லாமல் பரணில் தூங்கி கொண்டிருக்கின்றன.//
    a good bugle!! எப்பவுமே இப்படித்தானா ஷேக் தாவூத்?
    உங்கள் கேள்விக்குப் பதில் சொல்லி நானும் கேள்வி கேட்டு 'அங்கன' காத்திருக்கிறேன். நீங்க இங்க என்னென்னமோ சொல்லிக்கிட்டு இருக்கீங்க!!////
    யார் விவாதத்தை விட்டு விலகி ஓடியவர்கள் என்பதை இந்த சுட்டியில் சென்று கருத்துக்களை படித்து மற்றவர்களே முடிவு செய்யட்டும்.
    http://ethirkkural.blogspot.com/2010/07/evolution-stheory-harry-potter-stories_19.html

    எப்போதும் போல பேசுபொருளை விட்டே விலகி இந்த பதிவிலும் கருத்து சொல்லுகின்றீர்களே அய்யா? ஒருவேளை பரிணாமவியலை நிருபிக்க தான் இப்படி "தாவித்தாவி" பேசுகிறீர்களா?

    ReplyDelete
  31. @ தருமி ஐயா,

    சலாம்...

    // வருத்தப்படும் நீங்களே சொன்னால்தான்//

    அவர் வருத்தப்படுரார்னு நான் ஏன் ஐயா வருத்தப்படனும்....இல்ல நான் வருத்தப்படுரேன்னு எங்காவது சொல்லியிருக்கேனா...இப்படி சம்பந்தமில்லாம பேசி படிப்பவர்களது நேரத்தை வீணாக்க வேண்டாமே...

    //நீங்களே சொல்லிவிடுங்கள்//

    அவர் ஏன் வருத்தப்படுரார்னு பதிவிலேயே சொல்லிட்டேன் ஐயா. பதிவ படிச்சு பாருங்க. அதுமட்டுமல்லாம உங்களுக்கு சொன்ன பதில்லையும் சொல்லிட்டேன் ஐயா. இன்னும் தெளிவா வேணும்னா அவர் கிட்டயே கேட்டு தெரிஞ்சுக்குங்க....

    ReplyDelete
  32. @தருமி ஐயா,

    சலாம்,

    //ஆக, பரிணாமம் அறிவியல் இல்லை. அது ஒரு புராணம் என்கிறீர்களா?//

    ஏழாம் மாதம் நடந்த உரையாடல் என்பதால் ஐயா மறந்திருக்கலாம். பரிணாமம் ஏன் அறிவியலில்லை என்பதற்கு காரணம் சொல்லி இருக்கேன். மறுபடியும் போய் பார்த்துக்குங்க ஐயா....

    http://ethirkkural.blogspot.com/2010/07/evolution-stheory-harry-potter-stories_19.html

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  33. நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!
    தருமி ஐயா அவர்களுக்கு
    //பரிணாம அறிவியலையும் இஸ்லாம் என்ற புராணத்தையும் compare பண்ணும் உங்களை நினைத்தால் எனக்கு நிரம்பவே ஆச்சர்யமாக இருக்கின்றது. //
    இஸ்லாம் - தனது கோட்பாடுகளையும், கொள்கைகளையும் தெளிவாக வரையறுத்து அதன் பின்னரே மக்களை கடைப்பிடிக்க சொல்கிறது. அதன் அடிப்படையில் இஸ்லாமியர்கள் அதனை ஏற்று செயல்படுகிறார்கள்.
    ஆனால் அறிவியல் ரிதியாக பரிணாமத்தை உணமையென(?) உங்களை போன்றோர்கள் ஏற்று அதன் அடிப்படையில் செயல்படுவதாக சொல்கிறீர்கள் -ஆக கிடைத்த விளக்கத்தின் படி செயலபடும் எங்களைப்போல் அல்லாமல் விளக்கம் கிடைத்தால் மட்டுமே செயல்படுத்தும் உங்களைப்போன்ற பரிணாமவாதிகள் கூற்று உண்மையென்றால் நாத்திகர்களின் எண்ணிக்கை அல்லவா உலக அளவில் அதிகரிக்கவேண்டும்... மாறாக இன்று உலக அளவில் அதிகமானோரை ஈற்பது இஸ்லாமா? நாத்திகமா...? இதை அடிப்படையாக கொண்டே சகோதரர் பிரிட்டன் மக்களின் மன நிலையே விளக்கியுள்ளார்...
    ஐயாவிற்கு சில வினாக்கள்
    கடவுள் வேண்டாம் எனபதை நானும் ஏற்கிறேன.ஆனால் நீங்கள் மறுக்கும் அத்தகைய கடவுள் எப்படி பட்டவர் என்பதை எனக்கு விளக்கிவீர்களா? அஃது மறுக்கும் அந்த கடவுளுக்கு நீங்கள் வைத்திருக்கும் வரையறை என்ன?

    ReplyDelete
  34. //ஆக, பரிணாமம் அறிவியல் இல்லை. அது ஒரு புராணம் என்கிறீர்களா?//

    அது புராணம் அல்ல. அது நன்றாக யோசித்து எழுதப்பட்ட கதை.அதன் ஒவ்வொரு தூண்களாக தவிடு போடி ஆகின்றன, அறிவியலின் தாக்கத்தில் அக்கொள்கை வேறோடு அழியும் என்பதில் ஐயமில்லை.

    ReplyDelete
  35. //பரிணாமம் ஏன் அறிவியலில்லை என்பதற்கு காரணம் சொல்லி இருக்கேன்.//

    அய்யா, நீங்கள் என்ன ஜிப்ரேலா? நீங்கள் சொல்லிட்டீங்கன்னா பரிணாமம் அறிவியல் இல்லாமல் ஆகிவிடுமா?

    நீங்கள் சொன்னதில் பரிணாமம் என்பதற்குப் பதில் குரான் என்று போட்டால் மொத்த பொருத்தம்.

    பரிணாமம் பொய்யென நிரூபிக்க சான்றுகள் கொடுக்கிறீர்கள்; நபியிடம் அல்லா கட்டளை கொடுத்தாரென்பதற்கு ஆதாரம் கொடுக்கக் கேட்டேனே.
    காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  36. தருமி ஐயா,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    1. //அய்யா, நீங்கள் என்ன ஜிப்ரேலா? நீங்கள் சொல்லிட்டீங்கன்னா பரிணாமம் அறிவியல் இல்லாமல் ஆகிவிடுமா?//

    அப்படியெல்லாம் இல்லை ஐயா. நீங்களே scientific methodயை அளவுக்கோலா வைத்து ட்ரை பண்ணி பாருங்கையா. பரிணாமம் அறிவியலா இல்லை அற்புத கதைகளா என்று புரியும்.

    இதே கேள்விய நானும் திரும்ப கேட்கலாம் இல்லையா ஐயா. "நீங்கள் சொல்லிட்டீங்கன்னா குரான் இறைவேதம் என்றில்லாமல் ஆகி விடுமா என்ன?"


    2. //நீங்கள் சொன்னதில் பரிணாமம் என்பதற்குப் பதில் குரான் என்று போட்டால் மொத்த பொருத்தம்.//

    ரிலாக்ஸ் ப்ளீஸ்...


    3. //பரிணாமம் பொய்யென நிரூபிக்க சான்றுகள் கொடுக்கிறீர்கள்; நபியிடம் அல்லா கட்டளை கொடுத்தாரென்பதற்கு ஆதாரம் கொடுக்கக் கேட்டேனே. காத்திருக்கிறேன்"//

    அதை ஸ்ரீ அவர்களிடம் தான் கேட்க வேண்டும். நீங்கள் அங்கே தானே கேட்டீர்கள்?, அங்கே பதில் சொல்லி கமெண்ட் allow பண்ணுவதற்காக waiting. உங்களைப் போலவே நானும் காத்திருகின்றேன், ஸ்ரீ allow பண்ணுவதற்காக.

    அது சரி, உங்களுக்கு கடவுள் இருக்கின்றாரா? இல்லையா என்பது இப்போது பிரச்சனை இல்லை போல. இறைவனை ஒப்புக்கொண்டீர்கள் போல. குரானை இறைவன் நபிக்கு கொடுத்தானா எனபது தான் இப்போது உங்கள் பிரச்சனை போல. இப்படித்தான் மற்ற மார்க்க மக்கள் கேட்பார்கள். அவர்களுக்கு இறைவன் இருக்கின்றானா இல்லையா என்பதில் பிரச்சனை இல்லை. குரான் இறைவேதமா, அதை இறைவன் கொடுத்ததற்கு என்ன ஆதாரம் என்று அவர்கள் கேட்பார்கள். இப்போது நீங்களும் அந்த நிலைக்கு வந்து விட்டீர்கள் போல. மகிழ்ச்சி.

    ஐயா , முதலில் கடவுள் இருக்கின்றாரா? இல்லையா? எனபதற்கு ஒரு முடிவு சொல்லுங்கள். அப்புறம் அந்த கடவுள் குரானை நபிக்கு கொடுத்தார் என்பதற்கு என்ன ஆதாரம் என்று பார்ப்போம். அது எளிதான பதில் தான்.

    நீங்கள் கேட்கும் கேள்வி இறை நம்பிக்கையாளர்களுக்கு தான் வர வேண்டும். இறைவனே இல்லை என்று சொல்லும் உங்களுக்கு வரலாமா? அதனால் முதலில் இறைவன் இருக்கின்றானா இல்லையா என்பதற்கு முற்றுபுள்ளி வையுங்கள்.

    அது சரி, அது என்ன எப்போது பரிணாமத்தை பற்றி பேச்சு வந்தாலும் அது பற்றி பதில் சொல்லாமல் குரான், இஸ்லாம் பக்கம் திரும்பி விடுகின்றீர்கள். இஸ்லாம் தவறு என்று நீங்கள் நிரூபித்து விட்டால் மட்டும் பரிணாமம் உண்மையென்று ஆகி விடுமா என்ன?

    பதிவின் பேசுபொருளை தாண்டி தான் எப்போதும் யோசிப்பீங்களோ?

    அதனால் ஐயா, நம்முடைய உரையாடல் இங்கே பாதியிலேயே நிற்கின்றது. அதற்கு முதலில் பதில் சொல்லுங்கள். இந்த பதிவை திசை திருப்பும் செயலெல்லாம் வேண்டாமே...ப்ளீஸ்.

    http://ethirkkural.blogspot.com/2010/07/evolution-stheory-harry-potter-stories_19.html

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  37. @ தருமி ஐயா,

    சலாம்.

    அதுபோல ஐயா, இந்த பதிவின் மையப்பொருள் "முக்கிய நாடுகளில் எடுக்கப்பட்ட பரிணாமம் குறித்த ஆய்வு முடிவுகள்".

    இது குறித்து பேசுங்கய்யா. உங்க கருத்த சொல்லுங்க. அத விட்டுட்டு மையப்போருளை திசை திருப்பி வாசகர்களின் நேரத்தை வீணாக்க வேண்டாம் ஐயா...

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் a

    ReplyDelete
  38. //வாசகர்களின் நேரத்தை வீணாக்க வேண்டாம் ஐயா...//
    நிரம்பவே கவலை.

    பரிணாமம் அறிவியல் என்பதை நிரூபிக்க என்ன காரணங்கள், மேலும் சில கேள்விகள் - on fossils and extinction - கேட்டாலும் பதிலில்லை. இந்த நிலையில் நீங்கள் பரிணாமத்தை புராணம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் - பல அறிவியல் சான்றுகள் இருந்த போதும். ஏற்கெனவே விந்து விவாதத்தில் உங்கள் அனைவரின் 'உண்மைத்தத்துவம்' மெய் சிலிர்க்க வைத்தது. முன்பே சொன்னது போல் உங்களிடம் பேசுவது மரத்தில் மோதிக் கொள்வது போல் - சான்றுகள் கொடுத்தாலும் எந்த அறிவியலையும் ஏற்றுக் கொள்ள தயாரில்லை. இனி உங்களிடம் அறிவியல் எதற்கு என்பதால், இனி குரானுக்கு சான்று கேட்கிறேன். அதற்கும் வரவில்லை நீங்கள். ஒரே புராணம் - குரான் கடவுளால் தரப்பட்டது. அதனால் அதில் தவறேதுமில்லை. அதனால்தான் குரான் பற்றிக் கேட்டேன். ஆனால் உங்களுக்கு காலம் விரையமாவது பற்றிக் கவலை!

    ReplyDelete
  39. 'தருமி' என்ற பெயரில் பின்னூட்டமிடும் ஐயா அவர்களே...

    தாங்கள்தான் தருமி என்பதற்கு என்ன ஆதாரம் வைத்துள்ளீர்கள்? நீங்கள்தான் தருமி என்று எந்த ஆதாரத்தை வைத்து நான் நம்புவது?

    தயவு செய்து விளக்குவீர்கள் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  40. @ தருமி ஐயா,

    சலாம்.

    //பரிணாமம் அறிவியல் என்பதை நிரூபிக்க என்ன காரணங்கள், மேலும் சில கேள்விகள் - on fossils and extinction - கேட்டாலும் பதிலில்லை//

    யார் பதில் சொல்லவில்லை என்று நான் முந்தைய பதிலில் கொடுத்த லின்க்கை பார்த்தால் தெரியும் .

    //இந்த நிலையில் நீங்கள் பரிணாமத்தை புராணம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்//

    அற்புத கதைகள் என்று தான் சொல்லிக்கொண்டு இருக்கின்றோம். வெறும் பேச்சளவில் இல்லாமல் தெளிவான ஆதாரங்களையும் எடுத்து வைத்துள்ளோம். இனி அந்த ஆதாரங்களை மறுக்க வேண்டியது பரிணாம ஆதரவாளர்களின் வேலை.

    http://ethirkkural.blogspot.com/search/label/Evolution%20Theory

    //பல அறிவியல் சான்றுகள் இருந்த போதும்.//

    நல்ல தமாஷ்...

    //ஏற்கெனவே விந்து விவாதத்தில் உங்கள் அனைவரின் 'உண்மைத்தத்துவம்' மெய் சிலிர்க்க வைத்தது.//

    நன்றி...

    //முன்பே சொன்னது போல் உங்களிடம் பேசுவது மரத்தில் மோதிக் கொள்வது போல்//

    அப்படியா? நான் திரும்ப அதே போன்றதொரு பதிலை உங்களை நோக்கி சொல்ல மாட்டேன் ஐயா...எங்களுடைய இந்த முயற்சி நல்லபடியாக மக்களை சென்று அடைவதாக எனக்கு தோன்றுகின்றது. அல்ஹம்துலில்லாஹ். அதனால் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருப்போம், பொறுமையாக.

    //சான்றுகள் கொடுத்தாலும் எந்த அறிவியலையும் ஏற்றுக் கொள்ள தயாரில்லை//

    அப்படியெல்லாம் பரிணாமத்திற்கு ஒன்றுமில்லையே? நீங்கள் வேறு ஏதோ நிரூபிக்கப்பட்ட அறிவியல் கோட்பாடு குறித்து பேசுகின்றீர்கள் என்று நினைக்கின்றேன்...

    //இனி உங்களிடம் அறிவியல் எதற்கு என்பதால், இனி குரானுக்கு சான்று கேட்கிறேன். அதற்கும் வரவில்லை நீங்கள். ஒரே புராணம் - குரான் கடவுளால் தரப்பட்டது. அதனால் அதில் தவறேதுமில்லை. அதனால்தான் குரான் பற்றிக் கேட்டேன்//

    முந்தைய பதிலை பார்க்கவும்.

    //ஆனால் உங்களுக்கு காலம் விரையமாவது பற்றிக் கவலை! //

    எல்லோருக்கும் இந்த கவலை இருக்கின்றது.

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  41. //பரிணாமம் அறிவியல் என்பதை நிரூபிக்க என்ன காரணங்கள், மேலும் சில கேள்விகள் - on fossils and extinction - கேட்டாலும் பதிலில்லை.//

    இதை பற்றி என்ன கேட்கிறீர்கள் என தெரிந்து கொள்ளலாமா?

    ReplyDelete
  42. நம் அனைவரின் மீதும் சமாதானம் நிலவட்டுமாக!
    தருமி ஐயா., கடவுளை மறுப்பதற்காகவே உங்களை போன்றோர் (அறிவியலார் என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளுங்கள் )பரிணாமத்தை கையிலெடுத்திருக்கிறார்கள்.மாறாக பரிணாமத்தை பொய்பிக்க நாங்கள் கடவுள் கொள்கைகளை கையில் எடுக்கவில்லை.ஆக எதை மறுப்பதற்கு விழைந்தீர்களோ அதற்குரிய ஆதார வாதத்தை தான் முதலில் எடுத்து வைக்க வேண்டும். இங்கு பேசுபொருள் பரிணாமம் குறித்தே., கடவுளை மறுக்கும் பரிணாம சான்றுகளை எடுத்து வையுங்கள் குறைந்த பட்சம் கடவுளை மறுக்க தர்க்கரீதியான பதிலை அல்லது கேள்விகளையாவது சொல்லுங்கள் அல்லது பரிணாமம் குறித்த எந்த கேள்விக்கும் பதில் தர தயாராக இருக்கிறேன் என்ற ஒற்றை சொல்லை இங்கு பதிவு செய்யுங்கள்.அக்கேள்விகள் சகோதரின் பதிவு முழுக்க அங்காங்கே கால்கடுக்க பதிலுக்காக காத்திருக்கிறது (உங்களுக்கு தேட சிரமமாக இருந்தால் அதை தொகுத்து தருகிறேன்-இன்ஷா அல்லாஹ்)
    அஃதில்லையென்றால் இஸ்லாம் மற்றும் குர்-ஆன் குறித்தும் பேசுவதாக இருந்தால் கடவுள் இருக்கிறாரா? இல்லையா என்ற தலைப்புக்குள் வாருங்கள் இரண்டில் ஒன்றை உறுதி செய்யுங்கள் பின் விவாதம் புரியுங்கள்.ஏற்கனவே இட்ட பின்னூட்ட கேள்விக்கு பதிலையும் தருவீர்கள் என நம்புகிறேன்

    ReplyDelete
  43. //எங்களுடைய இந்த முயற்சி நல்லபடியாக மக்களை சென்று அடைவதாக எனக்கு தோன்றுகின்றது. //

    எனக்கும் அந்த எண்ணம் நிச்சயமாக உண்டு. அதற்காகவே உங்களுக்கு மிக்க நன்றி.

    ////இனி உங்களிடம் அறிவியல் எதற்கு என்பதால், இனி குரானுக்கு சான்று கேட்கிறேன். அதற்கும் வரவில்லை நீங்கள். //

    முந்தைய பதிலை பார்க்கவும். //

    பார்த்தேன். என்ன அறிவு பூர்வமான பதில்!

    பதில் கூற முடியாதபோது வேறென்னதான் செய்ய முடியும்.

    தாங்க முடியவில்லை.

    தொடருங்கள் .......

    ReplyDelete
  44. @தருமி ஐயா...

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    //எனக்கும் அந்த எண்ணம் நிச்சயமாக உண்டு. அதற்காகவே உங்களுக்கு மிக்க நன்றி.//

    அல்ஹம்துலில்லாஹ்...எல்லா புகழும் இறைவனிற்கே...

    //பார்த்தேன். என்ன அறிவு பூர்வமான பதில்!//

    நன்றி ஐயா...

    //பதில் கூற முடியாதபோது வேறென்னதான் செய்ய முடியும்.//

    ஆமாம் ஐயா....அதனால் சீக்கிரம் பதில் கூற தொடங்கி விடுங்கள். பரிணாமம் குறித்த நிறைய கேள்விகள் அப்படியே கிடக்கின்றன.


    குரான் இறைவேதமா என்று ஆதாரம் கேட்கக்கூடிய நீங்கள், ஒரே ஒரு முறை தயவுக்கூர்ந்து அதனை முழுமையாக, திறந்த மனதுடன், படித்து ஆராய்ந்து பார்க்க முன் வாருங்கள் ஐயா. இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.

    ஒருவர் பரிணாமம் குறித்து தெளிவாக ஆராயாமல் பேசினால் நீங்கள் அவரை கிண்டல் செய்யமாட்டீர்களா? அது உங்களுக்கும் பொருந்துமல்லவா? முதலில் எங்களை விமர்சிக்க விரும்பும் நீங்கள் குரானை ஒரு முறையாவது வாசித்து விட்டு வாருங்கள். உங்களுக்கு அதிலேயே பதில் கிடைத்து விடும். இன்ஷா அல்லாஹ்.

    இதை என்னுடைய வேண்டுகோளாக ஏற்றுக்கொண்டு குரானை படித்து விட்டு வந்து விமர்சனம் செய்யுங்கள் ஐயா.

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  45. @தருமி ஐயா,

    சலாம்...

    //தாங்க முடியவில்லை//

    இதை நாங்க தான் ஐயா சொல்ல வேண்டும்.

    //தொடருங்கள்//

    இன்ஷா அல்லாஹ்...

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  46. //பரிணாமம் குறித்து தெளிவாக ஆராயாமல் பேசினால் நீங்கள் அவரை கிண்டல் செய்யமாட்டீர்களா? //

    கிண்டல் செய்யாமல விலகிப்போவது நல்லது என்று எண்ணுகிறேன்.

    //குரானை ஒரு முறையாவது வாசித்து விட்டு வாருங்கள். உங்களுக்கு அதிலேயே பதில் கிடைத்து விடும். //

    அதாவது உங்களிடம் பதில் இல்லையென்பதை எவ்வளவு அழகாக சொல்கிறீர்கள்! நல்லது. அதோடு நான் வாசித்த அளவிலேயே அதை மறுப்பதற்கு இவ்வளவு இருக்கே .. இதுவே போதும். (லிஸ்ட் வேணும்னா தருகிறேன். அதுல குரானும் உண்டு; ஹதீஸும் உண்டு.)

    ReplyDelete
  47. ஒரு லிஸ்ட் போட்டு ஒரு தனிப்பதிவு போடணும்னு நினைக்கிறேன்.......

    ReplyDelete
  48. நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!
    தருமி ஐயா நானும் உங்ககிட்ட தான் பேசிகிட்டு இருக்கேன் ஸாரி,,,, இத கவனிக்கல
    //விலகிப்போவது நல்லது என்று எண்ணுகிறேன்.//
    ஓ!இதற்கு பெயர் தான் பகுத்தறிவா....

    ReplyDelete
  49. குரானின் 16.106; 3:86-90 - இவைகளை வாசித்தாலே பயமும் வெறுப்பும் வந்து விடாதா?

    ReplyDelete
  50. தருமி அய்யா அவர்கள் இதையும் கொஞ்சம் கவனிக்கவும்
    //குலாம் said ...
    கடவுளை மறுப்பதற்காகவே உங்களை போன்றோர் (அறிவியலார் என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளுங்கள் )பரிணாமத்தை கையிலெடுத்திருக்கிறார்கள்.மாறாக பரிணாமத்தை பொய்பிக்க நாங்கள் கடவுள் கொள்கைகளை கையில் எடுக்கவில்லை.ஆக எதை மறுப்பதற்கு விழைந்தீர்களோ அதற்குரிய ஆதார வாதத்தை தான் முதலில் எடுத்து வைக்க வேண்டும். இங்கு பேசுபொருள் பரிணாமம் குறித்தே., கடவுளை மறுக்கும் பரிணாம சான்றுகளை எடுத்து வையுங்கள் குறைந்த பட்சம் கடவுளை மறுக்க தர்க்கரீதியான பதிலை அல்லது கேள்விகளையாவது சொல்லுங்கள் அல்லது பரிணாமம் குறித்த எந்த கேள்விக்கும் பதில் தர தயாராக இருக்கிறேன் என்ற ஒற்றை சொல்லை இங்கு பதிவு செய்யுங்கள்.அக்கேள்விகள் சகோதரின் பதிவு முழுக்க அங்காங்கே கால்கடுக்க பதிலுக்காக காத்திருக்கிறது//

    இது புதிய நினைவூட்டல் மட்டுமே. மீண்டுமொருமுறை சொல்லுகிறேன் பேசுபொருளை பற்றி தாங்கள் உரையாட மாட்டீர்களா அய்யா? நான் ஏற்கெனவே நாத்திகர்களை பற்றி சொல்லியதை நீங்கள் இங்கு மெய்ப்பித்து கொண்டிருக்கிறீர்கள். பேசுபொருளை விட்டு எப்போதும் விலகியே ஓடுவது என்பது நாத்திகர்களின் இயல்போ?

    ReplyDelete
  51. gulam,
    ரொம்ப ஆசையா கேக்குறீங்க; ஆனா ஒண்ணு.. அதுக்கு முதல்ல நான் ஏற்கென்வே எழுதியவைகளை ஒரு பார்வையாவது பாத்துட்டீங்கன்னா ந்ல்லது. ஏன்னா, //கடவுளை மறுக்கும் பரிணாம சான்றுகளை எடுத்து வையுங்கள் // இதைப்பற்றி நிறைய எழுதிருக்கிறேன்.

    //கடவுளை மறுப்பதற்காகவே உங்களை போன்றோர் பரிணாமத்தை கையிலெடுத்திருக்கிறார்கள்//
    அடிப்படையே தவறு.

    //இஸ்லாம் - தனது கோட்பாடுகளையும், கொள்கைகளையும் தெளிவாக வரையறுத்து அதன் பின்னரே மக்களை கடைப்பிடிக்க சொல்கிறது.// உங்களுக்குப் பிடித்த அவைகள் எல்லோருக்கும் பிடிக்குமான்னு கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நான்கூட ஒரு குரான் பகுதிகளைக் கொடுத்திருக்கிறேனே -16.106 &
    3:86-3.90 :
    .. அது எல்லோருக்கும் சரியாக தோன்றுமா? பயங்கரமாக அல்லவா எனக்கிருக்கிறது.

    //பரிணாமவாதிகள் கூற்று உண்மையென்றால் நாத்திகர்களின் எண்ணிக்கை அல்லவா உலக அளவில் அதிகரிக்கவேண்டும்// இதையே கொஞ்சம் மாற்றி இஸ்லாமிய கூற்று உண்மையென்றால் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அல்லவா உலக அளவில் அதிகரிக்கவேண்டும் என்றும் சொல்லலாம். poor logic.

    //கிடைத்த விளக்கத்தின் படி செயலபடும் எங்களைப்போல் அல்லாமல் விளக்கம் கிடைத்தால் மட்டுமே செயல்படுத்தும் உங்களைப்போன்ற பரிணாமவாதிகள் // நீங்கள் சொல்வதை (யோசித்துப்) பார்த்தால் பரிணாம வாதிகள் செய்வது மிகச்சரி.

    //ஐயாவிற்கு சில வினாக்கள்
    கடவுள் வேண்டாம் எனபதை நானும் ஏற்கிறேன.ஆனால் நீங்கள் மறுக்கும் அத்தகைய கடவுள் எப்படி பட்டவர் என்பதை எனக்கு விளக்கிவீர்களா? அஃது மறுக்கும் அந்த கடவுளுக்கு நீங்கள் வைத்திருக்கும் வரையறை என்ன? //

    தேவையற்ற கேள்விகள்;தவறான கேள்விகளும் கூட.

    //ஓ!இதற்கு பெயர் தான் பகுத்தறிவா..// பகுத்தறிவு மேல் உங்களுக்கு ஏங்க இம்புட்டு கோவம்?

    //உங்ககிட்ட தான் பேசிகிட்டு இருக்கேன் //

    பேசினது எல்லாவற்றையும் 'கவர்பண்ணியாச்சா?

    ReplyDelete
  52. அய்யா ஷேக் தாவூத், நீங்க உங்க கேள்விகளைச் சொல்லுங்க. ஏன் எப்பவும் அடுத்தவங்களுக்கு நீங்கள் bugleஆகச் செயல் படுகிறீர்கள். தேவையா? உங்க குலாம் கேள்விகளைத் தொகுத்திருக்கிறேன்.

    //பேசுபொருளை விட்டு எப்போதும் விலகியே ஓடுவது என்பது நாத்திகர்களின் இயல்போ? //இதுக்கு யார் ஓடுறது என்பதற்கு சான்றுகள் நிறைய கொடுத்தும் ... புரியலையா? சும்மா ஒரே வார்த்தைகளைப் போட்டால் போதாது.உங்ககிட்ட கேள்விக்கு -ஸ்ரீதர் பதிவில் - போட்டதற்கு முதலில் பதில் சொல்லிவிட்டு அதன்பின் bugle ஆக மாறுங்கள்.

    ReplyDelete
  53. தருமி அய்யா அவர்களே,
    நான் அந்த பதிவில் என்னுடைய பதில் பின்னூட்டத்தை போட்டிருக்கிறேன். ஆஷிக் தளத்தி நான் போட்டி அதே பின்னூட்டம் தான். மற்றவர்கள் சரியாக ஒரு விசயத்தை சொல்லும் போது அதை மேற்கோள் காட்டுவதில் என்ன தவறு இருக்க முடியும்? எனவே மீண்டும் நான் சொல்லுவதெல்லாம் பேசுபொருளான பரிணாமத்தை பற்றி பேசுங்கள். அதை முடித்துவிட்டு மற்றவைகளை பற்றி உரையாடலாம். இனிமேலாவது பரிணாமத்தை நிருபிக்க கூடிய ஆதாரங்களை இங்கே தனது பேசுவீர்கள் தானே?

    ReplyDelete
  54. //பரிணாமத்தை நிருபிக்க கூடிய ஆதாரங்களை இங்கே தனது பேசுவீர்கள் தானே?//

    அய்யா உங்க இஷ்டத்துக்கு நான விளையாடணுமா? என் இடத்தில் அதை எழுத உத்தேசம். முடிந்தால் அங்கே வாருங்கள்.
    இந்த பதிவு பற்றிய கவலைன்னா .. அது பற்றி ஒன்றே ஒன்று. 50 விழுக்காடு மக்கள் பரிணாமத்தை நம்பவில்லை என்பதே எனக்கு ஆச்சரியம். என் மாணவர்களில் நான் கணித்தது: >2%

    //அதை முடித்துவிட்டு மற்றவைகளை பற்றி உரையாடலாம். // அதாவது நான் கேட்ட மற்றைய கேள்விகள், குரானின் பகுதிகள் (3:86-90 : 16.106) பற்றியெல்லாம் பேச மாட்டேன் என்கிறீர்கள்; புரிகிறது.

    ReplyDelete
  55. //மேற்கோள் காட்டுவதில் என்ன தவறு இருக்க முடியும்? /

    மேற்கோள் காட்டினா பரவாயில்லை. ஆனா அவருக்கு பதில் சொல்லு; இவருக்குப் பதில் சொல்லு என்பதெல்லாம் தேவையில்லாத வேலை.

    ReplyDelete
  56. தருமி ஐயா அவர்களுக்கு,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    //அதாவது உங்களிடம் பதில் இல்லையென்பதை எவ்வளவு அழகாக சொல்கிறீர்கள்! நல்லது. அதோடு நான் வாசித்த அளவிலேயே அதை மறுப்பதற்கு இவ்வளவு இருக்கே .. இதுவே போதும். (லிஸ்ட் வேணும்னா தருகிறேன். அதுல குரானும் உண்டு; ஹதீஸும் உண்டு.)//

    ஐயா இஸ்லாம் குறித்து உங்களுக்கும் எனக்கும் உங்களது தளத்தில் நடந்த உரையாடல்.
    http://dharumi.blogspot.com/2009/09/blog-post.html

    ஐயா, எங்களிடம் இஸ்லாம் குறித்து கேட்டால் நாங்கள் குர்ஆனில் இருந்து தான் பதில் சொல்லுவோம். அதனால் தாங்கள் குரானை முழுமையாக திறந்த மனதுடன் ஒருமுறை படித்து விட்டு வாருங்கள் என்று சொன்னால் //அதாவது உங்களிடம் பதில் இல்லையென்பதை எவ்வளவு அழகாக சொல்கிறீர்கள்! நல்லது//... இப்படியொரு பதிலா...

    //அதோடு நான் வாசித்த அளவிலேயே அதை மறுப்பதற்கு இவ்வளவு இருக்கே .. இதுவே போதும்//

    ஒரேஒரு முறை முழுமையாக படித்து விட்டு வாருங்கள்.

    //(லிஸ்ட் வேணும்னா தருகிறேன். அதுல குரானும் உண்டு; ஹதீஸும் உண்டு.)//

    கொடுக்க உங்களுக்கு உரிமை உண்டு....இங்கே நாங்கள் லிஸ்ட் போட்டு காத்திருக்கின்றோமே? பதிலே சொல்ல மாட்டேனென்று அடம்பிடிக்கிண்றீர்கலே?

    atleast நீங்க பாதியிலேயே பதில் சொல்லாம விட்டுவிட்டு போனீங்களே, அதற்காவது பதில் சொல்லலாமே.

    சரி அதையெல்லாம் விடுங்கள், பதிவின் மையப்போருளை விட்டு விலகியே பேசிக்கொண்டிருப்பது சரியா?

    //ஒரு லிஸ்ட் போட்டு ஒரு தனிப்பதிவு போடணும்னு நினைக்கிறேன்....... //

    உங்கள் தளம். தாராளமாக...

    ReplyDelete
  57. தருமி ஐயா,

    சலாம்,

    //அது பற்றி ஒன்றே ஒன்று. 50 விழுக்காடு மக்கள் பரிணாமத்தை நம்பவில்லை என்பதே எனக்கு ஆச்சரியம். என் மாணவர்களில் நான் கணித்தது: >2%//


    அப்பாடா, இப்போவாவது பதிவிற்குள் வந்தீர்களே. இதை தானே நான் சொல்லிக்கொண்டிருக்கேன். அதை விட்டு விட்டு பதிவை திசை திருப்பி கொண்டிருந்தீர்கள். உங்களுக்கு ஆச்சர்யம், டாகின்ஸ்சுக்கு வருத்தம்...

    தங்கள் கருத்துகளுக்கு நன்றி.

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ.

    ReplyDelete
  58. நான் முன்னரே ஸ்ரீ பதிவில் பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறேன். பதில் சொல்லுவதும் சொல்லாமல் இருப்பதும் உங்கள் இஷ்டமென்று. அதை நீங்கள் படிக்கவில்லையா? ஆனால் உங்களை போன்ற பரிணாமவியல் ஆதரவாளர்களை நோக்கி பல கேள்விகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன என்ற தகவலை மட்டும் தான் தெரிவித்தேன். அதை தான் அங்கேயும் இங்கேயும் எடுத்து சொன்னேன். அதாவது ஒரு புதிய நினைவூட்டல் மாதிரி. பேசுபொருளை விட்டு விலகி விலகியே உங்கள் கேள்விகள் போகின்றனவே அது ஏன்? குர்ஆனை பற்றிய உரையாடல் பதிவாக இங்கு வரும்போது கண்டிப்பாக வந்து உரையாடுவேன் இன்ஷா அல்லாஹ்.
    (குறிப்பு: இன்னும் ஆஷிக் அண்ட் கார்பன் கூட்டாளி முன்வைத்த பரிணாமவியல் சம்பந்தமான கேள்விகள் இன்னும் வைட்டிங் லிஸ்ட்டில் தான் இருக்கின்றன. அது RAC க்கு கூட போகவில்லை. )

    ReplyDelete
  59. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
    சகோதரர் ஆஷிக் அவர்களுக்கு, முதலில் உங்களுடைய பணி சிறக்க இறைவனிடத்தில் துஆ செய்தவனாக!
    ஐயா! ராதகிருஷ்னன் அவர்களுக்கு, السلام عليكم என்றால் தாங்களால் புரிந்து கொள்ள முடியாது என்பதனாலேயே, உங்களுக்கு புரியும் வகையில் எளிதாக கூறினோம். السلام عليكم இதற்கு நேரடியான தமிழ் வார்த்தை, உங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதனமும் உண்டாகட்டும் என பொருள். உங்களிடம் நாங்கள் வைக்கும் பரிணாம கோள்விகளுக்கு தக்க ஆதாரத்துடன் விளக்கம் தர வேண்டுகிறேன்.

    ReplyDelete
  60. நம் அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் ஏற்படடுமாக!
    //நான்கூட ஒரு குரான் பகுதிகளைக் கொடுத்திருக்கிறேனே -16.106 &
    3:86-3.90 : //
    சரிதான்., ஐயா இவ்வனங்களில் என்ன முரண்பாட்டை பார்க்கிறீர்கள் அல்லது என்ன விளக்கம் எதிர்ப்பார்க்கிறீர்கள் ஐயா? சொல்லுங்கள் இன்ஷா அல்லாஹ் விடை தர முயற்சிக்கிறேன்.
    ஆனாலும் பாருங்கள் பதில் பின்னூட்டம் இட்டு இருக்கிறீர்களே தவிர என் கேள்விக்கான பதில் பின்னூட்டம் இடவில்லை
    நான் கேட்ட இரண்டு அடிப்படை கேள்விகளுக்கு
    //தேவையற்ற கேள்விகள்;தவறான கேள்விகளும் கூட. // இதுதான் உங்கள் அரை நூற்றாண்டு மேலான அனுபவம் சொல்லும் பதிலா
    //பகுத்தறிவு மேல் உங்களுக்கு ஏங்க இம்புட்டு கோவம்?//
    உங்களைப்போன்றவர்கள் பகுத்தறிவாதிகள் என சொல்லி கொள்கிறீர்களே அதான் ஐயா... பரிணாம விரும்பிகளுக்கு உலகங்கும் கடவுள் மறுப்பாளர்கள் என்று பெயர் ஆனால் இங்கு மட்டும் பெயர் பகுத்தறிவாளர்கள்???....
    //அய்யா உங்க இஷ்டத்துக்கு நான விளையாடணுமா? என் இடத்தில் அதை எழுத உத்தேசம். முடிந்தால் அங்கே வாருங்கள்.//
    இது தான் உங்கள் பதில் என்றால் இங்கு பின்னூட்டமிடும் அனைவருக்கும் வலைப்பூ இருக்கிறது- இறை நாடினால் நானும் காத்திருக்கிறேன் -பதில் வேண்டுமானால் அங்கு வாருங்கள்

    ReplyDelete
  61. //தங்கள் கருத்துகளுக்கு நன்றி. //

    ஆஷிக், ஆக, இன்னும் என் கேள்விகளுக்குப் பதிலில்லை ..?

    ReplyDelete
  62. //இன்னும் ஆஷிக் அண்ட் கார்பன் கூட்டாளி முன்வைத்த பரிணாமவியல் சம்பந்தமான கேள்விகள் இன்னும் வைட்டிங் லிஸ்ட்டில் தான் இருக்கின்றன. //

    ஷேக் தாவூத்,
    உங்களுக்குப் புரியவே செய்யாதா?

    ReplyDelete
  63. குலாம்,
    //இவ்வனங்களில் என்ன முரண்பாட்டை பார்க்கிறீர்கள் //

    ஹ்ல்ரத் அலீ (ரலி): "உலகினில் ஏற்படுகின்ற குழப்பங்களுக்குத் தீர்வு காண அல்லாஹ்வின் வேதந்தான் சிறந்த வழி. ...(தன் அறிவைக்கொண்டு) பெருமையடிக்கிறவன் இதனை (அமல் படுத்தாமல்) விட்டு விட்டால், அல்லாஹ் அவனைத் துண்டு துண்டாக ஆக்கிவிடுவான்."

    16.106 : அல்லாஹ்வை நம்பிய பின் அவனை மறுப்போர் மீதும், மறுப்பிற்கு இதயத்தில் தாராளமாக இடமளிப்போர் மீதும் அல்லாஹ்வின் கோபமும், கடும் வேதனையும் உண்டு.

    இப்படி விரட்டும் கடவுளை உங்கள் மதத்தில்தான் பார்க்க முடியும். இந்த வெருட்டும் கோட்பாடுகள் கடவுளிடமிருந்து வந்தது என்பது எனக்கு ஒரு மிக மிகப் பெரிய முரண்பாடு.

    ReplyDelete
  64. //// இதுதான் உங்கள் அரை நூற்றாண்டு மேலான அனுபவம் சொல்லும் பதிலா//

    ஆம்.

    //பரிணாம விரும்பிகளுக்கு உலகங்கும் கடவுள் மறுப்பாளர்கள் என்று பெயர் //

    தவறு. மிகக் குறுகிய பார்வை. பரிணாம விரும்பிகள் பலரும் நம்பிக்கையாளர்கள் - அவர்கள் இஸ்லாமிய நம்பிக்கையாளர்களில்லாமல் இருக்கலாம்.

    //உங்களைப்போன்றவர்கள் பகுத்தறிவாதிகள் என சொல்லி கொள்கிறீர்களே//

    எப்பங்க உங்ககிட்ட வந்து நான் அப்படி சொன்னேன்?

    ReplyDelete
  65. அன்பின் தருமி அய்யா,
    மீண்டும் சொல்கிறேன் பரிணாமம் குறித்து நீங்கள் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும் என்று நான் எங்குமே சொல்லவில்லை. பதிலே இல்லாத போது நீங்கள் என்ன பண்ணுவீர்கள் இந்த மாதிரி உணர்ச்சிவசப்படுவதை தவிர. எனவே கோபம் கொள்ளாமல் நிதானமாக இருங்கள் அய்யா.

    ReplyDelete
  66. //V.Radhakrishnan said...
    ஹா ஹா! இதில் என்ன பெரிய அதிர்ச்சி அடைய வேண்டி இருக்கிறது. ஆனந்தம் தான் கொள்ள வேண்டும்.

    படைப்பு கொள்கையை நம்பி திரிந்த பிரிட்டனில் நூறு சதவிகிதத்தில் இருந்து ஐம்பது சதவிகிதம் என வந்ததே பெரிய வெற்றிதான்//

    ///
    தருமி said...
    //Islam: 1,570 million 22% in the world // so 78% dont believe Islam.

    SO WHAT?/

    இந்த சுட்டிகளை பாருங்கள்
    http://www.guardian.co.uk/commentisfree/2010/oct/29/mohammed-name-baby-popular

    http://www.timesonline.co.uk/tol/news/uk/article1890354.ece


    http://www.dailymail.co.uk/news/article-1324194/Mohammed-popular-baby-boys-ahead-Jack-Harry.html

    முஹம்மது என்ற பெயர் இஸ்லாத்தின் ஒரு அடையாளம் என்பது என் எண்ணம்.

    ReplyDelete
  67. //Dharumi said

    ஏற்கெனவே விந்து விவாதத்தில் உங்கள் அனைவரின் 'உண்மைத்தத்துவம்' மெய் சிலிர்க்க வைத்தது.//


    தருமி அய்யாவிற்கு எற்கனவே சகோதரர் நல்லடியார் தன்னுடைய பதிவில் கற்று கொடுத்திருந்தார்.

    http://athusari.blogspot.com/2009/12/blog-post_13.html

    http://athusari.blogspot.com/2009/12/blog-post.html

    குறைந்த பட்சம் இதற்காகவாவது தருமி ஐயா பதில் கொடுப்பாரா?. இல்லை பரிணாம தத்துவத்தின் அடிப்படையில் 'தாவி' விடுவாரா? காத்திருப்போம்.

    ReplyDelete
  68. //பரிணாம தத்துவத்தின் அடிப்படையில் 'தாவி' விடுவாரா? காத்திருப்போம். //

    உங்கள் 'கோரஸ் கானம்' மிக நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  69. யார் இந்த 'ஐயா' தருமி..?

    சில வருடங்களுக்கு முன்பு 'நான் ஏன் மதம் மாறினேன்' என்று பதிவுத்தொடர் போட்டார். கிருத்துவம் பிடிக்காமல் அவர் எந்த மதத்துக்கு மாறினார் என்று கடைசிவரை வாசகர்களுக்கு சொல்லவே இல்லை. உண்மையில், 'நான் ஏன் கிருத்துவத்தை விட்டு வெளியேறினேன்' என்று இருந்திருக்க வேண்டும், அத்தலைப்பு. அப்படி இருந்திருந்தால் எல்லாரும் படித்திருக்க மாட்டார்களே? அப்புறம் எப்படி பரபரப்பு பதிவு வியாபாரம் நடத்தி கல்லா கட்டுவது?

    அத்தொடரிலேயே அனைவருக்கும் தெரிந்துவிட்டது அவரின் மற்ற மதங்கள் பற்றிய அவரின் சிற்றறிவுகூட பூச்சியம் என்று. அன்றே இவரிடம் எல்லாரும் சொன்னார்கள்... 'எந்த ஒரு தெரியாத விஷயத்தையும் படித்து அறிந்து கொண்டபின்னர் பதிவிடுங்கள்' என்று. அப்போதுதான் அப்படி என்றால், இப்போதும் அப்படியேதானா?

    அன்றுமுதல் இன்றும் கூட மிகப்பெரிய குழப்பத்தில் இருக்கிறார். தொடர்ந்து அதே பாணியில் குழப்பி/குழம்பி பின்னூட்டுவதும் பதிவிடுவதுமாய் காலத்தை ஓட்டுகிறார். உண்மைகளை அறிந்து கொள்ள எந்த முயற்சியும் எடுக்காமல், வெத்து பரபரப்புக்காக பதிவு வியாபாரம் நடத்தும் இவரை, யாரும் சீரியஸாக நினைத்து பதில் கூறிக்கொண்டிருக்க வேண்டியதில்லை என்பது என் அபிப்பிராயம்.

    ReplyDelete
  70. //16.106 : அல்லாஹ்வை நம்பிய பின் அவனை மறுப்போர் மீதும், மறுப்பிற்கு இதயத்தில் தாராளமாக இடமளிப்போர் மீதும் அல்லாஹ்வின் கோபமும், கடும் வேதனையும் உண்டு.
    //
    //பதிலே இல்லாத போது நீங்கள் என்ன பண்ணுவீர்கள் //

    உணர்ச்சிவசப்படுவதை தவிர. எனவே கோபம் கொள்ளாமல் நிதானமாக இருங்கள் அய்யா. - இது போன்ற வசனங்கள் பேசுவீர்களோ?

    ReplyDelete
  71. shanawazkhan

    நல்லடியார் கற்றுக் கொடுத்த பதிவைப் படித்த நீங்கள் இதையும் படிக்கணுமே. படிங்க

    http://dharumi.blogspot.com/2007/06/223-3.html

    ReplyDelete
  72. //16.106 : அல்லாஹ்வை நம்பிய பின் அவனை மறுப்போர் மீதும், மறுப்பிற்கு இதயத்தில் தாராளமாக இடமளிப்போர் மீதும் அல்லாஹ்வின் கோபமும், கடும் வேதனையும் உண்டு.

    இப்படி விரட்டும் கடவுளை உங்கள் மதத்தில்தான் பார்க்க முடியும். இந்த வெருட்டும் கோட்பாடுகள் கடவுளிடமிருந்து வந்தது என்பது எனக்கு ஒரு மிக மிகப் பெரிய முரண்பாடு. //

    இப்போதைக்கு இது மட்டுமே என் கேள்வி. பதில் இருந்தால் சொல்லுங்கள். சும்மா கோரஸாக தாவேதே என்று என்னைக் கூறுவதை விடுத்து பதில் இருந்தால் சொல்லுங்கள்.

    ReplyDelete
  73. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
    //தருமி said...
    shanawazkhan

    நல்லடியார் கற்றுக் கொடுத்த பதிவைப் படித்த நீங்கள் இதையும் படிக்கணுமே. படிங்க

    http://dharumi.blogspot.com/2007/06/223-3.html
    //
    திரும்பவும் சுத்தி* வளைக்கிறீர்கள் ஐயா.தங்களுடைய "விந்து தத்துவம் " தொடர்பான கேள்விகளுக்கு சகோதரர் நல்லடியாரின் பதில் பதிவை தங்களுடைய பார்வைக்கு அளித்தால் நீங்கள் அவருடன் நடத்திய கருத்து போரை பதிலாக தருகிறீர்கள். islamkalvi.com தளத்தில் அவர் உங்களுடைய பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். இங்கு நான் உங்களுக்கு அந்த லிங்கை கொடுத்தது நீங்கள் குரானுடைய வசனத்தை பொய்ப்பித்து வெற்றி கண்டதாக ஒரு போலி பிம்பத்தை உருவாக்க முயற்சிததால்தான். இல்லாவிடில் வழக்கம் போல் பின்னூட்டம் இடாமலேயே இருந்திருப்பேன். சரி. இப்போதாவது "விந்து தத்துவம் " பற்றிய அப்பதிவின் கூற்றை பொய்யாக்குங்கள். முடியாவிட்டால் இப்பதிவின் பேசு பொருளில் நின்று இப்பதிவின் கூற்றை பொய்யாக்குங்கள்.மீண்டும் மீண்டும் சுற்றி* வளைக்க வேண்டாம்.

    * "தாவல்" என்ற சொல்லாடல் தங்களை காய படுத்துவதாக அறிகிறேன். இறைவனுக்காக மன்னிக்கவும்.

    ReplyDelete
  74. //தருமி அய்யாவிற்கு எற்கனவே சகோதரர் நல்லடியார் தன்னுடைய பதிவில் கற்று கொடுத்திருந்தார்.//

    shanawazkhan,
    இப்படி சொல்ற பதிவர் நீங்கள் முதல்வரல்ல. இப்படி வாசிக்கிறவங்க அதுக்குப் பதிலா அடுத்த பதிவர் என்ன எழுதினார்னு வாசிக்கவே மாட்டீங்களா? எப்பவுமே ஒரு சைட் மட்டும் பாப்பீங்க போலும்!

    ReplyDelete
  75. //"விந்து தத்துவம் " பற்றிய அப்பதிவின் கூற்றை பொய்யாக்குங்கள். //

    இன்னுமா?
    தூங்குறவங்களை மட்டும்தான் எழுப்ப முடியுமுங்க!

    ReplyDelete
  76. //இன்னுமா?
    தூங்குறவங்களை மட்டும்தான் எழுப்ப முடியுமுங்க!// ஆனா உங்கள்ட்ட பிடிச்சதே அந்த மீசையிலே மண் ஒட்டலே பாலிசி தான் ஐயா.
    1.உங்களுடைய பதிவு இங்க இருக்கு.

    http://dharumi.blogspot.com/2009/11/354-2.html

    2.நீங்கள் பதிவிட்டதுக்கு சகோதரர் நல்லடியாரின் பதில் லிங்கை கொடுத்தேன்.அது இங்க இருக்கு
    http://athusari.blogspot.com/2009/12/blog-post_13.html

    2.A. இஙகயும் இருக்கு.
    http://athusari.blogspot.com/2009/12/blog-post.html
    3. இப்ப கேள்வி என்னன்னா இதுக்கு(அதாவது 2க்கும் 2A க்கும் ) பதில் எங்க இருக்கு??
    சுருக்கமாக 3=??

    T.P.: அதாங்க இது என்று 1 யை காட்டி காமெடி பண்ண மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  77. தருமி ஐயா,

    சலாம்,.

    //இப்போதைக்கு இது மட்டுமே என் கேள்வி. பதில் இருந்தால் சொல்லுங்கள். சும்மா கோரஸாக தாவேதே என்று என்னைக் கூறுவதை விடுத்து பதில் இருந்தால் சொல்லுங்கள்//

    சரி ஐயா, இறைவன் எனக்களித்த ஞானத்தை கொண்டு பதில் சொல்ல முயல்கின்றேன்.....

    பிஸ்மில்லாஹ் (எல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரால்)

    அதற்கு முன் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகின்றேன். குரானின் வசனங்களுக்கு எண்களிடும் முறை என்பது துவக்கத்தில் இல்லை, பிறகு தான் வந்தது. ஆக, குரானின் வசங்களை தொடர்ச்சியாகத் தான் ஓதுவர். ஒரு வசனத்தை மட்டும் எடுத்துக்கொண்டு அது இப்படி சொல்கின்றது என்று சொல்வது இஸ்லாம் குறித்து ஆராயதவர்கள் செய்யக்கூடிய வாதம். ஒரு வசனத்தை பற்றி பேசும்போது அதற்கு முன் இருக்கக்கூடிய வசனங்கள் மற்றும் அதற்கு பின்வரும் வசனங்கள் என்ன கூறுகின்றன என்றும் பார்க்கவேண்டும். அப்போது தான் நமக்கு context கிடைக்கும்.

    இப்போது நீங்கள் தந்த வசனத்தையும் அதற்கு பின்வரும் வசனங்களையும் பார்ப்போம்.

    எவர் ஈமான் கொண்டபின் அல்லாஹ்வை நிராகரிக்கின்ராரோ அவர் - அவருடைய உள்ளம் ஈமானைக்கொண்டு அமைதி கொண்டிருக்கும் நிலையில் யார் நிர்பந்திக்கப்படுகின்றாரோ அவரைத்தவிர - ஆனால் எவருடைய நெஞ்சம் குப்ரைக் கொண்டு விரிவாகி இருக்கின்றதோ - இத்தகையோர் மீது இறைவனின் கோபம் உருவாகும்; இன்னும் அவர்களுக்கு கொடிய வேதனையும் உண்டு. (16:106)

    ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் மறுமையை விட இவ்வுலக வாழ்க்கையை அதிகமாக நேசிக்கின்றார்கள்; மேலும் நிச்சயமாக அல்லாஹ் காபிர்களின் கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்தவே மாட்டான். (16:107)

    ReplyDelete
  78. சரி, இப்பொது விஷயத்திற்கு வருவோம். இந்த வசனத்திற்கு உதாரணமாக இரு சூழ்நிலைகளை எடுத்துக்கொள்வோம்.

    1. ஒருவர் கடுமையாக கொடுமைப்படுத்தப்படுகின்றார். அதாவது, "நீ இஸ்லாத்தை விட்டு விட்டால், உன்னை நான் உயிரோடு விடுவேன்" என்று மிரட்டுபவர் நிர்பந்திக்கின்றார். அதற்கு மிரட்டப்படுபவர் வலி தாங்க முடியாமல் உடன்படுகின்றார். அதாவது தன் நாவினால் "தான் இஸ்லாத்தை விடுவதாக" கூறுகின்றார், ஆனால் உள்ளத்தாலோ இஸ்லாத்தை கடைபிடிக்கின்றார். இப்போது இவரை இறைவன் என்ன செய்வான் என்று அந்த வசனம் கூறுகின்றது. அதாவது, நிர்பந்தத்திற்க்காக தன் நம்பிக்கையை துறந்து விட்டதாக கூறுவோரை இறைவன் குற்றம் கண்டுபிடிப்பதில்லை என்று அந்த வசனம் கூறுகின்றது. நாயகம் (ஸல்) அவர்களது காலத்தில் இது போல நடந்துள்ளது. ஆக இறைவன் மாபெரும் கிருபையாளன் என்று அந்த வசனம் நிரூபிக்கின்றது.

    ReplyDelete
  79. 2. அடுத்து, மற்றொரு சூழ்நிலையை எடுத்து கொள்வோம். ஒருவர் இஸ்லாத்தை விட்டு விட்டால் இவ்வளவு சுகம் கிடைக்கும் என்று ஆசைக்காட்டப்படுகின்றார். அவரும் உடன்படுகின்றார். அதாவது, அவருக்கு இஸ்லாம் தான் உண்மை என்று நன்றாக தெரிகின்றது. ஆனால் அவரோ இவ்வுலக ஆசைகளுக்கு மயங்கி தன் உள்ளத்திலிருந்து இஸ்லாத்தை விலக்கி விடுகின்றார். ஆதாவது இஸ்லாம் உண்மை என்று தெரிந்தே அதை செய்கின்றார் (The One who Intentionally does that). இப்போது இவர் போன்ற உண்மையை மறைப்பவர்களுக்கு என்ன தண்டனை? தன் உள்ளத்தை உண்மையை மறைக்க விரிவாக்கி கொண்டவர்களுக்கு என்ன தண்டனை? அதை தான் அந்த வசனம் விளக்குகின்றது.

    இப்போது இந்த வசனத்தில் என்ன தவறிருப்பதாக கண்டீர்கள்? இது விரட்டும் தன்மையா? இறைவன் கருணையாளன், அதே நேரம் இவ்வுலக சுகங்களுக்காக உண்மையை மறைப்பவர்களுக்கு தண்டனை கொடுக்கக்கூடியவன் என்று இறைவனின் தன்மைகளை மிக அழகாக அல்லவா விளக்குகின்றது அந்த வசனம்?.

    குரானை நன்கு ஆராய்ந்து பாருங்கள், அதில் எத்தனை முறை கிருபையாளன், கருணையுள்ளவன், மன்னிப்பவன் என்று வருகின்றது என்று பாருங்கள்.

    ஆக, ஐயா தாங்கள் குரானை நன்கு ஆராயுங்கள். யாரோ இப்படி சொல்கின்றார்கள் என்றில்லாமல் நீங்களாக குரானை அதன் மூல மொழியில், மொழிபெயர்ப்பில் ஆராய முற்படுங்கள். ஒரு முறையேனும் குரானை முழுமையாக, திறந்த மனதோடு (with unbiased mind) படித்து விட்டு வாருங்கள்.

    ReplyDelete
  80. சரி, நீங்கள் என்னிடம் ஒரு கேள்வியை கேட்டீர்கள். இப்போது நான் உங்களிடம் ஒரு கேள்வியை கேட்கின்றேன்,. இல்லை இல்லை ஏற்கனவே கேட்டு காத்துக்கொண்டிருக்கின்றேன்.

    http://ethirkkural.blogspot.com/2010/07/evolution-stheory-harry-potter-stories_19.html

    நீங்கள் பதில் சொல்லாமல் விட்டு சென்ற இதற்கு தாங்கள் பதில் கூறவேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன்.

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  81. shanawazkhan,
    உங்கள் நல்லடியாரின் பதிவையும் ஏற்கெனவே படித்தாகிற்று.

    1400 வருஷக்கதையையும் கேட்டாயிற்று; மரத்தில் மோதியாயிற்று.

    ReplyDelete
  82. //எத்தனை முறை கிருபையாளன், கருணையுள்ளவன், மன்னிப்பவன் என்று வருகின்றது என்று பாருங்கள்.//

    எல்லா வேத நூல்களையும் வாசியுங்கள். அவரவர் கடவுள் அவரவர்க்கு கிருபையாளன், கருணையுள்ளவன், மன்னிப்பவன்! பெரிய உண்மை என இதைச் சொல்கிறீர்கள்!

    ReplyDelete
  83. //அவருக்கு இஸ்லாம் தான் உண்மை என்று நன்றாக தெரிகின்றது.//

    அவனவனுக்கு அவனனது மதம் கூறுவது உண்மையாக இருக்கும். அதிலிருந்து மாறுபட்டால் தண்டனை என்பது என்னமாதிரி தெய்வம் என்று எனக்குப் புரியவில்லை. கிறித்துவ மதத்தின் முதல் கோட்பாடே 'உனக்கு வேறு தெய்வம் இல்லை'என்பதே. இதில் மதக்காரர்களின் தடுப்புதானே ஒழிய ஒரு "தெய்வம்" இப்படிக் கூறுமா என்பது என் கேள்வி. அப்படிப்பட்ட ஒன்று தெய்வமாகவும் இருக்க முடியாது.

    ReplyDelete
  84. என்னை மறுத்தால் தண்டனை தருவேன் என்னும் 'தெய்வத்தை'க் கருணையாளன், இரக்கமுள்ளவன் என்பது நல்ல ஒரு நகைமுரண்.

    ReplyDelete
  85. தருமி ஐயா,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    1. தருமி ஐயா சொன்னது,
    //அவனவனுக்கு அவனனது மதம் கூறுவது உண்மையாக இருக்கும். அதிலிருந்து மாறுபட்டால் தண்டனை என்பது என்னமாதிரி தெய்வம் என்று எனக்குப் புரியவில்லை//

    நான் சொன்னது,
    //The One who Intentionally does that//

    புரியாத மாதிரி நடிப்பதென்பது...

    2. நான் சொன்னது,
    //நீங்கள் பதில் சொல்லாமல் விட்டு சென்ற இதற்கு தாங்கள் பதில் கூறவேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன்.//

    தருமி ஐயா சொன்னது,
    " "


    தாங்கள் யாரென்று தெளிவாக மற்றொரு முறை நிரூபித்ததற்கு நன்றிகள் பல ஐயா...

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  86. //என்னை மறுத்தால் தண்டனை தருவேன் என்னும் 'தெய்வத்தை'க் கருணையாளன், இரக்கமுள்ளவன் என்பது நல்ல ஒரு நகைமுரண். //

    இன்னொன்று மறந்து போச்சே. சில ஆண்டுகளுக்கு முன் ஒரு அரசியல் தலைவர் தன் தொண்டர்களெல்லோரும் கையில் கட்சியின் கொடியைப் பச்சை குத்திக்கொள்ள வேண்டுமென ஒரு பயித்தியக்கார கண்டிஷன் போட்டார். அந்த அரசியல் தொண்டர்களே அதை செய்யவில்லை.

    உங்கள் கடவுளின் கட்டளை இதே போல் வேடிக்கையானதுதான். //The One who Intentionally does that// இந்தக் கதையையும் சேர்த்தே சொல்கிறேன்.

    எம்புட்டு பெரிய கடவுளுக்கு இதென்ன தேவை?!

    ReplyDelete
  87. ////நீங்கள் பதில் சொல்லாமல் விட்டு சென்ற இதற்கு தாங்கள் பதில் கூறவேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன்.//

    இதற்கு ஏற்கென்வே ஸ்ரீ பதிவில் பதில் சொன்னேனே. அதைப் பற்றி எழுத ஏன் விருப்பம் இல்லைன்னு சொல்லியிருந்தேன். ஆனாலும் என் பதிவில் கட்டாயம் எழுதுவேன்.

    அதற்கு முன்: அறிவியலில் மாற்றுக் கருத்துக்கள் வருவது மரபு. ஒரு எதிர் கருத்து வந்துவிட்டதாலேயே டார்வின் தோற்று விட்டார் என்று கூவுவது கொஞ்சம் வேடிக்கைதான்.
    நீங்கள் //4. //'கடவுள் படைத்த'டைனோசார் போன்ற உயிரினங்கள் ஏன் இல்லாமல் போக முடியும்?//

    ஆஹா...

    கடவுள் படைத்த'டைனோசார் போன்ற உயிரினங்கள் ஏன் இல்லாமல் போகக் கூடாது? //
    - என்று சொல்வதலேயே நான் உங்களைப் பார்த்து - //தாங்கள் யாரென்று தெளிவாக மற்றொரு முறை நிரூபித்ததற்கு நன்றிகள் பல ஐயா...//- என்றெல்லாம் சொல்ல மாட்டேன். ஐயோ பாவம் கடவுள் படைச்சார்; அதெல்லாம் ஒத்துவராம கடவுள் படைச்சது என்பதையும் மீறி extinct ஆகிருச்சின்னு சொல்றீங்கன்னு நினச்சுக்குவேன்.

    ReplyDelete
  88. //தருமி said...
    shanawazkhan,
    உங்கள் நல்லடியாரின் பதிவையும் ஏற்கெனவே படித்தாகிற்று.

    1400 வருஷக்கதையையும் கேட்டாயிற்று; மரத்தில் மோதியாயிற்று//

    ஐயா தங்களுக்கு எதுவும் புரிந்து கொள்வதில் பிரச்சினையா??
    நான் என்ன கேட்கிறேன் . நீங்கள் என்ன பதிலுரைக்கிறீர்கள். மனிதனின் உயிர்த்துளி எதிலிருந்து வருகிறது என்பதில் இரு கருத்து முன்வைக்க படுகிறது.தங்களின் கூற்றுப்படி விரைப்பையிலிருந்துதான் வருகிறது என்பதற்கு விளக்கமோ ஆதாரமோ கேட்டேன். நீங்கள் அதற்கு பதிலளிக்கும் முகமாக நீங்கள் மரத்தில் மோதி கொண்டதை சொல்கிறீர்கள்.நல்லடியார் பதிவு பேசு பொருள் இல்லை.நீங்கள் அந்த பதிவை படித்து விட்டீர்களா இல்லையா என்பது விவாதமில்லை.நல்லடியாரை மறங்கள்.நீங்கள் பேராசிரியார் என்பதாலும் விந்து உற்பத்தியாகும் இடத்தை பற்றி ஞானம் தங்களுக்கு இருப்பதாலும் தங்களிடம் கேட்கிறேன். அந்த இடம் எது?. அதற்கு ஆதாரம் என்ன?

    ReplyDelete
  89. நம் அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!
    சகோதரர் ஒருவரின் வேண்டுகோளுங்கினங்க தருமி ஐயாவிற்கு பின்னூட்டமிடாமல் இருந்தேன். எனினும் ஐயா அவர்களின் குர்-ஆன் குறித்த அறிவின் வெளிபாடு என்னை பதில் பின்னூட்டமிட வைத்தது., என்னை அந்த சகோதரர் மன்னித்துக்கொள்ளவும்
    // //இவ்வசனங்களில் என்ன முரண்பாட்டை பார்க்கிறீர்கள் // ..
    இந்த வார்த்தையே மேற்கோள் காட்டி என்ன சொல்ல வருகிறீர்கள்., முரண்பாடு இருக்கிறதென்றா..? ஐயா முரண்பாடென்பது வெவ்வேறு சூழலில் நடைபெறக்கூடிய நிகழ்வுகள் ஒரே நேரத்தில் ஒரே சூழலில் நிகழ்ந்தாக கூறுவதே ஆகும் அல்லது ஒரு செயல் மட்டுமே நடைபெற சாத்தியமுள்ள நிலையில் எதிரெதிரான இரு செயல்கள் நடைபெற்றதாக கூறுவதும் தான் முரண்பாடு இந்த வசனத்தில் என்ன முரண்பாட்டை கண்டீர்கள் ஐயா...? இந்த வசனம் மட்டுமல்ல எந்த ஒரு வசனத்தையாவது முரண்பாட்டின் அடிப்படையில் இருப்பதாக ஆதாரத்தோடு கூறுங்கள்...
    //இப்படி விரட்டும் கடவுளை உங்கள் மதத்தில்தான் பார்க்க முடியும். இந்த வெருட்டும் கோட்பாடுகள் கடவுளிடமிருந்து வந்தது என்பது எனக்கு ஒரு மிக மிகப் பெரிய முரண்பாடு//
    ஐயா., இந்த வசனங்களின் விளக்கத்தை சகோதரர் அஷிக் தெளிவாக விளக்கியுள்ளார்., சரி., இவ்வசனம் ஏன்? -கடவுள் இருப்பது உண்மையாக இருந்தால் தன்னை குறித்த அனைத்து செயல்பாடுகளையும் இந்த மனித மூலத்திற்கு தெளிவாக மற்றும் எளிதாக அறிவுறுத்தியிருக்க வேண்டும் அந்த அடிப்படையில் முதன்மை கோட்பாடான., வணக்கம் குறித்து அதாவது, தன்னை வணங்குபவனுக்கு கொடுக்கும் வெகுமதி குறித்து கூறுவதுப்போல தன்னை வணங்காதவனுக்கு கொடுக்கும் தண்டனையும் பற்றி தெளிவாக மனிதர்களுக்கு தெரிவுபடுத்தவேண்டும் ஏனெனில் மறுமையில் நானும் நீங்களும் (விரும்பினாலும்- விரும்பாவிட்டாலும் மாறாக., நம்பினாலும் நம்பாவிட்டாலுமல்ல) அவன் முன்னிலையில் நிற்கும்போது அவனை பார்த்து "கடவுளே உன்னை வணங்கினால் சொர்க்கம் தருவதாக வாக்களித்த நீ வணங்காவிட்டால் அது குறித்து என்னை எச்சரிக்கை செய்யவில்லையே என்று கூற கூடாதல்லவா...? அதற்காகத்தான் இதைப்போன்ற வசனங்கள், ஒருவேளை நீங்கள் சொல்வதுப்போல., இறைவனும் இத்தகைய கண்டிக்கக்கூடிய வசனங்கள் குர்-ஆனில் இடம்பெற செய்யாமல் இருந்திருக்கலாம்., மேற்கண்ட இதே கேள்வி அந்நாளில் அவனிடம் கேட்கப்பட்டால் என்ன பதில் சொல்வான் இறைவன்...?
    எனவே கடமையாக பணித்த ஒரு செயலை செய்யாமல் தவிர்ப்பதால் ஏற்படும் விளைவை பற்றி தெளிவாக எடுத்துரைத்தால் அதற்கு பெயர் வெருட்டும் கோட்பாடுகளா...? அல்லது தெளிவான எச்சரிக்கைகளா...? குர்-ஆனை பகுத்தறிவு பார்வையோடு அணுகுங்கள் ஐயா., முஸ்லிம்களாக பிறந்த மக்களுக்கு மட்டும்தான் சொர்க்கம் ஏனையோருக்கு நரகமென்றால் கடவுளின் நீத தன்மை அங்கு கேள்விக்குறியாக்கப்படலாம். ஆனால் பாருங்கள் இங்கு நிரகாரிப்போருக்கே நரகம் என்றே கூறுகிறான் இன்று முஸ்லிமாக இருக்கும் ஒருவர் நாளை முஸ்லிமல்லாதவராக மரணித்தாலும் இவ்வசனம் அவருக்கும் பொருந்தும்.
    //1400 வருஷக்கதையையும் கேட்டாயிற்று; மரத்தில் மோதியாயிற்று. //
    மரத்தில் மோதியது போதும் ஐயா., சரி உங்கள் பார்வையில் குர்-ஆன் தவறாக இருக்கட்டும் சரி விடுங்கள்., ஆனால் உங்கள் பார்வையில் பரிணாமம் ஆதாரபூர்வமானதும் அறிவுபூர்வமானதும் தானே...
    உங்கள் அனுபவத்தை இரண்டால் வகுத்தால் வரும் விடைக்குரிய வயதுடைவனின் பரிணாமம் குறித்த கேள்விக்கு பதில் சொல்ல உங்களுக்கு மனமிருக்கிறதா,,,, ஸாரி ஐயா., தைரியமிருக்கிறதா...? (மேலும் சுற்றி வளைக்க வேண்டாம் இந்த பத்தியை மீண்டுமொரு முறை படியுங்கள் -பின்பு பதிலை பதியுங்கள்)

    ReplyDelete
  90. தருமி அய்யா! டீ இன்னும் வரல

    ReplyDelete
  91. //இந்த பத்தியை மீண்டுமொரு முறை படியுங்கள்//

    தலை சுற்றியது

    //தைரியமிருக்கிறதா...? //

    அய்யய்யோ .. கிடையாதுங்க.

    அய்யா,
    சும்மா கேட்டகேள்விகளையே மீண்டும் மீண்டும் கேட்க வைக்கிறீர்கள். extinction பற்றி கேட்டதற்கே பதில் இல்லை. இதில் தைரியமிருக்கிறதா என்று வேறு கேள்வி!

    //அதற்கு பெயர் வெருட்டும் கோட்பாடுகளா...? அல்லது தெளிவான எச்சரிக்கைகளா.//

    சுத்தமான நயம் வெருட்டும் கோட்பாடுகள். மீண்டும் சொல்கிறேன்:எம்புட்டு பெரிய கடவுளுக்கு இதென்ன தேவை?!

    எதற்கும் அந்த சகோதரர் புத்திசாலித்தனமாகச் சொன்னதை கடைப்பிடிக்கலாமே!

    ReplyDelete
  92. //டீ இன்னும் வரல //

    வராதுங்க. வேணும்னா http://dharumi.blogspot.com/2009/11/354-2.html - இங்க போய் குடிங்க. அதுக்கு மேல சொல்றதுக்கு என்னங்க இருக்கு? ஆனால் அதெல்லாம் கண்களைத் திறந்து வச்சிருக்கவங்களுக்குத்தானுங்க.

    ReplyDelete
  93. அதப்படி., சொல்லும் பதில் குறித்து பேசாமல் மறுபடியும் முதலே இருந்து ...
    நாத்திக மதத்தை பின்பற்றும் உங்களால் இப்படிதான் பேசி கொண்டிருக்குமே ஒழியே அதை தாண்டி வெளியே வரமுடியாது.,சின்ன டவுட்டு ஐயா எதா இருந்தாலும் என் ப்ளாக்குக்கு வா... வா... ன்னு ஒரே பிடிவாதம் அப்புறம் எதுக்கய்யா பொது விவாத்திற்கு வருகிறீர்கள். கவலைப்படாதீர்கள் பகுத்தறிவாளன் போல தருமிக்காக என்னை நொந்து கொள்கிறேன்! என்றெல்லாம் ஆக்கம் எழுதமாட்டேன்.
    உண்மையாக அந்த சகோதரர் சொன்னது சரிதான் இந்த விசயத்தில் உங்களோடு உடன் படுகிறேன். இதுக்கும் ஒரு ரிப்ளே ரெடி பண்ணி எல்லாத்தையும் சேர்த்து உங்க ப்ளாக்லே தனிப்பதிவாக இடுங்கள் தலைப்பு வேண்டுன்னா கேளுங்க...

    ReplyDelete
  94. //பகுத்தறிவாளன் போல தருமிக்காக என்னை நொந்து கொள்கிறேன்//

    பகுத்தறிவாளனுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  95. தருமி ஐயா, மறுபடியும் அந்த பதிவையே மீண்டும் காட்டி என்னை ஏமாற்றமடைய செய்கிறீர்கள்.அதை தவிர்த்து வேறு ஏதேனும் animated video link (நல்லடியார் காட்டியது போல் )இருந்தால் நன்றாக இருக்கும், ஏனெனில் தங்களுடைய image photos யார் வேண்டுமானாலும் பாகம் குறிக்கலாம். தயவு செய்து புதுசாக ஏதேனும் முயற்சி செய்யவும்.

    ReplyDelete
  96. //புதுசாக ஏதேனும் முயற்சி செய்யவும். //

    சொல்ல வேண்டியதெல்லாம் அங்கேயே இருக்கு. எனக்கெதற்கு புதிய ஒரு முயற்சி. நீங்களே முயற்சி செய்யுங்கள். அதற்கு என் வாழ்த்துகள்.

    ReplyDelete
  97. ஓகே ஐயா ! புரிந்து கொண்டேன். தெரிந்து கொண்டேன். கற்று கொடுத்து விட்டீர்கள். நாத்திகத்தை தேர்ந்தெடுத்தால் எப்படியெல்லாம் தடுமாற வேண்டும் என்று. ஒரு வேண்டுகோள்! குர்ஆனை மீண்டும் ஒருமுறை தெளிவாக படியுங்கள்.தங்களுக்கு பல விஷயங்கள் தெரிய வரலாம்.ஆனால் அதிலே சொல்லபட்டிருக்கிறது "சிந்திப்பவர்களுக்கு " நற்சான்றுகள் உள்ளன என்று. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  98. //அதிலே சொல்லபட்டிருக்கிறது "சிந்திப்பவர்களுக்கு " நற்சான்றுகள் உள்ளன என்று. //

    நல்ல ஜோக். உங்களைப் பார்த்தால் அது இன்னும் உறுதியாகிறது.

    //நாத்திகத்தை தேர்ந்தெடுத்தால் எப்படியெல்லாம் தடுமாற வேண்டும் //

    உங்களுக்கென்னங்க. நீங்களெல்லாம் தடுமாற்றம் இல்லாத "உறுதியான ஆளுங்க"!! இருங்க அப்படியே! எதுக்காகவும் மாறக்கூடாது.

    ReplyDelete
  99. அட...அடடா... பரிணாம வளர்ச்சியை எப்படியெல்லாம் தப்பா புரிஞ்சுக்கலாம் என்று இந்த பதிவை படித்து அறிவுள்ளவர்கள் தெரிந்து கொள்ளவேண்டும்...

    ReplyDelete
  100. சகோதரர் அனானி,

    உங்கள் மீது அமைதி நிலவுவதாக...ஆமீன்.

    -----------
    அட...அடடா... பரிணாம வளர்ச்சியை எப்படியெல்லாம் தப்பா புரிஞ்சுக்கலாம் என்று இந்த பதிவை படித்து அறிவுள்ளவர்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.
    -----------

    ????????????????????????????????

    "தப்பா புரிஞ்சி இருக்காங்க"ன்னு சொன்ன நீங்க நிச்சயம் பரிணாமத்த பத்தி நல்லா தெரிஞ்சவரா தான் இருப்பீங்க...பரிணாமம் எப்படி உண்மைன்னு கொஞ்சம் விளக்குங்களேன்..கேட்போம்..நீங்களாவது பதில் சொல்றீங்களான்னு பாப்போம்.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இறைவன் மகிழ்ச்சியையும், அமைதியையும் தந்தருள்வானாக...ஆமீன்.

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete